• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 6 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
அத்தியாயம் – ஆறு
இரவு பதினொரு மணி. நன்மங்கலம் காட்டின் நடுப்பகுதியில் ஒரு கேரவன் நின்று இருக்க, அதில் வர்மாவும், அவன் அருகில் கருணாவும் அமர்ந்து இருந்தனர்.
இவர்கள் எதிரில் இருந்தவனைப் பார்க்க, வர்மாவின் பார்வையிலேயே உளற ஆரம்பித்து இருந்தான்.

“சர், நானும் அந்த செல் ஃபோன் எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் முடியலை”

ஏன் என்பதுப் போல வர்மாவின் பார்வை இருக்க, கருணாவோ வர்மாவின் உத்தரவிற்காக அவன் முகத்தைப் பார்த்து இருந்தான்.

“சர், நேத்திக்கு நைட் நீங்க சொன்னதும், ஹோம்க்கு வேன்லே கூட்டிக்கிட்டு வரும்போதே செல் ஃபோன் வாங்கப் பார்த்தேன். ஆனால் பையன் முழிச்சுட்டு இருந்ததால் முடியலை. இல்லத்திற்கு கொண்டு விட்டப் போது , வாசலிலேயே அந்த நிர்வாகி என்னைத் திருப்பி அனுப்பி விட்டார். மேலும் நின்று இருந்தால் அவருக்கு எதுவும் சந்தேகம் வந்துடும்ன்னு கிளம்பிட்டேன். காலையில் பார்த்தப் போது அந்த டி,சி. பி பொம்பளை வந்து எடுத்துட்டுப் போய்ட்டா “ எனக் கூற, வர்மா ஓங்கி ஒரு அறை விட்டான்.

அடி வாங்கியவன் எதற்கு என்று முழிக்க, கருணா அவன் கைகளை முறுக்கினான். அந்த வலியில் அலறியவன்,

“சர், என்னால் முடிஞ்ச வரை ட்ரை பண்ணினேன். நான் வேறே என்ன செய்ய?” என்றான்.

“இந்த அடி நீ வேலையை முடிக்காதத்துக்கு இல்லை. அந்த போலீஸ் மேடமை மரியாதை இல்லாமல் பேசினேயே அதுக்குத் தான் “ என்று கருணா கூறவும், எதிரில் இருந்தவன் என்னடா இது என்பதுப் போல பார்த்தான்.

மேலும் ஏதோக் கேட்க வந்தவன், அப்படியே வார்த்தைகளை முழுங்க, அதைக் கவனித்த கருணா

“என்னவோ சொல்ல வந்தியே? என்ன ?” என்று வினவினான்.

ஒன்றுமில்லை என்பதுப் போல தலையசைக்க, “சும்மாச் சொல்லு” என்று அழுத்தமாகக் கூறவும், சொல்லவில்லை என்றால் அதற்கும் அடி விழுமோ என்று அஞ்சினான்,

“இல்லை, அவங்கக் கையில் கிடைக்கக் கூடாதுன்னு தானே என்னை அனுப்பினீங்க. அப்போ அவங்க உங்களுக்கு எதிரி தானே. ஆனால் அவங்களைச் சொன்னதுக்கு அடிக்கறீங்களே. என்ன மாதிரி ஆட்கள் நீங்கன்னு கேட்க வந்தேன்” என்றான்.

அதற்கு பதிலாக “ஒழுங்காப் படிச்சு பாஸ் பண்ணினதும் இல்லாம, சின்ன வயசில் நேர்மையாவும், தைரியமாவும் இருக்கிறதால் தப்பு செய்யறவங்களைத் தண்டிக்கிற அதிகாரம் கிடைச்சு இருக்கு அவங்களுக்கு. அவங்களைப் போய் மரியாதை இல்லாமல் பேசற. எங்கக் கிட்டேன்னு இல்லை யார் கிட்டே வேலை செஞ்சாலும் உண்மையா, நேர்மையா நடந்துக்கிறவங்களை சின்னவங்களோ, பெரியவங்களோ அவங்கள மரியாதையாக் கூப்பிடனும் தெரியுதா?” என்றான் வர்மா.

