• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,265
Reaction score
3,472
Location
Salem
எபி 22:

திருமணம் முடித்த மறுநாள் மட்டும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்தவர்கள் அதற்கடுத்தநாள் வழக்கம்போல வேலைக்கு கிளம்பிவிட்டனர்.
அதற்கு மறுத்த பெரியவர்களை,

"பாட்டி இனியும் லீவ் போட்டு வீட்ல இருந்து என்ன பண்ண போறோம் நாங்க? எப்போவும் போலதான. இப்போ மிருதுளாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நம்ம பேமிலில பாட்டியும் அவளும் சேர்ந்துட்டாங்க அவ்ளோதான்.

காலேஜுக்கு நெறயநாள் லீவ் போடுறது சரியில்ல. வீட்ல ஒட்டுகாதான இருக்கோம். அங்கேயும் கண்ணு முன்னதான் இருக்க போறோம். அப்பறோம் என்ன?" என்று தன் பேச்சால் அவர்களை வழிக்கு கொண்டுவந்து, அவளை கிளம்ப வைத்துவிட்டான் வருண்.

திருமணம் முடிந்தவுடன்,
புதுமண தம்பதிகளை எதற்கு சிலநாட்கள் வேலையை விடுத்து அவர்களுக்காக நேரம் ஒதுக்க சொல்லுகிறார்கள் என்று தெரிந்து பேசினானா, இல்லை தெரியாது இயல்பாய் பேசினானா என்பது அவனுக்கே வெளிச்சம்.

அவனின் குணம் அறிந்திருந்த அமிர்தம் பாட்டிக்கு இதில் பேரன் தங்கள் பேச்சைக் கேட்கப் போவதில்லை என புரிய விட்டுவிட்டார்.

சமையலறையில் காலை மற்றும் மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்த மனைவி, சிலமுறை அறையினுள் வந்து செல்வதை அவனது கண்கள் பார்த்தாலும், அன்று அவன் உடுத்த வேண்டிய சட்டை மற்றும் பாண்டை கவனமாக அயர்ன் செய்து கொண்டிருந்தான்.

செய்யும் வேலைக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் அல்லவா?

எனவே என்றும் நீட்டாக அயர்ன் செய்த உடுப்பில், டக் இன் செய்து, தாடி மீசை சரியான அளவு ட்ரிம் செய்து, பார்க்கவே இளவயது என்றாலும், மரியாதை கொடுக்கும் நீட்டான ஆசிரியர் தோற்றத்தில் இருப்பான்.

அவன் வகுப்பு மாணவர்களும் அதுபோல நீட்டாக இருக்கவேண்டும் என எண்ணுவான்.

சட்டையில் முதல் இரண்டு பட்டனை கழற்றி விடுவது, காலரை சரியாக மடக்கி விடாது இருப்பது, சிகையை சீராக வெட்டாது ஸ்டைல் என்ற பெயரில் கண்டபடி ஹேர் ஸ்டைல் விடுவது, ஹேர் கலரிங் செய்வது, செயின் மற்றும் பாண்டு(band) அணிவது இதுவெல்லாம் கூடாது என முதலிலேயே அவர்களிடம் தெளிவாக சொல்லி தடா போட்டு விடுவான்.

மேலும் கல்லூரியில் மொபைல் பயன்படுத்துவதை கண்டால், நேராக அது பிரின்ஸ்பல் ரூமிற்கு சென்றுவிடும். அதன்பிறகு கைபேசியை மீட்பது அவர்கள் பாடு.

வகுப்பறையில் யாரேனும் பபிள் கம்மை உண்பதை கண்டுவிட்டானானால், அவன் முறைப்பில் மென்று கொண்டிருப்பவர்கள் பயத்தில் விழுங்கியே விடுமளவு உக்கிரமாக இருக்கும் அவன் பார்வை.

இதனையெல்லாம் மீறியும் அவர்கள் இதுபோல நடக்கும்பட்சம், அவனின் கண்டிப்பை எதிர்கொள்ள வேண்டித்தான் வரும்.

