• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகிய அரக்கனே..! 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ramanitamil

புதிய முகம்
Joined
Nov 21, 2022
Messages
8
Reaction score
12
Location
Tamil Nadu salem
அழகிய அரக்கனே.! 1
முகமெல்லாம் கோபம் கொப்பளிக்க நடு ரோடு என்றும் பாராமல் சேலம் ஐந்து ரோடில் இருந்து ஓமலூர் செல்லும் வழியில் தனது ஜிப்சியை வழியை மரித்தவாரு நிறுத்தி அதன் பேனட்டில் அமர்ந்து கொண்டு ஒருவனின் தலை முடியை ஒரு கையால் பற்றிக் கொண்டு மறு கையால் அவன் முகத்தில் ஓங்கி குத்திக் கொண்டு இருந்தான் இளா என்கிற இளமாறன்.
இளமாறன் ஒரு நிழல் உலக தாதா. பெயருக்காக அவன் செய்யும் பிஸ்னஸ் தான் பைனான்ஸ்.
இளமாறன் ஆரடிக்கு மேலான உயரத்துடன் மாநிறமாக அடர்ந்த கேசம், அழுத்தமான மோவாய் ,அடர்ந்த மீசை அதன் நுனியில் லேசாக முறுக்கி விடப்பட்டு , ஆளை ஊடுருவும் விழிகளுடன், பிளாக் ஜீன்ஸ் சேண்டில் கலர் பிளைன் ஷர்ட்,அதை முழங்கை வரை மடித்து விட்டு, ஸ்டைலாக இருந்தான்.
"என்னடா முருகா என்கிட்ட சம்பளம் வாங்கிக்கிட்டு அந்த சண்முகத்துக்கு வேலை செய்கிறாயா? அதுவும் எனக்கு எதிரா நான் எதிரியை கூட மன்னிச்சிடுவேன் ஆனா உன்ன மாதிரி துரோகியை மன்னிக்கவே மாட்டேன் என்கிட்ட மோதுனா என்ன நடக்கும்? எனக்கு துரோகம் பண்ணா என்ன நடக்கும்னு? எல்லாருக்கும் தெரிய வேணாம் அதுக்காக தான் உன்னை இந்த இடத்துக்கு இழுத்துட்டு வந்து உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கிறேன்..
உன்னோட கதைய பாக்குறவன் எவனும் எனக்கு எதிரா இனிமே ஒரு விரலை கூட அசைக்க மாட்டான்." என்று சொல்லிக் கொண்டே தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியை குறி வைத்தான் இளமாறன்.
"அண்ணே தெரியாம தப்பு பண்ணிட்டானே என்னை மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டானே ப்ளீஸ் அண்ணே தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கெஞ்சினான் அந்த முருகன்.
"உன்னை மன்னிக்கிறதுக்கு நான் என்ன மகாத்மாவா அயோக்கியன் டா கேடுகெட்ட அயோக்கியன் இந்த இளமாறன் கிட்ட வாலாட்டினா இதுதான் கதின்னு உனக்கு முன்னையே தெரிஞ்சிருக்கணுமே அப்படி இருந்தும் நீ இந்த வேலையை செஞ்சினா உனக்கு என்கிட்ட பயமில்லை என்று தானே அர்த்தம் இப்ப எதுக்காக கெஞ்சற ம்ம்.."என்று நக்கல் அடித்தான் இளமாறன்.
பக்கத்தில் இருந்த சக்தி அவனை தடுத்தான் "மாறா கொஞ்சம் பொறுமையா இரு பப்ளிக் எல்லாம் வேடிக்கை பாக்குறாங்க தேவையில்லாத இஸ்யுவாக்க வேண்டாம் இவனை நம்ம எடத்துக்கு அழைச்சிட்டு போயிடலாம்".
"எதுக்கு பயப்படுற சக்தி? யாரு நம்மள என்ன செஞ்சிட முடியும்? இவனை எல்லாம் எந்த இடத்துல வச்சு போட்டாதான் எல்லாத்துக்கும் புத்தி வரும்".
சுற்றி இருந்த ஜனங்கள் அனைவரும் இதை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய யாரும் அருகில் வந்து தடுக்க முயலவில்லை..
அப்பொழுது ஸ்கூட்டியில் அந்த இடத்தை வந்து அடைந்தாள் சாகித்யா. அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தை பார்த்து திகைத்து போனாள்.
