அனாமிகா 28 - விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀 கருந்துளை 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
514
Reaction score
773
Points
93
அனாமிகா 28

விழுந்தேன் காதல் கருந்துளையில் 🌀

கருந்துளை 31டாக்டர் அப்துல் கலாம் தீவு, ஒடிசா கடற்கரையில் மார்ச் 27 2019 அன்று…..


அந்த ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தின் எல்லையில் புறப்பட தயார் நிலையில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த 18 டன் எடை கொண்ட ராணுவ ஏவுகணை . இயந்திரக் குரலில் 5 4 3 2 1 0 +1 +2 +3 +4 +5 என்று கண்ட்ரோல் ரூமில் இருந்து கவுண்ட் டவுன் எண்ணப்பட டம டம டம என்று சீறிப் பாய்ந்து 3 நிமிடத்தில் 300 கிமீ தாழ்வு வட்ட பாதையில் பயணித்து தன் இலக்கை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் விண்ணில் இருந்து மண்ணை அடைந்து வெற்றி வாகை சூடியது ‘மிஷன் ஷக்தி’ ஏவுகணை. அதை கண்ட்ரோல் ரூமில் வெள்ளை அங்கி அணிந்து அமர்ந்திருந்த இந்திய விஞ்ஞானிகள் , பிரதமர் , டிபன்ஸ் மினிஸ்டர் சத்ய தேவ் , கடற்படை தலைவனான ரிச்சர்ட் , பாதுகாப்பு தகவல் ஆய்வில் ஈடுபட்டிருந்த உதய் சிங் என்று எண்ணற்றோர் கண்டு மகிழ்ந்தனர்.


இதுவே அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்களிலும் பேசு பொருளானது. 'தி ஐரிஷ் டைம்ஸ் ' ' தி டான் ' தொடங்கி 'தி நியூயார்க் டைம்ஸ்' வரை பிரபல சர்வதேச பத்திரிகைகள் கூட " MISSION SHAKTHI : A BOOST TO INDIA'S DEFENSE CAPABILITY " , "INDIA - GATE CRASHED INTO THE ARM RACE WITH AMERICA CHINA AND RUSSIA " என்று இந்த ஏவுகணை பரிசோதனையின் வெற்றியை விவாதித்து எழுதினர்.


இவை அனைத்தையும் தொலைக்காட்சி செய்திகள் வழியாக மருத்துவமனை படுக்கையில் தோளில் கட்டுடன் படுத்திருந்த வர்ணன் கண்ணுற்றான். கண்கள் பணிக்க " ஜெய் ஹிந்த் " என்று முணுமுணுத்தவன் , அப்படியே தன் நினைவுகளில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை புரட்டினான்.


முக்கிய கலந்தாய்வு முடிய வெளியே வந்தவனின் தோள் பற்றி திருப்பிய சந்தீப் " வர்ணா இப்ப ஏன் திடீர்ன்னு நம்ம சயின்டிஸ்ட்ஸ் எல்லாத்தையும் அவங்களுக்கே தெரியாம கடத்த சொல்ற ? செக்யூரிட்டியை டைட் பண்ணா பத்தாதா ? "என்றார் யோசனையாக. இதழ்கள் துடிக்க சந்தீப்பை பார்த்தவன் " நான் வாமனோட அஞ்சு வருஷம் இருந்திருக்கேன். அவன் எப்படி யோசிப்பான் எப்படி முடிவெடுப்பான்னு எனக்கு நல்லா தெரியும் மேஜர் " என்று கூறி தன் வலது காதின் நுனியை வருடினான்.


மேலும் அதன் முதல் கட்டமாக ராம் தாஸை கைதி செய்தான் . காரணம் எங்கு தங்கள் திட்டத்தை மோப்பம் பிடித்துவிடுவானோ என்று அவன் மூலமாக வாமனுக்கு 'செக்' வைத்தான் . அவனறிவான், வாமனின் தனிச்சிறப்பே யாரும் எதிர்பார்க்காத கோணத்தில் யோசித்து எதிரியை வீழ்த்துவது தான் என்று. பல நேரங்களில் எதிரி யோசிக்காதபடி தற்செயலாக நிகழ்வுகளை அரங்கேற்றி தன் திட்டத்தை வகுப்பதில் வாமன் வல்லவன். எனவே அதை நன்கு புரிந்திருந்த வர்ணன் , தன் முடிவை செயலாற்ற முனைந்தான்.


