• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அனுமனும் சனிபகவானும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஜெய் ஸ்ரீராம்🙏🏻🙏🏻

|| ஹனுமனை வணங்கினால் சனிபகவான் நெருங்குவதில்லை ||

தேவேந்திரனும் சனீஸ்வரனும் ஒருமுறை தேவலோகத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.

தேவேந்திரன் சனிபகவானிடம் சனீஸ்வரரே இதுவரை தாங்கள் ஆட்கொள்ளாத நபர்கள் உண்டோ என்றார்.

ஒரே ஒருவர் பாக்கி உண்டு.

ஆனால் அவரையும் நான் பீடிக்கும் வேளை வந்துவிட்டது என்று கூறி சனீஸ்வரன் தேவலோகத்தை விட்டு கிளம்பினார்.

நேராக கயிலாயம் சென்ற அவர் ஈசனை வணங்கினார்.

என்ன சனீஸ்வரா இந்தப்பக்கம் என்றார் சிவபெருமான்.

மஹாதேவா சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது, என்றாலும் எனது கடமையில் நான் யாருக்கும் எந்த தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது என்று காலன் எனக் கிட்ட கட்டளை.

அதற்கு என்ன என்றார் சிவபெருமான்.

உங்களை நான் ஏழரை ஆண்டுகள் ஆட்கொள்ளும் வேளை இந்த நொடியுடன் துவங்குகிறது என்றார் சனி.

என்ன விளையாடுகிறீரா ?

மன்னிக்கவும் சுவாமி.

எனது கடமையை செய்ய விடுங்கள். ஏழரை வருடம் நீங்கள் என் பிடியில் இருக்க வேண்டும் என்றார் சனி.

உம் கடமை எனக்கு பொருந்தாது.

கடமையில் நான் தவறுவது இல்லை சுவாமி.

ஒரு ஏழரை மாதங்களாவது உம்மை ஆட்கொள்கிறேன்.

ஏழரை நாள் கூட நீர் எம்மை ஆட்கொண்டால் என்னை நம்பி இருக்கும் ஜீவராசிகளை யார் காப்பாற்றுவர் ?என்று கூறிக்கொண்டே சிவ பெருமான் பார்வதிதேவி அணிந்திருந்த ருத்திராட்சத்தினுள் சென்று மறைந்து கொண்டார்.

ஏழரை நொடிகள் தம்மை மறைத்துக் கொண்ட சிவ பெருமான் சனியிடம் கேட்டார் சனீஸ்வரா உம்மால் என்னை நெருங்க முடியவில்லை பார்த்தீரா ? என்று பெருமிதப்பட்டுக்கொண்டார்.

இல்லை ஸ்வாமி உங்களை நான் ஏழரை நொடிகள் ஆட்கொண்டதாலேயே நீர் தேவி கழுத்தில் இருந்த ருத்திராட்சத்தினுள் ஒளிந்துகொண்டீர் என்றாராம்.

இச்சம்பவத்தால் மனம் நெகிழ்ந்த பார்வதியும் சிவனும் கடமையில் இருந்து தவறாத சனீஸ்வரனை ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்கள்.

இந்த கதை அனைவரும் அறிந்ததே !!

ஈஸ்வரனே ஸ்ரீராமாவதாரத்தில் ஹனுமனாக அதாவது ருத்ரனாக அவதரிக்கிறார்.

ஸ்ரீராமர் பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது அனைத்து வானரங்களும் அவரவர் சக்திக்கேற்ப சின்னதும் பெரிதுமாய் மரக்கிளைகளையும் பாறைகளையும் கடலில் வீசிக் கொண்டிருந்தனர்.

அந்நேரம் சனீஸ்வரன் அங்கு வந்து ஸ்ரீராம, லஷ்மணர்களை வணங்கி பரம்பொருளே ஹனுமனை ஏழரை ஆண்டுகள் நான் ஆட்கொள்ளும் காலம் வந்துள்ளது.

தங்கள் அனுமதி வேண்டும் என்றார்.

ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே .... ஹனுமனைத்தானே

நீரே போய் அவரை அணுகவும் என்றார்.

சனீஸ்வரர் ஹனுமன் முன் தோன்றி .. ஹனுமனே உம்மை நான் ஏழரை ஆண்டுகள் ஆட்கொள்ளும் காலம் இந்த நொடி முதல் துவங்குகிறது.

எனவே உனது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் எனக்கு இடம் கொடு என்றார்.

ஹனுமனோ ஸ்வாமி நான் தற்போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு உதவும் பொருட்டு எனது கைகள் பாறைகளையும், பெரிய மரங்களையும் கொய்து கடலில் போடும் பாலம் கட்டும் பணியில் இருக்கிறேன்.

இப்பணிக்கு எனது கைகளும் , தோள்களும் அவசியம் எனவே என் கைகளிலும் தோள்களிலும் இடமளிக்க முடியாது.

எனது காலில் உமக்கு இடம் கொடுத்தால் அது உம்மை அவமதித்தது போலாகும்.

என்ன செய்ய !!

சரி நீங்கள் என் தலைமீது அமர்ந்து கொள்ளும் என்று குனிந்து சனிபகவானை தன் தலைமீது அமர்ந்து கொள்ள அனுமதித்தார் ஹனுமன்.

சனீஸ்வரன் தலைமீது அமர்ந்துகொண்டபின் ஹனுமனுக்கு அசாத்திய சக்தி கிடைத்து விடுகிறது.

மிகப்பெரிய பாறைகளையும், மரங்களையும் ஹனுமன் தலையில் சுமந்து கடலில் வீசுகிறார்..

அவ்வளவு தான்

சனீஸ்வரனால் பாரம் தாங்க முடியவில்லை.

அலரியே விட்டார் !!

என்னை விட்டு விடு ஹனுமா என்றார் சனி பகவான்.

சரி விட்டு விடுகிறேன் ஸ்வாமி ஆனால் ஒரு நிபந்தனை என்றார்.

என்ன என்று கேட்டார்.

இனி நீங்கள் ஸ்ரீராம பக்தர்களை ஒரு போதும் துன்புறுத்தி பார்க்க கூடாது என்றார்.

சரி அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தி

பாரம் தாங்காமல் ஹனுமன் தலையில் இருந்து உடனே கீழே குதித்தார் சனீஸ்வரர்.

சனீஸ்வரரால் ஏழரை நொடிகள் மட்டுமே ஹனுமனை ஆட்கொள்ள முடிந்தது.

சனீஸ்வரர் சொன்னார் கைலாயத்திலும் உம்மை என்னால் ஏழரை நொடிகள் மட்டுமே ஆட்கொள்ள முடிந்தது.

இப்பொழுதும் என்னால் முடியவில்லை என்றாலும் ஸ்ரீராமர் பாலம் அமைக்கும் பணியில் ஏழரை நாழிகை நானும் பங்குபெற முடிந்ததே என ஆனந்தம் கொண்டார்.

ஹனுமா உன்னை நினைப்பவர்களையும் இனி நான் பீடிப்பதில்லை என்று சத்தியம் செய்து தேவலோகம் சென்றார் சனி பகவான்.

ஹனுமனை ஆத்மார்த்தமாக தொழுபவர்களையும் ஸ்ரீராம நாம ஜெபம் செய்பவர்களையும் சனீஸ்வரன்
நெருங்குவதே இல்லை.

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனும ப்ரசோதயாத்

ராமா ராமா ராமா 🙏🏻🙏🏻

ஜெய் ஶ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து
படித்ததில் பிடித்தது 🙏🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top