அத்தியாயம் - 2 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ் . முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி நன்றி. இதோ அடுத்த அத்தியாயம் - படித்துக் கருத்துக்கள் பகிருங்கள்

அத்தியாயம் – இரண்டு

பனி கொட்டும் மார்கழி மாதம். பெசன்ட் நகர் கடற்கரை. வாக்கிங், ஜாக்கிங் செல்பவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. பீச் அருகில் உள்ளவர்களே அந்த வேளையில் வரக் கூடியவர்கள். அவர்கள் கால்கள் கோவில்கள் பக்கம் திரும்பியதால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் செல்லும் ஒலிக் கேட்டாலும் , அவற்றின் வெளிச்சம் கடற்கரையை ஒட்டித் தெரியவில்லை.

பெசன்ட் நகர் அடையாளமான ஸ்கிம்ட் மெமோரியல் கட்டிடத்திற்கு நேராக கடற்கரையை ஒட்டி ஒருவன் , தன் செல் ஃபோன் கொண்டு டார்ச் ஆன் செய்து இங்கும் அங்குமாக அசைத்தான்.
அதற்கு பதில் போல அவன் நிற்கும் இடத்திற்கு வலதுபுறம் அதே போல டார்ச் அசைய, அந்த நபர் பரபரப்பானான். சுற்று முற்றும் பார்த்து விட்டு, இப்போது டார்ச்சை அணைத்து அணைத்து எரிய விட அந்த டார்ச் கடற்கரையை நோக்கி முன்னேறி வந்துக் கொண்டிருந்தது. கரையின் அருகில் வரவே டார்ச் அடித்தவன் படகில் நிற்பது தெரிந்தது. படகு கரையில் நிற்காமல் சற்றுத் தள்ளி இருளான மற்றொரு இடத்திற்கு சென்று கடல் அலையில் ஆடிக் கொண்டு இருந்தது.

கரையில் நின்றவன் முகத்தில் யாரையோ வெற்றிக் கொண்ட பெருமிதம் தெரிய, படகை நோக்கிச் சென்றான். படகை நெருங்கி அந்த படகில் இருந்த சூட்கேஸ் ஒன்றை எடுக்க முயல, அவனின் கரங்களை துப்பாக்கித் தோட்டாத் துளைத்தது. அதில் திகைத்தவனாக குண்டு வந்தத் திசையில் திரும்பிப் பார்க்க, அங்கே அளவான உயரமும், அதற்கேற்ற உடலுமாக நின்றுக் கொண்டிருந்தான் அவன்.

அவனைப் பார்த்ததும் குண்டடிப் பட்டவன் முகம் பயத்தால் வெளுத்தது. அவன் கை, கால்கள் நடுங்க சட்டென்று எதிரில் நிற்பவனின் கால்களில் விழுந்தான்.

“ஊர்லேயே பெரிய புள்ளி மிஸ்டர் மாணிக்கவேல். பரம்பரை பணக்காரர், அரசியல் செல்வாக்கு, ஆள் படை எல்லாம் வச்சுருக்கீங்க. நேத்துப் பெய்த மழையில் முளைச்சக் காளான் நாங்க. எங்கக் காலில் விழறீங்களே!! உங்கப் பரம்பரை கௌரவம் என்ன ஆகுறது?” என்று ஏளனத்துடன் கேட்க,

“கருணா சர் , என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க. “ என்று பயத்துடன் ஓலமிட்டான் .

“ஸ் ஸ் சத்தம் போட்டா வர்மா சாருக்குப் பிடிக்காதுன்னு தெரியுமில்ல?” கருணாக் கூறவும் ,

“வர்மா சாரா ? “ என்றவன் உடல் தூக்கிவாரிப் போட்டது.

கருணா , வர்மா இருந்த திசையை நோக்கிக் கைகாட்ட, வர்மா அந்தப் படகின் உள்ளிருந்து கடலில் இறங்கி கரையை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

மாணிக்கவேலின் கண்கள் படகோட்டியின் பக்கம் பார்வையைச் செலுத்த , அங்கே அவன் உடல் தண்ணீருக்குள் தொப்பென்று விழும் சத்தம் மட்டுமே கேட்டது. .

