• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகான ராட்சசியே-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
199
Reaction score
1,060
Location
Bangalore
அத்தியாயம்-5

ந்த மாலை நேரத்து இளமஞ்சள் வெயில் மென்மையாக வீச, வழக்கமாக இந்த வெயில் மனதை வருடுவதாக இருக்கும் மகிழனுக்கு...

ஆனால் இன்றோ அவன் மனம் உள்ளுக்குள் கொதித்து கொண்டிருக்க, அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை அவன்...

அதற்கு காரணமான அந்த சண்டக்காரியை மனதுக்குள் திட்டி கொண்டே தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்...

சந்தியாவிடம் சண்டை போட்ட பிறகு மீண்டும் வந்து டிஸ்கஷனை ஆரம்பிக்க, அவனால் பேச முடியவில்லை.... மீண்டும் மீண்டும் அவள் பேசிய பேச்சுக்களே காதில் ஓட,அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தியவன்

“ஓகே கைஸ்... will continue tomorrow…” என்று முடித்துவிட்டு எழுந்து சென்றான்... மற்றவர்களும் ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்து ஜாடை செய்து ஏதோ சொல்லி சிரித்து கொண்டனர்....

அதற்கு பிறகு வேலையில் கவனம் செலுத்த, அவனால் முடியவில்லை.. தலையை வலிப்பதை போல இருக்க, உடனே தன் லேப்டாப் ஐ மூடி பைக்குள் வைத்து கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான்...

இந்த தலைவலிக்கான மருந்து அவன் வீட்டில் தான் இருக்கிறது என தெரியும் அவனுக்கு..அதனாலயே கிளம்பி விட்டான்...

வீட்டை அடைந்ததும் காரை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு, தன் லேப்டாப் பேக்கை எடுத்து மாட்டி கொண்டு கார் சாவியை எடுத்து கையில் ஸ்டைலாக சுழற்றி கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்..

ஆனாலும் முகத்தில் அதே கோபம் கொதித்து கொண்டுதான் இருக்கிறது.. அதை அடக்கி கொண்டு வேக நடையுடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

வீட்டை அடையும் முன்னே தோட்டத்தில் தன் அன்னை சிவகாமி மற்றும் அவன் அண்ணி மதுவந்தினி அமர்ந்திருப்பதை கண்டு அங்கு சென்றான்.

அவன் அருகில் சென்றதும் அவனை கண்ட சிவகாமி

“அடடா.. என்ன சின்னவா... சீக்கிரம் வந்திட்ட.. மருமகளே.... மழை வர போகுது... நீ போய் மாடில ஏதாவது போட்டிருந்தா எடுத்துகிட்டு வந்திரு... “ என்று சிரித்தார்....

அதை கேட்டு அருகில் அமர்ந்திருந்த மதுவும் அவனை பார்த்து சிரிக்க,

“ஹ்ம்ம்ம் என்னை பார்த்தா எல்லாருக்கும் சிரிப்பா இருக்கு...” என்று லேசாக முறைத்தவன் சிவகாமியின் கையில் இருந்த அந்த குட்டியிடம் சென்றது அவன் பார்வை....

அவளும் இவனை கண்டு கொண்டு கை காலை ஆட்டி சிரித்தாள் தன் பொக்கை வாயில்...

அதை கண்டவனுக்கு அதுவரை இருந்த அழுத்தம், உள்ளுக்குள் கொதித்த கோபம் தணிந்து முகம் இலக,

“வாடா.. என் பிரின்ஸஸ்... நீ ஒருத்திதான் என்னை நல்லா புரிஞ்சுகிட்டிருக்க... என் பொண்ணுன்னா சும்மாவா?? “ என்று அவளை அள்ளி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்....

அந்த குட்டி தேவதைக்கு இன்னும் குசியாகி விட இன்னும் குதிக்க ஆரம்பித்தாள்... அவளின் குசியை கண்டவன் தன் பேக்கை கீழ வைத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளை மடியில் வைத்து கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான்...

தன் கார் சாவியை அவள் முன்னே நீட்ட, அந்த குட்டி தேவதையோ அதை எட்டி பிடிக்க முயன்றாள்..அதை கண்டவன் வியந்து,

“வாவ்... சூப்பரா பிடிக்கறா மா.. இந்த வயசுலயே எவ்வளவு ஆக்டிவ் ஆ இருக்கா. பார்.. அவ என்னை மாதிரி தான் வருவா... “ என்றான் சிரித்தவாறு...

“ம்ஹும்.. ஆசை தோசை அப்பள வடை..அவ அப்படியே அவ அத்தை என்னை மாதிரி தான் வருவா... “ என்று சிரித்தவாறு ஓடி வந்த அவன் தங்கை அகிலா அவன் முதுகில் அடித்தாள்...

“ஏன் டி இப்படி அடிக்கிற பிசாசு... “ என்றான் அவளை முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா . அந்த ஜிம் லயே மணி கணக்கா உட்கார்ந்து இருக்க.. கேட்டா பாடி பில்டர் ங்கிற.. நான் அடிக்கிற இந்த அடியை உன்னால் தாங்க முடியலையா.. சரிதான்.. பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மென்ட் வீக்கா.... போடா மங்கி... “ என்று சிரித்தாள் அகிலா....

அவள் மங்கி என்றதும் மீண்டும் அந்த சண்டக்காரியின் நினைவு வந்தது அவனுக்கு..

“ஏய்... பிசாசு.. இன்னொரு தரம் என்னை மங்கினு கூப்பிடாதா..” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தான் தன் தங்கை மீது..

அவர்கள் சண்டையை ரசித்தாலும் அவனுக்கு காபி எடுத்து வருவதற்காக எழுந்து உள்ளே சென்றாள் மது...

“பாருடா..!! மங்கி னு சொன்னால் உடனே கோபம் வருதா ?? .. நான் சொல்லாட்டியும் உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்.. இந்த பிரென்ச் பியர்ட்(french beard) உனக்கு நல்லாவே இல்ல. அப்படியே மங்கி இல்லை கொரில்லா மாதிரியே இருக்கு... அதான் சொன்னேன் “ என்று பழிப்பு காட்டினாள் அகிலா....

அதை கேட்டு மேலும் கடுப்பானவன் ஓங்கி அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்..

அதில் அதிர்ந்து போனவள்

ஓ வென்று ஒப்பாரி வைத்து அவன் கையை பிடித்து கடித்து வைக்க, அவனோ வலியில் அலறினான்.....

சிவகாமி இருவரையும் சமாதான படுத்தி வைக்க, அதற்குள் அகிலா மூக்கை உறிஞ்சி கிட்டே

“போடா கொரில்லா.. இனிமேள் உன் கட்சி காய்.. எனக்கு இனிமேல் ஒரு அண்ணன் மட்டும் தான்... நிக்கி அண்ணன் தான் ரொம்ப நல்லவன்.. நீ ரொம்ப மோசமானவன்.. கூட பொறந்த தங்கச்சியவே கொட்டிட்ட இல்ல... இனிமேல் இந்த ஜென்மத்துல என்கிட்ட பேசாதா... “ என்று ஒப்பாரி வைத்து வேகமாக எழுந்து வீட்டிற்குள் சென்றாள்...

அதை கண்ட சிவகாமி சிரித்து கொண்டார்.. இது வழக்கமாக நடப்பதுதான்.. சண்டை வர்ரப்போ எல்லாம் சொல்ற கான்ஸ்டன்ட் டயலாக்.. அப்புறம் கொஞ்ச நேரத்துல மகி என்று ஓடி வந்து விடுவாள் அகிலா...

அவள் குணம் தெரிந்ததால் அவளை கண்டு கொள்ளாமல் தன் மகன் பக்கம் திரும்பியவர்

“என்னாச்சு சின்னவா?? ஏன் டென்ஷனா இருக்க??.. நீ காரை விட்டு இறங்கி வர்ரப்பயே பார்த்தேன்.. உன் மூஞ்சியில எள்ளும் கொள்ளும் வெடித்தது... நான் கூட பெரியவன் தான் வர்ரானோ னு நினைச்சிட்டேன்... “ என்றார் சிரித்தவாறு....

“ஹ்ம்ம்ம் ஆபிஸ்ல ஒரு பெரிய தலைவலியால இந்த சின்ன தலைவலி வந்திருச்சு மா ...” என்றான் தலையை பிடித்தவாறு...

“ஹா ஹா ஹா .. நீயே ஒரு தலைவலி.. உனக்கே தலைவலி கொடுக்கறாங்கனா கண்டிப்பா பெரிய ஆளாதான் இருப்பாங்க...” என்று சிரித்தார்...

மகிழன் அவரை பார்த்து செல்லமாக முறைக்க, அப்பொழுது மது காபி கோப்பையுடன் அங்கு வந்தாள்...

காபியை கப்பில் ஊற்றி மகிழன் இடம் கொடுக்க,

“தேங்க்ஸ் மது...” என்றவாறு வாங்கி அதை குடித்தான்...

அந்த குட்டியும் அவனையே பார்க்க, அந்த காபி ல் இருந்து ஒரு துளி எடுத்து அவள் நாக்கில் வைத்தான் சிரித்து கொண்டே...

அவளும் அதை ரசித்து நாக்கை சுழற்ற, அதை கண்டு அழகாக புன்னகைத்தான்.....

அவள் கையை பிடித்து விளையாண்டு கொண்டே காபியை குடித்து முடித்தவன்

“அப்பாடா... இப்பதான் கொஞ்சம் ரிலீப் ஆ இருக்கு... இந்த குட்டியை பார்த்தாலே போதும் போல... எல்லா வலியும் பறந்து போய்டுது..” என்று மீண்டும் அவளை கொஞ்சி கன்னத்தில் முத்தமிட்டான்....

மற்ற இருவரும் சிரித்து கொண்டே

“அப்படி என்னடா பிரச்சனை தலைவலி வர்ர அளவுக்கு..?” என்றார் சிவகாமி ஆர்வமாக.

இதுவரை அவன் அலுவலகத்தில் பிரச்சனை என்று வீட்டில் வந்து புலம்பியதில்லை.. எப்பொழுதும் சிரித்து கொண்டே இருப்பான்.. மற்றவர்களையும் கலாய்த்து சிரிக்க வைத்து விடுவான் மகிழன்...

அப்படி பட்டவனே இன்று புலம்புகிறான் என்றால் என்ன நடந்திருக்கும் என்று சிவகாமி ஆர்வமானார்...

“ஹ்ம்ம்ம் எல்லாம் ஒரு பிசாசால வந்தது மா... ஹப்பா என்ன மா சண்டைக்கு வர்ரா... கோயம்பேடு மார்க்கெட்ல இருக்கறது எல்லாம் லேப்டாப் ஐ தூக்கிட்டு ஒரு ஐடி கார்டை கழுத்துல மாட்டிகிட்டு நானும் வேலைக்கு போறேனு IT ஆபிஸ்க்கு வந்திடறாளுங்க.. சரியான பஜாரி... “என்றான் பல்லை கடித்தவாறு...

“டேய்... இது என்ன பழக்கம் ? .. பொம்பளை புள்ளைய போய் பஜாரி னு சொல்லிகிட்டு... “ என்று கண்டித்தார் தன் மகனை...

“ஹ்ம்ம் அதுதான் அவளுக்கு சரியா இருக்கும் மா. “ என்றான் மீண்டும் சிடுசிடுத்தவாறு..

அவன் பேசி கொண்டிருக்கும் பொழுதே மதுவின் அலைபேசி ஒலித்தது... அதன் திரையை பார்த்தவள் புன்னகைத்தவாறு எடுத்து அட்டென்ட் பண்ண

“என்னடி மந்தி?? எப்படி இருக்க?? “ என்று இழுத்தாள் சந்தியா...(மகிழனுடன் சண்டையிட்ட அதே சந்தியாதான் )

“ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன் டி.. நீ எப்படி இருக்க?? “

“ஹ்ம்ம் எனக்கு என்ன? நான் ஆல்வேஸ் பைன்.. ஆமா.. அது எப்படி போனை உடனே எடுத்துட்ட? மாம்ஸ் இன்னும் வீட்டுக்கு வரலையா?? “ என்று சிரித்தாள்..

அதை கேட்டதும் கன்னம் சிவந்த மது

“சீ போடி.. அவர் எப்பவும் 7 மணிக்கு மேலதான் வருவார்... ஆமா நீ என்ன இந்த நேரத்துல போன் பண்ணியிருக்க?? “ என்றாள் மது ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் அதை ஏன் டி கேட்கற.. இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு பெரிய தலைவலி.. அதனால எனக்கு இப்ப இந்த சின்ன தலைவலி வந்திருச்சு...யார் கிட்டயாவது என் மனக்குறையை எல்லாம் கொட்டலாம்நு பார்த்தா இப்ப ஒரு நாயும் ஆன்லைன்ல இல்ல. போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிறாளுங்க...

கடைசியா நீதான் மாட்டின.. அதான் உனக்கு போன் பண்ணினேன்... “ என்றாள் சிரித்தவாறு

மது முறைக்க மறுமுனையில் அதை கண்டு கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ சாரி டி மந்தி.... மனசுல இருக்கிறத அப்படியே கொட்டிட்டேன்.. சரி .. நீ இப்ப ஆபீஸ் ல என்னாச்சு னு ஆர்வமா கேள்.. அப்பதான் எனக்கு கதை சொல்ற மூட் வரும்..“ என்றாள் மீண்டும் சிரித்தவாறு

“சரி.. சொல்லித் தொலை... அப்படி என்னடி ஆச்சு ?? “ என்றாள் மது இன்னும் முறைத்தவாறு

“ஹ்ம்ம்ம் ஒரு பெரிய குரங்கு.. ம்ஹும்ம் கொரில்லாதான் கரெக்ட் ஆ இருக்கும்..... என் மேல வந்து இடிச்சிட்டு நான் இடிச்சேன் னு தெனாவெட்டா என்னை திட்டறான் டீ “ என்று ஆரம்பித்து இன்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியெல்லாம் கொட்டினாள்....

அனைத்தையும் சொல்லி முடித்தவள்

“அப்பாடி.. இப்ப மனம் பாரம் இறங்கிடுச்சு.. “ என்றாள் சந்தியா சிரித்தவாறு

மதுவும் சிரித்து கொண்டே

“உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுகிட்டு இருடி.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க..வாயை கொஞ்சம் அடக்கி இரு . “ என்று அட்வைஸ் பண்ணினாள்...

“இதோ பாருடா... இந்த மந்தி எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு வளர்ந்திருச்சு... சரி சரி முறைக்காத.. ஆமா குட்டி என்ன பண்றா?? அவளை பார்த்து ரொம்ப நாளாச்சு.. “ என்றாள் சந்தியா..

“ஹ்ம்ம்ம் இந்த வாயாடி சித்தி எப்ப என்னை பார்க்க வருவானு கேட்கறா... “

“ஹ்ம்ம் எனக்கும் வரணும்னு ஆசைதான்... பார்க்கலாம்.. ஆமா இப்ப எங்க இருக்கிறா.. அவளை அப்படியே வீடியோ கால் ல காட்டு டி.. “ என்றாள்...

மது நிமிர்ந்து பார்க்க அவள் மகள் மகிழன் கையில் இருந்த கார் சாவியை பிடிக்க முயன்று கொண்டிருந்தாள்...

“அவ சித்தப்பாகிட்ட இருக்கா டி..அப்புறமா வீடியோ கால் ல காமிக்கறேன் “ என்றாள் மது.. அதை கேட்டு அதிர்ந்த சந்தியா

“என்னது சித்தப்பாவா?? எனக்கே தெரியாம எப்ப டி எங்கப்பா என் புருசனை கண்டு புடிச்சார்..அப்படியே கண்டு புடிச்சாலும் என் கிட்ட சொல்லாம நேரா உன் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டார்... இது எப்ப நடந்தது?? “ என்று அடுக்க, மதுவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை அவள் என்ன பேசுகிறாள் என்று...

“என்னடி உளற??” என்றாள் மது

“ஹா ஹா ஹா நான் உளறரேனா?? மக்கு மந்தி.. நான் உன் குட்டிக்கு சித்தி.. நீ யாரையோ அவளுக்கு சித்தப்பானு சொன்னியே.. அப்ப அது என் புருசனாதான் இருக்கும்.... அதான் எப்ப எங்கப்பா அவனை கண்டு புடிச்சார் என்று ஆச்சரியமா போச்சு..” என்று சிரித்தாள் சந்தியா

“ஐயோ. முருகா... “ என்று தலையில அடித்து கொண்ட மது

“சித்தப்பானா, அவரோட தம்பினும் அர்த்தம் இருக்குமா தாயே... “ என்றாள்...

“அவரோட தம்பியா?? யார் அந்த அவர்? என்று சந்தியா மேலும் யோசித்து

“ஓ.. மாம்ஸ் ஓட தம்பியா? “ என்றவள் மீண்டும் ஏதோ நினைவு வர

“என்னது மாம்ஸ் ஓட தம்பியா? நான் வந்தப்ப மாம்ஸ் மட்டும்தானே இருந்தார்... “என்று மீண்டும் யோசித்தவள்

“ஓ... உன் கல்யாணத்தை பாதியில நிறுத்திட்டு ஓடிப் போனவனா?? அவனை எப்படி மாம்ஸ் உள்ள விட்டார்... நானா இருந்தனா வீட்டு கேட் ஐ விட்டு தாண்டி வரக்கூடாதுனு சொல்லியிருப்பேன்.. எந்த மூஞ்சிய வச்சுகிட்டு திரும்பவும் வந்திருக்கானாம்.. “என்று பொரிந்து தள்ளினாள்...

அவள் போனில் கத்துவது அங்கு இருந்த மகிழன் காதில் நன்றாகவே கேட்டது....

மதுவும் சிரித்து கொண்டே

“ரொம்ப டென்ஷன் ஆகாத டி.. நான் அந்த கதையெல்லாம் நேர்ல பார்க்கிறப்போ சொல்றேன்.. இப்ப நீ போய் சாப்பிட்டு படுத்து தூங்கு.. குட் நைட்.. “ என்று போனை வைத்தாள்...

தன் அலைபேசியை வைத்ததும்

“அப்பாடா.. “ என்று மூச்சு விட்டாள் மது..

“யார் மது போன் ல?? “என்றான் மகிழன் ஆர்வமாக..

அப்பொழுதுதான் மகிழன் அங்கிருப்பது உறைத்தது அவளுக்கு..

“ஐயோ .. இவனை பற்றித்தானே அந்த சந்தி திட்டினா? ஒரு வேளை அவள் திட்டினதெல்லாம் இவர் காதுல விழுந்திருக்குமோ ? “ என்று சந்தேகமாக அவனை பார்க்க அவனோ கூலாக சிரித்து கொண்டிருந்தான்

“அப்பாடா.. அவர் காதுல விழலை.. “ என்று நிம்மதி அடைந்தவள்

“என் பிரண்ட் மகி... “என்றாள் நமட்டு சிரிப்புடன் அவள் திட்டியதை எல்லாம் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்து..

“அழகா இருப்பாளா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

மது அவனை பார்த்து முறைக்க

“ஹீ ஹீ ஹீ உன் பிரண்ட் னு சொன்னியே.. ஒரு வேளை உன்னை மாதிரியே அழகா அடக்கமா இருப்பாளோனு கேட்டேன்.. “ என்றான் சிரித்தவாறு...அதை கேட்டவள்

“அடக்கமா?? ஆங்.. ரொம்பஅஅஅஅ அடக்கம் தான்... “ என்றாள் உள்ளுக்குள் சிரித்தவாறு..

“சரி எதுக்கு என்னை சொல்லி ஏதோ பேசின மாதிரி இருந்தது?? “ என்றான் ஆர்வமாகி

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே..” என்றாள் மது சமாளித்தவாறு

“ஹீ ஹீ ஹீ நீ பேசினது எல்லாம் எனக்கும் கேட்டுச்சு.. மறைக்காம சொல்லு. “ என்றான் லேசாக முறைத்தவாறு..

“அது வந்து.. நீங்க கல்யாணத்துல பாதியில விட்டுட்டு ஓடி போனதுக்கு இப்ப திட்டறா..” என்றாள்..

“அடப்பாவிங்களா... எத்தனை பேர் தான் என்னை திட்டுவீங்க?.. இத்தனை நாளா நீயும் உன் புருசனும் தான் என்னை திட்டிகிட்டிருந்தீங்கனு நினச்சேன்.. கூட இன்னொரு ஆளும் இருக்கா என்னை திட்ட

அதான் அடிக்கடி விக்கல் எடுத்தது.. நீங்க மூனு பேர் தானா இல்ல இன்னும் நிறைய பேர் என்னை வில்லன் மாதிரி பார்த்து திட்டிட்டு இருக்காங்களா?? “ என்றான் முறைத்தவாறு...

“ஹீ ஹீ ஹீ எனக்கு தெரிஞ்சு மூனுதான்.. “என்றாள் மது சிரித்தவாறு...

“சரி.. நீங்க உங்க ஆபிஸ் கதையை சொல்லுங்க.. அப்புறம் என்னாச்சு?? “ என்றாள் மது பேச்சை மாற்ற எண்ணி....

“ஹலோ..என்னை பார்த்தா கதை சொல்ற மாதிரியா இருக்கு... உண்மை மா.. நொந்து நூடுல்ஸ் ஆகி வந்திருக்கேன்.. அந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி...

பாவம் அவளை கட்டிக்க போறவன் பாடு அதோ கதிதான்.. “ என்று மேல கையை காண்பித்தான்... அதை கேட்டு சிரித்த சிவகாமி

“பார்த்து டா... அவளே உனக்கு பொண்டாட்டியா வந்திட போறா... “ என்றார் ஆர்வமாக அவனை பார்த்தவாறு..

அதை கேட்டு புரை ஏறியது அவனுக்கு....

“ஐயோ முருகா... அவளா?? அவளை பார்த்தாலே கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்டுச்சு.... அந்த சண்டக்காரி மட்டும் நம்ம விட்டுக்கு வந்தா அவ்வளவு தான் தினமும் வீட்லயே மார்க்கெட் ஐ கூட்டிடுவா.... “ என்றான் கடுப்புடன்...

“ஹா ஹா ஹா.. நீ அடிக்கிற வாய்க்கு அப்படி ஒரு பொண்ணுதான் வரப் போறா பார்... “ என்றார் சிவகாமி சிரித்தவாறு..

“அதுக்கு நான் என் அண்ணன் மாதிரி சாமியாராவே இருந்திடறேன்... “..

அதை கேட்டு மது அவனை பார்த்து முறைக்க

“ஹீ ஹீ ஹீ.. சாரி மது.. நீ இருக்கிறதை மறந்துட்டேன்... ஒரு காலத்துல சாமியாரா இருந்தான் ..இப்பதான் அவன் பொண்டாட்டி தாசனா மாறிட்டானே...

முன்னெல்லாம் வீட்டுக்கு இரவு 11 இல்ல 12 மணிக்கு தான் வருவான்... இப்பல்லாம் 6 இல்லன 7 மணி அடிச்சாலே

7 மணி அடித்தால் உன் ஞாபகம் னு இந்த ஆசை பொண்டாட்டிய பார்க்க ஓடி வந்திடறானே... “ என்று சிரித்தான்....

“என்னடா அங்க என் தலை உருள மாதிரி இருக்கு?? ..” என்று சிரித்தவாறே அங்கு வந்தான் நிகிலன்.

அன்று போலீஸ் யூனிபார்ம் ல் இருந்தவன் கண்ணில் இருந்த கூலரை கழட்டியபடியே கம்பீரமாக நடந்து வர, தன் கணவனையே இமைக்க மறந்து பார்த்தாள் மது....

அவளின் பார்வையை கண்டு கொண்டவன் அவனும் காதலோடு பார்த்தான் தன் மனைவியை....

குழந்தை பிறந்து 4 மாதம் ஆகியிருக்க, எந்த ஒரு சதை பிடிப்பும் இல்லாமல் இன்னும் அதே ஒல்லியான தேகத்துடன் கொடி போல இருந்தவளை அதுவும் முன்பை விட இன்னும் ஜொலித்தவளை காதலுடன் பார்த்தவாறே அங்கு வந்தான் நிகிலன்..

"ம்ஹூம்... கட் கட் கட் ... நாங்களும் இங்கதான் இருக்கோம்... உங்களோட காதல் காவ்யத்தை டூயட் சாங் ஐ எல்லாம் தனியா உங்க ரூம்ல வச்சுக்கங்க... " என்று சிரித்தான் மகிழன்...

“டேய் வாலு.. "என்று அவன் முதுகில் ஓங்கி அடித்தவாறு அவன் அருகில் அமர்ந்தான் நிகிலன்.

அவனை கண்டதும் மகிழன் மடியில் இருந்த அவன் இளவரசி தன் தந்தையிடம் தாவ

"அடிப்பாவி... இப்ப வரைக்கும் சித்தப்பா கிட்ட சமத்தா இருந்தவ, இப்ப உன் அப்பனை பார்த்ததும் என்னை மறந்து அவன் கிட்ட தாவறீயே.. நீ பொழச்சுக்குவ டி .. " என்று அவள் கனனத்தை கிள்ளி நிகிலனிடம் கொடுத்தான்...

அவனும் தன் மகளை மார்போடு அணைத்து கொண்டு

"ஹாய் டா பிரின்ஸஸ்.... How was your day?? " என்று கதை பேச தலையில் அடித்து கொண்டான் மகிழன்...

“இந்த விருமாண்டிக்கு ஒரு குழந்தையை கொஞ்ச கூட தெரியலை.. " என்றான்..

மதுவும் சிரித்து கொண்டே நிகிலனுக்கு காபியை ஊற்றி கொடுத்தாள்..

பின் அனைவரும் சிறிது நேரம் கதை பேசி கொண்டிருக்க, கமலம் அம்மா அங்கு வந்தார்....சமையல் முடிந்து விட்டதாக கூறி அனைவரையும் சாப்பிட அழைத்தார்..

நிகிலன் அவரை கடிந்து கொண்டான்..

“நீங்க எதுக்கு மா இதெல்லாம் செய்யறீங்க.. அதான் ஆள் இருக்கு இல்ல.. " என்றான்..

“இருக்கட்டும் பா.. இப்படி செஞ்சு போட்டு பழகிய கை.. சும்மா அங்க இல்லத்துல வெட்டியா இருக்க முடியலை... இது மாதிரி உங்களுக்கெல்லாம் செஞ்சு கொடுத்து மனசுக்கு நிறைவா இருக்கு... என் மனசுக்கு பிடித்துதான் செய்யறேன்... " என்று சிரித்தார்...

மதுவும் அவரை கட்டி கொண்டு இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அவரையும் அமர சொன்னாள்..

பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, அப்பொழுது தான் அகிலா ஞாபகம் வந்தது சிவகாமிக்கு...

"டேய் மகிழா.. நீ போய் அகிலாவை சமாதானபடுத்தி கூட்டிகிட்டு வா... சாப்பிடலாம்.. "என்றார்...

நிகிலன் என்னாச்சு என்று கேட்க, சிவகாமி அவர்களின் சண்டையை விளக்கினார்..

"ஏன் டா.. தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க.. இன்னுமா அந்த சின்ன புள்ளைகிட்ட மல்லுக்கு நிக்கற?” என்று கடிந்தான்...

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் சும்மா செல்ல சண்டை டா.. நம்ம அகிய பத்தி தெரியாதா?? ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தர்றேனு சொன்னா உடனே ஓடி வந்திடுவா... " என்று சிரித்தவாறு எழுந்து சென்றான்....

அதே மாதிரி அவளை கெஞ்சி கொஞ்சி அழைத்து வர, அனைவரும் சாப்பிட்டு உறங்க சென்றனர்...

தன் அறைக்கு சென்ற மகிழன் தன் கட்டிலில் படுத்தவன் அந்த நாளை மனதில் ஓட்டி பார்த்தான்...அந்த நாள் முழுவதும் அந்த ராட்சசியிடம் சண்டை இட்டது தான் நினைவு வந்தது....

இந்த ராட்சசியை எப்படி ஜெயிப்பது? என்று யோசித்து சக்ரவியூகம் ஒன்றை வகுத்தான் மகிழன்...

அந்த வியூகத்தில் அவன் மாட்டாமல் வெளி வருவானா?? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்...
 
Mareeswari

இணை அமைச்சர்
Joined
Jul 27, 2019
Messages
600
Reaction score
926
Location
Chennai
Chakkra viyugamey sikkurathu thaan. Pottavaney maattaporaan :p (y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top