அனாமிகா 28 - விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀 கருந்துளை 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
அனாமிகா 28

விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀

கருந்துளை 4

லதீஷாவின் அறையில் இருந்து துரிதமாக ஓடியவன் தன் காதில் பொருத்திய ப்ளூ தூட் கருவி வழியாக காவல் ஆட்களை தொடர்பு கொள்ள முயல, அது தொடர் தோல்வியில் முடிந்தது . " டேமிட் " என்று முனகிக் கொண்டே தங்கள் ரகசிய இடம் நோக்கி விரைந்தவன் ,அந்த தளத்தில் இருந்த ஆட்கள் அனைவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ந்தான். அச்சமயம் திடீரென்று அத்தளத்தின் எமர்ஜென்சி அலாரம் அலற ஆரம்பித்தது. அதில் தன் பிஸ்டலை உருவி சுற்றும் முற்றும் பார்த்தபடி பதுங்கி பதுங்கி நடந்தான் .


அவ்வொலி காதை கிழிக்க அந்த தளத்தின் மற்றைய பக்கத்தில் காவலுக்கு இருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்களின் அஜாக்கிரதையால் விளைய இருந்த சம்பவத்தை பற்றி இயம்பி, தீ பார்வை பார்த்தான்.அதில் தலை குனிந்து நின்றவர்களிடம் மயங்கிய மற்ற காவலாளிகளை தெளிய வைக்க பணித்தான்.பின்னர் அந்த உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு கொண்ட சென்சார்மயமான கிடங்கின் கதவை கடவுச் சொல்லாலும் கட்டைவிரல் ரேகை கொண்டும் இயக்கி உள்ளே நுழைந்தான்.


ஒரு முறை அந்த அறையை தன் லேசர் பார்வையால் அளந்தவன் அங்கிருந்த பொருளுக்கு எந்த சேதாரமும் ஆகவில்லை என்பதை அறிந்து நிம்மதியுற்றான். அந்த அறையை ஒருமுறை கண்களால் வலம் வந்தவனின் பார்வை வட்டத்தில் விழுந்தது தரையில் சிந்தி இருந்த இரத்தத் துளிகளும் லேசாக உடைந்த சுவரில் பதித்த கண்ணாடியும் .அதை குனிந்து கூர்ந்தவனின் கண்களில் தட்டுப்பட்டது அந்த நீண்ட ஒற்றை முடி. அதை கையில் எடுத்து யோசனையுடன் பார்த்தவன் , அறையை விட்டு வெளியேறும் முன்னர் ஒருமுறை தன் நாசியை விடைத்து ஆழ்ந்து சுவாசித்தான்.


பின்னர் அறையை அடைத்து விட்டு வெளியேறினான்.அதற்குள் மயக்கத்தில் இருந்த காவலாளிகள் விழித்திருக்க அவர்களிடம் செல்ல முனைந்தவனின் காலில் தட்டுப்பட்டது அந்த காலி வாயு குப்பி. அதை குனிந்து எடுத்தவன் , 'ஸ்லீப்பிங் கேஸ் கேனிஸ்டர் ' என்று முணுமுணுத்தான்.


கண் விழித்த காவலர்களிடம் " மணி அடிக்கவா ப்ளூடூத் டிவைஸ் குடுத்தாங்க. கால் பண்ண ஒருத்தன் கூட எடுக்க மாட்டீங்களா " என்று காட்டமாக கத்தினான். அத்தளத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியோ " பீடா எங்க யார் போனும் வாக்கி டாக்கியும் கனெக்ட் ஆக மாட்டேங்குது " என்று குழப்பமாக கூறினார். அவர்கள் கருவிகளை கையில் வாங்கி புருவம் சுருங்க பார்த்தவன் ,நேராக தங்கள் சிசிடிவி காணொளி காட்சிகள் ஒளிபரப்பும் அறையை நோக்கி நடையை எட்டிப் போட்டான். அங்கும் அந்த சம்பவம் நடந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் காட்சிகள் பதிவாகாமல் இருக்க ' ஸ்மார்ட் செக்யூரிட்டி கேமரால இருந்து செல்போன் சிக்னல்காக வச்ச வயர்லெஸ் சிக்னல் பூஸ்டர் வரை எல்லாத்துக்கும் ஜேம்மர் யூஸ் பண்ணிருக்காங்க. ஸ்லீப்பிங் கேஸ் யூஸ் பண்ணி செக்யூரிட்டியையும் மயங்க வச்சுருக்காங்க ' என்று அனுமானித்து, அதை தன் காவலர்கள் கொண்டு உறுதியும் செய்து கொண்டான்.


