//அன்பு //
அவ்வப்போது
'நேசிக்கிறேன் உனை'
என்றே கூறிடல் வேண்டுமா?
பிழையில்லையே...
கூறுவதால்
குறையப்போவதில்லையே... அன்பின் ஆழம் அங்கே
அதிகரிக்கத்தானே
செய்யும்...
அவ்வப்போது நேசத்தினை நிரூபிக்க வேண்டுமா?
பிழைதானே...
அன்பங்கே உண்மையாய் இல்லையே...
அன்பங்கே உரிமையாய் காட்டப்படவில்லையே...
அன்புக்கு அங்கே மதிப்பின்
நிறை மிகக்குறைவாகவே...
அன்பங்கே உணர்வாய் கொள்ளப்படவில்லையே...
அவ்வப்போது அன்பை
கேட்டிடல் மிகைக்கும்...
அவ்வப்போது காட்டிடக்
கேட்டல் மிகைக்கொல்லும்...
நம்பிக்கை தகர்க்க
அன்பங்கே காலம் செல்ல
தகரமாய்...
நம்பிக்கை கொள்ளத்தவற
அன்பங்கே சந்தேகத்தின்
பிடியில் உயிரற்ற
பிணமாய் ...
நம்பியே வாழ்ந்திட
அன்பங்கே அகிலமாய்...
நம்பக் கேட்டுக்கொண்டே
இருந்திட,
அன்பில்லை அதிலே அழிவே மீதம்...
அன்பை அன்புக்காய்
மட்டும் கொள்வோம்...
கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பை தகர்த்து
கொட்டிக்கொடுப்போம்...
கிடைக்காத போதும்
கொடுத்த நிம்மதி
கொள்வோம்...
நிரூபிக்க வேண்டாம்...
நிலைக்க கொடுக்கலாம்...
அன்பை இங்கே,
வலிக்கு மருந்தாக
வேண்டாம்...
பிணி அண்டாமல் இருக்க
கொடுக்கலாம்...
இமையி...
அவ்வப்போது
'நேசிக்கிறேன் உனை'
என்றே கூறிடல் வேண்டுமா?
பிழையில்லையே...
கூறுவதால்
குறையப்போவதில்லையே... அன்பின் ஆழம் அங்கே
அதிகரிக்கத்தானே
செய்யும்...
அவ்வப்போது நேசத்தினை நிரூபிக்க வேண்டுமா?
பிழைதானே...
அன்பங்கே உண்மையாய் இல்லையே...
அன்பங்கே உரிமையாய் காட்டப்படவில்லையே...
அன்புக்கு அங்கே மதிப்பின்
நிறை மிகக்குறைவாகவே...
அன்பங்கே உணர்வாய் கொள்ளப்படவில்லையே...
அவ்வப்போது அன்பை
கேட்டிடல் மிகைக்கும்...
அவ்வப்போது காட்டிடக்
கேட்டல் மிகைக்கொல்லும்...
நம்பிக்கை தகர்க்க
அன்பங்கே காலம் செல்ல
தகரமாய்...
நம்பிக்கை கொள்ளத்தவற
அன்பங்கே சந்தேகத்தின்
பிடியில் உயிரற்ற
பிணமாய் ...
நம்பியே வாழ்ந்திட
அன்பங்கே அகிலமாய்...
நம்பக் கேட்டுக்கொண்டே
இருந்திட,
அன்பில்லை அதிலே அழிவே மீதம்...
அன்பை அன்புக்காய்
மட்டும் கொள்வோம்...
கிடைக்கும் என்ற
எதிர்பார்ப்பை தகர்த்து
கொட்டிக்கொடுப்போம்...
கிடைக்காத போதும்
கொடுத்த நிம்மதி
கொள்வோம்...
நிரூபிக்க வேண்டாம்...
நிலைக்க கொடுக்கலாம்...
அன்பை இங்கே,
வலிக்கு மருந்தாக
வேண்டாம்...
பிணி அண்டாமல் இருக்க
கொடுக்கலாம்...
இமையி...