யாருடா இவங்க என்று மனதிற்குள் நினைத்தாலும் வெளியில் வேகமாகத் தலையாட்டினான் அடி வாங்கியவன். அவனைத் தலையசைத்துப் போகச் சொன்னவன்,

அவன் அந்த இடத்தை விட்டுச் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை.
பின் கருணா வர்மாவிடம் .

“சர், இப்போ என்ன செய்யலாம் ? “என்று வினவினான்.

“அட் எனி காஸ்ட் அந்த மொபைல் அவங்கக் கையில் கிடைக்கக் கூடாது. அப்படியே கிடைச்சாலும் அதனால் எந்த யூஸ்சும் இருக்கக் கூடாது” என வர்மா, புரிந்ததாக தலையசைத்தான் கருணா.

பின் “மாணிக்கவேலைத் தூண்டி நம் வேலைக்கு இடைஞ்சல் செய்த மற்றவர்களின் கண்டெய்னர் விவரம் எல்லாம் எடுத்தாச்சா ? “ எனக் கேட்டான் வர்மா.

“அந்த இருபது பேருக்கும் இன்னும் பத்து நாளில் ஷிப்மெண்ட் வருது. அவங்க யார் யார் கிட்டே சேர்க்கணும்ன்னு பேசின டீடெயில் எல்லாம் இதில் இருக்கு. நமக்கேத் தெரியாமல் வேறே ஏதோ சிக்கல் இருக்கலாம்ன்னு எனக்குத் தோணுது” என்றான் கருணா.

“எஸ். எனக்கும் அந்த டவுட் கொஞ்ச நாளா இருக்கு. இதுவரை கண்டெய்னர் பில் எல்லாம் நம்மக் கைக்கு வராது. அதனால் உள்ளே உள்ள பொருளின் மதிப்பு மட்டும் நம்மக் கிட்டேச் சொல்லிட்டு, அந்த அமெளண்ட்க்கு கமிஷன் வாங்கினோம். ஆனால் இப்போ டி.சி.பி ய நேரடி விசாரணைக்கு டிபார்ட்மெண்ட் அப்பாய்ன்ட் பண்ணிருக்காங்க என்றால் வேறே ஏதோ விஷயம் இருக்கு. அதில் நாம மாட்டிக்கிட்டாக் கஷ்டம். இனிமேல் இன்னும் அலார்ட்டா இருக்கணும் “ என்று வர்மாவும் கூறினான்.

மேலும் அங்கிருந்தப் படியே இணையத்தின் மூலம் மாணிக்கவேல் மொபைல் டவர் எங்கே என்று செக் செய்தார்கள். அது சைபர் டிபார்ட்மெண்ட் அலுவலகம் இருக்கும் பகுதியைக் காண்பிக்க,

கருணா “இப்போ நாம ஹேக் செய்தால், சைபர் க்ரைம் நம்மளக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு சர் ” என்றான்.

“ஆமாம். ஆனால் நாமதான்னு எப்படித் தெரியும்?”

“லொகேஷன் தான் கண்டுபிடிக்க முடியும்”

“அவங்கத் தேடி வரும் வரைக்கும் நாம இங்கே இருக்கப் போறது இல்லை. தென்? “

“இருந்தாலும் , இப்போ இந்த வேலைச் செய்ய வேண்டாம்ன்னு தோணுது”

