• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அம்மாவிற்கு....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
அம்மா
………......................................

அம்மா--இவள் வார்த்தைகளால் வளைக்க முடியாதவள்,
வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவள்!

தன் உடல் உருக்கி,
உயிர் உறையும் பிரசவ வலி கொண்டு புது உயிரை பெற்றெடுப்பாள்!
கண்கள் சொருகும், மயக்க நிலையிலும், உதிரத்தில் உதித்த மழலையின் பூ முகம் பார்த்து, வலிகள் மறந்து புன்னகைப்பாள்!
அந்தப் புன்னகை,
உலகையே விலை என்ன?
எனக் கேட்கும்!

நெஞ்சோடு அள்ளி எடுத்து,
மகவுக்கு தாயமுதை
தான் அளிக்கும் வேளையிலே, நாடெங்கும் பூத்த பூக்களை அள்ளி, அவள் நடுத்தலையில் கொட்டியதை போல், பூரித்துப் போவாள் புன்னகைக்கும் பாவையவள்!

மெல்ல மெல்ல எட்டு வைத்து, தத்தித்தத்தி நடந்து வந்து,
தாவி அவளை அணைத்திடும் குழந்தையின்
உச்சி முகர்ந்திடும் போது,
அளவுகோல் வைத்து, அளக்க முடியாத ஆனந்தத்தை அடைந்து நிற்பாள் அன்னையவள்!

மடல் விரித்த மலர்,
மணம் பரப்புதல் போல ,
இதழ் விரித்து, தான் பெற்ற மழலை தன்னை முதல்முறை அம்மா! என அழைத்திடும் போது,
அந்த அழைப்பின் முன்னே,
இந்த பூமியே அவள் உதைத்தாடும் கால்பந்தாகும்!

உணவு மறக்கும், உறக்கம் மறையும், நெஞ்சம் வேதனையில் விம்மும், பெற்றபிள்ளை நோயினில் விழுந்தால்..

பிள்ளை கொண்ட நோயினை போல் நூறு மடங்கு என்றாலும்,
தான் ஏற்க தயாராவாள், தாயானவள் மழலைக்கு அது தீரும் என்றால்.!

தன் குழந்தையின்
பசி போக்கும் என்றால்,
எந்த வேலை செய்யவும்
தயங்க மாட்டாள்!
பத்து நாள் அவள் பட்டினி என்றாலும் ஏற்றுக்கொள்வாள்,
பிள்ளையின் ஒருவேளை பசி தீர்ந்தாலே போதுமென்பாள்!

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைக்கு, முத்தம் வைக்கவும்,
தலையில் கொட்டு வைக்கவும்
அவளால் தான் முடியும்!

வேதனை கொண்ட பிள்ளையை,
மடி சாய்த்து,தலை தடவி,
தட்டிக் கொடுக்கும் அவள் கைவிரல்களில் கிடைக்கும் ஆறுதல், உலகில் வேறெங்கும் கிடைக்காது!

இல்லத்தரசியானாலும்,
நாட்டுக்கே அரசியானாலும்,
எந்நேரமும் அவள் நினைவில் நிற்பது
பெற்ற பிள்ளைகளின் நலன் மட்டுமே!

எந்த வித கலப்படமும்,எதிர்பார்ப்புகளும்
அற்றது அவளது பிள்ளை பாசம்!

உலகில் மிக புனிதம் என
ஒன்று இருக்குமானால்,
அது தாயன்பை தவிர வேறேதுமில்லை!

அம்மா,
அன்பென்ற வார்த்தைக்கு
அர்த்தமில்லை,
அகராதியே.. அவள்தான்!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top