கருணாவைக் கண்டதுமே இன்று தான் உயிர் தப்புவது கடினம் என்று எண்ணியிருந்தான் மாணிக்கம் . நூற்றில் ஒரு வாய்ப்பாக நடக்குமோ என்று முயற்சி செய்தவனுக்கு , வர்மா பெயரைக் கேட்டதும் இன்று தன் ஆயுள் முடிந்தது என்று தீர்மானமே செய்துவிட்டான். என்ன சத்தமில்லாமல் ஒரேடியாக உயிர் போகுமா அல்லது உடல் சித்திரவதை அனுபவித்துப் போகுமா என்பது மட்டுமே தெரிய வேண்டும்.

மாணிக்கவேலின் கண்களும் , உடலும் பயத்தில் நடுங்கியப் படி இருக்க, வர்மாவின் முன் தலைக் குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

“தென் ?” என வர்மாக் கூறவும், மாணிக்கவேல் எச்சில் முழுங்கினான். இதற்கு அர்த்தம் மாணிக்கவேல் பதில் கூற வேண்டும் என்பதே. அவனுக்கோ எதைச் சொல்ல என்று புரியவில்லை. எந்தப் பதிலும் வர்மாவின் சினத்தை அதிகரிக்கும் என்று தெரியும். அவனின் தயக்கம் கண்டு , வர்மாவின் புருவங்கள் சுருங்கி விரிய, கருணா மாணிக்கத்தின் மூக்கில் ஒரு குத்து விட்டான்.

“சர், நான் வேணும்னு எதுவும் பண்ணலை”

“ஓ “ என்ற வார்த்தை மட்டுமே மீண்டும் வர்மாவிடத்தில் இருந்து வர ,

“இல்லை இல்லை. நம்ம பிசினஸ்லே உள்ள ஒரு சிலர் சேர்ந்து தான் இதைச் செய்தோம். இதில் எனக்கு மட்டும் 40% ஷேர், மீதியை மற்றவர்கள் பிரிச்சுக்கறதா ஒப்பந்தம்.” என்று மொத்தமும் கூறினான் மாணிக்கம்.

“எத்தனைப் பேர்?”

இப்போதும் மாணிக்கம் சிறு தயக்கத்துடன் நிற்க, வர்மாவின் பார்வை கருணாவின் பக்கம் மீண்டும் திரும்ப , இப்போது மாணிக்கம் பதில் கூறினான்.

“இருபது பேர்”

அதைக் கேட்டதும் வர்மாவின் இதழ்கள் சிரிக்க, கருணாவோ கட்டுக்கடங்கா சினம் கொண்டு முறைத்தான்.

“அது. உங்களோட வேகத்தைப் பார்த்த இன்டர்நேஷனல் பார்ட்டி எல்லாம் உங்க கிட்டத் தான் வராங்க. எங்கக் கிட்டே வருகிற ஒரு சில அசைன்மெண்ட்டும் நாங்க முடிக்கிறதுக்குள்ளே வெளியில் லீக்காகி , அந்த ப்ராஜக்ட் ஸ்டாப் ஆகிடுது. அதனால் தான் உங்க ப்ராஜக்ட்ட நாங்க எடுத்துக்கிட்டா , உங்க மேலே பிளாக் மார்க் வரும்னு பேசினோம். அதைத் தூக்கிற வேலையை நான் செஞ்சா 40% எனக்குன்னு சொல்லவும், பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படிப் பண்ணிட்டேன் வர்மா சர். பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க. “

வர்மா தன் பாண்ட் பாக்கெட்டில் கை விட்டப்படி முகத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே நின்று இருக்க, கருணா தான் மீண்டும் மாணிக்கத்தின் கைகளை முறுக்கியபடி ,

“ஈ.சி.ஆர் எங்கக் கோட்டை. அங்கே உன் பருப்பு வேகாதுன்னு பெசன்ட் நகர் பக்கம் வந்தியாக்கும். வர்மா சர் எடுக்கிற ப்ராஜக்ட், A-Z அவர் கண் பார்வையில் தான் இருக்கும். இரண்டு நாள் முன்னாடியே நீயும், அந்த படகுக்காரனும் டீல் பேசினது எல்லாம் எங்களுக்குத் தெரியும். அவனை வச்சு உன்னை முடிக்கிறது தான் எங்க பிளான். அவரை ஜெயிக்க முடியலைனா, போய் வேறே ஏதாவது வேலையைப் பார்க்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு எங்க வேலையில் க்ராஸ் ஆகி இன்னிக்கு உன் உயிர விட வேண்டி இருக்கே?” என்றான்.

“வர்மா சர் , பிளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்களேன். இனி நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூடத் திரும்ப மாட்டேன்” எனக் கெஞ்சினான் மாணிக்கம்.

