• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 3 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
ஹாய் பிரெண்ட்ஸ்,

என்னடா ரெண்டு எபிசோட் போட்டுக் காணமாப் போனவ திரும்ப வந்துருக்காளேன்னு தானே யோசிக்கறீங்க. என்ன செய்ய ? நம்ம டிசைன் அப்படி. சட்டுன்னு வீடு ஷிப்ட் ஆகற நிலைமை . அந்த வேலை முடியவும், டஸ்ட் ஒத்துக்காமல் வீசிங். இதுக்குள்ளே பத்து நாள் ஓடிப் போச்சு. சரி முடிஞ்சவரை ட்ரை பண்ணுவோம்ன்னு நினைச்சப்ப, நான் யோசிச்சு வச்சுருந்த அதே கான்செப்ட்லே வேறே ஒரு ஸ்டோரி படிச்சேன். அப்போ இந்த லைன் நாமளும் எழுதினா அது தப்பு. வேறே கான்செப்ட் யோசிக்கும் முன் டெட் லைன் கிட்டே வந்துடுத்து. சரி நமக்கு லக் இல்லைன்னு முடிவு பண்ணினா , சர்ப்ரைசா பிரியங்கா சிஸ்டர் கான்டெஸ்ட் ஃபைனல் டேட் எக்ஸ்டெண்ட் பண்ணிருந்தாங்க . சரி . கடவுள் செட்டிங் நமக்கு சாதாகமா இருக்கு. இன்னொரு வாய்ப்பு எடுத்துப் பார்ப்போம்ன்னு மீண்டும் ஸ்டார்ட் பண்ணிட்டேன். இப்போதும் நான் நினைச்சதை விட பெரிய சேஞ்சஸ் வருமான்னு தெரியாது. ஆனால் காப்பி கேட்ன்னு சொல்ல முடியாத அளவு எழுத ட்ரை பண்ணறேன். மற்றபடி எல்லாம் கடவுள் கையில். இதோ முள்ளாடும் ரோஜாக்கள் மூன்றாவது அத்தியாயம் உங்கள் கருத்துக்களுக்காக .. & முதல் இரண்டு எபிசோட்ஸ்க்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல. படித்த அனைவருக்கும் நன்றிகள்.

அத்தியாயம் - மூன்று
திருவான்மியூர் போலீஸ் குவார்ட்டர்ஸ். ஆபிசர்ஸ்க்கான தனி வீடு ஒன்றில் அவரின் எஜமானரை எதிர்பார்த்துக் காத்து இருந்தார் சபாபதி. அந்த வீட்டின் சமையல் முதல் கம்பானியன் வரை அனைத்தும் அவரே. ஏன் எனில் அந்த வீட்டில் வசிப்பது இவரும், இவர் எஜமானர் இருவர் மட்டுமே.

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு சபாபதி எட்டிப் பார்த்தார். அந்த வீட்டு உரிமையாளர் டி. ஜி. பி அஷோகவர்மன் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்.

அஷோகவர்மன் மிகுந்த கோபத்தில் இருப்பது அவரின் நடையிலேயேத் தெரிந்தது .
எந்தக் கேள்வியும் கேட்காது அவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க, வாங்கிப் பருகிய அஷோக்வர்மன் சபாபதியிடம்

“அந்த வீணாப் போனவன் வந்தானா சபாபதி ?” என்று வினவினார்.

“யார சர் கேட்டகறீங்க?”

முதலாளி, ஐயா, எஜமான் என்று அழைப்பது எல்லாம் அசோக்வர்மனுக்குப் பிடிக்காது. அதனால் சர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு இருந்தார்.

“எல்லாம் அந்த மாறனத் தான் சொல்றேன்” என்றார்.

“இன்னிக்கு இங்கே வரவே இல்லீங்களே சர்”

“எந்த மூஞ்சி வச்சுட்டு வருவான்? செய்யறது எல்லாம் விளங்காவெட்டி வேலை? பின்ன எப்படி வருவான்?” என்று பொருமினார் டி.ஜி பி.

“இதுக்குனு வேறே மாஸ்க் போட்டுட்டா வரமுடியும் டி. ஜி. பி, சர். “ என்றபடி வந்தான் இளமாறன். .

“வாங்க பத்திரிகையாளரே ! ஏண்டா உனக்கு யார்டா அங்க டெட்பாடி இருக்குன்னு தகவல் சொல்றான்?”

