• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 4 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
ஹாய் பிரெண்ட்ஸ், அத்தியாயங்கள் மீண்டும் பதிவிட ஆரம்பித்து விட்டேன். இன்றும் நாளையும் தொடர்ந்து பதிவுகள் வரும். படித்துக் கருத்துக்கள் கூறுங்கள்

அத்தியாயம் – நான்கு
பெசன்ட் நகர் கடற்கரையில் மார்கழி மாதத்தின் அதிகாலையை அனுபவித்தப் படி ஜாக்கிங் சென்று கொண்டிருந்தாள் அபர்ணா. ஜாக்கிங் காரணம் என்றாலும், அவளின் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ச்சிச் செய்துக் கொண்டிருந்தது.

முதல் நாள் மாணிக்கவேல் மற்றும் ஒருவன் சடலங்கள் இருந்த இடத்தை நெருங்கும் போது இன்னும் கவனமாக ஆராய்ந்தாள். சடலங்கள் கிடந்த இடத்தில் நின்று கொண்டு கடற்கரை மற்றும் அங்கிருந்து சாலைக்குச் செல்லக் கூடியத் தூரம் எல்லாம் அளவிட்டுக் கொண்டு இருந்த பொது அவளின் மாமா அஷோக்வர்மா வர

“குட் மார்னிங் மாமா” என்றாள்.

“குட் மார்னிங்டா. புவனா எப்படி உன்னை அதுக்குள்ளே வெளியில் போக விட்டா?”

“அம்மாக்கு எல்லாம் ஈசியா டிமிக்கிக் கொடுத்துடலாம். ஆனா நீங்க வளர்த்து வச்சுருக்கீங்களே ஒரு பனை மரம். அத ஏமாத்திட்டு வரத் தான் முடியல”

“ஹ. மாறன் வந்துருக்கானா?”

“இல்லை. அவன கழட்டி விடத் தான் பெரும்பாடு பட வேண்டியதாகிடுச்சு. கொஞ்சம் கண்டிச்சு வைங்க”

“ஏண்டா?”

“நான் ஒரு டெபுட்டி கமிஷனர். எனக்குப் பாடிகார்ட்டா சர் வறேன்னு சொல்லிட்டு இருந்தார். சண்டை போட்டு அவனை நிப்பாட்டிட்டு வந்தேன்.”

“நம்ம வேலையால் நமக்கு ஆபத்து அதிகம். யாரையும் நம்பவும் முடியாது அதனால் தான் அவன் வேலை நேரங்களைத் தவிர மற்ற நேரம் உன்னைத் தனியா விட யோசிக்கிறான் மா . உனக்குத் தெரியாதா அவனைப் பற்றி?”

“ம். தெரியும். அதனால் தான் சண்டைப் போடறதோட நிறுத்திக்கிறேன். இல்லாட்டா என் வேலைக்கு இடைஞ்சல் செய்தான்னு நியூசென்ஸ் கேஸ்லே உள்ள தள்ளிடுவேன்”

“ஹ. நீ உள்ளே தள்ளற வரை உங்கப்பா விடுவார்ன்னு நினைக்கிறயா? ஒரு தடவை ஏதோ போராட்டம் நடந்தத கவர் பண்ண வந்தான். போலீஸ் பிரஸ் கிளம்பச் சொல்லியும் இவன் போகலைன்னு அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷன் தான் வந்தாங்க. எங்கேருந்து நியூஸ் கிடைச்சுதோ உங்கப்பா ஸ்டேஷன் வாசலில் நின்னார். அதுக்கு அப்புறம் இன்ஸ்பெக்டருக்கும் உங்கப்பாவிற்கும் பேச்சு முத்திப் போய் என்கிட்ட வந்தாங்க. நான் வார்ன் பண்ணி அனுப்பி விடச் சொன்னேன். மாறனை ஒண்ணும் பண்ண முடியாது. “

“அவர மட்டும் சொல்றீங்க. நீங்களும் தான் அவனுக்கு ஜால்ரா” என,

“சரி , சரி விடுடா. இன்னிக்குக் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா ஆபீஸ் கிளம்பி இருக்கலாம். ஏன் இவ்ளோ சீக்கிரம் இங்கே வந்த?”

