அப்படியே இன்னொரு கவிதை...

#1
கனவுகளுக்குத் தடை உத்தரவு...

எங்கும் நிசப்தம்;
இதயவானமெங்கும் இருட்டு;
கண்சிமிட்டிப் புன்னகைக்கும் விண்மீன்கள் இல்லை;
காரிருளின் ஓளிவிளக்காம் வெண்ணிலவும் இல்லை;
அன்பு மணம் கமழும் உன் அழகிய புன்னகை இல்லை;
உள்ளத்தை ஊடுருவும் உன் விழிப் பார்வையும் இல்லை;
இரவு மிகவும் கடுமையானதாக இருந்தது...
கண்கள் கணமும் மூட மறுத்தன...
விடியலை நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன்...
வந்தது; என் முகம் பார்த்து தன் முகம் திருப்பிச் சென்றது...
நடப்பது அனைத்தும் விந்தையாக இருந்தது;
ஒன்றும் புரியாமல் தென்றலிடம் காரணம் கேட்டேன்...
அது என் காதில் மென்மையாகக் கிசுகிசுத்தது - "இன்று உன் கனவுகளுக்குத் தடை உத்தரவு".
 

Latest Episodes

Sponsored Links

Top