கருணாவைப் பார்த்த வர்மா , ஒரே வார்த்தையில்

“டிஸ்போஸ் ஹிம் “ என்று மட்டும் கூறிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க, கருணா

“சர், டெத் சர்டிபிகேட் கிடைக்கிற மாதிரியா? இல்லை தேடிக்கிட்டே இருக்கட்டுமா?” எனக் கேட்டான்.

லேசாகப் புருவம் சுளித்த வர்மா, பின் “மாலை மரியாதையோடு போகட்டும்” எனக் கூறிவிட்டு மெயின் ரோட் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான். அவனின் பின்புறம் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், ஓ என்ற அலறலும் கேட்க, ஒரு நொடிக் கண் மூடித் திறந்து விட்டுத் தன் நடையை தொடர்ந்தான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் கருணாவும் அங்கிருந்து கிளம்பிவிட, மாணிக்கம் மற்றும் படகோட்டியின் உடல்கள் சீந்துவாரின்றிக் கிடந்தது.

பெசன்ட் நகர் மெயின் ரோட்டில் நின்று இருந்த பென்ஸ் காரின் முன் கதவைத் திறந்து கருணா ஏறவும், கார் ஈ.சி.ஆர் நோக்கிச் சென்றது.

பின் சீட்டில் அமர்ந்து இருந்த வர்மா,

“கருணா, சிசி டிவி காமிரா ” எனக் கேள்வியோடு நிறுத்த,

“சர் கடற்கரையை ஒட்டி சிசி டிவி கிடையாது. மாணிக்கம் நின்று இருந்த ஸ்கிம்ட் பிளாக் மட்டுமே கவர் ஆகும் . அவன் யாருக்கோ சைகை காமித்தது மட்டுமே தெரியும். படகோ மற்ற விஷயங்களோ தெரிய வாய்ப்பு இல்லை. “ பதில் கூறினான்.

“தென், கார் ?”

“கார் நிறுத்தி இருந்த இடம் டிராஃபிக் ஃபுடேஜ்ஜில் கவர் ஆகாது. அத்தோடு கார் நம்பர் மாற்றி விட்டேன். நாம் செல்லப் போவதும் OMR பிளாண்ட்க்கு. நம் பக்கம் சந்தேகம் திரும்ப வாய்ப்பு இல்லை. “

“படகில் இருந்த ரோஜாக்கள் எல்லாம் ?”

“எல்லாம் நம் மற்றொரு படகில் ஏற்றி விட்டாகி விட்டது. அந்த படகின் ஜி.பி,எஸ் டிராக் உங்கள் போனிற்கு அனுப்பி விட்டேன்”

“குட்”

“சர் , ஒண்ணு கேட்கலாமா?”

“ஹம் . “

“மாணிக்கத்தைப் போன்ற துரோகிகள் அநேகம் பேரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள்? அவர்களை எல்லாம் ஓட விட்டுப் பிடிப்பது தானே உங்கள் ஸ்டைல். மாணிக்கத்திற்கு மட்டும் ஏன் உடனே தீர்ப்பு?”
“பட்டர்பிளைஸ் “ என்று மட்டும் பதில் கூற, கருணா டிரைவர் சீட்டில் இருந்து வர்மாவைத் திரும்பிப் பார்த்தான். வர்மாவின் கண்களில் தெரிந்த பாவத்தில், கருணா வாய்விட்டு “பா..” என்று தகாத வார்த்தைகளால் திட்டினான். கருணா ஸ்டியரிங்கைப் பிடித்த அழுத்தத்தில் அவன் கோபம் தெரிந்தது.

தன்னைச் சமன் செய்து கொண்ட கருணா,

“அவனை உருத் தெரியாமல் செய்வதை விட்டு விட்டு , ஏன் அங்கேயே விட்டு விடச் சொன்னீர்கள்? “ என வினவினான்.

“அவனின் வாழ்க்கை வரலாறு ஊர் பேசட்டும்” என்றவன் , “இளமாறனுக்கு மாணிக்கவேல் பெயர் மட்டும் மெசேஜ் செய்து விடு” என்றான் வர்மா. கருணாவும் அதை உடனடியாகச் செய்தான்.

காலை ஏழு மணி . மாணிக்கவேல் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றி போலீஸ் வளைத்து இருக்க, மீடியா பீப்பிள் போட்டோ எடுப்பதும், கேள்விகள் கேட்பதுவும், அவரவர் காதுகளுக்கு வந்த செய்தியை எதுகை மோனையோடு விளக்கியும் நின்று கொண்டிருந்தனர்.