இவ்வளவு பாதுகாப்பையும் மீறி தங்கள் ரகசிய அறை இருக்கும் இடத்தை முற்றுகையிட்டவன் கண்டிப்பாக இதற்கென நன்கு பயிற்சி பெற்றவனாகவும், அதே சமயம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை ஹேக் செய்யத் தெரிந்த கில்லாடியாக இருக்க வேண்டும் . கிட்டத்தட்ட 12 தளங்களை கொண்ட அந்த ஷிப்பின் வரைபடத்தை தலைகீழாக அறிந்திருந்தால் மட்டுமே இப்படி குறுகிய நேரத்தில் வந்து போவது சாத்தியப்படும் என்பதை மனதில் கணக்கிட்டான். மேலும் ஒருவரால் இவ்வளவு பெரிய காரியத்தில் ஈடுபடுவதென்பது முடியாத காரியம் . அதனால் குறைந்தது இரண்டு மூன்று பேராவது அவனுக்கு உதவி இருக்க வேண்டும் என்று யூகித்தான். அத்தளத்தின் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யும்படி பணித்தான்.


அப்போது தன் பாக்கெட்டில் கைவிட்டபடி அர்னப் முன்னே நடக்க, பின்னால் இரு காவலர்கள் புடைசூழ துப்பாக்கி முனையில் விலங்கிடப்பட்டு கன்னங்கள் சிவந்து கண்ணெல்லாம் கலங்க அழைத்து வரப்பட்டான் திலீப். அவனை கண்ட பீடாவும் தன் புருவம் உயர்த்தி கண்களால் அர்னபிடம் சேதி கேட்டான் . அவரோ எதேச்சையாக அத்தளத்தை கடக்கும் போது அவசர அலாரத்தின் ஒலியில் அதிர்ந்து காவலாளிகளிடம் அதை பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாகவும் , அச்சமயம் அத்தளத்தின் மற்ற பக்கத்தில் சுற்றி சுற்றி கண்களால் அளந்தபடி திருதிருத்துக் கொண்டு திலீப் நடமாடிக் கொண்டிருந்ததையும் கூறினார் .


அவனை விசாரித்த போது வழி தவறி வந்துவிட்டதாக உரைத்தவனின் உடல்மொழியும் பாவனையும் சந்தேகிக்கும்படியாக இருந்ததால் அவனிடம் கூட்டி வந்ததாக இயம்பினர். தன் வலது காதின் ஸ்டட்டை அழுந்த வருடியவன் கண்கள் கலங்க மண்டி இட்டிருந்த திலீப்பை ஒருமுறை தீர்க்கமாக பார்த்தான். பின்னர் அவன் கை விலங்குகளை அருகில் நின்ற காவலாளியிடம் அகற்ற பணித்தான்.


தன் கைகளை தேய்த்துக்கொண்டு எழுந்து நின்ற திலீப் குரல் கம்ம " நான் ஒன்னுமே பண்ணல சார் . தெரியாம இந்த ப்ளோர்ல இறங்கிட்டேன். சுத்தி சுத்தி பார்த்தா எல்லா ப்ளோரும் ஒரே மாதிரி இருக்கு .லிப்ட்டை தேடிகிட்டிருந்தேன். இதை சொன்னா அடிக்கிறாங்க... " என்றான் கேவலாக.


தீலிப்பின் சிவந்த கன்னத்தை பார்த்தவன் அந்த இரண்டு காவலாளிகள் மற்றும் அர்னப்பையும் காட்டி " யார் அடிச்சு ஹேன்ட் கஃப் பண்ணா ? " என்று கேட்க , திலீப்பும் தன்னை அடித்த காவலனை கை காட்டினான். அவன் கைநீட்டிய ஆளையும் திலீப்பையும் மாறி மாறி பார்த்த பீட்டா "இவனா?" என்க , 'ஆமாம்' என்று தலையசைத்தான் திலீப். கண் இமைக்கும் நேரத்தில் அக்காவலாளியின் நெற்றிப் பொட்டில் தன் துப்பாக்கி தோட்டாவை இறக்கி இருந்தான் பீட்டா. " டவுட் வந்தா இப்படி பட்டுனு ஷூட் பண்ணனும். ஹேண்ட் கஃப் போட்டு திருடன் போலிஸ் விளையாட கூடாது... " என்று மற்றொரு காவலனையும் அர்னப்பையும் பார்த்துக் கூறியவன் , தன் துப்பாக்கியை ஹோல்ஸ்டரில் சொருகினான். அவன் செயலை கண்ட அர்னப்புக்கு முதுகுத் தண்டில் சில்லென்று ஏதோ பரவுவது போல இருந்தது.


