• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

"அனலில் மூழ்கிய புனல்!"-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 35

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
14
Reaction score
52
"அனலில் மூழ்கிய புனல்!"-3
 




Anamika 35

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
14
Reaction score
52
அத்தியாயம் 3:


அவன் காலடி சத்தத்தில் அழுகையுடன் திரும்பி அவனை அபிராமி பார்க்க, அனந்தசயனன் அவள்மீது ஒரு உயிரற்ற பொருளை பார்ப்பது போல் ஒரு பார்வையை வீசிவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தவன் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவளின் முன்பு சொடக்கிட்டு ஒற்றை விரலை நீட்டி எழுந்து வருமாறு சொல்லிவிட்டு பால்கனியில் கிடந்த ஊஞ்சலில் சென்று அமர,அவன் அழைத்ததும் மனதில் எங்கும் உற்சாகம் பொங்க அவன் பின்னாலேயே நாய்க்குட்டி போல் வந்த அபிராமி "சொல்லுங்க ஏதாவது என்கிட்ட சொல்லனுமா..? ரொம்ப பசிக்குதா? டிபன் செஞ்சு வெச்சிருக்கேன் சாப்பிடலாமா?"அவனுடன் சேர்ந்து சாப்பிடும் ஆசையில் கேட்க, அவள் சந்தோஷமாக இருப்பதை பார்த்தால் அவன் மனம் தாங்குமா?


பதில் எதுவும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் கால்களைத் தரையில் ஊன்றி ஊஞ்சலை பின்புறமாக நகத்த, அவன் தள்ளிய வேகத்தில் ஊஞ்சல் வேகமாக ஆட அவன் ஊஞ்சலில் ஆடுவதை அமைதியாக பார்த்துக்கொண்டு அபிராமி அங்கேயே நின்று கொண்டிருக்க, அவளையே பார்த்துக்கொண்டு அனந்தசயனன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவன் "இந்நேரத்துக்கு இந்த இடத்தில் ஸ்ரீதர் இருந்திருந்தா இப்படி தானே கேட்டு இருப்ப?"என்றவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் நிதானமாக கேட்க, அவன் கேட்ட கேள்வியில் அவள் இதயம் நின்று துடித்தது.


இதயத்தில் கை வைத்து நிலையில்லாமல் தடுமாறி கீழே விழப்போனவள் அருகிலிருந்த கதவில் சாய்ந்து கொள்ள அவள் நிலைமையைக் கண்டு அப்படி ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை அவன்.


ஒரே ஒரு வார்த்தையில் தன் இதயத்தை குத்தி கிழிதவனை வேதனையுடன் பார்த்தவள் அந்தப் பேச்சை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் கண்கள் காட்டிக் கொடுக்க, அந்த கண்களை ஆழமாக பார்த்த அனந்தசயனன் அவளை மேலும் மேலும் காயப்படுத்துவதில் குறியாக இருந்தான்.


"தென் அவனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு தானே இந்த வீட்டை விட்டு வெளியில போனீங்க மிஸ் அபிராமி..மிஸ் எஸ் தென் யூ மிஸ் நாட் மிஸ்ஸஸ் ஒன்லி மிஸ் உன்னோட பேருக்கு பின்னாடி என்னோட பேர் வருவது கூட எனக்குப் பெரிய அசிங்கம்.. அதை விட இந்த உலகத்தில் பெரிய கேவலம் எனக்கு வேற எதுவுமில்லை.."என்றவனை பார்க்க முடியாமல் அபிராமி திரும்பி நின்று கொள்ள, அவள் திரும்பி நிற்க அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலி மின்னிக் கொண்டிருக்க, அதை ஒரு மாதிரியாக பார்த்தவன் தன் மொபைலை எடுத்து போன் செய்ய, அந்தப்பக்கம் இவன் அழைப்பு திரையில் ஒளிர்ந்ததும் அதைப் பார்த்த அந்த நபர் உடனே அழைப்பை ஏற்று பேச, அவனிடம் அனந்தசயனன் "எனக்கு அந்த ஸ்ரீதர் வர்மா வாங்கறதா இருந்த அந்த எஸ்டேட் எனக்கு வேணும்.."எனவும், அவன் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் தன் காதில் வைத்திருந்த போனை எடுத்து பார்த்த அந்த நபர் "சார் நிஜமாத்தான் சொல்றீங்களா சார்?நீங்க என்கிட்ட இதைக் கேப்பிங்கண்ணு கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை.. ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார் நீங்க சொன்னது மாதிரியே அந்த இடத்தை உங்க பேருக்கு மாற்றி கொடுக்கிறேன்.. இன்னும் ஒரு மூணு நாளில் ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாமா சார்? எனக்கு இப்ப அர்ஜெண்டா 20 கோடி பணம் தேவைப்படுது.. தயவு செஞ்சு என்னை தப்பா எடுத்துக்காதீங்க சார்.."என்றவன் பயம் கலந்த மரியாதையான குரலில் கேட்க,"ஓகே.."என்ற சொல்லோடு அழைப்பை கட் செய்ய, அவன் பேசியதை பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அபிராமி அவன் பேசிய விஷயத்தை கண்டு மிகவும் பயந்து போனாள்.


