• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அத்தியாயம் 7 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Nice da
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
கார்த்திக் அப்போது தான் கல்லூரி
முடித்து அப்பாவுடன் அலுவலகம்
செல்ல ஆரம்பித்த நேரம். கல்லூரியில் கார்த்திக்கும் கூடப் படித்த சுஜி என்ற
பெண்ணும் காதலித்தனர். அந்தப்
பெண்ணின் அப்பா இவர்களின்
காதலைப் பற்றி அறிந்து கொண்டு
அவரின் உறவில் ஒரு
மாப்பிள்ளையைப் பார்த்து திடீரென
திருமண ஏற்பாடு செய்து விட்டார்.
திருமணத்தின் முதல் நாள் தான்
இந்தச் செய்தியை அறிந்தான்
கார்த்திக். அன்று கார்த்திக் சென்று
அழைத்த போது "வேண்டாம் கார்த்திக். என் அப்பா மானமே போய்விடும்.
எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகி
விடும். நீங்களும் உங்கள்
வாழ்க்கையைப் பாருங்கள்" என்று
அவன் பதிலைக் கூட
எதிர்ப்பார்க்காமல் அவள் சென்று
விட்டாள்.

கார்த்திக் தான் உடைந்து விட்டான்.
ஆனால் யாரிடமும் புலம்பவில்லை.
ஒரு சொட்டு கண்ணீர் கூட கண்ணில்
வரவில்லை. மாறாக இறுகினான்.
கோபம் வேறு முன்பை விட
அதிகமாகத் தென்பட்டது. அப்பாவுடன்
அலுவலகம் சென்று வந்தான்.
அப்பப்போ மிதுனாவின் அண்ணன்
ஆன சிவாவை அடிக்கடி சந்தித்துப்
பேசினான். சிவாவிற்கும் அனைத்தும்
தெரியும். கார்த்திக்கின் மாற்றத்தைக்
கண்டவன் நண்பனை மாற்ற எண்ணி
ஊரில் திருவிழா முடிந்தவுடன்
இன்னும் சில நண்பர்களைக் கூட்டிக்
கொண்டு ஊட்டி சென்றான். அப்போது தான் கார்த்திக்கிற்கு அந்த போன்
வந்தது.

திருவிழாவில் தோழிகளைப்
பார்த்துவிட்டு அவர்களுடன் அரட்டை
அடித்தபடி நின்றிருந்தாள் மது.
அவர்கள் பக்கத்தில் இருந்த குழந்தை
ஒன்று கையில் ராயல் ப்ளூ கலர்
பலூன் ஒன்றை வைத்து விளையாடிக்
கொண்டிருந்தது. அந்த கலர் சர்ட்
ஒன்றில் கார்த்திக் ஒரு புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதை
நினைத்து புன்னகை செய்தவள், அந்த பலூன் பறந்து செல்ல அது செல்லும்
திசையையே பார்த்தபடி
நின்றிருந்தாள்.

நேரே பறந்து சென்ற அந்த பலூன்
நகர ஒரு நிமிடம் உறைந்து விட்டாள்.
கார்த்திக் தான்.. மிதுனா அண்ணா
சிவாவோடு கோவிலை நோக்கி
வருவதைப் பார்த்தவளுக்கு ஏனோ அடிவயிற்றில் இருந்து பந்து உருண்டு
தொண்டையில் வந்து நின்றது.

மூன்றே நொடிதான் கார்த்திக்கைப்
பார்த்திருப்பாள். அவனை அந்த
மூன்று நொடியில் அவனைத் தன்
கண்களால் சிறை பிடித்தவள் அந்த
இடத்தில் இருந்து ஓடி ஒரு கடையின்
பின்னால் நின்று கொண்டாள்.

சட்டென மது ஓடுவதைப் பார்த்த
ஸ்வேதாவிற்கும் மிதுனாவிற்கும்
ஒன்றும் புரியவில்லை. ஆனால்
மிதுனா என்று அழைத்தபடி சிவாவும்
கூடவே கார்த்திக்கும் வருவதைக்
கண்டு இருவருக்கும் புரிந்துவிட்டது.
மிதுனாவிடம் வந்து ஏதோ பேசிய
சிவா, பின் கார்த்திக்குடன் சென்றான்.
அவர்கள் சென்ற உடன் வெளிப்பட்ட
மது வீட்டிற்கு கிளம்புகிறேன்
என்றுவிட்டு, உமாவிற்கு போன்
செய்து அவர்கள் எங்கே
இருக்கிறார்கள் என்று
கேட்டுக்கொண்டு அங்கே சென்றாள்.

அடுத்த நாள் "நான் இரண்டு நாளில்
கிளம்பறேன். இன்னிக்கு நைட்
ஸ்டேக்கு இங்க வாங்க" என்று
தோழிகளை அழைத்திருந்தாள் மது.
இருவரும் அடுத்த இரண்டு மணி
நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்து
அரட்டை அடித்துக் கொண்டு
இருந்தனர். அப்போது தான் கார்த்திக்
இன் காதல் தோல்வி பற்றி மிதுனா
தெரிவித்தாள். யாரும் இல்லை என்று
சிவாவுடன் கார்த்திக் பேசிக்
கொண்டிருந்தது மிதுனா காதுகளில்
விழுந்திருந்தது. அனைத்தையும்
மிதுனா சொல்ல மது அமைதியாகவே
அமர்ந்திருந்தாள்.

"ஏன் மது நேத்து அப்படி ஓடி ஒழிஞ்ச?"
என்று மிதுனா கேட்டாள்.

"தெரியலை.... " என்றாள் மது
ஒற்றை வார்த்தையாக.

"இன்னும் கார்த்திக் அண்ணாவை
நினைத்துக் கொண்டு இருக்கியா?"
என ஸ்வேதா கேட்க அவளைப் பார்த்து ஒரு வெற்றுப் புன்னகையை
உதிர்த்தாள் மது.

"நான் எப்போ கார்த்திக்கை மறப்பதா
சொன்னேன்" என்று புருவத்தை
உயர்த்திக் கேட்ட மதுமிதாவை இரு
தோழிகளும் செய்வதறியாது
பார்த்தனர்.

"மது ஏண்டி இப்படி இருக்க? ஒன்னு
அண்ணா கிட்ட சொல்லு இல்ல
மறந்துவிடு" என்றாள் மிதுனா.

"ஆமாம் மது. இப்படி இருந்து உனக்கு
கிடைக்கலனா ரொம்ப வருத்தப்படுவ
நீ. பேசாம சொல்லிரு" என்றாள்
ஸ்வேதா.

"இங்க பாருங்க. நான் அவன
நினைச்சுகிட்டு தான் இருக்க..
இல்லைனு சொல்லல. ஆனா எனக்கு
அந்த ஹராஸ்மென்ட் அப்றோ
கல்யாணம் மேல பயமா ஒரு
வெறுப்பாக இருக்கு. அத உங்க
யாராலையும் புரிஞ்சிக்க முடியாது..
அனுப்பவிச்ச எனக்கு மட்டும் தான்
தெரியும்" என்றாள் மது எங்கோ
பார்த்தபடி. சிறிய வயதில் இருந்து
வீட்டினரின் அரவணைப்பில்
வளர்ந்தவளுக்கு இந்த மாதிரி
விஷயத்தை எல்லா பெண்களும்
வாழ்வில் சந்திக்க நேரிடும் என்பதை
அறியவில்லை. ஏனோ தனக்கு மட்டும்
நடந்து விட்டதே என்று எண்ணி
தினமும் நினைத்து மருகினாள்.

"மேலும் கார்த்திக்கிடம் பேச எனக்கு
ஒரு மாதிரி இருக்கு.. நான் சொல்லி
அவங்க வீட்டிற்கோ அல்லது எங்கள்
வீட்டிற்கோ தெரிந்து விட்டால்..
அசிங்கமாகப் போய்விடும். என்னால்
யார் மூஞ்சியிலும் முழிக்க முடியாது"
என்று மது தன் நிலைமையை
விளக்கினாள்.

"இது மட்டும் தானே மது உன்
பிரச்சினை.. மற்றபடி கார்த்திக்
அண்ணாக் கிட்ட பேச உனக்குப்
பிரச்சினை இருக்கா? அதாவது.. பேச
இஷ்டமில்லாமல்... இல்லை வேறு
ஏதாவது" என்று வினவினாள் மிதுனா.

