• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?அன்பின் மொழியாள் அவனவள்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

சங்கீதா ராஜா

புதிய முகம்
Joined
Oct 11, 2020
Messages
2
Reaction score
6
Location
Tamil nadu
வணக்கம் வாசக நண்பர்களே....

? அன்பின் மொழியாள் அவனவள் ?

தொடர்கிறேன்.. என் கதையை படித்து , குறை , நிறைகளை பொறுத்துக் கொண்டு ஆதரவு அளிக்கும் அனைத்து நண்பர்களும் இத்தொடர்கதைக்கு தங்களின் ஆதரவையும் , விமர்சனங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

அன்புடன் ..
சங்கீதா ராஜா..

தன் அறையை ஒட்டிய பால்கனி
பக்கம் உள்ள உடற்பயிற்சி அறையில் , உடற்பயிற்சி முடித்து , உடையை அணிந்து , சட்டை கைகளின் இறுதி பட்டனை போட்டுவிட்டு இன்னிங்கை சரிச் செய்து, கண்ணாடியில் தன் கோர முடியை சீப்பால் சீவி பின் தன் கைகளால் ஒரு தடவை நீவும் போது தான் முகத்தை கவனித்தான் , அதில் சிரிப்பு என்பதன் அறிகுறியே இல்லாமல் இருக்க,
அதை பற்றி அவனுக்கு யோசிக்க நேரமில்லை..

சட்டென்று தன் அறையில் இருந்து கிளம்பி , தன் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு மாடிப் படிகளில் விறு விறு வென , இறங்கி வர அவன் உயரத்திற்கு
அந்த வேகம் ஆளுமையின் திறமையை எடுத்துரைத்தது..

ஆம் அவன் ஆளுயரத்தை விட , தான்
எதையும் செய்யும் துணிவுள்ளவன் என்ற கர்வம் கலந்த திறமை அதிகமாக இருக்க,
காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் ,

" அணன் மித்ரன் "

நம் கதையின் நாயகன் அன்பு, காதல் , உறவு , என்றால் என்ன என்று அறிய கூட விரும்பாதவன். முகம் ஒரே பாவனையில் இருக்கும் கோபக்காரன்.. பின் ஒரு நாள் இதே அன்பில் திளைத்து காதலில் மூழ்கி
உறவிற்காக ஏங்கப் போகிறான் அணன்மித்ரன்.

" அண்ணி , அண்ணா சாப்பிட வந்தாச்சு"
என்று குரல் கொடுத்தாள் அகல்யா..
" இதோ வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே காலை உணவை எடுத்து வந்தாள் " நறுமுகை...

நறுமுகை உணவை எடுத்து வைக்க ,
அதை சாப்பிட்டு , கட கட வென கையை
கழுவிக் கொண்டு , போனை பார்த்தவாறு காரை எடுப்பதற்கு அணன் சென்று விட்டான்.. அதுவரை அவன் நறுமுகையை பார்த்தானா என்று கூட தெரியாது..

நறுமுகை சிரித்தப்படி " அணன் ஒரு நாள் நீங்களும் மாறி என்னிடம் வந்து தான் ஆக வேண்டும் " என்று மனதில் நினைக்க..

நறுமுகை அப்பா விசுவநாதன் "என்னம்மா , மாப்பிள்ளை என்ன சொல்றார் " என்று கேட்டுக் கொண்டே டேபிளில் அமர , " என்ன , வழக்கம் போல் தான் " என்றாள்..

விசு ஏதோ சொல்ல வந்து , அகல்யாவைப்
பார்த்து விட்டு " என்னம்மா காலேஜ் கிளம்பிட்டியா " என்றார்.. " ம்ம்ம் ஆமா மாமா , லேட் ஆகிட்டு இதோ கிளம்பனும் " என்று அவசரமாக சாப்பிட்டாள்..

விசு " மாப்பிள்ளை உன் காலேஜ் தானே போறார் , நீயும் சேர்ந்து போக வேண்டியது தானே " என்க.. " அய்யோ வேணாம் மாமா அண்ணா கூடவா , நான் எப்போதும் போல் போறேன் ,அண்ணி வரேன் " என்று கிளம்பி விட்டாள்..

விசு " நறுமுகை , மாப்பிள்ளை இன்னும்
அப்பிடியே தான் இருக்காரா " என்று கேட்க. " விடுங்கப்பா , எங்கே போக போறார் " என்றாள் மெதுவாக..

" நறுமுகை இங்க வாம்மா " என்று அணன் அம்மா நாயகிம்மா அழைக்க , " இதோ வரேன் அத்தை " என்று அவர் அறைக்குச் சென்றார்..

காலையில் இது என்ன கொடுமை என போனை பிடித்தவாறு சோபாவில்
அமர்ந்து இருந்தார் இளங்கோ..

" ஒரு காலை பின்புறம் நீட்டி , மற்றொரு காலை தரையில் ஊன்றி , இரு கைகளையும் முன்புறம் நீட்டியவாறு ஒரு பெண் செய்ய , அந்த போனில் ஓடிய வீடியோவை பார்த்தப் படி செய்துக் கொண்டு இருந்த தன் பெண்ணை பார்த்த வண்ணம் " அமர்ந்து இருந்தார்..

அவளோ கால்களை மாற்றி மாற்றி ஊன்றுவதும் , கைகளை மடக்கி நீட்டுவதுமாய் நடனம் ஆடிக் கொண்டு இருக்க. " நான் பாலை ப்ரிஜில் இருந்து
எடுத்து தர சொன்னத்துக்கு வேலை இருக்குனு வந்தீங்க , ஒரு மணி நேரமாக இதை தான் பன்றீங்களா " என்று நக்கல் அடித்தப்படி வந்தார் அவளின் அம்மா செல்வி ..

இளங்கோ செல்வியைப் பாத்து முறைக்க
போன் ஆடியது , " அய்யோ அப்பா ஒழுங்கா பிடிங்க " என்றாள்.. செல்வி சிரிக்க , " இன்னும் முடியலயாம்மா" என்றார்..

" இருங்க அப்பா " என்று அவள் நடனத்தை தொடர , அய்யோ அது யோகா ??????மாத்தி சொல்லிட்டேன்.. " ஏய்
என்ன பன்ற காலேஜ்கு கிளம்பாம "
என்றப்படி யோக நந்தன் வர ..
" குட் மார்னிங் ப்ரோ " அவள் ஆரம்பிக்க ,
அவனோ " உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒழுங்கா அண்ணானு கூப்பிடு , ப்ரோ பீரோ சொல்லிகிட்டு "
என்று நிறுத்த.

" சரி சாரி ப்ரோ ஸ்ஸ்ஸ்ஸ் ????? யோகன் அண்ணா , நேற்று இந்த வீடியோவை பார்த்தேன் , இதில் உள்ள யோகா வகைகளை காலையில் எழுந்து செய்தால் புத்துணர்ச்சி , ஆரோக்கியம் , அப்புறம் கொஞ்சுண்டு உடல் அழகும் கிடைக்குமாம் அண்ணா அதான் ட்ரை பன்னினேன்???" என்று ஈஈஈஈ என்று சிரித்தாள்.

யோகன் " நீ சொல்வதும் எல்லாம் சரிதான் , ஆனா அதை காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து செய்யனும் , இப்பிடி எட்டு மணிக்கு எழுந்து ஒன்பது மணி வரை செய்ய கூடாது, ஒன்பதரை மணிக்கு காலேஜ் நினைவு இருக்கா " என்றான்.

" ஓ மை காட் , இவங்க ரெண்டு பேரும் சரி இல்லண்ணா , பாருங்க ஒன்பது மணி ஆச்சுனு சொல்லனும்ல " என்று பெற்றோரை வாரி விட்டு , அண்ணா நின்னுங்க நானும் வரேன் என்க..

" நீ வரப்படி வா , இன்று நம்ம காலேஜ்
கரஸ்பாண்டன்ட் வராரு , நீ ஸ்டுடென்ட் நான் புரொப்ஸர்மா தாயே , லேட் ஆகிடும் கிளம்புறேன் " என்று நகர..

" அண்ணா அண்ணி எப்பிடி இருக்காங்க " என்றாள். " அண்ணியா " என்று பெற்றோர் முழிக்க, யோகன் ஷாக் ஆக ,
" இன்னும் அண்ணி தேடி முடிக்கலயா , சோ பேட் எதும் மாட்டிகிட்டானு டெஸ்ட் பன்னினேன்" என்று சொல்ல , யோகன் அடிக்க துறத்த ஓடிவிட்டாள் காலேஜ் கிளம்ப ,

" இயலினியா "

நம் கதையின் நாயகி , அன்பு , காதல் , உறவு இவற்றின் மொழியானவள் இவளே..

அவனவள் மொழிகள் அடுத்து..

( ஹாய் பிரண்ட்ஸ், ஏதோ உங்கள நம்பி ஆரம்பிச்சுட்டென் , நீங்க தான் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லனும் ..
விமர்சனத்தை பொறுத்து இக்கதை நகர ஆரம்பிக்கும் நண்பர்களே ???????)..
 
சங்கீதா ராஜா

புதிய முகம்
Joined
Oct 11, 2020
Messages
2
Reaction score
6
Location
Tamil nadu
வணக்கம் வாசக நண்பர்களே....

? அன்பின் மொழியாள் அவனவள் ?

என் கதையை படித்து , குறை , நிறைகளை பொறுத்துக் கொண்டு ஆதரவு அளிக்கும் அனைத்து நண்பர்களும் இத்தொடர்கதைக்கு தங்களின் ஆதரவையும் , விமர்சனங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

அன்புடன் ..
சங்கீதா ராஜா..

தன் அறையை ஒட்டிய பால்கனி
பக்கம் உள்ள உடற்பயிற்சி அறையில் , உடற்பயிற்சி முடித்து , உடையை அணிந்து , சட்டை கைகளின் இறுதி பட்டனை போட்டுவிட்டு இன்னிங்கை சரிச் செய்து, கண்ணாடியில் தன் கோர முடியை சீப்பால் சீவி பின் தன் கைகளால் ஒரு தடவை நீவும் போது தான் முகத்தை கவனித்தான் , அதில் சிரிப்பு என்பதன் அறிகுறியே இல்லாமல் இருக்க, அதை பற்றி அவனுக்கு யோசிக்க நேரமில்லை..

சட்டென்று தன் அறையில் இருந்து கிளம்பி , தன் கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு மாடிப் படிகளில் விறு விறு வென , இறங்கி வர அவன் உயரத்திற்கு அந்த வேகம் ஆளுமையின் திறமையை எடுத்துரைத்தது..

ஆம் அவன் ஆளுயரத்தை விட , தான்
எதையும் செய்யும் துணிவுள்ளவன் என்ற கர்வம் கலந்த திறமை அதிகமாக இருக்க, காலை உணவு உண்ண டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் ,

" அணன் மித்ரன் "

நம் கதையின் நாயகன் அன்பு, காதல் , உறவு , என்றால் என்ன என்று அறிய கூட விரும்பாதவன். முகம் ஒரே பாவனையில் இருக்கும் கோபக்காரன்.. பின் ஒரு நாள் இதே அன்பில் திளைத்து காதலில் மூழ்கி
உறவிற்காக ஏங்கப் போகிறான் அணன்மித்ரன்.

" அண்ணி , அண்ணா சாப்பிட வந்தாச்சு" என்று குரல் கொடுத்தாள் அகல்யா..

" இதோ வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே காலை உணவை எடுத்து வந்தாள் " நறுமுகை...

நறுமுகை உணவை எடுத்து வைக்க ,
அதை சாப்பிட்டு , கட கட வென கையை கழுவிக் கொண்டு , போனை பார்த்தவாறு காரை எடுப்பதற்கு அணன் சென்று விட்டான்..

அதுவரை அவன் நறுமுகையை பார்த்தானா என்று கூட தெரியாது..

நறுமுகை சிரித்தப்படி " அணன் ஒரு நாள் நீங்களும் மாறி என்னிடம் வந்து தான் ஆக வேண்டும் " என்று மனதில் நினைக்க..

நறுமுகை அப்பா விசுவநாதன் "என்னம்மா , மாப்பிள்ளை என்ன சொல்றார் " என்று கேட்டுக் கொண்டே டேபிளில் அமர , " என்ன , வழக்கம் போல் தான் " என்றாள்..

விசு ஏதோ சொல்ல வந்து , அகல்யாவைப் பார்த்து விட்டு " என்னம்மா காலேஜ் கிளம்பிட்டியா " என்றார்.. " ம்ம்ம் ஆமா மாமா , லேட் ஆகிட்டு இதோ கிளம்பனும் " என்று அவசரமாக சாப்பிட்டாள்..

விசு " மாப்பிள்ளை உன் காலேஜ் தானே போறார் , நீயும் சேர்ந்து போக வேண்டியது தானே " என்க..

" அய்யோ வேணாம் மாமா அண்ணா கூடவா , நான் எப்போதும் போல் போறேன் ,அண்ணி வரேன் " என்று கிளம்பி விட்டாள்..

விசு " நறுமுகை , மாப்பிள்ளை இன்னும் அப்பிடியே தான் இருக்காரா " என்று கேட்க. " விடுங்கப்பா , எங்கே போக போறார் " என்றாள் மெதுவாக..

" நறுமுகை இங்க வாம்மா " என்று அணன் அம்மா நாயகிம்மா அழைக்க , " இதோ வரேன் அத்தை " என்று அவர் அறைக்குச் சென்றாள்.

காலையில் இது என்ன கொடுமை என போனைப் பிடித்தவாறு சோபாவில்
அமர்ந்து இருந்தார் இளங்கோ..

" ஒரு காலை பின்புறம் நீட்டி , மற்றொரு காலை தரையில் ஊன்றி , இரு கைகளையும் முன்புறம் நீட்டியவாறு ஒரு பெண் செய்ய , அந்த போனில் ஓடிய வீடியோவை பார்த்தப் படி செய்துக் கொண்டு இருந்த தன் பெண்ணை பார்த்த வண்ணம் " அமர்ந்து இருந்தார்..

அவளோ கால்களை மாற்றி மாற்றி ஊன்றுவதும் , கைகளை மடக்கி நீட்டுவதுமாய் நடனம் ஆடிக் கொண்டு இருக்க. " நான் பாலை ப்ரிஜில் இருந்து எடுத்து தர சொன்னத்துக்கு வேலை இருக்குனு வந்தீங்க , ஒரு மணி நேரமாக இதை தான் பன்றீங்களா " என்று நக்கல் அடித்தப்படி வந்தார் அவளின் அம்மா செல்வி ..

இளங்கோ செல்வியைப் பாத்து முறைக்க போன் ஆடியது , " அய்யோ அப்பா ஒழுங்கா பிடிங்க " என்றாள்.. செல்வி சிரிக்க , " இன்னும் முடியலயாம்மா" என்றார்..

" இருங்க அப்பா " என்று அவள் நடனத்தை தொடர , அய்யோ அது யோகா ??????மாத்தி சொல்லிட்டேன்.. " ஏய் என்ன பன்ற காலேஜ்கு கிளம்பாம " என்றப்படி யோக நந்தன் வர ..

" குட் மார்னிங் ப்ரோ " அவள் ஆரம்பிக்க , அவனோ " உன் கிட்ட எத்தனை தடவை சொல்றது ஒழுங்கா அண்ணானு கூப்பிடு , ப்ரோ பீரோ சொல்லிகிட்டு " என்று நிறுத்த.

" சரி சாரி ப்ரோ ஸ்ஸ்ஸ்ஸ் ????? யோகன் அண்ணா , நேற்று இந்த வீடியோவை பார்த்தேன் , இதில் உள்ள யோகா வகைகளை காலையில் எழுந்து செய்தால் புத்துணர்ச்சி , ஆரோக்கியம் , அப்புறம் கொஞ்சுண்டு உடல் அழகும் கிடைக்குமாம் அண்ணா அதான் ட்ரை பன்னினேன்???" என்று ஈஈஈஈ என்று சிரித்தாள்.

யோகன் " நீ சொல்வதும் எல்லாம் சரிதான் , ஆனா அதை காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து செய்யனும் , இப்பிடி எட்டு மணிக்கு எழுந்து ஒன்பது மணி வரை செய்ய கூடாது, ஒன்பதரை மணிக்கு காலேஜ் நினைவு இருக்கா " என்றான்.

" ஓ மை காட் , இவங்க ரெண்டு பேரும் சரி இல்லண்ணா , பாருங்க ஒன்பது மணி ஆச்சுனு சொல்லனும்ல " என்று பெற்றோரை வாரி விட்டு , அண்ணா நின்னுங்க நானும் வரேன் என்க..

" நீ வரப்படி வா , இன்று நம்ம காலேஜ்
கரஸ்பாண்டன்ட் வராரு , நீ ஸ்டுடென்ட் நான் புரொப்ஸர்மா தாயே , லேட் ஆகிடும் கிளம்புறேன் " என்று நகர..

" அண்ணா அண்ணி எப்பிடி இருக்காங்க " என்றாள். " அண்ணியா " என்று பெற்றோர் முழிக்க, யோகன் ஷாக் ஆக ,
" இன்னும் அண்ணி தேடி முடிக்கலயா , சோ பேட் எதும் மாட்டிகிட்டானு டெஸ்ட் பன்னினேன்" என்று சொல்ல , யோகன் அடிக்க துறத்த ஓடிவிட்டாள் காலேஜ் கிளம்ப ,

" இயலினியா "

நம் கதையின் நாயகி , அன்பு , காதல் , உறவு இவற்றின் மொழியானவள் இவளே..

அவனவள் மொழிகள் அடுத்து..

( ஹாய் பிரண்ட்ஸ், ஏதோ உங்கள நம்பி ஆரம்பிச்சுட்டென் , நீங்க தான் படிச்சுட்டு எப்பிடி இருக்குனு சொல்லனும் ..
விமர்சனத்தை பொறுத்து இக்கதை நகர ஆரம்பிக்கும் நண்பர்களே ???????)..
Thanks .. this is new site to write so little terms not understand .. wil learn soon
 
honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Very good start sis ..best wishes ?..beautiful characters names unique also
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top