Latest Episode அத்தியாயம் 20 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

Well-known member
Joined
Dec 21, 2020
Messages
394
Reaction score
1,167
Points
93
Location
Gobichettipalayam
அத்தியாயம்-20

கார்த்திக்கிற்குப் பொதுவாக இந்த
மாதிரி மிரட்டல்கள் தொழிலில்
இருக்கும் என்று தெரிந்தவன் தான்.
அதுவும் கவர்ன்மெண்ட் ப்ராஜெக்ட்டில்
ரொம்பவே அதிகம்... ஏனென்றால்
பணம் அதிகம் சுரண்டிவிடலாம்.
ஆனால் கார்த்திக் கரெக்டான
தொகையைப் போட்டு அனுப்பவே..
இந்தப் ப்ராஜெக்ட் அவனுக்கு என்றே
அந்த எம்எல்ஏ முடிவு செய்தார்.
போட்டிக் கம்பெனிகாரர்கள் தங்கள்
கைக்கு இந்தப் ப்ராஜெக்ட்
கிடைக்கவில்லை என்று தான்
கொதித்துக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒரு முன்னணிக்
கம்பெனியான ஒன்று கார்த்திக்கை
ஒரு பப்ளிக் ப்ளேசிற்கு அழைத்து
ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிடு
என்றது.. கார்த்திக் முடியாது என்று
சொல்ல மிரட்டிக் கூடப் பார்த்தனர்.
ஆனால் கார்த்திக்கோ அசராமல்
"முடிந்ததைப் பார்" என்றுவிட்டான்.

இன்று மதுவை ஆள் வைத்து கடத்தி
மிரட்டுவதும் அவன்தான். அந்தக்
கடத்தல்காரன் போன் செய்கிறேன்
என்று போனை வைத்துவிட்டான்.
ஆனால் அவன் போன் செய்வான்
என்று அவனது போனிற்காகக்
காத்திருந்த ஒரு மணி நேரத்தில் மது
அனுபவித்த வலிகளை விட நூறு
மடங்கு வலிகளை அனுபவித்து
விட்டான் கார்த்திக். ஏனோ தன்
உயிரையே எவனோ எடுத்துச் சென்ற
உணர்வு. மதுவை இப்போதே பார்க்க
வேண்டும்.. அவளைக் கட்டிப்பிடித்து ஆயிரம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அதுவும் தன்னை அப்பா என்ற அடுத்த
ஸ்தானத்திற்கு கொண்டு
சென்றவளை கையில் வைத்துத்
தாங்கத் துடித்தது கார்த்திக்கின்
கரங்கள். அவளின் மனநிலை இப்போ
என்னவோ என்று யோசிக்கும் போதே
அவனுக்கு பயமாக இருந்தது.
அவளின் கோபத்தைப் பற்றியும் நன்கு
அவனுக்கும் தெரியும். எங்கே
பேசாமல் இருந்து விடுவாளோ?
வீட்டிற்கு வரமால் இருந்து
விடுவாளோ என்று அவனுக்கு
இப்போது தோன்றியது.

"எங்கு இருந்து வந்தாய் மது?
காதல் வேண்டாம் என்று
முடிவு செய்து இருந்தேன்.
உன் காதலிலே என்னைக்
கரைய வைத்து
என் முழு வாழ்க்கையையும் அழகாய்
மாற்றிவிட்டாய்.
என் இதயத்திற்குள் புகுந்து
என்றும் உன் நினைவிலேயே
என்னை சுற்ற வைத்து
இப்போது உன்னைப் பார்க்க
ஏங்க வைத்துவிட்டாயேடி"
என்று மதுவிற்காக அவன் மனம்
ஏங்கித் தவித்தது..

அங்கே மதுவிடம் அந்த
ரௌடிகள் பேச்சுக் கொடுத்தனர்.
"என்ன உன் புருஷன் கரெக்டா எழுதி
எடுத்து வந்துவிடுவான் தானே" என்று
கிண்டலாகக் கேட்டான்.. மது எதுவும்
பேசாமல் ஊமக்கொட்டான் போல்
இறுகி உட்கார்ந்திருக்க "என்னடா
இவள் எதுவுமே பேசாமல் திமிராக
உட்கார்ந்திருக்கிறாள்" என்று ஒரு
தடியன் இன்னொரு தடியனிடம்
சொன்னான்.

"பயந்திருப்பாளோ?" என்று ஒருவன்
கேட்க.. வெளியே சென்று வந்ந
ஒருவன் "யாரு இவளா? கத்தியை
வைத்து மிரட்டி வண்டியில் ஏறச்
சொல்லும் போது கூடக் பயந்து
கத்தவில்லை.. இவளாவது பயந்து
இருப்பதாவது.." என்றவன் "புருஷன்
வந்துவிடுவான் என்ற தைரியம் தான்"
என்று சிரிக்க.. அங்கு இருந்த மூன்று
தடியன்களும் கோரசாகச் சிரித்தனர்..
மதுவிற்கு தெரியாத் தனமாக வந்து
இந்த நாய்களிடம் மாட்டி விட்டோமே
என்று இருந்தது.

மதுவிற்கு இன்று தலைவலி
நன்றாகவே இருந்தது. அவளிற்கு
அடுத்து வரும் ட்யூட்டி டாக்டரும்
இரண்டு மணிக்கே சீக்கிரம் வந்துவிட
அவரிடம் ஒப்படைத்து விட்டு
கார்மெண்ட்ஸிற்கு போய்விடலாம்
என்று கீழே வந்தாள்.. அவளை ஒரு
வாரமாகக் கவனித்துக் கொண்டு
இருந்த இந்தக் கும்பலும் அவள் வர
மதுவிடம் ஏதோ கேட்கப் போவது
போல அவள் அருகில் சென்றனர்..
கரெக்டாக மதுவும் அவர்கள் இருக்கும்
திசையிலேயே வந்தாள். அந்த
வெயிலில் அவ்வளவாகக்
கூட்டமும் இல்லை.

மது அவர்களைக் கடந்து செல்லும்
சமயம் "மேடம்" என்று ஒருத்தன்
அவளை அழைத்தபடி அருகில்
சென்றான். யாரோ தன்னை
அழைப்பதை உணர்ந்த மது, திரும்பி
அவனைப் பார்க்க "மேடம்.. நீங்கள்
தானே மதுமிதா?" என்று கேட்டபடி
மதுவின் அருகில் வந்தவன் பட்டென்று
கத்தியை வெளியில் எடுத்துவிட்டான்.
மது ஒரு நிமிடம் உறைந்து நிற்க
"சத்தம் போட்டாய் என்றால்..
அவ்வளவு தான்.. ஒழுங்காய் வந்து
அந்த வண்டியில் ஏறு" என்று முகத்தை
சாதரணமாக வைத்துப் பேசினான்.
பார்ப்பவர்களுக்கு அவர்கள்
சாதரணமாகப் பேசுவது போலத் தான்
தெரியும்.. மதுவால் கத்தக் கூட
முடியவில்லை.. ஏனெனில் கத்தியை
வயிற்றிற்கு நேர் வைத்தபடி
பிடித்திருந்தான். மதுவிற்கு அதைப்
பார்க்கவே ஏதோ தன் குழந்தை
உள்ளிருந்து அவளை பயத்தில்
அணைப்பது போலத் தோன்றியது.
மது எதுவும் பேசாமல் வந்து
வண்டியில் ஏறினாள்.

அவளிடம் போன் எங்கே என்று
ஒருவன் கேட்க பையைக்
காண்பித்தாள் மது.. அதைப் பிடுங்கி
வெளியே ஒருவன் வீச கார் பறந்தது.

மனதில் ஆயிரம் யோசனைகள்.. யார்
இவர்கள்? தன் குடும்பத்தினரைப்
பார்க்க முடியுமா இனி..? கார்த்திக்....
என்று எல்லாவற்றையும் யோசித்தாள்.. ஆனால் அவர்கள் கார்த்திக்கிடம் பேசியதைக் கேட்டபோது தான் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது. ஆனால் ஏனோ வெறுப்பாகவே உணர்ந்தாள் மது.. ஏனோ எங்காவது யார் கண்ணிலும் படாமல் போய் விடலாமா என்று எல்லாம் எண்ணினாள் மது.. எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடவுளை
வேண்டியவளுக்குக் கண்களில் குளம்
கட்டியது. ஏனோ தன்னையும் தன்
வயிற்றில் வளரும் குழந்தையையும்
கார்த்திக்கைப் பற்றியுமே யோசித்துக்
கொண்டு இருந்தாள் மது. தன்னைக்
கடத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை
மறந்து தன் சிந்தனைகளில் உழன்று
கொண்டு இருந்தாள் மதுமிதா.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மதுவை நினைத்தபடியே அந்தக் கார்
பார்க்கிங்கிலேயே உட்கார்ந்து
இருந்தான் கார்த்திக்.. போன் வர ஒரே
ரிங்கில் எடுத்துவிட்டான். "ஹலோ"
என்ற கார்த்திக் "எங்கே வர
வேண்டும் சொல்லு?" என்றான்.

"பரவாயில்லை... நல்ல விவரமாகத்
தான் இருக்க... எந்தப் பேச்சு
வார்த்தையும் நடத்தாமல் நேரே
விஷயத்திற்கு வருகிறாயே.. பேசாமல்
பணத்தையும் கேட்டிருக்கலாம் போல..
பொண்டாட்டி மேல இருக்க பாசத்துல
எவ்வளவு கேட்டாலும் தந்திருப்ப"
என்று அவன் சொல்லி சிரிக்க..
அவனுடன் அவன் கூட்டாலிகளும்
சிரித்தனர்.. கார்த்திக் கண்களை
இறுக மூடி கோபத்தைக் கட்டுப்
படுத்தினான்.

"எங்கே வர வேண்டும்.. அதை
சொல்லு" என்று கார்த்திக் தன் முழுக்
கோபத்தையும் அடக்கியபடிக்
கேட்டான்.

