அனாமிகா 28 - விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀 கருந்துளை 06

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
அனாமிகா 28

விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀

கருந்துளை 6

திலீப்பின் எச்சரிக்கையை "குறைகிற நாய் கடிக்காது திலீப்… " என்று புறம் தள்ளினாள் லதீஷா. அப்போது அவர்கள் பக்கத்தில் நிழலாடவும் இருவரும் ஒரு சேர திரும்பினர். அங்கு ஒரு வெள்ளைக்கார கட்டழகியின் இடையை பிடித்தபடி லதீஷாவை விழுங்கும் பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் பீட்டா.

அவளை பார்வையால் உரசி உரசி மனதில் தீப்பொறியை பற்ற வைத்தான் தலைவன். பார்வையை லதீஷாவிடம் பதித்து கையால் செய்கை செய்து திலீப்பை அவ்விடம் விட்டு நகர பணித்தான் பீட்டா. அதற்கு பிறகும் அங்கு நின்று கொண்டிருக்க திலீப்புக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ?அவன் சாம்பல் நிற விழிகளில் கண்ட தீப்பொறி அவளுள் பெருந்தீயாக சுடர் விட்டு எரிய , அதில் இருந்து தப்பிக்கும் பொருட்டு தன் விழிகளை திருப்பியவளின் பார்வை அவன் அருகில் நின்ற கட்டழகியின் இடையை வளைத்த அவன் வலிய கரங்களில் நிலைத்தது.

அக்காட்சியைக் கண்ட பேதைக்கு ஏன் என்று தெரியாத புகைச்சல் மனதில் உண்டானது. அது ஏற்படுத்திய தாக்கத்தை தன் செம்பவள இதழ்களை பற்தடம் பதிய அழுந்த கடித்து காட்டினாள் லதீஷா. அவள் இதழ்களில் பார்வையை ஓட்டியவனுக்கு , அந்த கனி இதழின் சுவை நினைவிலாட அவற்றை மீண்டும் கைபற்றும் வேட்கை எழுந்தது. அதற்குள் அவன் தோள்களில் தவழ்ந்த அழகி கிள்ளை மொழியில் " கம் ஆன் பேபி.லெட்ஸ் கோ " என்று மிழற்றினாள். லதீஷாவுடன் பின்னிப் பிணைந்த தன் பார்வையை அகற்றி அவளை தாண்டிச் செல்ல முற்பட்டவனை " வான்னாஹ் ப்ளே… " என்று தன் மயக்கும் குரலில் கேட்டு தேக்கினாள் பாவை. கண்கள் பளபளக்க அவளை பார்த்து புருவம் உயர்த்தியவனுக்கு போக்கர் மேசையை கண்களால் காட்டி பார்வையால் அறைகூவல் விடுத்தாள் .

பெண்ணவளின் கூர்விழிகளில் கண்ட எதுவோ ஒன்று அவனை கட்டி இழுக்க, தன் தோளில் தொங்கிய கட்டழகியிடம் பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு, லதீஷாவின் சவாலை ஏற்று நின்றான் பீட்டா. போக்கர் மேசையின் எதிர் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தன் வலது காதின் ஸ்டட்டை அழுந்த வருடியபடி " வாட் இஸ் யுவர் பெட்… " என்றான் ஒரு மர்மச் சிரிப்போடு.

