எபி 19:
காலையில் எழுந்ததிலிருந்து இன்று பெண் பார்க்கும் படலத்தில் இருந்து நழுவ பார்க்கும் மிருவின் முயற்சிகளை, அசால்ட்டாக தடுத்தபடியே அவளைக் கிளம்ப வைத்துக்கொண்டு இருந்தார் பாட்டி.
ஒரே அடியாக அவளால் அவரிடம் மறுக்கவும் முடியவில்லை.
அவரின் ஆசைப்படி வேறு ஒருவருடன் தன்னால் மணம் முடித்து வாழமுடியும் என்று அவளுக்கு அணுவளவும் நம்பிக்கை இல்லை.
அவளுடைய ஒருதலைக் காதல், அன்றுபோலவே இன்றும் அவள் மனத்தை முற்றும் முழுதாக ஆக்கிரமித்திருந்தது!
பாட்டியின் பெண்பார்க்கும் படல முடிவை கேட்ட பின்னே பெண்ணவள் அதனை உணர்ந்தாள்.
இப்போதுதான் வருணுடன் ஒரு நல்ல நட்பான பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறாள்.
முன்புபோல கற்பனைகளில் மிதந்து மீண்டும் காயம்கொள்ள தெம்பில்லாமல், அவன்மீதான எண்ணங்களை கட்டுக்குள் வைக்க முயன்று அதை பின்பற்றியிருந்தாலும், அவன் அவளிடம் பேசுவது கூட அவளுக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று அவள் மட்டுமே அறிவாள்.
வேறொரு சந்தர்ப்பத்தில் இனி நேரில் அவனைக் காண நேர்ந்தால், தன்னை யாரோ என்று எண்ணி கடந்து செல்லமாட்டான். குறைந்தபட்சம் ஒரு தெரிந்த பாவனை இருக்கும் அவனிடத்தில் என்பதே அவளுக்கு சந்தோசமான விஷயம்தான்.
அந்தளவு அவனைக் காதல் செய்யும் பைத்தியக்காரி அவள்.
இன்று அவனது மனதில் என்னவோ காயம் இருக்கிறது என்று புரிந்தது.
அவனுக்கு திருமணம் ஆகவில்லை. ஆக உடனே அந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, அவன் நிலையை உணராது தனது காதலை உரைக்க அவள் மனம் விடவில்லை.
அதற்காக அவள் காதலை சொல்லாமலே இருக்க போவதில்லை.
நிச்சயம் ஒருநாள் அவளது சொல்லாத காதலை அவனிடம் சொல்லத்தான் போகிறாள்!
அதற்குமுன் ஒரு நல்ல பிணைப்பை அவனுடனும், அமிர்தம் பாட்டியுடனும் ஏற்படுத்த எண்ணி அவள் அதில் வெற்றியும் கண்டிருக்க, திடீரென்ற பாட்டியின் இந்த முடிவு அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனாலும் தன்னையே தேற்றிக் கொண்டவள்… பல யோசனைகளுக்குப் பின்,
'இன்னைக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்த அப்புறம், பாட்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லிடனும்.' என்ற முடிவை எடுத்திருந்தாள்.
எல்லாவற்றையும் அவரிடம் பகிரும் பழக்கம் கொண்டவளுக்கு, காதல் மட்டுமே இதுநாள்வரை விதிவிலக்காக இருந்தது.
இனியும் அவரிடம் சொல்லாமல் மறைப்பது அவளுக்கு சரியென்று படவில்லை.
அவருக்கு தெரியும் என்று அறியாதவள், காலம்கடந்து பெரியவரிடம் தன் மனதை சொல்ல முடிவெடுத்தாள்.
கோவிலுக்கு சென்றபின், அவளை பெண்பார்க்க வரும் நபரிடம் பேச வேண்டியதையெல்லாம் யோசித்து வைத்தவள் அறியவில்லை, அந்த நபர் யாரென்று அறியும் நொடியில் ஸ்தம்பித்து நிற்க போகிறோம் என்று!
சுடிதார் போடுகிறேன் என்றவளை முறைத்து ஒரு எளிமையான பட்டு சீலையை உடுத்த வைத்தவர், அவளை கொஞ்சம் அலங்காரம் செய்ய சொல்ல, வேண்ட வெறுப்பாக செய்தாள்… வருபவன் வருண் என்று அறியாது.
»»»»
இங்கு வருணோ ஒரு நிர்மலமான மனநிலையில் கண்ணாடி முன் நின்று தன் கேசத்தை வாரிக் கொண்டிருந்தான்.
'பாட்டி தனக்கு திருமணத்திற்கு என பார்த்த பெண்ணை உடனே பிடித்துபோய் வரும் முகூர்த்தத்திலேயேவா திருமணம் செய்யப் போகிறோம்?' என எண்ணியவன் அலட்டிக்கொள்ளவே இல்லை.
'எதற்கு பதற்றம்?
தன்னை மீறி என்ன நடந்துவிடும்?' என எண்ணிய வருண் கூலாகதான் இருந்தான்.
ஆனால் அதுதான் நிகழப்போகிறது என்று அவன் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை.