“காத்துப் புக முடியாத இடத்திலே கூட பத்திரிகைக்காரன் புகுந்திடுவான். அத்தனைப் பெரிய கடற்கரையிலே டெட்பாடி இருக்கிறது தெரியாதா என்ன?”

“பப்ளிக் கூடப் பார்க்காத போது உனக்கு எப்படித் தெரியுது? சரி அதுதான் போகட்டும். என்னடா சட்டம் ஒழுங்கான்னு கேள்விக் கேட்டுட்டு இருக்க? சிட்டி கண்ட்ரோல் நான் தான் பாரக்கறேன்னுத் தெரியாதா? இது என்னை பிளேம் பண்ணும்ன்னு தோணலையா ?

“நீங்க இருந்தும் இப்படி ஆகிருக்கேன்னு தான் அந்த கேள்வியைக் கேட்டேன்”

“ம். புரியுது. ஆனால் இது கொஞ்சம் சிக்கலான விஷயம். விசாரணைக்குப் பிறகு தான் கொஞ்சமாவது க்ளூ கிடைக்கும். மோடிவ் மர்டர்னா இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையே வராது. அப்போ உன்னுடைய கேள்வி தேவை இல்லாமல் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கும்.”

“எந்த ஒரு மர்டரும் மோடிவ் இல்லாமல் நடக்கப்போறது இல்லை. ஆனால் உங்களுக்கு ஒரு ஸ்கூப் கொடுக்கறேன். இது தொடரும்ன்னு தான் தோணுது”

“என்னடா சொல்ற? உனக்கு எப்படித் தெரியும்? “

“அது என்னோட சீக்ரட். “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் மற்றுமொருவர் வரும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தனர்.

உள்ளே வரும்போதே டி.ஜி.பி.க்குக் குறையாத வேகத்தோடு வந்தவள் தொப்பென்று சோபாவில் அமர, மீண்டும் சபாபதி தண்ணீரோடு வந்தார்.

“மாமா , இந்த மீடியாகாரனை ஏன் உள்ள சேர்த்தீங்க? அப்படியே வாசலோடு துரத்தி விட வேண்டியது தானே?”

“பெரியப்பா , இந்த போலீஸ்காரியையும் சேர்த்து துரத்தி விடுங்க” என, மாறனை அடிக்க ஓடினாள் டெபுட்டி கமிஷனர் அபர்ணா.

“டேய், இன்னிக்குதான் ஐஞ்சு வருஷம் கழிச்சு சென்னைக்கு வந்துருக்கா என் மருமக. அதுக்குள்ளே அவளைத் தூரத்துவதைப் பற்றிப் பேசற?” என்றார் டி. ஜி. பி .

“ஐஞ்சு வருஷம் கழிச்சு வந்த உங்க மருமக முக்கியம். தினம் வந்து சாப்பிட்டீங்களா? தூங்கினீங்களான்னு கேக்கற உங்க தம்பி பையன் இளப்பம் அப்படிதானே ?” என்று மாறன் கூறவும்,

“அப்படி எல்லாம் இல்லைடா, நீங்க ரெண்டு பேரும் என்னோட ரெண்டு கண்ணு. நீங்க ரெண்டு பேரும் இல்லைனா , வெறும் போலீசா மட்டும் தானே இருந்து இருப்பேன். மனுஷனா இருந்துருக்க மாட்டேன் “ என்றார் அஷோக்வர்மன்.

அஷோக்வர்மன் அப்படிக் கூறவும் இருவரும் அவரின் இரு பக்கம் வந்து அணைத்துக் கொண்டனர்.

அந்த சமயம் சபாபதி மூவருக்கும் ஸ்நாக்ஸ் மற்றும் காபி எடுத்துக் கொண்டு வர மூவரும் எடுத்துக் கொண்டனர்.

அஷோக் , “சபாபதி , நீ காபி சாப்பிட்டியா?” என்று வினவ,

“உங்களுக்குக் கொடுக்காம என்னிக்கு சாப்பிட்டு இருக்கேன்?” என்றார் சபாபதி.

“ஏண்டா, உனக்கு எத்தனை தடவை சொல்றது எனக்காக வெயிட் பண்ணாத . நேரத்துக்கு சாப்பிடுன்னு?