சில வினாடிகள் தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் திலீப்பின் முகத்தை ஆராய்ந்தவன், லேசாக அவன் கன்னம் தட்டி " டேக் கேர். இது ஆபத்தான இடம். கண்ட நேரத்துக்கு தனியா வெளிய சுத்தாதே. எல்லா நேரமும் இப்படி காப்பாத்த நான் வர மாட்டேன்... " என்றவனின் பதிலில் தொப்பலாக வேர்த்தது திலீப்புக்கு. அவனிடம் மண்டையை ஆட்டிவிட்டு 'விட்டால் போதும்' என்று அங்கிருந்து நகர்ந்தான் திலீப்.


திலீப் சென்ற திக்கையே வெறித்த பீட்டா , அங்கு நின்றிருந்த அர்னப்பை பார்த்து " சரக்கு என் கஸ்டடில இருக்கிறவரை எவனாலயும் எதையும் புடுங்க முடியாது . ஸொ யூ ரிலாக்ஸ் " என்று கூறினான். மேலும் அத்தளத்தின் பாதுகாப்பை பன்மடங்காக முடுக்கி விட்டான்.அவன் உள்ளுணர்வு அடித்துக் கூறியது கண்டிப்பாக இன்று வந்தவர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஓய மாட்டார்கள் என்று. எனவே பீட்டாவும் அவர்களை பிடிக்க வ்யூகம் அமைக்க ஆரம்பித்தான்.


ஒருமுறை பாதுகாப்பு பணிகளை ஆராய்ந்து திருப்தி பட்டுக் கொண்டவன் லிப்ட்டில் ஏறி தன் அறை இருக்கும் தளத்தை சென்றடைந்தான். லிப்ட் கதவு திறந்து வெளியேறியவனை பின்னிருந்து அணைத்தது ஒரு பெண் கரம். அப்பெண்ணின் ஸ்பரிசத்திலேயே அவளை கண்டு கொண்டவனின் உடல் விறைத்தது. அவனை மயக்கும் பார்வை பார்த்தபடி முன்னால் வந்து நின்றிருந்தாள் எம்மா. பீட்டாவை கட்டி அணைத்து இதழில் முத்தமிட்டு அந்த இரவை தன்னுடன் கழிக்க அழைப்பு விடுத்தாள்.


பீட்டா ஒன்றும் வழிய வரும் பெண்களை வேண்டாம் என்று தட்டிக் கழிக்கும் மஹான் அல்ல. அதே நேரம் அவன் மஞ்சத்தில் ஒரு இரவுக்கு மேல் எந்த பெண்ணுக்கும் இடமளித்ததும் கிடையாது. அதையும் மீறி அணுகும் பாவைகளிடம் "ஐ டோன்ட் டூ ரிலேஷன்ஷிப்ஸ்..." என்று சுருக்கமாக முடித்துக் கொள்வான். இப்படி புரியாத புதிராக இருப்பவனின் மீது எம்மாவுக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதை பலமுறை அவனிடம் வெளிப்படுத்தவும் தவறியதில்லை அவள். எம்மாவின் லேசான இதழொற்றல் ஏதோ ஒரு ஒவ்வாமையை அவனுக்குள் உண்டாக்க , அவளை பார்த்து கடுமையான குரலில் "நாட் இன் ஆ மூட்" என்று கர்ஜித்துவிட்டுச் சென்றான் . அவள் ஆர்வம் தெரிந்தும் அவளை தவிர்ப்பவனை 'வீழ்த்தியே தீருவேன்' என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாள் எம்மா.


இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவள் அழைப்பை ஏற்றிருப்பானோ என்னவோ? ஆனால் இன்று அணங்கவளின் இதழ் தீண்டிய பின்பு அவளை மட்டுமே அவன் சிந்தையும் உடலும் தேடுவதை உணர்ந்து திடுக்கிட்டான் .தன் அறைக்குள் நுழைந்தவன் நேராக கழிவறை புகுந்து தன் வாயில் நீர் அடித்து கழுவினான். அவன் செயல் அவனுக்கே விசித்திரமாக இருந்தது. அந்த சர்வாதிகாரிக்கு இது தான் காதலில் தொலைந்து கரையப் போவதற்கான முதல் படி என்று யார் சொல்வது ? சொன்னால் கேட்டுக் கொள்ளும் ரகமா அவன் ?


