அத்தியாயம்2 - இந்திரவிழா

#1
இந்திரவிழா
manimegalai.jpg

அன்றைய இரவு, நீண்ட நேரம் கவினிடம் பேசிக்கொண்டிருந்தவள் அவன் கழுத்தை வளைத்தபடி உறங்கியும் விட்டிருந்தாள். என்ன தான் துணிச்சலாக தன்னை காட்டிகொண்டாலுமே, தாத்தாவின் காலத்திற்கு பிறகான தன் வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க விரும்பமாட்டான் கவின். அவன் விரும்பவில்லை என்றாலும், நிதர்சனத்தை உணர்ந்திருந்தான். தாத்தாவும் இல்லாது போனால், அவனுக்கென்று ஒரு வாழ்க்கையே இல்லை என்ற உண்மை பாரமாக அழுத்தும். வெறுமையும், மிதமான பயஉணர்வும் தோண்டிப்பார்க்க முடியாத, அவன் ஆழ்மனதின் அந்தரங்கத்தில் புதைந்தே கிடக்கும்.

மாயா!! அவனுக்காகவே பிறந்து, அவனிடம் வந்து சேர்ந்திருக்கும் தேவதைப்பெண் என்று தான் சொல்ல வேண்டும். கேள்வியாக தொக்கி நின்ற அவன் வாழ்க்கைக்கு, விடையாக வந்து அர்த்தம் கொடுத்தவள்.

‘லவ் யூ அம்மு!!’ அவளிதழ்களை மென்மையாக தீண்டியவன், அரணாக அவளை ஒரு கையால் வளைத்துக்கொண்டான்.

உறக்கம் வராது போக, மாயாவின் மொபைலை எடுத்து துருவிக்கொண்டிருந்தான். குமரித்தீவு என்ற பெயரில் ஒரு போல்டர் விரிய, ‘என்ன தான் எழுதி வச்சிருக்கான்னு பார்க்கலாம்.’ என்ற ஆர்வத்தோடு பைலை திறக்க, ‘இந்திரவிழா’ என்கிற தலைப்பில், விரிந்திருந்த நீளமான எழுத்துக்களை சுவாரஸ்யமாக பார்வையிட தொடங்கினான், கவின்.

**********************************************************************************************

மூதூர் என்று மக்களால் சிறப்பிக்கப்பட்டதும், வணிகத்திற்கு பெயர் போனதுமான, புகார் நகரமே கண்களைகூசும் விதமாக விழாக்கோலம் பூண்டு ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது அன்று. புகாரைக்காணும் ஆவலில், கதிரவனும் கூட வழக்கத்திற்கு முன்கூட்டியே அடர்ந்தமரக்கிளைகளை ஊடுருவிக் கிழித்தபடி நகருக்குள் விரைந்துகொண்டிருந்தான். புள்ளினங்களும் இன்னிசைபாடி புகார் மக்களின், இந்திரவிழா கொண்டாட்டத்தில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டது. சித்திரை திங்களில், சித்திரை நட்சத்திரத்தில் தொடங்கி 28 நாட்கள் இந்திரனுக்காக எடுக்கப்படும் விழா. விழா முடிவில் நகரமாந்தர்கள் கடலில் நீராடி இன்பமாக பொழுதுபோக்குவர்.

“வச்சிரக்கோட்டத்து மணம்கெழு முரசம்

கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி”

கைகளில் வாளேந்திய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் யானைப்படைகள் புடைசூழ, மூத்த குடியில் பிறந்த ஒருவன், வச்சிரகோட்டத்தில் இருந்த விழா முரசை அலங்கரிக்கப்பட்ட வலிய யானையின் மீதேற்றிவிட்டு, தானும் அமர்ந்து கொண்டான்.