என்னதான் பாட்டியிடம் சரி என்றுவிட்டாலும், வரும் பெண் அவனுடைய வாழ்க்கைக்கு ஒத்து வருவாளா, தன் பாட்டியை அன்பாக கவனித்துக்கொள்வாளா போன்ற கேள்விக்கு விடையறியாது அவன் முடிவெடுக்க போவதில்லை என்பது திண்ணம்.
கிளம்பி வந்தவனை மேலும் கீழும் பார்த்த பாட்டியைக் கவனித்தவன்,
"என்னாச்சு பாட்டி? உங்க பேரன் இன்னைக்கு பாக்க நல்லாயில்லையா?" என புருவம் உயர்த்தி கேட்க,
"அதுலாம் ராசா கணக்கா இருக்க ப்பு." என நெட்டி முறிக்கவும் சிரித்தவன்,
"அப்பறோம் ஏன் இப்படி பாக்குறீங்க?" என வினவ,
"ஏன் ய்யா வேட்டி, சட்டை போட்டுருக்கலாம் ல்ல?" எனவும்,
அதரங்கள் இன்னும் விரிய,
"நீங்க பாத்த பொண்ணு எனக்கு பிடிச்சுபோச்சுன்னா, தாலி கட்ட வேஷ்டி, சட்டை போட்டுக்கறேன். இன்னைக்கே அதுலாம் ரொம்ப அதிகமா இருக்கும் பாட்டி. வாங்க போவோம்." என இலகுவாக கேலி செய்ய, அவரும் புன்னகைத்து,
"அப்போ சரி வாய்யா போலாம்." என வீட்டை தாழிட்டுவிட்டு பேரனுடன் கோவில் கிளம்பினார்.
மாதம்மாள் பாட்டி கேட்டுக்கொண்டதாலேயே, அவர்களுக்காக தேர்வு செய்தவர்கள் யாரென்று அவர்களிடம் சொல்லப்படவில்லை.
கோவிலுக்கு இயல்பாக பாட்டியுடன் பேசியபடி நடந்த வருணின் அத்தனை நேர அமைதியான மனநிலை, சாலையின் ஓரம் ஒரு பைக் அருகே நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்த ஒரு ஜோடிகளைக் கண்டும்… அவர்கள் பேச்சைக் கேட்டும் மாறியது.
இயல்பாக கணவன் மனைவி ஏதோ சண்டையிட்ட படி,
"உங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்க… நான் வாழ்க்கையில பண்ண பெரிய தப்பே அதுதான். இப்போ மாட்டிட்டு முழிக்குறேன். ச்சே…" என புலம்ப அதைக்கேட்ட வருணுக்கு சில கசப்பான நினைவுகள் வந்து போனது.
"ஒரு பொண்ணுக்கு தான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் எப்போவும் தனக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு ஆசை இருக்கும். யாராவது திட்டினா நமக்குன்னு அவங்க வந்து பேசுவாங்கன்னு நம்பிக்கை இருக்கனும். நம்மதான் அவங்க வாழ்க்கையில முக்கியமான ஆளா இருக்கனும்ன்னு ஆசை இருக்கும்.
ஆனா என்னை முதல்ல திட்டுறதே நீங்களாதான் இருப்பீங்க மாமா. பாட்டி என்னை திட்டும்போதும் எப்படியும் அவங்களுக்குதான் ஒத்து ஊதுவீங்க?
என்னைக்காச்சும் எங்கிட்ட கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு… அதுகூட வேணாம்… மாமா பொண்ணுன்னு பாசமா இருந்துருக்கீங்களா? இல்லவே இல்ல. உங்களுக்கு என்னைவிட பாட்டிதான் எப்போவும் முக்கியம்.
நீங்க இப்டிலாம் எனக்கு பிடிச்சமாதிரி இல்லாதபோது,
எனக்கு எப்படி உங்கள கல்யாணம் பண்ணிக்க தோணும்?
யார் அப்படி இருப்பாங்கன்னு தோணுதோ… நம்மகிட்ட அப்படி இருக்காங்களோ அவங்களதான பிடிக்கும்.
இதுலாம் சகிச்சுக்கிட்டு உங்கள கல்யாணம் பண்ணி… பெரிய தப்பு பண்ணி என் தலையில நானே மண் அள்ளி கொட்டிக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல." என நந்தினி அவனை வார்த்தைகளைக் கொண்டு காயம் செய்தவை தானாக அவன் மனக்கண்ணில் வந்துபோக, அப்படியே அவன் மனநிலை மாறிப்போனது.
இதுபோன்ற எண்ணங்கள்,
அதனை தொடர்ந்து வரும் கற்பனைகள் அவனை அலைக்களிக்க, திணறியவனுக்கு அப்படியே வீட்டிற்கு திரும்பிவிடலாமா என்று ஒருநொடி தோன்றிவிட்டது.
அருகே வந்துகொண்டிருந்த பாட்டியை பார்த்தவன்… அவர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியில் நிகழ்வுக்கு வந்து தன்னையே கடிந்துகொண்டு தன்னை இயல்பாக்க முயன்றபடி கோவிலினுள் வந்தான்.