மற்றும்படி சகஜமாக மாணவர்களுடன் உரையாடுவான். பாடத்தில் சந்தேகம் கேட்டால், சலிக்காது மீண்டும் நன்றாக விளக்கி கூறுவான். குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பேச்சால் ஊக்கப்படுத்தி அடுத்தமுறை நல்ல மதிப்பெண் எடுக்க வழிகளை சொல்லுவான்.

ஆனால் மாணவர்களின் ஒழுக்க விஷயத்தில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்க மாட்டான். அதையும் கற்பிப்பது தானே ஆசிரியரின் கடமை என்பது அவன் எண்ணம்.

சார் நிரம்ப ஸ்ட்ரிக்ட்!

மிரு அவன் அருகில் தயங்கி வர,
துணியை அயர்ன் செய்து முடித்தவன், அவளை நிமிர்ந்து என்ன என்பதுபோல பார்த்தான்.

"இன்னைக்கு உங்க ட்ரெஸை நானே அயர்ன் செஞ்சிருப்பேன். கிட்சன்ல வேலை முடிச்சிட்டு வந்து அயர்ன் செய்யணும்ன்னு நெனச்சேன். அதுக்குள்ள நீங்களே உங்க ட்ரெஸ் அயர்ன் பண்ணிட்டீங்க." என அவள் சொல்ல,

வருணோ, "இதுல என்ன இருக்கு? எப்போவுமே நான்தான் என் ட்ரெஸ் அயர்ன் பண்ணுவேன். பிரீயா விடு."
என இயல்பாய் சொன்னான்.

அவன் பேச்சில் மிருவிற்கு மனதுள் ஒரு சுணக்கம் வந்தது.

நேற்று அவனுக்கு அவள்தான் துணியை அயர்ன் செய்து மேசை மீது வைத்தாள். குளித்துவிட்டு வந்தவன் எந்த கேள்வியும் கேட்காது அதனை எடுத்து உடுத்திக் கொண்டான். எனவே பெண்ணவள் அதில் மகிழ்ந்து இனி அவனது வேலைகளையெல்லாம் தானே செய்யவேண்டுமென முடிவு செய்திருந்தாள்.

ஆனால் சமைக்க வேண்டும் மற்றும் இனி கல்லூரிக்கு புறப்பட வேண்டும் என்ற அவசரத்தில், உடுப்பை அயர்ன் செய்ய நேரம் கிட்டவில்லை. இன்னும் அவள் புடவையையே அயர்ன் செய்யவில்லை.

திருமணம் முடிந்தவுடன் கணவனுக்கு இதுபோல சிறுசிறு விடயங்கள் செய்வதில் தன் பங்கு இருக்கவேண்டும் என்ற இயல்பாக எழும் அவாவில் அவள் பேச, அதை உணராது அவன் எளிதாக தான்தானே எப்போதும் அயர்ன் செய்வேன் என முடித்துவிடவும், அதனாலே அவளுக்கு அந்த சுணக்கம்.

அவள் முகத்தைக் கண்டு அதனை உணர்ந்தானோ?

"மிருதுளா…" என்று அழைக்க, அவள் நிமிரவும் இருவரது பார்வையும் சந்திக்க,

"கல்யாணம் ஆனவாட்டி எல்லா வேலையும் நீயே செய்யணும்ன்னு முடிவு பண்ணி வச்சிருந்தியா?" என்றவனது கேள்விக்கு அவள்,
பதில் சொல்லும்முன்,

வருணே, "நீ என் சின்ன சின்ன விஷயத்தை கவனிக்கணும்னு நெனைக்கிறது தப்பில்ல. பட் அப்படி எல்லாத்தையும் இழுத்துபோட்டுட்டு செஞ்சாதான் நல்ல ஒய்ப். இல்லாட்டா இதுபோல செய்ய முடியலயேன்னு கில்ட் ஆகிட்டு முகத்தை டல்லா வச்சுக்கணும்ன்னு அவசியம் இல்ல.