“திருமகள் உறைகின்ற தொன்னகர் வாழ்க!! மழைவளம் சிறக்க!! மன்னனும் ஓங்குக!!” என்று கணீர் குரலில், குறுந்தடியால் முரசைக்கொட்டி அவன் எழுப்பிய வாழ்த்தொலியோடு, மக்களின் ஜெயகோஷமும் சேர்ந்து விண்ணைப்பிளந்தது.

“வீதியெங்கும் தோரணங்களை நாட்டுங்கள்!!”

“பூரண குடங்களும், பொற்பாலிகைகளும், பாவைவிளக்குகளையும் ஒருங்கே பரப்புங்கள்!!”

“ஊர்மன்றங்களில் பழையமணலை மாற்றி புது மணலை பரப்புங்கள்!!”

“தங்கத்தூண்களிலே முத்துமாலைகளை தொங்கவிடுங்கள்!!”

“பாக்குமரங்களையும், வாழைமரங்களையும், கரும்பையும் நட்டு வையுங்கள்!!”

இவ்வாறாக இடைவிடாது முரசை கொட்டி கணீர் ஒலியில், அறிவிப்பு செய்தான். ஐராவதம் கோட்டத்தில் விழாவின் தொடக்கமும், முடிவும் அறிவிக்கப்பட்டது.
 
Last edited:
#2
நகரே கோலாகலமாக கொண்டாடாத்துவங்கியிருந்த போதும், போர் முனையிலிருந்து, தங்கள் நேசத்துக்குரிய, இளவரசர் எப்பொழுது நாடு திரும்புவார் என்பதை அறிந்து கொள்ள நாளுக்கு நாள் மக்களின் ஆர்வமும், ஆவலும் பெருகிக்கொண்டே இருந்தது.

இந்திரவிழாவும் தொடங்கிவிட்ட இந்த பொழுதிலும், நகர மக்கள் இளவரசர் நாடு திரும்பாததை எண்ணி தவிப்புற தொடங்கியிருந்தனர். சலசலப்பான அவர்கள் பேச்சுகளில் அதிருப்தி வெளிப்பட துவங்கியிருந்தது. தேர்வீதிகளிலும், வணிகவீதிகளிலும் மக்கள் நெருக்கியடித்து, ஊர்ந்து செல்லும் அளவிற்கு கூட்டம் பிதுங்கிக்கொண்டிருந்தது.

நாளங்காடி பூதத்திற்கு பொங்கலையும், பூக்களையும் சொரிந்து பெண்கள் தெய்வமேறி குரவைக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.

“நீண்ட நாட்களாக இளவரசரைப்பற்றிய செய்தி எதுவும் கிட்டவில்லையே? என்னவாகியிருக்கும்?” வணிக வீதியில் அருகில் வந்துகொண்டிருந்தவனிடம் ரகசியம் பேசினான் ஒருவன்.

“கவிரநாட்டு அரசன், நம் இளவரசரின் படை முன்னே தாக்கு பிடிக்க முடியாமல், புறமுதுகிட்டு விட்டதாக கேள்வி....” பெருமிதத்தோடு கூறினான் மற்றவன்.

“பிறகும் ஏன் இளவரசர் நாடு திரும்ப தாமதமாகிறது?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன், “இளவரசருக்கு முடிசூட்டும் விழாவும் தாமதமாகிறதே என்னவாக இருக்கும்?” என்றான் சந்தேகமாக.

“நானும் உன்னைப்போலத்தானே, அரசாங்க விஷயங்கள் எனக்கு எப்படித்தெரியும்?” என்றான் மற்றவன்.

புகார் மக்களின் வணக்கத்துக்கும், நேசத்துக்கும் உரிய இளவரசனான ‘ஆதன் அறனாளன்’ கவிர நாட்டின் போர் பாசறையில் தன் படைவீரர்களோடு மும்முரமாக ஆலோசனையில் இருந்தான்.