"பாலக்காடு ஹைவேஸ்.. டோல் கேட்
தாண்டி 10 கிலோமீட்டர்ல ஒரு
காலியான பழைய காம்ப்ளக்ஸ்
இருக்கும் அங்கே வந்துவிடு" என்று
போனை வைத்துவிட்டான்.. அவன்
போனை வைக்க அவன் சொன்ன
இடத்தை மதுவின் மொபைலில்
இருந்து அரவிந்திற்கு மெசேஜ்
அனுப்பினான் கார்த்திக்.

உடனே மதுவின் போனிற்கு கால்
பண்ணிய அரவிந்த் "கார்த்திக் நீங்க
மதுவை அந்த டாக்குமென்ட்-அ
குடுத்துட்டு கூட்டிட்டு வந்திருங்க..
எதுவும் அவர்களிடம் பேச வேண்டாம்..
நீங்கள் இப்போது பேசிய நம்பரை
மட்டும் எனக்கு அனுப்புங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று
சொல்ல "அரவிந்த்... ஏதோ கோபத்தில்
அவனை விடக்கூடாது என்று எல்லாம்
சொன்னேன்.. ஆனால் இப்போது
என்னை அறியாமல் ஏதோ பயமாக
இருக்கிறது.. இது ரிஸ்க் என்றால்
வேண்டாம்.. எனக்கு அந்தப் ப்ராஜெக்ட்
கைவிட்டுப் போனாலும்
பரவாயில்லை.. எனக்கு மது
முக்கியம்" என்று கார்த்திக் தன்
வாழ்க்கையில் முதல்முதலாகப்
புலம்பினான்.

"இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை கார்த்திக்.. ரிஸ்க்கும் இல்லை..
அடுத்தவருக்குத் தைரியம் ஊட்டும்
நீயே இப்படிப் பேசலாமா.. நான்
சொன்னதை மட்டும் செய்து நீ
கிளம்பிவிடு.. உன் ப்ராஜெக்ட்டிற்கு
நான் பொறுப்பு.. அதைவிட உன்
மதுவிற்கும் நான் இரண்டு மடங்கு
பொறுப்பு" என்று கார்த்திக்கை
சமாதானம் செய்தான் அரவிந்த்.. "ம்ம
சரி அரவிந்த்" என்று போனை
வைத்துவிட்டான் கார்த்திக்.

ஆபிஸிற்கு சென்று பேப்பரை
வாங்கியவன்... அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்றான். அங்குப்
போய் காரை நிறுத்தி
காத்திருந்தவனால் நிற்க
முடியவில்லை. எப்போது மதுவைப்
பார்ப்போம் என்று இருந்தது.
தூரத்தில் ஒரு கார் வருவது தெரிய,
அவர்களாகத் தான் இருக்க வேண்டும்
என்று அந்தக் காரையே பார்த்தபடி
நின்றிருந்தான்.

100 மீட்டர் இடைவெளியில் அந்தக்
கார் வந்து நின்றது. அதிலிருந்து
இறங்கிய ஒருவன் கார்த்திக்கின்
அருகில் வந்து "பத்திரம்" என்று கையை நீட்டினான். காரைத் திறந்து
பத்திரத்தை எடுத்தக் கார்த்திக்
"மதுவைக் கண்ணில் காட்டு" என்று
கேட்டான்.

தன் கூட்டாளி ஒருவனுக்குப் போன்
போட அவன் காரை விட்டு இறங்கி
பாக் டோரைத் திறந்து ஏதோ சொல்ல
மது காரில் இருந்து இறங்கினாள்.
மதுவைப் பார்த்த கார்த்திக் தன்
அருகில் நின்றிருந்தவனிடம்
பத்திரத்தைக் கொடுக்க.. அவன்
திரும்பி தன் கூட்டாளிகளிடம் மதுவின்
கைக் கட்டை அவிழ்த்து விடும்படி சைகை செய்தான்.

பின் பத்திரத்தை வாங்கியவன்
திரும்பிச் சென்று மதுவை அனுப்ப..
கார்த்திக்கும் மதுவை நோக்கி
வேகநடையுடன் வந்தான்.. மது ஒரு 50
மீட்டர் வந்தவுடன் அந்தத் தடியன்கள்
காரில் ஏறிப் பறந்தனர். ஒரு நிமிடம்
அவர்களின் கார் செல்வதைப்
பின்னாடி திரும்பிப் பார்த்த மது
அப்படியே நின்றிருந்தாள்.

அவளின் அருகில் வந்தக் கார்த்திக்
அவளைத் தன் தோளோடு சேர்த்தபடி அணைத்து காருக்குக் கூட்டி வந்தான்.
மதுவின் முகம் இறுகி சோர்ந்து
காணப்பட்டது. ஒரு சொட்டு கண்ணீர்
இல்லை மதுவிடம். தண்ணீர்
பாட்டிலை எடுத்து நீட்ட எதுவும்
பேசாமல் வாங்கிய மது அந்தப்
பாட்டிலில் ஒரு சொட்டுத் தண்ணீர்
இல்லாமல் குடித்து முடித்து பாட்டிலை
வைத்தவள் அவன் பக்கம் திரும்பக்
கூட இல்லை.. மதுவின் இளைத்தத்
தோற்றத்திற்கானக் காரணம்
இப்போது கார்த்திக்கிற்குப் புரிந்தது.
அவளிடம் பேசலாம் என்று
நினைத்தவன்.. முதலில் இந்த
இடத்தைக் காலி செய்வோம் என்று
காரை எடுத்தேன்.

கார் பொள்ளாச்சி ஹைவேஸ் திரும்பி
கொஞ்ச தூரம் சென்றது. சிறிது நேரம்
கழித்து காரை ஒரு ஓரமாக
நிறுத்தினான்.. அது அவர்கள்
முதல்முதலாக பேசிய இடம்.. கார்த்திக்
மதுவைத் திருமணத்திற்குச் சம்மதிக்க
வைத்த இடம்.. மதுவும் அதைக்
கவனிக்கத் தவறவில்லை..

"மது.." என்று கார்த்திக் ஆரம்பிக்க
"காரை எடுங்க" என்று நேராக
ரோட்டைப் பார்த்தபடி மது சொன்னாள்.

"நான் உன்னி...." என்று ஆரம்பிக்க,
மது தன் இரு கைகளாலும் காதைப்
பொத்தினாள். "காரை எடுங்க" என்று
அழுத்தமாகச் சொன்னாள்.

"இல்லை மது.. ஒரு நிமிடம்
சொல்வதைக் கேள்.. என்னால் தானே
இந்தப்..." என்று கார்த்திக் சொல்ல
"இப்போ காரை எடுக்கறீங்கலா
இல்லை நான் எங்காவது இறங்கிப்
போகட்டா" என்று மது கார் கதவைத்
திறக்கப் போக.. அவளைத் தடுத்த கார்த்திக் அமைதியாக காரை
எடுத்தான். செல்லும் போதே
சுந்தரமூர்த்திக்குப் போன் பண்ணி
நடந்ததைக் கூறினான்.

விஷயத்தைக் கேட்டுப் பதறிய
சுந்தரமூர்த்தி "அய்யோ மாப்பிள்ளை
என்ன சொல்றீங்க.. இப்போது எங்க
இருக்கீங்க நீங்க.. மது உங்க
கூடத்தானே இருக்கா?" என்று
படபடப்புடன் கேட்டார்.

"இப்போது பயப்பட எதுவும் இல்லை
மாமா.. மது என்னுடன் தான் இருக்கிறாள்.." என்றவன் "நாங்கள்
இப்போது அங்கு நம்ம வீட்டிற்குத் தான்
வந்து கொண்டு இருக்கிறோம்.."
என்று போனை வைத்தான்.

மதுவின் வீட்டிற்குள் கார் நுழையும்
போதே எல்லோரும் வெளியே வந்து
விட்டனர். வேலுமணி ஜானகி கூட
அங்கு தான் இருந்தனர். மது
இறங்கிய பின் எல்லாரும் வந்து
சுற்றி நின்று ஆளுக்கு ஒரு
கேள்வியைக் கேட்டனர். "சரி உள்ளே
சென்று பேசுவோம். மது பார்ப்பதற்கே
மிகவும் சோர்வாக இருப்பது போலத்
தெரிகிறது" என்றார் வேலுமணி.

உள்ளே வந்தவுடன் அவளுக்கு ஒரு
ஜூஸைக் கொடுத்து பருக வைத்தனர்.
"என்னமா மது... என்ன நடந்தது?"
என்று வினவினார் திருமுருகன்.

"ரொம்ப டயர்டா இருக்குன்னு
சீக்கரமே கிளம்பி கீழே வந்தேன்
சித்தப்பா.. யாரோ என்ன
கூப்பிட்டாங்க.. நான் ஏதாவது
ஹாஸ்பிடலிற்குப் புதிதாக
வந்திருப்பவர்.. ஏதாவது உதவி கேட்க
அழைப்பார் என்று நானும்
என்னவென்று கேட்டேன்.. அதுக்கு
அப்புறம் கத்தியை எல்லாம் காட்டி
வைத்து மிரட்டி கூட்டிச் சென்று
விட்டார்கள்" என்று சிறு பயத்துடன்
நடந்ததைச் சொல்லி முடித்தாள்.

"சரி விடுமா.. எல்லாவற்றையும் ஒரு
கெட்ட கனவா நினைச்சு மறந்திரு"
என்று மகளின் தலையை வருடினார்
சுந்தரமூர்த்தி.

"எல்லாம் திருஷ்டி என்று
நினைக்கிறேன்.." என்ற ஜானகி
"நீங்கள் ஒரு படியில் மிளகாயும்
உப்பும் எடுத்து வாருங்கள்..
சுற்றிப்போட்டு விடலாம் இருவருக்கும்"
என்று உமாவைப் பார்த்துச்
சொன்னார் ஜானகி.. அவர் எடுத்து வர
ஜானகியே மகனிற்கும் மருமகளிற்கும்
சுற்றினார். பிறகு குடும்பத்திற்கும்
சுற்றிப் போட்டு விடலாம் என்று
எல்லோரையும் நிற்க வைத்து
சுற்றிவர் தனக்கும் கடைசியாகச்
சுற்றித் திருஷ்டிக் கழித்தார். மது
கார்த்திக்கின் பக்கம் திரும்பக் கூட
இல்லை.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க வேலுமணியும் ஜானகியும் கிளம்ப,
கார்த்திக் மதுவுடன் இன்று
தங்கிவிடுவதாக சொல்ல, ஜானகி
மெல்லிய புன்னகையை
உதிர்த்தார். அவர்களை அனுப்பி
விட்டு தன் காரைத் திறந்தவன்..
மதுவிற்காக சென்னையில் வாங்கிய
பரிசை டாஷ்போர்ட்டில் இருந்து
எடுத்து தனது பான்ட் பக்கெட்டில்
வைத்தான். பின் உள்ளே வர அரவிந்த்
கார்த்திக்கிற்கு போன் செய்ய
கார்த்திக் போனை எடுத்துப்
பேசினான்.