அவன் தன்னை தவறாக பேசியதை கூட மறந்து போனவள் "என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க? எதுக்காக தேவையில்லாம இப்ப அந்த ஸ்ரீதர் இடத்தை வாங்க பிளான் பண்றீங்க? ஏற்கனவே உங்ககிட்ட இருக்கு பிராப்பர்டி எல்லாம் பத்தாதா?அவங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இன்னும் 2 நாளில் ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்க போறதா முன்னாடி என்கிட்ட ஸ்ரீதர் சொன்னார்.. தேவையில்லாமல் அவரு கிட்ட வம்பு பண்ணாதீங்க ப்ளீஸ்.."என்றவள் அவன் சூடான பார்வையில் வாய் தானாக மூடிக்கொள்ள, அப்போதுதான் தான் அதிகப் பிரசங்கித் தனமாக பேசியதை உணர்ந்து கொண்டாள்.


"இல்லை நான் தப்பா பேசணும்னு பேசலை என்னை மன்னிச்சிடுங்க மாமா.."


"மாமா மாமா மாமா.. இந்த வார்த்தையை சொல்லி சொல்லி தானே என்னை மயக்கி உன் வேலை முடிஞ்சதும் விட்டுட்டு போன..மறுபடியும் உன்னுடைய இந்த வார்த்தையைக் கேட்டு ஏமாந்து போக நான் என்ன உன் பழைய காதலனா? தப்பு தப்பு தப்பு இதுக்கு வேற பெயர் வரும் அந்த வார்த்தையை சொல்ல கூட எனக்கு அருவருப்பா இருக்குது சை.. நரகம்னா என்னென்ன உனக்கு காட்டனும் தான் உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்.. கெட் ரெடி அண்ட் வெல்கம் டு தி ஹெல்" என அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அபிராமி,"என்னை காயப்படுத்த உங்களால முடியுமா?"என்று கேட்க,"உன்னை மாதிரி ஒருத்தியை காயப்படுத்த என்னால மட்டும் இல்லை யாராலயும் முடியுமா? உன்னோட வேதனை தான் எனக்கு சந்தோஷம்.. உன்னோட கண்ணீர் தான் எனக்கு எனர்ஜி பூஸ்ட்..நீ ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையை அனுபவிக்கும் போது என் மனசு நூறு மடங்கு வேகமாக சந்தோஷமா துடிக்கும்.."என்று ஈவிரக்கமில்லாமல் சொன்னவன் அவளை நரகத்திற்குள் வரவேற்பது போல் அவளிடம் அவன் அதை சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.


****

"உனக்கு அவ்வளவு திமிராடி?"என்று ஸ்ரீதர் கோபமாக கத்த, அவனை எரித்துவிடுவது போல் பார்த்த துளசி "யாரைப் பார்த்து டி சொல்லுற?நான் என்ன உன் பொண்டாட்டியா வாடி போடின்னு உன் இஷ்டத்துக்கு பேசுற?"என்று கோபமாக கேட்க, ஏற்கனவே அதீத கோபத்திலிருந்த ஸ்ரீதர் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்தவன் கொத்தாக அவள் தலைமுடியை பிடித்து இழுத்து அவள் முகத்தை தனக்கு நேராக கொண்டு வந்தவன் "வாயை அடக்கி பேசு உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி.. நீ எனக்கு பொண்டாட்டியா வாழ்ந்துதான் ஆகனும் அதான் உனக்கு தலை எழுத்து.. இது எல்லாத்துக்கும் காரணம் உன் தோழி அந்த அபிராமி தான் அவளை தான் நீ போய் கேட்கணும்.. அவள் மட்டும் என்னை கல்யாணம் பண்ணியிருந்தா உன்னை மாதிரி ஒரு பஜாரி நான் ஏன் கல்யாணம் பண்ணனும்.. என்ன நான் சொல்றது புரிஞ்சுதா?"என்றவன் அவள் தலைமுடியை பிடித்து ஆட்ட, அவன் தலைமுடியை பிடித்ததும் வலி தாங்க முடியாமல் துளசி கண்கள் கலங்கிவிட்டது.


அப்போதும் சிறிதும் கலங்காமல் அவனை முறைத்துப் பார்த்தபடி கண்ணீரை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு கீழே தொங்கிக் கொண்டிருந்த அவன் மற்றொரு கையை ஒரே நொடியில் இரு கைகளால் பிடித்து வாயில் வைத்து நன்றாக கடித்து விட, அவள் பற்கள் அவன் கைகளை கூர்மையாக பதம் பார்க்க அந்த வலியில் அவள் தலையை பிடித்திருந்த கையை விட்டவன் வேதனை தாங்க முடியாமல் கையை உதற, தன் தலையை மெதுவாக பிடித்துவிட்ட துளசி அவன் வேதனையில் அழுவதை குரூரமாக பார்த்தாள்.


