• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் - 9 - முள்ளாடும் ரோஜாக்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 80

புதிய முகம்
Author
Joined
Nov 16, 2021
Messages
14
Reaction score
58
அத்தியாயம் - ஒன்பது

அன்று காலை அபர்ணா அந்தப் பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படித்துக் கொண்டிருந்தாள் .

அதில் அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஆன்டி பயோடிக் மருந்துகளின் பக்க விளைவில் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து அதன் அழுத்தம் தாங்கமால் மரணம் என்று எழுதி இருந்தது.

இதைப் படித்தப் பின் தனக்கு ஏற்பட்டச் சந்தேகம் சரிதான் என்று எண்ணிக் கொண்டிருந்தவள், இறந்தப் பெண்ணிற்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் வந்துவிட்டாரா என்று எண்ணி ஹாஸ்பிடல் அழைக்க, அங்கேக் கேட்டச் செய்தியில் திகைத்து எழுந்து விட்டாள்.

அவள் வெளியில் வந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர் என்ன என்பது போல அருகில் நிற்க,
“ஆர். கே. என் ஹாஸ்பிடல் போகணும்” என்று மட்டும் அழுத்தமாகக் கூறினாள்.

இன்ஸ்பெக்டர் கூட இரண்டு கான்ஸ்டபிள்களும் ஏற. அபர்ணா கவனம் முழுதும் கேட்டச் செய்தியிலேயே இருந்தது. இவர்கள் வண்டி நிற்கவும், சொல்லி வைத்தார் போல மீடியாவும் வர , இந்த முறையும் அதற்கு தலைமை இளமாறனே.

அபர்ணாவிற்கு வந்தக் கோபத்தில் அவனைப் பார்த்துக் கத்த நினைத்தவள், சுற்றுப்புறம் உணர்ந்து அமைதி கொண்டாள்.

பின் அவர்கள் எதிரில் மௌனமாக நிற்க

“மேடம் , இத்தோடு இது மூன்றாவது கொலை. இனியாவது இது நிற்குமா?“ என வினவ, அபர்ணாவிற்கு கண் மண் தெரியாதக் கோபம் வந்தது.

அவள் பதில் சொல்லும் முன் அங்கே மற்றொரு கார் வந்து நிற்க, அதில் இருந்து டி.ஜி. பி. அஷோக் வர்மா இறங்கினார்.

இப்போது நிருபர்கள் அவரை நெருங்கி நின்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து இருந்தனர்.

“சர், சிட்டி லா & ஆர்டர் கண்ட்ரோல் நீங்க தான். உங்க டிவிஷன்லே இப்படித் தொடர் கொலைகள் நடந்து இருக்கிறதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?”

“இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டுதான் இருக்கு. எங்களால் முடிஞ்ச வரை ட்ரை பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரம் கொலைகாரனைப் பிடிச்சிடுவோம்.

“அப்போக் கொலைக்காரனைப் பிடிக்கிற வரை கொலைகள் தொடரும்ன்னு சொல்ல வர்றீங்களா?’

“இல்லை. இனிமேல் நடக்காத அளவிற்கு ஆக்ஷன் எடுப்போம்”

“என்ன ஆக்ஷன் எடுத்து இருக்கீங்க?”

“இன்னும் அரை மணி நேரத்தில் போலீஸ் கமிஷன்ர்ஸ் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்கோம். அது முடிஞ்சதும் உங்களுக்கு ப்ரீஃப் ரிப்போர்ட் கொடுக்கறேன். இப்போப் பிளீஸ் எங்க வேலையைப் பார்க்க விடுங்க”

“சர், இந்தக் கேஸ் ஹிமாச்சல் பிரதேசத்தில் மிக முக்கியமான வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளைப் பிடித்த மிஸ் அபர்ணா கிட்டே இருக்கு. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கேஸ் வேறே யார் கிட்டேயும் ஹேண்ட் ஓவர் பண்ணப் போறீங்களா? இல்லை சி. பி. சி. ஐ. டி. கிட்டே போகப்போகுதா? “ என்ற கேள்வியைக் கேட்டவன் சாட்சாத் இளமாறனே.