“ஆமா, இருக்கிறது ரெண்டு பேர். ஏழு தடவை வேலை செய்யாறதா?”

“இந்த விளங்காவெட்டிப் பயல் கூட சேர்ந்து நீயும் பேசக் கத்துக்கிட்டே. இப்போவாவது வயித்துக்கு சாப்பிடு” என்று திட்டினார் அஷோக்.

அஷோக்கின் வேலைக்காரர் தான் சபாபதி என்றாலும் , இருவரும் அண்ணன், தம்பி போல தான் பேசிக் கொள்வார்கள். மரியாதையாக சர் என்று அழைத்தாலும், சபாபதி தன் அண்ணன் அஷோக் என்பது போல தான் உரிமையோடு நடந்துக் கொள்வார்.

அப்போது அபர்ணா “சபாபதி அங்கிள், நல்லா இருக்கீங்களா? வந்தவுடனே இந்த வம்பளந்தானாலே உங்ககிட்டேப் பேச முடியல?” என்றாள்.

“நல்லா இருக்கேன் பாப்பா. நீ எப்படி இருக்க? இனியாவது நம்மூரிலேயே இருக்கிற மாதிரி பார்த்துக்கோ கண்ணு” என்றார் சபாபதி.

“அது எல்லாம் என் கையில் இல்லை அங்கிள். உலகத்திலே எல்லோரும் நல்லவங்களா மாறினா, நானும் ஊர் ஊராப் போக வேண்டாம். அது நடக்க வாய்ப்பு இல்லை. அப்போ நானும் பெட்டி கட்டிட்டு இருக்க வேண்டியது தான். “

பின் தன் மாமாவிடம் “மிஸ்டர் கூல்ன்னு டிபார்ட்மெண்ட்லே பட்டம் வாங்கின உங்களுக்குக் காலையிலே என்ன டென்ஷன்? இது மாதிரி எத்தனைக் கேஸ் உங்க சர்வீஸ்லே பார்த்து இருப்பீங்க ? “ என வினவினாள்.

அஷோக் பதில் சொல்வதற்குள் மாறன் “பெரியவருக்கு வயசாகிடுச்சு. அடங்கி ஒடுங்கி வீட்டில் உக்காருங்கன்னு சொன்னால் கேட்டாதானே?” என, இப்போது மாமா, மருமகள் இருவரும் அவனின் முதுகில் அடித்தனர்.

“யாருக்குடா வயசாகிடுச்சு? இப்போக் கூட ஒரு ரன்னிங் ரேஸ் இல்லை ஷட்டில் கேம் விளையாடலாம். யாரு ஜெயிக்கிறான்னுப் பார்க்கலாம்?” என அஷோக் வினவ,

“என்ன வயசாகிடுச்சாவா? இன்னும் ஒரு வருஷத்தில் ரிடயர் ஆகப் போறீங்க. சும்மா சின்னப் பையன் மாதிரி ஸீன் போடாதீங்க?” என,

“போடா . எங்க மாமா ஃபிட்னஸ் பார்த்தியா? மிஞ்சிப் போனால் நாற்பது வயசு சொல்லலாம். அவர் சரின்னு சொன்னால் கல்யாணத்திற்கு பொண்ணு கூடப் பார்க்கலாம்” என்றாள் அபர்ணா.

“எது அறுபதாம் கல்யாணத்துக்குத் தானே ? தாராளமாப் பார்க்கலாம்.” என மீண்டும் இருவரிடமும் அடி வாங்கினான் மாறன்.

“பெரியவங்கக் கிட்டே என்ன மரியாதை இல்லாமல் பேச்சு?” என்ற குரல் கேட்க, அங்கே வாசலில் தம்பதிகளாக நின்று இருந்தனர்.

அஷோக் எழுந்து “வாங்க மாப்பிள்ளை. வாம்மா புவனா “ என்று வரவேற்றார்.

அபர்ணா “ஹாய் மா, ஹாய் பா” என, மாறன் “சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா “ என்று அவருக்குப் பதில் கூறினான்.

எல்லோரிடமும் வாயாடும் மாறன், அடங்கும் ஒரு இடம் என்றால் அது தி ஃபேமஸ் ஹை கோர்ட் லாயர் சஞ்சயிடம் மட்டுமே.

