அன்பின் உறவே - 10- PRECAP

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
அடுத்த எபி வெள்ளிக்கிழமை தான் ஃப்ரண்ட்ஸ்... இப்ப, அந்த எபியில் இருந்து ஸ்மால் ப்ரீகேப். படிச்சு பார்த்து பிடிச்சா சொல்லுங்க, அடுத்தடுத்த எபியில் தொடரலாம்.... :love: :love:

***************************************************
“நானும் ரவுடிதாங்கிற மாதிரியே பேசுறீங்களே பிரதர்ஸ்!” ஷோபையாய் கிண்டலடித்தான் பிஸ்தா.

“காலர நிமிர்த்திட்டு திரிஞ்சா தான் ரவுடியா சின்னவனே? நம்ம எல்லாருக்குள்ளேயும் எல்லாமே அடங்கிக் கிடக்கு. தேவைப்படும் போது வெளியே வரும். உன்மேல, உன் முதலாளிக்கு நம்பிக்கை வர்ற மாதிரி, உத்தியோகத்துல கவனமா இருக்கப் பாரு! உன் தொழில்ல முன்னேற இன்னும் ஏதாவது வழியிருந்தா அதையும் ட்ரை பண்ணு!

உன்னைப் பத்தின நம்ம நாட்டாமையோட கணிப்பும் மாறனும்டா... இல்லன்னா, நாளைக்கு உனக்குப் பொண்டாட்டியா வர்றவளே உன்னை கேலி பேசற மாதிரி ஆகிடும். சொல்றது புரிஞ்சுதா?” அமைதியாக ரவீந்தர் கேட்க, நன்றாகவே புரிந்ததென்று தலையாட்டி வைத்தான்.


*************************************************

“சம்பாத்தியம் பண்ணத் தெரியாதவனுக்கு, காதல் கல்யாணம் ஒருகேடா?” சரஸ்வதி, பிஸ்தாவை கடித்து குதற,

“பெத்தவங்க சம்மதமில்லாம எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுன ப்ரஜூ?” ரவீணா சண்டைக்கு நின்றாள்.

“ஓசியில திங்கற சோத்துக்கு வாய் வந்தவாசி வரைக்கும் நீளுது...” சரசுவின் பதிலடியில்,

“உங்கம்மா மத்த மருமகளுங்களை மகாராணி மாதிரி தாங்குறாங்க... ஆனா, என்னை நாயை விடக் கேவலமா நடத்தறாங்க! நான் எதுக்காக இந்த வீட்டுல இருக்கணும்?” ரவீணா பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்பி நின்றாள்.


*****************************************************

திருமணப் பேச்சுவார்த்தையை உறுதி செய்துகொள்ள வீட்டில் அவசரப்பட, இன்னும் பரிட்சை முடியவில்லையென்று ஆரம்பித்தவளை பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கி விட்டார் தந்தை. அவரின் தாளத்திற்கு தப்பாமல் அன்னையும் ஜால்ரா தட்ட, இவளின் பேச்செல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிப் போனது.

இங்கே நடப்பதை தனது அன்பனிடத்தில் சொல்வதற்கும் முடியவில்லை. இவளைப் பார்க்க வந்த தோழிகளுடனும் பேசவிடாமல் தடுத்து விட்டார் சுகந்தி. கிட்டத்தட்ட சிறையில் இருக்கும் நிலைமைதான் அவளுக்கு...


**********************************************************

“இது எதுக்குடா பிஜூ?” – ராஜா,

“என்னோட சொந்த செலவுக்கு...” பிஸ்தா,

“என்னடா சொல்ற?” - ரவீந்தர்.

“தனிவீடு பார்க்கணும்... வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் வாங்கிப் போடணும்... முக்கியாம என் கல்யாணச் செலவும் இதுல அடக்கம்” சொல்லிக்கொண்டே சென்றவனின் முதுகை மொத்தி எடுத்து விட்டனர் சகோதரர்கள்.

IMG-20210802-WA0001.jpg
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,720
Reaction score
26,935
Points
113
Location
India
Waiting for epi yakkaaaaaavvvv
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top