அபர்ணா பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோக் கோபமாகக் கூற வர, அவளைப் பார்வையால் தடுத்த அஷோக் வர்மா,

“மிஸ்டர். இது கொஞ்சம் சிக்கலான கேஸ். எந்த லீட்டும் இல்லாமல் இருக்கு. மிஸ் அபர்ணாவும் டே நைட் பார்க்காமல் இதுக்காக வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்சம் டைம் கொடுக்கலாம்ன்னு என்னோட எண்ணம். மற்றதை ஐ. ஜி. முடிவு பண்ணுவார். “ என்றுவிட்டுப் பிளீஸ் என்று கை குவித்து விட்டு உள்ளே சென்றார்.

யாரும் அறியாமல் இளமாறனை ஒரு முறை முறைத்த அபர்ணா, அஷோக்கைப் பின் தொடர்ந்தாள்.

வெளியில் நின்ற மற்ற ரிப்போர்ட்டர்ஸ் “எப்பா இளமாறா ? ஏன்பா இந்தக் கொலைவெறி உனக்கு? அந்த மேடம் சிம்லா கேஸ்லே அவங்க உயரதிகாரியே எதிர்த்து நின்னவங்க. இந்தக் கேஸ் கொஞ்சம் சவாலா இருக்கு. நாமே எதிர்பார்க்கலை. ஒரு கேஸ் முடியும் முன் அடுத்து அடுத்து நடந்தா அவங்களும் என்ன பண்ணுவாங்க ? எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ. உன்னைத் தூக்கி குண்டாஸ்லே உள்ளே போட்டுடப் போறாங்க.” என்று கூற,

இன்னொருவனோ “அடப் போப்பா. இவரை உள்ளே வைத்தால் ஹை கோர்ட் லாயர் சஞ்சய் சாரே ஜாமீன் எடுக்க வருவார். அவளோ செல்வாக்கான மனுஷன் இவர். சர் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. நாங்க உங்கக் கூட இருக்கோம்” என்றான்.

இளமாறனோ “அடப் போங்கயா ! நானே இன்னிக்கு வீட்டுக்கு எப்படிப் போகன்னு யோசிச்சுட்டு இருக்கேன். ஹை கோர்ட் லாயரா ? இன்னிக்கு லாயர் சரே எனக்கு ஜட்ஜ்மெண்ட் வாசிக்கப் போறார். குற்றவாளிக்கு விழ வேண்டிய மரண அடி எல்லாம் எனக்கு விழப் போகுதேன்னு பயத்துல நின்னுட்டு இருக்கேன். இவனுங்க வேறே கொம்பு சீவி விடறாங்க . என்று மைண்ட் வாய்சில் பேசிக் கொண்டு இருந்தான்.

என்றாலும் சும்மாவேணும் “அதானே. நமமள யாரு என்ன செய்ய முடியும்?” என்று வாய் பேசி விட்டு , மீண்டும் மைண்ட் வாய்சில்

“ஐயோ , இந்த வாய் சும்மா இருக்க மாட்டிக்குதே? என்று மானசீகமாகத் தான் வாயில் அடித்துக் கொண்டான்.

உள்ளே சென்ற அபர்ணாவின் கண்களில் மெல்லிய நீர்ப் படலம் இருக்க, அதைக் கவனித்த அஷோக்கிற்கு மாறனின் மேல் எக்கச்சக்க கோபம் வந்தது. அபியை ஆறுதல்படுத்தவும் முடியாத சூழ்நிலையில் யாரும் அறியாமல்.

“ரிலாக்ஸ் அபி. “ என்று மட்டும் கூறினார்.

அதில் சற்றுத் தெளிந்தவள், அவரைப் பார்த்து விரைப்புடன் நின்றாள். அவள் சரியாகி விட்டதைக் கண்ட அஷோக் வர்மா,

“சொல்லுங்க அபர்ணா மேடம். இப்போ இந்த ஹாஸ்பிடல் வந்த காரணம் என்ன? “ என்றார்.

“சர், மணி டிரஸ்ட்டில் இறந்தக் குழந்தையை ட்ரீட்மெண்ட் பண்ணின டாக்டர் இவர் தான். இப்போ இவரும் இறந்து இருக்கார் அப்படின்னா ஏதோ மிகப்பெரிய சதி நடக்கிறதோன்னு சந்தேகமா இருக்கு. அதான் ஹாஸ்பிடல் சர்ச் பண்ணலாம் நினைச்சேன் “ என்று கூறும்போதே அவள் குரல் உள்ளேப் போய் விட்டது.

“சர்ச் வாரண்ட் வாங்கினீங்களா?” என அஷோக் வர்மா வினவ,

“இல்லை “ என்று கூறினாள்.

“பின்னே இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல் எப்படி சர்ச்ப் பண்ண விடுவாங்க? ஆல்சோ இங்கே இருப்பவர்கள் நோயாளிகள். அவங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியும் சர். ஆனால் எல்லா இடத்திலும் நாம லேட்டா போறோமோன்னு ஒரு பீல். நான் வாரண்ட் வாங்கிட்டு வருவதற்குள் எவிடெண்ஸ் காணாமப் போயிடுமோன்னு தோனிச்சு. அதனால் தான் வேகமா வந்துட்டேன். சாரி சர்” என்றாள்.

“நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனால் எல்லா எவிடென்ஸ்சும் யாராலேயும் எப்போதும் அழிக்க முடியாது. சோ நீங்க ப்ரொசீஜர் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” என்று கூறிவிட்டு, அங்கிருந்த ஹாஸ்பிடல் அட்மினிடம்

“சாரி போர் தி ட்ரபுள் சர். பட் எனி டைம் எங்களுக்கு எந்த விஷயமும் தெரியணும் னா இங்கே வந்துப் போவோம். அதுக்கு நீங்க ஒத்துழைப்புக் கொடுக்கணும்” என்றார்.
அட்மினும் “சூர் சர். “ எனவும், அபர்ணாவைப் பார்த்து “லெட்ஸ் கோ “ என்றார் அஷோக் வர்மா.

அவரோடு கிளம்பியவள் நேராக மீட்டிங் செல்ல, அங்கே இருந்த அதிகாரிகள் ஆளுக்கு ஒன்றாகப் பேசிக் கொண்டு இருந்தனர். ஒரு சிலர் கேஸ் பற்றி காரசாரமாகப் பேசினாலும், மற்ற ஆபிசர்ஸ் எல்லோருமே இப்படித் தொடர் கொலைகள் நடந்தால் நாமளும் என்ன பண்ண முடியும் என்பதுப் போல தான் பேசினர்.

அதனால் வெளியில் மாறன் கேட்டதுப் போல கேஸ் வேறு டிபார்ட்மெண்ட் மாற்றுவதுப் பற்றியெல்லாம் யாரும் கேட்கவில்லை. அந்த விதத்தில் அபர்ணாவிற்கு சிறு நிம்மதி.
பின் இனி என்ன செய்யலாம் என்று கேள்விகள் கேட்க, ஆளுக்கு ஒன்று கூறினாலும் ,
அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட அபர்ணா தன் முறை வரும்போது,

“சர், என்னோட ஒபினியன் என்ன என்றால், கொலைகள் நடக்கும் இடம் பார்த்தால் ஈ. சி. ஆர், ஓ.எம். ஆர் கடற்கரை பகுதிகள் தான். அதிலும் அதிகாலைப் பொழுதில் தான் நடந்து இருக்கு. அதனால் நம்ம பாட்ரோல் டீம்க்கு அந்தப் பகுதி வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்கச் சொல்லுங்க. சந்தேகத்துக்கிடமான எந்த வண்டியும் செக் செய்யச் சொல்லலாம். அத்தோட நேவி பாட்ரோல் கொஞ்ச நாளைக்கு கடற்கரை ஓரங்களில் ரவுண்ட் ஆப் பண்ணக் கேட்டுக்கலாம். இது இனிமேல் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க என்னோட யோசனை. அதற்குள் குற்றவாளியைப் பிடிக்க என்னாலன முழு முயற்சியும் எடுக்கறேன். இந்தக் கேஸ் என் வேலைக்கு விடப்பட்ட சவாலாப் பாரக்கறேன். அதிகப் பட்சம் ஒரு வாரத்திற்குள் கேஸ் முடிவுக்குக் கொண்டு வரேன்” என்று அடித்துப் பேசவும், எல்லோருமே அவளைக் கைத் தட்டி உற்சாகம் செய்தனர்.

அந்த உற்சாகத்தோடே வெளியில் காத்து இருந்த பத்திரிகைத் துறையினரின் கேள்விகளுக்குப் பதில் சொன்ன அபர்ணா, அஷோக் இருவரும் பேட்டியை முடித்துக் கொண்டுப் புறப்பட்டனர்.

தனிதனியாக இருவரும் அஷோக் வர்மா வீட்டிற்கு செல்ல, அவருக்கு முன்னே அங்கே சஞ்சய் , புவனா இருவரும் காத்து இருந்தனர்.

இவர்கள் உள்ளே நுழையவும் பின்னோடு மாறன் வர , அஷோக் வர்மா
“என்னடா உன் மனசில் நினைச்சுட்டு இருக்க? நம்ம அபிம்மாக் கிட்டே வாய்க்கு வந்ததைக் கேட்டுட்டு இருக்க? மனசில் அர்ணாப் கோஸ்வாமின்னு நினைப்போ?” என்று அவனை அடிக்கப் போக, புவனா தான்

“அண்ணா, என்ன இது வளர்ந்தப் பிள்ளையைப் போய் ?” என்று தடுத்து நிறுத்தினார்.

அதற்குள் சஞ்சய் “மச்சான், என்ன இது? அவன் வேலை அவன் செய்யறான் . இதப் பெரிசா எடுத்துக்கிட்டு ?” என்று அவரும் கூற,

“இல்லை மாப்பிள்ளை. இவனுக்கு ரொம்பத் தான் திமிரு கூடிருச்சு. அத்தனை பேர் எதிரில் நம்ம அபியைக் கேட்கறான். குழந்தைக் கண்ணில் தண்ணி வந்துருச்சு” என்றார்.

அதைக் கேட்டவுடன் மாறனுக்கும் ஏதோப் போல ஆக அவளின் அருகில் வந்து “சாரி அபி. கொஞ்சம் ஓவராப் பேசிட்டேன். எனக்கும் இப்படி அடுத்து அடுத்து நடக்கிற கொலைகள் ஒரு வித பயத்தைக் கொடுக்குது. வரும் காலத்தில் நீ, நான், பெரியப்பா, மாமா நம் நால்வரின் உறவு முறை தெரியும் போது நம் வேலையை நாமே அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டோம்ன்னு யாரும் சொல்லக் கூடாது. அதனால தான் அப்படிக் கேட்டேன். அத்தோட உன்னால் முடியாதுன்னு சொன்னாள் வீம்புக்கு அதைச் செய்வாய் என்று தெரியும். அதனால் தான் உன்னைத் தூண்டும் விதமா பேசினேன்” எனக் கூற. அபர்ணா அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

அதில் தெரிந்த உண்மையான வருத்தத்தில் , “இதை விட அதிகமானக் கேள்விகள் எல்லாம் கேட்டு இருக்காங்க. நீ இப்படிக் கேட்டது தான் என்னால் தாங்க முடியலை மாறா. ஆனால் நீ சொன்னதுப் போல இது எனக்கு ஒரு சவாலான கேஸ்சா இப்போ மாறிடுச்சு. கண்டிப்பா இன்னும் ஒரு வாரத்திற்குள் இதை முடிவுக்குக் கொண்டு வந்துருவேன்” என அபர்ணா கூறினாள்.

“எஸ் தட்ஸ் தி ஸ்பிரிட்” என்று தம்ஸ் ஆப் மாறன் கொடுக்க, அபர்ணாவோ

“அதுக்காக உனக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையைத் தராம விட மாட்டேன்” என்றவள் அவன் அருகில் வர அவனோ வீட்டைச் சுற்றி ஓடினான். இருவர் சிரிப்பும் கலகல என்று கேட்க, கேட்டு இருந்த மூவருக்கும் நிம்மதி வந்தது.

சற்று நேரத்தில் இருவரும் அஷோக் அருகில் வந்து அமர ,

“மாறா , என்னை மன்னிச்சுடு டா. அபர்ணா கண்ணில் கண்ணீர் போல இருக்கவும் என்னால் தாங்க முடியலை. எனக்கு உங்க ரெண்டு பேரை விட்டா யாரு இருக்கா ? நீ அவளுடைய பலமா இருக்கணும். உன்னால் அவள் பலவீனம் ஆகக் கூடாது. அதுதான் எனக்கு அத்தனைக் கோபம் வந்துருச்சு. சாரி டா கண்ணா” என அவனிடத்தில் மன்னிப்புக் கேட்க,

“மிஸ்டர் கிழவன் உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னால் கோபம் வருது. போய் பீபி செக் பண்ணுங்க “ என மாறன் கேலி செய்தான்.

அப்போது சஞ்சய் தன் இருப்பைக் காட்ட லேசாக செரும, ஐயோ என்றபடி மாமனைக் கண்டு அசடு வழிந்தான் மாறன். அப்போதும் அடங்காமல் தொடர்ந்து அபர்ணா தன் மாமா மீட்டிங்கில் பேசியதை வைத்துக் கேலி செய்துக் கொண்டு இருக்க, சஞ்சய் மனதில் ஊரே எனக்கு அடங்கினாலும், என் பொண்ணு அடங்காறாளா பார் என்று எண்ணினார்.
அவரின் மைண்ட் வாய்ஸ் கேட்ச் செய்த மாறன் “சேம் டூ யூ மாமா” என்றான்.

“என்னடா சொல்ற?” என்று அவர் கேட்க , ஒன்றுமில்லை என்று விட்டு, அஷோக்கைக் கேள்விக் கேட்டப் பின் ரிப்போர்ட்டர்ஸ் அவனை ஏற்றி விட்டத்தையும், தன் மைண்ட் வாய்ஸ்சும் கூற, எல்லோரும் சிரித்தனர்.

சற்று நேரத்தில் எல்லோரும் வீட்டிற்கு கிளம்ப, அபர்ணா அலுவலகம் செல்வதாகக் கூறினாள்.

அவளை யோசனையோடுப் பார்க்க, அஷோக் இப்போ என்ன செய்யப் போறே என்று வினவினார்.

“மாமா அந்த மூணு கொலைகள் நடந்த போது உள்ள டிராபிக் சிக்னல் எல்லாம் செக் பண்ணப் போறேன். இங்கே நம்ம லேப்டாப்பில் உள்ள ஸ்கிரீன் எல்லாம் வேலைக்கு ஆகாது. சைபர் க்ரைம் டிபார்ட்மெண்ட் போயிட்டு மெயின் ஸ்கிரீன்லே போட்டுப் பாரக்கறேன். அதில் ஏதாவது க்ளூ இருக்கான்னு தேடறேன். மூணு கொலைகள் நடந்த நேரங்கள் ஒண்ணா இருக்கிறதால் ஏதோ ஒரு லிங்க் கிடைக்கும்ன்னு தோணுது” என அபர்ணா கூறினாள்.

முதலில் மறுக்க நினைத்த மற்றவர்கள் அவளின் ப்ரெஸ்டிஜ் இதில் அடங்கி இருக்கிறது என்று உணர்ந்தவர்களாக, ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுறுத்தினர்.

அப்போது மாறனுக்குப் ஃபோன் வர, எடுத்துப் பேசியவன் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
பின் அபர்ணாவிடம் “அபி , நேற்றைக்கு மாணிக்கவேல் எக்ஸ்போர்ட் கம்பெனி ஷிப் கண்டெய்னர் தூத்துக்குடி வந்துருக்காம் . அதை இன்னிக்கு இங்கே எடுத்துட்டு வர வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. இது மாணிக்கவேல் இறப்பதற்கு முன்னாடி ஆர்டர் போட்ட கண்டெய்னர். அதற்கு பேமண்ட் எல்லாம் முடிந்து விட்டது. எப்போதும் ஒரு நாள் வித்தியாசத்தில் கண்டெய்னர் எடுப்பது வழக்கம். சோ இன்னிக்கு அந்தக் கண்டெய்னரில் என்ன இருக்கு என்றுத் தெரிந்துக் கொண்டால் அநேகமாக கேஸ் முடிந்து விடும். ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தான் தெரியவில்லை. “ என்றான்.

“கோஸ்டால் போலீஸ்க்குத் தகவல் தெரிவித்து விடலாமா? “

“வேண்டாம் அபி. இது பில் வைத்து நடக்கும் டீல் தான். கோஸ்டால் போலீஸ் கண்டெய்னர் சீஸ் செய்துதான் சோதனை செய்ய முடியும். அதற்கு நாளும் ஆகும். முன்னாடியே ஆர்டர் வாங்கணும். அதை விட அந்த ஷிப் கண்டெய்னர் கரையில் இருந்து எங்கே எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்று பார்க்கலாம்” என்றார் அஷோக்.

அபர்ணா இப்போ எதைப் பார்ப்பது என்று யோசிக்க, மாறன் தான் ஷிப் கண்டெய்னர் பார்த்துக் கொள்வதாகக் கூற, சரி என்று தன் வேலையைப் பார்க்கச் சென்றாள் அபர்ணா.
அபர்ணா அங்கிருந்த சைபர் க்ரைம் ஆபிசர் உதவியுடன் மெயின் ஸ்க்ரீனில் மூன்று நாட்கள் கொலை நடந்த ஏரியாவில் உள்ள டிராஃபிக் சிக்னலை உற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தாள்.

கொலை நடந்த நேரத்தில் இருந்து கால் மணி நேரம் கழித்து மூன்று சிக்னலிலும் ஒரு கார் மட்டுமே க்ராஸ் ஆகியிருந்தது. ஆனால் மூன்றுமே வேறு வேறு கார். அதன் நிறம், நம்பர் பிளேட் எல்லாமே வேறாக இருந்தது.

ஆனால் ஒரே மாதிரியான அந்தக் கால் மணி நேர வித்தியாசம் அபர்ணாவை யோசிக்க
வைத்தது,

மூன்று நாட்களும் வேறு வேறு வண்டிகள் அந்த நேரத்தில் க்ராஸ் செய்து இருந்தால் அதிகம் யோசித்து இருக்க மாட்டாள். கார் மட்டுமே க்ராஸ் ஆகியிருக்க அது எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அப்போது அங்கிருந்த அசிஸ்டண்ட்

“மேடம் , மூணு ரிஜிஸ்டிரேசன் , கார் நம்பர், கலர் எல்லாமே வேறே வேறே என்றாலும், மூணு காருக்கும் ஒரே அக்கவுண்ட்டில் இருந்து பணம் ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கு” என ,

“அப்போ ஒரே ஆள் தான் மூணு காரும் வாங்கிருக்கணும் அப்படித்தானே” என்றாள்.

“எஸ் மேடம். அதே மாதிரி மூணுமே செகண்ட் ஹேண்ட் கார் தான். மூணு கார் ஓனர் ஆர். சி. புக் இன்னும் மாத்தமா வச்சுருக்காங்க. “

“சூப்பர். அப்போ அக்கவுண்ட் யார் பேரில் இருக்கு ?”

“யாரோ கருணாகரன்னு இருக்கு மேடம்”

“ரைட். அவர் யாருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்கார்ன்னு பாருங்க”

“மேடம் மூணு செகண்ட் சேல்ஸ் பார்ட்டி தான் “

“குட். அவங்க மூணு பேர் அட்ரஸ், ஃபோன் நம்பர் , அந்த கருணாகரன் அட்ரஸ் எல்லாம் ஒரு பேப்பரில் பிரிண்ட் அவுட் கொடுங்க” என்றாள் அபர்ணா.