மாணிக்கவேல் உடல் அருகில் நின்று இருந்த இன்ஸ்பெக்டர்

“யாருயா மீடியாக்கு அதுக்குள்ளே சொன்னது?” என கான்ஸ்டபிளை வினவினார்.

“சர் , நமக்குத் தகவல் சொன்னதே பிரஸ் தான்” எனப் பதில் கூறவும்,

“எப்படியா? கொலை நடந்து எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிருக்கும். இதுவரை பப்ளிக் யாரும் பார்க்கலையா? “ எனக் கேட்டார்.

“நேற்று இரவு மழை பெய்ததால் , வாக்கிங், ஜாக்கிங் வர்ற பப்ளிக் யாரும் கடல் கிட்டே வரலை போலிருக்கு. “

“எந்தப் பிரஸ்லர்ந்து தகவல் வந்தது?”

“தினச் செய்தி சர்”

“சுத்தம். அது இளமாறன் வேலை செய்யற பத்திரிகை ஆச்சே? இந்நேரம் செத்துப் போனவன் ஜாதகம் மொத்ததையும் எடுத்து இருப்பானே ?”

“ஆமாம் சர். அங்கே பாருங்க” என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்ட , இளமாறனைச் சுற்றி மற்ற பத்திரிகை ரிப்போர்ட்டர்ஸ் நின்று இருந்தனர்.

“இன்னும் ஒரு வாரத்திற்கு நமக்குத் தூக்கம் அவ்வளவு தான். ரோட்டில் நடக்க விட மாட்டாங்க. கேஸ் என்ன ஆச்சுன்னு பின்னடியே வருவாங்க” என்று இன்ஸ்பெக்டர் புலம்ப , அதே நேரம் வீட்டில் செய்திச் சேனல் பார்த்துக் கொண்டிருந்தார் டி.ஜி.பி அஷோகவர்மா. செய்திகளில்

“இன்று காலை பெசன்ட் நகர் பீச்சில் இரு உடல்கள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துக் கிடந்தது. இறந்து கிடந்தவர்களில் ஒருவர் மணி அறக் கட்டளையின் தலைவர் மாணிக்கவேல். மற்றொரு நபரைப் பற்றி விவரம் இன்னும் தெரியவில்லை. கொலைகளுக்கானக் காரணம் எதுவும் தெரியவில்லை. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியில் நடந்து இருக்கும் இந்தக் கொலைகள் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்குப் பற்றியக் கவலையைத் தோற்றுவிக்கிறது. விரைவில் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் எனக் காவல் துறையை பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிக்குத் தினச்செய்திகளுக்காக இளமாறன்”
என ஓடிக் கொண்டிருக்க, டி.ஜி.பி.யின் முகத்தில் மெல்லிய கோபம் படர்ந்தது. இளமாறன் சுருக்கமாகக் கூறியதை மற்ற பிரஸ் ரிப்போர்ட்டர்கள் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி இன்னும் பெரிதுப் படுத்தினார். இதில் அசோகவர்மாவின் கோபம் ஏற , தன் மொபைலில் ஒருவருக்குக் கட்டளையிட்டு வைத்தார்.

அதே நேரம் தன் மொபைலில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த வர்மா , இளமாறன் கூறியதையும் , மற்ற ரிப்போர்ட்டர்களின் கதைகளையும் ஸ்வாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது சம்பவம் நடந்த இடத்திற்கு மற்றும் ஒரு போலீஸ் ஜீப் வர, அதில் இருந்து இறங்கியவரைப் பார்த்த வர்மாவின் நெற்றி லேசாகச் சுருங்கி, எதையோ யோசித்தது. தன் யோசனையின் விளைவால் கிடைத்த விடையில் , ‘இண்டரெஸ்ட்டிங்” என்று கூறி லேசாக சிரித்தான் வர்மா.

சம்பவம் நடந்த இடத்திலோ போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கியவரைப் பார்த்த இன்ஸ்பெக்டரும்,

“ஐயோ, இவங்க கையில் கேஸ் போகப் போகுதா? இன்னும் ஒரு மாசத்திற்கு வீட்டையே மறந்திட வேண்டியது தான்” என்று முனகியவர், அருகில் சென்று

“குட் மார்னிங் மேம்” என சல்யூட் வைக்க, லேசாகத் தலையசைத்தப் பின்

“வாட் இஸ் தி ப்ராக்ரஸ்?” என்று கேட்டாள்.