அசோக் உடன் பிறந்தவர் ஒரு அண்ணா , ஒரு தம்பி, ஒரு தங்கை என சற்றுப் பெரிய குடும்பமே. அஷோக் அண்ணா, தம்பி இருவரும் தற்போது உயிரோடு இல்லை. அவரின் தம்பியின் மைந்தன் தான் இளமாறன்.

புவனா அசோக்கின் ஒரே தங்கை. அவரின் கணவர் சஞ்சய். இவர்களின் ஒரே மகள் அபர்ணா.

அஷோக் குடும்பத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு ஒன்றினால் மாறன் தன் பெற்றோரை இழந்து இருக்க, அவனுக்காகவே திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார் அசோக். ஆனால் அவரின் நேர்மையான குணமே ஒரு இடத்தில் இல்லாமல் அடிக்கடி ட்ரான்ஸ்பர் கொடுக்கப்பட, மாறனின் படிப்பை மனதில் கொண்டு தன் தங்கையிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

முதலில் ஹாஸ்டலில் சேர்ப்பதாகத் தான் நினைத்து இருந்தார். ஆனால் சஞ்சய் நாங்கள் இருக்கும் போது எப்படி ஹாஸ்டலில் சேர்க்கலாம் என்று சண்டைப் போடவே , அவர்களிடமே மாறனை விட்டு விட்டார்.

மாறனுக்குத் தன் மாமா சஞ்சய் மேல் ஒரு பிரமிப்புக் கலந்த மரியாதை உண்டு. அவர் சகஜமாக இருந்தாலும், அவரிடத்தில் ஒரு இடைவெளியுடன் தான் இருப்பான்.
ஆனால் அஷோக்கிடம் அவனுக்கு எல்லைகள் கிடையாது. லீவிற்கு அவர் இருப்பிடம் செல்லும் போதும் சரி, இளமாறனைப் பார்க்க வரும்போதும் சரி அவரோடு நன்றாக ஒட்டிக் கொள்வான். அவரின் துன்பங்கள் மறந்து அவரை உயிர்ப்புடன் வைத்து இருப்பது இளமாறன், அபர்ணா இருவரின் செல்லச் சண்டைகள் மற்றும் இருவரும் அஷோக் மீது வைத்து இருக்கும் பாசமுமே காரணம். ஊரில் இருந்தால் மாறன், அபர்ணா இருவரும் தினமும் அஷோக்கைச் சந்தித்து விட்டே செல்வர். பெரும்பாலும் மாலையில் அவர் டியூட்டி முடிந்து வீடு திரும்பியபின் வந்துவிட்டு கையோடு இரவு உணவு முடித்தே தங்கள் வீடு திரும்புவார்கள்.

அபர்ணாவிற்கு அஷோக்வர்மாவின் நேர்மை மீது பிரமிப்பு. அதனால் தான் அவரையே ரோல் மாடலாகக் கொண்டு ஐபிஎஸ் சேர்ந்தாள். அவரைப் போல ஊர் ஊராக சுற்றவும் செய்தாள். வட மாநிலங்களில் பணி புரிந்து விட்டுச் சொந்த மாநிலத்திற்கு இரண்டு நாள் முன் தான் அவளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து இருந்தது.

அபர்ணா சென்னையில் சார்ஜ் எடுக்கப் போகும் விஷயம் எல்லோரும் அறிந்து
இருந்தாலும், எப்போது வருகிறாள் என்பதை யாரிடமும் சொல்லவில்லை. அன்றைக்குக் காலை விமானத்தில் வந்து இறங்கி தன் மாமாவிடம் பேசியவளை, பீச் கொலை விஷயம் அறிந்து நேரடியாக சார்ஜ் எடுக்குமாறு அஷோக் கூறியிருக்க, அவள் ஊர் திரும்பிய விஷயம் டிவி பார்த்தே தெரிந்துக் கொண்டிருந்தார்கள்.

எப்படியும் டியூட்டி முடிந்து நேராகத் தன் மாமாவின் வீடு வருவாள் என்று தான் அவள் பெற்றோரும் இங்கே வர, வரும்போதே இளமாறன், அபர்ணா சண்டையைத் தான் பார்த்தார்கள்.

அபர்ணாவின் அம்மா புவனா “அடியே அபி , “ என்றழைக்க

“அம்மா, ஒரு டிசிபியைப் பார்த்து அடியேன்னு கூப்பிடறீங்க?” என்று கூறவும்,

“எது? உன்னை விட ரெண்டு வயசுப் பெரியவன் மாறன். அவனை வாடா , போடான்னு சொல்ற? முதல்ல நான் உனக்கு அம்மா. அப்புறம் தான் டி. சி. பி, ஏ. சி. பி எல்லாம் ” என்றார் புவனா.

“சரி. சரி தாங்கள் சொல்ல வந்ததைச் செப்புங்கள்” என அபர்ணா கூறவும்,

“அடிங்க. என் அண்ணா உன்னைச் செல்லம் கொடுத்து கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. “ என்றவர், “ஊருக்கு வந்ததுக் கூட சொல்லாமல், நேரே டியூட்டி ஜாயின் பண்ணிட்ட. டியூட்டி முடிஞ்சு இங்கே தான் வருவ. பெத்தப் பொண்ணப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு வந்தா, இங்கேயும் வம்பு வளர்த்துட்டு இருக்க?” என முடித்தார்.

அதற்குள் அஷோக் “ அபிய ஒண்ணும் சொல்லாதடா. அபி, மாறன் ரெண்டு பேரும் சண்டை போடலைனா தான் நல்லா இருக்காது. சரி சரி விடு. “ என்றவர்,

“சபாபதி, புவனாக்கும் , மாப்பிள்ளைக்கும் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வா” என்றார்.

“அஷோக், என் பொண்ணுக்கே மாப்பிள்ளை வந்துருச்சு. இன்னும் என்னை மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு இருக்கீங்க. சஞ்சய்ன்னு சொல்லுங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேக்கறது இல்லை” என்றவர் , “ஸ்நாக்ஸ் வேண்டாம் மச்சான். நேரே டின்னர் சாப்பிடறேன் .” எனக் கூறினார்,

“சபாபதி , எல்லோருக்குமே டின்னர் ரெடி பண்ணு. நம்ம அபிம்மாக்குப் பிடிச்சது, மாப்பிள்ளைக்குப் பிடிச்சது எல்லாம் பார்த்துப் பண்ணிடு” அஷோக் சபாபதிக்கு உத்தரவிட்டார்.

அபர்ணா மாறனைப் பார்த்து “ஹே , பாரு எங்க மாமா, எனக்குப் பிடிச்சது தான் பண்ண சொல்லிருக்காங்க.” என கொக்கரிக்க,

“ஹலோ , நாங்க தினமும் சேர்ந்து சாப்பிடுவோம். அதனால் எப்பவுமே எனக்குப் பிடிச்சது இங்கே இருக்கும். நீதான் ஊர் ஊராச் சுற்றிட்டு இங்க வந்துருக்க, ஏதோ வாய்க்கு ருசியா மருமக சாப்பிடட்டுமேன்னு உங்க மாமா சொல்லிருக்கார். “ என மாறன் பதில் கொடுத்தான்.

மீண்டும் ஒரு சண்டை ஆரம்பிக்கும் அறிகுறி தெரிய, சஞ்சய்ப் பேச ஆரம்பித்து இருவரையும் திசை மாற்றினார்.

“அபி, சிம்லாலே ஹையர் ஆபிசர் உன்னை மிரட்டினது எல்லாம் ஏன் எங்கக் கிட்டே சொல்லலை?”

‘அப்பா, நான் என்ன சின்னப் பிள்ளையா ? ஃப்ரெண்ட் அடிச்சிட்டான்னு கம்ப்ளைண்ட் பண்ண? நானே பார்த்துக்கறேன். “

“சரி. அந்தக் கேஸ் என்ன ஆச்சு?”

“என்னோட வேலை அந்த லாக்கப் டெத் பற்றி விசாரிக்கிறது தான். அதை முடிச்சு கேஸ் குளோஸ் பண்ணிட்டேன். குடியா கேஸ்க்கு குற்றவாளியைப் பிடிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். கேஸ் மாதர் சங்கம், பிரஸ், லோக்கல் மக்கள் எல்லாப் பக்கமும் கார்னர் ஆகிட்டதால், இனிமேல் குற்றவாளி எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாது. ஆனால் நான் எந்த பிரஷரும் கொடுக்க முடியாது.”