பெண்ணையும் மண்ணையும் வைத்து சூதாடிய இதிகாச கதைகள் கேள்வியுற்றிருப்போம். ஆனால் ஒரு பெண்ணே தன்னை பணயம் வைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தை சரிக்க பிணையான புது வரலாற்றை படைக்க முதல்படியை எடுத்தாள் லதீஷா. தன் முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை கழுத்தோரம் ஒதுக்கியபடி ,அவள் தன்னை பணயம் வைப்பதாகக் கூற லேசாக இதழ்கள் துடிக்க " துரியோதனனா மாறி உன்ன சொந்தம் கொண்டாட மாட்டேங்கற நெனப்பா ? இல்ல துச்சாதனனா உன்னை துகில் உரிய மாட்டாங்கற தைரியமா ? " என்றான் ஒரு மாதிரி குரலில். அவன் கேட்ட தொனியே ' இவை அனைத்தும் செய்யக் கூடியவன் தான் நான்' என்று உணர்த்த, இருந்தும் முன் வைத்த காலை பின் வைக்க விரும்பவில்லை அவள். ஒரு கணம் தன் இலக்கை கண்ணெதிரே நிறுத்தி ஆழ மூச்செடுத்து தன்னை நிதானபடுத்தினாள். அவள் உடலில் ஓடிய அதிர்வையும் கண்களில் விரவிய பயத்தையும் ஒரு முறை திருப்தியுடன் கண்ணுற்றவன் " லெட் தி கேம் பிகின்… " என்று கூற டீலர் இருவருக்கும் கார்டுகளை பங்க ஆரம்பித்தார்.

பார்வையில் மோஹத்தை கூட்டி வார்த்தைகளில் கடுமையை காட்டும் அந்த வில்லாதி வில்லனின் செயல்கள் அவளை அச்சுறுத்தினாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " நீங்க தோத்துட்டா ? " என்று அவள் முடிக்கவில்லை , இருக்கையின் நுனிக்கு நகர்ந்து வந்தவன் மேசையின் மீது தன் இரு கரத்தையும் கோர்த்தபடி , " இங்க ஜெயிக்கறது நானா மட்டும் தான் இருக்கும். இருக்கனும் ..." என்றான் ஒரு உணர்ச்சி துடைத்த குரலில்.

அந்த வார்த்தைகள் அவன் திறமையின் மீதான நம்பிக்கையாக தெரியாமல் தன்அகங்கார பேச்சாகத் தான் தோற்றியது லதீஷாவுக்கு. இறுதியில் எது எப்படியோ அவனது தலைகனத்தை அடக்கவேணும் இப்போட்டியில் தான் வெற்றி பெற வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டாள். அவள் மனவோட்டம் புரிந்தது போல ஒரு அர்த்தப் புன்னகையோடு டீலர் பங்கிட்ட கார்டுகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தான் பீட்டா . எடுத்த எடுப்பிலேயே தொகையை உயர்த்தி சிப்புகளை ரெயிஸ் (raise) செய்தவனின் அதிரடியில் இவளும் அதே தொகையை கால் (call) செய்தாள் . இருப்பினும் லதீஷாவுக்கு ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் கார்டுகளை ஃபோல்ட் (fold) செய்யும் படி ஆயிற்று. தொடர்ந்து இரண்டு ஆட்டங்கள் அவன் வெற்றி பெற ஒரு ஆட்டம் இவள் வெற்றி பெற்றாள் .

அவன் காட்டும் மின்னல் வேக உத்தியில் பெண்ணவள் சற்று திகைத்து நின்றது உண்மை. மீண்டும் ஒரு ஆட்டம் சமநிலையில் முடிய, இறுதிச் சுற்று சூடு பிடிக்க ஆரம்பித்தது. ' ஸ்டையிட் ஃப்ளஷ் ' ( straight flush )என்று தன் கார்டுகளை பரப்பியவள் "ஐ வன்" என்று வெற்றிக் களிப்போடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஏனெனில் போக்கரில் ஸ்டையிட் ஃப்ளஷ் என்பது வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு உயர்ந்த கார்ட் தொகுப்பு.

அவள் முகத்தில் வந்து போன குதூகலத்தை ஒரு சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்தவன் , " எப்பவுமே வெற்றியை சீக்கிரமா கொண்டாடக் கூடாது... " என்றவன் தன் கார்டுகளை பரப்பி 'ராயல் ஃப்ளஷ்' (royal flush) என்று மொழிந்தான். அதில் வியப்பை அப்பட்டமாக பூசிக் கொண்டது லதீஷாவின் முகம். காரணம் ராயல் ஃப்ளஷ் என்பது ஒருவருக்கு சேருவதெல்லாம் அரிதிலும் அரிது. அத்தொகுப்பை சாதாரணமாக அணிவகுத்து வைத்தவனை வாயை பிளந்தபடி பார்த்தாள் லதீஷா.