டிஆர்டிஓவின் தலைமை அலுவலகத்தில்,


சரியாக மிஷன் ஷக்தியின் புறப்பாடுக்கு ஒரு மூன்று நாட்களுக்கு முன்னர் டிஆர்டிஓ தலைமையகத்தில் ஒரு முக்கிய கலந்தாய்வு ஒன்று நடைபெற்றது. அதற்கு மிஷன் ஷக்தியை செயலாக்கும் அனைத்து விஞ்ஞானிகளும் வருகை தந்திருந்தனர் . சிறிது நேரத்தில் சபை முடிய அனைவரும் அவரவர் வண்டியில் ஏறினர்.கருப்பு பூனை பாதுகாப்பு அந்த கார்களின் முன்னும் பின்னும் அணிவகுக்க கார்கள் வேகமெடுத்து ஒரு நெடுஞ்சாலையில் பயணித்தது. அப்போது சற்று தொலைவு சென்ற கார்கள் ஆள்அரவமற்ற கிளை சாலையில் திடீரென்று நின்றது.


கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கருப்பு பூனை படையினர் வண்டியில் இருந்து குதித்து வந்து வேகமாக தங்கள் பாதுகாப்பில் இருந்த விஞ்ஞானிகளின் கார்களை சரமாறியாக சுட்டனர். அதில் கார் கண்ணாடிகள் எல்லாம் பொலபொலவென உதிர்ந்து சிதறியது. மேலும் தோட்டாக்கள் பாய்ந்த அந்த கார்கள் எல்லாம் சின்னாபின்னமாக காட்சியளித்தது.


அந்த தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவன் தன் பைனாகுலரால் அந்த கார்களை எல்லாம் நோட்டம் விட்டான். பின்னர் தன் காதில் பொருத்திய ப்ளூடூத் கருவி மூலம் " அசைன்மென்ட் அகம்ப்ளிஷ்ட் பாஸ். " என்று கூறி முடிக்கவும் , அந்த தாக்கப்பட்ட கார்களில் இருந்து சில கையெறி குண்டுகள் அவர்களை நோக்கி பறந்து வந்து, நிலைதடுமாறச் செய்தது.


திடீரென்று தாக்கப்பட்ட கார்களில் இருந்து விஞ்ஞானிகளாக மாறுவேடம் தரித்திருந்த இரண்டு இரண்டு மரைன் கமேண்டோக்கள் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டும் முகமூடியும் அணிந்து காரின் மேல் தளம் பழுதான கதவு என்று அனைத்தையும் உடைத்துக் கொண்டு வெளிப்பட்டனர்.அதில் நடுநாயகமாக நின்றிருந்தான் கமேண்டோ திரிவர்ணன் சக்கரவர்த்தி. " ஆர் வி கோயிங் டூ சேலன்ஞ் அவர் எனிமீஸ் " என்று கத்த அந்த தனிப் படை குழு " எஸ் சார் " என்று கத்தியது. " பைஃயர் " என்று அவன் கூறிய அடுத்த நொடி சரமாறியாக குண்டு மழை பொழிந்தனர் அவன் படையினர்.


அடுத்த அரை மணி நேரம் துப்பாக்கி சுடும் சத்தமும் , குண்டு வெடிக்கும் சத்தமும் காதை கழித்தது. விஞ்ஞானிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலுக்குள் ஊடுருவிய வாமனின் கையாட்கள் அனைவரும் கமேண்டோ படையினரால் உடல் சிதறி கிடந்தனர். அனைவரையும் வதம் செய்து முடித்த வர்ணன் தன் தோளில் பாய்ந்த குண்டடியுடன் , சக வீரர்களை பார்த்து " ஹூ ஆர் வீ ? " என்று கத்த " தி மார்கோஸ் சார் " என்ற சத்தம் காதை பிளந்தது. மீண்டும் அவன் " ஹூ தி ஹெல் ஆர் வீ " என்று ஆக்ரோஷமாக கத்த " தி ப்ஃயூ, தி ஃபியர் லெஸ் சார் " என்ற கோஷமும் " ஜெய் ஹிந்த் " என்ற முழக்கமும் காற்றில் மிதந்தது.


