• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deiyamma

நாட்டாமை
Author
Joined
Sep 6, 2020
Messages
63
Reaction score
101
Location
nagercoil
ஹாய் மக்களே...
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க...

இதோ உங்களுக்கான அடுத்த பதிவு. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து.. உற்சாகம் தந்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. உங்களோட வார்த்தைகள் தான் என்னை இதுவரை கொண்டு வந்துருக்கு. நன்றி என்று சொல்லி எனது வாழ்த்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்புறம் அமைதி ஸ்டராபெர்ரிஸ் ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை பகிர வாருங்கள். உங்களுக்காக நான் waiting...




என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 12


"என் கனவு தேவதையடி நீ
என் கற்பனையின் நகல் நீ
என் காதல் தேவி நீ
என் ஆதியும் நீயே
என் ஆசை நாயகியும் நீயே
என் அழகான ராட்சஸியும் நீயே
என் வாழ்வில் நீ இருந்தால்
எல்லாம் சுகமே
என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால்
எனக்கு பேரானந்தமே!"



விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.. பெண்ணவள் பரிசளித்தால் தன் முதல் முத்தத்தை...

இத்தனை ஆண்டுகளாக பொக்கிஷமாக அவளுக்காகவே அவன் வைத்திருந்த அன்பையும்... காதலென்றால் என்ன என்பதை நொடி பொழுதும் உணர்த்தி கொண்டிருபது இந்த ஆண்மகன் தான்.. தனக்கு காதலனாய்.. தோழனாய்.. வரமாய் கிடைக்க நான் தான் என்ன தவம் செய்தேனோ... பெண்ணவள் பிரமித்து தான் போனாள்.

காதலில் இத்தனை வலிமை இருக்க முடியுமா... இக்காதல் தான் எத்தனை சக்தி வாய்ந்தது.. நிமிடத்தில் தோன்றி.. கல்வெட்டாய் மனதில் பதிந்து... வாழ்நாள் முழுதும் நம்மை ஆட்டிப் படைக்கிறதே...

ஆண்மகன் அணைப்பில் மெய் மறந்து இருந்தாள் பேதையவள்.

அந்த இனிமையான நேரத்தில் அவளுக்கு நினைவில் இருந்தது எல்லாம் தன் காதல் மன்னன் ராம் மாத்திரமே.

கன்னத்தில் ஏதோ ஊர்வது போல தோன்றியது. கைகளால் தட்டிவிட்டு விட்டு மீண்டும் காதல் மஞ்சத்தில் உறங்க விரும்பினாள்.

இம்முறை முகம் கழுத்து எல்லாம் கூசியது. என்ன இது.. "ஹ்ம்ம்..ச்..ச்" சிறு ஏரிச்சலுடன் கண் திறந்து பார்த்தாள்.

அங்கே ஆருவும் கீதுவும் நின்றிருந்தனர் முகம் கொள்ளா கேலி சிரிப்போடு..

சட்டென அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அதிர்ந்து முழித்தாள். இவர்கள் எங்கே இங்கே.??
அந்த மோன நிலை கலைந்ததில் காதலன் விழி திறந்தான்.

"அட... அருந்த வாலுகள்.
ஹே.. என்னடிகளா இங்கே.. அதுவும் இந்நேரத்துல.." ராம்

"ஏய் ஆரு நீ இன்னும் வீட்டுக்கு போகல...?!" வதனா

"பார்ர்ரா... பொறுப்புள்ள ரெண்டு பிள்ளைகள் சேர்ந்து பண்ணுற வே..லை..யை...!!" கொஞ்சம் அழுத்தி தான் சொன்னாள் ஆராதனா.

தோழிகள் இருவரும் தோள் இடித்து கொண்டனர்.

காதலர்கள் இளநகை புரிந்தனர்.

"ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்..." சொன்னாள் காதலி வதனா.

"ஓ ஓ ஓ ஓ.... ஹோ..." கோரசாக ஆரவாரம் செய்தனர் ஆருவும் கீதுவும்.

"ஹே.. ஹே... நிஜம்தான் லூசுகளா..."

இப்போது காதலன் சொன்னான்.

"ஹா ஹா.. நம்பிட்டோம்.." சிரித்தபடி தோழிகள் இருவரும் 'ஹைபை' கொடுத்து கொண்டனர்..

கேலி பேச்சு முகம் சிவக்க வைத்தது போல.. தங்கைகளின் பேச்சு அபாயகரமான திசைக்கு செல்கிறதோ.. காதலர்களுக்கு இப்போது செல்ல கோபம் பூத்ததோ...

"ம்ம்ம்ம்...ஆராதனா..." பற்களை கடித்தாள் வதனா..

"ஏய் கீது... சும்மா இரு. போதும் உங்க ரெண்டு பேரோட வம்பும்.

இங்கே என்ன விஷயமா இப்போ நீங்க வந்தீங்க..

பேக்கரி ஷாப் தான் க்ளோஸ்ன்னு போர்டு போட்டுருக்குல.. பின்ன என்னடி உங்களுக்கு இங்க வேலை..?!" வார்த்தைகளால் தாழித்தனர் ராமும் வதனாவும்.

"ஆமா.. இது பெரிய கோட்டைவாசல். ஓபன் பண்ணி உள்ளே வர ஐம்பது பேர் தேவை.. அட போடா சமோசா மண்டையா..." கிழித்து தொங்கவிட்டாள் பெண் ஆராதனா.

"ஏய்.. வாடா போடான்னு சொல்லாத.. அத்தான் முறை வரும் உனக்கு. ஒழுங்கா மரியாதையா கூப்பிடு..." கடுபடித்தாள் வதனா.

"போடி போடி... நேத்து பெய்த மழையில முளைச்ச காளான் நீ... ஆனா நாங்க அப்படியா..?! நாங்கள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே தோஸ்து... சோ யூ கோ... மீ ஆல்வேஸ் இன்னு...."காலர் இல்லாத சட்டையில் காலரை தூக்கி விட்டு கொண்டாள் ஆரு.


"ஷ் ஷ்... போதும் போதும்... நிறுத்துங்க.." என்று இருவரையும் கை ஆட்டி தடுத்தவன்... ஆருவை பார்த்து..

"இன்றைக்கு எப்படி போச்சி..? ஒன்னும் பிரச்சனை இல்லையே...?!" அக்கறையாய் கேட்டான் ராம்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் நல்ல படியா தான் போச்சி.."

அவன் சொல்லி முடிப்பதற்குள்,
"ஹே... அறிவு கேட்டவளே.. இப்படியா கேணச்சி மாதிரி ரோடு கிராஸ் பண்ணுவ.. நல்ல வேளை ராம் அங்க இருந்தான். இல்..லா..ட்டி எவ்ளோ கஷ்டம். உனக்கு கண்ணுன்ணு ஒன்றை ஆண்டவன் தேவையில்லாம கொடுத்துட்டான்.. அதான் இப்படி பண்ணுற.." கோபமாய் பொரிந்தாள் சகோதரி.

"கூல் வது.. அதான் ஒன்றும் இல்லையே. பின்ன எதுக்கு ஆருவை திட்டுர..."

"நீ சும்மா இரு ராம். இவளுக்கு எப்போ பாரு வம்பை பிரீயா ஹாண்ட் பாக்ல போட்டுக்கிறதே ஹாபியா போச்சி..

இதே மாதிரி தான் நம்ம ஏரியா பங்சன் டேலயும் பண்ணுனா.. இப்போ வரை அம்மணிக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.

தேவேந்திரன் வந்தார்.. கல்லை தந்தார்.. அப்படின்னு புலம்பினாள்.

அன்றைக்கு யார் சென்ற புண்ணியமோ இவளுக்கு எதுவும் ஆகாமல் கடவுள் காப்பாற்றி விட்டார். அதே போல இன்றைக்கும். இப்படி டெய்லி இவளை காப்பாற்றிகிட்டே இருப்பாரா என்ன..?!?

கொஞ்சமாது பொறுப்பு இருக்கா..?எந்த விஷயமாது ஒழுங்கா பண்ணுறாளா...? எப்ப பாரு விளையாட்டு புத்தி. இப்படி இருந்தா எப்படி ராம்...?!" கவலையாய் சொன்னாள் வது..


"ஹேய்.. நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற.. அதெல்லாம் ஆருக்கு ஒன்றும் ஆகாது.." தோள் அணைத்து ஆறுதல் படுத்தினான்.

சூழ்நிலை சோகத்தின் வாசற்படி சென்று கொண்டிருப்பது புரிந்தது ஆருவிற்கு. அவளுக்கும் அன்றைய நாள் நினைவில் மனம் கசங்கியது. இருந்தும் இப்போதைக்கு அதை நினைத்து பார்க்க விரும்பவில்லை. சோ பேச்சை திசைமாற்றும் பொருட்டு...

"ஹே.. நான் யாரு... என்னை யாருடி தூக்க முடியும்...? எனக்குள்ளே ஒரு சிங்கம் தூங்கிட்டு இருக்கு..! அது இருக்கிற வரை என்னை யாராலையும் ஒன்றும் செய்ய முடியாது. யூ டோன்ட் ஒர்ரி பேபிஸ்..."

"ஹ்ம்ம்... அது சரி.. தின்னு தின்னு இம்புட்டு கொழுப்பு ஏறி இருந்தா யராலதான் தூக்க முடியும்.!" வம்பு செய்தாள் கீது மனத்திற்குள்ளே தான்.

"என்னை பற்றி கவலைப்படாமல் சந்தோஷமா இருக்க பாருங்க. அதை விட்டுவிட்டு... ச் ச்... வடிவேல் சொல்லுற மாதிரி... சின்ன பிள்ளை தனமால இருக்கு..." முகம் சுளித்து கை ஆட்டி சொன்னாள் பெண். அவள் சொன்ன தினுசில் மற்றவர்களுக்கு சிரிப்பலை பொங்கியது..

"ஹ்ம்ம்... இப்படி தான் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் எல்லோரும்.. புரியுதா..."விரல் நீட்டி சொன்னாள் தங்கை.. அந்த பாச தங்கை.

##############


"எத்தனை மணிக்கு பாட்டி..?"

"காலையில ஒன்பது மணிக்கு ரீச் ஆகுறதா சொன்னான்" என்றபடி சாய்வாக அமர்ந்தார் அந்த லேடி பாட்டி.

"ஹ்ம்ம்.. ஓ. கே. அப்போ நானே போய் ரிசிவ் பன்ணுறேன். நீங்க தனியா ஆபிஸ் போயிருவீங்களா..?!"

"ம்ம்ம்.." தேநீரை உறிஞ்சியபடியே சம்மதம் சொன்னார்.

"என்னம்மா.. யாரு வாரா.."சொன்னபடி வந்தார் தந்தை ராஜ சேகர வர்மா.

"டேய்.. உன் பொண்டாட்டியோட தம்பியோட பிரென்ட் இளங்கோ இருக்கான்ல..அவன் தான்.."

"நீங்க எந்த இளங்கோவை சொல்றீங்கமா...?!"

"அதான் அமெரிக்காவில் நம்ம பிஸ்னெஸ் பார்ட்னரில் ஒருத்தனா இருக்கிறானே.. நம்ம ரவி கூட அடிக்கடி சொல்வானே என்னோட பிஸ்னெஸ் குருன்னு ஒருத்தரை..."

"ஹாங்...."நெற்றி தடவி யோசித்தவருக்கு... உருவம் கொஞ்சம் ஆட்டம் கண்ட பிறகே பிடிபட்டது....

"ஓ... நம்ம வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறானே... அந்த இளங்கோ வா... சரி தான்.. பார்த்து நாள் ஆனதும் பிடிபடல..."

"ஹ்ம்ம்..."

"ஆனா அவனுக்கு தான் இந்தியா பிடிக்காதே.. இப்போ எதுக்காக வர்ரான்னாம்..?!"

"ஒரு வேளை அவனுக்கு பிடிச்ச பொருள் இங்கே தான் இருக்குதோ என்னவோ..." அழகாய் கண் சிமிட்டனார் லேடி..

"ஹே.. பாட்டி..." அவர்கள் தன்னை தான் அந்த பொருள் என சொல்கிறார்கள் என்பது புரிந்து பேரனும் சிரித்தான்.

"அட போடா..."

"நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இளங்கோ அங்கிளுக்கு நான் எப்போவுமே பேவரட் தான்....!"

"அது சரி இப்போ யாரு யாருக்கு குறுக்காலா வந்தது...??! உனக்கு ஏன் பொங்குது.."

பதில் கேள்வி பிறந்தது லேடியிடமிருந்து..

"பா..ட்டி.."

"ஏன்டா...பதில் தெரியலையா...?!" வம்பிலுத்தார் அவர்.

"போங்க பாட்டி.. எப்போ பாரு உங்களுக்கு கிண்டல்.."

"டேய் டேய்... நலுவாதடா.. உண்மையை சொல்லு.. அவனுக்கு மட்டும் தான் உன்னை பிடிக்குமா.. இல்லை குடும்பத்துக்கேவா..?!"

"நான் இந்த பேச்சுக்கே வரல.. போதுமா.. நீங்க எங்க சுத்தி இங்க வாறீங்கன்னு எனக்கு புரியுது. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இளங்கோ அங்கிள் பொண்ணு நேகா என்னோட பிரென்ட் அவ்ளோ தான். நீங்களா எதாச்சும் கற்பனை பண்ணி பேசாதீங்க.."

"பார்ர்ரா... குடும்பம்ன்னு சொன்னா உனக்கு அவள் மட்டும் தான் நியாபகத்துக்கு வாராளா.. மத்தவங்கல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா...?!"

"பா..ட்...டீ...!"

"என்னம்மா.. உண்மையா தான் சொல்லுறீங்களா...?!"கண்கள் மின்ன கேட்டார் ராஜ சேகர்.

"டாட்.. இட்ஸ் நதிங். பாட்டி சொல்லுறதை நம்பாதீங்க.!" என்றபடி இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என எழுந்து சென்று விட்டான்.

விதியின் கையில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். இதில் இந்த அயர்ன் லேடி நினைத்தால் மட்டும் நடந்திடுமா..?!

#######################


"டொய்ங்... டொய்ங்... டொய்ங்..." ஒலி எழுப்பிய அந்த கடிகாரத்தை ஆசையாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆராதனா. மணி பன்னிரெண்டு என்று சொல்லி அவளது தூக்கத்திற்கு 'டா டா' காட்டியது.

இது என்னடா கொடுமை. இன்றைக்கு பார்த்து தூக்கம் வர மாட்டுக்குது...

விபத்தின் வீரியமும் வதனாவுடனான வாதமும் அந்த தேஜா வூ வின் நியாபகமுமாய் சேர்ந்து பெண்ணவள் தூக்கத்தை காவு வாங்கியது.

எவ்வளவு முயன்றும் தூக்கம் வருவது போல தெரியவில்லை. பெட்டிலிருந்து எழுந்தவள் ஜன்னலோரமாய் தெரிந்த இருட்டு வானத்தையும்.. ஒளிரும் நிலாவையும் கண்டாள்... எங்கும் கும்மிருட்டாய் இருக்க.. இவள் விழிகள் மட்டும் விழித்து கிடந்தது..

இங்க நான் தூக்கம் வராமல் முழிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஆனால் நீங்க எல்லோரும் நிம்மதியா தூங்கிறீங்களா... என பக்கத்து வீட்டு வாசிகளின் ஜன்னல் பார்த்து புலம்பியவள் மண்டையில் நச்சென அந்த யோசனை தோன்றியது...

கை தட்டி ஆர்பரித்தவள்.. "ஹ்ம்ம்.. உங்க எல்லோருக்கும் இது தான் சரி. நான் எப்படி இங்க புலம்புறேனோ.. அதே போல நீங்க எல்லோரும் புலம்ப வேண்டாமா..?!
சோ சாரி மை ஏரியா பர்ட்ஸ்... "

கட கட வென.. வேலையில் இறங்கினாள்.

நேராக மாடிக்கு சென்றவள்.. நிலா மகளை பார்த்து கண் சிமிட்டியவள்..

"என்ன அப்படி பார்க்குற... நீ மட்டும் தான் லைட் அடிப்பியா..?!! இதோ நானும் வர்றேன்.." என்றபடி சிறகை விரித்து பறந்தாள்.

"காற்றிலே அசைந்தாடும் என்னை...
கட்டி அணைத்திட தான் முடியுமோ...?!
மின்மினி வண்டின் ரீங்காரம் தான் தோற்றிடுமோ..?!
கண் கூச நானும்..
கபளீகரம் செய்வேனோ..?!
ராத்திரி நேர பூஜைக்கு
நீ தானே..
அடி நீ தானே கலக்கும் நாயகி...!"


"ஹா ஹா ஹா..." தூங்கா மோகினியின் சிரிப்பலை அந்த ஏரியா பறவைகளை பந்தாடியதோ...?!


ஹாய் மக்களே...
உங்களுக்கான புதிர் தான் இது.. பொறுமையா வாசிங்க. பதிலை சொல்லுங்க..
என்ன ரெடியா..?!

ஆருவோட இந்த திட்டம் தான் என்ன..?! அப்படி என்ன தான் செய்தா..?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top