ஒரு உயிர் அந்த அரக்கன் கையில் ஊசலாடி கொண்டிருக்க அதை சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டவள் கொதித்து போனாள்.
இப்படியா பப்ளிக்கில் ஒருவன் ஒரு உயிரை எடுக்க பார்ப்பான். அதுவும் அத்தனை பேரும் பார்க்க அதை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்,போலீஸ் வந்தால் தன் நிலமை என்ன ஆகும் என்று கூட யோசிக்க மாட்டானா அந்த அரக்கன். என்று நினைத்துக் கொண்டே அவசர அவசரமாக வண்டியை ஸ்டேன்டு போட்டு நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடினாள்.
"ஏய் விடு அவனை பொது எடத்துல கொஞ்சம் கூட பயமே இல்லாம என்ன வேலை பண்ணிட்டு இருக்குற நீ..? போலீஸ் வந்தால் உன் நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா.? விடு விடு" என்று இளமாறனின் துப்பாக்கி பிடித்திருந்த கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருந்தால் சாகித்யா..
இளமாறன் கண்களில் ஆச்சரியம் வழிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரம்மை பிடித்தவன் போல.
யார் இவள்? எங்கிருந்து வந்தாள்.? என்னை பற்றி எல்லாம் தெரிந்தும் என் முன் வந்து இவ்வளவு தைரியமாக என்னுடைய செயலையே தடுத்து நிறுத்துகிறாளா.? என்று யோசித்துக் கொண்டே சாகித்யாவின் முகத்தை பார்த்தால் இளமாறன்.
அஞ்சன விழிகளில் கோபமும் பயமும் போட்டி போட கெஞ்சலும் மிரட்டலுமாக அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தால் சாகித்யா.
அவளின் விழிகளையும், முகபாவணையையும் பார்த்தவனுக்கு ஆச்சரியம் மேலும் கூடியது அவளின் மேல் ஆர்வமும் கூடியது. அவளை தலை முதல் கால் வரை நோட்டம் விட்டால் இளமாறன்.

சாகித்யா ஐந்தரை அடி உயர எல்லோரா சிற்பம், ஆளை மயக்கும் மீன் விழிகள், மாம்பழக் கன்னங்கள், சின்ன ரோஜா செப்பு இதழ்கள், வில் போல வளைந்த புருவங்கள்,கூர் நாசி அதன் மேல் கவர்ச்சியாக உட்கார்ந்து இருந்த டால் அடிக்கும் ஒற்றை கல் வைர மூக்குத்தி, அது அவளின் அழகை பன்மடங்கு உயர்த்திக் காட்டியது. அந்த மூக்குத்தியின் வெளிச்சம் அவள் முகம் எங்கும் டாலடித்தது.
ஒரு ரோஜா பூ போல மென்மையாக அவன் கைகளை உலுக்கி கொண்டிருந்தாள்.
இளம் நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள் இடையை தொட்டு நீண்ட பின்னல் ஆட அவனைப் பார்த்து விடு விடு பாவம் இல்ல என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து மெய் மறந்து போன இளமாறனின் பிடி தளர்ந்தது.
அந்த தளர்வை பயன்படுத்திக் கொண்டு முருகன் அவன் பிடியிலிருந்து விலகி ஓட ஆரம்பித்தான்.
இளமாறனின் ஆட்கள் அவனை வளைத்து பிடித்து அமுக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
ஜிப்சியிலிருந்து கீழே குதித்து இறங்கினான் இளமாறன்.
சாகித்யா முருகன் தப்பி ஓடியதும் அந்த இடத்தை விட்டு விலக ஆரம்பித்தாள்.
அதே நேரம் அவள் வலது கையை பிடித்து சுண்டி இழுத்தான் மாறன்.
ஒரு சொட்டு சொட்டு பூ மாலை போல அவன் மார்பில் வந்து விழுந்தால் சாகித்யா.
அவளை இடையோடு இருகனைத்து அவள் முகத்தை நிமித்தினான் மாறன்.
"ஏய் என்னை விடு என்ன பண்ற நீ" என்று கத்திக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள் சாகித்யா.
மக்கள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் அவள் அருகில் வரவில்லை இளமாறனை தடுக்கவும் முயற்சிக்கவில்லை.
இளமாறனை நிமிர்ந்து மிரண்ட பார்வை பார்த்தால் சாகித்யா.