"என்னடா சொன்ன? எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உன்கூட சேர்ந்து வாழ்ந்து தான் ஆகனுமா? ஏண்டா எருமை மாடு என் அபி மேல எந்த தப்பும் கிடையாது.. அவளே பாவம் யாருனே தெரியாத ஒருத்தன் அவள் கழுத்தில் தாலி கட்டி கூட்டீட்டு போயிட்டான்னு பயத்தில் உன்கிட்ட வந்து உதவி கேட்ட நீ என் கழுத்தில் தாலி கட்டி உன் கூட சேர்ந்து வாழ சொல்லுவியா?உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்ல இப்படி ஈனத் தனமான ஒரு காரியத்தை செஞ்ச உனக்கு குரலை உயர்த்திப் பேச கொஞ்சம் கூட தகுதி கிடையாது.. உன்னை கூட பிறக்காத அண்ணன் மாதிரி நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. நீ எப்படி ஒரு ஈனத்தனமான காரியம் செஞ்சிருக்க.."என்றவள் கோபம் தாள முடியாமல், பக்கத்தில் இருந்த நாற்காலியை தூக்கி அவன் மீது வீச, ஏற்கனவே தலை உடைந்து தற்பொழுது கையும் வீங்கியிருந்த நிலையில் நாற்காலி பறந்து வர அதை கவனிக்காத ஸ்ரீதர், அவள் பேச்சுகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் கைகளில் கண்களைப் பதித்து இருந்தவன் மீது நாற்காலி பாய்ந்து வந்து விழுக, அதை எதிர்பார்க்காதவன் அப்படியே தடுமாறி கட்டிலில் விழுந்தான்.


விழுந்த வேகத்தில் ஏற்கனவே தலையில் அடிபட்ட இடத்தில் மீண்டும் ரத்தம் வர, வெறிபிடித்த மிருகம் போன்று எழுந்து நின்றவன் கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்த துளசி கழுத்தை ஒரே பிடியில் தன் கைக்கு கொண்டு வந்தவன் அவளை அப்படியே சுவற்றில் சாய்த்து அவள் கழுத்தை நெரிக்க, எனக்கு எதை நினைதும் கவலை இல்லை என்பது போல் துளசி கண்கள் சொருக,மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாலும் அவனிடம் கண்டு சிறிதும் அஞ்சவில்லை.


அவள் அப்பொழுதும் பயம் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதை பார்த்து அவள் கழுத்திலிருந்து கோபமாக கையை எடுத்த ஸ்ரீதர் "நீ எல்லாம் ஒரு பொண்ணு தானா? எல்லாத்துக்கும் ஆம்பளை மாதிரி இப்படி பயப்படாம நிக்கிற.."என்று கோபமாக கேட்க, அவனை நக்கலாக பார்த்து துளசி "ஏண்டா அதுக்குள்ள கையை எடுத்த?இன்னும் கொஞ்ச நேரம் கையை வைத்து கழுத்தை இறுக்கி பிடிச்சி இருந்தா செத்துப் போயிருப்பேன்.. உன்னை காலம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்ல களி திங்க வச்ச வச்ச சந்தோஷத்தோட நானும் செத்துப் போயிருப்பேன்.. பலே உசார் தான் போலருக்கு நீ.. என்ன சொன்ன என்ன சொன்ன? ஆம்பளை மாதிரி எதற்கும் பயப்படாமல் நிற்கிறேனா?என் கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டி உன் இஷ்டத்துக்கு கூட்டிட்டு வந்து நீ செய்ய சொல்றதுக்கு எல்லாம் மறுத்தா அதுக்கு பேரு நீ சொன்னதா? ஆமாண்டா அப்ப நான் அப்படிதான் போ.. ஏண்டா இவ கழுத்தில் மூன்று முடிச்சுப்போட்டு தேவையில்லாமல் பிரச்சனையை நாமலே இழுத்துக்கிட்டோம்னு நீ வாழ்க்கை முழுவதும் நினைப்ப? உன்னை நினைக்க வைப்பேன்..என் கழுத்துல கெடக்குற இந்தத் தாலியை நீயே உன் கழுத்தை அறுத்து எறிந்து என்னை இங்கிருந்து போக சொல்ற வரை இங்கிருந்து போகமாட்டேன்.. என்ன கஷ்டப்படுத்தனும்னு தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? நீ என்னடா என்னை கஷ்டப்படுத்துவது.. உனக்கு கஷ்டம்னா என்னன்னு நான் காட்டுவேன்!"என்றவள் ஒரு பக்கம் தலையில் குருதி வழிய கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவனை கண்களில் பழி வெறி மின்ன பார்த்தவள் அவனைப் பார்த்து சிறிதும் கருணை கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறியவள் அந்த வீட்டிற்குள் இருக்கும் மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவை தாழ் போட்டு கொண்டாள்.


அவள் செயலில் ஸ்ரீதர் மீண்டும் முன்பு போன் செய்த மருத்துவருக்கு போன் செய்து எந்த காரணமும் சொல்லாமல் உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி சொல்ல, அந்தப் பக்கமிருந்த மருத்துவர் "சார் இப்ப தான் முக்கியமான ஒரு ஆபரேஷன்க்கு போக போறேன்.. நான் வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் சார்.. இல்லன்னா கொஞ்சம் நீங்க ஹாஸ்பிடல் வந்துடுங்க சார்.."என்ற மருத்துவர், வைத்தியம் பார்ப்பதை கணக்கில்கொண்டு அவன் பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்துவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைய, அவர் பேசுவதைக் கேட்டு ஸ்ரீதர் கோபமாகப் போனை தரையில் வீசி எறிய அவன் எறிந்த வேகத்தில்
சுக்கு சுக்கா உடைந்து போனது.


பின் வேறு வழியில்லாமல் வலிக்கும் கைகளையும் பொருட்படுத்தாமல் தலையில் ரத்தம் வராத படி துணியால் இருக்கி கட்டிக்கொண்டு, கையில் தோல் கிழிந்து ரத்தம் வந்து உறைந்து போன அடையாளத்தை அழிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து தண்ணீரில் கை காட்ட, குளிர் நீர் பட்டதும் கரங்கள் எரிய அதைவிட நூறு மடங்கு துளசி செயலில் அவன் மனம் எரிய ஆரம்பித்தது.



'உன்னை வந்து வச்சுக்கிறேன் இருடி..'என்று கோபமாக மனதிற்குள் அவளை விட்டு,அனைத்து வேலைக்காரர்களும் வீட்டைவிட்டு அனுப்பிய தன் மடத்தனத்தை நொந்து கொண்டு அவனே வேறு வழியில்லாமல் காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றான்.


*****

"என்னால முடியாது.."என்ற அபிராமியை எரிச்சலோடு பார்த்த அனந்தசயனன் இதழ்களில் எரிச்சல் மறைந்து குரூரப் புன்னகை தோன்ற,"நீ செஞ்சுதான் ஆகணும்.. உன்னை இந்த வீட்டுக்கு மறுபடியும் கூட்டிட்டு வந்தது உன் கூட சேர்ந்து வாழ்றதுக்கு இல்லை.. என்னைப் பொறுத்தவரை நீ எல்லாம் ஒரு பெரிய பாவ மூட்டை.. நீ எப்படியோ இருந்துட்டு போ அது உன் இஷ்டம்.. என் வீட்ல இருக்க வரை நான் சொல்றதை தான் கேட்டு நடந்து ஆகணும்.."என்றவன் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்றவன் பகல் நேரத்திலேயே இருட்டாக இருந்த அந்த அறைக்குள் லைட் சுவிட்சை ஆன் செய்ய இடம் முழுவதும் இருள் மறைந்து வெளிச்சம் பரவியது.


அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவ, அந்த அறையை பார்த்த அபிராமி பயத்துடன் அனந்தசயனன் முதுகில் ஒட்டிக் கொள்ள, அவளை பிடித்து தள்ளிவிட்டவன் "இந்த மொத்த இடத்தையும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நீ கிளீன் பண்ணி முடிக்கணும்..ஒரு மணி நேரத்துக்கு ஒரு நிமிஷம் அதிகமா இருந்தா அடுத்த தண்டனை அதேபோல் ஒரு மடங்கு அதிகமாக இருக்கும்.. ரெண்டு நிமிஷம்னா ரெண்டு மடங்கு.. உனக்கான தண்டனை அளவு எவ்வளவு நிர்ணயிக்க போவது நீ தான்.. அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் ஏன்னா நான் ரொம்ப ரொம்ப நல்லவன்.."என்று நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற, அந்த இடத்தை பார்த்து அபிராமிக்கு மயக்கம் வருவது போலிருந்தது.


பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருந்த அந்த அறை முழுவதும் தூசி படிந்துருக்க,அவன் சொன்னது போலவே அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.


ஆனால் அவளால் சிறிது நேரம் கூட சுத்தம் செய்ய முடியவில்லை.


இடம் முழுவதும் துடைக்கத் துடைக்க அழுக்கு வந்துகொண்டேயிருக்க, அவன் சொன்ன நேரம் கடந்து இரண்டு மணி நேரங்கள் சென்றது.

சுத்தம் செய்து சுத்தம்செய்து சோர்ந்து போனவள் முடியாமல் அதே இடத்தில் அப்படியே அமர்ந்து விட, அந்த அழுக்கு முழுவதும் அவள் உடையிலும் ஒட்டிக் கொண்டது.


அவள் இருந்த அறைக்கதவு வெளிப்பக்கமாக சாத்தி தாள் போட, கதவு சாத்தப்பட்டதில் பதட்டமாக எழுந்த அபிராமி "மா.."என்று ஆரம்பித்தவள், அவனுக்கு தான் அப்படி கூப்பிடுவது பிடிக்காது என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் அப்படி அழைத்த மனம் வராமல்,"என்னங்க நான் உள்ளே இருக்கேன்.. தயவு செஞ்சு கதவைத் திறங்க எனக்கு தனியா இருக்கறது ரொம்ப பயம்ன்னும் உங்களுக்கு நல்லா தெரியும்.. ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன் வேறு ஏதாவது தண்டனை வேணும்னாலும் கொடுங்க.. இந்த தண்டனை வேண்டாம் இதற்கு பதிலாக கையால் என்னை கொன்று போட்டாலும் பரவாயில்லை.."என்றவள் பயத்தில் கதவோடு ஒன்றி கொள்ள, நிமிடத்திற்கு நிமிடம் அவள் பயம் அதிகமானது.


அடுத்த ஒரு சில வினாடிகளில் அங்கு எரிந்து கொண்டிருந்த பல்பும் தன் வேலையை நிறுத்திக் கொள்ள, அறை முழுவதும் கும்மிருட்டு.


இருட்டாக இருந்த அந்த அறையை கண்டதும் அபிராமிக்கு இதயம் வாய் வழியாக வெளியில் வந்துவிடும் என்பது போல் பல மடங்கு வேகமாக துடிக்க, வேகமாக இதயத்தின் துடிப்பை சமன் செய்வதற்காக தன் கைகளை நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டதில் இறைவனை துணைக்கழைக்க, விடாமல் கை அந்தக் கதவுகளைத் தட்டி கொண்டிருந்தது.


பயத்தோடு சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட அப்படியே அங்கேயே மயங்கி சரிந்தாள்.


மூன்று மணி நேரத்திற்கு பிறகு அந்த அறையின் கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்த அனந்தசயனன் மயங்கி கிடந்தவள் அருகில் ஒரு காலை தரையில் ஊன்றி அவளது மூக்கு அருகே வலது கையை வைத்து பார்த்தவன் அவள் மூச்சு விடுவதற்கான அறிகுறி தெரியவும் "ஏய் எந்திரி டி நடிச்சது போதும்.. இதுதான் சாக்குன்னு இங்கேயே படுத்து நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கியா? எனக்கு தேவையான புட் கூட உன்னால ரெடி பண்ணி தர முடியாதா? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்.."என்றவன் அவளைத் தொட கூட பிடிக்காமல் அவள் சுத்தம் செய்வதற்காக எடுத்து வந்திருந்த குச்சியை வைத்து அவள் முகத்தை அசைத்து பார்க்க, அவன் தள்ளிய வேகத்தில் அந்த பக்கம் விழுந்த அவள் முகம் அப்படியே அசைவற்று இருந்தது.


xxx என்று அவளை சில வார்த்தைகளால் அர்ச்சித்தவன் போனை எடுத்து பத்து இலக்கங்களையும் தட்ட, ஒரு அழைப்பு செல்வதற்கு முன்பாகவே அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.


"எங்க இருக்க?"


"சார் வீட்டு வாசலில் தான் சார் நின்னுகிட்டு இருக்கேன்.."


"கொஞ்சம் பலசாலியான லேடி ரெண்டு பேர் இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல உன் பக்கத்தில் நிக்கணும்.."என்று அழைப்பைத் துண்டிக்க, அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவன் வேகமாக அனந்தசயனன் சொன்னது போல் சற்று பலம் வாய்ந்த பெண்களை அழைத்து வருவதில் மும்மரமாக இருந்தான்.


அவளையும் அந்த அறையை நன்றாக பார்த்தவன் அதைப் பார்க்க பார்க்க அவனுக்குள் கோபம் ஊற்றாக பெருக்கெடுக்க, மறுபடியும் அவளை திட்ட ஆரம்பித்தான்.


அவள் மட்டும் நிச்சயம் கண்விழித்து இருந்திருந்தால் அவன் பேசும் வார்த்தைகளை கேட்டு தன் உயிரை கூட விட்டிருக்கக்கூடும்.


அந்த அறை முழுவதும் புழுக்கமாக இருக்க அதற்குள் நிற்க முடியாமல், வெளியில் வந்தவன் ஏசியை ஆன் செய்து காற்று வாங்க, ஐந்து நிமிடங்கள் முடிவதற்கு முன்பாக அவன் சொன்னது போல் இரு பெண்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான் அவன் காரியதாசி ஆனந்த்.


"சார் இவங்க ரெண்டு பேரும் உங்களுடைய எக்பெக்டேஷன்க்கு கரெக்டா இருப்பாங்களா?"என்று கேட்க, தலையை மட்டும் பக்கவாட்டாக திரும்பி அவனை சுட்டெரிப்பது போல் பார்த்த அனந்தசயனன் "ஹவ் டிட் யூ சே?"என்று முகத்தில் எந்த விதமான உணர்வுகளையும் காட்டாமல், ஒற்றை வார்த்தையில் அவனுக்கு நிலநடுக்கத்தை காட்ட, அவன் அந்த கேள்வியில் பதறிப்போன ஆனந்த் "சார் ப்ளீஸ் சார்.. எனக்கு எதுக்காக இவங்க ரெண்டு பேரையும் வர சொன்னிங்கன்னு தெரியாது.. அதுக்காக தான் அப்படி கேட்டேன் தயவு செஞ்சு என்னை தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் சார் என்னை எதுவும் செஞ்சிடாதிங்க.."என்று கெஞ்ச,"லீவ் மீ"என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான் அனந்தசயனன்.