வஜ்ரதேகம், பார்த்த மாத்திரத்திலேயே எதிராளியை எடை போட்டு விடும் கழுகை விட கூரிய விழிகள், மருந்துக்கும் சிரிப்பை சிந்தாத கோடென இருந்த வலிய இதழ்கள், குத்து வாளை நிலத்தில் ஊன்றியிருந்த இரும்புக்கரம், கோபத்திலும், ஆத்திரத்திலும் கூட தன் வசீகரத்தை துளியும் இழக்காத கலையான முகத்துடன், உயர்ந்த ஆசனத்தில் கண்களை நிறைக்கும்படி கம்பீரத்தோற்றத்துடன், புலிக்கூட்டதிற்கு நடுவிலிருக்கும் அரிமாவாக அமர்ந்திருந்தவனின், கண்களில் கோப ஜ்வாலை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

சோழப்படையோடு நடந்த போரில், பதினெட்டு நாழிகைக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது புறமுதுகிட்டு ஓடிய, கவிரநாட்டு அரசன், தன் கோட்டைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டுவிட்டான். கோட்டைக்குள் கவிர நாட்டு மக்களும் சிறைபட்டு இருக்கிறார்கள்.

செய்தி அறிந்ததும், புறமுதுகிட்டு ஓடியவனை, போர் அறம் கருதி, தன் வாளுக்கு இரையாக, கொன்றுபுதைக்காமல் விட்டது எத்தனை பெரிய பிழை என்று கொதித்து வெடித்துக்கொண்டிருந்தான் சோழ தேசத்து இளவரசன் ‘ஆதன்அறனாளன்’.

இளவரசரின் பாவனையே சுற்றி இருந்தவர்களை நடுக்கம் கொள்ள செய்ய, காற்றின் ஓசையைத் தவிர வேறேதும் கேட்காத அந்த இடத்தில், இமைக்க கூட விரும்பாது, மன்னரின் அடுத்த கட்டளைக்காக அவர் முகத்தை தீவிரத்துடன் நோக்கிகொண்டிருந்தனர் படை வீரர்கள்.

வணக்கம் மக்கள்ஸ்!!
உங்கள் ஆர்வத்தை பார்க்கும்போது தினம் ஒரு எபி போஸ்ட் செய்யலாம் என்று தோன்றுகிறது. நம் இளவரசர் அற்புதமான கோபத்தில் இருப்பதால், அவரை அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம். இந்த பதிவிற்கான உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..
~கல்பனா
 
Last edited:
#5
நகரே கோலாகலமாக கொண்டாடாத்துவங்கியிருந்த போதும், போர் முனையிலிருந்து, தங்கள் நேசத்துக்குரிய, இளவரசர் எப்பொழுது நாடு திரும்புவார் என்பதை அறிந்து கொள்ள நாளுக்கு நாள் மக்களின் ஆர்வமும், ஆவலும் பெருகிக்கொண்டே இருந்தது.

இந்திரவிழாவும் தொடங்கிவிட்ட இந்த பொழுதிலும், நகர மக்கள் இளவரசர் நாடு திரும்பாததை எண்ணி தவிப்புற தொடங்கியிருந்தனர். சலசலப்பான அவர்கள் பேச்சுகளில் அதிருப்தி வெளிப்பட துவங்கியிருந்தது. தேர்வீதிகளிலும், வணிகவீதிகளிலும் மக்கள் நெருக்கியடித்து, ஊர்ந்து செல்லும் அளவிற்கு கூட்டம் பிதுங்கிக்கொண்டிருந்தது.

நாளங்காடி பூதத்திற்கு பொங்கலையும், பூக்களையும் சொரிந்து பெண்கள் தெய்வமேறி குரவைக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.

“நீண்ட நாட்களாக இளவரசரைப்பற்றிய செய்தி எதுவும் கிட்டவில்லையே? என்னவாகியிருக்கும்?” வணிக வீதியில் அருகில் வந்துகொண்டிருந்தவனிடம் ரகசியம் பேசினான் ஒருவன்.