லதீஷாவினால் தனக்குள் உண்டான ரசாயன மாற்றத்தை அவனும் கவனிக்காமல் இல்லை. ஆனால் அதற்கு அவன் கற்பித்த காரணம் தான் வேறு. அவள் அழகின் மீது கொண்ட மோஹம் தான் தன்னை ஈர்ப்புவிசையாக அவளை நோக்கி இழுப்பதாக தப்பர்த்தம் செய்தான்.அவளோடு ஆசை தீர களிவெறியாடினால் அவளும் சலித்து போவாள் என்றே நினைத்தான். 'பழக பழக பாலும் புளிக்கும் ' என்றதை தவறாக புரிந்து கொண்டானோ? அவன். பால் புளிக்கும் சரி, உயிர் காக்கும் அமுதம் கூடவா புளிக்கும் ?


அவன் ஆழ்மனத் தேடல்களுக்கு விடையாக போகிறவளின் மேல் அவனுக்கிருப்பது வெறும் மயக்கம் என்று அவன் நினைக்க, விதியோ அவனை பார்த்து எள்ளி நகையாடியது . அது அறியாமல் நித்திரையை தழுவியவனின் ஸ்வப்ணத்திலும் அவனை ஆட்டுவித்தாள் அந்த மாயக்காரி.


அங்கு அவன் நிம்மதியாக கண்ணயர பாவை அவளோ பீட்டா மற்றும் எம்மாவின் சரச சல்லாபத்தை தூரத்தில் நின்று பார்த்த நொடி அச்சாணி இழந்த தேராக தடுமாறினாள். பின்பு தன் தலையை உதறி கணப்பொழுதில் தன்னை மீட்டுக் கொண்டாள்.


லதீஷாவை காணச் சென்ற திலீப் வெகு நேரம் ஆகியும் அறைக்கு திரும்பாததால் கவலையுற்றான் தீபக். திலீப்பின் அரைவேக்காட்டுத்தனம் தெரிந்து 'ஏதாவது சிக்கலில் போய் மாட்டிக் கொண்டானோ' என்று லதீஷாவுக்கு அழைத்து விபரம் கூறினான். பலமுறை இருவரும் அவனை தொடர்பு கொள்ள முயன்று பலனற்று போகவும் அவனை தேட ஆரம்பித்தனர்.


' இவன் எனக்கு பாடி கார்டா இல்லை நான் இவனுக்கு பாடி கார்டானு தெரியல...ச்சைக் ' என்று தன் தலையில் அடித்துக் கொண்டு ஒவ்வோரு தளமாக திலீப்பை தேடிக் கொண்டிருந்த லதீஷாவின் கண்களில் விழுந்தது அந்த இலவச முத்தக் காட்சி. அதில் முகம் இறுக நின்றிருந்தவளை கலைத்தது அவளின் வாட்ஸ்ஆப் நோட்டிபிகேஷன். அதை திறந்து பார்த்தவளை வரவேற்றது " திலீப் கிடைத்து விட்டான் " என்ற செய்தி. அதில் அசுவாசமடைந்தவள் மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் நகர்ந்து தன் அறையை அடைந்தாள்.
உள்ளே வந்தவள் கலக்கம் சுமந்த முகத்துடன் , அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அப்போது அந்த பிரம்மாண்ட அறையின் உள்ளறை கதவு திறக்கப்பட அவளையே ஆழ்ந்து பார்த்தபடி "வேலைல மட்டும் கவனத்தை வை தீஷா. எமோஷன்ஸ் பீலிங்ஸ்க்கு எல்லாம் இங்க இடமில்லை... " என்றது அறை வாயிலில் நின்ற உருவம். அவ்வார்த்தைகளை ஆமோதிப்பது போல சிறு புன்னகையுடன் தலை அசைத்தாள் லதீஷா .பின்னர் "குட் நைட் தீஷா" என்றதுடன் அந்த அறை அடைக்கப்பட்டது.


தன் படுக்கைக்கு சென்ற லதீஷாவுக்கு தான் உறக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி காட்டியது. இருந்தும் தளராது உறங்க முயன்றாள். அதே நேரம் தன் படுக்கையில் படுத்த திலீப் சற்று முன் நடந்த சம்பவங்களை எண்ணிக் கொண்டே எதிர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தீபக்கை கண்களால் யோசனையுடன் அளந்தான்.