“குட்” என சஞ்சய் கூறவும் சற்று நேரம் அங்கே தினசரி வாழ்க்கை முறைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டு இருந்தனர். என்னதான் போனில் பேசினாலும், நேரில் மீண்டும் கேட்டுக் கொண்டனர்.

“அபி , மாணிக்க வேல் கேஸ் பற்றி என்ன நினைக்கிற?” என்று கேட்டார் அஷோக்.

“மாமா, இந்த மீடியாக்காரன் முன்னாடி பேசனுமா?

“அவன் நம்ம பேசறது எதுவும் மீடியாலே காட்டிக்க மாட்டான். இன்ஃபாக்ட் எனக்கும் அவனுக்குமான உறவு கூட வெளியில் யாருக்கும் தெரியாது. அப்படித் தான் நானும் அவனும் மெயின்டய்ன் பண்ணிட்டு இருக்கோம். நீயும் அப்படியே இரு”

‘போதும் போதும் உங்க பிள்ளை புராணம்” என்றவள் ,

“மாமா, அந்த மாணிக்கவேல் கொலை இத்தோடு முடியும்ன்னு தோணலை. “ அபர்ணா கூறினாள்.

“மாறனும் இதான் சொல்றான். எப்படிச் சொல்றீங்க?”

அபர்ணா சட்டென்று போலீஸ் மோட்க்கு மாறியவளாக “ உனக்கு எப்படித் தெரியும் மாறா?” என்றாள் .

“பல்லுலேயே போடுவேன். என்ன மாறான்னு பேர் சொல்லிக்கிட்டு? ஒழுங்கா மாமா , வாங்க போங்கன்னு சொல்லு” என்று புவனா கூற,

“அம்மா, கொஞ்சம் சும்மா இருங்க. “ என்று அடக்கியவள்,

“நீ சொல்லு மாறா “ என மீண்டும் கூறினாள்.

“ஒரு கெஸ்ஸிங் தான் அபி. எனக்குத் தெரிஞ்சவரை அங்கே இருந்த ரெண்டு பேருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதோட மாணிக்கவேல் பற்றி இதுவரை நல்ல விதமா தான் போர்ட்ரைட் ஆகிருக்கு. ஆனால் எனக்கு அதில் அத்தனை நம்பிக்கை இல்லை. எங்க மீடியாக்காகச் சில விவரங்கள் தேடியதில் நிறைய முரண்பாடான விஷயங்கள் தெரிய வந்துது. அதைப் பேஸ் பண்ணி யோசிச்சா, இது தொடரும்ன்னு தான் தோணுது”

எல்லோரும் சற்று நேரம் ஏதோ யோசித்து இருக்க, அஷோக் மீண்டும்

“உன்னோட வியூ என்ன அபி?” என்றார்.

“ம். மாறன் சொன்ன ஆங்கிள்லே யோசிச்சாலும், என்னோட யோசனை வேறே பக்கம் போச்சு. முதலில் அந்த மாணிக்கவேலுக்கு சொந்தமா ஈசிஆர்லே பிரைவேட் பீச்சோட வில்லா இருக்கு. பொதுவா அவர் அங்கே இருக்கிறது தான் வழக்கமும் கூட. அப்படி இருக்கும் போது இங்கே பெசன்ட் நகர் பீச்சுக்கு அதுவும் அத்தனை காலையில் எதுக்கு வந்தார்? அடுத்து அவர் வாக்கிங், ஜாகிங் போற டிரெஸ்லேயும் வராமல், போர்மல் டிரஸ்லே வந்தருக்கார். அப்படின்னா யாரயோ பார்க்க வந்துருக்கணும். அதுவும் அத்தனை விடிகாலையில் ஏன் ? மாறன் சொன்ன மாதிரி அந்த இன்னொருத்தனுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்குமான்னு சந்தேகம் தான். அவனைப் பார்த்தா படகு ஓட்டறவன் மாதிரி இருக்கு. அப்படின்னா அவனோட படகு இங்கே இல்லை. அவனைப் பற்றி விசாரித்ததில், வாடகைக்குத் தான் படகு எடுக்காறான். ஆனால் எங்கே அப்படின்னு அவனைச் சேர்ந்தவங்க யாருக்கும் தெரியலை. புல்லட் மார்க் வச்சுப் பார்த்தா, ரெண்டு பேரையும் ஒரே ஆள் தான் கொன்னு இருக்கணும். ஆனால் சம்பந்தமே இல்லாத ரெண்டு பேரை ஒரே இடத்திற்கு எப்படி வரவழைச்சு இருக்க முடியும்ன்னு யோசிக்கறேன். “

