• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அரும்பாகி மொட்டாகி பூவாகி 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்..
அதேதான் லைக்ஸ்க்கும் கமென்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி. Siteல் வர்ற சில கதைகளைப் படித்தேன். அதையெல்லாம் படிச்சிட்டு என் கதைக்கும் நீங்க லைக் பண்றீங்கன்னு தெரிஞ்சப்போதான் உங்க பெருந்தன்மையான மனதைப் புரிஞ்சுகிட்டேன்??. லைக்ஸ் அன்ட் கமென்ட் போட்ட எல்லோருக்கும் நன்றி?? இதோ நான்காவது அத்தியாயம் உங்களுக்காக..
ஆவலுடன் வித்யா செல்வம்.

அத்தியாயம் 4
மனோ டவர்ஸ் என்று ஆங்கிலத்தில் தங்க நிறத்தில் வார்க்கப்பட்ட எழுத்துகளைக் தாங்கியபடி நின்றது அந்த இரண்டு மாடிக் கட்டிடம். தனது டூவீலரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சாவியை எடுத்தவர் கொஞ்சம் தள்ளி நின்ற அந்த ஐ20 ஐப் பார்த்ததும் முதலில் நினைத்தது இன்றைக்குமா என்பதுதான். பின்னே அவரே 9 மணி அலுவலகத்துக்கு எட்டு முப்பதுக்கு வருபவர். அவரை விட சீக்கிரம் வருகிறான்.அவர் பெண்ணை பள்ளியில் விட்டு வர இந்த நேரம்தான் வசதிப்படுவதில் முன்னே வருவதில் பிரச்சினையில்லை. மற்றவர் ஒன்பதிலிருந்து ஒன்பது முப்பதிற்குள் வரும் இந்த அலுவலகத்தில் இந்த ஐந்து மணி செடி என்று ஒன்று உண்டு, அதில் பூ பூத்தால் கடிகாரமே பார்க்க வேண்டாம், மணி ஐந்து என்று சொல்லி விடலாம், அது போல மனோ ஒரு ஒன்பது மணி ஓனர். மணி அடிப்பதும் இவன் எம்.டி அறையைத் திறப்பதும் சரியாக இருக்கும்.
மனோ இந்த அலுவலகத்தை ஆரம்பித்ததிலிருந்தே அப்படித்தான். கம்பெனி ஆரம்பித்த நாளிலிருந்து அவனுடைய செக்ரட்டரியாக வேலை செய்கிறார். அப்பொழுதெல்லாம் ஒன்பது மணிக்கு வந்ததும் இவரை அழைத்து அன்றைய பேப்பர் ஒர்க்ஸ் எல்லாவற்றையும் கடகடவென சொல்லுவான். அப்புறம் வண்டியை எடுத்து கிளம்பி விடுவான். தனியாக, இல்லைனா அந்த மேக்னா பொண்ணோடு. மேஸ்திரியைப் போய் பார்ப்பான். கம்பி சப்ளை செய்பவரைப் பார்ப்பான். சரியான விளம்பரம், சரியான இடங்களில் சொல்லி வைப்பது, அதிர்ஷ்டம் எதனால் என்று தெரியவில்லை அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதலில் கிடைத்தது இரண்டு வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம்தான்.
அந்த இரண்டில் ஒன்று அந்த ஏரியாவின் முக்கிய பிரமுகர் ஒருவருடையது. பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் எல்லோரும் வீட்டைப் புகழ, வீட்டு ஓனர் நம்ம மனோவைப் புகழ, மனோவிற்கு முதல் பெரிய வாய்ப்பு வந்தது. அது மூன்று அடுக்குகளுடன் நான்கு காம்ப்ளெக்ஸ்கள் கொண்ட அபார்ட்மென்ட். அதில் ஒரு காம்ப்ளெக்ஸை மனோவிடம் கொடுத்தது நிறுவனம். கொடுத்த நேரத்தில் குறிப்பிட்ட பணத்தில் கட்டிடம் கையில் வர எல்லா காம்ப்ளெக்ஸின் பொறுப்பும் மனோவிற்கே வந்தது.