சற்று நேரத்துக்கு முன்னர் தான் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்த திலீப் அனிச்சையாக தன் கைபேசியை எடுத்துப் பார்க்க, அது சார்ஜ் இல்லாமல் அணைந்திருந்தது. 'அய்யோ மேடம் எப்போவும் போன் ஸ்விச் ஆஃப் பண்ணக்கூடாதுன்னு சொன்னாங்கலே ' என்று வேகமாக சார்ஜ் போட அறையை நோக்கி நடந்தவனை தேக்கியது "நான் சொல்லும் போது காரியத்தை கச்சிதமா முடி , கேஷ் உன் அக்கவுண்ட் தேடி வரும் " என்ற கடினக் குரலும் , அதற்கு பதில் அளித்த " ஓகே சார் " என்ற பரிச்சையமான குரலும் .


புருவம் சுருங்க 'தீபக் வாய்ஸ் மாதிரி இருக்கே ' என்று சந்தேகித்தவன் குரல் கேட்ட திசையில் திரும்பினான். அங்கு யாருடனோ முதுகு காட்டி தீபக் பேசிக் கொண்டிருப்பது தெரிய , அருகே சென்றான். அதற்குள் தீபக்குடன் பேசிக் கொண்டிருந்தவன் லிப்டுக்குள் புகுந்து கொள்ளவும் அந்த தானியங்கி கதவுகள் மூடப்பட்டது.


" யாருகிட்ட மாப்ள பேசிட்டு இருந்தே ? " என்ற நண்பனின் எதார்த்தமான கேள்வியில் திடுக்கிட்டு திரும்பிய தீபக்கின் முகம் பதட்டத்தை பூசிக் கொண்டது. அதை கண்ட திலீப்பின் முகம் யோசனையை தத்தெடுத்தது. அவன் கேள்வியை புறம் தள்ளிய தீபக்கோ " எங்க மச்சி போன ? உன்னை எங்கெல்லாம் தேடுறது ? " என்று பதில் கேள்வி எழுப்பி அவனை திசை திருப்ப முயன்றான். அவன் முயற்சி புரிந்தது போல திலீப்பும் அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான். தீபக்கும் நண்பன் அறைக்கு வந்துவிட்டதாக லதீஷாவுக்கு தகவல் தந்துவிட்டு உறங்கச் சென்றான்.


இவை அனைத்தையும் மனதில் அசைபோட்ட திலீப்பின் உள்ளுணர்வு நண்பன் ஏதோ தவறு செய்வதாக அடித்துக் கூறியது . அப்படி இருந்தால் நண்பன் தவறு செய்யும் முன் அவனை தடுத்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய படி துயில் கொண்டான்.


இனி அவர்கள் அனைவர் வாழ்விலும் நிம்மதியான உறக்கத்திற்கு எல்லாம் வழியே இல்லை என்பதறியாது அனைவரும் கண் அயர்ந்தனர்.


கருந்துளை ஈர்க்கும் 🌀
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,863
Reaction score
34,888
Points
113
Age
36
Location
Tirunelveli
தீஷாவுக்கும் எம்மாவுக்கும் எதுக்குடா ஹாய்லாம சொல்றேள்🤨
Avanga 2 perum thana female characters 😑😑😑😑😑

Summa oru welcome ku than🙄🙄
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,863
Reaction score
34,888
Points
113
Age
36
Location
Tirunelveli
Vanthaan check pannan,

Stud a pidichu pathukittan,

Mood illai nu thoonga poitan 😳😳😳

Epi um mudinju pochu🙄🙄🙄🙄


Dupakkur dancer nu thana sonninga, avanga 2 per feeling a patha Ducati bike doubles povanga polaye🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Interesting epi👍👍👍
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
Vanthaan check pannan,

Stud a pidichu pathukittan,

Mood illai nu thoonga poitan 😳😳😳

Epi um mudinju pochu🙄🙄🙄🙄


Dupakkur dancer nu thana sonninga, avanga 2 per feeling a patha Ducati bike doubles povanga polaye🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Interesting epi👍👍👍
என் ஹீரோவ அசிங்க படுத்துறியேடா🙄 . அவன் ஒரு மாஃபியா தலைவனோட ரைட்டு ஹேண்டு டூட். 😎சுட்டுருவான்🗡 பீ கேர்புல். டுகாட்டில டபிள்ஸ்ஸா. அவன் பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்பு 😂
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements