• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

'அம்மா எப்போ வருவாப்பா?'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
74
Reaction score
298
Location
Pudukkottai
"அம்மா எப்போ வருவாப்பா? " என்று அப்பா ரகுநாதனைப் பார்த்து கேட்டாள், வந்தனா.

"ம்..."

"அம்மா எப்போ வருவாப்பா? "

ரெண்டாவது தடவையும் கேட்டாள் வந்தனா.

"எப்ப வேணும்னாலும் ,... இப்ப கூட வரலாம். அதான் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கோம்.நீ சாப்பிடறியா?"

"அம்மா வந்துடட்டும் சேர்ந்து சாப்பிடலாம் "

"லேட் ஆனா ரொம்ப பசிக்கும் "

"இருக்கட்டும்பா அம்மா ஒரு வாரமாக வீட்டுக்கு வராம வேலை செய்திட்டு இருக்காங்க. இன்னைக்கு கட்டாயம் வருவாங்கன்னு சொன்னீங்க. அவங்களுக்காக இன்னும் கொஞ்ச நேரம் நாம் காத்திருக்க கூடாதா? "

"உன்கிட்ட பேசி என்னால் ஜெயிக்க முடியாது? "

அவனுக்கு ஓர்க் ப்ரம் ஹோம்.

ரச்னா சீனியர் நர்ஸ்.

மருத்துவமனையில் பணி இருக்கும் சூழ்நிலை.

ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை.

"அம்மாவுக்கு பிடிச்ச உணவு எல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க தானே?" என்று கேட்டாள்.

"எல்லாம் செஞ்சிருக்கேம்மா" என்றான் ரகுநாதன்.

மடியிலிருந்தது கீழே 'கேட்' நுழைவு பகுதியை பார்த்து கொண்டிருந்தான் ரகுநாதன்.

யாரும் எதிர்பாராத விதமாய் கொரோனா ஒரு மாதமாய் எல்லாரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது . ஜாதி மதம் இன பேதமில்லாமல், ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஒரு புரட்டு புரட்டிப் போட்டு விட்டது.

ரகுநாதன் தனியார் நிறுவன சேல்ஸ் மேனேஜர். எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். ரச்னா அவனின் காதல் மனைவி. தனியார் நர்சிங் ஹோமில் இருந்தாள். தற்பொழுது அரசு பெரிய மருத்துவமனையில் சீனியர் நாஸ்.

கடுமையான உழைப்பு. சேவை மனப்பான்மை அதிகம்.

முதன் முதலில் கொரோனா செய்தி வந்தவுடனே பரபரப்பானாவள் அவள் தான்.

தானாகவே முன்வந்து தலைமை பணியை எடுத்துக் கொண்டாள். அவள் தலைமையில் முன்னூறு தாதியர்கள் சென்னை, உள்நாட்டு பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் என பரிசோதணை செய்ய் ஆரம்பித்தார்கள்.

பலர் தாமாக ஓத்துழைத்தார்கள். சிலர் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. சிலர் விளக்கம் சொல்லியும் 'ஐயம் பர்பெக்ட்லி ஆல்ரைட் ' என்று வாதிட்டனார்கள். அவர்களையும் பேசி சமாளித்து பரிசோதணை உட்படுத்த வேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனா இருந்து. அவரை தனி ரூமில் வைத்து சிகிச்சை தொடங்கியது. ஆரம்பகட்ட என்றாலும் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டியிருந்தது.

"அப்பா" என்றாள் வந்தனா.

"என்னம்மா? அம்மா வந்திருவா".

"இதுவரைக்கும் எத்தனை பேரை அம்மா குணப்படுத்தியிருக்காங்க? "

"நூற்று தொன்னூத்து ஒன்பது பேரை"

"சூப்பர் டாடி.. அதை டி.வி.யில் சொல்லிட்டு இருக்கும் போது தான் நம்ம வீட்டுல கரண்ட் போயிடுச்சு"

"ஒரு மணி நேரத்துல மின்சாரம் வந்துடும்மா ! அதுக்குள்ள அம்மாவும் வந்துடுவாங்க!

அவனின் கையிலிருந்த கைபேசி அழைத்தது.

எடுத்தான்.

நண்பன் சேது.

"சொல்லு சேது"

"பக்கத்தில வந்தாச்சு. .. ரெண்டு வேன்... உள்ளே எல்லாம் வர முடியாது. வாசலோட கிளம்பிடுவோம். வந்தனா எங்கே?"

"பக்கத்துல தான் இருக்கா"

"எங்கே இருக்கா?"

"பக்கத்துல தான் கொஞ்சம் தள்ளியிருக்கா. நான் பேசறது அவளுக்கு கேட்காது."

"மெத்தமா மூடி வைச்சிருக்கோம். மொட்டை மாடியில் தானே நீ நிக்கற? "

"ஆமாம் கீழே ப்ளாட் பீப்பிள் எல்லாம் கூடியிருக்காங்க. இவளுக்கு ஏதாவது தெரிஞ்சுடப் போவுதுன்னு மேலே அழைச்சிட்டு வந்துட்டேன் "

"இதோ வந்திட்டோம்! கீழே வந்துடு"

"ஓ.கே. "

வந்தனாவுடன் கீழே வந்தான்.

ஒட்டு மொத்த ப்ளாட் வாசிகளும் முகத்தில் கவனத்துடன்.

அதையும் தாண்டி அவர்களின் கண்களில் அவன் மேல் தெறித்து விழுந்த சோகத்தினைப் பார்த்தான்.

தெருமுனையில் ஆம்புலன்ஸ் திரும்பியது.

எல்லாருக்கும் முன்னால் வந்த ஊழியர் ஒருவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்.

"சார் பாப்பாவை யார் கிட்டயாவது விட்டுட்டு வாங்க, நீங்க மட்டும் புதைக்கிற இடத்துக்கு வர முடியும். " கவனமாய் வந்தனா காதில் விழாமல் சொன்னான். சைரனுடன் வேன் நெருங்க-

பக்கத்து ப்ளாட்டில் இருந்த வந்தனாவின் தாத்தாவும் பாட்டியும் ஓடி வந்தார்கள்.

வந்தனாவை அவர்கள் பிடித்து கொண்டகொண்டர்.

பேக் செய்திருந்த உடலை மின்னல் வேகத்தில் எல்லாரும் பார்க்க-

அவன் கண்களில் ஒரு துளிக் கண்ணீர்.

வந்தனாவைப் பார்த்தான்.

"போயிட்டு வாங்க டாடி . நான் பாட்டி வீட்டுல பத்திரமா இருப்பேன். அம்மாவை வழியனுப்பிட்டு வாங்க. நான் டாக்டராவேன். அம்மா ஹெட் நர்ஸா இருந்து செஞ்ச வேலையை இன்னும் அதிகமாக்கி நிறைய ரிசர்ச் செய்து எந்த நோயும் நம்ம நாட்டுக்குள்ள நுழைய விடாம பார்த்தூப்பேன் "என்றாள்.

பலருக்கு தீவிர சிகிச்சையளித்ததில் அம்மாவின் உடலும் பாதிக்கப்பட்டு இறந்து போனது அவளுக்கு தெரிந்திருந்தது.



? இந்த சிறுகதை அனைத்து மருத்துவதுறை சார்ந்த ஊழியர்கள் சமிர்பிக்கிறேன்?

? இது உண்மையான கதை பெயர் மாற்றம்
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
நோ words to say anything pls வீட்டுக்குள்ளேயே இருங்க pa எல்லாரும் ...நமக்கு மருத்துவம் பண்ணுறவுங்களுக்கும் குடும்பம் இருக்கு
 




Jananisudhakar

நாட்டாமை
Joined
Apr 18, 2018
Messages
95
Reaction score
327
Location
Singapore
Tears rolling down my eyes reading this story. They are a darling daughter, cute sister, wonderful wife, amazing mom of someone. Who were forced out of their home by his/her own heart just to serve us. Prayers to all of them to return home safe. A great salute to all such living gods.
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
All the doctors,nurses and public workers are fighting to save people by sacrificing their life...pls stay at home. Pls pray for them..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top