அவன் சொன்னதும் தப்பித்தால் போதுமென்று ஆனந்த் அங்கிருந்து சென்று விட,அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்ற இரு பெண்களும் ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கத்தோடு கூடிய பயத்தோடு பார்க்க, அவர்களை திரும்பியும் பார்க்காத அனந்தசயனன் அபிராமி விழுந்து கிடந்த அறையை நோக்கி ஒற்றை விரலை நீட்ட,அவன் விரல் நீட்டிய திசையில் இரு பெண்களும் அவனிடம் எதுவும் கேட்காமல் உள்ளே நுழைந்தவர்கள் மயங்கி கிடந்த அபிராமியை பார்த்ததும் எதற்காக இங்கே வரச் சொல்லி இருப்பான் என்பதை புரிந்து கொண்டவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக அவள் தலையையும் காலையும் பிடித்துக்கொண்டு தூக்கி வர, அவளை எங்கு படுக்க வைப்பது என்று புரியாமல் வெளியே தூக்கி வந்தவர்கள் அவளை பிடித்தபடி தயக்கத்தோடு அவனைப் பார்க்க,"மெய்ட் எல்லாரும் இந்த வீட்டுல எங்க இருப்பாங்களோ இவளையும் அங்க கொண்டுபோய் போட்டுடுங்க.. டாக்டர் கிட்ட போன் பண்ணி வர சொல்லி அடுத்த ஆக வேண்டியதை பார்த்துக்கோங்க.. டுடே யமுனா கமிங் டூ இந்தியா ஐ ரிசீவ் ஹர்.."என்று அவர்களிடம் தான் செல்லப்போகும் இடத்தையும் சொல்லி விட்டுச் செல்ல, அந்த இரு பெண்களுக்கும் ஆச்சரியம்.


பொதுவாக எந்த விஷயத்தையும் அங்கிருக்கும் வேலைக்காரர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று நினைப்பவன் முதன்முதலாக தான் ஒரு இடத்திற்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டுச் செல்வதை அந்தப் பெண்கள் ஆச்சரியமாக பார்க்க, இருவரும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பதை கண்டு கோபமாக திரும்பி அவன் ஒரு பார்வை பார்க்க,அவன் பார்வையை கண்டதும் இரு பெண்களும் பயத்துடன் வேகமாக அவளை தூக்கிக்கொண்டு வேலைக்காரர்களுக்கு என அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.


அவளை தரையில் படுக்க வைத்தவர்கள் அவள் முகத்தை அவர்களுக்கும் பார்க்கப் பிடிக்காமல் போக, தங்கள் முதலாளி கட்டளைக்கிணங்க வேண்டாவெறுப்பாக மருத்துவருக்கு போன் செய்து அவரை அங்கு வர வைத்தார்கள்.


"அனந்தசயனன்"வீட்டிற்கு வர வேண்டும் என்று அந்த இரு பெண்களில் ஒரு பெண் மருத்துவருக்கு போன் செய்து சொல்ல, அவன் பெயரைக் கேட்டதும் மருத்துவர் சற்றும் தாமதிக்காமல் அவன் வீட்டிற்கு கிளம்பி வந்தார்.


அனந்தசயனன் வீட்டிற்கு வந்த மருத்துவர் வாசலில் அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் நின்று கொண்டிருக்க,அவளிடம் "அந்த பொண்ணு எங்க இருக்கு? எப்போ திரும்பி வந்துச்சு.."என்று கோபமாக கேட்க, தாடையில் ஒரு கை வைத்து அலட்டிக் கொண்ட அந்தப் பெண் "அந்த எடுபட்ட சிறுக்கி எப்ப வந்தானே தெரியல டாக்டர்.. இப்பதான் அய்யா வாழ்க்கை கொஞ்சம் மாறா ஆரம்பிச்சிருக்கு..இந்த சிறுக்கி மவ அதுக்குள்ள அது பொறுக்காமல் வந்து சேர்ந்துட்டா.. பேசாம அவளுக்கு ஒரு விஷ ஊசி போட்டு போட்டு தள்ளி இருங்க.. எப்பவாச்சும் ஐயா வாழ்க்கையில் கொஞ்சம் சந்தோசம் இருக்கும்.. இந்த வீணாப்போனவ வந்ததுக்கப்புறம் அது எல்லாம் போயிடுச்சு.. சத்தியமா சொல்றேன் இவளுக்கெல்லாம் நல்ல சாவு வரவே வராது.. அனாதை கழுத யாரும் இல்லாம தனியா இருக்கும்போது இப்படி எல்லாம் ஆடுது..இன்னும் இவ ஆத்தா அப்பன் எல்லாம் உயிரோட இருந்திருந்தா அம்புட்டுத்தான்.. உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா டாக்டர்? இவர் அப்பா, அம்மா ரெண்டு பேரும் எய்ட்ஸ் வந்து தான் செத்துப் போனாங்களாம்.. இவ கூடப்பிறந்த அண்ணன் காரன் சின்ன வயசுல செத்துப் போயிட்டான்.. இந்த சிறுக்கிய பெத்த பாவத்துக்கு தான் அவங்க மூணு பேரும் இல்லாமல் போயிட்டாங்க.. போனாப் போகுதுன்னு இவளுக்கு வாழ்க்கை பிச்சை போட்டா அவரை அசிங்க படுத்திட்டு அவர் புள்ளையையும் ஒழுங்கா பெற்றுக் கொடுக்க முடியாம அழிச்சிட்டு இந்த ஊரை விட்டுப் போன காரசிறுக்கி எதுக்கு திரும்பி வந்து சேர்ந்துன்னு தெரியலை?"என்று வார்த்தைகளை நீட்டி முழக்கி சொல்ல, இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வந்திருக்க இதற்கிடையில் அவள் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண் அனந்தசயனன் சொன்னதற்காக வேண்டா விருப்பாக அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அதில் கண்களை திறந்தவள் குடிக்க தண்ணீர் கேட்க, அவளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூட விருப்பம் இல்லாத அந்தப் பெண் "உனக்கு தண்ணி கொடுத்தான் அந்த பாவம் என்னை தான் வந்து சேரும்.. இந்த இங்கே இருக்கு பாரு நீயே குடி.."என்று சொம்பை நச்சென்று தரையில் இடிப்பதுபோல் வைத்துவிட்டு செல்ல, அந்தப்பெண்ணின் செயலில் அவளுக்கு தாகம் கூட மறைந்து போனது.


கண்களில் கண்ணீர் வழிய அப்படியே படுத்துக் கொண்டவள் ஜன்னல் வழியாக டாக்டரும் அந்த பெண்ணும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் காதில் விழ தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறோமோ என்று மனம் நொந்து போனாள்.


அபிராமியை பரிசோதித்த மருத்துவர் "இந்த பொண்ணு எதுவும் ஒழுங்கா சாப்பிடலை போல இருக்கு பார்த்து கவனிச்சுக்கோ.."என்று சொல்லிவிட்டு சில மருந்துகளை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட, அவள் கண்களைத் திறந்ததும் டாக்டரிடம் அவளைப் பற்றி கீழ்தரமாக பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் அவளை மேலும் வேதனை கொள்ளும்படி பேசுவதற்காக வாயை திறக்க அதற்கு முன்பாக அங்கு வந்து சேர்ந்தான் அனந்தசயனன்.


அவன் காலடி ஓசையே அவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான் என்பதை பறைசாற்ற, அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களும் அவள் முகத்தை கூட பார்க்காமல் "அப்புறம் அய்யா வேற ஏதாவது வேணுமாங்க? நாங்க ரெண்டு பேரும் வெளியில் தான் இருக்கிறோம் ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க ஐயா.."என்று சொல்லிவிட்டு அவன் தலையை அசைத்ததும் இரு பெண்களும் சற்று நேரத்திற்கு முன்பு நாட்டாமை போல் பேசியவர்கள் இவர்கள் தானா என யாவரும் ஐயுற தக்க வகையில் குனிந்த தலை நிமிராமல் இருகரங்களையும் இடுப்புக்கு கீழாக கட்டிக்கொண்டு மரியாதையாக அங்கிருந்து வெளியேற, அனந்தசயனன் பின்னாடியே வந்த ஆனந்த் ஒரு மர நாற்காலியை அவன் பக்கத்தில் போட்டுவிட்டு அவனும் சென்றுவிட, அதில் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு அமர்ந்துகொண்டான் அனந்தசயனன்.


கை முட்டியிலிருந்த சட்டையை சற்று மடக்கி விட்டவன் கையில் அணிந்திருந்த காப்பை நன்றாக ஏற்றிவிட்டு மீசையை முறுக்கி விட்டான்.


அவன் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு கூட தைரியம் இல்லாமல் தலையை குனிந்து கொண்டிருந்த அபிராமி கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க,"இன்னும் நீ எல்லாம் உயிரோட தான் இருக்கியா?"என்று நக்கலாக கேட்ட அனந்தசயனம் கேள்வியில் அவனை விலுக்கென என நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள்.


அவள் அப்படி பார்த்ததும் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, அவன் அந்த செயலில் எப்போதும் போல் அவள் உள்மனம் மயங்கி போக, அதை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டவள் தலையை மீண்டும் தாழ்த்தி கொள்ள அவளை எரிக்கும் பார்வை பார்த்த அனந்தசயனன் "ஆனந்த் அதைக் கொண்டு வா.."என்று கட்டளையிட, அவன் கட்டளையே என் சாசனம் என்பதுபோல் ஆனந்த் அந்த பொருட்களை கையில் கொண்டு வந்தவன் அபிராமி முன்பாக அதை வைத்து விட்டு மீண்டும் சென்று விட,தன் முன்பு இருந்த அந்த பொருட்களை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அபிராமி.