ஆச்சரியம் தீராமல் அவன் முகத்தையும் , அணிவகுத்த கார்டுகளையும் மாறி மாறி பார்த்த பாவையை நோக்கி நமுட்டுச் சிரிப்பு சிந்தி ஒற்றை கண் அடித்து இதழ் குவித்தான் பீட்டா .அதை கண்ட லதீஷாவின் கயல்கள் வட்டமாக விரிந்து கொண்டது. அவன் காட்டிய முகபாவம் பிரம்மையோ என்னும் விதமாக மீண்டும் அவன் முகம் உணர்ச்சிகளற்ற கற்பாறையாக மாற குழம்பினாள் மாது. அதனால் மூண்ட எரிச்சலில் ' சரியான கடோத்கஜன் ' என்று சத்தமாக முணுமுணுத்தவளின் வார்த்தைகளில் அவன் மனது "மைன் " என்று சத்தமாக இரைந்தது.

அச்சமயம் எங்கிருந்தோ கேட்ட " ஹாய் பீட்டா டார்லிங்… " என்ற எம்மாவின் நாராச குரலில் இருவரின் மாயவலையும் அறுபட்டது. அவர்கள் அமர்ந்திருந்த மேசை அருகே வந்தவள் அவன் இதழ்களில் தன் இதழை பதித்து " ஷால் வீ ? " என்று லதீஷாவை பார்த்துக் கொண்டே கேட்டாள் . அதை கண்ட லதீஷாவின் முகத்தில் வந்து போன இயலாமையுடன் கூடிய கடுப்பை கடைக்கண்ணால் ரசித்து அவனை இன்னும் நெருங்கினாள் எம்மா. அதை கண்ட லதீஷாவுக்கு உடலெல்லாம் காந்தியது. தன் ஆத்திரத்தை அடக்கியவள் "எக்ஸ்க்யூஸ் மீ… " என்று கூறி அங்கிருந்து வெளியேறினாள். ஏன் என்று தெரியாமல் கண்கள் வேறு லேசாக கலங்கியது பெண்ணவளுக்கு.

எம்மாவிடம் தன் விருப்பமின்மையை " நாட் இன்ட்டிரஸ்ட்டட்" என்று வெளிப்படையாகவே உரைத்த பீட்டாவும் லதீஷாவை தேடி ஓடினான். அவன் சென்ற திக்கையே வெறித்துக் கொண்டிருந்த எம்மாவுக்கு லதீஷாவிடம் தோற்ற உணர்வு. அவ்வுணர்வில் வெதும்பியவள் லதீஷாவை சாய்க்க தக்க தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.

அத்தளம் முழுக்க அவளை காணாது தேடிக் கொண்டிருந்தவன், தெரியாமல் எதிரில் ஏதோ ஒரு பெண்ணிடம் வழிந்து கொண்டு வந்த திலீப்பின் மீது இடித்து விட்டான். அதில் நிலை தடுமாறி விழ போன திலீப் "அடேய் கண்ணு தெரியாத கபோதி.. " என்று பாதி வாக்கியத்தில் நிறுத்தி , " பாத்து வரதுக்கு என்ன ?"என்ற மீதி வார்த்தைகளை இடித்தது பீட்டா என்று தெரிந்ததும் ' அய்யய்யோ உனக்கு நேரமே சரியில்ல திலீப்பு... ' என மனதோடு பேசியபடி கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் திலீப்பை உண்டு இல்லை என்றாக்கி இருப்பான் பீட்டா . ஆனால் இன்று அவன் கவனம் முழுக்க லதீஷா ஆக்கிரமித்திருக்க, திலீப்பிடம் வம்பு வளர்க்காது அவளை பற்றி வினவினான். அவனும் லதீஷா அறைக்கு செல்வதற்கு லிப்ட்டை நோக்கி சென்றதாக தகவல் அளித்துவிட்டு மீண்டும் தன் கடலை போடும் பணியை தொடர்ந்தான்.