அந்தப் பேப்பர் வருவதற்குள் அந்த அசிஸ்டண்ட் “மேடம், உங்கக்கிட்டே ஒண்ணு சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனால் உங்களை இப்போ தான் பார்க்க முடிஞ்சது. “ எனவும்

“சொல்லுங்க “ என்றாள்.

“மேடம் அன்னிக்கு அந்த மொபைல் ஹேக் ஆச்சு இல்லையா? அது யாருன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு சொன்னோமே ?” என்று வினவ,

“எஸ். அதில் என்ன? “ என்று கேட்டாள் அபர்ணா.

“மேடம் அது சாட்டிலைட் வழியா ஹேக் செய்து இருக்காங்க. அது யார் ஐ. பி. அட்ரஸ் தெரியாட்டாலும், எங்கேருந்து ஹேக் ஆகிருக்குன்னு லொகேஷன் கண்டுப் பிடிகசித்தோம் மேடம் “ என்று கூறினாள்.
“எங்கேருந்து? “ என்று பரபரப்புடன் வினவ,

“சென்னைலர்ந்து தான். நன்மங்கலம் ஃபாரஸ்ட் கிட்டேருந்து தான் ஹேக் ஆபரேட்
பண்ணிருக்காங்க” எனவும்

“ஓ. ஆனால் இப்போ எத்தனை பேரை அலர்ட் செய்யறது . அல்ரெடி சிட்டி போலீஸ் ஃபுல் அலர்ட். கோஸ்டால் போலீஸ்க்கும் சொல்லியாச்சு. இப்போ ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் வேறே பேசனுமா? எப்பா கொலைக்காரா அவளோ பெரிய அப்பட்டக்காரா நீ? இதோ கிட்டே வந்துட்டேன். “ என்றவள், அந்தப் பெண்ணிற்கு நன்றி கூறிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள் .

அப்போது வண்டலூர் ஜூவின் பின்புறம் கேளம்பாக்கம் அருகில் இருந்த ஏரிக்கரையின் அருகில் கேரவன் ஒன்றில் வர்மா, கருணா இருவரும் அமர்ந்து இருந்தனர்.
அப்போது அபர்ணாவின் பேட்டியை மொபைல் போனில் பார்த்துக் கொண்டிருந்த வர்மாவிடம்

“சர், நெக்ஸ்ட் நாள் குறிச்சாச்சா ? “என்று வினவினான் கருணா.

“எஸ், இன்னும் ரெண்டு நாளில்” என்று மொபைல் பார்த்தபடியேக் கூற,

அப்படின்னா நாளைக்கு கார் பர்சேஸ் பண்ணிடவா “ என்று கேட்டான் கருணா.

“எஸ் . பண்ணிடு. உன்னோட அக்கவுண்ட்லே பணம் இருக்கா? “

“எஸ் சர். நீங்க மொத்தமா இருபத்தி ஐந்து லட்சம் போட்டீங்க. மூணு காரும் செகண்ட் ஹேண்ட் என்பதால் பத்து லட்சத்திற்குள் தான் வந்தது. மீதி இருக்கு. அதிலேயே நாளைக்கு பர்சேஸ் பண்ணிடறேன்” என்றான்.

“ஓகே” என்றவன் திடுக்கிட்டவனாக “அந்த மூன்று காருக்கும் ஒரே அக்கவுண்ட்லர்ந்தா பணம் கொடுத்த ?” என்று வினவ,

“ஆமாம். “ என்று கருணா கூறினான்.

“ஓ. காட். “ என்று தலையில் அடித்துக் கொண்ட வர்மா , “நாம் நாளைக்குள் அந்த நாலாவது மீனையும் சுட்டு விட வேண்டும்” என்றான்.

“நாளை கார் பர்சேஸ் செய்ய வேண்டாம். நம் காரில் போய் விடலாம் “ என்ற வர்மா ,

“அண்ட் திஸ் கேம் வில் எண்ட் சூன்” என்றான்.

-தொடரும் -
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top