ஆம். அவளுக்கு முன்பாக மண்ணெண்ணெய், விஷம், கயிறு, துப்பாக்கி, கத்தி, அரளி விதை போன்ற பல பொருட்கள் அணிவகுக்க ஒவ்வொன்றையும் அதிர்ச்சியாக பார்த்த அபிராமி நிமிர்ந்து அவள் கணவனை பார்க்க, அவளை உணர்வுகளற்று வெறித்து பார்த்த அனந்தசயனன் "உனக்கு இப்பவே தெரிஞ்சிருக்கும் உன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதுன்னு.. ஒரு நாளைக்கு உனக்கு இந்த நிலைமைன்னா வாழ்க்கை முழுவதும் டாட் டாட்.. இப்பவும் என் மனசுல ஏதோ ஒரு இடத்துல உன் மேல வெச்ச அன்பு அந்தப் புள்ளி அளவுக்கு ஒட்டிக்கிட்டு இருக்குது..அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் தான் உனக்கு இந்த ஆப்ஷன் தந்திருக்கேன்..உனக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் டைம் அதுக்குள்ள இதுல எதையாவது ஒன்னு நீ சூஸ் பண்ணி செத்துப் போயிடு.. இல்லன்னா அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் ஒவ்வொரு நொடியும் நான் உன்னை நிமிஷத்துக்கு நிமிஷம் சாகுற உணர்வுகளை தூண்டிவிடுவேன்.. பட் நீ சாகக்கூடாது.."என்றவன் தன் வாட்சை பார்க்க, அவன் பேசுவதைக் கேட்டு தன் கணவன் இவன் தானா? என்று அவனை அதிர்ச்சியோடு பார்த்த அபிராமி அவனையே இமைக்க கூட மறந்து பார்த்துக் கொண்டிருக்க, அவனோ கடமை தவறாத ஆசிரியர் போல் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நான்கு நிமிடங்கள் கடந்து செல்ல, அபிராமி எதுவும் செய்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.


ஐந்து நிமிடங்களும் கடந்து செல்ல "ஆனந்த்" அனந்தசயனன் குரல்கொடுக்க, அவன் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ஆனந்த் சற்று நேரத்திற்கு முன்பு அவன் கைகளால் கொண்டு வந்து அங்கு வைத்து விட்டுச் சென்ற பொருட்களை எடுத்து விட்டு சென்றான்.


அபிராமியை எள்ளலாக பார்த்த அனந்தசயனன் "எப்பவும் உன் கிட்ட இருக்க அந்த தைரியம் திமிரு அப்படியேதான் இப்பவும் இருக்குது போலருக்கு.. யுவர் கவுன்டவுன் ஸ்டார்ட்.."என்றவன் அவளை வதைப்பதற்காக ஆயத்தமானான்.


அவன் அங்கிருந்து சென்றதும் 'நான் செத்துப்போயிட்டா நீங்க சந்தோஷமா இருக்க மாட்டீங்க மாமா.. உங்களோட சந்தோஷம் நான் தான் எனக்கு தெரியும்.. இப்ப என்னோட வேதனைகள் தான் உங்களோட சந்தோஷம்னு தெரியும்..எப்பவோ இருந்தாலும் ஒரு நாள் செத்துப்போக தான் போறேன் இந்த உலகத்தில் இருக்கப் போறேனோ.. செத்துப் போறதுக்கு முன்னாடி உங்களுக்கு கொடுத்த கஷ்டத்துக்கு எல்லாம் தண்டனை அனுபவிச்சிட்டு போறேன்..'என்று வாய்விட்டு முனுமுனுக்க, வாழ்க்கை முழுவதும் நரகம் என்று தெரிந்தும் அதை விரும்பி தேர்ந்தெடுத்தாள்.


இனி அவளின் வாழ்க்கையில் நிகழப்போகும் ஒவ்வொன்றிற்கும் அவள் மட்டுமே பொறுப்பு என்று ஸ்ரீதர் சொல்லிவிட்டுச் சென்றது இதைத்தான்.
 




Srd. Rathi

மண்டலாதிபதி
Joined
Dec 30, 2019
Messages
107
Reaction score
164
அப்படி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாளோ சயனா.... ரொம்ப டார்ச்சர் பண்ணுற...
துளசி செம தில்லு 👍
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Appadi enna Panna abhi perusa edo panniruka pola avale dandanai ku ready ah irukale iva inga ippadi na anga thulasi sema la kadikira, thuki adikira innum sema ah adi pa pola iruke Sridhar thali kattitu thappu pannita da vamgi kattiko da nice update dear thanks.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
துளசி செம்ம🤩🤩🤩

அனந்து, அப்ப உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிருச்சா🤔🤔🤔, குழந்தையா கலச்சிட்டாள😳😳😳

அதுக்கு தான் கோவமா இருக்கானா🤔🤔🤔

ஆனாலும் பாவமா இருக்கு டா, யாரு இந்த யமுனா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top