“இல்லை கருணா. மாணிக்கவேல் ஃபோன் அவன் வீட்டில் நாம நேத்திக்குக் கடைசியா ஹேக் செய்தப்போ , அவனோட சைலன்ட் குரூப்லே மெசேஜ் போட்டுருக்காங்க. நம்ம பேர் சொல்லி மேட்டர் என்ன ஆச்சுன்னு ? போலீஸ் கையில் இந்த மெசேஜ் கிடைச்சா , அவங்க தான் மாட்டுவாங்க . ஆனால் அவங்க நம்மளக் காட்டிக் கொடுக்கத் தயங்க மாட்டாங்க. நமக்கு இன்னும் கொஞ்ச நாள் வேலை இருக்கு. அதுவரை போலீஸ்லே மாட்டிக்கக் கூடாது. இப்போ நீ ஹேக் செய்தது தெரிந்தாலும், அந்த மெசேஜ் என்னன்னு போலீஸ்க்குக் கண்டுபிடிக்க முடியாது. சப்போஸ் கண்டு பிடிச்சாலும் டைம் ஆகும். அதற்குள் நம்ம வேலையை முடிச்சிடலாம். “

“சரி. நான் பாரக்கறேன் சர் ” என்றபடி கருணா , மாணிக்கவேல் மொபைல் அக்செஸ் செய்ய முயற்சித்தான். சற்று சவாலான வேலை தான். ஆனால் அரை மணி நேரம் சென்ற பிறகு , வர்மாவை அழைத்தான் கருணா.

“சர் ,” என ,

“சொல்லு கருணா”

“மொபைல் அக்செஸ் ஆகிடுச்சு. இப்போ என்ன பண்ணனும்?”

“குட். இப்போ ஃபோன்ஐ கரப்ட் பண்ணிடு”

“சர், அது ரிஸ்க். எல்லா டேட்டாவும் டெலீட் பண்ணிட்டா, யாரோ வேணும்ன்னு பணனிந்தகா சந்தேகம் வந்துடும்”

“வராது. அதுக்கும் நான் ஒரு ஐடியா வச்சு இருக்கேன். அந்த சின்னப் பையனப் பார்த்துக்கிற அம்மா கிட்டே அந்தப் ஃபோனைப் பற்றி விசாரிக்க வரும்போது குளிச்சு விடும்போதும் அவன் கையில் வச்சுருந்தான்னு சொல்லச் சொல்லுவோம்.”
“பட் டி. சி.பி மேடம் அது தண்ணி பட்டா டெலீட் ஆயிடும்ன்னு உங்களுக்குத் தெரியாதான்னு அவங்களை க்ராஸ் கொஸ்டீன் பண்ணினால் அவங்க உளறிட வாய்ப்பு இருக்கு “

“உளறாம இருக்கவும் சேர்த்துக் கவனிச்சிடு” எனவும், கருணா ஒரு பெருமூச்சுடன் தலையசைத்தான். அதைக் கவனித்த வர்மா,

“இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். முக்கியமான சில விஷயங்கள் இனிமேல் தான் வெளில வரும். அது வந்துட்டால் நாம ஃப்ரீ ஆகிடலாம் “ என்றான்
“புரியுது சர்” என்ற கருணா, மாணிக்கவேலின் மொபைலை கரப்ட் செய்து விட்டான்.
வர்மா “அவனுடைய கிளவுட் டேட்டாவும் டெலீட் செய்துடு” என அதையும் செய்து முடித்து விட்டு இருவரும் சிரித்தனர்.

நடு இரவில் உறங்கிக் கொண்டிருந்த அபர்ணா திடுக்கிட்டு விழித்தாள்.
அவளின் உள்ளுணர்வு ஏதோ கூற, என்னவென்று தெரியாமல் சிந்தித்தவள், அன்றைய நடப்புகளை எண்ணிப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது. மேலும் ஆழ்ந்து சிந்தித்தவளுக்குச் சட்டென்று மாணிக்கவேலின் மொபைல் நினைவில் வரத் தன் தலையில் அடித்துக் கொண்டவளாக மட மடவென்று யூநிஃபார்ம் மாட்டிக் கிளம்பினாள்.
அவள் கிளம்பும்போது மாறனும் அவன் அறையில் இருந்து வெளியில் வந்தான். அவளைப் பார்த்துத் திகைத்தவன்

“இப்போ எங்கேக் கிளம்பற அபி ?” என்றான்.