அத்தளத்தின் லிப்டில் ஏறிய லதீஷாவை கண்டு வேகமாக ஓடினான் பீட்டா. அவன் அருகில் செல்லவும் அந்த பன்னிரண்டாம் தளத்தின் தானியங்கி கதவுகள் மூடவும் சரியாக இருந்தது. "பிளடி ஹெல் " என்று முனகியவன் தன் கை முஷ்டிகளை பக்கத்தில் இருந்த சுவற்றில் குத்தி தன் கடுப்பை குறைக்க முயன்றான். அவள் தங்கி இருக்கும் நான்காவது தளத்தை நோக்கி லிஃப்ட் செல்வதை அறிவிப்பு பலகையில் பார்த்தான் பீட்டா .தனக்கு பக்கத்தில் இருந்த படிகளில் கண்களை பதித்தவன் நாலு கால் பாய்ச்சலில் அடுத்த மூன்று தளங்களை கடந்து லிப்டுக்காக காத்திருந்தான்.

அவனை ஏமாற்றாமல் லிஃப்ட்டும் அந்த எட்டாவது தளத்தில் நின்றது.திறந்த லிப்டுக்குள் நிதானம் இல்லாமல் குடித்துவிட்டு விழுந்து கிடந்த நீரஜை கண்டு தலையில் அடித்துக் கொண்டான் பீட்டா.அவனை அப்படியே விட்டு செல்ல மனதில்லாமல் , வேறுவழியின்றி நீரஜை அலேக்காக தன் தோளில் கிடத்தி , அவன் தங்கியிருந்த ஆறாவது தளத்தின் விஐபி சூட் அறையை நோக்கி சென்றான்.

நீரஜ்ஜின் பாக்கெட்டில் இருந்த ஆர்.எஃப்.ஐ.டி கீ கார்டை கதவில் பொருத்தி அவனை அங்கிருந்த மெத்தையில் கிடத்திவிட்டு நகர முற்பட்டவன் ஒரு முறை காலி மதுபுட்டிகளும் , டிரக்களும் , கருத்தடை சாதனங்களுமாக இறைந்து கிடந்த அறையை நோட்டமிட்டான். அலங்கோலமாக கிடந்த அவனது வார்ட்ரோப் முதல் மேசை டிராவர் வரை நோட்டமிட்டவன், முகம் சுருங்க கண்களை மூடித் திறந்து, ஆழ மூச்செடுத்து 'ஸ்பாயில்ட் சைல்ட் ' என்று நினைத்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அறையை விட்டு வெளியேறியவன் அத்தளத்தின் பையர் எக்ஸிட் வழியாக யாரோ ஓடியது போல தெரியவும் , யாரென்று பார்க்க அவனும் பையர் எக்ஸிட் வழியாக படிகளில் இறங்கினான். அவன் துரத்திய நபர் நான்காம் தளத்தில் சென்று மறைய , யோசனையாக அந்த வெறிச்சோடிய வெராண்டாவை வெறித்தான். அதன் ஒரு மூலையில் இருந்த விண்டோவில் சாய்ந்தபடி யாரிடமோ " அந்த டார்கெட் இருக்கிறதா சொல்ற ரூம் காலியா இருக்கு …. " என்று கூற, அந்த பக்கத்தில் ஒரு கம்பீரமான முதிர்ந்த ஆண் குரல் " காலி ரூம்க்கு செக்யூரிட்டி போட வாமன் ஒன்னும் பைத்தியக்காரன் இல்ல…. " என்று உரைத்தது. அதை ஆமோதித்தவள் " இன்னும் கொஞ்சம் டைம் வேணும் எங்களுக்கு ... " என்று கூறிக் கொண்டிருக்க , அவளுக்கு பின்னால் கேட்ட பூட்ஸ் சத்தத்தில் கைபேசியை அணைத்துவிட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கு அவளை லஜ்ஜை இன்றி பார்வையால் மேய்ந்தபடி நடந்து வந்துக் கொண்டிருந்தான் பீட்டா. ஆனால் எப்போதும் அவன் பார்வைக்கு மயங்கி நிற்பவள் ஏனோ அவனை ஒரு அறிமுகமற்ற சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள். அதன் காரணம் எம்மாவா ? அல்லது வேறு ஏதாவதா ? அவள் பார்வையில் இருந்த வேற்றுமையில் ஒரு நிமிடம் அவள் முகத்தையே பார்த்திருந்தவனை 'கண்களால் எட்டி நில்' என்று எச்சரித்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