அபர்ணா சொல்லி முடிக்கவும் அஷோக் “மாணிக்கவேல் பற்றி விசாரணை எந்த அளவில் இருக்கு?” என கேட்க,

“அதை இன்ஸ்பெக்டர் கிட்டே விட்டு இருக்கேன். மாணிக்கவேல் செல்வாக்கானவர். அதனால் அவங்க இன்னும் கிரீமேஷன் முடிக்கலை. இன்ஸ்பெக்டர்க்கு விஐபி பாதுகாப்பு வேலையே இதுவரை சரியா இருக்குன்னு ரிப்போர்ட் பண்ணிருக்கார். நாளைக்கு நான் தனியா விசாரிக்கறேன். “ என அபர்ணா பதில் கூறவும்,

“இவ்ளோ சிக்கலா இருக்கே கேஸ். சரி முடிஞ்சவரை சீக்கிரம் முடிக்கப் பாரு அபி” என்று அபியிடம் கூறிவிட்டு, “மாறா, உன் பத்திரிகை தர்மத்தைக் காப்பாத்த என்ன பண்ணனுமோ பண்ணு. ஆனால் கொஞ்சம் பார்த்துப் பதவிசா பண்ணு ராசா. உன் யூகத்தை எல்லாம் எழுதி எனக்கு நெருக்கடி உண்டாக்கிடாத. எங்களுக்கும் கொஞ்சம் டைம் வேணும். போலீஸ் விசாரணை போற ரூட் சரியான்னு பிடிபடவே எங்களுக்கு கொஞ்சம் நாள் ஆகும். புரியுதா?” என மாறனிடம் முடித்தார்.

“சரி பெரிப்பா. ஆனால் என்னோட இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் கூட உங்களுக்குக் க்ளூ கொடுக்கும். அதையும் யோசிங்க”

“தெரியும் டா . ஆனால் கூட எங்க வேலையின் சிரமும் மீடியா புரிஞ்சிக்கிட்டா நான் என்ன சொல்லப் போறேன்?”

“சரி பெரியப்பா” என முடித்தவன், “பெரிப்பா, இன்னொரு ஸ்கூப் நியூஸ் சொல்லவா?” என்று கேட்க

“என்னடா அடுத்த குண்டு போடறே ?” என்றார்.

“இது குண்டு எல்லாம் இல்லை. ஹாப்பி நியூஸ் தான். உங்க மாப்பிள்ளை கூடிய சீக்கிரம் அட்வகேட் ஜெனரல் ஆகப்போறார் “ எனவும்

“வாவ் . கங்க்ராட்ஸ் மாப்பிள்ளை. இருங்க ஸ்வீட் ஏதாவது செய்யச் சொல்லி சொல்றேன்” என்றார் அஷோக் .

அதற்குள் சபாபதியே வெளியில் வந்து “சர், ஏற்கனவே நம்ம அபிம்மா, மாப்பிள்ளை சர் ரெண்டு பேருக்கும் பிடிச்ச பால் பாயாசம் பண்ணிட்டேன்.” என்றார்.

அபர்ணா , இளமாறன் இருவரும் அவரை வாழ்த்த, எல்லோருக்கும் நன்றி கூறினார் சஞ்சய்.

பின் அசோக்கோடு மற்ற நால்வரும் டின்னர் முடித்துப் புறப்பட தயாராகினர்.
அப்போது அஷோக் “ மாப்பிள்ளை, இனிமேல் மாறன் என்னோட இருக்கட்டும். அங்கே அபியும் வந்தாச்சு “ என்றார்.

அப்போது குறுக்கிட்டப் புவனா , “அண்ணா, உங்க வேலைக்காகத் தானே மாறனை என்கிட்ட விட்டீங்க. அவன் எங்கக் கூடத் தான் இருப்பான்” என்றார்.

“இல்லை புவனாமா, முறைப் பசங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால் , நம்ம மாப்பிள்ளை வீட்டிலோ, இல்லை அபிக்கு வரன் பார்க்கும் போதோ பிரச்சினை வந்துடக் கூடாது இல்லையா? அதான் சொல்றேன்”

அபர்ணாவோ “அப்படி எல்லாம் யோசிக்கிறவங்க என் பக்கத்தில் கூட வர முடியாது. மாறா எங்கக் கூடத்தான் இருப்பான். வேணுமானா நீங்களும் எங்க வீட்டுக்கு வந்துருங்க” என்றாள்.

“மாப்பிள்ளை நீங்களாவது ரெண்டு பேருக்கும் சொல்லுங்க” என அஷோக் சஞ்சயிடம் முறையிட,

“மச்சான், மாறன் எங்க வீட்டில் ஒருத்தர் தான். அதை அக்சப்ட் பண்ணிக்கிறவங்க மட்டும் தான் என் வீட்டிற்கு உறவாகவே வர முடியும். அதே போல உங்க ரிடயர்மென்ட்க்குப் பிறகு நீங்களும் எங்கக் கூடத் தான் இருக்கப் போறீங்க. அஃபீஶியல் புரோடோகால் தான் உங்களைத் தனியா விட்டதுக்குக் காரணம். அதனால் எதுவும் எப்பவும் மாறப் போறது இல்லை. பசங்க வழக்கம் போல் நாளைக்கு ஈவினிங் வந்து உங்களோட இருப்பாங்க. இப்போ எல்லோரும் கிளம்பலாம்” என்று முடித்து விட்டார்.

இப்போதும் இள மாறனுக்குத் தன் மாமா மீதான பிரமிப்பு இன்னும் கூடியது.

அன்றைய நாள் இவர்களுக்கு இவ்வாறு கடந்து விட, வர்மா மற்றும் கருணாவிற்கு அன்றைய தினம் இன்னும் முடியவில்லை. ஆம், முதல் நாள் மாணிக்கவேலிடம் இருந்துக் கைப்பற்றிய பொருட்களை உரிய இடத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நேரடியாக எங்கும் செல்லவில்லை எனினும் , செல்பவர்களை இருவரும் மாறி மாறி டிராக் செய்துக் கொண்டு இருந்தனர்.

வர்மா அன்றைய இரவில் வேலைகளை முடித்து விட்டுத் திரும்ப, அவனின் இல்லம் எப்போதும் போல யாரும் இல்லாமல் இருண்டுக் கிடந்தது.

ஒரு பெருமூச்சுடன் தன் வீட்டைத் திறந்தவன், தன் வேலைகளை முடித்து விட்டு படுக்க, சற்று நேரத்தில் அவனின் உதடுகள் ஏதோ முணுமுணுக்க . உடலோ படுக்கையில் அப்படியும் இப்படியுமாகப் புரண்டது.

அவன் கனவில் சிறு வயது வர்மாவும், அவன் தாயும், தந்தையும் அவனை அணைத்து நின்று இருந்த கோலமும், வேறு சிலர் முகம் தெளிவில்லாமலும் தெரிந்தது. பின் சிறு வயது வர்மாவை முகம் தெரியாத நபர் பெல்ட்டால் அடிப்பதும், வேறு சிலர் அவனின் முகத்தில் சிகரெட் சூடு வைப்பதும் நிழலாகத் தோன்றியது. அந்த வலி அப்போது தான் ஏற்பட்டது போல தோன்ற, திடுக்கிட்டு விழித்தான் வர்மா.

திடீர் என்று ஏன் இந்த நினைவுகள் என்று மனதில் தோன்ற, அன்றைய தின வேலைகளின் பாதிப்பு என்று உணர்ந்துக் கொண்டு, சிறிது தண்ணீர் அருந்தி விட்டுப் படுத்தான் வர்மா.


- தொடரும் -
 




Attachments

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
சூப்பர் எபிசோட்🤩🤩🤩🤩

வர்மா & ஆதி ரெண்டு பேருக்கும் ஏதும் சம்மந்தம் இருக்கா, ஒரு வேளை ஆதி பையன் தான் வர்மாவோ🤔🤔🤔🤔

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Gandhimathi

நாட்டாமை
Joined
Jan 25, 2018
Messages
29
Reaction score
31
Location
Chennai
மாமா பையன் அத்தை பொண்ணு உறவு முறையை அழகா சொல்லி இருக்கிங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது கியுட்டா இருக்கு வர்மாவோட சின்ன வயதில் என்ன நடந்திருக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top