வாமனின் ஆட்கள் தங்கள் பாதுகாவல் படைக்காள் ஊடுருவி விட்டனர் என்ற தகவல் உதய் மூலம் வர்ணனுக்கு கிடைத்தது.எனவே அன்று காலை அந்த கலந்தாய்வு கூட்டத்துக்கு வந்த இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் மாற்றுப்பாதையில் பாதுகாப்பான இடத்துக்கு கட்டுக்காவலுடன் அனுப்பினான் வர்ணன். மேலும் அந்த விஞ்ஞானிகளின் இடத்தில் மாறுவேடத்தில் தங்கள் படையினரை அமர்த்தினான் அவன் எதிர்பார்த்தது போல பாதுகாப்பு வீரர்களாக ஊடுருவிய வாமனின் ஆட்கள் உள்ளிருப்பது விஞ்ஞானிகள் என்று நினைத்து அவர்களை தாக்கினர். ஆனால் அவர்களின் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்தது இந்திய ராணுவம். மேலும் தாக்குதலில் படு காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை வழங்க ஆவன செய்தனர்.


இது அறியாமல் களிப்புற்று இறுமாந்திருந்த வாமனுக்கு பேரிடியாக இருந்தது ஊடகங்களில் வந்த மிஷன் ஷக்தியின் வெற்றிச் செய்தி. ஒரு பக்கம் சர்வதேச இண்டர்போல்கள் , மற்றொரு பக்கம் மிஷன் ஷக்தியை தகர்க்க பணத்தை அள்ளி வீசியவர்களும் ,அவன் சூழ்நிலை அறிந்த தொழில்முறை எதிரிகள் என்று அனைவராலும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்தான் வாமன்.இதனால் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவனால் அவனது படுதோல்வியை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. தன் திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கிய வர்ணனின் செயலில் கொதித்தெழுந்த வாமன் தன் ஆட்கள் மூலம் தீஷாவை கடத்தி வர பணித்தான்.


அந்த மருத்துவமனை படுக்கையில் அமர்ந்திருந்த வர்ணனின் கைபேசி அப்போது அதிர்ந்து தன் இருப்பை உணர்த்தியது. அதை உயிர்பித்தவனின் காதை நிறைத்தது மருத்துவமனை பரிசோதனைக்கு சென்றிருந்த தீஷாவும் வைஷாலியும் கடத்தப்பட்ட செய்தி. அதை கேட்டவன் , தான் பாதுகாப்புக்காக வைஷாலியின் வாட்ச்சில் பொருத்தி இருந்த ஜி.பி.எஸ் டிராக்கிங் பற்றி மொழிந்து , அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தான். இது வாமனின் வேலையாக தான் இருக்க வேண்டும் என்றுணர்ந்தவன் தன் உடல் நலத்தை கூட பொருட்படுத்தாது தாயையும் மனையாளையும் சிறை மீட்க புறப்பட்டான்.


அந்த நகருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் இருந்தது அந்த சொகுசு வில்லா . கடத்தப்பட்ட வைஷாலியும் தீஷாவும் மயக்கம் தெளிய பெற அவர்கள் முன்னர் உணர்ச்சியற்ற பார்வை பார்த்து " வெல்கம் பேக் மை லவ் " என்றபடி நின்றான் வாமன். அவன் வார்த்தைகளில் தீஷா குழப்பமுற்று புருவம் சுருக்க , வைஷாலியோ ஒரு வெற்றுப் பார்வை வீசினார்.