“கடம்பநாட்டு அரசன், நம் இளவரசரின் படை முன்னே தாக்கு பிடிக்க முடியாமல், புறமுதுகிட்டு விட்டதாக கேள்வி....” பெருமிதத்தோடு கூறினான் மற்றவன்.

“பிறகும் ஏன் இளவரசர் நாடு திரும்ப தாமதமாகிறது?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன், “இளவரசருக்கு முடிசூட்டும் விழாவும் தாமதமாகிறதே என்னவாக இருக்கும்?” என்றான் சந்தேகமாக.

“நானும் உன்னைப்போலத்தானே, அரசாங்க விஷயங்கள் எனக்கு எப்படித்தெரியும்?” என்றான் மற்றவன்.

புகார் மக்களின் வணக்கத்துக்கும், நேசத்துக்கும் உரிய இளவரசனான ‘ஆதன் அறனாளன்’ கடம்ப நாட்டின் போர் பாசறையில் தன் படைவீரர்களோடு மும்முரமாக ஆலோசனையில் இருந்தான்.

வஜ்ரதேகம், பார்த்த மாத்திரத்திலேயே எதிராளியை எடை போட்டு விடும் கழுகை விட கூரிய விழிகள், மருந்துக்கும் சிரிப்பை சிந்தாத கோடென இருந்த வலிய இதழ்கள், குத்து வாளை நிலத்தில் ஊன்றியிருந்த இரும்புக்கரம், கோபத்திலும், ஆத்திரத்திலும் கூட தன் வசீகரத்தை துளியும் இழக்காத கலையான முகத்துடன், உயர்ந்த ஆசனத்தில் கண்களை நிறைக்கும்படி கம்பீரத்தோற்றத்துடன், புலிக்கூட்டதிற்கு நடுவிலிருக்கும் அரிமாவாக அமர்ந்திருந்தவனின், கண்களில் கோப ஜ்வாலை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

சோழப்படையோடு நடந்த போரில், பதினெட்டு நாழிகைக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது புறமுதுகிட்டு ஓடிய, கடம்பநாட்டு அரசன், தன் கோட்டைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டுவிட்டான். கோட்டைக்குள் கடம்ப நாட்டு மக்களும் சிறைபட்டு இருக்கிறார்கள்.

செய்தி அறிந்ததும், புறமுதுகிட்டு ஓடியவனை, போர் அறம் கருதி, தன் வாளுக்கு இரையாக, கொன்றுபுதைக்காமல் விட்டது எத்தனை பெரிய பிழை என்று கொதித்து வெடித்துக்கொண்டிருந்தான் சோழ தேசத்து இளவரசன் ‘ஆதன்அறனாளன்’.

இளவரசரின் பாவனையே சுற்றி இருந்தவர்களை நடுக்கம் கொள்ள செய்ய, காற்றின் ஓசையைத் தவிர வேறேதும் கேட்காத அந்த இடத்தில், இமைக்க கூட விரும்பாது, மன்னரின் அடுத்த கட்டளைக்காக அவர் முகத்தை தீவிரத்துடன் நோக்கிகொண்டிருந்தனர் படை வீரர்கள்.

வணக்கம் மக்கள்ஸ்!!
உங்கள் ஆர்வத்தை பார்க்கும்போது தினம் ஒரு எபி போஸ்ட் செய்யலாம் என்று தோன்றுகிறது. நம் இளவரசர் அற்புதமான கோபத்தில் இருப்பதால், அவரை அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம். இந்த பதிவிற்கான உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..
~கல்பனா
நல்ல ஐடியா ji.. நீங்க ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு லிமிட் லாம் வச்சுக்க வேண்டாம்.. ஒரு நாளைக்கு நாலு ud போட்டாலும் நாங்க படிப்போம்..
 
Latest updates

Latest Episodes

Top