• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 5 - நாணல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
hi makkals!!
posted next ud.. Do read and share your views!!:):)

நாணல்

தங்கள் இணையைத் தேடிக் குரல் கொடுக்கும் பறவைகளின் ஓசை அதிகம் இருக்கும் இரவு நேரம் அது.. தலைவன், தலைவியின் மடியில் தலை சாய்த்திருக்கிறான். அவன் விழிகள் பூட்டியே கிடக்கிறது. எங்கே விழிகளைத்திறந்தால் அவள் மாயமாகிவிடுவாளோ என்கிற அச்சத்தில் கண்மூடியே கிடந்தான். பின்னிக்கிடந்த இருவரின் விரல்களும் மௌனமாய் காதல் பாஷை பேசிக்கொண்டன. அவள், மருதநிலமான நெடுங்களநாட்டின் அரசி, ‘மருதரசி மாயாதேவி’.. அவன், வாள்படையின் தலைவனாக இருந்து, குமரித்தீவின் படைத்தளபதியாக உயர்ந்திருக்கும் பேரரையன் கவினயன்.

அவள் சூரியன். சூரியனின் வெப்பத்தையும், ஒளியையும் அனுபவிக்க ஆசைப்படலாம். ஆனால் அந்த சூரியனைப்பிடித்து கைக்குள் அடக்க முயற்சித்தால் அவனல்லவா சாம்பலாகிவிடுவான்?

அவர்கள் காதலித்த நாட்களை எண்ணி நெஞ்சம் விம்மிக்கொண்டிருந்தது. அவள் அரசியான பிறகும், உன் மீது கொண்ட நேசத்தில் துளியும் மாற்றமில்லை. நீதான் விலகி ஓடுகிறாய்? கவினயனின் மனசாட்சி இடித்துரைத்தது.

இருவருக்கும் இடையில் இருக்கும், ஏற்றத்தாழ்வு அவனை பின்னுக்கு இழுக்கிறது. யோசனையிலேயே கள்வர்கள் ஆநிரைகளை, பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகப்படும் இடத்தை அடைந்திருந்தான் கவினயன்.. அந்த காட்டுப்பாதையில் அவனோடு இன்னொரு புரவியும் வந்து சேர்ந்துகொண்டது.. அவளை எதிர்பார்க்கவில்லை தான் அவன்.

“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றான் அதிர்ச்சியாக.

“அரண்மனையிலிருந்து நீங்கள் புறப்படும்போதே கண்டுகொண்டேன். என் தோழி மனஉளைச்சலில் இருக்கும்போது என்னால் மட்டும் அமைதியாக இருக்கமுடியுமா என்ன?” புருவங்கள் உயர்ந்து கேள்விகேட்டது.

“இல்லை தேவி!! நான் கள்வர்கள், கடத்தி சென்ற ஆநிரைகளை மீட்க போகிறேன். இங்கே மிருங்கங்கள், பாம்புகளின் தொல்லை அதிகம். தயவு செய்து நீங்கள் திரும்பிவிடுங்கள்.” என்று மன்றாடினான் கவினயன். அவள் வெடுக்கென்று திரும்பி அவன் முகம் பார்க்க, அவள் கண்களில் வெடிக்கும் எரிமலையின் சீற்றத்தை, தாங்கமுடியாது அவன் பார்வை மெல்ல நிலவை நோக்கி உயர்ந்தது.

எதற்கு இப்படி விலகி ஓடுகிறான். நெஞ்சம் நிறைய காதலுடன் ‘கண்மணி’ என்றெல்லாம் அழைத்து பேசிய காதல் மொழிகள் மறந்துவிட்டதா? அவள் உணர்வுகள் கொந்தளித்து கொண்டிருந்தது.

உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் நேரமல்ல இது.. மூச்சை அடக்கி அவனை தீர்க்கமாக நோக்கியவள், “நான்....மருதநிலத்தின் அரசி, ‘மருதரசி மாயாதேவி’ தங்களுக்கு கட்டளையிடுகிறேன்.. மறுப்பேதும் கூறாமல், என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்.” நிமிர்வாக கட்டளையிட்டாள்.. உஷ்ணம் நிறைந்த, வார்த்தைகளைக் கடித்து துப்பிவிட்டு, தன் குதிரையை காலால் உதைத்து கிளப்பி அவனுக்கு முன்னே சென்றாள்..

ஏற்றதாழ்வு நிறைந்த சமூகத்தில், பொருளாதார சமநிலையை கொண்டு வர, கள்வர்கள் உருவாவதும் சகஜம் தானே?

கன்யாதேவியும், பேரரையன் கவினயனும், இன்றைக்கு கள்வர்களை பிடிக்கத் திட்டம் போட்டிருக்கிறார்கள், என்ற செய்தியை அறிந்திருந்ததாலோ, என்னவோ கள்வர்களின் தலை எங்கேயும் தென்படவில்லை. அவர்கள் கடத்தி சென்று அடைத்து வைத்திருந்த ஆநிரைகளை மட்டும் மீட்டுக்கொண்டு வெளியேறிவிட்டார்கள் இருவரும்..

ஆய்ச்சியர்களின் சேரிக்குள் ஆநிரைகளை அனுப்பிவிட்டு, கோட்டையின் தெற்கு வாயிலை அடைந்த வேளையில் பொழுது புலரத் தொடங்கியிருந்தது.

“ஏன் என்னிடமிருந்து விலகி ஓடுகிறீர்கள்?” அத்தனை நேரத்தையும் மௌனத்தில் கழித்தவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்துவிடும் போலானது. அவன் மென்மையாக தன் புரவியின் பிடரியை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான். இவளுக்கு விறுவிறுவென ஆத்திரம் தலைக்கேறியது.

“தளபதி!! உங்களிடம் தான் கேட்கிறேன்.” இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த தவிப்பும், போராட்டமும் மனம் சோர்ந்துவிடும் போலானது அவளுக்கு.

“சூரியனை.....”

“ஸ்ஸ்ஸ்...” அவன் தொடங்கியதுமே எரிச்சலாக இடைமறித்தவள், “தயவுசெய்து அதையே திரும்பபடிக்காதீர்கள் தளபதி!! நான் அப்படியே தான் இருக்கிறேன். தங்கள் கண்களுக்கு அது புலப்படவே இல்லையா??” அவன் மீண்டும் மௌனத்தையே பரிசாக தர,

“நீங்கள் என் காதலை புரிந்துகொள்ளாமல் போனால், நான் மடலேறவும் தயங்கமாட்டேன்.” ஆவேசமாக மொழிந்தாள்.

மடலேருவதா? அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒருசேர அவனைத் தாக்க,

“கண்மணி!! என்ன பேசுகிறாய்? பெண்கள் மடலேறுவது வழக்கத்திலே இல்லை. மேலும், தாங்கள் ஒரு நாட்டின் சிற்றரசி என்பதை மறந்துவிட வேண்டாம்.” என்றான் கடுமையான தொனியில்.

அவன் பேச்சை அசட்டை செய்து விட்டு, கோட்டைவாயில் காப்போனுக்கு சமிக்ஞை கொடுக்க, அகழியைக் கடக்கும் பலகையின் கட்டை அவிழ்த்து இறக்கினான்.

நாழிகை கணக்கர், சங்கினை ஊதி பொழுதுவிடிந்ததை அறிவித்தனர். அந்தணர்கள் பாடும் வேதங்கள் சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தது.

“வேறெந்த தேசத்திலும், பெண்கள் போர்த்தொழிலில் ஈடுபடுவது உண்டா? அரசுகட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்யும் வழக்கம் தான் இருக்கிறதா? குமரித்தீவு அனைத்திலுமே தனித்துவமானது தானே!! பெண்கள் மடலேறிய பெருமையும் குமரித்தீவிற்கே கிடைக்கட்டும் தளபதி!!!!” அழுத்தி சொல்லிக்கொண்டே அவள் கடிவாளத்தை வேகமாகப் பற்றி இழுத்ததும், அதுவரை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த புரவி, கனைத்தபடி புழுதியைக்கிளப்பிக்கொண்டு பறந்தது.

அவள் உறுதியைக்கண்டு ஆடித்தான் போனான் என்றாலும், இளநகை ஒன்று அவன் இதழ்களில் குடியேறி இருந்தது.

**************************************************************************************************************

ஆதன்அறனாளனின் கைகளில் பெருக்கெடுத்த ரத்தம் அவன் கைகளுக்கு தளர்ச்சியைக்கொடுக்க, அவன் பலகீனத்தை உபயோகித்து வெடுக்கென அவனிடமிருந்து தன்னை பிரித்துக்கொண்டவள், அவன் நெஞ்சுக்கு கத்தியை உயர்த்திப்பிடித்திருந்தாள்.

அவள் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டிக்கொண்டிருந்த, அவள் நயனங்களையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் ஆதன்.. அந்த நீள்நயனங்கள் தன் முன்னே நிற்கும் உருவம், ஆணாக இருக்க வாய்ப்பில்லை என்றே அவன் உள்மனம் உரைத்துக்கொண்டிருந்தது. அவள் கிழித்ததும், பெருக்கெடுத்த குருதி, அவன் கைகளுக்கு சோர்வைக்கொடுத்திருந்தாலும், வலியை முகத்தில் காட்டாமல் அசாத்தியமான கோபத்துடனே, கத்திமுனையில் நின்றிருந்தான் ஆதன்..

அவளின் தாக்குதல் எதற்கும் அசராமல் நிற்பவனின் முகத்தை அளவெடுத்தது அவளின் நீளநயனங்கள்.. வலியின் சிறுபாதிப்பைக்கூட முகத்தில் காண முடியவில்லை.. போர்ப்பயிற்சி பெற்றவனால் மட்டுமே இப்படி இருக்க முடியும். அவன் களையான முகமும், அவன் பெருங்குடியை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே கட்டியம் கூறியது.

“ஹும்..சொல்!! யார் நீங்கள்?? உங்களைக்கண்டால் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது.. ஏன் அவனை கொலை செய்ய முயற்சித்தாய்?? பொய் கூறினால் இங்கிருந்து உயிருடன் திரும்பமுடியாது.” துகிலுக்கு பின்னிருந்து எழுந்த குரல், அவள் பெண் என்பதை ஊர்ஜிதம் செய்ய, அந்த நிலையிலும் கோபத்தையும் தாண்டி, அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரியின் முகத்தை காணும் வேட்கையும் பிறந்தது.

“ஹும்...” வாளை, அவன் நெஞ்சில் இன்னும் ஆழமாக இறக்கினாள் கன்யா.

அவள் கோபம் பெருகி, பொறுமை குறைந்துகொண்டே இருக்க, செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த சந்திரன், இடையில் விழுந்து விளக்கம் கூறினான்.

“பெண்ணே!! நாங்கள் பாண்டிய தேசத்திலிருந்து வருகிறோம். எங்கள் உடைமைகளை களவாடிக்கொண்டு செல்லப்பார்த்தான். அவன் களவாடிய, எங்களுடைய பொருட்களை திரும்ப கைபற்றும் முயற்சியில் இறங்கியபோது தான், தாங்கள் இங்கே வந்து தவறாக அர்த்தம் செய்துகொண்டீர்கள். எங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை..” அவன் இத்தனை அவசரமாக விளக்கம் கொடுத்தது, இளவரசனின் கோபத்திற்கு இலக்காகி, அந்த பெண்ணுக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற அக்கறையில்.. கீழே விழுந்து கிடந்த குண்டோதரனையும், இவர்கள் இருவரையும் மாறிமாறி அளவெடுத்தவள், மெல்ல அவன் நெஞ்சிலிருந்து கத்தியை கீழிறக்கினாள்.

“உங்கள் தேசத்தில் தண்டனை கொடுத்துவிட்டு தான், விசாரணையில் இறங்குவீர்களா??” கேலியும், ஆத்திரமுமாக வினவினான் ஆதன்.

“எங்கள் குடிகள், கள்வர்களாகவே இருந்தாலும் தண்டனை அளிக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை.” அவள் முகத்திரையை அகற்றியதும், கூர்ந்து கவனித்த, சந்திரனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

கன்யாதேவி தானே இவர்? இவரிடமே சிக்கிவிட்டோமா? தீர்ந்தது கதை!! அவனுக்குள் பயப்பந்து உருள துவங்கியது..

“என்ன காரியமாக எங்கள் தேசத்திற்குள் நுழைந்திருக்கிறீர்கள்?”

ஏற்கனவே, படபடப்பில் இருந்த சந்திரன், தயார்படுத்தி வைத்திருந்த கதையை அவளிடம் கொட்டித்தீர்த்தான்.

“வாணிபம் செய்யும் நோக்கத்தோடு, மேற்கு நோக்கி புறப்பட்டோம். கடற்கொள்ளையர்களால் தாக்கும் அபாயம் ஏற்பட்டதால், திசைமாறி குமரித்தீவிற்குள் நுழைந்துவிட்டோம். எதிர்காற்று பலமாக வீசியதாலும், மரக்கலம் பழுதாகிவிட்டதாலும் மேற்கொண்டு பயணத்தை தொடரமுடியவில்லை. நாங்கள் பாண்டிய நாட்டை சேர்ந்த வணிகர்கள் என்றும் அதற்கு அத்தாட்சியாக ஒரு பக்கம் மீனும், மறு பக்கம் சூரியனும் பொறித்திருந்த, காசுகளை எடுத்துக்காட்டினான் சந்திரன்..

‘என்ன செய்துகொண்டிருக்கிறான் இவன்?’ சந்திரனின் செயல்களால், எரிச்சலானான் ஆதன்..

சாதாரண கேள்விக்கு அவன் இத்தனை பதட்டத்துடன் ஆதியோடு அந்தமாய் ஒப்பித்து முடித்தது, கன்யாதேவியின் நெற்றியை சுருங்கவைத்தது.. ‘வெண்ணாட்டு வேந்தனுக்கு உதவியாக வந்த சோழர்களாக கூட இருக்கலாம்’ என்ற அவளின் சந்தேகம் அவன் பதட்டத்திலும், நடத்தையிலும் வலுப்பட்டது.

சதியை, சதியால் தானே முறியடிக்க முடியும். முகத்தில் எந்த குறியையுமே காட்டாது எச்சரிக்கும் பார்வை ஒன்றை ஆதன்அறனாளனுக்கு கொடுத்துவிட்டு, அந்தக் கள்வனை ஊர்காப்பாளனிடம், சேர்பித்து விட்டு தன் புரவியில் கோட்டையை நோக்கி பயணப்பட்டாள் கன்யா.

“ஏன் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறாய் சந்திரா??”

“இளவரசே!! அவர் தான் இந்த தீவின் இளவரசி, கன்யாதேவி.. இன்னும் சில தினங்களில் முடிசூட்டு விழா நிகழவிருக்கிறது..” என்றான்.. தப்பித்துவிட்டோம் என்ற நிம்மதியில், பெருமூச்சை வெளிவிட்டவாறே..

சரேலென புரவியில் செல்லும், அவளை நோக்கி ஆதனின் பார்வை திரும்பியது. அவன் நெஞ்சில் கத்தியை இறக்கிய போதே சாதுர்யமானவள் என உணர்ந்து கொண்டான். இது போல, பத்து படைத்தளபதிகள் அவன் கைவசமிருந்தால் இந்த பிரபஞ்சத்தையே ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துவிடுவான்.

அவள் ஆதனை சந்தேகிக்கிறாள்.. அவள் நயனங்கள் பிரதிபலித்த உணர்வுகளை அவனால் யூகிக்க முடிந்தது.

ஒருவேளை இவள் முடிசூட்டிக்கொண்டால், இவளிடமிருந்து தீவைக்கைப்பற்றுவது கடினமான விஷயம். வளைந்து கொடுக்கும் நாணல் இல்லை இவள். புயற்காற்றிலும் அசராது நின்று, வேரோடு சாய்ந்து போகும் மரத்திற்கு ஒப்பானவள். பால்நிலவின் ஒளியில் புரவியிலிருந்து திரும்பி, ஒற்றைப் புருவத்தை ஆதனைப்பார்த்து சவாலாக மென்னகை சிந்தினாள் கன்யா. இலக்கின்றி அவளையே வெறித்துக்கொண்டிருந்தவனின், உடல் அணுக்களில் ஒரு கணம் மின்னல் தாக்கியதோ?

“வியக்க வைக்கும் பேரழகி!!” பிரமிப்பில் அவன் உதடுகள் தானாகவே முணுமுணுத்தது.
செம..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கல்பனாஏகாம்பரம் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top