“போகும்போதே எங்கேன்னு கேக்கறானே இவனை “ என்று எண்ணியவள் ,
“ சைபர் க்ரைம் ஆபீஸ் போறேன் “ என்றாள்.

“இப்போ மணி என்ன? அங்கே யாரு இருப்பா ? “

“முக்கியமான ஒரு விஷயம் மறந்துட்டேன். அதைச் செக் செய்யணும் “

“எதுவும் கேஸ்னா கூடப் பரவால்ல. சைபர் க்ரைம் ஆபீஸ் வேலை காலையில் பார்க்கக்
கூடாதா?”

“என்னவோ எனக்கு இப்போப் போகணும்னு தோணுது. விடேன்” என்றாள்.

“சரி. சரி டென்ஷன் ஆகாத. நானும் வேணும்னா வரவா ? “

“இல்லை வேண்டாம். இது அஃபீஶியல் & சீக்ரட்”

“போயிட்டு வா. ஆனால் நீ வரும் வரை நான் வெயிட் பண்ணுவேன்” எனவும், அவனை முறைத்தவள் இப்போ இவனோட மல்லுக்கட்ட நேரமில்லை என்று புறப்பட்டாள்.
கிட்டதட்ட இரண்டு மணி நேரம் கழித்து அபர்ணா வர , அவளின் முகம் பார்த்து எதுவும் கேட்காமல் டீ போட்டுக் கொண்டு வைத்தான் மாறன்.

அதை எடுத்துப் பருகியவள் , ஒரு பெருமூச்சுடன் கப்பை வைக்கும் போது தான்

“நீ டீ எடுத்துக்கலையா மாறா?” என்றாள்.

“எனக்கு வேண்டாம். உன்னைப் பார்த்தால் ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது. அதான் போட்டுக் கொண்டு வந்தேன்” என்றான்.

“தாங்க்ஸ் மாறா “ என,

“என்ன ஆச்சு? இவ்ளோ பீல்லா இருக்க?” என்றான்.

“அந்த மாணிக்கவேல் மொபைல் கொண்டு வந்து சைபர் க்ரைம்லே கொடுத்துட்டுப் போனேன். இப்போ மொபைல் கரப்ட் ஆகிருக்கு”

“ஓ. எப்படி? எதுவும் ராங் பாஸ்வேர்ட் ட்ரை பண்ணாங்களா ? “

“இல்லை. மதியம் நான் கொடுத்ததை அப்படியே சேஃப்லே வச்சுட்டு, மற்ற வேலைகள் பார்த்து இருக்காங்க. இப்போப் போய்க் கேட்டதும் தான் எடுத்தே ஆன் பண்ணியிருக்காங்க. ஆனால் எடுத்தவுடனே ஃபேக்டரி ரீசெட் போயிருக்கு. இதை அவங்க அனலைஸ் பண்ணினதில் கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஹேக் பண்ணி கரப்ட் பண்ணிருக்காங்கன்னு சொல்றாங்க”

“எப்படி? ஃபோன் இவங்கக் கிட்டே இருக்கும்போது வெளியில் இருந்து எப்படி ஹேக் பண்ண முடியுமாம்?’

“மாணிக்கவேல் காமிரா , அவனோட கிளவுட் நேம் அக்செஸ் பண்ணி ஹேக் பண்ணிருக்காங்க “

“அவங்க சொல்றது நம்பற மாதிரி இல்லையே?”

