• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 8 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
அத்தியாயம் - 8
அஷோக் வர்மா கூறியதைக் கேட்ட அபர்ணா, மாறன் இருவருக்கும் அடுத்து எப்படி ஆரம்பிக்கலாம் என்றே சிந்தனைச் சென்றது.

சட்டென்று நினைவு வந்தவளாக “மாறா, காலையில் எப்படி நான் அந்த டிரஸ்ட் ஹோம் போனால் பின்னாடியே வந்து நிற்கிற? என்னை ஜி. பி.எஸ் எதுவும் வச்சு டிராக் பண்ணறியா ? “ எனக் கேட்டாள்.

“உன்னை டிராக் பண்ண ஜி. பி. எஸ் எல்லாம் வேண்டாம். உன் மண்டை மேலே இருக்கிறக் கொண்டையேப் போதும்”

“என்ன சொல்ல வர்றன்னு தெளிவாத் தான் சொல்லேன்”

“ஆக்சுவலா அந்தப் பக்கம் ஒரு நகைக்கடை திறந்து வைக்கக் கோலிவுட், பாலிவுட், டோலிவுட்ன்னு எல்லா ஆக்டர்ஸ்சும் வந்தாங்க. அது ரிப்போர்ட் பண்ணப் போயிருந்தேன்.”

“ஏண்டா நாட்டில் எவ்ளோ பிரச்சினைப் போயிட்டு இருக்கு? இப்போ இந்த ஆக்டர்ஸ் நியூஸ் தான் முக்கியமா? “

“உனக்கு என்னமா? எங்க வரிப்பணத்தில் சம்பளம் வந்துருது. எங்களுக்கு எல்லாம் நாலு விளம்பரம் வந்தா தான் எடிட்டர் சம்பளம் கொடுப்பார். நாலு விளம்பரம் வரணும்னா, இப்படி நாலு தெருவுக்குப் போய் ரிபோர்டிங் பண்ணினாத் தான் சம்பளம்”

“ரொம்பத்தான் அலுத்துக்காத. உங்களை மாதிரி தீபாவளி, பொங்கல்ன்னு லீவு உண்டா இல்லை சண்டே லீவு இருக்கா? உங்களுக்காக நாங்க காவல் காத்துகிட்டுக் கிடக்க , இந்த சம்பளம் வர்றது கூட உங்களுக்குப் பொறுக்காதே ?” என்றவள் “சரி. மேலே சொல்லு”

“அந்தக் கடை அந்த ஹோம்க்கு முதல் தெருவில் இருக்கு. மேடம்ஜி போகும்போது கெத்தா வண்டிலே டாப் லைட் சுத்த விட்டுக்கிட்டுப் போனதும் , நம்ம மீடியா மூளை கேட்ச் பண்ணிடுச்சு. நல்ல வேளை ஃபயர் சர்வீஸ், ஆம்புலன்ஸ் தவிர மற்ற டிபார்ட்மெண்ட் தேவையில்லாமல் அலாரம் அடிச்சுட்டுப் போகக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. இல்லாட்டா திருடன் நீங்க நாலாவது தெருவில் வரும்போதே எஸ்கேப் ஆகிடுவான் ”

“அட ரொம்பத் தான் பேசாத. அங்கே ஒரு பொண்ணு இறந்துக் கிடக்குன்னு சொல்லவும் அவசரம்ன்னு டிரைவர் கிட்டே சொன்னேன். அவர் லைட் ஆன் பண்ணி இருக்கார். இதை என்னவோ ஜேம்ஸ் பாண்ட் புதையல் கண்டுபிடிச்ச மாதிரி பில்ட்அப் கொடுத்துட்டு இருக்க”

“சரி சரி விடு. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் “ என்றவன், “அந்தப் பொண்ணு இறந்ததுப் பற்றி ஒண்ணும் சொல்லலியே அபி” என்று சீரியசாகக் கேட்டான்.
அஷோக் , சஞ்சய் கூட அவள் முகத்தைப் பார்த்து இருக்க,

“இது எந்த விதத்திலும் யாருக்கும் சந்தேகம் இல்லாமல் நடந்து இருக்கிற மார்டர் “ என்றாள்.

எப்படிச் சொல்ற அபி ?

“அந்தப் பொண்ணு உடம்பில் காயம் எதுவும் இல்லை. வேறு எதுக்கும் ட்ரை பண்ணின மாதிரியும் தெரியலை. ஆனால் முதல் நாள் ட்ரிப்ஸ் போட்ட பொண்ணு மறுநாள் எப்படி இறந்து போவா? எல்ஸ் அந்தப் பொண்ணுக்கு சிவியர் நோய் எதுவும் தாக்கி இருந்தால் தவிர இறந்துப் போக வாய்ப்பு இல்லை . அப்படி ஒரு ஹார்ட் அட்டாக் மாதிரி அல்லது ப்ரெய்ன் சம்பந்தப்பட்ட எதுவும் வரணும் னா , முதல் நாள் டெஸ்ட் பண்ணினப்போ ஏதோ ஒரு சிம்ப்டம் இருக்கும். ட்ரிப்ஸ் போட்டப்போ பிரஷர் , சுகர் எல்லாமே செக் பண்ணிருப்பாங்க. இது எல்லாமே நார்மலா இருக்கிற பொண்ணு, ஏன் ராத்திரி பூரா கத்தனும்? மறுநாள் இறந்துப் போகணும்?”

அபி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் அவள் சொல்வது சரியென்று தான் தோன்றியது.

அஷோக் “இப்போ என்ன செய்யலாம்ன்னு இருக்க அபி?” என்றார்.

“மாமா எனக்கு இந்த ஹோம்லே நடக்கிற சில விஷயங்கள் புரியலை. அதைச் சரியாப் புரிஞ்சிக்கணும்னா , இன்னொரு ஹோம் போய் பார்த்துட்டு வரணும்”

“சரிதான். அப்படின்னா மணி டிரஸ்ட்டில் உள்ள மற்ற ஹோம் போகப்போறியா?”

“இல்லை. அவங்க டிரஸ்ட் எதுவும் இல்லை. பட்டாம்பூச்சிகள் இல்லத்திற்கு போகப் போறேன்”

சஞ்சய், மாறன் இருவரும் “குட் சாய்ஸ் “ எனக் கூற, அஷோக் “அது யாருடா ? உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினார்.

சஞ்சய், மாறன் இருவரையும் பார்த்து “அப்பா, மாறா உங்க ரெண்டு பேருக்கும் அந்த டிரஸ்ட் பற்றித் தெரியுமா?’ என வினவினாள்.

சஞ்சய் “ரிஷி என்னோட கிளையண்ட்மா. அவனோட ஆன்லைன் இண்டஸ்ட்ரி லீகல் இஷ்யுஸ் எல்லாமே நான் தான் சால்வ் பண்ணிக் கொடுத்தேன்” என்றார்.

மாறன் “ரிஷி, கரண் ரெண்டு பேரையும் ஒரு சோசியல் சர்வீஸ் ஈவென்ட்லே மீட் பண்ணிருக்கேன். இந்த ஏஜ்லே ரெண்டு பேரும் நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிட்டு இருக்காங்க. அதனால அப்போ அப்போ அவங்க கூட டச்லே இருக்கேன்” என்றான்.

“உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சு இருக்கு. ஆனால் மாமா உங்களுக்கு எப்படித் தெரியாமல் போச்சு?”

“அவங்களோட எல்லா காண்டாக்ட்டும் எனக்குத் தெரியாது அபி. ஒரு சிலது அஃபீஶியலா இருக்கும்ன்னு நாங்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேக்கறது இல்லை “

“நல்ல பாலிசி தான். ஆனால் மூணு இதுவரை உங்க மூணு பேரையும் சேர்த்து யாரும் பார்த்தது இல்லையா?

“நாங்க மூணு பேரும் வெளியில் சேர்ந்து போறது கிடையாது. இது வரை நம்ம ஃபேமிலி
ஃபங்சன் எதுவும் வரலை. மூணு பேரையும் சேர்த்து பார்த்து இருந்தாலும் தொழில் ரீதியான பழக்கம்ன்னு தான் நினைச்சு இருப்பாங்க “

சஞ்சய் “உனக்கு எப்படிமா பட்டாம்பூச்சிகள் ஹோம் பற்றித் தெரிந்தது?’ என வினவ, ரிஷி , கரண் இருவரையும் சந்தித்தச் சூழ்நிலைப் பற்றி விவரித்தாள்.

மற்ற இருவரும் அவளை மகிழ்ச்சியுடன் பார்க்க, அஷோக் மட்டும்

“அபி, இத்தனை நல்லவங்களா ஒருத்தங்க இருப்பாங்கன்னு நினைக்கறியா?” என்று வினவினார்.

“உங்களுக்கு இருக்கிற டவுட் எனக்கும் இருக்கு மாமா. ஆனால் இவங்களைச் சந்தேகப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லையே. அத்தோட மாணிக்கவேல் கேஸ்க்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?”

“அது உண்மைதான். ஆனால் அவர்கள் உன் கண்ணில் ஏன் பட வேண்டும். இது தற்செயலா நடந்ததா? வேறு உள்நோக்கம் இருக்கான்னு யோசனை வருது”

அப்போது மாறன் “மாமா, மருமகள் ரெண்டு பேருக்கும் எப்போதும் சந்தேகம் தான். அவர்கள் இருவரைப் பார்த்தால் அப்படித் தோணலை பெரியப்பா “என்றான் .

சஞ்சய் மட்டும் அஷோக் முகத்தைப் பார்த்துவிட்டு “எனக்கும் மாறன் சொல்றது தான் தோணுது. ஆனால் உங்களோட உள்ளுணர்வு இப்படி இருக்கு என்றால் அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.” என்றார்.

அபர்ணா எல்லோரையும் பார்த்துவிட்டு “ஓகே . எதுக்கு இந்தக் குழப்பம்? நான் நேரில் போய் அந்த ஹோம் பார்த்துட்டு அப்படியே அதனால் எதுவும் நமக்குக் க்ளூ கிடைக்குதான்னுப் பார்த்துட்டு வரேன்” என்றாள்.
இப்போது சஞ்சய், அஷோக் இருவரும் “கேர்ஃபுல் அபி” என , மாறனோ

“எனக்கு இந்த விஷயத்தில் பயம் இல்லை அபி. உன்னோட சந்தேகம் எதுவும் இருந்தால் போய்ப் பார்த்துக் கிளியர் பண்ணிக்கோ ” என்றான்.

“பார்டா. சர் எனக்குப் பர்மிஷன் கொடுத்துட்டார் “ எனச் சிரிக்க, மற்றவர்களும் சிரித்தனர்.

பின் “அப்பா, மாறா நம்ம ரிலேஷன்ஷிப் ரிஷிக்குத் தெரிய வேண்டாம். ஒரு தர்ட் பெர்சனாவே நான் போய் தெரிஞ்சுக்கறேன்” என, இருவரும் சரி என்றனர்.
சொன்னபடி மறுநாள் ரிஷியின் போனிற்கு அழைப்பு விடுக்க, சிறு யோசனையோடு எடுத்தான்.

“ஹலோ மேடம் “ என.

“மிஸ்டர் ரிஷி. இது அஃபீஶியல் கால் இல்லை. சோ அபர்ணா என்றே சொல்லலாம்” என்றாள்.

“ஓ. சாரி சொல்லுங்க அபர்ணா”
“இன்னிக்கு உங்க பட்டாம்பூச்சிகள் இல்லம் வந்துப் பார்க்கலாம்ன்னு இருக்கேன். சர் ஃப்ரீ யா ?”

“ஓ. சூர். கண்டிப்பா வாங்க. “

“நீங்க உங்க வொர்க் ஏரியா போகலையா ?”

“இன்னிக்குக் கரண் அங்கேப் போயிருக்கான் அபர்ணா. எனக்கு சிட்டிலே கொஞ்சம் வேலை இருந்துது. அதை முடிச்சுட்டு ஓ. எம். ஆர் போகாணும்னா ரொம்ப லேட் ஆகிடும். அதனால் தான் அவனை அனுப்பி விட்டேன். நானும் இப்போ ஹோம்லே தான் இருக்கேன். வாங்கப் பார்க்கலாம்”

“ஓகே. இன்னும் ஹாஃப் அன் ஹவர்லே இருப்பேன். அந்த கரெக்ட் லொகேஷன் மட்டும் கொஞ்சம் ஷேர் பண்ணிடுங்க பிளீஸ்” எனவும்

“இதோ அனுப்பறேன் அபர்ணா. நான் வெயிட் பண்ணறேன் “ என்றான்.

ரிஷியின் மனதில் அபர்ணா இப்போ இங்கே வருவதற்கான காரணம் என்ன என்று
யோசித்தான். எதற்கும் எல்லாவற்றையும் ஒரு முறை சரிப் பார்த்தவன், அவளின் வரவிற்காகக் காத்து இருந்தான்.

வீட்டில் இருந்த ஸ்விப்ட் காரை செல்ஃப் டிரைவிங்கில் எடுத்து வந்து இருந்தாள். கார் விட்டு இறங்கியவளைப் பார்த்த ரிஷிக்கு மூச்சடைத்தார் போல இருந்தது.

இதுவரை அபர்ணாவை அறிய நேர்ந்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அவளை யூநிஃபார்மில் பார்த்து இருத்தவனுக்கு , முதல் முறை அழகான மிக்ஸ் அண்ட் மேட்ச் டாப்ஸ் , லேகினசில் பார்த்தவன் அசந்து தான் விட்டான்.

போலீஸ் என்பதால் நல்ல உயரத்தில் இருந்தவள், சரியான உடற்பயிற்சி செய்வதால் அழகான தோற்றத்தையும் பெற்று இருந்தாள். முதலில் தானை மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவனை நோக்கி அபர்ணா வரவும், சுதாரித்துக் கொண்டான்.

“வெல்கம் அபர்ணா’ என

“ஹாய் ரிஷி” என்றாள்.

அப்படியே அவள் கண்கள் ஹோம் முழுதும் வட்டமிட,

“வாங்க. என்ன திடீர் விஜயம்? நீங்க அஃபீஶியல் இல்லைன்னு சொன்னாலும், உங்கள் கண்கள் அப்படி இல்லைன்னு சொல்லுதே “ என்றான் ரிஷி.

“ஹ. ஹ. சரிதான் ரிஷி. கொஞ்சம் அஃபீஶியல் தான். மற்றபடி நார்மல் விசிட் தான் “

“சொல்லுங்க உங்களுக்கு என்ன தெரியணும்?” என நேரிடையாக ரிஷி வினவ,

“ஸ்மார்ட் “ என்றாள் அபர்ணா.

பின் “இங்கே மனநிலை பாதிப்புக்கு உள்ளானவங்க தங்கி இருக்காங்க இல்லையா? அவங்களை எப்படி ட்ரீட் பண்ணுவீங்க? அதைத் தெரிஞ்சுக்கணும்” என்றாள்.

இப்போது ரிஷி மனதிற்குள் ஸ்மார்ட் என்று நினைத்துக் கொண்டான்.

“அவ்வளவு தானே. வாங்க நேரடியாப் போய்ப் பார்க்கலாம்” என்றான்.

ஹோம் உள்ளே அழைத்துச் சென்றவன், இரண்டு நாள் முன் அவன் அழைத்து வந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்டவன் இருக்கும் இடமே அழைத்துச் சென்றான்.
அவன் கைகளில் பெயிண்டிங் பிரஷ் இருக்க, அங்கு இருந்த கேன்வாஸ் போர்ட்டில் ஏதோ பெயிண்ட் செய்துக் கொண்டிருந்தான். மற்ற போர்ட்களில் இரண்டு மூன்று படம் வரைப்பட்டு இருக்க, அதை; பார்த்தவளுக்கு ஆச்சரியமே. நாம் தினமும் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்ய உபயோகப்படுத்தும் குட் மார்னிங், குட்நைட் , ஹாவ் அ நைஸ் டே படங்கள் எல்லாம் அழகாக வரைப்பட்டு இருந்தது.

அபர்ணா திரும்பி ரிஷியைக் காண,

“இங்கே உள்ளவர்களில் வரைய வருபவர்களுக்கு இப்படி வரையக் கூறி விடுவோம். அதனை போட்டோ எடுத்து கூகிள் போட்டோஸ் மற்ற போட்டோ ஆப் வெப் சைட்க்கு அனுப்பினால் ராயல்டி வரும். ஒரிஜினல் வேணும் என்பவர்களுக்கு இதை லாமினேட் செய்து அனுப்பி அதிலும் பணம் வரும். அதை அவர்வர் செலவுகளுக்கு சேமித்து வைக்கிறோம்” என்றான்.

“சூபெர்ப் ஐடியா. ஆனால் இவங்களால் ஒரே மனநிலையில் வரைய முடியுமா?”

“அவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதற்கு தான் இதைச் செய்கிறோம்”

“எல்லோரும் வரைவார்கள் என்பது இல்லையே?’

“இல்லை தான். யார் யாருக்கு என்ன என்ன வருமோ அதை எத்தனை எளிதாகச் செய்ய முடியுமோ அப்படிச் செய்ய வைப்போம்”

“ இவர்களைப் பார்த்துக் கொள்ள கேர் டேக்கர் யாரும் இல்லையே?

“அதோ “ என்ற எதிர்பக்கத்தில் கை காண்பிக்க , மூன்று நான்கு பேர் அமர்ந்தபடி தைத்துக் கொண்டிருந்தனர். ரிஷியின் முகம் பார்க்க

“அவர்கள் தான் இவரைப் போன்றவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள்.”

“அப்படி என்றால் இங்கே இல்லாமல் அங்கே ஏன் இருக்கிறார்கள்?’

“இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிப்பு அவசியம் இல்லை அபர்ணா. இவர்களைக் கொஞ்சம் சுதந்திரமாக விட்டால், தானாகவேப் பாதித் தெளிந்து விடுவார்கள்”

“பின், ஏன் ரோட்டில் அலைந்தவரை இங்கே இல்லத்திற்கு அழைத்து வந்தீர்கள் ?”

“அது பாதுக்காப்பிற்காக. இங்கே அவர்கள் சுதந்திரமாக இருக்கலாம். கேட் மட்டும் தாண்டக் கூடாது”

“பாதுக்கப்பிற்கு என்றால் என்ன ஆபத்து வரும் என்று கூறுகிறீர்கள்?”

ஒருமுறை அவளை ஆழந்துப் பார்த்து விட்டு “காம அரக்கர்கள் மட்டுமே ஆபத்து என்று இல்லை. இவர்களுக்கு எல்லாம் பீக் ஹவர் டிராஃபிக் கூட ஆபத்துத் தான். இன்னும் சில ஆபத்துக்கள் வெளியில் யாருக்கும் தெரியாது” என்றான்.

“உங்களுக்குத் தெரிந்து இருக்கும் போலிருக்கிறதே “ என்று கூர்மையாக வினவ, சற்று திணறினாலும் “கேள்விப்படும் விஷயங்களை வைத்துத் தான் கூறுகிறேன்” என்றான் ரிஷி.

பின் அவர்கள் மெடிக்கல் செக்கப் பற்றி எல்லாம் விசாரிக்க, அநேக முரண்பாடுகள் அவளுக்குள் தோன்றியது. மணி டிரஸ்ட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு முரணாக ரிஷி நடத்தும் ஹோமில் இருந்தது. ஆனால் இருவரும் கூறும் காரணங்கள் சரியாகவே இருக்க, எது சரி எது தவறு என்ற குழப்பம் ஏற்பட்டது.

இத்தனை எண்ணங்கள் மனதில் ஓடினாலும், எதையும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், தன் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

பின் பட்டம்பூச்சிகள் ஹோம் விட்டுக் கிளம்பும் போது

“தாங்க்ஸ் ரிஷி. நான் அறியாத இன்னொரு உலகத்தை எனக்குக் காட்டி இருக்கீங்க. இவர்களைப் போன்றவர்கள் மீது பரிதாபம் வரும். அக்கறை இருக்கும். நல்ல இடத்தில் சென்று சேர வேணும் என்ற வேண்டுதல் இருக்கும். ஆனால் இவர்களையும் மனிதர்களாக மதித்து நடந்துக் கொள்ளும் பண்பு எனக்கு இருந்து இருக்காது. இன்றைக்கு உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், அவர்களின் உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக் கொண்டேன். இன்னும் டைம் கிடைக்கும் போது வருகிறேன். அத்தோடு கூடிய விரைவில் எங்கள் டி. ஜி. பி யும் உங்களைச் சந்திப்பார் என்று நினைக்கிறேன்” என்றாள்.

“டி. ஜி. பிக்கு என்னை எப்படித் தெரியும்?

“உங்களைப் பற்றி நான் தான் கூறினேன். அவரும் உங்கள் முயற்சிகளைப் பாராட்டினார். உங்களைச் சந்திப்பதாகவும் கூறினார். “

“ஓ. நல்லது தான். அவரைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். சந்தித்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். எனக்கும் உங்களிடத்தில் ஒரு விண்ணப்பம் உண்டு மேடம் “

“மறுபடியும் மேடமா ?”

“இது டி. சி. பி மேடம் கிட்டே என்பதால் , மேடம் தான்” என்றவன்,

“நம் ஹோம் சார்பில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் நடக்கிறது. அங்கே உள்ளப் பெண் குழந்தைகளுக்கு ஒரு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்க வேண்டும். “ என்றான்.

“ஓ. நிச்சயம் செய்கிறேன். எப்போது என்று கொஞ்சம் முன்னால் சொல்லி விட்டால் நான் ஃப்ரீ செய்துக் கொள்கிறேன்”

“சூர். நான் ஏற்பாடுகள் செய்துவிட்டு உங்களிடத்தில் டேட் கேட்டுக் கொள்கிறேன்” என்ற ரிஷி “ மிக்க நன்றிகள் அபர்ணா மேடம் “ என்றான்.

அழகாக சிரித்தவள் கிளம்பகிறேன் என்று தலையசைக்க, ரிஷியும் விடைக் கொடுத்தான்.
அவள் கார் கண்ணில் இருந்து மறையும் வரைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்களில் மெல்லிய வேதனைத் தெரிய, தலையை உலுக்கித் தன்னைச் சமன் செய்து கொண்டான் ரிஷி

அங்கிருந்துப் புறப்பட்ட அபர்ணாவிற்கும் ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு தோன்றியது. அவளின் வயதும், அனுபவமும் என்ன என்று சிறிது உணர்த்த முயன்றாலும் அதை தன்னில் இருந்து நீக்கினாள்.

பின் மாணிக்கவேல் டிரஸ்ட்டின் நடைமுறையும், இங்குள்ள நடைமுறையும் ஒப்பிட்டுப் பார்த்தவளுக்கு , ஏதோ தவறாகவேத் தான் தோன்றியது. ஆனால் இல்லத்தில் இருப்பவர்களின் மீது சந்தேகம் வரவில்லை அதையும் தாண்டி வேறே எங்கோ பிரச்சினை சிக்கி இருப்பதாகத் தான் தெரிந்தது.

அதே சிந்தனையோடு இன்றும் தன் மாமாவின் இல்லத்தில் கூடி இருக்க, அன்றைய விஷயங்களை மூவரும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

அஷோக் “அப்போ ரிஷியைப் பற்றி உனக்கு எந்த சந்தேகமும் தோன்றவில்லையா அபி?” என்று வினவினார்.

“இல்லை மாமா” என்றாள்.

“நான் தான் சொன்னேனே பெரியப்பா” என்றான் மாறன்.

“ஆனால் மாறா, ரிஷி ஏதோ சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. அது என்ன என்று தான் புரியவில்லை” என்றாள் அபி.

அஷோக் யோசனையோடு “உன்னை விரும்புகிறார் என்பதுப் போல தெரியுதா அபி?” என்றார்.

இதைக் கேட்ட மாறன் திடுக்கிட்டு விழிக்க, அபியோ சாதாரணமாக “இல்லை மாமா. விஷயம் அது இல்லை. அவர் எதையோ உணர்த்த விரும்புகிறார். அது பெர்சனலும் இல்லை “ என்றாள்.

இப்போது அஷோக்கின் முகமும் குழம்பிக் கிடக்க, சற்று நேரம் யோசித்தவர் சட்டென்று முகம் மலர்ந்தார்.

“அபி, ரிஷி இந்த இல்லம் நடத்தும் முறைப் பற்றித் தான் உனக்குத் தெரிவிக்க விரும்பி இருக்கிறார். மாணிக்கவேல் நடத்தும் டிரஸ்ட் பற்றி அவருக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்து, அதை உன் மூலம் வெளிப்படுத்த எண்ணுகிறாரோ என்று நினைக்கிறேன்”
அபிக்கும் இத்தனை நேரம் யோசித்தத்தில் இதே எண்ணம் வந்திருக்க,

“நானும் அப்படித்தான் நினைத்தேன் மாமா. ஆனால் அதில் எந்த விஷயம் என்று குறிப்பிட்டுக் கூறும்படியாக இல்லையே. காலத்திற்கு ஏற்றார் போல பட்டாம்பூச்சிகள் ஹோம் அப்டேட் ஆகி இருக்கிறது என்பதைத் தாண்டி இரண்டு ஹோம் நடத்துபவர்களின் நோக்கம் ஒன்று தானே” என்றாள்.

இப்போது மாறன் குறுக்கிட்டு “அப்படி இல்லை அபி. மாணிக்கவேல் தன் மகனின் குறைக் கூட வெளியேத் தெரியக் கூடாது என்று எண்ணி ஹோமில் தங்க வைத்து இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூக சேவை என்பது எல்லாம் கண் துடைப்பிற்காகவே இருக்கும். அப்படி என்றால் அவரின் நோக்கம் சேவை என்பதைத் தாண்டி அந்த இல்லத்தினால் அவருக்கு ஏற்படும் லாபம் வேறு எதுவோ இருக்கிறது அல்லவா?” என்றான்.

அஷோக், அபர்ணா இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பின் அபர்ணா “எஸ். அந்தப் பெண்ணோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துருந்தா முதலில் அதைப் பார்த்து விட்டு வருகிறேன். அதற்கு பின் மற்றதை யோசிக்கிறேன் “ என்றவள் , அந்தச் சிந்தனையோடு எழுந்துச் சென்றாள்.

அன்று நடு இரவு தாண்டி கருக்கல் வேளைக்கு முன், கோவளம் பீச் ஹவுஸ் ஒன்றின் பின்புறம், கடல் அலைகள் காலைத் தொடும் இடத்தில் இருவர் நின்று இருக்க, அவர்கள் எதிரில் ஒருவன் மண்டியிட்டு அமர்ந்து இருந்தான். அவனின் கண்களில் உயிர் பயம் தெரிந்தது.

“வர்மா சர், பிளீஸ் என்னை நம்புங்க. எனக்கும் உங்களை எதிர்த்தவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை சாட்சியா வச்சு அவங்கப் பேசினாங்க என்பது மட்டும் தான் உண்மை. மற்றபடி நான் எதுவும் உங்களைப் பற்றி அங்கேப் பேசவில்லை” என்று கெஞ்சினான்.

இப்போதும் கருணாதான் பேசினான். “டாக்டர் சர் , நீங்க அங்கே எதுவும் பேசலை என்பது உண்மைதான் . ஆனால் உங்க மனசுக்குள்ளே எங்க ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளுபவனுக்கு ஆயிரம் பொற் காசுகள் கொடுக்கணும்ன்னு அந்த செண்பகப்பண்டியன் மன்னன் மாதிரி நினைக்காமல இருந்தீங்க?” எனவும், அந்த டாக்டர் திகைத்துப் போனார்.

இவர் மனதிற்குள் அப்படித் தான் நினைத்து இருந்தார். அதைப் பார்வையால் கூட அங்கே வெளிப்படுத்தவில்லை. அங்கே யாரும் என்னவும் செய்துக் கொள்ளுங்கள் என்ற பாவனையில் தான் இருந்தார். ஏன் எனில் அவருக்கு தங்கள் கூட்டத்திற்குள் ஒரு கருப்பு ஆடு இருக்கிறது என்று சர்வ நிச்சயமாகத் தெரிந்து இருந்தது. அதை ஜாடை மாடையாகக் கூறியும் யாரும் மண்டையில் ஏற்றிக் கொள்ளவில்லை. எனவே தான் எந்த வார்த்தையும் கூறாமல் அமைதியாக மனதிற்குள் எண்ணியிருந்தார். அதையும் இவர்கள் அறிந்து இருப்பார்கள் என்று தெரிந்ததும் , தன் உயிரின் மேல் அத்தனை பயம் வந்தது.
மீண்டும் இருவரிடம் அவர் கெஞ்ச, வர்மாவோ , கருணாவை ஒரே ஒரு பார்வைத் தான் பார்க்க, அடுத்த நிமிடம் டாக்டர் கடல் மணலில் சரிந்துக் கிடந்தார்.

-தொடரும் -
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top