அதற்குப்பின் எல்லாமே ஏறுமுகம்தான். போன வாரம் நடந்த ஒரு விருந்தில் கூட இதெல்லாம் அதிர்ஷ்டம் பா என்று பேசிக் கொண்டனர். மாதவிக்கு அதில் அவ்வளவு உடன்பாடு இல்லை.
கூடவே இருந்து பார்ப்பவர் ஆயிற்றே. இங்கேயும் தொழிலாளர் பிரச்சனை வரும். அரசு அலுவலகங்களின் சிகப்பு நாடாக்கள் கட்டம் கட்டும். அதை எல்லாம் அவன் சமாளிப்பதைப் பார்த்து ரசிக்க கூட செய்வார்.போன வருடம் ஒரு கட்டிடம் ரொம்பவே தகராறு பண்ண, வக்கீல், இடத்தின் ஓனர், பிஸினஸ் அட்வைசர், பி.ஆர்.ஓ, இன்ஜினியர் இன்னும் சிலருடன் மீட்டிங் போட்டான். அதில் ஒருவர் சொன்னார், “என்ன சார்.. பயமாயிருக்கே.. கையை ரொம்ப கடிச்சிருமோ?”
அதற்கு மனோ சொன்னது, “ ஏன் பயம் சார். பரிட்சையில் விடை தெரியாத கணக்கு வந்தால் பயப்படூவீர்களா.. அதற்கான ஃபார்முலாவைத் தானே தேட வேண்டும். அதைத் தேட தான் இந்த மீட்டிங். எல்லா ப்ராப்ளெம்சுக்கும் சொல்யூசன்ஸ் உண்டு. இது நமக்கான சேலஞ்ச். சரியாக காய் நகர்த்தினால் வெற்றி. அதை எப்படி செய்வது என்று கண்டுபிடிக்கத் தான் நாம் எல்லாம் இங்கே வந்திருக்கிறோம்..
பாசிடிவ் எண்ணமும் சரி, நெகட்டிவ் எண்ணமும் சரி, கொட்டாவி போலத்தான். ரூமில் ஒருவருக்கு வந்தால் எல்லோருக்கும் வந்து விடும். அவனது வார்த்தை கொடுத்த பூஸ்டில் எல்லோரும் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி 'பீக் எ பூ' என்று ஓடியே வந்து விட்டது.
ஆனால் அப்பொழுது கூட இவ்வளவு சீக்கிரம் வரமாட்டான். அந்த இவ்வளவு, எவ்வளவு என்பது மாதவிக்கே தெரியாதது. மூன்று நாட்களுக்கு முன்னால் இவர் வரும்போதே அவன் கேபினுக்குள் இருப்பதைப் பார்த்ததும் என்னவோ என்றுதான் உள்ளே சென்றார்.
“வந்துட்டீங்களா சிஸ்டர்? வேலையை ஆரம்பிக்கலாமா?”
“இதோ ஒரு நிமிசம் பா”, ஓடிவந்து நோட்பேடை எடுத்துப் போனார்.
“ அந்த வேளச்சேரி சைட்க்கு கம்பி இறக்குமதி பார்க்கணும். நம்ம நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் ப்ராஜெக்ட்க்கு பில்டிங் ப்ளான் ஃபைனலைஸ் பண்ணனும், அப்புறம்”
சொல்லிக் கொண்டே போனவனை சந்தேகமாகப் பார்த்தார்.
“என்னாச்சு பா?”
ஃபுளோவில் சொல்லிக் கொண்டிருந்தவன் இவர் கேட்டதும் எதைப் பற்றி கேட்கிறார் என்று ஒரு நொடி புரியாமல் பார்த்தான். புரிந்ததும் சின்ன தயக்கத்திற்குப் பின் சொன்னான்.
“ அது.. அடுத்த வாரம் வீட்டில் ஒரு வேலை சிஸ்டர். முக்கியமான வேலை இல்லாதிருந்தால் ஆஃபிசுக்கு வர வேண்டாம் என்று பார்க்கிறேன்”
வாட்!! மனோவாவது லீவ் போடுவதாவது.
மாதவியின் காது சொன்னதை ‘நோ, நோ.. நீ தப்பா கேட்டிருப்ப.. போய் மறுபடியும் கேட்டுட்டு வா' என்று மூளை தலையைத் திருப்ப வாய் கேட்டது, “ என்ன தம்பி.. சரியா கேட்கலை”
அவர் முகத்தையே பார்த்திருந்தவன் சிரித்து விட்டான்.
“ஹாஹா.. சிஸ்டர்.. நீங்க சரியாத்தான் கேட்டிருக்கீங்க. இந்த ஒரு வாரம் கொஞ்சம் அதிகப்படியான வேலையிருக்கும். ஓ.டி போட சொல்லி அக்கௌன்ட்சில் சொல்லி விடுங்கள்”
“ம்ம்.. சரி தம்பி”
அன்றிலிருந்து இந்த மூன்றுநாட்களாக சீக்கிரம் வருகிறான்.
மனம் தன் வேலையைச் செய்யும் பொழுது கை கால்கள் தன் வேலையைச் செய்ய மாடியேறி தன் கேபினில் ஹேன்ட் பேகை வைத்தார். வாட்ச்மேன் ஏற்கனவே பூ போட்டிருக்க தன் பங்காய் விளக்கேற்றி பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு தன் டேபிளை ஒழுங்குபடுத்தினார்.
 




Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
' ஆனால் அடுத்த வாரம் ஒரு நாள் லீவ் வேண்டும். ஆசை மாமியாரைப் போய் பார்த்து நாளாகி விட்டதாம். இவரது நாற்பது வயது குழந்தைக்கு அவர் அம்மாவைப் போய் பார்க்கணுமாம். இத்தனை வேலைகளுக்கு நடுவே போய் மனோவிடம் கேட்பதற்கே தயக்கமாக இருந்தது. என்றைக்கு இந்த அதிகப்படியான வேலை முடியும். மனோ வராத நாளே தானும் லீவ் எடுத்துக்கொண்டு கொண்டால் ஈசியாயிருக்கும்.. மனோவிடமே கேட்கலாமா'
ஆபத்பாந்தவனாய் சௌம்யா வந்தாள். சீச்சீ.. மேடம்.. சௌம்யா மேடம்.. போன வாரம் விருந்தில் தான் வேதவள்ளி பாடம் எடுத்திருக்கிறார்.
“மேடம்”..
கொஞ்சம் சத்தமாக “மேடம்”
கடவுளே.. “ சௌம்யா மேடம்”
ஏதோ கடுப்பில் புருவம் சுருங்கியவாறு வந்தவள் சட்டென்று நிமிர்ந்தாள்.
“என்ன சிஸ்டர்”
“அடுத்த வாரம் என்னைக்கு ஃபன்சன்”
“என்ன ஃபன்சன்”
என்ன ஃபன்சனா.. மனோ சொன்னாரே.. அதனால் தான் இந்த வாரம் அதிகப்படியான வேலையென்று”
மீண்டும் சௌமியின் முகம் சுருங்கியது.
“என்ன அதிகப்படியான வேலை.. போங்க சிஸ்டர்” சின்ன பிள்ளை போல அலுத்துக் கொண்டே சென்றவளைப் பார்க்க நிஜமாகவே சிறுபிள்ளையாகத்தான் மாதவிக்குக் தெரிந்தாள். பிங்க் நிற அனார்கலியில் அதே பிங்க் நிறத்தில் ஹேர் பேண்ட், வாட்ச் ஸ்டிராப், பொட்டு. மாசு மருவில்லாத சர்மம். அவள் சிரித்தபடி வந்தால் பியூட்டி புராடக்ட் விளம்பரத்திற்கு நடிக்கலாம்.
சௌம்யா, எக்ஸிக்யூட்டிவ் ஹெட் என்று பெயர்ப்பலகை தாங்கியிருந்த அறைக்குள் சென்று ஹேன்ட் பேகை கீழே போட்டதில் தொம்மென்று விழுந்தது. அதுதான் ஏதோ தப்பு செய்தது போல அதை முறைத்தாள்.
இன்று காலையிலிருந்தே சௌமிக்கு எல்லாமே எரிச்சலூட்டுகிறது.
