• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அன்பின் மொ(வி)ழியில்-4???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அன்பின் மொ(வி)ழியில்-4

அந்த அழகிய இரவில் தோட்டத்தில் மல்லிகையின் மணம் காற்றில் கலந்து வீசியது, பௌர்ணமி நிலவின் ஒளி மலர்களின் மீது விழுந்ததில் பூக்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் மின்னின.

பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்த, அந்த ஏகாந்த இரவில், இயற்கை அன்னையின் அழகை உணராமல் தோட்டத்தில், உள்ள மல்லிகை பந்தலின் கீழ் உள்ள மேடையில் கைதேர்ந்த ஓவியன் ஒருவன் வரைந்து, வண்ணம் தீட்டப்படாத ஓவியம் போல் அமர்ந்திருந்தாள் கயல்விழி.

அவளின் அழகிய விழிகள் கண்களில் நீருடன் நிலவினை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது.

சிறு வயது முதலே யாரும் அற்று ஆசிரமத்தில் இருந்த போது, அவளுடன் இருந்த மற்ற பிள்ளைகள் விளையாட்டாய், நிலவு தான் நம் அனைவருக்கும் அன்னை என கூறியது, அவள் மனதில் கல்வெட்டை போல் பதிந்து இருந்தது.

அன்று முதல் மனதில் எந்த வித கவலை இருந்தாலும் கயல் நிலவிடம் தான் பகிர்ந்து கொள்வாள்.

அதன் குளுமை அன்னையின் மடியை போல் அவளுக்கு ஆறுதலையும், நிம்மதியும் தரும்.

இன்றும் அவள் மனம் நிம்மதி இழந்து தவித்தது, ரம்யா கூறிய வேந்தன் குரூப்ஸ் என்ற ஒற்றை வார்த்தை தான் அவள் நிம்மதி இழந்து தவிப்பதற்கு காரணம்.

கயல் நிலவினை பார்த்து கண்ணீருடன் “அம்மா குழந்தையில் இருந்தே அன்பு, பாசம் என்று அறியாமல் வளர்த்த எனக்கு, திருமணத்திற்கு பிறகாவது எனக்கே! எனக்காக நான் இழந்த அதனை உறவும் ஒருசேர ஓருவன் மூலம் கிடைக்கும் என இருந்த என் ஒரே ஆசையும் இப்படி சிதைந்து விட்டதே!".

"எனக்கு மட்டும் ஏன் இப்படி வாழ்க்கை புரியாத புதிராக அமைந்தது”.

“நான் தான் யாரும் அற்று வளர்த்தேன் என்றால் , என் பிள்ளைகளுக்கும் தந்தை இருந்தும் அவரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளர வேண்டிய நிலை”.

“என் மனம் குற்ற உணர்வில் தவிக்கிறது , பிள்ளைகளின் வளமான வாழ்க்கைக்கு நான் தடையாக இருப்பதை எண்ணி”.

“ஆதி, ரவி இருவரை பற்றி அவர்களின் தந்தையிடம் சொன்னால் நிச்சயம் பிள்ளைகளை ஏற்றுக்கொள்வர்."

"ஆனால் எங்கள் இருவர் மீதும் தவறு இல்லாத நிலையில் என்னை போல் உள்ள ஒருத்தியை அவரை போல் அழகும், அந்தஸ்தும் நிறைந்தவர் ஏற்க வேண்டும் என்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லையே மா!”.

“அன்றைய நிலையில் என்னை பற்றி ஒரு அணு அளவும் அவருக்கு தெரியாது என்னும் போது, பிள்ளை உருவானதை அறிந்த போது, நான் எப்படி என்னுள் இருந்த பிள்ளைகளை பற்றி அவரிடம் சொல்ல முடியும்”.

“மனதளவில் பலகினமான எனக்கு, அவரின் மனநிலை பற்றி தெரியவில்லை."

"என்னை அவர் தரக்குறைவாக எண்ணும் நிலை வருமோ! என அஞ்சியே! பிள்ளைகளின் தந்தையிடம் அவர்களை பற்றி தெரிவிக்கவில்லை.”

“இன்று நான் சொல்லமலே பார்த்தவுடன் அறியும் வகையில் அவனின் பிள்ளைகள் அவனை போல் இருக்கிறார்கள் , ஆனால் தவறாகவே இருந்தாலும், இன்றைய நிலையில் பிள்ளைகள் பற்றி அவன் அறியக்கூடாது என என் மனம் விரும்புகிறது”.

“என்றாவது பிள்ளைகள் பற்றி தெரிந்து அவர் , அவர்களை அழைத்து சென்றுவிட்டால் மீண்டும் நான் தனியாக யாரும் அற்று வாழ முடியாது” .

“அதனால் தான் நான் பிள்ளைகளின் தந்தையை பற்றி அவர்களிடம் கூட சொல்லவில்லை, நான் என்ன செய்வது அம்மா! சுலநலமாக யோசிக்கிறேன் என உணர்ந்தும் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லையே!” என அன்னையிடம் கதறினாள்.

நிலவோ மெல்லிய குளுமையுடன் அவளை அரவணைத்து கொண்டது.

சிறிது நேரத்தில் மனதில் உள்ளதை தாயிடம் கொட்டி விட்டதால் உள்ளம் சமன்பட்டது...

எவ்வளவு நேரம் தோட்டத்தில் அமர்ந்திருந்தாளோ, மழை துளி அவள் மேல் விழுந்ததில் அமர்ந்திருக்கும் இடத்தினை உணர்ந்து, மெல்ல எழுந்து வீட்டினுள் சென்று கதவினை அடைத்தாள்.

வீட்டினை பார்த்தவுடன் அவள் மலர் முகத்தில் சிறு புன்னகை வந்தது.

மாலை ரம்யா வந்தது முதல் அவள் செல்லும் வரை , மூவரும் சேர்ந்து வீட்டை தலைகீழாக மாற்றி விட்டனர்.

விளையாட்டு என்ற பெயரில் அனைத்தையும் கலைத்து போட்டதில் வீடு போர்க்களம் போல் இருந்தது.

வீட்டினை ஒழுங்குபடுத்தி விட்டு நிமிரும் போது நேரம் நள்ளிரவினை கடந்திருந்தது. உறங்க கட்டிலின் அருகில் வந்தாள் கயல்.

அவளின் அழகிய இரு மைந்தர்களும் ஒருவர் மீது ஒருவர் கால்களை போட்டு கொண்டு , சற்று நேரத்துக்கு முன்பு செய்த ரகளைக்கு நேர்மாறாக அமைதியே உருவாக உறங்கிக்கொண்டிருந்ததை கண்டு, சற்று முன் மனதில் நிறைந்திருந்த கவலை மறைந்து, அவள் மனம் மகிழ்ந்தது.

பின் இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு அவர்களை அணைத்தவாறு தூங்கினாள்.

சென்னையில் ராஜ் எதிர்பார்த்தது போல நீலகிரியில் ரிசார்ட் கட்டும் காண்ட்ரேட் ‘வேந்தன் கன்ஸ்ட்ரெக்க்ஷன் கம்பெனிக்கே! கிடைத்தது.

ராஜ் மிகவும் சந்தோஷமாக இருந்தான். விஷ்ணுவிடம் “ வினி குட்டி ஐ அம் சோ ஹாப்பி டா , அந்த விஜய் முகத்துல கரிய பூசுன மாதிரி இருக்குடா”என்றான் .

அதற்கு விஷ்ணுவும் “ இருக்காத பின்ன நம்ம கம்பெனிலயே நாம எவ்வளவு கோட் பண்றோம்னு உளவு பாக்க ஆள் போட்டும் , அவனுக்கு காண்ட்ரேட் கிடைக்கல இல்ல அப்ப அவன் முகம் அப்படித்தான் இருக்கும்“ என்றான்.

இங்கு இவர்கள் இருவரும் வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில்,
விஜய் கன்ஸ்ட்ரேக்க்ஷனில், விஜய் தன் பி .ஏ விடம் அடிப்பட்ட வேங்கை என சீறினான்.

“எப்படி மணி இந்த காண்ட்ரேக்ட் நம்ம கைய விட்டு போச்சு, அவனுங்க என்ன அமௌண்ட் போடுறங்கன்னு தெரிஞ்சு தானே நாம அமௌண்ட் பிக்ஸ் பண்ணோம், பின்ன எப்படி இது நடந்தது”என்றான்.

மணிக்கு விஜயினை பார்க்கவே மனம் நடுங்கியது.

ஆறு அடி உயரத்தில், கருமையான நிறத்தில் பார்க்க அழகாக இருந்தாலும், மனம் முழுவதும் வன்மம் கொண்டிருந்தவனை கண்டு அஞ்சி மெதுவாக.

“சார் நம்ம ஆளு சொன்ன இன்போர்மேசன் கரெக்ட் தான் பட் அவுங்க கண்தொடைப்புக்கு ஆஃபீஸ்ல அமௌண்ட் கோட் பண்ண மாதிரி செஞ்சு வேற கொட்டேசன் ரெடி பண்ணி அதை சென்ட் பண்ணிருக்காங்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே!..


விஜயின் மேசை மேல் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சிதறி அறை முழுவதும் விழுந்தன.

ஆங்காரமாக எதிரில் நின்றவனை கண்டு மணி திகைத்து அமைதியாக நின்றுவிட்டான்.

“அந்த ராஜ் எதிலும் ஜெயிக்க கூடாது” என கத்தியவன், மனம் முழுவதும் வஞ்சம் மட்டுமே நிரம்பி வழிந்தது.

விஜய் தொழிலில் ஈடுபட்ட அதே நேரத்தில் தான் ராஜும் தொழிலில் புகுந்தான், ராஜின் திறமை வாய்ந்த அணுகுமுறையில் வெற்றி என்பது அவன் வசமானது.

எவ்வளவு முயன்றும் விஜயினால் ராஜை வெல்ல முடியவில்லை , அவன் குறுக்குவழிகளில் கூட முயன்றும் அவனால் வெல்ல முடியாது இருப்பது அவன் மனதில் வெறியினை ஏற்றியது.

பூம்பொழிலில் ரம்யா மிகவும் பரபரப்பாக இருந்தாள்.

ரம்யா வாழ்வில் நடந்த ஒரு துயர சம்பவத்தின் காரணமாக ஜீவன் இழந்து இருந்த போது தான் மலைகுடிலில் வேலை செய்ய வந்த கயலை சந்தித்தாள்.

பார்த்த நிமிடத்திலிருந்து இருவருக்கும் இடையில் ஒரு அருமையான பந்தம் தோன்றியது எப்படி என்பது அவர்களே! அறியாத ஒன்று.

ரம்யாவின் அப்பா தமிழரசு மலைகுடில் தான் கடைநிலை பணியாலக வேலை செய்தார், அவர் மூலம் ரம்யாவை பற்றி முன்பே அறிந்திருந்தாள் கயல்.

கயலும் தன்னை பற்றி அனைத்தையும் ரம்யாவிடன் பகிந்து கொண்டாள்,இரு விஷயங்களை தவிர, ஒன்று ஆதி, ரவி இருவரும் உருவான விதம், மற்றொன்று அவர்களின் தந்தையை பற்றி.

எனவே இருவருக்கும் தன்னை போல் காலத்தின் கரங்களில் சிதைந்த மற்றொருவர் மீது அன்பும், நட்பும் மிகுந்திருந்தது.

“என்ன ரம்யா அதான் எல்லா டீடெயில்ஸ் எடுத்துக்கிட்டு போற அப்பறம் ஏன்! இப்படி பரபரன்னு இருக்க” என்றாள்.

அதற்கு ரம்யா “நான் இங்கே ஸ்கூல் படிக்கும் போது அம்மாவை பார்த்தது, நம்ம ஐயா இறந்த பிறகு அம்மா இங்க வரல, R.R டிரெஸ்டில் இருந்து நிர்வாகி யாராவது வந்து தான் இங்க உள்ள கணக்கை எல்லாம் எடுத்துட்டு போய் அம்மா கிட்ட காட்டுவங்க.”

“ஏன்! நீங்க இங்க வந்த பிறகும் அப்படித்தான் ஆனா இந்த முறை அம்மா என்னை கொண்டுவர சொல்லிருக்கங்க அவுங்களை கிட்டத்தட்ட 13 வருசத்துக்கு அப்பறம் பாக்க போறேன் அதான் கொஞ்சம் படபடனு இருக்கு” என்றாள்

ஆம்! கயல் இன்று வரை ட்ரெஸ்ட் நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை.

அவள் கூறியதை அமைதியாக கேட்ட கயல் , மலைகுடிலின் அன்னை என அழைக்கப்படும் ஜாஸ்ஸிடம் அறிவிக்க வேண்டிய விடையங்களை பற்றி ரம்யாவிடம் விளக்கினாள், இதற்கு முன்பு ட்ரெஸ்ட் நிர்வாகிகளிடம் தொடர்பு கொள்வாள்.

ரம்யா இந்த முறை அன்னையை பார்க்க போவதால் அவளிடமே! நேரடியாக தெரிவிக்க சொன்னாள் கயல்.

ராம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

வெண்ணிலவுக்கு சிறு பிள்ளை போல் அன்னை பிரிவை எண்ணி பாவமாக அமர்ந்து இருந்த அண்ணனை கண்டு சிரிப்பாக இருந்தது.

“ஏன்னா நீங்க இப்படி இருக்கிங்க அம்மா போன சுருக்குல வந்துடுவாக, அதுக்கு நீங்க பண்ற அழும்பு தாங்கள” என்றாள் புன்னகையுடன்.

தன்னை கிண்டல் செய்யும் தங்கையினை கண்டு ராமின் மனம் கனிந்தது, அவனை பொறுத்தவரை அவனுக்கு நிலா தங்கை மட்டும் அல்ல மகளை போல்.

வெண்ணிலா பிறந்த போது முதல் முதலில் கைகளில் ஏந்தியது ராம் தான்.

அழகிய விழிகளுடன் ரோஜாவினை போல் மென்மையாக இருந்த அவளை பார்த்து அவன் அடைத்த மகிழ்வு சொல்லில் அடங்காதது.

ராம் , ராஜ் இருவரும் தேவதை போல் இருக்கும் தன் தங்கை மேல் வைத்திருக்கும் பாசம் அளவிட முடியாதது.

சிரிக்கும் தங்கையின் தலையை வருடி “உன்னையும் அம்மாவையும் விட்டுட்டு என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது பட்டு,எனக்கு இருக்கும் ஒரே பலவீனம் நீங்க ரெண்டு பேரும் தான்டா“என்றான் வாஞ்சையுடன்.

ஜாஸ் சென்னை செல்ல தயாராகி மாடியில் இருந்து கிழே இறங்கினாள். அவளின் பால் வண்ண மேனிக்கு மரகத பச்சை நிற புடவை பாந்தமாய் பொருந்தி இருந்தது, நெற்றியில் இருந்த சிறு கருப்பு நிற பொட்டும் திருநீறு கீற்றும் வேந்தன் இல்லாத வெறுமையை பறைசாட்டியது.

முகத்தில் தேஜஸ் ஒளிர, காதுகளில் சிறிய அளவிலான வைர கமல் மின்ன, அளவான புன்னகையுடன் படிகளில் இறங்கி வரும்போது மகாராணியை போல் கம்பீரமாக தோன்றினாள் ஜாஸ் வில்லியம்ஸ்.

முகத்தினை பாவமாக வைத்திருந்த ராமை கண்டு கொள்ளாமல், வெண்ணிலாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

இனி! தாயின் முடிவை மாற்ற முடியாது என உணர்ந்து “சரி பாத்து பத்திரமா! போய்ட்டு வாங்க” என்றான் சமாதானமாய்!.

மகனை நோக்கிய ஜாஸ்ஸின் கண்களில் அளவு கடந்த அளவு அன்பு நிறைந்திருந்தது , அவனின் பாசத்தினை கண்டு.

Hi darlings ???
Next ud போட்டுட்டேன்
எப்படி இருக்குனு சொல்லுங்க .
Happy reading?????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top