• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அன்பின் மொ(வி)ழியில்- 6.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அன்பின் மொ(வி)ழியில்- 6.

அன்னையை கண்ட ரம்யா அதிர்ச்சியில் உறைந்து போய் சிலை என் நின்று விட்டாள்.

அவள் மனம் சொல்வது எப்படி சாத்தியம் ஆகும் என ரம்யாவுக்கு புரியவில்லை, உள்ளம் நிலை கொள்ளாமல் தவித்தது.

“ரம்யா” என்ற அன்பான குரலில் தன் மோன நிலையில் இருந்து வெளி வந்தவள், தன் குழப்பங்களை விடுத்து, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தன் இனமே தாய் என கொண்டாடும் ஜாஸ்ஸின் அருகில் விரைந்து சென்று பாதம் பணிந்தாள்.

ரம்யாவின் செயலை பார்த்த ஜாஸ்ஸின் நிமிர்வான விழிகளில், அன்பும், கனிவும் நிறைந்திருந்தது.

“ நல்ல இருடா கண்ணா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? வந்து உக்காரு” என அன்புடன் கூறினார்.

ஜாஸ் பூம்பொழில் போகவில்லை என்றாலும் கூட அங்கு நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வார்.

ஊர் மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்.வேந்தன் இறப்பில் சில வருடம் மட்டுமே, மற்ற விடயங்களை பற்றி யோசிக்காமல் வெறுமை சூழ இருந்தார்.

அந்த நேரத்தில் சண்முகம் தான் நிர்வாகம் மூலமாக மலைகுடிலின் பொறுப்புகளை நம்பிக்கையானவரிடம் ஒப்படைத்து , மேற்பார்வை பார்த்து வந்தார்.

இந்த சிறிய வயதில் ரம்யாவின் வாழ்வில் நடந்த இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது என்று ஜாஸ் நன்கு அறிவார் .

அன்னையை பார்த்தவள் “ நல்லா இருக்கிங்களா அம்மா?, எனக்கு உங்க பாரத்ததும் ஒன்னும் புரியல, முகம் கூட இப்ப தான் நல்லா நியாபகம் வந்தது, ஸ்கூல் படிக்கும் போது பார்த்தது ,” என தன் அதிர்வுக்கு காரணம் சொன்னாள் ரம்யா .

சிறுமியாய் இருந்தவள் இன்று அழகாய் மலர்திருப்பதை பார்த்தவர் புன்னகையுடன் . “அதான் நானும் உன்னை பாக்கணும்னு வர சொன்னேன்” என கூறினார்.

“அப்பா போன அப்புறம் நீங்க ஏன்மா மலைகுடில் பக்கமே வரலை?, இந்த முறை எனக்காக வாங்க” என்றாள் தாழ்மையுடன்.

வேந்தனை பூம்பொழில் மக்கள் எல்லாரும் ஐயா என்றுதான் செய்வார்கள்.

அவர்களுள் ஒருவராக நடந்துகொண்டாலும், ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வேந்தனை அந்த பகுதியின் அரசனாகவே மதிப்பார்கள்.

ஜாஸ் குடும்பத்துடன் பூம்பொழில் வரும் போது எல்லாம் வெண்ணிலாவுடன் விளையாட ரம்யா வந்துவிடுவாள், அப்போதிருந்தே அவளும் வெண்ணிலாவை போல் வேந்தனை அப்பா என்றே கூப்பிடுவாள்.

வேந்தனுக்கு ரம்யாவின் அந்த அழைப்பு மனதிற்கு மிக நெருக்கமாக தோன்றும்.

தன் மகளை போல் ஒரு அன்பு அவள் மீது அவருக்கு எப்போதும் உண்டு.

வேந்தன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அறியா வயதில் அவள் வாழ்வில் நடந்த சம்பவத்தினை நிறுத்தியிருப்பார், பின்னர் அவள் வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்து நடக்காது இருந்திருக்கும்.

விதியின் விளையாட்டை யாராலும் தடுக்க முடியவில்லை...

மலைகுடிலுக்கு அன்னையை அழைத்துவிட்டு அவரை பார்த்த ரம்யா விழிகளில் ஆவல் மிகுந்திருந்தது.

ரம்யாவினுள் பல குழப்பங்கள் இருந்தாலும் அன்னை மலைகுடில் வந்தால் ஏதோ நல்லது நடக்கும் என அவள் மனம் கூறியது.

அதன் காரணமாக தான் ஜாஸ்ஸினை மலைகுடிலுக்கு அழைத்தாள் .

அவளின் எதிர்பார்ப்பு மிகுந்த முகத்தினை கண்டு.

“இருக்கட்டும் கண்ணா கொஞ்ச நாள் போகட்டும் கண்டிப்பா வரேன்”, என்றவர் உள்ளம் வேந்தனை எண்ணி மருகியது.

பின் மலைகுடில் கணக்குகளை அன்னையிடம் தந்து செலவுக்கான காரணங்களை சொல்லி ஒப்புதல் பெற்றாள்.

ஜாஸ் , “மலைகுடிலோட நடவடிக்கைகள் எல்லாம் நல்ல மெய்ன்டைன் பண்ணறீங்க, குட்” என்றாள்.

ரம்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அன்னையின் பாராட்டில், “ நிர்வாகம் சார்ந்த எல்லா முடிவுகளையும் கயல் தான்மா , எடுக்குறது” என்றாள் பெருமையாக தோழியை பற்றி.

அவள் சொல்வதை அவருக்கே! உரித்தான மெல்லிய புன்னகையுடன் கேட்ட ஜாஸ்.

“நான் அந்த பெண்ணை பார்த்தது இல்ல ரம்யா, பட் ஒவ்வொரு டயம் சண்முகம் மலைகுடில் போய் வந்த பிறகு, என்னை பாக்க வரும் போது எல்லாம் கயலை பற்றி சொல்லுவார்.”

“ரொம்பவும் திறமையான அதே நேரம் அமைதியான பொண்ணுன்னு”. என்றவர்.
ஊர் விஷயங்களினை பற்றி அவளுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் “ரம்யா இந்த முறை நம்ம ட்ரெஸ்ட் மூலமா ஒரு ஹாஸ்பிட்டல் பூம்பொழில் பக்கத்துல எல்லா வசதியோட கட்ட போறோம்” என்றவர் அவள் அருகில் வந்து வாஞ்சையுடன் தலையில் தடவி கொடுத்தார்.

அன்னையின் வார்த்தைகளில் சில நொடி அவள் கண்களில் எல்லையற்ற வேதனை தோன்றி மறைந்தது.

பின் தன்னை சமாளித்து கொண்டு , “கண்டிப்பா மா இப்ப நம்ம ஊரில் இருக்க ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை, சும்மா பேருக்கு தான் அதை அரசாங்கம் வச்சுருக்காங்க.”என்று கூறி கொண்டிருந்தவள்.

ஒரு பெருமூச்சுடன், “இப்போ நீங்க கட்ட போற இந்த நல்ல தரமான ஆஸ்பத்திரி வந்த பின்னடியாவது ஊருல உள்ளவர்களுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்” என்றவள் வார்த்தைகள் ஆற்றாமையுடன் வெளிவந்தன.

ரம்யாவின் கைகளை பிடித்து கொண்ட ஜாஸ் “வாழ்க்கை பல பாடத்தை நமக்கு கற்று தரும் கண்ணா, எல்லாராலும் அதை ஏத்துக்க முடியாது”.

“அதிலியிருந்து போராடி வெளிலவரது சிலர் தான், அந்த விதத்தில் நான் உன்னை நினைத்து பெருமைப்படுறேன்.அப்பா இருந்தாலும் இதைத்தான் நினைப்பார்.”
“காட் பிளஸ் யூ” என்றார் ஆத்மாத்தமாய்.

பின் இருவரும் இணைந்து அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரி பார்த்து, பிறகு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு விட்டு, பழங்கதை பேசி கொண்டு அந்த நாளை இனிமையாக கழித்தனர்.

இரவு நேரம் நெருங்கவும் ஜாஸ் ரம்யாவிடம் “நீயும் என்னோட வா கண்ணா வீட்டுக்கு , நாளைக்கு ஊருக்கு போகலாம்”.

“உன் அண்ணா இருக்கான் அங்க, அவனும் உன்னை இத்தனை வருஷம் கழிச்சு பாத்தா ஹாப்பியா ஆகிடுவான்” என்றார் அன்புடன்.

அன்னையின் வார்த்தைகளை ரம்யாவினால் என்றும் மீற முடியாது, இருந்தாலும் சங்கடமாக இருந்தது, அவளின் தயக்கம் உணர்ந்த ஜாஸ்.

“எங்க எல்லாருக்கும் நீ வேற நிலா வேற இல்லடா, அதுவும் உன் வீடுதான் வா” எனவும் அவருடன் சேர்ந்து இல்லத்திற்கு சென்றாள் ரம்யா.

போகும் வழி முழுவதும் வெண்ணிலாவினை பற்றி கேட்டுக்கொண்டே வந்தாள் ரம்யா, அதே நேரத்தில் அவள் மனம் அண்ணனை பார்க்கும் ஆர்வமும் மிகுந்து இருந்தது.

அதற்கு முக்கிய காரணம் அவள் உள்ளத்தில் உள்ள சில குழப்பங்கள் தான்.

அன்னையின் இரு மைந்தர்களையும் நன்கு தெரியும் அவளுக்கு , அவர்கள் முகம் மனதில் இல்லை, ஆனால் இருவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பதை அறிவாள்.

அவளுடைய கேள்விக்கான விடை யார் என அறியும் ஆவல் ரம்யாவுக்கு.

அதே சமயம் கயலிடம் எந்த ஒரு விஷயத்தையும் வாங்க முடியாது என்பது திண்ணம் என்று தெரியும்.

அவளால் அறிய முடியாத ஒன்று இப்போது தெரிய போவது நிம்மதியை கொடுத்தது.

தன்னை போல் தோழியின் வாழ்வும் மலராமல் இருப்பதை கண்டு வேதனை இருந்தவளுக்கு, இப்போது கயலின் வாழ்வை சீர்படுத்த முடியும் என்ற எண்ணம் தோன்றியது.

இதில் பிள்ளைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது, இனி இதனை சரி செய்ய வேண்டியது தான் தனது கடமை என்று முடிவு செய்தாள் ரம்யா.

இருவரும் இணைந்து வீட்டிலில் வந்து இறங்கிய, அதே நேரத்தில் ராஜும், விஷ்ணுவும் ஆஃபீஸ்லிருந்து வந்தார்கள்.

அன்னையுடன் வந்த ரம்யாவை கண்ட ராஜின் விழிகள் சில வினாடியில் அவளை கண்டு கொண்டது.

“ஏய்! சின்ன குட்டி , வாலில்லா வானரமே! எவ்வளவு வளந்துட்ட நீ” என்றான் கேலியாக...

அவனின் பேச்சிலேயே யார் என்று அறிந்தவள்.
“ராஜ் அண்ணா ! அதை பணை மரத்தில் பாதி வளர்ந்த நீங்க சொல்ல கூடாது” என்றாள் குறும்புடன்.

“நல்ல இருக்கியா ரமி?” என்றவனிடம்.

“ரொம்ப நல்ல இருக்கேன் அதுக்கு காரணம் நீங்க ஊருக்கு வாங்க உங்களுக்கு காட்டுறேன்” என்றாள் விளையாட்டாக.

நீ காட்ட போற அந்த அதிசயமான காரணத்தை நினைச்சு நான் திக்குமுக்காடி போயிட்டேன் என்றான் கேலியாக.

ஆனால் உண்மையில் அப்போது தன் நிலை அப்படித்தான் இருக்கப்போவதை அறியாமல்.

அவளிடம் வெளிப்பட்ட பழைய குறும்பில் ராஜ், ஜாஸ் இருவர் மனமும் மகிழ்ந்தது.

இரட்டை சகோதரர்களுக்கு, ரம்யாவினை பற்றி அனைத்தும் தெரியும், அவர்கள் இருவரும் அப்போது லண்டனில் கட்டிட கலை பற்றி படித்து கொண்டிருந்தார்கள்.

ராஜின் முகத்தினை கண்ட பின்னர் ரம்யாவின் தவிப்பு அனைத்தும் முடிவுக்கு வந்தது.

தன்னுடைய வாழ்வின் பிடிப்பாக வந்த ஆதி ,ரவி இருவர் முகமும் ஏன் பிறந்த போதே பரிச்சயமான இருந்தது, என்பதற்கு இப்போது அவளுக்கு விடை கிடைத்தது.

அண்ணன்கள் இருவரில் யார் என்ற சிறிய கேள்வி மட்டும் இப்போது அவள் மனதில் இருந்தது.

கூடிய விரைவில் அதை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது ரம்யாவுக்கு.

அவர்கள் மூவரின் பிணைப்பை கண்ட, விஷ்ணு புன்னகையுடன் வரவேற்பாக சிறு தலை அசைவுடன், அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

அதன் பிறகு மூவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ஜாஸ், “ராஜ் பூம்பொழில்ல ஆர். ஆர் ட்ரெஸ்ட் மூலமா ஹாஸ்பிட்டல் கட்ட போறோம் அதை என்னனு பாரு, அப்புறம் தேவையான எல்லாதையும் ஏற்பாடு பண்ணனும் ” என்றாள்.

“நல்ல டாக்டர்ஸ் , ஏக்யூப்மெண்ட்ஸ் எல்லாம் பெஸ்ட்டா செய்யணும் “ என்றவரிடம்.

“கண்டிப்பா மாம்! நீலகிரி ப்ரொஜெக்ட் பண்ணும் போது அதையும் சேர்த்து முடிச்சுடுறேன்” என்றான் ஒப்புதலாக.

“அப்போ நீங்க எல்லாரும் பூம்பொழில் வருவிங்களா?” என்றாள் ரம்யா மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.

அவளின் தலையை பிடித்து ஆட்டிக்கொண்டே “வருவோம் சின்ன குட்டி நான் , மாம், ராம் நிலா எல்லாரும் வருவோம்” என்றான்.

ராஜின் வார்த்தைகள் அப்படி ஒரு நிறைவை கொடுத்தது அவளுக்கு.

அது வரை அவர்களிடம் வெளிப்பட்ட அன்பினை ரசித்து கொண்டு இருந்தவர், “ராம் கிட்ட பேசிடியா? ராஜ்” என்றார்.

"இல்ல மாம் நேர்ல வந்துதான் பேசணும்" என்றவன்.

“சின்ன குட்டி மலைகுடில் பசங்களுக்கு வேந்தன் குரூப்ஸ் வேலைக்கு நீ தான் ஆப்ளை பண்ணியா” என்றவனை.

“அது எப்படி அண்ணா உங்களுக்கு தெரியும்” என்றாள் கேள்வியுடன்.

“நம்ம கம்பெனி பேரு கூட தெரியல உனக்கு, அப்பா பேர்ல தானே இருக்கு என்றவன், அவுங்க மூணு பேருக்கும் அங்கேயே நம்ம கம்பெனி ப்ரொஜெக்ட்ல ஜாப் கொடுக்க சொல்லிருக்கேன் சின்ன குட்டி”.
“சரி போய் தூங்குங்க,” என்றவன்.

“ரம்யா நீ கீழ மாம் இருக்க ரூம்க்கு அடுத்து இருக்கதுல படுத்துக்க , குட் நைட் , ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றவாறு தூங்க சென்றுவிட்டான்.

ரம்யாவும் அன்னையுடன் அறை வரை சென்று அவரிடம் சொல்லிவிட்டு வந்து, தன் கட்டிலில் விழுந்தவள் மனம் நிறைவாக உணர்ந்தது.

பின் கயலிடம் அன்றைய சந்திப்பை பற்றி சுருக்கமாக தெரிவித்துவிட்டு , குழந்தைகளிடம் பேசி முடித்து, படுத்தவளை மற்ற நாள்கள் போல் போக்கு காட்டாமல் நித்திராதேவி அரவணைத்து கொண்டாள்.

விடியல் பல வித மாயங்களை செய்யவல்லது ...

நாளைய விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது...

அது அனைவருக்கும் சிறப்பாக அமையும் என நம்புவோம்.
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
irukka aqrvathukku ellarayum ippava malai kudilukku thara tharannu izhuthutu poi unmai ennannu therinjukka aarvama irukku... hmmm
உடனே வா.... ரொம்ப தேங்க்ஸ் sis☺☺☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top