"அவர்களைப் பிடித்து விட்டோம்
கார்த்திக். அந்த பேப்பர்ஸையும்
வாங்கி விட்டேன். நீங்க காலையில்
வந்து ஆஃபிசியலா ஒரு கம்ப்ளைன்ட்
மட்டும் எழுதி தந்திட்டுப் போங்க"
என்றான் அரவிந்த்.

"ரொம்ப நன்றி அரவிந்த்" எனக்
கார்த்திக் சொல்ல "உங்களை அப்பா
ஆக்குன மதுவிற்கு பர்ஸ்ட் தேங்க்ஸ்
சொல்லுங்க" என்று சிரித்தபடியே
வைத்துவிட்டான் அரவிந்த். கார்த்திக்
உள்ளே வர மது எழுந்து மேலே தன்
அறைக்குச் சென்றாள்.. பிறகு அங்கு உள்ள ஷோபாவில் அமர்ந்தவன்
சிறிது நேரம் எல்லாரிடமும் பேசிக்
கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து மேலே செல்ல எழுந்தவன்
மதுவை எப்படிச் சமாதானம் செய்வது
என்று யோசித்தபடியே படி ஏறினான்.

அப்போது தான் மது குளித்து விட்டு
ஒரு ப்ளூ நைட்டிக்கு மாறி பாத்ரூமில்
இருந்து வெளியே வந்தாள். இவன்
வந்ததைப் கவனித்தவள் அவன்
இன்னும் உடையை மாற்றாமல்
இருப்பதைக் கண்டாள். தாத்தா இறந்த
சமயம் இரண்டு நாட்கள் கார்த்திக்
இங்கு தான் தங்கியிருந்தான்.
அப்போது எடுத்து வந்த உடையில் ஒரு
நைட் செட்டை விட்டுவிட்டுச்
சென்றிருந்தான்.

தன் கப்போர்டைத் திறந்த மது
அவனது ப்ளாக் ட்ராக் பான்டையும்..
நீல நிற டி சர்ட்டையும் எடுத்து பெட்டின்
மேல் வைத்து விட்டு அவனை ஏறிட்டுப்
பார்க்காமல் பால்கனிக்குச் சென்று
நின்றுவிட்டாள். அவனும் அன்று
நேர்ந்த அலைச்சலில் குளியல்
அறைக்குள் புகுந்து சவரைத் திறந்து
சில நொடிகள் நின்றான்.. பின்
குளித்து முடித்து வெளியே வந்தவன்
மது இன்னும் பால்கனியில் நிற்பதைப்
பார்த்து, அவன் கால்கள் அங்கு
சென்றன.

மது கழுத்தைத் தூக்கி வானை
வெறித்துக் கொண்டு நின்று
இருந்தாள்.. அந்தக் காரிருள் நீலவான
மேகத்திற்கு நடுவில் நிலா நீந்தி
அலைந்து கொண்டு இருந்தது.
முகத்தில் எந்த உணர்ச்சியையும்
காட்டாமல் மது நிலாவையே
வெறித்துக் கொண்டு இருந்தாள்.
கார்த்திக்கிற்கு மதுவை எப்படி
சமாதானம் செய்வது என்று
தெரியவில்லை. பேசாமல் மதுவின்
பின் சிறிது நேரம் அவனும் நிலாவைப்
பார்த்தபடி நின்று கொண்டு
இருந்தான்

"மது" என்று நிலாவில் இருந்து
பார்வையை எடுக்காமல் அழைத்தான்.

"....."

"பேசாம இருக்காதே மது. பதில் பேசு"
என்று மதுவின் பின்னால்
நின்றிருந்தபடியே தவிப்புற்ற குரலில்
பேசினான் கார்த்திக்.

"....."

"மது" என்று அவளின் தோளில் கை
வைத்து அழைத்தான் கார்த்திக்.
அவன் கையை வைத்த நொடியே
தட்டிவிட்டாள் மது. அவள் எவ்வளவு
கோபத்தில் இருக்கிறாள் என்று
கார்த்திக்கிற்குப் புரிந்தது.

"நான் அப்பா ஆகப்போறனா மது?"
என்று கார்த்திக் அழுத்தமானக்
குரலில் வினவ விருட்டென் திரும்பிப்
பார்த்தாள் மது. அவனிடம் பேசக்
கூடாது என்று இருந்த மது.. அவன்
கேட்ட கேள்வியில் 'இவனிற்கு எப்படித்
தெரியும்' என்று அதிர்ந்து
திரும்பினாள். கண்கள் வியப்பில்
தெறித்துவிடும் என்பது போல
விரிந்தது.
 
Yaazhini Madhumitha

Well-known member
Joined
Dec 21, 2020
Messages
394
Reaction score
1,167
Points
93
Location
Gobichettipalayam
"சொல்லு மது... நான் அப்பா
ஆகப்போறனா?" என்று அவளது
கையைப் பிடித்துத் தன் நெஞ்சின்
மேல் வைத்துக் கேட்டான் கார்த்திக்.

அதுவரை அமைதியாக இருந்தவள்
அவன் அப்படிக் கேட்டவுடன் மூக்கு
விடைத்து உதடு துடிக்க அழுகையில்
சிதறினாள். அவனின் இரு தோளிலும்
நெஞ்சிலும் மாற்றி மாற்றி அடிக்க
ஆரம்பித்துவிட்டாள். அவள் அடிக்க
அடிக்க கார்த்திக் பின்னால் நகர
இருவரும் பால்கனியில் இருந்து
அறையின் நடுவே வந்து நின்றனர்.

கடைசியாக சோர்ந்து அவன் சட்டைக்
காலரைப் பற்றியவள் "ஆமாம் டா நீ
அப்பா ஆகிட்ட.. நீ அப்பா ஆகிட்ட"
என்று கத்திய மது அவனைக் கட்டிக்
கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
கார்த்திக்கிற்கு அன்றைய நாளில்
இரண்டாவது தடவையாகக்
கண்களில் நீர் கோர்த்தது.

"மதுமா ப்ளீஸ்... இன்னும் நாலு
அடி...ம்ஷூம்.. நாலு அடி என்ன
நாற்பது அடிக்கூட அடிச்சுக்க... ஆனா
தயவுசெய்து அழாதே" என்று ஒரு
கையால் மதுவை அணைத்து
மற்றொரு கையால் அவளின்
தலையைத் தேய்த்துவிட்டபடிச்
சொன்னான்.

"இந்த விஷயத்த உங்க கிட்ட தான் பர்ஸ்ட் சொல்ல வந்தேன்.. ஆனால்..
ஆனால்" என்று அழுதவள் "இன்னிக்கு
அவன் வயிற்றிற்கு நேராக கத்திய
வச்சு..." என்று குழந்தை போல
தேம்ப கார்த்திக் பதறிவிட்டான்.

"என்னாச்சு உனக்கு எதுவும்
இல்லைல" என்று கேட்க அவனை
அணைத்தபடியே இடமும் வலமும்
தலை ஆட்ட அவன் கொஞ்சம் நிம்மதி
அடைந்தான்.

சட்டென்று தன் நிலை அறிந்து விலகி
நின்றவள் "நீங்க என்ன எவ்வளவு
விலக்கினாலும் ஊதாசீனம்
செய்தாலும் உங்ககிட்டேயே வரேன்
பாருங்க..ச்ச" என்று காலைத்தரையில்
உதைத்து விட்டுத் தலையில் கையை
அடித்தவள்.. கையை நெற்றியில்
வைத்தபடி நின்று, தன் நிலையை
எண்ணி மிகவும் குன்றினாள்.

கார்த்திக்கிற்கு.. தான் கோபத்தில்
பேசிய சொற்கள் எந்த அளவு அவள்
மனதில் வடுவாய் பதிந்திருக்கிறது
என்று எண்ணியவனுக்கு மனம்
வலித்தது.

காலைத் தரையில் உதைத்ததில்
மதுவின் வலது கால் கால் கொலுசு
கழன்று விழுந்தது. அதைச் சென்று
எடுத்து வந்த கார்த்திக், ஒரு காலை
முட்டி போட்டவாறு அமர்ந்து அவளது
காலில் அந்தக் கொலுசை
மாட்டிவிட்டான்.

அவனின் செயலில் அப்படியே
அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்
மது.. கண்களில் மட்டும் நீர் வந்து
கொண்டே இருந்தது.. பின் அவளைப்
படுக்கைக்கு அழைத்து வந்து
கால்களை நீட்டியபடி, தலையணையை முதுகிற்கு வைத்து
சாய்ந்தவாறு அமர வைத்தான். பின்
கட்டிலை சுற்றி வந்தவன் மது மடியில்
தலை சாய்த்து அவளது வயிற்றில்
முகத்தை புதைத்து இருகைகளையும்
இடுப்பை சுற்றிக் கட்டிக் கொண்டான்.
ஏனோ அரைமாதமாக இழந்த
நிம்மதியெல்லாம் அவளின் மடியில்
தலை சாய்த்த போது கிடைத்துவிட்டது
போல உணர்ந்தான் கார்த்திக்.

மதுவிற்கு அவன் செயலில் பேச்சே
எழவில்லை. கண்களில் கண்ணீர்
மட்டும் சரம்சரமாய் வந்தது. அவளது
கண்ணீர் அவன் கழுத்தில் விழ
எழுந்தவன் "மது.. ஸாரிடா.. ஸாரிடா"
என்றான்.

"...."

"உன்ன அடிச்சது தப்புதான் மது.
மன்னிச்சிரு" என்று இருகைகளையும்
பிடித்துக் அவள் முகத்தைப் பார்த்துக்
மன்னிப்புக் கேட்டான் கார்த்திக்.

"அடிக்க மட்டுமா செஞ்சீங்க? அடிச்சதக்
கூட விடுங்க... ஆனா எப்படி எல்லாம்
பேசுனீங்க... டெம்ட் பண்ண ட்ரைப்
பண்றையா-ன்னு கேக்கறீங்க?
அவ்ளோ சீப்பா போயிட்டேன்ல நான்
உங்களுக்கு" என்று கண்ணீர்
விட்டபடியே கேட்டாள்.

"மது.. தப்புதான்டா.. அது நான்
அறிவிழந்து பண்ணிவிட்டேன்..
ஸாரிடி" என்று கன்னங்களைப் பிடிக்க
வந்தவனைத் தன் கை வைத்துத்
தடுத்தாள் மது.

"இந்த இரண்டு வாரமா எவ்வளவு
கஷ்டப்பட்டேன் தெரியுமா? வெளியே
யாருக்கும் தெரியக் கூடாது என்று
மறைத்து மறைத்து வைத்திருந்தேன்.
உடல் சோர்வு.. மயக்கம் என்று..
உங்களிடம் தான் முதலில் சொல்ல
வேண்டும் என்று அவ்வளவு ஆசை.
உங்கள் பின்னாடி சுற்றி சுற்றி
வந்ததால் தானே என்னை மட்டமாக
எண்ணிவிட்டீர்கள். அதை
வால்பாறையில் வைத்து சொல்லியும்
காட்டிவிட்டீர்கள் இல்லை?. என்னதான்
கோபம் கொண்டாலும், உங்களைப்
போல் என்னால் உங்களை வெறுக்க
முடியவில்லை கார்த்திக் " என்று
கைகளை வாயில் வைத்தபடி
தேம்பினாள்.

மதுவை எப்படிச் சமாதானம் செய்வது
என்றே கார்த்திக்கிற்குத்
தெரியவில்லை. இவள் இப்படி அழுகக்
காரணமானத் தன்னேயே வெறுத்தபடி
உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.

"இப்பக் கூட உங்க குழந்தை என்
வயிற்றில் வளர்கிறது என்றுதானே
பேசறீங்க" என்று அவனை நேராகப்
பார்த்துக் கேட்டாள்.

"இல்லை மது..." என்றவன் மிதுனா
வந்தது.. மதுவைத் தேடி ஹாஸ்பிடல்
வந்தது.. அங்கு தான் Pregnancy
ரிப்போர்ட்டை பார்த்தது என
அனைத்தையும் கூறி முடித்தான்
கார்த்திக்.

"அப்போ மிதுனா வரவில்லை
என்றால் நான் பொய் சொன்னேன்
என்று தான் கடைசி வரை நம்பி
இருப்பீர்கள்...இல்லையா.. என்னை
விட சிவா அண்ணா தான் முக்கியமா
உங்களுக்கு" என்று கோபமாகக்
கேட்டாள் மது.

"இதற்கு என்னிடம் பதில் இல்லை மது..
உன்னிடம் கோபமாக இருந்தேன்
தான்.. ஆனால் நீ சொன்ன மாதிரி
நான் உன்னை வெறுக்கவில்லை மது..
மிதுனா சொல்லியப் பிறகு தான் நான்
உன்னைத் தேடி ஹாஸ்பிடல் வந்தேன்..உண்மைதான்.. ஆனால் அவள் வரவில்லை என்றால்... என்ன
நடந்திருக்கும்.. நான் இன்னும்
இரண்டு நாள்ல வந்து உன்னை
வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு
கூட நினைச்ச மது.. எனக்கு கோபம்
தான்.. ஆனா நான் அத மறந்துட்டு
உன்கூட பழைய மாதிரி
இருக்கனும்ன்னு நினைத்தேன். உன்
லவ்வ அப்புறம் உன்னோட கேர்-அ
ரொம்ப மிஸ் பண்ணேன். நான் அந்த
வார்த்தைய அன்னிக்கு
சொல்லியிருக்கக் கூடாது தான்..
பெரிய தப்பு தான் டா.. அதுனால
எனக்கு உன்மேல லவ் இல்லன்னு
மட்டும் நினைச்சராதே.." என்று
கன்னங்களில் இருந்த கண்ணீரைத்
துடைத்து விட்டவன் "அப்பறம் சிவா..
அவன் சூழ்நிலையை நினைத்து
வந்தக் கோபம் தானே தவிர உன்னை
விட அவன் முக்கியமில்லை.. அவன்
மட்டும் இல்லை யாருமே உன்ன
முன்னாடி வச்சு பாக்கும் போது
எனக்கு முக்கியமில்லை.. ஆனால்
அந்தச் சூழ்நிலையில் நீ பொய்
சொல்கிறாய் என்று நினைத்து அவன்
நிலைமையை நினைத்து என
எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டது மது.
தயவு செய்து என்னடா இப்படிச்
சொல்கிறான் என்று வருத்தப்படாதே
மது.. என்னால் இந்த சினிமா டயலாக்
எல்லாம் பேச முடியாது" என்று
மதுவைப் பார்த்தவன் "ஆனால் நீ
எப்போது வீட்டிற்கு வருவாய் என்று
தவித்தேன்..வீட்டிற்கு வந்தால் உன்
நியாபகம் வருகிறது என்று தினமும்
லேட்டாக வந்தேன் " என்றவனை
வியப்புடன் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மது..

மதுவின் கண்கள் இப்போது
அழுகையை நிறுத்தி இருந்தது.
"நிஜமாகவா?" என்று நம்ப முடியாத
வியப்பில் கேட்டாள். பிறகு
படுக்கையில் இருந்து இறங்கியவன்
குளிக்கும் போது பான்ட் பாக்கெட்டில்
இருந்து எடுத்து வைத்த அந்தக்
கிப்டை மதுவின் கையில் தந்தான்.
"மது... உனக்கு சென்னையில் ஒரு
கிப்ட் வாங்கிட்டு வரதா சொன்னனே..
இதுதான்" என்று மதுவின் பக்கத்தில்
கால்களை தரையில் பதித்தபடி
அமர்ந்தான். மது அவனையே பார்க்க
"திறந்து பார் மது" என்றான்.

மது அதைத் திறக்க அதில்
சங்கிலியைப் போல மெலிசாக ஒரு
பெரிய செயின் போன்ற ஒன்று
இருந்தது.. கையில் எடுத்தவளுக்கு
அப்போது தான் அது நெக் செயின்
இல்லை ஹிப் செயின் என்று புரிந்தது.
ஒரு நிமிடம் புன்னகைத்தவள் "இதை
இன்னும் நான் இரண்டு அல்லது
மூன்று மாதம் தான் போட முடியும்..
அப்புறம் உங்க பிள்ளை சிணுங்கும்"
என்றாள்.

"நோ ப்ராளம்..." என்று அவள்
கைகளைப் பற்றியவன் அவளின்
உள்ளங்கையில் மென்மையாக
முத்தமிட்டான்.

ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்து
பார்த்தவள் "என்னால் உங்களைப்
புரிந்துகொள்ளவே முடியவில்லை
கார்த்திக்" என்றாள் குழப்பமான
முகத்தோடு.

"சில ரகசியங்களைச் சொல்ல
வேண்டி இருக்கிறது மது..இத்தனை
நாள் உன்னிடம் சொல்லாமல் விட்டது
தப்போ என்று இப்போது
தோன்றுகிறது" என்றான் கார்த்திக்
அவளை காதலோடுப் பார்த்து.

"நீ என்னிடம் முதல் முதலாக பேசியது
நியாபகம் இருக்கா?.. எனக் கேட்டவன்
"எனக்கு என்னன்னே தெரியல மது
வேறு யாராவது ஆக இருந்தால்
போனை வைத்திருப்பேன். ஆனால்
ஏன் உன்னிடம் பேச்சுக் கொடுத்தேன்
என்று தெரியவில்லை. நான் உனக்கு
ஓகே சொல்லனும்னு நினைக்கல..
ஆனா என்னால நோ சொல்ல முடியல
மது.. ஏன்னு இப்ப வரைக்கும் தெரியல.
நீ போன் வச்ச அப்புறம் நான்
தூங்கவே இல்லை அந்த நைட்.. நீ
என்ன பண்ணிட்டு இருக்கையோ..
எப்படியும் அழுதிட்டு இருப்பனு
தெரியும்.. போன் பண்ணலாம் கூட
நினைச்சேன்.. ஆனா வேண்டாம்னு
விட்டுட்ட.. சிவா என்னை அந்த
சுஜியை மறக்கத் தான் ஊட்டி கூட்டிச்
சென்றதே.. ஆனால் வரும் போது
அவள் நினைவே எனக்கு இல்லை..
மாறாக உன் நினைவு தான்.." என்று
சொல்லியவனை மது வாயைப்
பிளந்து பார்க்க அவளின் கைகளைத்
தட்டிக் கொடுத்தபடியே மறுபடியும்
ஆரம்பித்தான்.

"அதுக்கு அப்புறம் தான் உன்
நியாபகம் எனக்கு வரக்கூடாதுன்னு
நான் உன்ன முகநூல்ல ப்ளாக்
பண்ணது... இருந்தாலும் உன்ன பத்தி
அம்மாவும் நிலாவும் பேசும் போது
காது கொடுத்து கேட்பேன்.. அப்பப்போ
உன் நியாபகம் வரும் மது.. நீ வேற
அப்போது தான் 3ஆவது வருடம் நான்
அப்பாவுடன் பிசினஸ் பண்ண
வந்துட்டேன்.. ஸோ என் கண்ணுக்கு நீ
ரொம்பச் சின்னப் பொண்ணாத்
தெரிஞ்ச.. 'இது தவறு' என்று என்னை
நானே அவ்வப்போது மனதை
ஒழுங்காக வைத்திருப்பேன்.. அப்பவும்
விடாமல் சில சமயம் உன்
நியாபகங்கள் வந்துவிடும்" என்றவன்
மதுவின் கன்னங்களை கையில் ஏந்தி
"ஆனா அம்மா வந்து நீ என்ன லவ்
பண்றதா சொன்னாங்க பாரு,
அப்பவே நீதான்னு முடிவு
பண்ணிட்டேன். இருந்தாலும் என்
ஈகோனால ஒரு வாரம் கழித்து
சொல்லலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் உன்கிட்ட பேசினப்ப எல்லாம்
மறந்திருச்சு மது.. உன்ன சீக்கிரம்
கல்யாணம் பண்ணி கூட வைத்துக்
கொள்ள வேண்டும் என்று ஆசை..
இரண்டே நாளில் அம்மாவிடம் சம்மதம்
என்று சொல்லி.. ஒரு மாதத்தில்
கல்யாணத்தை வைக்கச்
சொன்னேன்" என்று தனக்குள் மட்டும்
நான்கு வருடங்களாக வைத்திருந்த
சின்ன சின்ன ரகசியங்களை
அவளின் முகத்தைப் பார்த்தபடியே
சொல்லி முடித்தான். மதுவின்
முகத்தில் அழுகையின் சுவடு
இப்போது சுத்தமாக நின்று இருந்தது.
மாறாக இப்போது ஆச்சரியமே முழு
உருவாக உட்கார்ந்திருந்தாள்.

"மது எதுவாக இருந்தாலும் கேட்டுவிடு..
இனி அதுஇது என்று நீ எதையும்
நினைத்து மனதை வருந்தக்கூடாது"
என்று அவள் ஏதோ தயக்கத்தோடு
கேட்க வருவதை உணர்ந்து அவளிடம்
கேட்டான் கார்த்திக்.

"அன்று சுஜியைக் கண்டு ஏன் அப்படி
ஆனது உங்கள் முகம்?" என்று
அவனின் அவன் டி சர்ட்டில்
பதித்திருந்த வரிகளைப்
பார்த்தபடியேக் கேட்டாள்.

"என்னைப் பார்த்துக் கேட்டால் தான்
பதில் சொல்லுவேன்" என்று கார்த்திக்
குறுச்சிரிப்புடன் சொல்ல... மது
அவனை நிமிர்ந்து பார்த்தபடிக்
கேட்டாள். "ஏன் மது லவ் பண்ணி
கல்யாணம் பண்ணி இப்போ 8
மாசத்துல குழந்தையே பொறக்கப்
போது நமக்கு... என்னையே வந்து நீ
இன்னும் ஏதாச்சும் கேட்கும் போது
மூஞ்சிய பார்க்க மாட்டேன் என்கிறாய்..
அவளைப் பார்த்து நான் எப்படிப் பேச
முடியும்.. அதுவும் இல்லாமல் அவள்
குழந்தை வேறு என் கையில்..
நினைத்துப் பார்" என்று கூறிச்
சிரித்தவன் "அடுத்த கேள்வி
இருக்கா?" என்று கேட்க மது ஆம்
என்று தலை ஆட்டினாள்.

"அதானே பார்த்தேன்... ஈஸியாகக்
கேளு மது மேடம்" என்று கார்த்திக்
நக்கலடிக்க "அன்று சொன்னீங்கள்ள..
நீ தான் என் பின்னால் வந்தாய்.. நான்
வரவில்லை என்று.. உண்மையாகவே
என்னைத் தப்..." என்று முகம் வாடக்
கேட்க வந்தவளின் வாயை தன்
கரத்தால் பொத்திய கார்த்திக்
"போதும் மது.. என்னக் கேட்க
வருகிறாய் என்று புரிகிறது.. நீ அன்று
என்னோடு வராமல் என்னை
ஊதாசீனப்படுத்துகாறாய் என்ற
கோபத்தில் தான் அப்படிப்
பேசினேன்." என்று சொல்ல "பின்னே
என்னை அத்தை கூட்டிப் போகச்
சொன்னார்கள் என்று கடமைக்காகத்
தானே என்னை அழைத்தீர்கள்" என்று
குறையாகச் சொல்ல "அத்தையும்
இல்லை சொத்தையும் இல்லை.. நான்
அழைத்தது போல இருக்கக் கூடாது
என்றுதான் அம்மாவின் பெயரை
உள்ளே இழுத்தேன்" என்று சின்னக்
குரலில் சொன்னவன் "ஏய் நீ மட்டும்
என்ன.. உன் மாமனார்
மாமியாருக்காகத் தானே என்னோடு
வந்தேன் என்று சொன்னாய்"
பொய்யாய் அதட்ட "இல்லை நீங்கள்
அப்படிச் சொல்லியதால் தான்
சொன்னேன்.. மற்றபடி உங்களோடு
இருக்க நினைத்துத் தான் வந்தேன்"
என்று கீழ்உதட்டைக் கடித்துச் சிரிப்பை
அடக்கியபடி சொன்னாள்.

அவளை அப்படியே தூக்கித் தன்
மடியில் உட்கார வைத்தவனிடம் "ஏன்
என்னிடம் முன்னாடியே
சொல்லவில்லை.. என்னைப் பற்றி
நினைத்துக் கொண்டு இருந்ததை"
என்று உதட்டைச் சுழித்தபடிக் கேட்டாள்.

"அதான் சொன்னனே மது.. எனக்கு
ஈகோ அதிகம் என்று.. அதுவும்
இல்லாமல் காதலிப்பதை விட நம்மை
ஒருவர் காதலித்து அந்தக் காதலில்
நாம் திளைத்து மூழ்குவதற்கு சமம்
இந்த உலகத்தில் வேறு எதுவும்
இல்லை என்று நினைக்கிறேன்"
என்று சொல்லி மதுவின் இதழ்களைச்
சிறை செய்து மதுவின் இதழில்
கவிதை பாடினான் கார்த்திக். அவன்
அவளது கன்னத்தைப் பற்றியிருக்க
மதுவோ அவனது முடியைக்
கோதியபடி இருக்க நீண்ட நாளிற்குப்
பிறகு கிடைத்த இருவரின் முத்தத்தில்
இருவரும் லயித்திருந்தனர்.

ஊடலிற்குப் பிறகு வரும்
முத்தம் கூட அழகுதான்..
இருமனப் போராட்டம்
நீயா நானா தலைக்கனம்
இவையனைத்தும் மண்ணில்
விழுந்த மழை நீர் போலத் தெறிக்க
மனதில் இருந்த பாரம் எல்லாம்
நீங்க ஊடலும் கூட அழகாகி விடுகிறது!
என்பதை இருவரும் உணர்ந்தனர்.
மூச்சிற்குத் தவித்து இருவரும் பிரிய
இருவருக்குமே வெட்கம் சூழ்ந்து
கொண்டது.

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு
"கார்த்திக்" என்று மது அழைக்க
என்ன என்பதைப் போலப் பார்த்தான்
கார்த்திக்.

அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு
அவனது தோளில் சாய்ந்தவள் "நீங்க
அப்பா ஆகிட்டீங்க கார்த்திக்" என்று
அவனது தோளில் முத்தமிட்டபடியே
சொன்னாள்.

மதுவை மென்மையாய் விலக்கி
அவளின் தாடையை நிமிர்ந்தியவன்
"இன்னொரு தடவை சொல்லு மது"
என்று ஆசையாகக் கேட்டான். ஏனோ
மது சொல்லும் போது கர்வமாக
இருந்தது கார்த்திக்கிற்கு.

அவனது கன்னத்தில் கை வைத்து
"நீங்க அப்பா ஆகிட்டீங்க கார்த்திக்"
என்று அழுத்தமாகக் கூற மதுவின்
நெற்றியில் இதழ் பதித்தான்.

"மது என்மேல கோபம் இல்லையே"
என அவளைத் தன் கண்களில்
கூரிமையாகப் பார்த்தபடிக் கேட்டான்.

சீரியஸாக யோசிப்பது போல
பாவனை செய்தவள் "இருந்துச்சு...
இப்போது இல்லை" என்றவள்
"பேசவே கூடாதுனு முடிவு பண்ண..
அத்தை கூட சீக்கிரம் வீட்டுக்கு
வந்துவிடுனு சொல்லிட்டு
கிளம்புனாங்க... ஆனா நீங்க தான்
எதுமே பேசல.. போன் கால், மெசேஜ்
ன்னு எதுவும் பண்ணல. சரியான
பிடிவாதக்காரன் நீங்க" என அவன்
கையை நறுக்கென்று கிள்ளி
வைத்தாள்.

"ஆமாம் ஆமாம்.. ஆனால் அந்தப்
பிடிவாதம் எல்லாம் உன்னைக் கடத்தி
வைத்திருப்பதாகச் சொன்ன போது
எல்லாம் சுக்கு நூறாகி விட்டது மது.."
என்று மதுவைப் பார்த்து முறுவல்
அளித்தான் கார்த்திக்.

"அதை எல்லாம் மறந்திடுவோம்"
என்றவள் "பிடிவாதம்
போயிருச்சுன்னா.. இனிமேல் என்
பேச்சைத் தான் கேட்க வேண்டும்
நீங்கள்" என்று போலியாகக்
கட்டளையிட "சரிங்க மகாராணி"
என்று தலையைச் லேசாய்ச் சாய்த்து
கார்த்திக் சொல்ல மது குறுஞ்சிரிப்பு
சிரித்தாள்.

"பார்ரர எதுவும் சொல்லாம தலை
ஆட்டுறீங்க" என வியப்பாகக் கேட்டாள்.

"ஆமாம் மது இனிமேல் பொண்டாட்டி
சொல்றதுக்கு தலை ஆட்டலாம்னு
முடிவு பண்ணிட்டேன்.. பொண்டாட்டி
சொல்றதைக் கேட்டாத்தான் வாழ்க்கை
ஜாலியாகப் போகுமாம்.. தாத்தா
அன்னிக்கு சிறுமுகைல வச்சு
சொன்னாரு.. அப்பப் புரியல இப்பப்
புரியுது எதுக்கு சொன்னாருன்னு "
என்று மதுவின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

"பாட்டிக்கு தாத்தாக்கும் நாளை காலை
முதலில் சொல்லனும்.. அவங்க தான்
ரொம்ப ஆசைப்பட்டாங்க..
அட்வைஸ்லாம் தந்தாங்க பாட்டி"
என்று கூறி வெட்கச் சிறிப்பு சிரித்தாள்.

"sure sure..நாளைக்கு முதல்
வேளையா எல்லார் கிட்டையும்
சொல்லிவிடலாம்" என்றவன் "மது
எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்குமா... ஏதோ சாதிச்ச மாதிரி
உணர்வு.. நமக்குன்னு ஒரு குழந்தை
ரத்தமும் சதையுமா உனக்குள்ள
வளரதுன்னு நினைக்கும் போதே
உடம்பே சிலிர்க்குது மது.. லவ் யூ டி"
என்று மதுவின் வயிற்றில் கையை
வைத்துப் பார்த்தவன் தலையை கீழே
இறக்கி அவளின் வயிற்றில்
முத்தத்தைத் தந்தான்.

அவன் நிமிர அவனின் மீசையைப்
பிடித்து முறுக்கி விட்டவள் "இதுதான்
பிடித்ததே" என்று மீசையைப் பிடித்து
இழுத்து தன் முகத்திற்கு அருகில்
அவன் முகத்தைக் கொண்டு வந்தவள்
அவனின் உதட்டிற்கு மேல் மீசையில்
ஒரு முத்தத்தைத் தர அவன் அவளைப்
வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
பின் ஏதேதோ அவள் கதை பேசத்
தொடங்க ஒன்று விடாமல் கேட்டுக்
கொண்டு இருந்தான். (ரத்தம் வராத
குறை தான் )

அவளின் வயிற்றில் இருந்த
கார்த்திக்கின் கை மேல் தன் கையை
வைத்தவள் "இருந்தாலும் என்னால
பர்ஸ்ட் சொல்லி உங்க முக
மாறுதலைக் காண முடியவில்லை
என்று குறையாக இருக்கு" என்று
அவனிடம் குறைப்பட்டாள்.

"அதனால் என்ன குட்டிமா அடுத்த
குழந்தைக்கு என்னிடமே
சொல்லிவிட்டால் போகிறது" என்று
கண்ணைச் சிமிட்டினான்.

அவன் கூறியவுடன் முகம் சிவந்து
வரிசைப் பற்கள் தெரியச்
சிரித்தவளின் விரல்களோடு தன்
விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.
அவளின் முகத்தில் இருந்த
சந்தோஷத்திற்காகவே அவளுடன்
நூறுஜென்மம் வாழ வேண்டும் என்று
தோன்ற அவளை மென்மையாக
அணைத்தவன் அவளின் விரல்களில்
முத்தமிட்டு சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியத்தை அறங்கேற்றினான்.


********முற்றும்********
 
AkilaMathan

Well-known member
Joined
Feb 27, 2018
Messages
2,637
Reaction score
3,100
Points
113
Location
Chennai
"சொல்லு மது... நான் அப்பா
ஆகப்போறனா?" என்று அவளது
கையைப் பிடித்துத் தன் நெஞ்சின்
மேல் வைத்துக் கேட்டான் கார்த்திக்.

அதுவரை அமைதியாக இருந்தவள்
அவன் அப்படிக் கேட்டவுடன் மூக்கு
விடைத்து உதடு துடிக்க அழுகையில்
சிதறினாள். அவனின் இரு தோளிலும்
நெஞ்சிலும் மாற்றி மாற்றி அடிக்க
ஆரம்பித்துவிட்டாள். அவள் அடிக்க
அடிக்க கார்த்திக் பின்னால் நகர
இருவரும் பால்கனியில் இருந்து
அறையின் நடுவே வந்து நின்றனர்.

கடைசியாக சோர்ந்து அவன் சட்டைக்
காலரைப் பற்றியவள் "ஆமாம் டா நீ
அப்பா ஆகிட்ட.. நீ அப்பா ஆகிட்ட"
என்று கத்திய மது அவனைக் கட்டிக்
கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
கார்த்திக்கிற்கு அன்றைய நாளில்
இரண்டாவது தடவையாகக்
கண்களில் நீர் கோர்த்தது.

"மதுமா ப்ளீஸ்... இன்னும் நாலு
அடி...ம்ஷூம்.. நாலு அடி என்ன
நாற்பது அடிக்கூட அடிச்சுக்க... ஆனா
தயவுசெய்து அழாதே" என்று ஒரு
கையால் மதுவை அணைத்து
மற்றொரு கையால் அவளின்
தலையைத் தேய்த்துவிட்டபடிச்
சொன்னான்.

"இந்த விஷயத்த உங்க கிட்ட தான் பர்ஸ்ட் சொல்ல வந்தேன்.. ஆனால்..
ஆனால்" என்று அழுதவள் "இன்னிக்கு
அவன் வயிற்றிற்கு நேராக கத்திய
வச்சு..." என்று குழந்தை போல
தேம்ப கார்த்திக் பதறிவிட்டான்.

"என்னாச்சு உனக்கு எதுவும்
இல்லைல" என்று கேட்க அவனை
அணைத்தபடியே இடமும் வலமும்
தலை ஆட்ட அவன் கொஞ்சம் நிம்மதி
அடைந்தான்.

சட்டென்று தன் நிலை அறிந்து விலகி
நின்றவள் "நீங்க என்ன எவ்வளவு
விலக்கினாலும் ஊதாசீனம்
செய்தாலும் உங்ககிட்டேயே வரேன்
பாருங்க..ச்ச" என்று காலைத்தரையில்
உதைத்து விட்டுத் தலையில் கையை
அடித்தவள்.. கையை நெற்றியில்
வைத்தபடி நின்று, தன் நிலையை
எண்ணி மிகவும் குன்றினாள்.

கார்த்திக்கிற்கு.. தான் கோபத்தில்
பேசிய சொற்கள் எந்த அளவு அவள்
மனதில் வடுவாய் பதிந்திருக்கிறது
என்று எண்ணியவனுக்கு மனம்
வலித்தது.

காலைத் தரையில் உதைத்ததில்
மதுவின் வலது கால் கால் கொலுசு
கழன்று விழுந்தது. அதைச் சென்று
எடுத்து வந்த கார்த்திக், ஒரு காலை
முட்டி போட்டவாறு அமர்ந்து அவளது
காலில் அந்தக் கொலுசை
மாட்டிவிட்டான்.

அவனின் செயலில் அப்படியே
அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்
மது.. கண்களில் மட்டும் நீர் வந்து
கொண்டே இருந்தது.. பின் அவளைப்
படுக்கைக்கு அழைத்து வந்து
கால்களை நீட்டியபடி, தலையணையை முதுகிற்கு வைத்து
சாய்ந்தவாறு அமர வைத்தான். பின்
கட்டிலை சுற்றி வந்தவன் மது மடியில்
தலை சாய்த்து அவளது வயிற்றில்
முகத்தை புதைத்து இருகைகளையும்
இடுப்பை சுற்றிக் கட்டிக் கொண்டான்.
ஏனோ அரைமாதமாக இழந்த
நிம்மதியெல்லாம் அவளின் மடியில்
தலை சாய்த்த போது கிடைத்துவிட்டது
போல உணர்ந்தான் கார்த்திக்.

மதுவிற்கு அவன் செயலில் பேச்சே
எழவில்லை. கண்களில் கண்ணீர்
மட்டும் சரம்சரமாய் வந்தது. அவளது
கண்ணீர் அவன் கழுத்தில் விழ
எழுந்தவன் "மது.. ஸாரிடா.. ஸாரிடா"
என்றான்.

"...."

"உன்ன அடிச்சது தப்புதான் மது.
மன்னிச்சிரு" என்று இருகைகளையும்
பிடித்துக் அவள் முகத்தைப் பார்த்துக்
மன்னிப்புக் கேட்டான் கார்த்திக்.

"அடிக்க மட்டுமா செஞ்சீங்க? அடிச்சதக்
கூட விடுங்க... ஆனா எப்படி எல்லாம்
பேசுனீங்க... டெம்ட் பண்ண ட்ரைப்
பண்றையா-ன்னு கேக்கறீங்க?
அவ்ளோ சீப்பா போயிட்டேன்ல நான்
உங்களுக்கு" என்று கண்ணீர்
விட்டபடியே கேட்டாள்.

"மது.. தப்புதான்டா.. அது நான்
அறிவிழந்து பண்ணிவிட்டேன்..
ஸாரிடி" என்று கன்னங்களைப் பிடிக்க
வந்தவனைத் தன் கை வைத்துத்
தடுத்தாள் மது.

"இந்த இரண்டு வாரமா எவ்வளவு
கஷ்டப்பட்டேன் தெரியுமா? வெளியே
யாருக்கும் தெரியக் கூடாது என்று
மறைத்து மறைத்து வைத்திருந்தேன்.
உடல் சோர்வு.. மயக்கம் என்று..
உங்களிடம் தான் முதலில் சொல்ல
வேண்டும் என்று அவ்வளவு ஆசை.
உங்கள் பின்னாடி சுற்றி சுற்றி
வந்ததால் தானே என்னை மட்டமாக
எண்ணிவிட்டீர்கள். அதை
வால்பாறையில் வைத்து சொல்லியும்
காட்டிவிட்டீர்கள் இல்லை?. என்னதான்
கோபம் கொண்டாலும், உங்களைப்
போல் என்னால் உங்களை வெறுக்க
முடியவில்லை கார்த்திக் " என்று
கைகளை வாயில் வைத்தபடி
தேம்பினாள்.

மதுவை எப்படிச் சமாதானம் செய்வது
என்றே கார்த்திக்கிற்குத்
தெரியவில்லை. இவள் இப்படி அழுகக்
காரணமானத் தன்னேயே வெறுத்தபடி
உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.

"இப்பக் கூட உங்க குழந்தை என்
வயிற்றில் வளர்கிறது என்றுதானே
பேசறீங்க" என்று அவனை நேராகப்
பார்த்துக் கேட்டாள்.

"இல்லை மது..." என்றவன் மிதுனா
வந்தது.. மதுவைத் தேடி ஹாஸ்பிடல்
வந்தது.. அங்கு தான் Pregnancy
ரிப்போர்ட்டை பார்த்தது என
அனைத்தையும் கூறி முடித்தான்
கார்த்திக்.

"அப்போ மிதுனா வரவில்லை
என்றால் நான் பொய் சொன்னேன்
என்று தான் கடைசி வரை நம்பி
இருப்பீர்கள்...இல்லையா.. என்னை
விட சிவா அண்ணா தான் முக்கியமா
உங்களுக்கு" என்று கோபமாகக்
கேட்டாள் மது.

"இதற்கு என்னிடம் பதில் இல்லை மது..
உன்னிடம் கோபமாக இருந்தேன்
தான்.. ஆனால் நீ சொன்ன மாதிரி
நான் உன்னை வெறுக்கவில்லை மது..
மிதுனா சொல்லியப் பிறகு தான் நான்
உன்னைத் தேடி ஹாஸ்பிடல் வந்தேன்..உண்மைதான்.. ஆனால் அவள் வரவில்லை என்றால்... என்ன
நடந்திருக்கும்.. நான் இன்னும்
இரண்டு நாள்ல வந்து உன்னை
வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு
கூட நினைச்ச மது.. எனக்கு கோபம்
தான்.. ஆனா நான் அத மறந்துட்டு
உன்கூட பழைய மாதிரி
இருக்கனும்ன்னு நினைத்தேன். உன்
லவ்வ அப்புறம் உன்னோட கேர்-அ
ரொம்ப மிஸ் பண்ணேன். நான் அந்த
வார்த்தைய அன்னிக்கு
சொல்லியிருக்கக் கூடாது தான்..
பெரிய தப்பு தான் டா.. அதுனால
எனக்கு உன்மேல லவ் இல்லன்னு
மட்டும் நினைச்சராதே.." என்று
கன்னங்களில் இருந்த கண்ணீரைத்
துடைத்து விட்டவன் "அப்பறம் சிவா..
அவன் சூழ்நிலையை நினைத்து
வந்தக் கோபம் தானே தவிர உன்னை
விட அவன் முக்கியமில்லை.. அவன்
மட்டும் இல்லை யாருமே உன்ன
முன்னாடி வச்சு பாக்கும் போது
எனக்கு முக்கியமில்லை.. ஆனால்
அந்தச் சூழ்நிலையில் நீ பொய்
சொல்கிறாய் என்று நினைத்து அவன்
நிலைமையை நினைத்து என
எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டது மது.
தயவு செய்து என்னடா இப்படிச்
சொல்கிறான் என்று வருத்தப்படாதே
மது.. என்னால் இந்த சினிமா டயலாக்
எல்லாம் பேச முடியாது" என்று
மதுவைப் பார்த்தவன் "ஆனால் நீ
எப்போது வீட்டிற்கு வருவாய் என்று
தவித்தேன்..வீட்டிற்கு வந்தால் உன்
நியாபகம் வருகிறது என்று தினமும்
லேட்டாக வந்தேன் " என்றவனை
வியப்புடன் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மது..

மதுவின் கண்கள் இப்போது
அழுகையை நிறுத்தி இருந்தது.
"நிஜமாகவா?" என்று நம்ப முடியாத
வியப்பில் கேட்டாள். பிறகு
படுக்கையில் இருந்து இறங்கியவன்
குளிக்கும் போது பான்ட் பாக்கெட்டில்
இருந்து எடுத்து வைத்த அந்தக்
கிப்டை மதுவின் கையில் தந்தான்.
"மது... உனக்கு சென்னையில் ஒரு
கிப்ட் வாங்கிட்டு வரதா சொன்னனே..
இதுதான்" என்று மதுவின் பக்கத்தில்
கால்களை தரையில் பதித்தபடி
அமர்ந்தான். மது அவனையே பார்க்க
"திறந்து பார் மது" என்றான்.

மது அதைத் திறக்க அதில்
சங்கிலியைப் போல மெலிசாக ஒரு
பெரிய செயின் போன்ற ஒன்று
இருந்தது.. கையில் எடுத்தவளுக்கு
அப்போது தான் அது நெக் செயின்
இல்லை ஹிப் செயின் என்று புரிந்தது.
ஒரு நிமிடம் புன்னகைத்தவள் "இதை
இன்னும் நான் இரண்டு அல்லது
மூன்று மாதம் தான் போட முடியும்..
அப்புறம் உங்க பிள்ளை சிணுங்கும்"
என்றாள்.

"நோ ப்ராளம்..." என்று அவள்
கைகளைப் பற்றியவன் அவளின்
உள்ளங்கையில் மென்மையாக
முத்தமிட்டான்.

ஒரு நிமிடம் அவனை நிமிர்ந்து
பார்த்தவள் "என்னால் உங்களைப்
புரிந்துகொள்ளவே முடியவில்லை
கார்த்திக்" என்றாள் குழப்பமான
முகத்தோடு.

"சில ரகசியங்களைச் சொல்ல
வேண்டி இருக்கிறது மது..இத்தனை
நாள் உன்னிடம் சொல்லாமல் விட்டது
தப்போ என்று இப்போது
தோன்றுகிறது" என்றான் கார்த்திக்
அவளை காதலோடுப் பார்த்து.

"நீ என்னிடம் முதல் முதலாக பேசியது
நியாபகம் இருக்கா?.. எனக் கேட்டவன்
"எனக்கு என்னன்னே தெரியல மது
வேறு யாராவது ஆக இருந்தால்
போனை வைத்திருப்பேன். ஆனால்
ஏன் உன்னிடம் பேச்சுக் கொடுத்தேன்
என்று தெரியவில்லை. நான் உனக்கு
ஓகே சொல்லனும்னு நினைக்கல..
ஆனா என்னால நோ சொல்ல முடியல
மது.. ஏன்னு இப்ப வரைக்கும் தெரியல.
நீ போன் வச்ச அப்புறம் நான்
தூங்கவே இல்லை அந்த நைட்.. நீ
என்ன பண்ணிட்டு இருக்கையோ..
எப்படியும் அழுதிட்டு இருப்பனு
தெரியும்.. போன் பண்ணலாம் கூட
நினைச்சேன்.. ஆனா வேண்டாம்னு
விட்டுட்ட.. சிவா என்னை அந்த
சுஜியை மறக்கத் தான் ஊட்டி கூட்டிச்
சென்றதே.. ஆனால் வரும் போது
அவள் நினைவே எனக்கு இல்லை..
மாறாக உன் நினைவு தான்.." என்று
சொல்லியவனை மது வாயைப்
பிளந்து பார்க்க அவளின் கைகளைத்
தட்டிக் கொடுத்தபடியே மறுபடியும்
ஆரம்பித்தான்.

"அதுக்கு அப்புறம் தான் உன்
நியாபகம் எனக்கு வரக்கூடாதுன்னு
நான் உன்ன முகநூல்ல ப்ளாக்
பண்ணது... இருந்தாலும் உன்ன பத்தி
அம்மாவும் நிலாவும் பேசும் போது
காது கொடுத்து கேட்பேன்.. அப்பப்போ
உன் நியாபகம் வரும் மது.. நீ வேற
அப்போது தான் 3ஆவது வருடம் நான்
அப்பாவுடன் பிசினஸ் பண்ண
வந்துட்டேன்.. ஸோ என் கண்ணுக்கு நீ
ரொம்பச் சின்னப் பொண்ணாத்
தெரிஞ்ச.. 'இது தவறு' என்று என்னை
நானே அவ்வப்போது மனதை
ஒழுங்காக வைத்திருப்பேன்.. அப்பவும்
விடாமல் சில சமயம் உன்
நியாபகங்கள் வந்துவிடும்" என்றவன்
மதுவின் கன்னங்களை கையில் ஏந்தி
"ஆனா அம்மா வந்து நீ என்ன லவ்
பண்றதா சொன்னாங்க பாரு,
அப்பவே நீதான்னு முடிவு
பண்ணிட்டேன். இருந்தாலும் என்
ஈகோனால ஒரு வாரம் கழித்து
சொல்லலாம் என்று முடிவு செய்தேன்.
ஆனால் உன்கிட்ட பேசினப்ப எல்லாம்
மறந்திருச்சு மது.. உன்ன சீக்கிரம்
கல்யாணம் பண்ணி கூட வைத்துக்
கொள்ள வேண்டும் என்று ஆசை..
இரண்டே நாளில் அம்மாவிடம் சம்மதம்
என்று சொல்லி.. ஒரு மாதத்தில்
கல்யாணத்தை வைக்கச்
சொன்னேன்" என்று தனக்குள் மட்டும்
நான்கு வருடங்களாக வைத்திருந்த
சின்ன சின்ன ரகசியங்களை
அவளின் முகத்தைப் பார்த்தபடியே
சொல்லி முடித்தான். மதுவின்
முகத்தில் அழுகையின் சுவடு
இப்போது சுத்தமாக நின்று இருந்தது.
மாறாக இப்போது ஆச்சரியமே முழு
உருவாக உட்கார்ந்திருந்தாள்.

"மது எதுவாக இருந்தாலும் கேட்டுவிடு..
இனி அதுஇது என்று நீ எதையும்
நினைத்து மனதை வருந்தக்கூடாது"
என்று அவள் ஏதோ தயக்கத்தோடு
கேட்க வருவதை உணர்ந்து அவளிடம்
கேட்டான் கார்த்திக்.

"அன்று சுஜியைக் கண்டு ஏன் அப்படி
ஆனது உங்கள் முகம்?" என்று
அவனின் அவன் டி சர்ட்டில்
பதித்திருந்த வரிகளைப்
பார்த்தபடியேக் கேட்டாள்.

"என்னைப் பார்த்துக் கேட்டால் தான்
பதில் சொல்லுவேன்" என்று கார்த்திக்
குறுச்சிரிப்புடன் சொல்ல... மது
அவனை நிமிர்ந்து பார்த்தபடிக்
கேட்டாள். "ஏன் மது லவ் பண்ணி
கல்யாணம் பண்ணி இப்போ 8
மாசத்துல குழந்தையே பொறக்கப்
போது நமக்கு... என்னையே வந்து நீ
இன்னும் ஏதாச்சும் கேட்கும் போது
மூஞ்சிய பார்க்க மாட்டேன் என்கிறாய்..
அவளைப் பார்த்து நான் எப்படிப் பேச
முடியும்.. அதுவும் இல்லாமல் அவள்
குழந்தை வேறு என் கையில்..
நினைத்துப் பார்" என்று கூறிச்
சிரித்தவன் "அடுத்த கேள்வி
இருக்கா?" என்று கேட்க மது ஆம்
என்று தலை ஆட்டினாள்.

"அதானே பார்த்தேன்... ஈஸியாகக்
கேளு மது மேடம்" என்று கார்த்திக்
நக்கலடிக்க "அன்று சொன்னீங்கள்ள..
நீ தான் என் பின்னால் வந்தாய்.. நான்
வரவில்லை என்று.. உண்மையாகவே
என்னைத் தப்..." என்று முகம் வாடக்
கேட்க வந்தவளின் வாயை தன்
கரத்தால் பொத்திய கார்த்திக்
"போதும் மது.. என்னக் கேட்க
வருகிறாய் என்று புரிகிறது.. நீ அன்று
என்னோடு வராமல் என்னை
ஊதாசீனப்படுத்துகாறாய் என்ற
கோபத்தில் தான் அப்படிப்
பேசினேன்." என்று சொல்ல "பின்னே
என்னை அத்தை கூட்டிப் போகச்
சொன்னார்கள் என்று கடமைக்காகத்
தானே என்னை அழைத்தீர்கள்" என்று
குறையாகச் சொல்ல "அத்தையும்
இல்லை சொத்தையும் இல்லை.. நான்
அழைத்தது போல இருக்கக் கூடாது
என்றுதான் அம்மாவின் பெயரை
உள்ளே இழுத்தேன்" என்று சின்னக்
குரலில் சொன்னவன் "ஏய் நீ மட்டும்
என்ன.. உன் மாமனார்
மாமியாருக்காகத் தானே என்னோடு
வந்தேன் என்று சொன்னாய்"
பொய்யாய் அதட்ட "இல்லை நீங்கள்
அப்படிச் சொல்லியதால் தான்
சொன்னேன்.. மற்றபடி உங்களோடு
இருக்க நினைத்துத் தான் வந்தேன்"
என்று கீழ்உதட்டைக் கடித்துச் சிரிப்பை
அடக்கியபடி சொன்னாள்.

அவளை அப்படியே தூக்கித் தன்
மடியில் உட்கார வைத்தவனிடம் "ஏன்
என்னிடம் முன்னாடியே
சொல்லவில்லை.. என்னைப் பற்றி
நினைத்துக் கொண்டு இருந்ததை"
என்று உதட்டைச் சுழித்தபடிக் கேட்டாள்.

"அதான் சொன்னனே மது.. எனக்கு
ஈகோ அதிகம் என்று.. அதுவும்
இல்லாமல் காதலிப்பதை விட நம்மை
ஒருவர் காதலித்து அந்தக் காதலில்
நாம் திளைத்து மூழ்குவதற்கு சமம்
இந்த உலகத்தில் வேறு எதுவும்
இல்லை என்று நினைக்கிறேன்"
என்று சொல்லி மதுவின் இதழ்களைச்
சிறை செய்து மதுவின் இதழில்
கவிதை பாடினான் கார்த்திக். அவன்
அவளது கன்னத்தைப் பற்றியிருக்க
மதுவோ அவனது முடியைக்
கோதியபடி இருக்க நீண்ட நாளிற்குப்
பிறகு கிடைத்த இருவரின் முத்தத்தில்
இருவரும் லயித்திருந்தனர்.

ஊடலிற்குப் பிறகு வரும்
முத்தம் கூட அழகுதான்..
இருமனப் போராட்டம்
நீயா நானா தலைக்கனம்
இவையனைத்தும் மண்ணில்
விழுந்த மழை நீர் போலத் தெறிக்க
மனதில் இருந்த பாரம் எல்லாம்
நீங்க ஊடலும் கூட அழகாகி விடுகிறது!
என்பதை இருவரும் உணர்ந்தனர்.
மூச்சிற்குத் தவித்து இருவரும் பிரிய
இருவருக்குமே வெட்கம் சூழ்ந்து
கொண்டது.

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு
"கார்த்திக்" என்று மது அழைக்க
என்ன என்பதைப் போலப் பார்த்தான்
கார்த்திக்.

அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு
அவனது தோளில் சாய்ந்தவள் "நீங்க
அப்பா ஆகிட்டீங்க கார்த்திக்" என்று
அவனது தோளில் முத்தமிட்டபடியே
சொன்னாள்.

மதுவை மென்மையாய் விலக்கி
அவளின் தாடையை நிமிர்ந்தியவன்
"இன்னொரு தடவை சொல்லு மது"
என்று ஆசையாகக் கேட்டான். ஏனோ
மது சொல்லும் போது கர்வமாக
இருந்தது கார்த்திக்கிற்கு.

அவனது கன்னத்தில் கை வைத்து
"நீங்க அப்பா ஆகிட்டீங்க கார்த்திக்"
என்று அழுத்தமாகக் கூற மதுவின்
நெற்றியில் இதழ் பதித்தான்.

"மது என்மேல கோபம் இல்லையே"
என அவளைத் தன் கண்களில்
கூரிமையாகப் பார்த்தபடிக் கேட்டான்.

சீரியஸாக யோசிப்பது போல
பாவனை செய்தவள் "இருந்துச்சு...
இப்போது இல்லை" என்றவள்
"பேசவே கூடாதுனு முடிவு பண்ண..
அத்தை கூட சீக்கிரம் வீட்டுக்கு
வந்துவிடுனு சொல்லிட்டு
கிளம்புனாங்க... ஆனா நீங்க தான்
எதுமே பேசல.. போன் கால், மெசேஜ்
ன்னு எதுவும் பண்ணல. சரியான
பிடிவாதக்காரன் நீங்க" என அவன்
கையை நறுக்கென்று கிள்ளி
வைத்தாள்.

"ஆமாம் ஆமாம்.. ஆனால் அந்தப்
பிடிவாதம் எல்லாம் உன்னைக் கடத்தி
வைத்திருப்பதாகச் சொன்ன போது
எல்லாம் சுக்கு நூறாகி விட்டது மது.."
என்று மதுவைப் பார்த்து முறுவல்
அளித்தான் கார்த்திக்.

"அதை எல்லாம் மறந்திடுவோம்"
என்றவள் "பிடிவாதம்
போயிருச்சுன்னா.. இனிமேல் என்
பேச்சைத் தான் கேட்க வேண்டும்
நீங்கள்" என்று போலியாகக்
கட்டளையிட "சரிங்க மகாராணி"
என்று தலையைச் லேசாய்ச் சாய்த்து
கார்த்திக் சொல்ல மது குறுஞ்சிரிப்பு
சிரித்தாள்.

"பார்ரர எதுவும் சொல்லாம தலை
ஆட்டுறீங்க" என வியப்பாகக் கேட்டாள்.

"ஆமாம் மது இனிமேல் பொண்டாட்டி
சொல்றதுக்கு தலை ஆட்டலாம்னு
முடிவு பண்ணிட்டேன்.. பொண்டாட்டி
சொல்றதைக் கேட்டாத்தான் வாழ்க்கை
ஜாலியாகப் போகுமாம்.. தாத்தா
அன்னிக்கு சிறுமுகைல வச்சு
சொன்னாரு.. அப்பப் புரியல இப்பப்
புரியுது எதுக்கு சொன்னாருன்னு "
என்று மதுவின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

"பாட்டிக்கு தாத்தாக்கும் நாளை காலை
முதலில் சொல்லனும்.. அவங்க தான்
ரொம்ப ஆசைப்பட்டாங்க..
அட்வைஸ்லாம் தந்தாங்க பாட்டி"
என்று கூறி வெட்கச் சிறிப்பு சிரித்தாள்.

"sure sure..நாளைக்கு முதல்
வேளையா எல்லார் கிட்டையும்
சொல்லிவிடலாம்" என்றவன் "மது
எனக்கு ரொம்ப சந்தோஷமா
இருக்குமா... ஏதோ சாதிச்ச மாதிரி
உணர்வு.. நமக்குன்னு ஒரு குழந்தை
ரத்தமும் சதையுமா உனக்குள்ள
வளரதுன்னு நினைக்கும் போதே
உடம்பே சிலிர்க்குது மது.. லவ் யூ டி"
என்று மதுவின் வயிற்றில் கையை
வைத்துப் பார்த்தவன் தலையை கீழே
இறக்கி அவளின் வயிற்றில்
முத்தத்தைத் தந்தான்.

அவன் நிமிர அவனின் மீசையைப்
பிடித்து முறுக்கி விட்டவள் "இதுதான்
பிடித்ததே" என்று மீசையைப் பிடித்து
இழுத்து தன் முகத்திற்கு அருகில்
அவன் முகத்தைக் கொண்டு வந்தவள்
அவனின் உதட்டிற்கு மேல் மீசையில்
ஒரு முத்தத்தைத் தர அவன் அவளைப்
வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
பின் ஏதேதோ அவள் கதை பேசத்
தொடங்க ஒன்று விடாமல் கேட்டுக்
கொண்டு இருந்தான். (ரத்தம் வராத
குறை தான் )

அவளின் வயிற்றில் இருந்த
கார்த்திக்கின் கை மேல் தன் கையை
வைத்தவள் "இருந்தாலும் என்னால
பர்ஸ்ட் சொல்லி உங்க முக
மாறுதலைக் காண முடியவில்லை
என்று குறையாக இருக்கு" என்று
அவனிடம் குறைப்பட்டாள்.

"அதனால் என்ன குட்டிமா அடுத்த
குழந்தைக்கு என்னிடமே
சொல்லிவிட்டால் போகிறது" என்று
கண்ணைச் சிமிட்டினான்.

அவன் கூறியவுடன் முகம் சிவந்து
வரிசைப் பற்கள் தெரியச்
சிரித்தவளின் விரல்களோடு தன்
விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.
அவளின் முகத்தில் இருந்த
சந்தோஷத்திற்காகவே அவளுடன்
நூறுஜென்மம் வாழ வேண்டும் என்று
தோன்ற அவளை மென்மையாக
அணைத்தவன் அவளின் விரல்களில்
முத்தமிட்டு சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
ரகசியத்தை அறங்கேற்றினான்.


********முற்றும்********
Super😍😍🤩🤩🌹
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top