பக்கத்தில் நின்றிருந்த சக்திக்கு ஆச்சரியம் மாறன் இவ்வாறு நடந்து கொள்வானா! என்று.
இளமாறன் ஒரு நிழல் உலக தாதா தான் அவன் செய்யாத கொடுஞ்செயல்களே இல்லை எனலாம் ஆனால் ஒரு பெண்ணை அவன் தீண்டியதில்லை மனதாலும் சரி உடலாலும் சரி..
இப்பொழுது சாகித்யாவை அவன் கட்டி அனைத்திறுக்கும் விதம் பார்த்த சக்தி ஆச்சரியத்தில் விழி விரித்தான்..
இளமாறன் சாகித்யாவின் விழிகளோடு தன் விழிகளை கலந்தான் அவளை ஊடுருவி பார்த்தபடியே "அவனை விடச் சொன்னாய் அல்லவா அதனால் நீ என்னிடம் தஞ்சம் புகுந்து விடு" என்றான்.
அவன் அவனின் ஆளை ஊடுருவும் ஆழ்ந்த விழிகள் சாகித்யாவை என்னவோ செய்தது.
"ச்சீய் என்னை விடு இல்லை என்றால் நான் போலீசில் சொல்லி விடுவேன் ஜாக்கிரதை" என்று திமிறிக்கொண்டே அவனை மிரட்டினாள்.
அதை கேட்ட இடமாறன் கட கடவென்று சிரித்துக்கொண்டே அவள் மூக்கோடு தன் மூக்கை உரசினான்..
அவன் கண்கள் இடுங்க சிரித்தபோது பளிச்சிட்ட வெண்ணிற பற்களையும், கன்னத்தில் விழுந்த குழியையும், அதனால் அவன் அழகு கூறியதையும் பார்த்து ஒரு கணம் மெய் மறந்தால் சாகித்யா.
அதைப் பார்த்த இளமாறனின் கண்களில் ஒரு மின்னல் வந்தது..
அதே புன்னகையோடு அவளை விடுவித்தான். பின்னர் கைகளால் பின்னங்தலையை கோதியபடியே கண்ணதின் ஓரம் நாக்கை மடித்து சிரித்த படியே அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
அவள் வெட்கத்தில் முகம் சிவந்து தலைக்குனிந்த படி அந்த இடத்தை விட்டு ஓடி தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி பறந்தாள்.
இளமாறன் தன் ஆட்களை பார்த்து சைகை செய்தபடியே தனது ஜிப்சியில் ஏறி அமர்ந்தான் டிரைவர் சீட்டில் ஏறிய சக்தி ஜிப்ஸியை விரட்டினான்.
மாறனின் ஆட்கள் முருகனை பிடித்து இழுத்துக் கொண்டு மற்ற கார்களில் ஏறி அவனை பின் தொடர்ந்தனர்.
இளமாறனின் முகம் சந்தோசத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
"என்ன மாறா உலக அதிசயமா இருக்குது அந்த புள்ளைய பார்த்து அப்படியே வழிஞ்சு போய் நிக்கிற என்ன ஆச்சு உனக்கு".
"அவ என்ன இங்க டச் பண்ணிட்டா டா" என்று தன் இதயத்தை குத்தி காட்டி சக்தியை பார்த்து சொல்லி சிரித்தான் மாறன்..
"ஏய் என்ன மாறா நம்மள மாதிரி ஆளுங்களுக்கு காதல் கல்யாணம் ஒத்தே வராது என்று சொன்ன நீயே இப்போ இப்படி சொல்ற?"
" இதனால் வரைக்கும் அவளை பார்க்கல இல்ல அதனால அப்ப அப்படி சொன்னேன். இப்ப இவளை பார்த்ததால இப்படி சொல்றேன். என்று சொல்லி விட்டு சக்தியை பார்த்து குதூகலத்துடன் கண் சிமிட்டி சிரித்தான் மாறன்.
"என்னமோ போ காதல் பரத் மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி" என்று சொல்லி சிரித்துவிட்டு சாலையை பார்த்து வண்டியை விரட்டினான் சக்தி.
சக்தி சொன்னதைக் கேட்டு சிரித்துக்கொண்டே கண்களை மூடி சீட்டில் சாய்ந்து சாகித்யாவின் பெயர் கூட தெரியாமல் அவளுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தான் இளமாறன்.
தொடரும்..
வணக்கம் தோழமைகளே,
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும்
அன்பு தோழி,
ரமணிதமிழ் 😊❤🙏
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top