'அப்படியென்ன வேலை.. அவன் பாட்டுக்கு அசால்டாக சொல்லி விட்டான். கால் டாக்ஸியில் வந்து விடு சௌமி என்று'
இன்றைக்கு வந்த காருக்கு நான்கு சக்கரங்கள். ஆட்டோவிற்கு மூன்று சக்கரங்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.. அதுவும் அந்த டிரைவர் ஓட்டினானே. ஆக்ஸிலரேட் பண்றான். பிரேக் போடுறான். ஆக்ஸிலரேட் பண்றான். பிரேக் போடுறான். அவள் என்ன ராட்டினத்திற்கா ஏறினாள். அரைமணி நேரத்தில் காலையில் சாப்பிட்ட பூரி வயிற்றை விட்டு உணவுக் குழாயை எட்டிப் பார்த்து விட்டது.
நேற்றே தாயிடம் கேட்டாள், “அம்மா.. கார் வாங்கிக்கிறேன்மா”
ஏற்கனவே ஏதோ எரிச்சலில் இருந்த வேதவள்ளிக்கு கோபம் வந்தது.
“ ஏன்.. என்ன பிரச்சனை”
“ மனோ மூன்று நாளா சீக்கிரம் கிளம்பிடுறான். கேபில் போறது பிடிக்கலை”
“அப்போ நீயும் ஏழு மணிக்கே மனோவோட கிளம்பு”
“ஆங்.. அது எப்படி”
“ஏன்? ஓனரோட போய் இறங்கினால் தான் நீயும் ஓனராய் தெரிவாய். நீ தனியாகப் போனால் ஏதோ அங்கே வேலை செய்வது போல் ஆகி விடும்”
“ஆனால் நான் அங்கே வேலைதானே செய்கிறேன்”
நெற்றிக்கண்ணை திறந்து ஒரு நொடி அவளைப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ,
“போடி.. உன்னையெல்லாம் வச்சுகிட்டு.. போ.. போய் தூங்கு” என்றபடி போய் விட்டார்.
இந்த மாமாவது வாங்கி தரக் கூடாதா.. ஆனால் அவர் கேட்டார். மனோ பில்டர்ஸ் ஆரம்பித்த புதிதில் மனோ தன் பைக்கில் தான் போவான். அப்பொழுது மாமா காரில் தான் அலுவலகம் செல்வாள். மனோ தன் வருமானம் என்று கார் வாங்கிய பொழுது, மாமா கேட்டார், “சௌமி மா உனக்கு என்ன மாடல் வேணும் சொல்லு.. வாங்கிடலாம்..”
சௌமி வாயைத் திறக்குமுன் வேதவள்ளி பேசி முடித்திருந்தார், “ “என்ன அண்ணா.. ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்திற்கு போகிறார்கள்.. அதற்கு எதற்கு இரண்டு கார்? நம்ம மனோ கூடவே சௌமியும் கிளம்பி விடுவாள்”.
மாமா முன்னேயே மறுத்துப் பேச தயக்கமாய் இருந்தது. ஏற்கனவே அப்படி பேசி தாயிடம் வாங்கி கட்டியது நியாபகம் வரும்தானே..
காலேஜ் முடிக்கும் சமயம் அந்த கண்மணி வந்து “வேலை கிடைச்சிருக்கு” என்று குதித்தபடி ஸ்வீட் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் போனதும் மாமா இவளிடம் திரும்பினார், “என்ன சௌமிமா.. உங்க காலேஜில் காம்பஸ் இண்டர்வியு வருகிறதா..”
காம்பஸ் இண்டர்வியு வா.. காலேஜ் லைசன்ஸே இப்போவா அப்போவான்னு இருக்கு.. “ இல்லை மாமா.. எதுவும் வரலை”
“அப்போ வேற ஏதாவது டிரை பண்றியா”
“நம்ம மனோ கம்பெனி ஆரம்பிக்கும் போது அவள் ஏன் வெளியே செல்ல வேண்டும் அண்ணா” கேட்டபடி வந்தார் வேதவள்ளி.
“அதெப்படி.. நான் படிச்சது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.. மனோ ஆரம்பிப்பது கன்ஸ்ட்ரக்ஷன் ஃபர்ம்.. எனக்கு அங்கே என்ன வேலை தெரியும்.
தனியே மாட்டியதும் பிலுபிலுவென்று பிடித்து விட்டாள். “ ஆமா.. அப்படியே கம்ப்யூட்டர் படித்து கிழித்து விட்டாள். உனக்கு எத்தனை அரியர்ஸ் னு எனக்குதானே தெரியும்”
அம்மா குத்திக் காட்டி பேச கண் கலங்கியது.
“நான்தான் கம்ப்யூட்டர் பிடிக்காது என்று அப்பவே சொன்னேனே..”
“அப்புறம் நம்ம கம்பெனியில் வேலை செய்ய என்ன பிரச்சனை?”
“கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் நான் என்ன வேலைம்மா செய்வேன்?”
அதற்கான பதிலை மனோ கண்டுபிடித்தான். ஒரு மாதம் அவனோடு போய்வர பணம் கணக்கு வழக்கை அவளிடம் ஒப்படைத்தான். ரா மெட்டீரியல் வாங்குவது, தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது என்று எல்லா கணக்குகளும் அவளிடம்தான்.
வேதவள்ளிக்கு ஒரே சந்தோசம். பின்னே ஃபினான்ஸ் டிபார்ட்மென்டே கைக்கு வந்து விட்டதே..
முதலில் பயந்த சௌமி தானே மெச்சும் படி அந்த வேலையைச் செய்யத் தொடங்கினாள். பேங்கில் பணம் போடுவது, தேவைக்கேற்ற படி பணம் எடுப்பது, அதைக் கணக்கில் வைப்பது.. அந்தந்த வாரக் கணக்கை அவளும் அருணும் முடித்து விடுவார்கள். மாதத்தின் கடைசி வாரத்தில் இரண்டு மீட்டிங் போட்டு அந்த மாதக் கணக்கை ஃபைனலைஷ் பண்ணி விடுவார்கள். அருண் கூட அருண் கூட கணக்குகளை அவள் நியாபகம் வைத்திருப்பது, அதைத் தொகுக்கும் நேர்த்தி இதையெல்லாம் பார்த்து “வாவ்” என்று சொல்லியிருக்கிறார்.
அந்த கடைசி வாரம் அடுத்த வாரம் தான். ஆனால் அருணுடன் இருந்த மீட்டிங் தான் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காலையில்தான் அருண் மெசேஜ் செய்தான்.அவர்கள் பட்டத்து இளவரசி விஜயம் செய்கிறாளாம். அதற்காக இவளைப் பார்ப்பதை, இல்லை, இல்லை இவள் கம்பெனி வேலையைத் தள்ளி வைக்கிறான்.. அப்படி என்ன ஊரில் இல்லாத தங்கை..இந்த மனோ எல்லாம் எதற்காகவாவது அவன் வேலையிலிருந்து விலகியிருக்கிறானா..
தன் பாட்டில் பேனா, நோட்டு எல்லாவற்றையும் வரிசைப்படுத்திக் கொண்டிருந்த கைகள் சட்டென்று நின்றன. மனோவும் கண்மணிக்காகத்தான் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்கிறானா.. சேச்சே..இருக்காது. அவள் அறிந்த வரை இருவரும் இப்போதெல்லாம் அவ்வளவாகப் பேசிக் கொள்வது கூட கிடையாது.
 




Anitha Selvam

நாட்டாமை
Joined
Jul 11, 2018
Messages
84
Reaction score
186
Location
Chennai
கம்ப்யூட்டர் ஸ்கிரின் மங்கலாய்த் தெரிய கண்களின் நீரைத் துடைத்துக் கொண்டாள். எல்லோருக்குமே இந்த கண்மணியைத்தான் பிடிக்கும். ஏன் ஒரு நேரத்தில் அவளுக்குமே ரொம்ப பிடிக்கும்தான்.
இவளுடன் சேர்ந்து படிப்பாள். இவள் பார்பி டாலுக்கு ட்ரஸ் தைத்து தர அது இன்னும் கண்மணி வீட்டின் சோ கேசில் உள்ளது. இரண்டு பேருக்கும் நிறைய ஒத்து வராதுதான். இவளுக்குப் பிடித்தது அவளுக்குப் பிடிக்காது. அவளுக்குப் பிடித்தது, இவளுக்கு அதில் பிடிக்க என்ன இருக்கிறதென்றே புரியாது. ஆனாலும் ஒருவரையோருவர் பிடிக்கும்.
சொல்லப் போனால் சௌமிக்கு பிடிக்காதது, கண்மணியை அல்ல. எல்லோரிடமும் அவள் பெறும் டிரீட்மென்டை.
எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும். அவள் பேசுவது பிடிக்கும். அவள் சந்தேகங்கள் கேட்டால் 'அம்மாடி.. எப்படி யோசிக்கிறாள் இந்த பொண்ணு' என்பார்கள். ஏன்.. குரங்கிலிருந்து மனிதன் வந்தால் இப்பொழுதைய குரங்குகள் மனிதனாவதில்லை என்று அவள் சொன்னால் வாயைப் பிளப்பார்கள். இவள் வந்து “அது எப்படி லைட் தான் ஃபாஸ்டெஸ்ட். நம்ம வீட்டில் ஃபேன் தானே வேகமாய் போகும்.?” என்று கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்போது எல்லாம் கண்மணி இவளுக்கு சப்போர்ட் செய்வது கூட எரிச்சலாகத்தான் இருக்கும்.
வளர வளர கண்மணியைப் பிடிக்காமல் போன இன்னொரு நபர் இவள் அம்மா வேதவள்ளிதான். அதுவும் மாமாவும் அத்தையும் ஏதாவது கண்மணியைப் பற்றி நல்ல வார்த்தை சொல்லி விட்டால் அந்த நாள் முழுக்க பொறிந்து கொண்டே இருப்பாள்.
கண்மணி ஒருநாள் பாவாடை தாவணியில் வர கலாவதி நெற்றி முறித்து பொட்டு வைத்து விட்டாள். அவ்வளவுதான்.
“என்ன பெரிய அழகு.. பெரிய பெரிய கண்களோடு சுருட்டை சுருட்டையாய் முடி. உயரத்தைப் பார். ஒரு ஹை ஹீல்ஸ் போட முடியுமா..என் பொண்ணு கலருக்கு கால் தூசிக்கு வருவாளா..” என்று திட்டித் தீர்த்து விட்டார். தனியாகத்தான். கலாவதி ரொம்ப சாது தான். “இப்படிதான் அண்ணி” என்று வேதவள்ளி சொன்னால் ரொம்பவும் அலட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் அவரை ஒன்று சொன்னால் மனோ அப்பாவுக்கு கோபம் வந்து விடும். பார்த்துதான் பேச வேண்டும். அதனால் அந்த மாதிரி கோபமான நாட்களில் சௌமி கவனமாக இருப்பாள். இவள் ஏதாவது தப்பு செய்தால் எல்லா கடுகும் இவள் தலையில்தான் வெடிக்கும்.
இன்டர்காம் அடித்தது.
“சௌமி.. கொஞ்சம் ரூமுக்கு வாயேன்”
“இதோ வர்றேன் மனோ”
தலையைத் தடவியவாறே கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கண்மணி.
இன்னும் என்னடி கண்ணாடியையே பார்த்துகிட்டிருக்க.. மறுபடியும் கனவு காண ஆரம்பிச்சிட்டியா..
கனவுனா ஃப்யூச்சர் பத்தி யோசிக்கிறது நிலா. நான் நினைச்சது பாஸ்ட் பத்தி. சோ அது கனவு இல்லை நினைவு.
இதெல்லாம் நல்லா பேசு.. பேச வேண்டிய இடத்துலே பேசிடாத..
ஏன் நல்லா பேசுவேனே..
நான்தான் பார்த்தேனே..
அதை விடு வெண்ணிலா.. இங்கே பாரு.. நீ கொட்டிய இடத்துலே வீங்கிடுச்சி.. தலையில் ஒரு இடத்தைத் தொட்டு காட்டினாள்.
நீ ஏன் நான் பால் வாங்கி வரும்வரை அந்த ஃபோனையே பார்த்துகிட்டிருந்த..
அது..
அதுக்குதான் கொட்டினேன்.
போடி. இன்னைக்கு அம்மா வர்றாங்க.. உன்னை சொல்றேன் பாரு.
அவங்களும் கொட்டுவாங்க..
ஹம்மா.. ஹம்மா.. என்று சங்கர் மஹாதேவன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாட வெண்ணிலா சொன்னாள்.. “ஆயுசு நூறு.. எடுத்து பேசு..”
பாரதியிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு சட சட வென்று கிளம்பினர். காலை டிபனாக பிரெட்டும் பழமும் சாப்பிட்டுவிட்டு தங்கள் அறையிலிருந்து வெளியேறும் போது சூரியன் உச்சியை தொட இன்னும் ஒருமணி நேரம் என்றான். அங்கே இங்கே சுற்றி விட்டு பஸ் நிலையம் போய் பாரதியைக் கூப்பிட்டு வந்தார்கள்.
கோயில், மதியம் ஹோட்டல், கொஞ்சம் ஷாப்பிங்.., அப்புறம் கேக் கட்டிங் என்று முடித்து விட்டு பாரதி அன்று மாலையே பஸ் ஏறினாள்.
பஸ்ஸில் டிரைவர் ஏறியதும் கண்மணி கீழே இறங்க ஐன்னல் வழியே மகளைப் பார்த்தவர்,
அடுத்த வாரம் ஊருக்கு வரலை.. மகளே.. உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்.
அதான் வர்றேன்னு சொல்லிட்டேன்ல மா..
ம்ஹ்ம்..
சரி,சரி.. அலுத்துக்காத மா.. பொண்ணு இன்னும் நாலு நாள்ல வர்றேன். ஏதாவது பலகாரம் செஞ்சு வை. இப்படி பர்த்டேக்கு வெறும் கையை வீசிகிட்டு வந்த மாதிரி இருக்காதே..
இப்போ மால்ல பர்த்டே டிரஸ், பர்த்டே டிரஸ் கிஃப்டு னு என் பாதி மாச சம்பளத்தை காலி பண்ணியே..
அது நான் வாங்கியது. நீ எதுவும் வாங்கி வரலியே..
வாங்கி வருவது பிரச்சனையில்லை டா.. ஆனா அது உனக்கும் பிடிக்கனும். அதுதான் எங்களுக்கு முக்கியம்.
‘இதில் ஏதாவது உள்குத்து இருக்கா,' தலைக்குள் அலாரம் அடிக்க கண்மணி குனிந்து கவனமாய் தன்ஃபாஸ்ட் டிராக்கை நோண்டினாள்.
இளையராஜா பாடலை கண்மணி ஃபோன் பாட கர்நாடகாவிலும் நான்கு பேர் திரும்பி பார்க்க இரண்டு பேர் சிரித்தனர்.
இன்னும் இந்த பாட்டை மாத்தலையா நீ
அம்மா…
ம்ம்.. சரி.. பை.. பார்த்து வீட்டுக்கு போ..
ஓகே மா.. பை..
பஸ் கிளம்ப சைலன்டில் போட்ட ஃபோனில் டிஸ்பிளேயைப் பார்த்தாள். இன்னொரு முறை விஷ் பண்ணப் போறானா..
யோசனையோடு ஆன் செய்து காதில் வைத்தாள்.
ஹை கண்மணி..
யாரு
நான் மேக்னா.. ஹேப்பி பர்த்டே கண்மணி..
இந்த சினிமாக்களில் எக்கோ ஆகி நாலு முறை கேட்குமே அப்படித்தான் கண்மணிக்கு கேட்டது. நான் மேக்னா.. நான் மேக்னா.. நான் மேக்னா.. என்று நாலு பக்கங்களிலுமிருந்து சத்தம் வர, சுற்றியுள்ள எல்லாமே மறந்து அப்படியே நின்றாள்.
மேக்னா, மனோவோடு டெல்லியிலிருந்து வந்த பெண். மனோவின் கேர்ள் ப்ரண்ட்ஸ் ல் உள்ள பன்மையை எடுத்து ஒன் அன்ட் ஒன்லி கேர்ள்ஃப்ரண்டாய் மாறியவள். கண்மணியின் இந்த இரண்டு வருட வனவாசத்திற்குக் காரணமானவள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top