• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

"அனலில் மூழ்கிய புனல்!"-டீஸர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 35

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
14
Reaction score
52
"அனலில் மூழ்கிய புனல்!"- டீசர்
 




Anamika 35

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
14
Reaction score
52
வணக்கம் பிரண்ட்ஸ்,


"அனலில் மூழ்கிய புனல்!"டீஸர் போட்டு இருக்கேன். படித்து விட்டு உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


டீஸர்:



துளசி பிரம்மை பிடித்தார் போன்று காரில் அமர்ந்திருப்பதை திருப்தியுடன் பார்த்த ஸ்ரீதர் அவள் கவனத்தை கலைப்பது போல் அவள் முன்பு சொடக்கிட்டான்.


அந்த சொடக்கு சத்தத்தில் அவள் சிந்தனை கலைய அவனை நிமிர்ந்து பார்க்க,"வெல்கம் டூ ஹெல்"என்றவன் அவள் கைகளைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்து செல்ல,அவன் கரங்களில் தன் கரங்கள் இருப்பதைக் கண்டு அருவருப்பாக உணர்ந்த துளசி அவன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக் கொள்வதற்காக போராட, அவள் முயற்சியை புரிந்து கொண்ட ஸ்ரீதர் அவள் கைகளைப் வலிக்கும்படி வேண்டும் என்று அழுத்தமாக பிடிக்க, அதில் வலி உயிர் போனாலும் பற்களை கடித்து வலியை பொறுத்துக் கொண்ட துளசி ஒரே உதரில் அவன் கைகளை உதறி தள்ளியவள் "நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னை என் கூடப்பிறந்த அண்ணன் மாதிரி நெனச்சுகிட்டு இருந்தேன்.. எனக்கு இப்படி ஒரு அநியாயத்தை இப்படி செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு? நீ எல்லாம் மனுஷனே கிடையாது.."என்றவளை அனல் தெறிக்க பார்த்த ஸ்ரீதர்,"ஆமாண்டி நான் மனுசனே கிடையாது மிருகம்தான் போதுமா! என்ன செய்யப் போற? உன்னால என்ன செய்ய முடியும்.."என்றவன் குரலில் ஏகத்துக்கும் நக்கலிருக்க, துளசி அவன் மீதிருந்த கோபத்தில் அவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கோபம் அதிகமாக, அவளுக்கு உதவி செய்வதுபோல் பக்கத்தில் இருந்தது ஒரு பூ ஜாடி.


அந்த பூ ஜாடியை பார்த்தவள் சற்றும் யோசிக்காமல் அதை எடுத்து ஸ்ரீதர் தலையை நோக்கி வீச,அவள் இப்படி திடீரென்று செய்வாள் என்று எதிர்பார்க்காத ஸ்ரீதர் பூ ஜாடி தன் தலை மீது படாமல் இருக்க வேண்டும் என்று திரும்புவதற்குள் பூ ஜாடி அவன் தலையை நன்றாக பதம் பார்த்தது.


ஜாடி அவன் தலையில் மோதிய வேகத்தில் தலை முழுவதும் ரத்தம் வழிய, ஒற்றைக் கையால் தலையில் வைத்து பார்த்தவன் கை முழுவதும் ரத்தமாக இருப்பதை கண்டு, துளசியை கொல்லும் வெறி அவன் மனதில் ஆழமாக தோன்ற, ஆனால் அதற்கு இது தகுந்த நேரம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டவன் அவளை முறைத்து பார்த்துவிட்டு அவர்கள் வீட்டு மருத்துவரிடம் போன் செய்து சுருக்கமாக விஷயத்தைக் கூறி வீட்டிற்கு வரும்படி சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் அந்த மருத்துவர் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.


அவன் போனிலேயே தகவல் சொல்லி இருக்க தேவையான பொருட்களையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்தவர் சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீதரிடம் செல்ல, அவன் தலையில் ரத்தம் வராமல் இருப்பதற்காக வெள்ளை நிறத் துணியை கட்டியிருக்க, அதை பிரித்து அவன் தலையை பரிசோதித்தவர் "சார் உங்க ரூமுக்கு போய் செக் பண்ணலாமா?நீங்க பெட்ல படுத்துகிட்டாதான் எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.."எனவும் அவருக்கு பதில் சொல்லாமல் எழுந்து தன் அறையை நோக்கி சென்ற ஸ்ரீதர் பார்வை முழுவதும் ஒரு மணி நேரமாக அதே இடத்தில் நின்று கொண்டிருந்த துளசி மீது மட்டும் தான்.


அவன் பார்வையை சற்றும் சளைக்காமல் பார்த்த துளசி கண்களில் அப்பட்டமாக அவன் மீதான அருவருப்பு தெரிந்தது.


அவள் கண்களில் தெரிந்த அருவருப்பை கண்டு ஸ்ரீதர் கோபம் இன்னும் உயர,அவளை எரிச்சலுடன் பார்த்து விட்டு தன் அறைக்கு செல்ல அவனை பரிசோதித்த மருத்துவர் "சார் உங்க தலையில் ரொம்ப பலமா காயப்பட்டு இருக்கு.. கண்டிப்பா இதுக்கு ஸ்டிச் போட்டு தான் ஆகணும்.. கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க.."என்றவர் அவன் தலையில் தையல் போட்டு விட்டு அதை சுற்றி பேண்டேஜ் சேர்த்து முழுவதுமாக கட்டை போட்டு விட்டு, வலி தெரியாமல் இருப்பதற்காக ஒரு ஊசியையும் போட்டவர் அவனிடம் நன்றாக ஓய்வு எடுக்கும்படி சொல்லிவிட்டு சென்றார்.
******



துளசி ஸ்ரீதர் அறை கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல,கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த ஸ்ரீதர் உள்ளே வந்த துளசி மீது பார்வை முழுவதும் பதித்து இருக்க அந்த பார்வைக்கு மட்டும் உயிர் இருந்தால் துளசி சாம்பலாகி இருப்பாள்.


"எதுக்காக என்ன வர சொன்னிங்க?நீங்க எதுக்கு வர சொன்னாலும் எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை கிடையாது..நீங்க தாலி கட்டிட்டா உங்க கூட சேர்ந்து வாழனும்னு எனக்கு அவசியம் கிடையாது..இது என்னை பொறுத்த வரைக்கும் ஒரு விபத்து தான்.. இந்த தாலி என் கழுத்தில் கிடந்தா எனக்கு தேவையில்லாத பிரச்சினை எல்லாம் வரும்.. இட்ஸ் எனாஃப் நடந்ததெல்லாம் நானும் மறந்துட்டு முன்னேறி போகப்போறேன்..நீங்களும் அதே மாதிரி இதெல்லாம் மறந்துட்டு உங்கள் வாழ்க்கையை பார்த்துக்கங்க..அந்த காலத்து பொண்ணுங்க மாதிரி தாலி கட்டின உடனே உங்க பின்னாடி வந்து உங்களுக்கு சேவகம் செய்து காலம் பூரா உங்க கூட சென்று குப்பை கொட்ட என்னால முடியாது.."என்றவள் சற்றும் தாமதிக்காமல் கழுத்தில் கிடந்த தாலி கயிறை கழட்டுவதற்காக மேலே தூக்க, அவள் கைகளை பதம் பார்த்தது ஸ்ரீதர் கரங்களில் இருந்த பூஜாடி.


அந்தப் பூ ஜாடி அடித்த வேகத்தில் அவள் மணிக்கட்டு நன்றாக வீங்கி போக, கண்களில் கண்ணீர் வழிய அவனை முறைத்து பார்த்தாள்.


அவள் கண்களில் வழியும் கண்ணீரை பார்த்து நன்றாக வாய்விட்டு சிரித்த ஸ்ரீதர் "குட் இப்பதான் நீ பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்க.. இதே மாதிரி தொடர்ந்து அழுது கிட்டே இருக்கனும் ஆல் தி பெஸ்ட்.. நெக்ஸ்ட் என் கிட்ட பேசுறது இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்.. இந்த வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தாலும் சரி உன் கழுத்தில் கிடந்த தாலி உன் கழுத்துலருந்து இறங்கினாலும் சரி நீ பினம் தான்.. உன்னோட உயிருக்கு நீ மட்டும் தான் பொறுப்பு.."என்றவன் அவள் கண்ணீரை கண்ட திருப்தியில், மாத்திரை போட்டு அதுவரை வந்த தூக்கத்தை விரட்டி அடித்தவன் இப்பொழுது நிம்மதியாக துயில் கொள்ள ஆரம்பித்தான்.


அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று துளசி மணம் அவளை பாடாய் படுத்த, அவன் உறங்கும் வரை சிறிது நேரம் காத்திருந்தவள் கையை தடவிக் கொண்டே இன்னும் சிறிது நேரம் வரை அவன் நன்றாக உறங்கட்டும் என்று காத்து கொண்டிருந்தவள் அவன் சீராக மூச்சு விடுவதைக் கண்டு நன்றாக உறங்கி விட்டான் என்பதை அறிந்து கொண்டவள் சற்றும் தாமதிக்காமல் அவன் பக்கத்தில் இருந்த ஜக்கில் உள்ள நீரை அவன் முகத்தில் கவிழ்க்க,உறக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த ஸ்ரீதர் குளிர்ச்சியான நீர் பட்டதும் அடித்து பிடித்து எழுந்து அமர, அவனை பஸ்பமாக்கி விடுவது போல் நின்று கொண்டிருந்த துளசியை கண்டதும் அவன் கோபம் எல்லை தாண்டி செல்ல, பதிலுக்கு அவள் கோபமும் எல்லை தாண்டி சென்றது.

உனக்கு அவ்வளவு திமிராடி?"என்று ஸ்ரீதர் கோபமாக கத்த, அவனை எரித்துவிடுவது போல் பார்த்த துளசி "யாரைப் பார்த்து டி சொல்லுற?நான் என்ன உன் பொண்டாட்டியா வாடி போடின்னு உன் இஷ்டத்துக்கு பேசுற?"என்று கோபமாக கேட்க, ஏற்கனவே அதீத கோபத்திலிருந்த ஸ்ரீதர் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்தவன் கொத்தாக அவள் தலைமுடியை பிடித்து இழுத்து அவள் முகத்தை தனக்கு நேராக கொண்டு வந்தவன் "வாயை அடக்கி பேசு உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி.. நீ எனக்கு பொண்டாட்டியா வாழ்ந்துதான் ஆகனும் அதான் உனக்கு தலை எழுத்து.. இது எல்லாத்துக்கும் காரணம் உன் தோழி அந்த அபிராமி தான் அவளை தான் நீ போய் கேட்கணும்.. அவள் மட்டும் என்னை கல்யாணம் பண்ணியிருந்தா உன்னை மாதிரி ஒரு பஜாரி நான் ஏன் கல்யாணம் பண்ணனும்.. என்ன நான் சொல்றது புரிஞ்சுதா?"என்றவன் அவள் தலைமுடியை பிடித்து ஆட்ட, அவன் தலைமுடியை பிடித்ததும் வலி தாங்க முடியாமல் துளசி கண்கள் கலங்கிவிட்டது.


அப்போதும் சிறிதும் கலங்கிய கண்களை அவனுக்கு காட்டாமல் அவனை முறைத்துப் பார்த்தபடி கண்ணீரை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு கீழே தொங்கிக் கொண்டிருந்த அவன் மற்றொரு கையை ஒரே நொடியில் இரு கைகளால் பிடித்து வாயில் வைத்து நன்றாக கடித்து விட, அவள் பற்கள் அவன் கைகளை கூர்மையாக பதம் பார்க்க அந்த வலியில் அவள் தலையை பிடித்திருந்த கையை விட்டவன் வேதனை தாங்க முடியாமல் கையை உதற, தன் தலையை மெதுவாக பிடித்துவிட்ட துளசி அவன் வேதனையில் அழுவதை குரூரமாக பார்த்தாள்.


"என்னடா சொன்ன? எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உன்கூட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகனுமா? ஏண்டா எருமை மாடு என் அபி மேல எந்த தப்பும் கிடையாது.. அவளே பாவம் யாருனே தெரியாத ஒருத்தன் அவள் கழுத்தில் தாலி கட்டி கூட்டீட்டு போயிட்டான்னு பயத்தில உன்கிட்ட வந்து உதவி கேட்க வந்தா நீ என் கழுத்தில் தாலி கட்டி உன் கூட சேர்ந்து வாழ சொல்லுவியா?உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்ல இப்படி ஈனத் தனமான ஒரு காரியத்தை செஞ்சி உனக்கு குரலை உயர்த்திப் பேச கொஞ்சம் கூட தகுதி கிடையாது.. உன்னை கூட பிறக்காத அண்ணன் மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. நீ எப்படி ஒரு ஈனத்தனமான காரியம் செஞ்சிருக்க.."என்றவள் கோபம் தாள முடியாமல், பக்கத்தில் இருந்த நாற்காலியை தூக்கி அவன் மீது வீச, ஏற்கனவே தலை உடைந்து தற்பொழுது கையும் வீங்கியிருந்த நிலையில் நாற்காலி பறந்து வர அதை கவனிக்காத ஸ்ரீதர், அவள் பேச்சுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் கைகளில் கண்களைப் பதித்து இருந்தவன் மீது நாற்காலி பாய்ந்து வந்து விழுக, அதை எதிர்பார்க்காதவன் அப்படியே தடுமாறி கட்டிலில் விழுந்தான்.