"இல்லை" என்று தலை ஆட்டினாள் மது.

"அப்போ சொல்லிவிடுடி" என்றார்கள்
இருவரும்.

"சொல்லி கார்த்திக் என்ன தப்பா
நினைச்சுட்டா? வேண்டாம் டி.. அதுக்கு
நான் யாருன்னு தெரியாம
இருக்கிறதே நல்லது" என்றாள் மது
தவிப்பாக.

"மது ஏன்டி கார்த்திக் அண்ணா
விஷயத்துல இவ்வளவு சென்சிடிவ்வா இருக்க.. மது அந்த பழைய மது எங்க
டி" என்று ஸ்வேதா மதுவை சமாதானம் செய்ய "உன் பெயரைச் சொல்லாத.
இந்த மாதிரின்னு மட்டும் சொல்லு..
அப்புறம் கட் பண்ணிக்கலாம்"
என்றாள் மிதுனா. ஆனால் யார் என்று
தெரியாமல் விடுபவனா என்ன அவன்? மது அரை மனதோடே சரி என்றாள். சரி சொல்லிவிட்டால் ஆவது அவன் நியாபகம் குறையுமோ என்னமோ என்று நினைத்தாள்.

"கார்த்திக் அண்ணா நம்பர் என்கிட்ட
இல்ல. நாளை அப்பாவின்
மொபைலில் இருந்து எடுத்து
வருகிறேன்" என்றாள் மிதுனா.

"என்னிடம் இருக்கு" என்று மதுமிதா
கூற அவளை கேலியாக இருவரும்
பார்த்தனர்.

அவர்களின் பார்வையை உணர்ந்து
"ஜானகி ஆன்ட்டி போன்ல இருந்து ஒரு தடவை எடுத்தேன்" என்று நெழிந்தபடி
பதில் அளித்தாள் மதுமிதா.

ஸ்வேதாவின் நம்பரில் இருந்தே
கார்த்திக்கிற்கு கால் செய்தனர்.
மிதுனா பேசினால் கார்த்திக் கண்டு
கொள்வான் என்று ஸ்வேதாவையே
பேசச் சொன்னாள் மது.

கார்த்திக் எப்போதாவது
நண்பர்களுடன் சேர்ந்தால் மது
அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால்
அளவாகத் தான் அருந்துவான். அப்படி
ஊட்டியில் நண்பர்களுடன் மது
அருந்திக்கொண்டு இருந்த போது
தான் அவனுக்கு அந்நோன்(unknown)
நம்பரில் இருந்து கால் வந்தது.
முதலில் எடுக்க வேண்டாம் என்று
நினைத்தவன் பின்பு என்ன
நினைத்தானோ அட்டென்ட் செய்து
"ஹலோ" என்றான்.

"கார்த்திக்கா?" என்றாள் ஸ்வேதா.
அவளுக்கே பயம்தான். எங்கே
திட்டிவிடுவானோ என்று. தான்
பயந்தால் மதுவும் பயந்து விடுவாள்
என்று பயத்தை வெளியே காட்டாமல்
இருந்தாள் ஸ்வேதாவும்.

"யெஸ். நீங்க?" என வினவினான்
கார்த்திக்.

"அண்ணா உங்களுக்கு என்னைத்
தெரியாது.. ஆனால் உங்களை
எனக்கு நன்றாகத் தெரியும். ப்ளீஸ்
அண்ணா போனை மட்டும்
வைக்காதீர்கள்" என்றாள் ஸ்வேதா
கெஞ்சும் குரலில்.

போனை கட் செய்ய எண்ணியவன்
பிறகு யோசித்து விட்டு "சரி
சொல்லுங்க. முதலில் யார் நீங்க?"
என்று பாறைக் குரலில் கேட்டான்.

"அண்ணா ப்ளீஸ் கோபப்படாதீங்க..
திட்டாதீங்க.. அண்ணா மறுபடியும்
சொல்றேன், கட் மட்டும்
பண்ணிறாதீங்க" என்றாள் ஸ்வேதா.
கிட்டத்தட்ட தோழிக்காகக் கெஞ்சிக்
கொண்டு இருந்தாள்.

"சரி என்ன என்று சொல்லுங்க"
என்றான் கார்த்திக்.

"அண்ணா நான் என் ப்ரண்ட்காகத்
தான் கால் பண்ணிருக்கேன். என்
ப்ரண்ட் உங்களை நான்கு
வருடங்களாக ரொம்ப லவ் பண்றா"
என்று பட்டென உடைத்துவிட்டாள். மது
இருகைகளையும் கோர்த்து நெஞ்சின்
மேல் வைத்திருந்தாள். என்ன நடக்கப்
போகுதோ என்ற பயத்தில் இருந்தாள்
அவள்.

சற்று நேரம் அமைதியாக இருக்க
போனை வைத்து விட்டானோ என்று
போனைப் பார்த்தாள் ஸ்வேதா.
ஆனால் நண்பர்களிடம் இருந்து
எழுந்து காட்டேஜ் மொட்டை மாடிக்கு
வந்து விட்டான் கார்த்திக்.

மொட்டை மாடிக்கு வந்தவன் "என்ன
சொன்னீங்க? சரியாக கேட்கவில்லை"
எனக் கேட்டான். ஸ்வேதா மறுபடியும்
சொன்னாள்.

"யாரு உங்க ப்ரண்ட்?" எனக் கேட்டான்
கார்த்திக். குரல் இப்போது சற்று
இறுகி இருந்தது.

"இருங்க அண்ணா அவளிடமே தரேன்"
என்று போனைத் தப்பித்தோம்
பிழைத்தோம் மது கையில்
தந்துவிட்டாள் ஸ்வேதா.

போன் வாங்கும் போதே மதுவிற்கு
கை நடுங்கியது. பயம் பதட்டம்
எல்லாம் ஒன்று சேர்ந்து மது ஹலோ
என்று சொல்லும் போதே வார்த்தை
வராமல் தொண்டையில் சிக்கியது.
மூச்சு வேறு வாங்கியது.

"ஹலோ" என்றான் பதிலிற்கு
அமைதியாக.

பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம்
அவனது குரலில் தூரம் ஆனது போல
உணர்ந்தாள் மது. இனி மறைத்து
வைக்க முடியாது என்று எண்ணியவள் "எ..எ..னக்கு...ப்ச்.. எனக்கு உங்களை
ரொம்ப பிடிக்கும் கார்த்திக்.. உங்கள
நல்லாத் தெரியும்.. உங்க பேமலியைக்
கூட நன்றாக தெரியும். உங்களுக்கு
லவ் ப்ரேக்அப் ஆயிருச்சுனு கூட
சொன்னாங்க. ஸாரி இந்த
நேரத்தில போன் பண்ணி டிஸ்டர்ப்
பண்றதுக்கு. தப்பா நினைச்சுகாதிங்க" என்றவள் அழுதே விட்டாள்.

"ஒ ஓகே ஓகே...ஹலோ அழாதிங்க..
கூலா இருங்க" என்றான் கார்த்திக்.

"இல்ல இது வொர்க்ஔட் ஆகதுன்னு
எனக்குத் தெரியும். ஆனா உங்க கிட்ட
ஒரு தடவையாது சொல்லிடனும்
ஆசை. அ.. அதான்" என்ற மதுவால்
அதற்கு மேல் பேச முடியவில்லை.

"சரிசரி ஓகே புரிகிறது" என்றவன்
"உங்க பெயர் என்ன?" என்று
ஆர்வத்தில் கேட்டுவிட்டான்.

அவன் பெயர் கேட்டவுடன் அவள்
பதறிவிட்டாள். "இ.. இல்ல
கார்த்திக் ப்ளீஸ் அதை மட்டும்
கேட்காதீங்க, நான் உங்ககிட்ட அத
மட்டும் சொல்லிட்டு போனை கட்
பண்ணிட்றேன்" என்றாள் மது.

"ஒகே சொல்லுங்க.. ஆனா இவ்ளோ
சொல்றிங்க என்னை பற்றி.. பெயர்
சொன்னீங்க என்றால் ரொம்ப
ஹாப்பியா இருக்கும் எனக்கு"
என்றான் கார்த்திக். அவள் சொல்ல
மாட்டேன் என்று சொல்லும் போது
தான் அவனிற்கு பெயரைத் தெரிந்து
கொள்ள இன்னும் ஆர்வம் எழுந்தது

"இல்ல ப்ளீஸ்... நான் அதை மட்டும்
சொல்லிடறேனே" என்று கெஞ்சும்
குரலில் கண்ணீர் சிந்தியபடி
கேட்டாள்.

"சரி சொல்லுங்க" என்றான்...

"வந்து ஐ... என்ன சொல்ல வரன்னு
புரியுதா உங்களுக்கு" என்று
திக்கியவள் "ஐ... ஐ.. ஐ லவ் யூ
கார்த்திக்" என்று பட்டென்று
சொல்லிவிட்டாள் மது. அதைச்
சொல்வதற்குள் தயக்கம், பயம்,
பரிதவிப்பு, வெட்கம், அழுகை,
படபடப்பு, உதறல் எல்லாம் மதுவை
சூழ்ந்து கொண்டது. மதுவிற்கு
சொல்லி விட்டோம் என்று
சந்தோஷப்படுவதா அல்லது இவன்
என்ன நினைப்பான் என்று அழுவதா
என்று இருந்தது.

சொல்லி முடித்த சில கணங்கள்
அமைதியே நிலவியது. "ஹலோ"
என்று மது அழைத்த போதுதான்
கார்த்திக் பேசினான்.

"என்ன சொல்றதுனு தெரில, நாலு
வருடமா என்ன லவ் பண்ணறனு
சொல்றீங்க.. தேங்க் யூ தேங்க் யூ சோ
மச்.. எனக்கு வேற என்ன சொல்றதுனு
தெரியல" என்று விட்டு "எனக்கு
லவ்ல-லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.. ஹர்ட்
பண்றன்னு நினைக்காதிங்க.. எனக்கு
வேற மாதிரி சொல்லத் தெரியல"
என்றான்.

என்ன இவன் லவ்வ சொன்ன ஆமா
இல்லைனு சொல்லாம தேங்க்யூ
சொல்றான் என்று மது நினைத்தாள்.

அவன் சொன்னதிற்கு "ம்ம்" என்று
மட்டும் சொன்னாள்.

"சரி உங்க ப்ரண்ட் கிட்ட போனைக்
குடுங்க" என கார்த்திக் சொல்ல
ஸ்பீக்கரை ஆன் செய்து ஸ்வேதாவிடம் போனைத் தந்தாள் மது.

போனை வாங்கி ஹலோ என்ற
ஸ்வேதாவிடம் "ஹலோ.. இங்க
பாருங்கமா நீங்க யாருனே எனக்கு
தெரில. என் நம்பர் கண்டுபுடிச்சு
போன்லாம் பண்ணி பேசிடீங்க. ஆனா
பெயர் மட்டும் சொல்ல மாட்டேன்னு
சொல்றிங்கலே" எனக் கேட்டான்.

ஸ்வேதா மதுவைப் பார்க்க மது
வேண்டாம் என்பது போல தலையை
ஆட்டினாள்.

"அண்ணா வந்து.... அவப்
பயப்படுகிறாள் அண்ணா..ஏதாச்சும்
பிரச்சினை ஆகிருமோனு" என்றாள்
ஸ்வேதா மதுவைப் பார்த்தபடியே.

"என்ன பிரச்னை... அப்போ தெரிஞ்ச
பொண்ணு தான் கரெக்டா?
பேசுவதைப் பார்த்தால் கூடப்
பொள்ளாச்சி பொண்ணுக மாதிரி
தான் பேசரீங்க" என்று கார்த்திக்
சொல்ல மூன்று தோழிகளுக்கும் திக்
என்று இருந்தது. ஒருவரை ஒருவர்
திகிலாகப் பார்த்துக் கொண்டனர்.

"அண்ணா.. இல்ல வெளியே
தெரிஞ்சா பிரச்சினை ஆகிவிடும்
என்று பயப்படுகிறாள்" என்றாள்
ஸ்வேதா.

"என்னம்மா ஆகிவிடும்.. நான்
யாரிடமாவது சொல்லி விடுவேன்
என்று பயப்படறாங்களா உங்க
ப்ரண்ட?.. எனக்கு ஒரு தங்கச்சி
இருக்கு.. இதெல்லாம் வெளியே
சொன்னா என்ன ஆகும்னு தெரியாதா
எனக்கு.. என்னப் பத்தி தெரிஞ்சு
தானே போன் பண்ணிற்கீங்க.
இவ்வளவு நேரம் பேசி இருக்கிங்க.
என் மேல கொஞ்சம் கூடவா
நம்பிக்கை இல்லை" என அமைதியாக
அழுத்தமாகக் கேட்டு முடித்தான்
கார்த்திக். அவன் அப்படி பிடிவாதமாகக் கேட்ட போது, மதுவின்
பிடிவாதம் அங்குத் தோற்றுதான்
போனது.

அவன் அப்படி கேட்டவுடன் மது
ஸ்வேதாவிடம் சொல்லிவிடு
என்று சைகை செய்ய, "மதுமிதா
அண்ணா , உங்க உறவுக்காரப்
பெண்தான் " என்று சொல்லி விட்டாள்
ஸ்வேதா.

"ஒ மதுமிதா.." என்று யோசனையான
குரலில் அவள் பெயரை உச்சரித்தவன் "எங்கள் அம்மா தங்கை வீட்டில் பேசிக்
கேட்டிருக்கிறேன்" என்றான்.

"இங்க பாருங்கமா இந்த மாதிரி உங்க
ப்ரண்ட்ட என்கரேஜ் பண்ணாதீங்க.
அவங்க ஹர்ட் (hurt) ஆகக்கூடாதுன்னு
தான் இவ்வளவு நேரம் பேசினேன்.
வேறு யாராவதாக இருந்திருந்தால் கட்
பண்ணிருப்பேன்... எல்லாரு
படிக்கறிங்கதானே?" என்று
கண்டிப்பானக் குரலில் கேட்டான்.

"ஆமா அண்ணா" என்றாள் ஸ்வேதா.

"எல்லாரும் படிப்ப முடிச்சுட்டு
பேமிலியப் பாருங்க" என்றான்
கார்த்திக்.

ஒரு நிமிடம் என்று போனை
வாங்கினாள் மது, "நான் உங்க கிட்ட
சொல்லாம இருந்ததுக்குக் காரணம்
நம்ம இரண்டு பேமிலியோட உறவு
தான். என்னால எந்தப் பிரச்னையும்
வேண்டாம் என்று தான் இருந்தேன்.
ஆனால் என்னால சொல்லாம இருக்க
முடியால. இந்தக் குற்ற உணர்வுனால
உங்க அம்மா தங்கச்சிக் கிட்டக் கூட
சரியாகப் பேச முடிவதில்லை.. எங்கே
தெரிந்தால் இதற்காகத்தான்
பழகினேன் என்று தவறாக நினைத்து
விடுவார்களோ என்று..." என்றாள்
கண்களில் கண்ணீருடன்.

"சீச்சீ அதெல்லாம் எது நினைக்காத
மதுமிதா. எப்பவும் போல அவர்களிடம்
பேசு. நானும் யாரிடமும்
சொல்லவில்லை. பர்ஸ்ட் பேமிலியைப் பார்.. படிச்சு முடிச்சுட்டு உன்
பேமிலியைப் பார். அவ்வளவுதானே?
வேறு ஏதும் பேச இல்ல தானே?"
என்றான் கார்த்திக்.

"ம்" என்று மது சொல்ல
வைத்துவிட்டான்.

அவன் கட் செய்தவுடன் தோழிகள்
இருவரையும் கட்டிக்கொண்டாள் மது.
"தாங்க்ஸ் ஸ்வேதா...தாங்க்ஸ்
மிதுனா" என்று கண்களில்
கண்ணீருடன் சொன்னாள் மது..

பிறகு தூங்கலாம் என்று மூன்று
பேரும் படுக்க.. ஸ்வேதாவும்
மிதுனாவும் தூங்கிவிட்டனர்.
மதுவிற்குத் தான் கண்ணீர் எட்டிப்
பார்த்தது. சிறிது நேரம் கண்ணீர்
சிந்தியவள் நான்கு மணிக்கே
உறக்கத்தை தழுவினாள். அதற்குப்
பிறகு தான் மது இனி எதற்கும் அழுகக் கூடாது என்று முடிவு செய்தது.

அவர்களும் அவளுடன் இருந்துவிட்டு
அடுத்த நாள் மாலை கிளம்பிச்
சென்றனர். "தைரியமாக இருடி..
எனக்கு என்னமோ இன்னும் ஏதோ
நம்பிக்கை இருக்கு" என்றுவிட்டு
கிளம்பினாள் ஸ்வேதா.

ஆனால் சென்னை சென்ற மதுதான்
அவ்வளவாக வருவதையே நிறுத்தி
விட்டாள். வந்தால் அவன் நியாபகம்
வரும், இல்லை சந்திக்க நேரிடும்
என்பதால்.

கார்த்திக்கிடம் சொல்லி விட்டால்
அவன் நியாபகம் குறையும்
என்றுதான் மது முடிவு செய்து
பேசியது. ஆனால் அதற்கு பிறகுதான்
அவன் நியாபகம் அதிகம் ஆனதே.
திட்டியிருந்தால் கூட சரிதான் போடா
என்று மறந்திருக்கலாம். ஆனால்
அவன் பேசியது அவளை இன்னும்
விழவைத்தது. அவன் மேல்
மரியாதையும் ஏறியது.. வேறு
ஒருவனாக இருந்திருந்தால் ஊருக்கே
பெருமை போல தண்டோரா போட்டு
இருப்பான், ஆனால் இவனோ..

'உன்னிடம் பேசிய அந்த
சில நொடிகளுக்கு மட்டுமே
தெரியும்
நான் உன் மீது கொண்ட
காதலின் உயரம்..
இன்னும் எத்தனை பிறவி
எடுத்தாலும் இந்த நேசத்தை
மறப்பேனா என்பது சந்தேகமே..
நீ அழகாக இருந்தால் தான்
உன்னை விரும்புவேன்
என்பது இல்லை.. நீ எப்படி
இருந்தாலும் உன்னை மட்டும் தான்
விரும்புவேன் என்பதே
என் மனதின் எதிரொலி..
தட்டிக் கொடுக்கவும்
தலை சாய்க்கவும்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
கட்டி அணைத்து அன்பு செலுத்த
நீ மட்டும் தான் வேண்டும் என்று
குழந்தை போல அழுகிறது
என் இதயம்..
உனக்காக அடம்பிடிக்கும் மனதை
சமாளித்துக் கொண்டு இருக்கிறேன்
இதோ எல்லாம் சரியாகிவிடும் என்று
!

அவன் நியாபகம் வரமால் இருக்க
படிப்பில் கவனம் செலுத்தி ஐந்தரை
வருடங்களை முடித்தாள். வீட்டில்
கல்யாணம் செய்து வைத்து
விடுவார்கள் என்று பயந்து தான்
லண்டனில் கண் மருத்துவம்
முதுகலையில் படிக்கச் சென்றது மது.
அங்கு கூட தனிமையில் தவிப்பாகத்
தான் இருந்தது. ஊருக்கு வரக் கூட
ஆசை தான். ஆனால் வருவதற்குத்
தான் அவளுக்கு பிடிக்கவே இல்லை.
யோகா.. உடற்பயிற்சி என்று மனதைக்
கொஞ்சம் கட்டுப் படுத்தினாள்.
இரண்டு வருடம் முடிந்த போதுதான்
எவ்வளவு வேகமாக நாட்கள் சென்று
விட்டது என்று இருந்தது. குடும்பத்தை
பார்க்க போகின்ற ஆசை ஒரு பக்கம்,
எப்படியும் கல்யாணப் பேச்சை
எடுப்பாற்களே என்ற பயம் ஒரு பக்கம்
இருந்தது மதுவிற்கு.

'வருடங்கள் அவனை
மறக்கச் செய்துவிடும் என்று
எண்ணினாள்..
ஆனால் அவனின் நினைப்பிலேயே
வருடங்கள் சென்று விட்டதே...'

என்று நினைத்தாள்.
Na koda karthik thirturuvaro nu nenachen
Decent ah dha venam nu solliyirukaru....
Nice.....😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top