Vaishu Ayyam
நாட்டாமை
உனக்கு இது கூட
தெரியாதா
என்ற உன் கேள்வியை
எதிர்பார்த்தே
பல நேரங்களில்
பதிலையும்
என்னுள் பதுக்கிக்
கொள்கிறேன்!
முதன்முதலாய் உனை
கைகளில் ஏந்திய
கணம் தொட்டு
நாளொன்றுக்கு
ஒரு பாடம் நானும்
கற்று தேர்கிறேன்!
நீ வேர்பிடித்து நிற்க
அழகான
அடித்தளமும்
நீ சிறகு விரித்து பறக்க
பரந்த வானமும் நீயே
உருவாக்குகையில்
உன்னை நெட்டித்தள்ளும்
நெம்புகோலாக அங்கே
அருகிருப்பேன்!
எவ்வளவு வளர்ந்தாலும்
உன்னுள் இருக்கும்
குழந்தைத்தனத்தை
இறுகப் பற்றிக் கொள்!!
தண்ணீரில் வாழும் தாவரம்
தன்னையும் வளர்த்து
தன்னை உண்ணும்
மீன்களையும்
வாழ்விப்பது
போல் வாழ்வில்
நீயும் உயர்ந்து
பிறரையும் உயர்த்த
இந்த அன்னையின்
அன்பு
வாழ்த்துக்கள்!!
தெரியாதா
என்ற உன் கேள்வியை
எதிர்பார்த்தே
பல நேரங்களில்
பதிலையும்
என்னுள் பதுக்கிக்
கொள்கிறேன்!
முதன்முதலாய் உனை
கைகளில் ஏந்திய
கணம் தொட்டு
நாளொன்றுக்கு
ஒரு பாடம் நானும்
கற்று தேர்கிறேன்!
நீ வேர்பிடித்து நிற்க
அழகான
அடித்தளமும்
நீ சிறகு விரித்து பறக்க
பரந்த வானமும் நீயே
உருவாக்குகையில்
உன்னை நெட்டித்தள்ளும்
நெம்புகோலாக அங்கே
அருகிருப்பேன்!
எவ்வளவு வளர்ந்தாலும்
உன்னுள் இருக்கும்
குழந்தைத்தனத்தை
இறுகப் பற்றிக் கொள்!!
தண்ணீரில் வாழும் தாவரம்
தன்னையும் வளர்த்து
தன்னை உண்ணும்
மீன்களையும்
வாழ்விப்பது
போல் வாழ்வில்
நீயும் உயர்ந்து
பிறரையும் உயர்த்த
இந்த அன்னையின்
அன்பு
வாழ்த்துக்கள்!!