காலையில சமைச்சுட்டு, வீட்டுல இருக்க வேலையெல்லாம் செஞ்சுட்டு வேலைக்கு கிளம்புறது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும். நானும் பண்ணிருக்கேன்ல்ல.
ஸோ வீட்டுல எல்லா வேலையும் செஞ்சுட்டு, என் வேலையும் சேர்த்து செஞ்சு எதுக்கு இவ்ளோ கஷ்டம்ன்ற மீனிங்லதான் பிரீயா விடுன்னு சொன்னேன்.

எல்லா வேலையும் உன் தலையில கட்டிட்டு அதுக்கு எனக்கும் சம்மந்தம் இல்லன்னு விலகி நிக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. நானும் ஹெல்ப் பண்ணுவேன். நேத்து கிட்சன்ல்ல ஹெல்ப் பண்ணவான்னு கேட்டபோது வேணாம்ன்னு சொல்லிட்ட. அதுக்காக அந்த பக்கமே இனி வரமாட்டேன்னு நினைக்காத.
வெசில்ஸ் வாஷ் பண்ண, சமைக்கன்னு நானும் செய்வேன். ஓகே?" என்றவனின் பேச்சில் இமைக்க மறந்தவள்,

"ஓகே…" என மொழிய,

"ம்ம்… நான் போய் கிளம்புறேன்." என்றுவிட்டு குளிக்க சென்றுவிட்டான்.

போகும் அவனைக் கண்டவள் மனதுக்கு இன்னுமே அவனை பிடித்து தொலைத்தது.

'இவர நாம இம்ப்ரெஸ் பண்ணலாம்ன்னு பாத்தா, இவர் மறுபடி மறுபடி நம்மள இம்ப்ரெஸ் பண்ணிட்டு இருக்காரு.' என எண்ணினாள்.

அவனை அவளுக்கு பிடிப்பது போல, அவளை அவனுக்கு பிடிக்கவைக்க வேண்டும்.
தன்னைப்போல தன்னவனும் காதல் தன்மீது காதல் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவள் மனதுள் அதிகமாகவே இருந்தது.

ஆனால் அதனை எவ்வாறு சாத்தியமாக்குவது என்றுதான் பாவைக்கு விளங்கவில்லை.

திட்டமிட்டு ஒருவருக்கு ஒருவர் மீது பிடித்தத்தை கொண்டுவர இயலுமா?
அப்படி செய்தாலும் இயல்பாய் வராத அந்த பிடித்தம் நிலைக்குமா?

இதனையெல்லாம் செய்தால் தங்கள் மனம் கவர்ந்தவர்கள் நம் மீது காதல் கொண்டுவிடுவார்கள் என்று பட்டியலிட இயலாதே!

காதல் என்பது காரணமே இன்றி ஒருவரை நமக்கு பிடிப்பது. அவர்களை பிடித்த பிற்பாடு அவர்களின் சிறுசிறு செய்கைகளும் பிடித்துபோகும்.

அவர்கள் மீதான நம் நேசம், நெஞ்சத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும்.
மனம் அந்த ஆக்கிரமிப்பிற்கு விரும்பியே அடி பணியும்.

வரையறுக்க இயலாத காதல் உணர்வுகளை ஒருவரிடமிருந்து பெற வழிமுறைகள் என்று ஒன்றுமில்லை. அது தானாக நிகழும் ஒரு மாயம்.

ஆனால் பலவற்றை யோசித்த மிரு சிவற்றை அறியவில்லை.

அவளின் மென்முகம் கண்டே அலைப்புறும் அவனது மனம் கொள்ளும் அமைதி பற்றி அவள் அறியவில்லை.
பெரியவர்களின் மீதான அவளின் பாசமும் அக்கறையும் கொண்டு, அவள்மீது வருண் வைத்திருக்கும் நல்லெண்ணம் அவள் அறியவில்லை.
வாண்டுகளுடன் சரிக்கு சரியாய் விளையாடுபவளின் குறும்பிற்கும், கல்லூரியில் மாணவர்கள் தவறும்போது காட்டும் கண்டிப்பிற்கு
இடையே காட்டும் அவளின் பரிமாணத்தில் அவன் அடையும் ஆச்சர்யத்தை அவள் அறியவில்லை.

