• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
மேரிக்கு நூரை பார்க்கவே பயமாக இருந்தது, குனிந்த தலையை அவள் நிமிரவே இல்லை. அவளின் பயம், அவள் வார்த்தைகளுக்கும் தொற்றிக் கொண்டதோ என்னவோ, அவை தொண்டையில் கிச் கிச்சாக ஒட்டிக் கொண்டு வெளிவர மறுத்தன. ஒரு வழியாக வார்த்தைகளை அப்புறப்படுத்த தொடங்கினாள்.

" நீங்க நேத்து கணேஷ் சார்ட்ட பேசிட்டு இருந்தத நான் கேட்டேன் மேடம், உங்களுக்கு வேனா டாமி வெறும் நாயா இருக்கலாம், ஆனா எங்களுக்கு அது ஆறு வருஷமா எங்க வீட்ல ஒரு ஆள் மாதிரி, நாலு நாளா தான் உங்கள எங்களுக்கு தெரியும் அப்டிபட்ட உங்களுக்கு துரோகம் பண்ணவே நாங்க யோசிச்சோம் , எங்களால எப்டி டாமிக்கு துரோகம் பண்ண முடியும். நாங்க டாமிய கொடுக்க முடியாதுன்னு சொன்னா நீங்க வலுக்கட்டாயமா எடுத்துட்டு போய்டுவிங்க, அதனால தான்.." சொல்ல வந்தவள், நிறுத்தி விட்டு தன் தோழிகளை பார்த்தாள், அவர்களும் ஆமோதிப்பதாக தலை அசைக்க, தொடர்ந்தாள், " அந்த டிவைஸ் நாராயணன்ட்ட கொடுத்துட்டோம், நாங்க செஞ்சது தப்புன்னா ...."

" வாட் த ஹெல்.. " கோபத்தில் கொக்கரித்தாள் நூர், " ஒரு நிமிடம் தன் கோவ கனலை அடக்க முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் வெடித்தால்,
" நீங்க எல்லாம் லூசா.. கொஞ்சம் கூட அறிவு இல்லை. இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. நான் இதுக்காக எவ்வளவு கஷ்டப் பட்ருக்கேன் தெரியுமா ? " மேரி எதோ பேச முயல்வதை கண்டவள், அடிப்பட்ட பாம்பாய் அவள் மீது சீறினாள், " டோன்ட் எவர் ஓபன் யுவர் மௌத், நான் உங்கள சும்மா விட போறதில்ல.. நீங்க பண்ணது கிரிமினல் வேலை, உங்களலாம் உள்ள வச்சு...... ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கீங்க.. ஆப்டர் ஆல் அது ஒரு நாய், நீங்கலாம் இப்டி இருக்குறதாலதான் ஆம்பளைங்க இப்டி பொண்ணுங்கள மிதிக்குறாங்க. ஒரு தடவ ஒரு பொண்ணு ஜெய்க்க கூடாதா..? .. அதுக்கு பொண்ணுங்களே தடையா இருக்கணுமா.. இன்னும் சீரியல் பாத்துட்டு செண்டிமெண்ட், பாசம், பாவம், அன்பு, காதல்னு" கடைசி வார்த்தையை சொல்லும்பொழுது அவள் குரல் தழுதழுத்தது . குரலை சரி செய்து கொண்டு மேலும் தொடர்ந்தாள்.

" எல்லாம் முட்டாள் பேத்தலுங்க.. " கணேஷிடம் இருந்து கால் வர, அதை அட்டென்ட் செய்தவள், " கணேஷ், எல்லாம் முடிஞ்சுடுச்சு, கிளம்பிடுங்க "

" என்ன மேடம் ஆச்சு.."

" கிளம்பிடுங்க .. சொன்னா புரியாதா.. ஜஸ்ட் சட் அப், அண்ட் டூ வாட் ஐ ஆஸ்க் யூ" அவள் கத்தும் ஓசை ,கணேஷ்க்கு நேரடியாக கேட்டாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இன்னும் பல இங்கிலீஷ் வார்த்தைகளை மனதுக்குள் ஓதிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள், அவள் குணம் தெரியாமல் வண்டி கொஞ்சி கொண்டிருந்தது ஸ்டார்ட் ஆகாமல். இரண்டு முறை சாவியால் அதன் காதை திருகியவள், அது முரண்டு பிடிக்கவே , ஸ்டீரிங்கில் ஓங்கி அடித்து விட்டு, " பக் திஸ் ஷிட்.." என கடைசி முறையாக அதை திட்டி விட்டு, கதவை திறந்து வெளியேறினாள். தோழிகள் மூவரும் அவள் ஆடிய ருத்ர தாண்டவத்திலிருந்து வெளிவந்து கண்ணாடியை பார்க்கும்போது நூர் தூரத்தில் புள்ளியாக குருகியிருந்தாள்.

திறந்திருந்த காரின் கதவை போல, வாய் பிளந்தவாறே காயத்ரி அதிர்ச்சியில் உறைந்திருக்க, மற்ற இருவரும் அமைதில் ஆழ்ந்திருந்தனர். அங்கொரு நிசப்தம் நிலவியது, யாரும் யாருடனும் பேசவில்லை. கடந்தது நொடிகளா, நிமிடங்களா..? இல்லை யுகங்களா என தெரியவில்லை, ஆனால் எவ்வளவு நேரம் கடந்தாலும் இந்த மௌனம் போதாது என்றிருந்தது. கடைசியாக நீண்ட மௌனத்தை காயத்ரி கலைத்தாள்.

" என்னடி.. இப்டி தங்கு தங்குனு ஆடிட்டா, இருந்தாலும் பொம்பனாட்டிக்கு இவ்ளோ கோவம் ஆகாதுடிமா.."

" நம்ம மேலயும் தப்பு இருக்கு மாமி.." மேரி குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது,

" இப்ப எண்ணக்கா பண்றது.." நிஷா அவளிடம் கேட்க, " ரொம்ப நேரம் ஆச்சு, அவங்கள சமாதன படுத்தலாம், வேற வழி இல்ல .." சொல்லிவிட்டு மேரி நகர, நிஷாவும் பின் தொடர்ந்தாள்,

"எங்கடி போறேல், அவ கோவத்துல சுட்டுட்டானா..?" காயத்ரி தன் கேள்விக்கு விடை கிடைக்குமா என தாமதித்தவள், மேரி அவளை கண்டுகொள்ளாமல் போவதை கண்டு , வேறு வழியிலாமல், அவர்களை பின் தொடர்ந்தாள் கையில் தன ஹேன்ட் பேக்கை இடுக்கியவாறே..

சிறிது தூரத்தில் நூர் கடல் கரையில் அலைகளை பார்த்தவாறு அமர்ந்திருப்பதை பார்த்து விட்டனர், அவள் அருகில் சென்று சற்று இடைவெளியில் மெல்ல அமர்ந்தனர், அவள் இவர்களை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. அவள் கவனம் முழுதும் அலைகளின் மேல் தான் இருந்தது. மன்னிச்சிடுங்கனு தொடங்க முடிவு செய்து மேரி வாய் திறக்கையில், " ஐ அம் சாரி " என்றால் நூர், இதை சற்றும் எதிர்பாராத மேரி அடுத்த வார்த்தை சொல்ல முற்படும் முன், அவளை கை அசைத்து நிறுத்தினால் நூர், " நன் கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்.." ஒரு பெருமூச்செடுத்து விட்டு பேச தொடங்கினாள்," தப்பு என் மேல தான், என்ன தான் நேர்மை, நியாயம்னு என்ன நானே நம்ப வச்சாலும், ஜெர்ரி கஷ்ட படனும் சாவனும்னு வெறில தான் நான் இதெல்லாம் பண்ணுனேன், உங்களையும் அதுக்காக யூஸ் பண்ணேன்.. "தோழிகள் மூவரும் சொல்வதறியாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள," என்ன டிசப்பாய்ன்மெண்டா இருக்கா..? " லேசாக சிரித்தாள், " இட்ஸ் ஓகே நன் பொறக்கும் போதே டிசப்பாய்ன்மெண்ட் தான், போலீஸ் பரம்பரையை காபாத்தனும்னு, என் டேட் பையன எதிர்பாத்தப்போ நான் வந்து பொறந்தேன்.. ஆனா அவரு அடமன்ட். என்ன பையனா வளத்தாரு.. ஆனா நான் என்னதான் பகல்ல குங்க் பூ படிச்சாலும், கனவுல அஜித் மாதவன் கூட டூயட் பாடுற நார்மல் பொண்ணா தான் வளர்ந்தேன். ஐபிஎஸ் செலக்ட் ஆகி ட்ரைனிங்ல தான் ஜெர்ரிய பாத்தேன், ஹி வாஸ் சோ சார்மிங் " ஒரு வலி கலந்த புன்னகை அவள் இதழிலிருந்து வெளிப்பட்டு கடல் காற்றில் கரைந்தது. " அவன பாத்ததுமே எல்லாத்துக்கும் புடிச்சிரும், அப்டி பிடிக்காதவங்களுக்கு கூட அவன்ட பேசுனா புடிச்சிரும், அவன் அப்பா ட்ரைனிங் அப்போ சூசைட் பண்ணிக்கிட்டாறு, அந்த சிம்பத்தில தான் அவன்ட்ட க்ளோஸ் ஆனேன், நல்லவன்னு நெனச்சு தான் லவ் பண்ணுனேன், அப்புறம் நல்லவனா மாத்திடலாம்னு நெனச்சு லவ் பண்ணேன், கடசில அவன் கூட இருந்தா மட்டும் போதும்னு நான் தான் மாறி போனேன். அவன் மாறவே இல்ல, அவன் காதல் எப்பவும் பணத்து மேல தான். அந்த உண்மை எனக்கு தெரிஞ்சும் அத ஏத்துக்க மனசு வரல, எங்க அப்பா எவ்வளவோ சொன்னாரு, எனக்கு உரைக்கல.. கடைசில எங்க அப்பா போன பிறகு தான் நான் உணர்ந்தேன்.." சொல்லி முடிக்க முடியாமல் அவள் குரல் உடைய, கண்களில் கடல் நீர் கசிந்தது.. நூர் தான் அழுகிறாளா, அவளால் அழ முடியுமா .. கண்களில் தூசி விழுந்திருக்குமோ.. என தோழிகள் விழிக்க.. காயத்ரி ஆதரவாக அவள் தோழில் கை வைத்தாள்.அந்த அரவணைப்பிற்காக காத்திருந்த நூர், காயத்ரியின் தோழில் சாய, அவள் கண்ணீர் காயத்ரியின் நூல் உடையையும் தோல் உடையையும் தாண்டி அவள் மனதை நனைத்தது.. சில நொடிகளில் நிமிர்ந்தவள், மேலும் தொடர்ந்தாள், " அபோ முடிவு பண்ணுனேன், பொண்ணுனு எந்த வீக்னெஸும் இருக்க கூடாதுனு, ஆம்பள மாதிரி துணிச்சலா இருக்கணும்னு நெனச்சேன், ஆனா பொண்ணுங்களுக்கும் துணிச்சல் உண்டுங்கறத மறந்துட்டேன், நீங்க உங்க டாமிக்காக பண்ணுணீங்களே..! ஒருத்தர் மேல வச்ருக்க அன்பு தான் வீரம்ங்கறத நீங்க காட்டிட்டீங்க.. " இதை கேட்ட தோழிகள் திகைத்தனர், ஒரு புறம் நூர்க்கு துரோகம் செய்த குற்ற உணர்ச்சியும் மற்றொரு புறம் அவள் தங்களை மன்னித்த நிம்மதியும், வேறொரு புறம் அவள் புகழ்ச்சியினால் ஏற்பட்ட வெட்கமும் சேர்ந்து கடல் காற்றையும் தாண்டி தோழிகளை மூழ்கடித்தன. " நீங்க கடைசியா சொன்னது சரி மேடம்.. எங்க ஆச்சி கூட சொல்லுவா, பிரசவத்து வலி தெரிஞ்சும் ரெண்டாவது குழந்தைய சுமக்குற பொட்டச்சிக்கு இல்லாத தைரியமா, ஆம்பலைக்கினு.." மேரி அவள் புகழ்ச்சியை ஏற்க முடியாமல்,பேச்சை திசை திருப்பும் நோக்கில் சொன்னாள்.

நூர் இப்போது உண்மையாக சிரித்தாள், ஏதோ பாரத்தை இறக்கி வைத்த நிம்மதி அவள் முகமெங்கும் பூத்திருந்தது.. " அவங்க சரியா தான் சொல்லிருக்காங்க, ஆனா எனக்கு தெரிஞ்சது உங்கள வச்சு தான்.. " நூர் விடுவதாக இல்லை.

"என்ன மேடம்.. இன்னும் புகழ்ந்துகிட்டே இருக்கீங்க.. " வெட்கத்துடன் ஆரம்பித்தாள் காயத்ரி " நாங்க பண்ண முட்டாள் தனத்தால தான் இவ்வளவு பிரச்னையும், நீங்க மட்டும் இல்லேன அந்த மித்திரன் க்ளு கூட எங்களுக்கு தெரிஞ்சிருக்காது.. " என காயத்ரி சொல்லிக் கொண்டே போக, அவள் கடைசியாக கூறிய வார்த்தை நூர்க்கு எங்கோ பொறி தட்டியது, " கடைசியா என்ன சொன்னிங்க " என்றாள் நூர்,

திடீரென அவள் சீரியஸ் ஆனதை கண்டு திகைத்த காயத்ரி, " உங்களால தான் களு கண்டு.."

"அது இல்ல.. அதுக்கு முன்னாடி என்னவோ சொன்னிங்களே.."

"அதுக்கு முன்னாடி..... நாங்க முட்டாள்னு.."

" அதே தான், நீங்க முட்டாள் தான்.."

இதை கேட்டு சட்டென மலங்க மலங்க விழித்தனர் மூவரும், அதை கண்டு சுதாரித்துக் கொண்ட நூர், " ஐ மீன், மித்ரன் அப்டி தான் உங்கள நெனச்சிருகான்.. அந்த க்ளு எழுதுன பேப்பர் இப்போ எங்க இருக்குன்னு தெரியுமா " என்றாள் பரபரப்பாக

மேரியும் நிஷாவும் அது எங்க போச்சோ என்று விழித்துக் கொண்டிருக்க, " நான் வச்ருகேன்.." என்று ஆஜரானாள் காயத்ரி, " பர்ஸ்ட் க்ளுனு செண்டிமெண்ட்டா.. கைலயே வச்ருந்தேன்.. என்ன கிண்டல் பன்னுவேளே இப்போ பாத்தேளா அவசரத்துக்கு உதவரது.." மேரியிடம் சொல்லிக் கொண்டே தன பேக்கிலிருந்து அந்த பேப்பரை எடுத்துக் கொடுத்தாள்.

நூர் ஆர்வமாக அதை வாங்கி படித்தாள், " உளுந்த பருப்பை நன்கு ஊற வைத்து... "

" அய்யோ .. திருப்பி படிங்க மேடம்.. அது..... அன்னைக்கு ரேடியோல அடை தோசை எப்படி பண்றதுன்னு போட்டுண்டிருந்தான், எழுத பேப்பர் கிடைக்கலேன்னு இதுல எழுதினுட்டேன்.. " நெர்வஸாக சிரித்தாள்.

நூர் பேப்பரை தீர்க்கமாக பார்த்தவள், சில நொடிகளில் " ஐ காட் இட் " என்றாள் பரவசமாக.. " மித்ரன் உங்கள முட்டாள்னு நெனச்சதால, உங்களுக்கு ரொம்ப ஈசியான க்ளுவா, நீங்க புரிஞ்சிகுற மாதிரி வெளிப்படையா தான் கொடுத்திருப்பான், நாம தான் அத இங்கிலீஷ் லெட்டர்ஸ்னு தப்பா புரிஞ்சிட்டோம், இப்ப பாருங்க.. " என்று அந்த பேப்பரை மூவரிடம் தூக்கி காட்ட, மேரியும் நிஷாவும் உடனே புரயுது மேடம் என்று குதூகலமானார்கள். காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை முன்பு பார்த்தது போலவே தான் இருந்தது. இருந்தும் புரிந்தது என்று சொல்லிவிட்டாள். லெட்டர்ஸ் இல்லேனா வேற என்னவாக இருக்கும் என்று யோசித்த அவளை , நம்பர்ஸ் என்று நடு மண்டையில் நச்சென்று கொட்டியது மூளை, இப்போது அவளுக்கு புரிந்தது, ஒவ்வொன்றாக அந்த க்ளுவை வாசித்தாள், " 1 3 1 2 0 1 1 7 1 " கடைசி கொடு (-) நம்பர்கள் முடிந்ததை குறிக்க வேண்டும், " எனக்கும் புரிஞ்சிடுச்சு.." என்று அவள் கத்திய வேளை,அங்கு யாரும் இல்லை. அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அங்கிருந்து நகர்ந்திருந்தனர், " வெயிட் பன்னுங்கோடி.. "" கத்திக் கொண்டே ஓட முடியாமல் ஓடினாள் காயத்ரி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அண்ணா....காயு கலக்குறாங்க...நூர் சட்டுனு க்ளூவ பிடிச்சிட்டா
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
Thank u so much all.. sorry for the longest delay.. very sorry.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top