அதற்குள் அவளைக் கண்ட மீடியா , அவள் அருகில் வந்து கேள்விகள் கேட்க,

“வணக்கம். இப்போ தான் வந்து இறங்கி இருக்கிறேன். ஸ்பாட் அனலைஸ் செய்துட்டு உங்கக் கிட்டே வரேன்” என்றபடி உடல்கள் அருகில் சென்றாள்.

அப்போதும் விடாமல் “மேடம், நீங்கப் புதுசா சார்ஜ் எடுத்து இருக்கீங்க. எந்த எவிடென்ஸ்சும் இல்லாமல் எப்படிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறீங்க?” “ எனக் கேள்விகள் கேட்க,

“எவிடென்ஸ் இல்லைன்னு யார் சர் சொன்னது? இன்னும் பாரான்சிக் அனாலிஸ்சே முடியல. அதிலேயே எங்களுக்குக் க்ளூ கிடைகாலாம்/ அப்படியே கிடைக்காட்டாலும், பப்ளிக் உங்கக் கண்ணுக்குத் தெரியாத விஷயம் போலீஸ் எங்களுக்குத் தெரியும். சோ எங்களை முதலில் வேலைப் பார்க்க விடுங்க. கேஸ் பற்றின ஒரு அவுட்லைன் கிடைச்சதும் , நானே பிரஸ் மீட்லே சொல்றேன். அதுவரைக்கும் உங்க யூகங்களை நீங்க போட்டுட்டு இருங்க” என்று தடலாடியாகப் பேசவும் , மீடியா மக்கள் திரு திருவென முழித்தனர்.

அங்கே இருந்த ரிப்போர்ட்டர்ஸ் இளமாறனிடம் “என்ன சர் ? பிரஸ்சையே இந்தக் கிழி கிழிக்கிறாங்க? யார் சர் இவங்க?” என்று வினவ,

“ஹ.ஹ . அவங்க வேலையிலேத் தலையிட்டா அப்படித் தான் பேசுவாங்க. அவங்க மத்த ஆபிசர் மாதிரி இல்லை. வெரி ஸ்ட்ரைட் ஃபார்வார்டு. “ என்று கூறினான்.

“அவங்க பேர் சர் ?”

“மிஸ். அபர்ணா சஞ்சய். சிம்லாலர்ந்து ப்ரமோஷன் கம் ட்ரான்ஸ்பர்லே வந்துருக்காங்க. டெபுட்டி கமிஷனர் ஆஃப் போலீஸ் “ என்று சிறு புன்னகையுடன் கூற, அவனைத் திரும்பிப் பார்த்தாள் அபர்ணா.

-தொடரும் - mulladum rojakkal.jpg
 
Last edited:

JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,640
Reaction score
2,248
Location
Chengalpattu
Nice 🌹🌹🌹
Rojakkal
Butterflies apadina enna. Rojakkal entral போதைப்பொருளா, பட்டர்பிளைஸ் என்றால் ஏதாவது கேங்க் கூட்டமா .?
அசோக் வர்மா வர்மா இருவரும் ஒரே ஆளா இல்லை வேற ஆளா? உறவினர்களா? வெல்கம் மிஸ் அபர்ணா சஞ்சய் 💐💐💐
 
Gandhimathi

நாட்டாமை
Joined
Jan 25, 2018
Messages
29
Reaction score
31
Location
Chennai
அபர்ணா சென்னை வந்து கேஸ் எடுத்துட்டாங்க சிம்லாவில் உள்ள கேஸ் என்ன ஆச்சு அதை பத்தி ஒன்னும் சொல்லலை
 
Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,311
Reaction score
1,599
Location
USA
வாவ் இன்டர்ஸ்டிங் 🥰🥰🥰🥰

வர்மா 🔥🔥🔥, அது என்ன butterflies அப்படினா என்ன ரைட்டர் ஜீ 🤔🤔🤔🤔

வர்மா & இளமாறன் ரெண்டு பேருக்கும் என்ன சம்மந்தம் 🧐🧐🧐🧐

அசோக் வர்மா வர்மா அப்பா????

அபர்ணா இங்க வந்தாச்சா, சூப்பர்🤩🤩🤩🤩🤩

வர்மாக்கு ஆல்ரெடி அபர்ணவா தெரியுமா என்ன????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top