நரைத்த தலைமுடியை ஜெல் கொண்டு அடக்கியவன் தன் ஒற்றை கண்ணில் பொருத்திய லென்ஸை அகற்றி தன் சாம்பல் நிற விழியால் வைஷாலியை கூர்ந்தான். அவனது மற்றொரு பார்வை இழந்து காட்சியளிக்க , அவனை திகைத்து நோக்கினாள் தீஷா. காரணம் வாமனை அவனது கருப்பு நிற கூலர்ஸ் இல்லாமல் அவள் கண்டதே இல்லை. மேலும் அவனது சாம்பல் நிற கருமணியை கண்டவளுக்கு எதுவோ புரிந்தும் புரியாத நிலை .


வாமனின் தோற்றத்தில் அசராமல் அமர்ந்திருந்தார் வைஷாலி. காரணம் அவனது ஒரு கண்ணின் பார்வையை பறித்தது அவரன்றோ. உண்மை தான் தீஷாவை போல அண்டர் கவர் இன்டெலிஜென்ட் ஆஃபீசராக பணிபுரிந்த காலத்தில் ஒரு சர்வதேச கல்லக்கடத்தல் கும்பலை பிடிக்க , பணிப்பெண்ணாக இன்டல் திரட்ட சென்றார் வைஷாலி. அப்போது அந்த கடத்தல் தலைவனின் கூட்டாளியான வாமனை காதல் வயப்படுத்தி அந்த மாஃபியா கும்பலின் தலைவனை பிடிக்கவும் செய்தார். அதில் தப்பிக்க முயன்ற வாமனின் ஒரு பக்க கண் பார்வை வைஷாலியால் குறுடாக்கப்பட்டது.


காதல் நாடகமாடச் சென்றவர் அந்த நாடகத்தின் முடிவில் கருவுற்றிருந்தது அவரே எதிர்பாராத ஒன்று.வாமனும் அவர் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் வைஷாலியை கொல்ல ஆட்களை ஏவினான்.அதில் தன் வயிற்றில் வளரும் மகவுக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என்ற பயத்தில் தன் ஆசை வேலையை கூட துறந்தார் வைஷாலி.


தன் வயிற்று குழந்தையின் பாதுகாப்பு ஒன்றே குறியாக கொண்ட வைஷாலியும் தன்னை அந்த மிஷனுக்கு அனுப்பிய அதிகாரியும் நண்பருமான மேஜர் விஜய நரசிம்மனின் உதவியை நாடினார். ஒருவிதத்தில் தானும் வைஷாலியின் இந்நிலைக்கு காரணம் என்ற குற்றக் குறுகுறுப்பு அவரை வாட்ட , அதுவரை நாட்டுக்காக வாழ்ந்தவர் வைஷாலிக்காகவும் அவளது பிள்ளைகாகவும் அவர்களை தன் வாழ்வுடன் இணைத்துக் கொண்டார்.


திருமணத்துக்கு பிறகும் வைஷாலிக்கு உற்ற பாதுகாவலனாக மட்டும் இருந்த நரசிம்மன், திரிவர்ணனை மட்டும் தன் உயிர் நீரில் ஜனிக்கா விட்டாலும் மகனாகவே பாவித்தார். மேலும் அவனுக்கு சிறந்த ஆசானாக இருந்து கல்வியுடன் நாட்டுப்பற்றையும் புகுத்தி வளர்த்தார். வளர வளர அவர்களின் தொழிலின் அபாயத்தை அவனுக்கு புரிய வைத்தவர்கள் , அவன் நலன் கருதி தன் அபிமானியான ரிச்சர்ட்டிடம் அவன் பொறுப்பை தந்தார்.


வைஷாலி மற்றும் நரசிம்மனின் திருமணம் பற்றி அறிந்த வாமன் இருவரையும் கொள்ள பலமுறை முயன்றான். அப்படி ஒரு சமயம் அவன் செய்ய விபத்தில் வைஷாலி தப்பித்துவிட நரசிம்மன் உயிரிழக்க நேர்ந்தது. சாகும் தருவாயில் கூட வைஷாலியிடம் எப்போதும் வர்ணனுக்கு அவன் ரிஷிமூலத்தை கூறக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டே இறந்தார் . அதன் பின்னர் தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு மகனுக்காக வாழ்ந்தார் வைஷாலி. இவை அனைத்தையும் எண்ணி பார்த்தவருக்கு தன் மகனின் நிலையை ஐந்து வருடங்கள் தவறாக பயன்படுத்திய வாமனை கண்டு ஆத்திரமுற்றார்.


வைஷாலியையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த வாமன் , தீவில் வர்ணனை காப்பாற்றிய போது அவனிடம் இருந்து கை பற்றிய மோதிரத்தை அவர் உள்ளங்கையில் வைத்து " ஐ நோ வைஷாலி …. ஐ வெரி வெல் நோ தட் ஹீ இஸ் மைன் " என்று ஒரு மாதிரி சிரித்தான். அவனறிவான் திரிவர்ணன் அவன் உதிரத்தில் உதித்தவன் என்று.


தன் தீவில் முகேஷால் உயிர் பிழைக்க பெற்ற வீரன் , தன் முதல் காதலியின் மறுபதிப்பாக நிற்கவும் பேச்சற்று போனான் வாமன். தன்னை ஒத்திருந்த ஆளுமை நிறைந்த சாம்பல் நிற கண்மணிகள் போதாதா ? வர்ணனை வாமன் அடையாளம் காண. அதை ஊர்ஜிதப்படுத்தியது முகேஷ் கொடுத்த வர்ணனின் அறிக்கை. அது வாமனின் டிஎன்ஏவோடு பொருந்துவதாக முகேஷ் கூறி , அவனை ஆய்வுக்கு பயன்படுத்த கோர , வாமனுக்குள்ளும் ரத்தபாசம் இருந்திருக்குமோ ? அது தந்த உந்துதலால் முகேஷை அவன் கொன்றானோ? இதை தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்றார்களோ ? இவை அனைத்துக்கும் சிகரம் வர்ணனிடம் இருந்து வாமனுக்கு கிடைத்த அந்த மோதிரம். தன் காதல் பரிசாக என்றோ வைஷாலிக்கு அதை கொடுத்தது நினைவிலாட வாமனுக்குள் வைஷாலியின் துரோகம் முனுக்கென்ற வலியை தந்தது.


அவன் முகம் காட்டிய உணச்சிகளை அவதானித்த வைஷாலியோ " என் பையன் பிரஹலாதன் மாதிரி ஹியண்யனுக்கு பிறந்திருந்தாலும் அந்த நரசிம்மனுக்கு தான் சொந்தம் " என்றார் அழுத்தம் திருத்தமாக . அதில் கண்மண் தெரியாமல் கோபம் தலைக்கேற , வாமன் அவரை பளாரென்று அடித்தான்.


அப்போது அவன் காவலாட்கள் சிலர் குண்டு பாய்ந்து சடார் சடாரென்று சாய , சுற்றிப் பார்த்தவனின் கண்களில் விழுந்தான் தன் படையுடன் நின்ற வர்ணன். வர்ணனை தோல்வியை தழுவ வைக்க எதுவும் செய்ய சித்தமான, வாமனின் வெறி தீஷாவை நோக்கி பாய்ந்தது .அவளது நெற்றியில் குறி வைத்து பிஸ்டலின் ட்ரிகரை அழுத்த போனவன் , வர்ணனின் தோட்டா பாய வைஷாலியின் காலடியில் விழுந்து சரிந்தான்.


அப்போது வைஷாலியின் ஒன்றை துளி கண்ணீர் வாமனின் சடலத்தின் மீது பட்டுத் தெரிக்க, யாரும் பார்க்கும் முன் தன் முக பாவத்தை சரி செய்து கொண்டார் வைஷாலி.அதை கண்ட சின்னவளுக்கு என்றோ வைஷாலி கூறிய " காதல் கண்ணை மறைச்சா பரவாயி1ல்லை. ஆனா மூளையை மளுங்கடிச்சிடக் கூடாது " என்ற வார்த்தைகள் நினைவிலாடி , நெஞ்சம் பிசைந்தது .


காதல் என்று நினைத்து உள்ளே விழுந்தது மீளவும் முடியாத, மீட்கவும் இயலாத கருந்துளையாக மாறியதேனோ ?


கருந்துளை 🌀 ஈர்க்கும்

eiE77YX77884.jpg
 
Last edited:

Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
514
Reaction score
773
Points
93
Oru story la twist irukalam ana twist ye story ah iruka kudathu ma mudiala po evlo twist ma, enna da posukkunu suttu thallita avanai, nice update dear thanks
Wish you happy pongal dear
நன்றிங்க. உங்களுக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள். அடுத்து க்ளைமேக்ஸ் தான். படிக்க ரெடி ஆகுங்க . 🤗 கதை ஆரம்பத்துல இருந்து என்னுடன் பயணித்த வாசகர்களில் ஒருத்தங்க நீங்க. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி.
 
Priyakutty

Well-known member
Joined
Nov 22, 2021
Messages
887
Reaction score
730
Points
93
Location
Salem
வாமன் ஓட பையன் ஆ நம்ம பீட்டா....😱😱😱
அன் எக்ஸ்பெக்டட் ட்விஸ்ட் டியர்....😯
நரசிம்மன் சார் கேரக்டர் க்ரேட்....😌
மிஷன் சக்தி வெற்றி பெற்று விட்டது.....🇮🇳
ஜெய்ஹிந்த்....😊
பீட்டா பிளான் மிஸ் ஆகுமா....😎
வாமன் அவர் முடிவ தேடிகிட்டாரு....
பீட்டா க்கு சீக்கிரம் குணம் ஆகிடும்....🥰
வைஷாலி மேம் அன்னைக்கு விட்ட டையலாக் க்கு இது தான் அர்த்தமா.....?
ஆனா எங்க பீட்டா நல்லவர் திஷா அத முதல்ல உணரு....😔
உண்மைய கேளு ம்மா....😊
உண்மையே இன்னும் சொல்லாம பிரச்சினை முடிஞ்சிடுச்சு....
கடைசி எபி வர எங்கள குழப்பனும் னு முடிவு பண்ணிட்டீங்க ஆத்தர் ஜி....😅
நெக்ஸீட் எபிக்காக ஈகர்லி வெயிட்டிங் டியர்....🥰

நம்ம திரிவர்ணன் க்கு ஐ மீன்
பீட்டா க்கு இந்த சாங் அ டெடிகேட் பண்றேன் டியர்....😎🔥🤩❤இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் டியர்....🥰😊
 
Last edited:

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,817
Reaction score
34,820
Points
113
Age
36
Location
Tirunelveli
😳 😳 😳
Apo Neeraj entha mission la poranthruppano🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

Evlo periya don verum 2 missions thana 🧐🧐🧐🧐


Vaaman than antha black hole a🙄🙄

Very interesting update ka 👍👍👍
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
514
Reaction score
773
Points
93
😳 😳 😳
Apo Neeraj entha mission la poranthruppano🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

Evlo periya don verum 2 missions thana 🧐🧐🧐🧐


Vaaman than antha black hole a🙄🙄

Very interesting update ka 👍👍👍
hey sooper .... amam... unmaiyil vaishalium vamanum than andhe karundhulai ... ethana love vandhalum firtsu love kudutha drogathai marakka matanga thana... vaman oru edathula solluvan la female of any species is deadlier than the male nu ... marandhutingala ? ipo vaman oda david kuda vara dialogs yala padichu paarunga ... meaning purium ....adhe pola vaishali with deeshavum parunga ....correct h irukum kanaku .... 2 mission nu romba varutham pola thambiki..... adhuke avan paralogam poitaan what to do ?
btw happy pongal thambi ... kadha mudiya poguthu unga aadharavuku romba nandri... first epi la irundhu ipo vara cont. uh padichu motivate pannadhuku romba nandri
 
Anamika 28

Author
Author
Joined
Nov 1, 2021
Messages
514
Reaction score
773
Points
93
வாமன் ஓட பையன் ஆ நம்ம பீட்டா....😱😱😱
அன் எக்ஸ்பெக்டட் ட்விஸ்ட் டியர்....😯
நரசிம்மன் சார் கேரக்டர் க்ரேட்....😌
மிஷன் சக்தி வெற்றி பெற்று விட்டது.....🇮🇳
ஜெய்ஹிந்த்....😊
பீட்டா பிளான் மிஸ் ஆகுமா....😎
வாமன் அவர் முடிவ தேடிகிட்டாரு....
பீட்டா க்கு சீக்கிரம் குணம் ஆகிடும்....🥰
வைஷாலி மேம் அன்னைக்கு விட்ட டையலாக் க்கு இது தான் அர்த்தமா.....?
ஆனா எங்க பீட்டா நல்லவர் திஷா அத முதல்ல உணரு....😔
உண்மைய கேளு ம்மா....😊
உண்மையே இன்னும் சொல்லாம பிரச்சினை முடிஞ்சிடுச்சு....
கடைசி எபி வர எங்கள குழப்பனும் னு முடிவு பண்ணிட்டீங்க ஆத்தர் ஜி....😅
நெக்ஸீட் எபிக்காக ஈகர்லி வெயிட்டிங் டியர்....🥰

நம்ம திரிவர்ணன் க்கு ஐ மீன்
பீட்டா க்கு இந்த சாங் அ டெடிகேட் பண்றேன் டியர்....😎🔥🤩❤இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் டியர்....🥰😊
wow wow wow babyma na apdiye video pathu mersal aiten ....sema daw
dei ipo poi vaman david kita solra dialogues eduthu parunga ..correct uh porundhum " female of any species is deadlier than the male " nu solluvan la plus beeta mela romba possessive avn la ...enga guna magurathu adutha epi la iruku thiriki ....adutha epila matha kelvi ku badhil solli subam potruven ... feel agathinga...
ungalukum happy pongal ..... thanks for your unconditional support
 
Priyakutty

Well-known member
Joined
Nov 22, 2021
Messages
887
Reaction score
730
Points
93
Location
Salem
wow wow wow babyma na apdiye video pathu mersal aiten ....sema daw
dei ipo poi vaman david kita solra dialogues eduthu parunga ..correct uh porundhum " female of any species is deadlier than the male " nu solluvan la plus beeta mela romba possessive avn la ...enga guna magurathu adutha epi la iruku thiriki ....adutha epila matha kelvi ku badhil solli subam potruven ... feel agathinga...
ungalukum happy pongal ..... thanks for your unconditional support
இட்ஸ் ஓகே சிஸ்....😊
சாங் பிடிச்சிருக்கா டியர்...ஸேம்....😁🤩
ஆமா டியர் நியாபகம் இருக்கு. மேலும் அந்த ரிங் அ பார்ப்பாரு அன்ட் அவர பத்தி பேசும்போது கர்வமா இருப்பாரு...😯🧐
அடுத்த எபில திரிக்கு இருக்கா....🙄😅
3 னு சொல்லிட்டு 2 எபில சுபம் போட போறிங்களா....?😕
அடுத்த எபி க்கு வெயிட்டிங் டியர்....🥰❤
 
Last edited:

Vijayabharathi

Active member
Joined
Aug 24, 2021
Messages
102
Reaction score
106
Points
43
Location
India
ஏதே.. நம்ம திரி இந்த வாமன் திரிச்ச கயிறா..😱😱 அதனால தான் அன்னைக்கு ஹி இஸ் மைன்னு கத்துனயா.. கொய்யால..😮😮 எவ்வளவோ கண்டுபிடிக்க தெரிஞ்ச திரிக்கு அவன பத்தின உண்மை தெரியாம போச்சா இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறானா.. சுமால் ஜந்தேகம் A28..🧐🧐

வைஜு ஆண்டி அப்போ எக்ஸ்பீரியன்ஸ் தான் தீஷ்கிட்ட பேசுச்சா..🙂🙂 பாவம் அவங்களும் பெண் தானே அதான் கண்ணீரு எல்லாம் வுட்டுட்டு மறைக்கிறாங்க போல 😪😪

நரு சாரு.. ரெஸ்ட் இன் பீசுங்க..😌😌
 
Advertisements

Latest Episodes

Advertisements