“நானும் அதைத் தான் கேட்டேன். அவங்க கடந்த ரெண்டு மணி நேர சிசிடிவி ஃபுடேஜ் போட்டுக் காமித்தத்தில், ஒருத்தர் கூட அந்த ரேக் பக்கமே போகலை. ஈவென் வெளி ஆள்ன்னு ஒருத்தர் கூட இன்னிக்குக் காலையில் இருந்து வரலை”

“அவங்களுக்கு உள்ளேயே யாராவது இருந்து இருக்கலாமேன்னு யோசிச்சியா?”
“வாய்ப்பே இல்லை. அங்கே உள்ளவங்க யாருக்கும் மாணிக்கவேல் என்பவருக்கும் முகம் பார்த்ததுக் கூடக் கிடையாது. “

“அவரோட எதிரியைத் தெரிஞ்சு இருக்கலாமே?”
“எதிரி யார்ன்னுத் தெரியாமல் அவன் சம்பந்தப்பட்ட ஆள் இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கிறது? “

அவள் சொல்லுவதை யோசித்த மாறனும் எதுவும் புரியாமல் நின்றான். பின் சற்று நேரம் கழித்து ,

“சரி, இதையே யோசிச்சுட்டு இருக்காத. அடுத்த வழி என்னன்னுப் பார்க்கலாம். அதுக்கு முதலில் போய்க் கொஞ்சம் தூங்கி ஃபிரெஷ் ஆகு. அப்புறம் யோசிச்சா, ஏதாவது வழிக் கிடைக்கும் “

“ஆமாம். காலையில் அந்தப் போலீஸ்காரர் வேறே லெஃப்ட் ரைட் வாங்குவார். அதை வேறே வாங்கிக்கணும். “ என்றபடித் தன் அறைக்குச் சென்றாள் அபர்ணா.
அவளின் பேச்சில் சிரித்தபடி தானும் உறங்கச் சென்றான் மாறன்.

அபர்ணா எண்ணியது போல் காலையில் டியூட்டிக்குச் செல்லும் போதே டி.ஜி.பி வந்துப் பார்க்குமாறு மெசேஜ் வர, தன்னை நொந்தபடி நேராக அவரின் அலுவலகம் சென்றாள்.
அபர்ணா அனுமதிக் கேட்டு உள்ளேச் சென்று சல்யூட் வைத்ததும்

“என்ன வேலை செஞ்சுருக்கீங்க மிஸ் அபர்ணா? இப்படியா கேர்லெஸ்சா இருப்பீங்க? இந்தக் கொலைக் கேஸ்க்கான முக்கியமான எவிடெண்ஸ். அதைப் போய் வீணாக்கி இருக்கீங்க? ஆன்சர் மீ ” என்று கத்த ஆரம்பித்தார் டி. ஜி. பி .

“சர் , நான் எவிடென்ஸ் கிடைச்சதும், அதில் உள்ள விவரங்கள் அறியத்தான் சைபர் க்ரைம் ப்ரான்ச்லே கொடுத்தேன். அவங்களுக்கு வேறே சில பிரையாரிட்டிஸ் இருந்ததால் இன்னிக்கு டீடெயில்ஸ் எடுத்துக் கொடுக்கிறதா சொன்னாங்க. நானும் சரின்னு சொன்னேன். மொபைல் எங்கியும் வெளியில் போகலை. இன்னும் சொன்னால் சேஃப் விட்டுக் கூட வெளியில் எடுக்கலை. ஆனால் ஹேக் ஆகிருக்கு. அப்படின்னா கொலைகாரன் பயங்கர ஸ்மார்ட்ன்னு தோணுது” என்றாள்.

“லுக் மிஸ் அபர்ணா. கொலைகாரனுக்கு இங்கே யாரும் சர்டிபிகேட் கேக்கலை ? வாட் இஸ் யுவர் நெக்ஸ்ட் மூவ் ? “என்று டி. ஜி. பி வினவ,

விறைப்பாக நின்றவள் “வேறு வழியில் முயற்சி செய்கிறேன். இன்னும் இரண்டு நாளில் நிச்சயம் ஏதோ ஒரு தகவலோடு உங்களைச் சந்திக்கிறேன்” எனக் கூறினாள் அபர்ணா .

“டூ யுவர் வொர்க் & பி கேர்ஃபுல் வித் யுவர் எனிமீஸ் “ எனவும்,

“எஸ் சர்” என்று சல்யூட் வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

வெளியே இன்ஸ்பெக்டர் நிற்க , அவரிடம் வேகமாகக் கட்டளையிட்டுக் கொண்டேத் தன் அறைக்குச் சென்றாள்.

அபர்ணாவின் கட்டளையின் படி , மாணிக்கவேல் நடத்தும் டிரஸ்ட்டின் எட்டுக் கிளைகளுக்கும் போலீஸ் அனுப்பி விசாரிக்கச் செய்தாள். அதே சமயம் மப்டியிலும் அந்த டிரஸ்ட்டை கண்காணிக்க கூறினாள்.

மாணிக்கவேல் மனைவியிடம் சென்று மீண்டும் விசாரணை நடத்தினாள். அவருக்கும் டிரஸ்ட் தவிர வேறு விஷயங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த ஏற்றுமதி கம்பெனி கூட அவரின் நண்பர்களுடையது என்றும், அவ்வப்போது சென்றுப் பார்த்து வருவது மட்டுமே தன் வேலை என்றும் கூறியிருந்தார். அவரின் பூர்வீக சொத்தைப் பற்றிய விவரங்கள் எல்லாமே மிகவும் சரியாகவே இருந்தது.

அவர் நடத்தும் டிரஸ்ட் இல்லங்களின் ஆடிட்டர், லீகல் அட்வைசர் இருவரையும் விசாரித்ததில் டிரஸ்ட் சம்பந்தபட்ட டாகுமெண்ட்ஸ் அனைத்தும் சரியாகவே இருந்தது. அதன் கணக்குகளும் முறையாகவேப் பராமரிக்கப்பட்டு இருந்தது.
எப்படி என விசாரித்ததில் , டிரஸ்ட் ஏற்கனவே அவரின் வீட்டுப் பெரியவர்கள் நடத்திக் கொண்டு இருந்ததாகவும், அதன் கிளைகள் வளர்த்தது மட்டுமே மாணிக்கக்வேல் என்றும் கூறினார். அதனால் டிரஸ்ட் கணக்குகள் அந்தக் காலத்தில் இருந்தே முறைபடுத்தப்பட்டு இருந்ததாகவும் கூறினார்.

இத்தனை தூரம் சரியாக இருந்து இருக்கும் நபருக்கு எப்படி எதிரி என்று அபர்ணா ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். டிரஸ்ட்டில் மப்டியில் பணிபுரிபவர்களைத் திரும்ப வரச் சொல்லலாமா என்று எண்ணியவளுக்கு ஏதோத் தோன்ற , இரு நாட்கள் அங்கே ஆராயச் சொன்னாள்.

மாணிக்கவேல் எக்ஸ்போர்ட் அலுவலகத்திலும் எதுவும் தகவல் கிடைக்கவில்லை.

அபர்ணா சம்பவம் நடந்த அன்று டிராபிக் சிக்னல் காமிராவில் இருந்து எடுத்த டீடெயிலோடு , ஃபுடேஜ்ஜும பார்த்தாள் . முதலில் இரண்டு சிக்னல்களை ஆர்வத்துடனேக் கவனித்தவளுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. இதில் ஒன்றும் தேறாது என்று எண்ணி எழுந்துக் கொள்ளப் போனவள் அப்போது ஒரு கார் க்ராஸ் ஆகவும் சட்டென்று அதைப் ஃப்ரீஸ் செய்தாள்.

அந்தக் காரில் இருந்தவர்களின் முகம் தெரியாவிட்டாலும், அந்தக் காரை நன்றாக அடையாளம் தெரிந்தது அவளுக்கு மிகவும் பிடித்த பிளாக் கலர் வோல்வோ கார் அந்த சிக்னலைக் கடந்து இருந்தது. அதன் நம்பர் பிளேட் தெளிவாகத் தெரியாவிட்டாலும் கலரை வைத்து அது ரிஷி காராக இருக்குமோ என்று எண்ணினாள்.

ரிஷியின் கார்ட எடுத்து அவனின் பெர்சனல் மொபைல் நம்பரில் கால் செய்தாள்.
ஏதோ அன்நோன் நம்பரில் இருந்து கால் வரவும்

“ஹலோ ரிஷி ஹியர்” என்றான்.

“ஹலோ. திஸ் இஸ் அபர்ணா. டி. சி. பி “ எனக் கூறவும்

“ஓ. குட் மார்னிங் மேடம். நீங்கக் கால் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலை. என்ன விஷயம் சொல்லுங்க மேடம் ? என்றான்.

“அன்னிக்கு அந்த மனநலம் பாதிக்கப்பட்டவனை விசாரிக்கச் சொல்லியிருந்தேனே எதுவும் தகவல் கிடைத்ததா?”

“ஓ. சாரி மேடம். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. சும்மா அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான் போல். அவன் கேள்வி கேட்டால் பதில் கூடச் சொல்லுவாதில்லை. ‘

“ஓகே. அவன் மூலம் எதுவும் க்ளூ கிடைக்குமோன்னுப் பார்த்தேன்” என்றவள்,

“இரண்டு நாள் முன் , நீங்களும் உங்க ஃப்ரெண்ட்டும் பெசன்ட் நகர் பக்கம் வந்து இருந்தீங்களா?” என்று வினவினாள்.

“இல்லையே மேடம் ஏன் கேக்கறீங்க ?”

“உங்களின் பிளாக் வோல்வோ கார் காலையில் ஒரு ஐந்தரை மணிக்கு ஓஎம்ஆர் ரோட் சிக்னலில் பாஸ் ஆகிருக்கு. ஒருவேளை நீங்க இந்தப் பக்கம் வந்துருப்பீங்களோன்னு ஒரு டவுட். “

“இல்லை மேடம். என் பிளாக் வோல்வோ அன்னிக்கு சர்வீஸ் போயிருந்துது. அன்னிக்கு ஈவினிங் ஆறு மணிக்குத் தான் திரும்ப வந்தது.

“ஓ சாரி. ஒருவேளை அது நீங்களா இருந்தால் உங்களுக்கு எதுவும் வித்தியாசமா கார் அல்லது பைக் போயிருந்து நோட் பண்ணிருப்பீங்களோன்னு தான் கேட்டேன்.
“இட்ஸ் ஓகே மேடம். வேறு எதுவும் தகவல் வேணுமா? என்று ரிஷி வினவ, இல்லை என்று மறுத்துவிட்டுத் தேவைப்பட்டால் கேட்கிறேன் என்று கூறி முடித்தாள்.

வேறு எதுவும் இம்ப்ரூவ்மெண்ட் இல்லாமல் இரு நாட்கள் கழிய, மூன்றாம் நாள் மதியம் ஒரு மணி போல மணி டிரஸ்ட் கண்காணிக்கச் என்ற ஒரு நபரிடம் இருந்து ஃபோன் வந்தது. அவரின் சொற்களைக் கேட்டவளுக்குத் தலைச் சுற்ற ஆரம்பித்து விட்டது.

சற்று நேரத்தில் அவள் தன் ஜீப் சகிதம் உள்ளே சென்று நிர்வாகியைப் பார்க்க விரும்ப,, அவரோ அவளை அத்தனை எளிதில் உள்ளேச் செல்ல சம்மதிக்கவில்லை. கிட்டதட்ட மிரட்டி அவரை அமைதியாக இருக்கச் செய்து விட்டுத் தோட்டத்தின் பக்கம் சென்றவளுக்கு, அங்கே ஒரு சிறுமி இறந்துக் கிடந்தாள்.

-தொடரும் -
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top