அனல் அவள் 1

#32
யாருங்க உங்க அக்கா சொல்லுங்க நான் அவங்க கிட்ட பேசுரேன்" என இவள் திட்டம் அறியாத அப்பாவி அதுவாகவே ஆஜரானது.

"உங்க பக்கத்துல தாங்க நிக்கிறா பேசுங்க அவளுக்கு கேக்கும்"என்றாலே பார்க்கலாம் பையன் அறண்டே பொய்ட்டான்.

"என்னங்க சொல்றீங்க என் பக்கத்துலயா? இங்க தான் உங்களையும் என்னையும் தவிர வேறு யாருமே இல்லையே"என அவன் நடுக்கத்துடன் வினவ.

"அவ உங்க கண்ணுக்கு தெரிய மாட்டாங்க ஏன்னா அவ இப்போ உயிரோட இல்ல" என இவள் சொல்ல அவன் முகம் முற்றிலும் இருண்டு போனது.

அவன் முகத்தை மேலும் பார்த்தால் எங்கே தன்னையும் மீறி சிரித்து விடுவோமோ என்று பயந்து சோகமாகவே தலையை குனிந்து கொண்டவள்.

"அவ லவ் பண்ண பையன் இவள ஏமாத்திட்டான்.அந்த சோகம் தாங்காமல் அவ செத்து போய்ட்டா.அவள மாதிரியே அவ தங்கை நான் ஆக கூடாதுனு அவ பேயா என் கூடவே இருப்பா.
என் கிட்ட யாருனா ப்ரொப்போஸ் பண்ண அவங்க கூடவே இருந்து அவங்கள கவனிப்பா" என இவள் சிறிது இடைவெளி விட

"என்னது கூடவே இருப்பாங்களா"என இவன் அதிர்ச்சி ஆக!

"ஆமாங்க அப்பறம் என் கிட்ட வந்து பையன் நல்லவனா,கெட்டவனானு சொல்லுவா அத வெச்சி தான் நான் ஓகே சொல்லுவேன்"என இவள் அதே சோகத்துடன் நிறுத்த.

"என்னங்க சொல்றீங்க இப்படி எல்லாம் கூட நடக்குமா?"இவன் சிறிது சந்தேகத்துடன் கேட்க.

"ஆமாங்க நீங்க 'தில்லுக்கு துட்டு 2'படம் பார்க்களையா அது மாதிரி தான் இது" என இப்போதும் அதை உண்மைப் போலவே இவள் கூற,

பேய் என எழுதி வைத்தாலே அதைப் பார்க்க பயம் கொள்பவன் பேய் படத்தை எப்படி பார்த்திருப்பான்.

அந்த படத்தைப் பார்த்த நண்பர்கள் கதைக் கூறி கேட்டிருக்கிறான்.அதையும் இவள் ஐந்தே நிமிடத்தில் புணைந்த கதையையும் ஒப்பிட்டு பார்த்து அரண்டு போய் கண்கள் கலங்க நின்றிருந்தவனை,விவேகனும் மித்ரனும் தான் காப்பாற்றினர்.

காதலைக் கூற வந்தவன் அக்கா என கூறி விட்டால் போதும் என ஓடியே விட்டான்.

ஃப்ளாஷ் பேக் ஓவர் என இவள் என்டு கார்ட் போட,

பெரும் மூச்சுடன் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின் எரிச்சலுடன் எழுந்த விவேகன்,

"இந்த வாய் இல்லன்னு வெச்சிக்கோயேன் உன்னை எல்லாம் நாய்", என எதோ கூற வந்தவனை இடைமறித்து,

"என்ன நாய் கவ்விட்டு போய்டும்னு சொல்ல வரியா" எனக் கூறியவளைக் கண்டு முறைத்தவன்.

'இல்லை' என தலை அசைத்து விட்டு, "நாய் கூட நிமிர்ந்து பார்க்காது" என சிரிக்காமல் கூறியவன்,
அவர்களுக்கான மதிய உணவை வாங்கி வர சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு தென்றலை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

பிறகு விவேகன் மூவருக்கான உணவோடு வர, மூவரும் மதிய உணவை சில பல அரட்டைகளுடன் முடித்துக் கொண்டு தங்கள் அடுத்த வேலை வகுப்பிற்கு சென்றனர்.

தென்றல் - அனல் அவள் கதையின் நாயகி.

சங்கமித்ரன் - நாயகியின் சினேகிதன் (அறுந்தவாலு).

விவேகன் - யாருனு அப்புறம் சொல்றேன் (ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர்).

இவங்கள சுத்தி நடக்கிறது தாங்க அனல் அவள் கதை. இதுக்கு மேல அவங்களை பற்றியும் அவங்க குடும்பத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்...
அடிப்பாவி ??? ஒரு அப்பாவி பையன இப்படியுமா டீ பேய் பயம் காட்டுவீங்க.. கொலகாரிகளா ??? உங்க ரெண்டு பேருக்கிட்ட மாட்டி முழிக்க போற அந்த நாலு ஜீவன் ரொம்பப் பாவம்????
 
Thirumathi. Ramya Boobalan

Author
Author
SM Exclusive Author
#37
அடிப்பாவி ??? ஒரு அப்பாவி பையன இப்படியுமா டீ பேய் பயம் காட்டுவீங்க.. கொலகாரிகளா ??? உங்க ரெண்டு பேருக்கிட்ட மாட்டி முழிக்க போற அந்த நாலு ஜீவன் ரொம்பப் பாவம்????
Hahaha innum pannuvom
 
Advt

Advertisements

Top