தன்னிடம் முகம் வெட்டிச் சென்ற பாவையின் மீது கடுங்கோபம் கொண்டு அவள் ,அறை கதவை தட்டினான். சற்று தாமதித்து கதவை திறந்தவளின் முகம் பதட்டத்தை தத்தெடுத்திருந்தது. தன் வலது காதின் ஸ்டட்டை அழுந்த வருடியபடி அவளை கண்களால் அளந்தான் பீடா. அவன் சாம்பல் நிற விழிகளில், இதயம் தடதடக்க தன் இமைகளை குடையாக்கி பார்வையை தாழ்த்தி நின்றாள் லதீஷா.

சற்று முன்னர் அவனை பார்வையால் எட்ட நிறுத்தியது என்ன ? இப்போது நாணத்தில் தன் முகம் காண மறுப்பதென்ன? இதில் எது நிஜம் ? என்று தன் மனதை அரித்த கேள்விக்கு விடை காண முடியாமல் திணறினான் காளை .அவன் முகத்தை ஆராய்ந்த மங்கைக்கு 'எம்மாவுடன் கொஞ்சிக் கொண்டிருந்தவன் அவளை தேடி எதற்காக வர வேண்டும்?' என்று தோன்ற , இறுதியாக அவனிடமே தயங்கியபடி கேட்டாள். அதற்கு " ஐ கேம் டூ கிளைம் மை விக்டரி... " என்றானே பார்க்கலாம்.

அவன் பதிலில் மலங்க மலங்க விழித்து கொண்டு நின்றவளை நெருங்கி " ஐ டோன்ட் டூ ரிலேஷன்ஷிப்ஸ். பட் ஷிப் கோவா போற வரைக்கும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.மைன் அண்ட் மைன் அலோன்... " என்று குரலுயர்த்தாமல் வார்த்தைகளில் ஆளுமையை கூட்டி கூறினான்.

அவளென்ன உயிரற்ற பொருளா ? அவன் சொந்தம் கொண்டாட ? தன் தாபத்துக்கு தீனி போடும் வெறும் சதை பிண்டமாக பார்ப்பவனை கண்டு மனதில் ஒரு வித வெறுப்பு தோன்றியது லதீஷாவுக்கு. இருந்தும் 'பகைவரை உறவாடிக் கெடு' என்ற சகுனியின் தந்திரத்தை மனதில் நிறுத்தி 'சரி' என்னும் விதமாக தலை அசைத்து சதுரங்க ஆட்டத்தின் முதல் காயை நகர்த்தினாள்.அவள் நோக்கம் தெரியாமல் பாவையின் மெல்லிடையை வளைத்து தன்னுடன் நெருக்கி " மை ரூம்... " என்று கூறி அவளை வழிநடத்திச் சென்றான் பீட்டா . இதுவரை எந்த பெண்ணும் பார்த்திராத அவனது தனிப்பட்ட அறைக்கு பெண்ணவளை அழைத்துச் சென்றான் அவளின் கடோத்கஜன் .

அதே சமயம் தன் அறைக்கு வந்த தீபக் யாருக்கோ அழைத்து " சார் அந்த ரூமையே சல்லடை போட்டு தேடிட்டேன். நீங்க சொல்ற ஐட்டம் மட்டும் கிடைக்கலை" என்றான். " இதை சொல்லவா அவ்ளோ பெரிய அமௌன்ட் கைநீட்டி வாங்குன?இடியட், கண்டிப்பா அது அவன் கிட்ட தான் இருக்கனும். சீக்கிரம் கண்டுபிடி ... " என்று எதிர்புறத்தில் ஒலித்த குரல் தொடர்பை துண்டித்தது.