“மர்டர் நடந்த இடத்தைப் பார்த்துட்டுப் போகலாம்ன்னு தான்”

“அதான் நேத்திக்கே ஸ்பாட் அனாலிசிஸ் ரிப்போர்ட் கொடுத்த தானே அபி?”

“எஸ். ஆனால் மர்டர் நடந்து கிட்டத்தட்ட நாலு மணி நேரம் கழிச்சுத் தான் ஸ்பாட் செக் பண்ண முடிஞ்சது. பப்ளிக் பிளேஸ்லே நடந்த இந்த மர்டர் எப்படி யார் கண்ணிலும் படலைன்னு யோசனையா இருக்கு. . டாக்டர்ஸ் ரிப்போர்ட் இந்த டைம் மர்டர் நடந்து இருக்கலாம்ன்னு சொல்றாங்க. அதான் ஒரு ரவுண்ட் பார்த்துட்டு அப்படியே ஜாக்கிங் முடிச்சிடலாம்ன்னு வந்தேன். “

அதற்கு மேல் நிற்காமல் இருவரும் தங்கள் ஜாக்கிங் தொடர்ந்துக் கொண்டேப் பேசினார்கள்.

“மேலே சொல்லு அபி “

“இந்த டைம் நடமாட்டமே இல்லாதது கொலையாளிக்குச் சாதகமா இருந்து இருக்கு. கொலைப் பண்ணிட்டு அவன் மெயின் ரோட் வழியாத் தப்பிச்சு இருந்தால் ஏதோ ஒரு இடத்தில் சிசிடிவி காமிரால ஸ்பாட் பண்ணலாம். ஆனால் அவன் படகு எடுத்துட்டு வந்து இருந்தால் கஷ்டம் தான்”

“எஸ். ஆனால் அவன் படகில் தப்பிச்சுப் போக வாய்ப்புக் குறைவு தான்”

“எப்படிச் சொல்றீங்க மாமா?

“படகு ஓட்டுறது கார் மாதிரி ஈசி கிடையாது. அதிலும் கடலில் ரொம்பக் கஷ்டம். அந்த அளவிற்கு அவன் ரிஸ்க் எடுத்து இருப்பான்னு தோணலை“

“ஒருவேளைப் படகு ஓட்டத் தெரிஞ்சவனைக் கூட்டிட்டு வந்து இருந்தால்?’

“அது சந்தேகம் தான் அபி. மர்டர் அந்த நிமிஷத்துக் கோபத்திலே நடந்த மாதிரி தெரியலை. பிளான்ட்டா மாணிக்கவேல வரவழைச்சுப் பண்ணிருக்காங்க. சோ படகு ஓட்டுறவனை சாட்சி வச்சுப் பண்ணிருக்க மாட்டான். அனேகமா கார்லே தான் தப்பிச்சு இருக்கணும். இந்தக் கேஸ்லே நம்ம சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட் ஹெல்ப் எடுத்துக்கோ.”

“எஸ் மாமா. நானும் அதான் நினைச்சேன். “ என்றாள் அபர்ணா. மேலும் கொஞ்ச நேரம் கேஸ் பற்றியும் , மற்ற விஷயங்களைப் பற்றியும் பேசி விட்டுக் கிளம்பினார்கள்.
அபர்ணா வீடு திரும்பும் போது மாறன் வாயிலில் காத்து இருக்க,

“மாறா, என்னை நான் பார்த்துப்பேன். நீ ஏன் டென்ஷன் ஆகற ?” என்றாள்.

“ போலீஸ்லே தான் சேருவேன்னு பிடிவாதம் பிடிச்சுச் சேர்ந்த. அப்போவே உன்னோடப் பாதுகாப்பு முக்கியம்னு நானும் அத்தையும் படிச்சு படிச்சுச் சொல்லிருக்கோம். தனியாப் போகாதேன்னு சொன்னால் கேட்காமல் , நீ அதையேத் தான் செய்யற”

"ஒரு பத்திரிகைக்காரன் மாதிரியா பேசற? “

“நம்மக் குடும்பத்தில் ஒருத்தருக்கு ஆபத்து வரும்ன்னு தெரிஞ்சா, பத்திரிகை எல்லாம் மறந்துப் போயிடும் அபி “

“சும்மாப் புலம்பாத மாறா. கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அது அர்த்தத்தோடு வாழனும்”

“உண்மைதான். ஆனால் உங்களோட அர்த்தமான வாழ்வு முடிஞ்சுடும். ஆனால் அவங்களைச் சார்ந்து இருக்கிறவங்க வாழ்க்கை அர்த்தமில்லாமல் இருக்கும்.”

“நீ பார்க்கிற வேலைலே ரிஸ்க் இல்லையா?”

“இருக்குத் தான். ஆனால் என்னோட வேலைலே நான் முகமூடி போட்டுக் கொள்ளலாம். அதைத் தாண்டி என்னைக் கண்டுபிடிச்சுக் கொல்லக் கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்குள்ளே நான் சுதாரிக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் போலீஸ் வேலைலே நேரடி அட்டாக் தான். “

“இப்படி எல்லோரும் நினைச்சா , யாரும் நிம்மதியா இருக்க முடியாது. உனக்கும் சேர்த்துத் தான் நாங்க பாதுகாப்புக் கொடுக்கிறோம்”

“ஆனால் உங்களைப் பாதுகாக்க உங்க டிபார்ட்மெண்ட்டே வராது. “

“அதுக்காக இன்வெஸ்டிகேஷன் போகும்போது பொதுக் கூட்டத்துக்குப் போகற மாதிரி கூட்டத்தைச் சேர்க்க சொல்லறியா?”

“பொதுக் கூட்டம் வேண்டாம். அட்லீஸ்ட் கூட ஒரு எஸ். ஐ மட்டுமாவதுக் கூட்டிட்டுப் போகலாம் தானே. ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருந்தாத் தேவைப் பட்டா அவுட்ஸைட் ஹெல்ப் வரவழைக்க முடியும். இப்படி எத்தனை விஷயம் இருக்கு? “

இவர்கள் வழக்காடல் நிற்காமல் தொடர்ந்து கொண்டு இருக்க, அந்த நேரம் சஞ்சய் வரவும், மாறன் தன் வாக்குவாதத்தை நிறுத்தினான்.

அபர்ணாவும் தந்தையைக் கண்டதும்,

“குட் மார்னிங் பா . இந்த மாறன் என்னை பேபி மாதிரி ட்ரீட் பண்ணறான்.” என்று கம்ப்ளைண்ட் செய்ய,

“எங்களுக்கு எல்லாம் நீ பேபி தானேடா. அத்தோடு மற்ற எல்லோரையும் விட அவனுக்குத் தான் இழப்பின் வலி தெரியும். அதனால் தான் அவன் பயப்படறான். உன்னோட செயல்கள் தான் அவனை நம்ப வைக்கணும்” என்றார்.

“இந்த நாலு வருஷத்தில் எத்தனைக் கேஸ் இன்வெஸ்டிகேட் செய்தேன். இப்படிப் பயந்துகிட்டே இருந்தால் என்ன நடக்கும்?” என பதில் கேள்வி கேட்க,

“அசட்டுத் தைரியத்தில் இருக்காதேன்னு தான் சொல்றான். இதுவரைக்கும் நீ இருந்த இடம் வேற மாதிரிமா. ஆனால் இங்கே ஆபத்துகள் அதிகம். டிபார்ட்மெண்ட்லே கருப்பு ஆடுகள் அதிகம் இருக்காங்க. ஒரு லாயரா நான் நிறையப் பார்க்கிறேன் மா. அவன் சொல்றதும் அதுதான். பிளீஸ் உன்னைக் கவனமாப் பார்த்துக்கோ. முடிஞ்சவரைத் தனியாப் போய் எங்கியும் மாட்டிக்காத. உன்னோட மூவிங் டிராக் நம்பிக்கையான யாருக்காவது சொல்லிடு. “ என்று பதில் கூறினார்.

“ம். பொண்ணுன்னு தானே ஓவராப் பயம் காட்டறீங்க?”

“இல்லைடா. உன்னை விட உன் மாமாவை நினைச்சுத் தான் இன்னும் பயமாயிருக்கு. அவர் லா & ஆர்டர்லே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கார். அதில் அரசியல்வாதிகள் வரை அநேகம் பேருக்கு அதிருப்திதான். அவங்க அவங்க சம்பாதிக்க முடியாமல் உன் மாமாவைச் சரிக் கட்ட நேரம் பார்த்துட்டு இருக்காங்க. அதுக்கு எந்த வழியும் யூஸ் பண்ணுவாங்க. அவருக்குக் குடும்பம் இல்லாதாதல் மிரட்டிப் பணிய வைக்க முடியாதுன்னு வேறே வழிப் பார்த்துட்டு இருக்காங்க. அதனால் தான் அவரையும் அப்போ அப்போ மாறன் வாட்ச் பண்ணிட்டு இருக்கான்”

“என்னமோ போங்க? நான் வெளியூரில் இருந்த வரைக் கூட இவ்ளோக் கட்டுப்பாடுகள் இல்லை. இப்போ ரொம்பப் பண்றீங்க?” என்றவள்.

“சரி மாறா. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கேன் போதுமா? அதோட ஓரளவு எங்கே போறேன்னு மாமாக்கு மெசேஜ் பண்ணிடறேன். அதை நீ கேட்கக் கூடாது. மாமா தேவைப் பட்டால் உனக்குச் சொல்வாங்க. ஓகேவா?”

“சரி அபி. “ என்றவன், “அத்தை நான் கிளம்பறேன். மாமா வரேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப,

“மாறா, அபியைச் சொல்லிட்டு நீ மட்டும் எங்கே போற, வர்றன்னு சொல்றியா? அபி சொல்றமாதிரி உன் வேலையிலும் ரிஸ்க் இருக்குன்னு நாங்கக் கவலைப்பட மாட்டோமா?” என்று அவன் மாமா சஞ்சய் வினவ,

“நான் ஃபீல்ட் ரிப்போர்ட்டுக்குத் தான் போறேன். என்னோட வொர்க் டீடெயில்ஸ் ஆபீஸ்லே மெயின்டய்ன் பண்ணுவாங்க மாமா. நீங்களோ , பெரியப்பாவோ எப்போக் கேட்டாலும் கொடுக்கச் சொல்லிருக்கேன்” என்றான் மாறன்.

“இதை நீயும் ஃபாலோ பண்ணு அபி” என்றார் சஞ்சய்.

“அதான் சொல்லிட்டேனே. இன்னும் என்ன?” என்று சிடுசிடுத்தவள், பின் மாறனிடம்

“என்ன ஃபீல்ட் ரிப்போர்ட் மாறா?” என வினவினாள்.

“மாணிக்கவேல் பிசினஸ் பற்றி ஃபீல்ட் அனாலிசிஸ் பண்ணப் போறேன் அபி”

“ஓ. குட். நானும் இன்னிக்கு அதான் பண்ணனும்ன்னு நினைச்சேன். நீ செய்து எனக்கு ஈவினிங் சொல்லு. நான் கொலைகாரனை டிரேஸ் செய்யப் பாரக்கறேன்”

“ஹலோ . போலீஸ்க்கு சொல்றது எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஆனால் நாளைக்கு என்னோட மீடியாலேயும் இதைப் பற்றி எழுதுவேன். அப்போ இதை எல்லாம் எழுதக் கூடாதுன்னு, நீயும் உன் மாமாவும் கொடி பிடிக்க மாட்டீங்கன்னா சொல்றேன். இல்லையா என்னோட வேலையப் பாரக்கறேன்”

“ரொம்பப் பண்ணாத. “ எனவும்,

“சரி, சரி ஈவினிங் பெரியப்பா வீட்டில் பார்க்கலாம். பை” என்று விட்டு மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டுப் புறப்பட்டான்.

அபர்ணா தன் தாயிடம் செல்லம் கொஞ்சியபடி காலை வேளையைக் கழித்தவள் , சரியாக ஒன்பது மணிக்கு டியூட்டிக்குக் கிளம்பினாள்.

இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு மாணிக்கவேல் வீட்டிற்கு விசாரிக்கச் சென்றாள்.
அங்கே விசாரித்ததில் மாணிக்கவேல் இறப்புப் பற்றிப் பெரிய க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இதைப் போல் அதிகாலையில் வெளியே இதற்கு முன் சென்றதுண்டா என்ற கேள்விக்கு, அடிக்கடி என்று இல்லாவிட்டாலும், சில சமயம் சென்று இருப்பதாகக் குடும்பத்தினர் கூறினார்கள்.

எப்போது எல்லாம் என்று கேட்க, நினைவில் இல்லை என்று கூறியவர்கள், ஆனால் இறப்பதற்கு ஒரு வாரம் முன் சென்று வந்தார் என்றார் அவர் மனைவி.
அவரின் ஃபோன் எடுத்துப் பார்க்கலாம் என்று இன்ஸ்பெக்டரிடம் வினவ, கொலை நடந்த அன்று அவரின் மொபைல் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அதனால் அவர் மனைவியிடம் கேட்டு இருப்பதாகவும் கூறினார்.

இவர்கள் காத்துக் கொண்டிருக்க, அவரின் மனைவியோ வீட்டில் எங்கு தேடியும் மொபைல் கிடைக்கவில்லை என்று கூறினார். இதுவரை இன்ஸ்பெக்டர் அவரிடம் மேற்கொண்டு இருக்க, இப்போது அபர்ணா நேரடியாக மாணிக்கவேல் மனைவியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

“வணக்கம்மா. நான் அபர்ணா. டெபுட்டி கமிஷனர். உங்க கணவர் கொலைப் பற்றி விசாரிச்சுக்கிட்டு இருக்கேன். மிஸ்டர் மாணிக்கவேல் மொபைல் அன்னிக்கு எடுத்துட்டுப் போகலைன்னு கன்பர்மா தெரியுமா?”

“தெரியும் மேடம். அன்னிக்கு டிவிலே நியூஸ் வரும்போது அவர் மொபைல் ரிங் ஆச்சு. அப்போ எடுத்தப்போ எங்க கம்பெனி மேனேஜர் தான் பேசினார்”
என்ன பேசினார்?

“நான் ஃபோன் எடுத்ததும், அம்மா, சர் பற்றி டிவிலே ஏதோ சொல்றாங்க. எனக்கு நம்பிக்கையில்லாமல் தான் சர் நம்பர்க்கு போட்டேன். ஆனால் நீங்க எடுக்கறீங்க? அப்படின்னு கேட்டார்.

“எனக்கும் ஒண்ணும் புரியலை. ஆனால் அவர் ஃபோன் வீட்டில் தான் இருக்குன்னு சொன்னேன். அதுக்குள்ளே போலீஸ்லர்ந்து வீட்டிற்கு அஃபீஶியலா சொல்லவும், நான் அவர் மொபைல அங்கேயே வச்சுட்டு உக்காரந்துட்டேன்.

“ஓ. ஃபோன் உங்க ரூமில் வச்சுப் பேசீனீங்களா? ?

“இல்லை. அவர் ஃபோன் எடுத்துக்கிட்டே ஹாலுக்கு வந்தேன். “

“சரி . ஃபோன் எப்போக் கடைசியாப் பார்த்தீங்கன்னு நியாபகம் இருக்கா?

“நேத்திக்கு அவர எடுத்துட்டுப் போகும் போது பார்த்தேன். ஏன்னா அப்போக் கூட அவர் போனில் யாரோ மெசேஜ் பண்ணிட்டு இருந்தாங்க, அந்த சத்தம் கேட்கவும், அவரே போயிட்டாரு. ஃபோன் இன்னும் உசுரை விடாம இருக்கேன்னு நினைச்சு அழுதேன். அதனால் நியாபகம் இருக்கு. “

“அதுக்கு அப்புறம் யாரும் வீட்டுக்கு வந்தாங்களா?”

“யாரும் இல்லை. “ என்றவர் , சற்று யோசித்து, “எங்களுக்கு ஒரு பையன் மனநிலை சரியில்லாதவன். அவன வீட்டில் வச்சுக்க மாட்டேன்னு சொல்லி ஹோம்லே சேர்த்து விட்டு இருந்தார். நேத்திக்கு விஷயம் கேள்விப்பட்டதும். அவங்க பையன அழைச்சுட்டு வந்து விட்டாங்க. நைட்லே அவனை எங்கியும் தங்க வைக்க முடியாதுன்னு திருப்பி அழைச்சுட்டுப் போக வந்தாங்க. “ எனவும்

“எந்த ஹோம்? அவங்க டீடெயில் எல்லாம் கொடுங்க” என்றாள் அபர்ணா.
அவர் சொன்ன நேரத்தில் வீட்டில் இருந்த சிசிடிவியும் செக் செய்யச் சொல்ல, ஒரு வேன் வந்து அந்தப் பையனை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மாஸ்க் அணிந்து இருந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.

ஆனால் மாணிக்கவேல் மகன் சட்டையில் சற்றுப் புடைப்பாகத் தெரியக் கூர்ந்து கவனித்ததில் , அது மொபைல் ஃபோன் என்று தெரிந்தது.

மாணிக்கவேல் மனைவியிடம் எதுவும் கூறாமல், அபர்ணா அங்கிருந்துக் கிளம்பியபோது அன்று மதியம் ஆகி இருந்தது. அடுத்து நேராக அவர் கொடுத்த ஹோம் அட்ரஸ் நோக்கிச் செல்ல , அருகில் சென்றப் பின்புதான் நன்கு கவனித்தாள். அங்கு மணி டிரஸ்ட் என்று எழுதி இருந்தது.

யார் இது மணி என்று சிந்தித்தப் படி , அந்த இல்லப் பொறுப்பாளரைச் சந்திக்கச் சென்றாள்.

போலீஸ் சீருடைப் பார்த்து வரவேற்றவர்,

“சொல்லுங்க மேடம். “ என்றார்.

“சர், நேத்திக்கு மிஸ்டர் மாணிக்கவேல் இறந்ததுப் பற்றித் தெரிஞ்சு இருக்கும்”

“ஆமாம் மேடம். அவர் பையனக் கூட இங்கேருந்து வீட்டிற்கு கூட்டிட்டுப் போயித் திரும்பக் கூட்டிட்டு வந்தோமே “

“எஸ். அந்தப் பையனப் பார்க்கணுமே “

“சாரி மேடம். இங்கே உள்ளவங்க எதுக்குப் பயப்படுவாங்க, மாட்டாங்கன்னு சொல்ல முடியாது. அதனால் தெரிஞ்சவங்களா இருந்தா மட்டும் தான் பார்க்க அனுமதிப்போம்.”

“ஓ. மிஸ்டர் மாணிக்கவேல் மொபைல் மிஸ் ஆகிடுச்சு. நாங்க விசாரிச்சதிலும், சிசிடிவி செக் பண்ணினதிலும் அந்தப் பையன் கிட்டே இருக்கிற மாதிரித் தோணுது. அந்த மொபைல் முக்கியமான விஷயம். அத நீங்க வாங்கிக் கொடுக்க முடியுமா ?

“அப்படியா? நேற்று அவங்க வரும்போதே லேட் நைட் ஆகிட்டதால், நேரா படுக்க அனுப்பிட்டேன். அந்தப் பையன பார்த்துக்கிற அம்மா கிட்டே கேக்கறேன்” என்றவர், அவரை அழைத்துவரச் சொல்லி அங்கிருந்தவரை அனுப்பினார்.

மாணிக்கவேல் மகனைப் பார்த்துக் கொள்ளும் அந்தப் பெண்ணிடத்தில் இல்லப் பொறுப்பாளர் அபர்ணாக் கூறியதைக் கூறி, ஏதும் மொபைல் இருந்துதா எனக் கேட்டார்.

அந்தப் பெண்ணும் “ஆமாங்க ஐயா. காலையில் இருந்து பையன் அத வச்சுக்கிட்டு ஏதோப் பேசிக்கிட்டு இருக்கான். மொபைல் அவன் கையில் இருந்து வாங்க முடியலை. “ என்றார்.

“அப்படியா. அவன் இப்போத் தூங்கற நேரம் தானே. மெதுவா எடுத்துட்டு வந்துக் கொடுமா”

“அதுங்க ஐயா , தூங்கி முழிச்சுக் கேட்டா என்ன சொல்றது?”

“அவனுக்குப் பிடிச்ச பிஸ்கட் கொடுத்து டைவேர்ட் பண்ணிடுங்க” என்னும் போதே,

அபர்ணா “அவனுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கும் ஐயா?” என்று வினவினாள்.

அவர் அந்தப் பெண்ணைப் பார்க்க “ஐயா, சாக்லேட் பிஸ்கட் தான் விரும்பி சாப்பிடுவான்” என்றார்.

அபர்ணா தன் ஜீப் டிரைவர்க்கு அழைத்துப் பக்கத்தில் எதும் சூப்பர் மார்க்கெட் இருந்தால் இந்தப் பிஸ்கட் வாங்கி வரக் கூறியவள், மற்றப் பிள்ளைகளுக்கும் அதே போல பிஸ்கட் வாங்கக் கூறினாள்.

மணி டிரஸ்ட்டின் பொறுப்பாளர் “ இருக்கட்டும் மேடம். நாங்க எப்பவும் கையில் வச்சுருப்போம். அடம் அதிகம் போனால், இந்த மாதிரி தான் சமாளிக்க வேண்டியிருக்கும் அதான்” என்றார்.

“பரவாயில்லை ஐயா. தனக்கு என்ன வேணும்ன்னு சரியாக் கேக்கத் தெரியாத பிள்ளைகள் இவங்க. இன்னிக்கு இங்கே வந்துருக்கேன். வாங்கிக் கொடுக்கறேன். “ என்று அபர்ணா கூறவும், அவளின் குணத்தைக் கொண்டு புன்னகைச் செய்தார்.

ஜீப் டிரைவர் சென்றதும் , “சர், இந்த மணி டிரஸ்ட் நீங்க தான் நடத்தறீங்களா?” என அபர்ணா வினவினாள்.

“இல்லை மேடம். இதோட பவுன்டர் நேற்றைக்கு இறந்துப் போன மாணிக்கவேல் சர் தான்”

“ஓ. பின்னே உங்க டிரஸ்ட் சார்பா எந்த மரியாதையும் செய்த மாதிரி தெரியலையே?”

“மணி டிரஸ்ட் எட்டு ப்ராஞ்சஸ் இருக்கு மேடம். நாங்க எல்லோரும் சேர்ந்து தான் நேத்திக்கு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினோம். ஆனால் இந்த பிராஞ்ச்லே அவர் பையன் இருக்கிறதால் அதிகமா அவர் இங்கே வரவும் மாட்டார். இந்த ப்ரான்ச் பற்றி அதிகம் வெளியே தெரியவும் விட மாட்டார். அவர் பையன் இங்கே இருக்கிறது தெரிஞ்சா, அவர் இமேஜ் போயிடும்ன்னு யோசிச்சார். “

“இந்த மாதிரி சோசியல் சர்வீஸ் , டிரஸ்ட் நடத்தறது எல்லாம் நல்ல விஷயம் தானே. அத ஏன் மறைக்கணும்?”

“மாணிக்கவேல் சர் ஆரம்பத்தில் பையன வீட்டில் வச்சுத் தான் பாரத்தாங்க. ஆனால் நாளாக ஆக அவன் முரட்டுத்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சு. அவர் மனைவிக்கும் பையனப் பற்றியக் கவலையில் உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு. அதோட அவரின் மற்ற பிள்ளைகளும் இதனால் மனதளவில் பாதிப்பு அடைவதாகவும், அவங்கப் படிப்புப் பாதிக்கப்படுவதாகவும் சொல்லித் தான் டிரஸ்ட்லே சேர்த்தார். மற்ற ப்ரான்ச் விட இங்கே எல்லா வசதிகளும் நல்லாவே செய்து இருப்பார். ஆனால் அடிக்கடி வர மாட்டார். வருஷத்தில் ஒரு தடவை மட்டும் தான் அதுவும் அவர் மனைவி மட்டும் தான் வருவாங்க “

“சொந்தப் பையனோடக் குறையை ஏத்துக்க முடியாதவர் , ஊருக்குப் பெரிய நல்லவராக நடந்து இருக்கார்? ‘ என்று வியப்பாகக் கேட்ட அபர்ணா, “சரி சர். இந்த விஷயம் பற்றி நீங்க வேறே யாருக்கும் சொல்ல வேண்டாம். எனக்கு வேறே எதுவும் சந்தேகம் இருந்தால் உங்களைக் கேட்கிறேன். “ என்றாள்.

இதனிடையே ஜீப் டிரைவர் வந்திருக்க, மாணிக்கவேல் மகனைப் பார்த்துக் கொள்ளும் பெண் வரவில்லை.

மேலும் பொறுப்பாளரிடம் விசாரணை என்று தெரியாத அளவில் மாணிக்கவேல் பற்றிக் கேட்டாள்.

“ஐயா, இந்த டிரஸ்ட்க்கு வர்ற டொனேஷன் , அது சம்பந்தபட்ட அக்கவுண்டஸ் எல்லாம் யாரு பார்க்கிறாங்க?’

“எல்லாமே மாணிக்கவேல் ஐயா தான் மேடம். அவரோட அக்கவுண்ட் பிரைமரி. அந்த அக்கவுண்டலர்ந்து டிரஸ்ட் அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிடுவார். நாங்க அதை எடுத்துச் செலவு செய்வோம். “

“நல்லது. அப்போ டொனேஷன் கொடுத்தா அவர் அக்கவுண்ட்க்குத் தான் போகும் இல்லையா?”

“ஆமாம். “ என்னும் போதே, அந்தப் பெண்மணி வந்திருக்க, அவர் கையில் மொபைல் இருந்தது.

இல்ல நிர்வாகி “என்ன ஆச்சும்மா? இவ்ளோ நேரம்?” என்று வினவினார் .

“ஐயா, அந்தப் பையன் ஃபோன் கொடுக்காமல் ஒரே அடம். அவனை நானும் இன்னொரு பொண்ணும் சேர்ந்து வேறே ஏதோ பேசி, பிஸ்கட் கொடுத்துத் தான் வாங்க முடிஞ்சது. “ என்றார்.

அபர்ணா “ ரொம்ப நன்றிமா. இந்தாங்க அந்தப் பையனுக்கும், மற்றப் பிள்ளைங்களுக்கும் இந்த பிஸ்கட் எல்லாம் கொடுத்துடுங்க. “ என்று கையில் கொடுத்தாள்.

“நீங்களே கொடுக்கலாமே மேடம்”

“பசங்களுக்கு எப்போ எதுக் கொடுக்கணும்ன்னு உங்களுக்குத் தான் தெரியும். அவங்க ஹெல்த் இன்னிக்குத் தேதிலே எப்படி இருக்குன்னு எங்களுக்குத் தெரியாது. உடம்பு சரியில்லாதவங்களுக்கு, வச்சிருந்து பிறகுக் கூடக் கொடுக்கலாம். “

இல்ல நிர்வாகி “ நல்ல புரிதல் உள்ளவங்கம்மா நீங்க. இங்கே வந்து டொனேட் செய்யறவங்க அநேகம் பேர் அவங்கக் கையாலக் கொடுக்கணும்ன்னு தான் நினைப்பாங்க. அவங்க வரையில் அது சரியா இருந்தாலும், நீங்க சொன்ன மாதிரி இங்கே உள்ளவங்க கண்டிஷனுக்கு எது ஒத்துக்கும் என்பது அவங்களால் உணர முடியாது. ஆனால் அதைச் சொல்லாமலே புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறது உங்களை மாதிரி ரொம்பச் சிலர் தான் “ என்றார்.

“இது எல்லாம் பெரிய விஷயமா பேசாதீங்க ஐயா” என்றவள், “இன்ஸ்பெக்டர், ஐயா கிட்டே மாணிக்கவேல் மொபைல் வாங்கிக்கிட்டதா எழுதி கையெழுத்து வாங்கிக்கோங்க. ஐயா, நீங்க அந்த பேப்பர் பத்திரமா வச்சுக்கோங்க. வேறே யார் வந்துக் கேட்டாலும் போலீஸ்லே கொடுத்துட்டோம்ன்னு சொல்லிடுங்க” என்றாள்.

“சரி மேடம் “ என்றார் இல்ல நிர்வாகி. இன்ஸ்பெக்டர் எழுதிக் கொடுத்தப் பின், நேராகத் தன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.

-தொடரும் -
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top