• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 15 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
எவ்வளவு சொல்லியும் கேட்காததால்
ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்து
பருக வைத்துவிட்டு "எதையும்
யோசிக்காமல் தூங்கு மது" என்று
படுக்க வைத்துவிட்டு சென்றார்.
ஆனால் மதுவிற்கு தான் உறக்கம்
வரவில்லை. மொபைலை எடுத்து
அவனுக்கு கால் செய்து பார்த்தாள். கட்
செய்து கொண்டே இருந்தான்.
அவளின் இந்த நிலையை நினைத்து
அழுவதா இல்லை தான் சொல்ல வந்த
விஷயத்தை சொல்ல முடியவில்லை
என்று அழுவதா என்றும் அவளுக்கே
விளங்கவில்லை.

காரை எடுத்துக் கொண்டு சென்ற
கார்த்திக்கிற்கு வேதனையாக
இருந்தது. பொய் சொல்லிவிட்டாயே
என்று ஒருபக்கம் கோபமுமாக, கை
நீட்டி அடித்து விட்டோமே என்று
ஒருபக்கம் பாவமுமாக இருந்தது. ஒரு
நிமிடம் காரை நிறுத்தியவன்
பாக்கெட்டில் இருந்த கிப்ட்டை எடுத்துப் பார்த்தான். ஒரு வெறுமையுடன் அதை டாஷ் போர்ட்டில் வைத்து மூடியவன்
கண்களை மூடி சிறிது நேரம்
யோசிக்கலாம் என்று கண்ணை
மூடினான். மதுவின் முகமே வந்தது.
தன்னையே கடிந்து கொண்டு காரில்
இருந்து இறங்கியவன் ஒரு
சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

மது சென்னை கிளம்பும் முன் இந்தப்
பழக்கத்தைக் குறைக்கச் சொன்னது
நினைவு வந்தது. ஆனால் இருக்கிற
டென்ஷனிற்கு முடியாது என்று
நினைத்தவன் காரின் கதவு மேல்
சாய்ந்து யோசித்தபடியே வரிசையாக
மூன்றைப் புகைத்து முடித்தான்.

பின்பு போனை எடுத்தவன்
சிவாவிற்குக் கூப்பிட்டான். ஒரே
ரிங்கில் சிவா எடுக்க அவன் இன்னும்
உறங்கவில்லை என்பதைத் தெரிந்து
கொண்டான். பாவி இப்படி எல்லார்
உறக்கத்தையும் நிம்மதியையும்
கெடுத்து விட்டுச் சென்று விட்டாளே
என்று மிதுனாவை மனதிற்குள்
திட்டினான் கார்த்திக்.

"ஹலோ" என்று இரண்டாவது
முறையாகச் சிவா அழைக்கச்
சுயநினைவிற்கு வந்தவன் "அ..
ஹலோ சிவா.. எங்க இருக்க" என்று
கேட்டான் கார்த்திக்.

"நான் சும்மாதான் டா.. காரில் நம்ம
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வரை
வந்தேன்" என்று சோர்வானக் குரலில்
சொன்னான்.

"சரி அங்கேயே இரு.. நான்
வருகிறேன்" என்று சிவாவின்
பதிலிற்குக் கூடக் காத்திராமல்
போனை அணைத்து காரில் ஏறி
அமர்ந்து காரை எடுத்தான் கார்த்திக்.

பஸ் ஸ்டாண்ட் அடைந்தக் கார்த்திக்
சிவா அங்கு நிற்பதைக் கவனித்து
காரை நிறுத்தி விட்டு இறங்கினான்.
அவனின் அருகில் வந்த சிவா "என்ன
டா இந்த டைம்ல பாக்க வந்திருக்க?"
என்று வினவ கார்த்திக்கிற்கு கோவம்
வந்து விட்டது.

"ஏய்... என்ன கேசுவலாப் பேச ட்ரைப்
பண்றியா.. உன்னை இங்க இப்படி
விட்டுவிட்டு எப்படி இருப்பேன். ஒரு
க்ளூ சிக்கியது அதான் வந்தேன்"
என்று நண்பனிடம் சொன்னான். சிவா
யோசித்தபடி கார்த்திக்கைப் பார்க்க
கார்த்திக்கே தொடர்ந்தான்
"மிதுனாவிடம் இருந்து மதுவிற்கு கால் வந்தது சிவா.. மதுவைத் தான் எடுக்க
சொன்னேன்.. அப்புறம் நான் அருகில்
இருப்பதைக் கண்டு கொண்டவள்
போனை வைத்து விட்டாள்" என்று
சிவாவிடம் அடித்து விட்டான் கார்த்திக்.
கார்த்திக்கிற்கு மதுவை மற்றவர்
தவறாக எண்ணும் படி ஆகக் கூடாது
என்று மனது துடித்தது உண்மை தான்.
அதுதான் அவனை சிவாவிடம்
அப்படிச் சொல்ல வைத்தது.

"சரி அதை வைத்து என்ன செய்ய டா"
என்று சலித்தபடி காரின் மேல் ஒரு
கையை மடக்கி வைத்து தலைக்குக்
குடுத்து படி சலித்தான் சிவா.

"டேய்... புரியவில்லையா உனக்கு"
என்ற கார்த்திக் "மிதுனாவிடம் இருந்து மதுவிற்கு எங்கு இருந்து கால் வந்தது
என்று ட்ராக் பண்ணலாம்ல" என்று
நண்பனின் தோளில் கை வைத்துச்
சொன்னான் கார்த்திக்.

"டேய் விளையாடாதே.. இதெல்லாம்
போலீஸ் அது இதுன்னு போகும்..
அப்பா அதெல்லாம் வேண்டாம்
என்கிறார்" என்று சிவா கூறினான்.
அவனைப் ஒரு நிமிடம் எரிச்சலாகப்
பார்த்த கார்த்திக் "டேய் இது கூட
யோசிக்காமல் வந்திருப்பேனாடா...
நம்ம மாப்பிள்ளை அரவிந்திடம்
சொல்லி அன்அபிஸியலா மூவ்
பண்ணலாம்" என்று கார்த்திக் கூற
அப்போது தான் சிவாவின் கண்களில்
ஒரு சுறுசுறுப்புக் கூடியது. "அதுவும்
இல்லாமல் மிதுனா எங்கு
இருக்கிறாள் என்று தெரிந்து
கொண்டால் ஏதாவது அந்த ஊரில்
தெரிந்த ஆட்களை வைத்து நாம்
போகும் வரை கல்யாணத்தை நிறுத்தி வைக்கலாம்" என்ற கார்த்திக்... ஒரு
நிமிடம் சிவாவைப் பார்த்து "மச்சி
அந்தப் பையன் நல்லவனாக
இருந்தால் கல்யாணம் செய்து
வைக்கும் ஐடியா இருக்கிறது தானே"
என்று வினவினான்.

"அப்பா தான்டா பிரச்சினை செய்வார்..
எனக்கும் அம்மாவிற்கும் மிதுனாவின்
சந்தோஷம் தான் முக்கியம்" என்றவன் "ஆனால் ஏன் என்னிடம்
சொல்லவில்லை என்று தெரியவில்லை" என்றான்
உணர்ச்சியற்ற குரலில். ஒரு நிமிடம்
நண்பனின் நிலையை எண்ணி
வருந்திய கார்த்திக்கிற்கு
மிதுனாவின் மேல் கோபம் வந்தது..
மேலும் அவள் செல்ல உதவிய தன்
மனைவியின் மேல் அதை விடக்
கோபம் பொங்கியது.

அரவிந்திற்கு இந்த நேரத்தில்
கூப்பிடலாமா என்று யோசித்த
கார்த்திக்கும் சிவாவும் பின் வேறு வழி இல்லை என்று எண்ணி அரவிந்திற்கு
கூப்பிட்டனர். மணி பதினொன்று ஆகி
இருந்தது.

போன் அடிக்க எடுத்த அரவிந்த்
"ஹலோ மச்சான்" என்றான்.

"அரவிந்த் டிஸ்டர்ப் பண்ணிவிட்டேனா? ஒரு முக்கியமான விஷயம் அதான்
போன் போட்டேன்" என்று டிஸ்டர்ப்
செய்கிறோமே என்று உறுத்தலுடனே
கேட்டான் கார்த்திக்.

"இல்லை இல்லை.. நான் இப்போது
தான் வீட்டிற்கு வந்தேன் கார்த்திக்.
என்ன விஷயம் சொல்லுங்க" என
விஷயத்தைக் கேட்டான்.

விஷயத்தைக் கார்த்திக் சொல்ல "சரி
நீங்கள் மிதுனா மதுவின் நம்பரை
அனுப்பி வையுங்கள்.. நான்
என்னவென்று பார்த்துவிட்டு
உங்களுக்கு கூப்பிடுகிறேன்" என்று
சொன்னான். நம்பரை அனுப்பி விட்டு
இருவரும் ஒரே காரில் ஏறி
அமர்ந்தனர். இருவரின் மனதிலும்
வெவ்வேறு சிந்தனைகள்.

சிவாவிற்கு மிதுனா கல்யாணம்
மட்டும் செய்து கொள்ளக் கூடாது
என்று வேண்டிக் கொண்டு இருந்தது..
'மிதுனாவைக் கூட்டிக் கொண்டு வந்து
அப்பாவை சமாதானம் செய்து
கல்யாணம் செய்து வைத்து விட
வேண்டும்..' என்று நினைத்துக்
கொண்டு இருந்தான்.

கார்த்திக்கிற்கோ மதுவைச் சுற்றியே
சிந்தனைகள் ஓடிக் கொண்டு
இருந்தது.. கோபமாக இருந்தாலும்
என்ன செய்து கொண்டு
இருக்கிறாளோ என்று எண்ணினான்.
அவள் நடுவில் இரண்டு மூன்று முறை
போன் செய்தது நினைவு வந்தது.
வேண்டுமென்றே கட் செய்தவன்
இப்போது போன் செய்யலாமா என்று
எண்ணியவனிற்கு 'கேட்டும் என்னிடம் சொல்லாமல் தன் ப்ரண்டிற்கே
சாதகமாக இருந்தாளே' என்று எண்ணி மீண்டும் கோபம் வந்து
மென்மேலும் அவளின் மேல்
கோபத்தை வளர்த்தான்.

'என்னை அவ்வளவு சுலபமாக
ஏமாற்றி விடலாம் என்று
நினைத்தாயா மது" என்று கண்ணை
மூடி ஸ்டியரீங்கை இறுக்கினான். பின்
தலையைப் பின்னால் சாய்த்துக்
கண்களை மூடி அமர்ந்தான். கொஞ்ச
நேரத்தில் போன் அடிக்க எடுத்துப்
பார்த்தான்... அரவிந்த் தான்.. போனை
எடுத்துக் காதில் வைத்தவன் அவன்
சொன்ன தகவலில் புருவத்தை
நெருக்கி சிவாவைப் பார்த்தான்..
"ஓகே அரவிந்த் தாங்க்ஸ்" என்று
போனை வைத்தான்.

"சிவா.. மிதுனா திருச்சில இருக்கா.."
என்றான் கார்த்திக். "திருச்சியா"
என்று யோசித்தவன் "கார்த்திக் என்ன
பண்ணலாம் டா.. வயதுப் பெண்
தெரியாத ஊருக்கு எவனென்றே
தெரியாதவனோடு சென்று
இருக்கிறாளே.. அவள் வரும் போது
என் தங்கையாகவே வந்தால் போதும்
டா" என்ற சிவாவின் கண்கள் கலங்கி
விட்டது. அவன் என்ன நினைத்துக்
கலங்குகிறான் என்று கார்த்திக்கிற்கு
புரியாமல் இல்லை.. அவன்
நிலைமையும் கார்த்திக்கிற்கு புரிந்தது. "அரவிந்த் ப்ரண்ட் அங்கு தான் சிவா வேலையில் இருக்கிறார். அவரை வைத்து தேடச் சொல்லி இருக்கிறேன் என்றான் அரவிந்த்" என்றவனைப் பார்த்த சிவா "சரிடா.. நான் இப்போதே கிளம்புகிறேன்" என்று பரபரப்பாகக் கூறினேன்.

"சிவா.. அவசரப்படாதே.. அவர்கள்
எப்படியும் இன்னும் அரை மணி
நேரத்தில் கண்டுபிடித்து விடுவார்கள்.. பிடித்து இருவரையும் பாதுகாப்பாக
வைத்திருப்பார்கள்.. நானும் நாளை
உன்னுடன் வருகிறேன்.. காலை
கிளம்பிவிடலாம். ஏன் என்றால்
பிடிப்பட்ட உடனே நாம் போய் நின்றால் மிதுனா கோபத்தில் வரவில்லை
என்று சொன்னாலும் சொல்லி
விடுவாள்.. அவள் மேஜர் வேறு..
பொறுமையாகப் போய் அவளை
சமாதானம் செய்து கூட்டி வரலாம்"
என்று அவனுக்கு பக்குவமாக
எடுத்துக் கூறினான்..

கார்த்திக் வர ஒரு மணி ஆகிவிட்டது.
கார் சத்தம் கேட்டு மது கீழே வர
அதற்குள் ஜானகி அம்மாள் சென்று
கதவைத் திறந்து விட்டார். உள்ளே
நுழைந்தவன் "ஏன்மா தூங்கலையா?"
என்று கேட்டபடியே நடந்தான்.

"எங்கே கார்த்திக் போனாய்?" என்று
கேட்டவரிடம் சட்டையில் மேல் இரண்டு பட்டனை கழற்றியபடி விவரம்
கூறினான். மது என்று ஒருத்தி
நின்றிருந்ததை அவன் சட்டை
செய்யவே இல்லை.

"சரி வந்து சாப்பிடு" என்று மகனை
அழைத்தவர்... "மது வா நீயும் வந்து
சாப்பிடு" என்று மதுவை அழைத்தார்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை
பார்த்தவன் "அவள் ஏன் இன்னும்
சாப்பிடவில்லை" என்று அன்னையிடம் வினவினான்.. "உன் பொண்டாட்டி
சாப்பிடவில்லை என்று என்னிடம்
கேட்கிறாய்" என்று வெடுக்கென்று
பதில் வந்தது அவரிடம் இருந்து. பின்
மகனையும் மருமகளையும் அமர
வைத்து இருவருக்கும் பரிமாறினார்
ஜானகி. இருவருமே பேருக்காகச்
சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.

சாப்பிட்டு விட்டு மதுவை கண்டு
கொள்ளாது படி ஏறப் போனான்
கார்த்திக்.

"நில்லு கார்த்திக்..உன்னிடம்
கொஞ்சம் பேச வேண்டும்" என்ற தன்
அன்னையின் குரல் கார்த்திக்கை
நிற்க வைத்தது. அவன் திரும்ப
"மதுவை அடித்தாயா?" என்று ஜானகி
அம்மாள் கேட்க மதுவைத் திரும்பிப்
பார்த்தவன்.

"ஏன் உங்களிடம் வந்து சொன்னாளா?" என்று நடந்ததை ஏளனமான குரலில்
வினவ "அவள் சொல்ல வேண்டும்
என்று இல்லை.. உன் கை தடத்தை
அவள் கன்னமே காட்டிக் கொடுத்து
விட்டது" என்று மகனிற்கு அவனின்
ஏளனத்தை மிஞ்சியக் குரலில் பதில்
அளித்தார். பின் அவனின் தாய்
அல்லவா?

"அம்மா என்ன நடந்தது என்று
உங்களுக்குத் தெரியுமா?" என்று
அவரிடம் நடந்ததைக் கூறினான்.

"சரி அப்படியே இருக்கட்டும்.. அதற்கு
கையை நீட்டுவாயா?" என்று கேட்க
கார்த்திக் எதுவும் பேசாமல் நின்றான்.
பேச முடியாமல் இல்லை. தன்
அன்னையை எதிர்த்துப் பேச
விரும்பவில்லை அவன்.

அவன் பேசாமல் நிற்பதைக் கண்டவர்
"இங்க பாரு கார்த்திக் மதுவும் நம்ம
நிலா போலத் தான் அவர்கள் வீட்டில்
செல்லமாக வளர்ந்த பெண்.. உனக்கு
கல்யாணம் செய்து கொடுத்து
விட்டால் நீ என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்று இல்லை..
உன்னையே நம்பி வந்தவளை கை
நீட்டி அடிக்கவா நாங்கள் கற்றுக்
கொடுத்தோம்" என்று கேட்டவர்
"கோபத்தை அடக்கப் பழகிக் கொள்
கார்த்திக்" என்று தன்னால் முடிந்த
வரை மகனிற்கு எடுத்துரைத்து விட்டு
அறைக்குச் சென்றுவிட்டார் ஜானகி.

அவர் சென்ற பின் மதுவை
முறைத்தவன்.. படி ஏறி அறைக்குள்
புகுந்து கொண்டான். மதுவும் அவன்
பின்னே சென்று ரூம் கதவைச் சாத்தி
விட்டுத் திரும்ப "உன் ப்ரண்ட்
திருச்சில தான் இருக்கா...கல்யாணம்
பண்ணிக்க போயிருக்கா.. ஏதோ
கலேஜில் கூடப் படித்த பையனாம்.. நீ
சொல்லவில்லை என்றாலும் அவளது
போனை ட்ராக் பண்ணிவிட்டோம்...
எப்படியும் விடியற்காலை பிடித்து
விடுவார்கள். ஆமாம் உனக்கு
திருச்சில யார் இருக்காங்கனு அங்க
அனுப்பி வச்ச" என்று எகத்தாளமாகக்
கார்த்திக் கேட்க மது "நான் எவ்வளவு
தடவை கார்த்திக் சொல்லுவது..
எனக்கு தெரியாது என்று.. அவள்
எனக்கு ஏன் அப்படி கால் பண்ணி
சொன்னாள் என்று புரியவில்லை"
என்று மன்றாடிப் பார்த்தாள். அவள்
ஏற்கனவே அழுது இருந்தக் கோலம்
அவனை உறுத்தியது.. பேச்சை
வளர்க்கவும் அவன் விரும்பவில்லை.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்" என்று
படுக்கைக்குச் சென்றவன்... "அப்புறம் என் பெயரை சொல்லி இனி
என்னைக் கூப்பிடாதே" என்று படுத்து
விட்டான். கோபத்தை எப்படி எல்லாம்
காட்ட முடியுமோ அப்படி எல்லாம்
தன்னையே அறியாமல் அவளிடம்
காட்டிக் கொண்டு இருந்தான்.

மதுவிற்கு வேதனையாக இருந்தது.
தான் புடித்த முயலுக்கு மூன்று
கால்கள் என்றே நிற்கிறானே...
அவளும் வந்து படுத்து விட்டாள்..
மதியம் சீக்கிரம் வந்துவிடு என்று
மெசேஜ் அனுப்பியவன் இவன்தானா
என்று இருந்தது மதுவிற்கு.. இந்த
நேரத்தில் எப்படி நீ அப்பா
ஆகிவிட்டாய் என்று சொல்லுவது..
எப்படி எடுத்துச் சொல்லுவது என்று
யோசித்தபடியே படுத்திருந்தாள்.
தினமும் அவனை அணைத்த படியே
படுத்து இருந்தவளுக்கு இன்று
அதுவும் தான் தாய் ஆகி இருக்கின்ற
நிலைமையில் அவன் அருகாமைக்கு
மதுவின் மனம் ஏங்கியது.

திரும்பிப் படுத்து இருந்த கார்த்திக்கும் தூங்கவில்லை.. "ஒரு ஸாரி
கேட்கிறாளா பார்.." என்று நினைத்தபடி படுத்திருந்தான்.
அவர்கள் அப்போதே பேசி இருந்தால்
இருவருக்கும் அப்படி ஒரு இடைவெளி
விழுந்து இருந்திருக்காது.
Ye ipd kova padraru.....☹
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top