அவரவர் காய்களை நகர்த்தி அவரவர் வ்யூகம் அமைக்க, ராட்டினமாக சுழன்ற விதியும் தன் பங்குக்கு தன் வ்யூகத்தை செயலாற்றிக் கொண்டிருந்தது.

கருந்துளை 🌀 ஈர்க்கும்
IMG-20211209-WA0007.jpg
 
Last edited:

Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
880
Reaction score
1,021
Points
93
Location
USA
இந்த எம்மா எல்லாம்🤭🤭🤭

அடேய் பீட்டா, என்னடா உனக்கு முன்னாடியே இருக்கா, அவளா கண்டு பிடிக்க முடியலையா உனக்கு, என்னமோ போடா 🙄🙄🙄

அந்த கம்பீர முதிர்ந்த குரல், இவளோட மேல் அதிகாரியா இருக்கும்🧐🧐🧐🧐

திலீப் யார் ரூமில் தேடரான், நிரஜ் ரூம்லையா, அது அந்த வாட்ச் தானே 🤔🤔🤔
 
Chittijayaraman

Well-known member
Joined
Oct 16, 2018
Messages
2,086
Reaction score
4,242
Points
113
Location
Chennai
Inda story ship la dan nadanthu mudimjidum pola iruke apapfi enna dan iruku anda ship la lathisha enna thedura ellorum thedura alavuku enna iruku drugs ah illa vera ennamo irukum pola, eppadiyo avalai kutitu poitane, nice update dear thanks.
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
இந்த எம்மா எல்லாம்🤭🤭🤭

அடேய் பீட்டா, என்னடா உனக்கு முன்னாடியே இருக்கா, அவளா கண்டு பிடிக்க முடியலையா உனக்கு, என்னமோ போடா 🙄🙄🙄

அந்த கம்பீர முதிர்ந்த குரல், இவளோட மேல் அதிகாரியா இருக்கும்🧐🧐🧐🧐

திலீப் யார் ரூமில் தேடரான், நிரஜ் ரூம்லையா, அது அந்த வாட்ச் தானே 🤔🤔🤔
மக்கா தேடுனது தீபக்கு திலீப் இல்ல. அது ஒரு பச்ச மண்ணு. அவன் அறிவு கண்ணை அவள் அழகு மறைத்து விட்டது கோபால்😂
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
880
Reaction score
1,021
Points
93
Location
USA
மக்கா தேடுனது தீபக்கு திலீப் இல்ல. அது ஒரு பச்ச மண்ணு. அவன் அறிவு கண்ணை அவள் அழகு மறைத்து விட்டது கோபால்😂
Ahaan Deepak than
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
Inda story ship la dan nadanthu mudimjidum pola iruke apapfi enna dan iruku anda ship la lathisha enna thedura ellorum thedura alavuku enna iruku drugs ah illa vera ennamo irukum pola, eppadiyo avalai kutitu poitane, nice update dear thanks.
அய்யய்யோ நான் என்னன்னமோ ப்ளேன் பண்ணி வச்சிருக்கேனே . நீங்க என்ன இப்டி பொசுக்குனு ஷிப்ல முடிஞ்சிடும்னு சொல்லிட்டிங்க 😫 அவ டிரக்ஸ் கண்டு பிடிக்க தான் வரா. ஆனா என்னன்னமோ நடந்திடுச்சு மை சன்😷
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
515
Reaction score
780
Points
93
Ahaan Deepak than
அதே அதே... ஒரு கதை படிச்சா நியாபகம் இருக்கும் 85 கதையும் படிக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்ல. இருந்தாலும் நீங்க எல்லாம் ரொம்ப கிரேட் 🤗
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
880
Reaction score
1,021
Points
93
Location
USA
அதே அதே... ஒரு கதை படிச்சா நியாபகம் இருக்கும் 85 கதையும் படிக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்ல. இருந்தாலும் நீங்க எல்லாம் ரொம்ப கிரேட் 🤗
😁😁😁Danks pa
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements