அன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அன்புள்ள அழகிக்கு தனுஜாவாகிய நான் தனுஜனாக எழுதிய காதல் மடல்..............

காதல் என்று வந்தால் பிதற்றல் தானே கண்ணே,நானும் பிதற்றுகிறேன் சகித்துக் கொள்ளம்மா....................

ஆனந்த ஊற்றாகி என்னுள் பொங்கினாய் பொறுத்துக் கொண்டேன்,வண்ணம் கொண்ட வெண் நிலவாய் என்னை மயக்கினாய் மயங்கினேன்,நான் மயங்கி கிடைப்பதை பார்த்து என்னை எச்சரித்தாய் "மயங்காதே மனமே" என்று தெளிந்தேன்,சிறு பிள்ளையெனத் துள்ளி குதித்து ஆர்பரித்தாய் “நிலவொன்று கண்டேனே “ உன் ஆர்பரிப்பில் பங்கு கொண்டேன்,ஆனால் இன்றோ ஓர் மோகன புன்னகையில் என்னை வீழ்த்தி விட்டாய்.நாசுக்காகக் காதல் எழுதுகிறேன் என்று என் நெஞ்சை நசுக்கி விட்டாய் கண்ணம்மா,உன் கற்பனையில் ரசனையைக் கூட்டி என்னை வதைக்காதே, ஆயுதம் இல்லாமல் ஓர் அறுவை சிகிச்சை போல் உள்ளது.பித்துப் பிடித்து அழைக்கிறேன்,உன் எழுதுகோல் கொண்டு என்னை அடிமை ஆகிவிடதே,சற்று என் நிலையை எண்ணி கொள் ஒவ்வொரு முறை நீ இலக்கியத்தைத் தீண்டும் போது செத்துப் பிழைக்கிறேன் கருணை கொள் கண்ணம்மா................அது என்ன கண்ணம்மா உனது நாயகனுக்கு மட்டும் தனிச் சிறப்பு வந்துவிடுகிறது,கண்ணியம் கொண்டு நீ நகர்த்தும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உன்னைப் போல் அழகடி கண்ணம்மா.......அகம் பார்க்கவில்லையென்றால் என்ன உன் கற்பனையும்,எழுத்தும்,ரசனையும் கொண்டு நான் என் மனதில் சிற்பம் கொண்டேன் வாரே வா அசந்து விட்டேனடி உனது அழகில்.

கடிதத்தில் உன் அனுமதி இல்லாமல் எல்லை தாண்டி இருந்தால் என்னை மன்னித்து விடு கண்ணம்மா,எனக்கு எண்ணியதை எழுதி விட வேண்டும்,கை இருந்தால் எழுதுவாய என்று கடிந்து கொள்ளாதே கண்ணம்மா,ரசிகனை அவன் போக்கில் ரசிக்க விடு ,ஏனென்றால் அவன் சாபம் பொல்லாதது.ஒவ்வொரு கதை முடிவிலும் மழை சாரலில் நினைந்த உணர்வு,உணர்வுகளை மெல்ல தீண்டும் வித்தை கற்று வைத்திருக்கிறாய் கண்ணம்மா.இன்னும் என் ரசனையை துயில் உரித்துக் காட்ட மனம் ஏங்குகிறது கண்ணம்மா,உன் பட்டுக் கையில் சிக்கி நான் சிதைந்து போகும் அபாயம் உள்ளதால் இத்துடன் இக்கடிதத்தைத் தற்காலிகமாக முடித்துக் கொள்கிறான்..........


இது முடிவல்ல தொடர் கதை கண்ணம்மா..............

இப்படிக்கு அன்பு வாசகி

தனுஜன் ஆகிய தனுஜா............
 

Advertisements

Latest updates

Top