நேரத்தை பார்த்த மிரு, அதற்குமேல் யோசிப்பதை விடுத்து சமையலறையில் இருந்த மிச்ச வேலையை கவனித்தவள்,
பின் தன் புடவையை அயர்ன் செய்துவிட்டு, அவன் குளித்து வரவும் அவளும் குளித்துவிட்டு சேலையை உடுத்திக்கொண்டு வேகமாக புறப்பட்டாள்.

"போய்டு வரோம் பாட்டி." எனக்கூறி பெரியவர்களிடம் விடைபெற்று புன்னகை முகமாக வெளியே வந்தவர்களுக்கு அப்போதே இருவரும் ஒரே வாகனத்தில் செல்வதா, வேண்டாமா என்ற எண்ணம் எழுந்தது.

மிருவின் மனதில் வேண்டுமானால் காதல் இருக்கலாம். ஆனால் இப்போது வருணின் உள்ளத்தில் அவ்வாறு ஒன்று இல்லை அல்லவா.

எனவே அவர்கள் திருமணம் பற்றி கேள்விப்பட்டதும் பலர்,
'ஒரே இடத்துல வேலை செய்றீங்க. அப்போ லவ் மேரேஜா?' எனக் கேட்டனர்.

கல்லூரியில் அவர்கள் அந்தளவு பேசிக்கொண்டதில்லை தான். ஆனாலும் இயல்பாய் யாருக்கு அதுபோல தோன்றலாம்.

ஆசிரிய பணியில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இளையாவர்களை வழிநடத்த வேண்டும்.

எனவே கல்லூரிக்கு வேலை செய்ய வந்துவிட்டு காதலா, ஆசிரியர்களே இவ்வாறு என்றால் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்றெல்லாம் சிலருக்கு அவர்கள் திருமணம் எண்ணத்தை தோற்றுவிக்கலாம்.

இருவரும் கல்லூரியில் அவ்வளவாக பேசிக்கொண்டதில்லை.
வீட்டிற்கு சென்றபின் அது அவர்களுடையே தனிப்பட்ட விடயம்.
இருந்தபோதும் வருணின் மனம் இதனை யோசித்தது.

ஆனால் அவர்களுக்கு வீட்டில்தான் பெரியவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என கூறினாலும் யாரும் நம்ப போவதில்லையே? என்றெல்லாம் எண்ணியவனுக்கு இருவரும் தனியே செல்வதும் சரி என்று படவில்லை.

"இனி காலேஜுக்கு என் பைக்லயே போலாமா? உனக்கு ஓகேவா மிருதுளா?" என்ற கேள்விக்கு,

உள்ளே குத்தாட்டம் போட்டவள் வெளியே இயல்பாய் முகத்தை காட்டி, "ஓகே." என்றாள்.

"காலேஜூல நீயும் நானும் கூட வேலை செய்யுற கொலிக்ஸ் மட்டும்தான். அங்க…" என ஆரம்பித்தவன், அவளின் முறைப்பில் நிறுத்தி,

"ஏன் முறைக்குற?" என புரியாது வினவ,

"பின்ன… என்ன எல்லாத்துக்கும் எனக்கு சொல்லிக் கொடுக்கிறீங்க? பர்சனல் வேற, ப்ரொபெசனல் வேறன்னு எனக்கு தெரியாதா?
அங்க வந்து எப்படி இருக்கனும்ன்னு இன்ஸ்டரக்ஷன் கொடுக்கறீங்க? நான் ஒன்னும் குழந்தை இல்ல. எனக்கு தெரியும்." என முறுக்கி கொண்டு கூறியவளைக் கண்டு அவளது பாவனையில் தோன்றிய சிரிப்பை அதரங்கள் விரிய புன்னகைத்து வெளிப்படுத்தியவன்,

"ஓகே… கூல். ஜஸ்ட் சொன்னேன். எனக்கும் சேர்த்துதான்." என சொல்லி அவளை மலையிறக்கியவனுக்கு அவளின் இந்த உரிமையான கோபம் பிடித்தது.

அதன்பிறகு இருவரும் அவனது பைக்கில் கல்லூரி நோக்கி கிளம்பினர்.

அவர்கள் கல்லூரிக்கு சென்று சேர்ந்தபோதே, ஸ்கூட்டியில் வந்த மேகாவும் அவர்கள் ஒரே வாகனத்தில் வந்தததைக் கண்டுவிட்டாள்.

தங்கள் வருகையை பதிந்துவிட்டு ஸ்டாப் ரூமில் நுழைந்த பின், அவர்கள் இடத்தில் அமர்ந்துகொண்டனர்.

மிருவின் அருகே அமர்ந்த மேகா அவளை குறுகுறுவென்று பார்க்க,
"என்ன மேகா? ஏன் அப்படி பாக்குற?" என்று மெட்டீரியலில் கவனம் வைத்திருந்தவள் கேட்க,

"புதுசா கல்யாணம் ஆனவங்க. ரெண்டுநாள் லீவ் எடுத்துட்டு அப்பறோம் வரலாம்ல. அதுக்குள்ள வேலைக்கு வந்துடீங்க?" என,

"அப்பறோம் சிலபஸ் யாரு முடிக்குறது?" என கூறியவள் மீண்டும் மெட்டீரியலில் முகம் புதைக்கவும்,

"ம்ம்… அண்ணாக்கும் உனக்கும் ஒரே இடத்துல வேலை. ஒரே வெஹிகில்ல வேலைக்கு வரதுன்னு… ஹௌ லக்கி இல்ல? நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம். ஒரே லவ்ஸ்ஸா போகும்." என கிண்டல் செய்தவளை,

'நாள் முழுக்க லவ்ஸ்? வீட்டுலயே அப்படி ஒன்னு நடக்கலையாம். இங்க வர முன்ன அவர் பேசினது தெரியாம என்னலாம் உளறிட்டு இருக்கா பாரு.' என பல்லைக் கடித்தவள், முறைக்கவும்,

"உண்மைய சொல்லிட்டேன்னு கோபமா?" என வினவியவள் கேள்வியில் தலையிலே அடித்துக் கொண்டவள், அவள் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

அவ்வப்போது வருண், மிரு கண்கள் ஒருவரை ஒருவர் இயல்பாக பார்த்தாலும், எப்போதும்போல பணியில் மட்டுமே கவனத்துடன் இருந்தனர். அடுத்தடுத்த நாட்களிலும் இதுவே வழக்கம் ஆனது. முதலில் கிண்டலாக பேசிய சிலரும் அதன்பிறகு இயல்பாக விட்டுவிட்டனர்.


தொடரும்…
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,265
Reaction score
3,472
Location
Salem
இந்த எபி வாசிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க drs... 😍❤

நன்றி 🥰✨
 




m.girija priya

நாட்டாமை
Joined
Sep 28, 2022
Messages
33
Reaction score
35
Location
Kochi
Miru voda gunathula varum impress aanadhu miru theriyala....avana yeppadi impress panradhu nu yosikira😏😏😜 mmkum..Varun college la romance ah ....avar oru strict officer aakum😎nice interesting ud sis ❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,265
Reaction score
3,472
Location
Salem
Miru voda gunathula varum impress aanadhu miru theriyala....avana yeppadi impress panradhu nu yosikira😏😏😜 mmkum..Varun college la romance ah ....avar oru strict officer aakum😎nice interesting ud sis ❤
Ama... Miru ku adhu therila🤭

Appavi pulla... 🤗

Strict officer... Ama ka 😍🔥

Thank u🥰❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top