விழுந்த வேகத்தில் ஏற்கனவே தலையில் அடிபட்ட இடத்தில் மீண்டும் ரத்தம் வர, வெறிபிடித்த மிருகம் போன்று எழுந்து நின்றவன் கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்த துளசி கழுத்தை ஒரே பிடியில் தன் கைக்கு கொண்டு வந்தவன் அவளை அப்படியே சுவற்றில் சாய்த்து அவள் கழுத்தை நெரிக்க, எனக்கு எதை நினைதும் கவலை இல்லை என்பது போல் துளசி கண்கள் சொருக,மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாலும் அவனிடம் கண்டு சிறிதும் அஞ்சவில்லை.


அவள் அப்பொழுதும் பயம் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதை பார்த்து அவள் கழுத்திலிருந்து கோபமாக கையை எடுத்த ஸ்ரீதர் "நீ எல்லாம் ஒரு பொண்ணு தானா? எல்லாத்துக்கும் ஆம்பளை மாதிரி இப்படி பயப்படாம நிக்கிற.."என்று கோபமாக கேட்க, அவனை நக்கலாக பார்த்து துளசி "ஏண்டா அதுக்குள்ள கையை எடுத்த?இன்னும் கொஞ்ச நேரம் கையை வச்சி கழுத்தை இறுக்கி பிடிச்சி இருந்தா செத்துப் போயிருப்பேன்.. உன்னை காலம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்ல களி திங்க வச்ச சந்தோஷத்தோட நானும் செத்துப் போயிருப்பேன்.. பலே நீ உசார் தான் போலருக்கு.. என்ன சொன்ன என்ன சொன்ன? ஆம்பளை மாதிரி எதற்கும் பயப்படாமல் நிற்கிறேனா?என் கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டி உன் இஷ்டத்துக்கு கூட்டிட்டு வந்து நீ செய்ய சொல்றதுக்கு எல்லாம் மறுத்தா அதுக்கு பேரு நீ சொன்னதா? ஆமாண்டா அப்ப நான் அப்படிதான் போ.. ஏண்டா இவ கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு தேவையில்லாமல் பிரச்சனையை நாமலே இழுத்துக்கிட்டோம்னு நீ வாழ்க்கை முழுவதும் நினைப்ப? உன்னை நினைக்க வைப்பேன்..என் கழுத்துல கெடக்குற இந்தத் தாலியை நீயே உன் கழுத்தை அறுத்து எறிந்து என்னை இங்கிருந்து போக சொல்ற வரை இங்கிருந்து போகமாட்டேன்.. என்ன கஷ்டப்படுத்தனும்னு தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீ என்னடா என்னை கஷ்டப்படுத்துவது.. உனக்கு கஷ்டம்னா என்னன்னு நான் காட்டுவேன்!"என்றவள் ஒரு பக்கம் தலையில் குருதி வழிய கையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவனை கண்களில் பழி வெறி மின்ன பார்த்தவள் அவனைப் பார்த்து சிறிதும் கருணை கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறியவள் அந்த வீட்டிற்குள் இருக்கும் மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவை தாழ் போட்டு கொண்டாள்.


அன்புடன்
35
 




Simsiya

புதிய முகம்
Joined
Nov 17, 2021
Messages
8
Reaction score
4
Location
Tamil Nadu
இது யாரு புதுசா ரெண்டு பேர் இருக்காங்க
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் துளசி வேற லெவல் 🥰🥰🥰

அடேய் ஶ்ரீதர் உனக்கு வேணும்😏😏😏

எங்க இன்னைக்கு அபி & அனந்து காணோம்🧐🧐🧐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top