அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

#12
காது பராமரிப்பு

பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை.

இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே யோசனை உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும்.

பதினைந்து நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் ஃபேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.

சருமத்தை பாதுகாக்க சில விதி முறைகள்

இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

காய்ப்பு, தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறந்து விடும்.

கைகளில் உள்ள சுருக்கங்களை போக்கும் இயற்கை வழிகள்

அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை; கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கை, கால்களுக்கு பயன்படுத்தினால், கை, கால்களில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும்.

உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கை, கால்களில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, பின்பு கடலை போட்டு கழுவ வேண்டும்.

சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை முட்டை மேம்படுத்தும். இது சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
 
#13
கைகளை மிருதுவாக்கும் அரோமா ஆயில் மெனிக்யூர்

ஹாட் ஆயில் மெனிக்யூர் பெரிய ஸ்பாக்களில் செய்யப்படும் கைக்கான ஸ்பா. இது விரல்களை ஆரோக்கியமாக வளரச் செய்யும். கரடுமுரடான கைகள் பஞ்சு போல் மாறும். கைகளில் உள்ள வறட்சியை போக்கி ஊட்டம் அளிக்கும். இந்த ஸ்பாவை வீட்டிலேயே செய்யலாம். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் - சம அளவு

பாதாம் எண்ணெய் - ஐந்து ஸ்பூன்

விட்டமின் ஈ மற்றும் ஆலிவ் எண்ணெய் - சம அளவு

தேயிலை மர எண்ணெய்

விட்டமின் ஈ கேப்ஸ்யூல்

ரோஜா இதழ்கள்

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து அதிலுக்கும் எண்ணெயை கலவை எண்ணெயில் போடவும்.

இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள் அல்லது மைக்ரோ வேவில் வைத்தால் எட்டு நொடிகள் சூடுபடுத்தவும்.

பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும். சில துளி லாவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாகவும் ரத்த ஓட்டம் பாயவும் உதவும்.

சூடு ஆறியது மறுபடியும் சூடு படுத்தி கைகளை விடவும். இருபது நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

பத்து நிமிடம் கழித்து கைகளை கடலைமாவு போட்டு கழுவலாம். உங்கள் கைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் கைகள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

மாதம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹாட் ஆயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். மசாஜ் செய்யும்போது அந்த அரோமா எண்ணெய் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் சுருக்கம் வராமல் கைகளை இளமையாக ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.
 
#18
மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்

கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கிரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை அரை கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து ஃபேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

பாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்

வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும். அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த ஃபேஸ்ட்டை தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கடுகு எண்ணெயை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் அழகாகும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் ஒரு எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம், குளிர்ந்த நீரில் ஐந்து நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் இரண்டு டீஸ்பூன் கிளிசரின், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும்.

இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
 
#19
வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்

கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசி மாவு ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் யோகார்ட், ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கால்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் கால்களில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றலாம். விடாப்படியான தழும்புகளும் மறையும்.

கோதுமை மாவு சருமத்தை இறுக்கிப் பிடிக்கும். இதனால் அதிகப்படியான சதைகள் கட்டுப்படும். போதாதற்கு அழுக்குகளை நீக்கவும் சிறந்தது. ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால்களில் தேய்க்கவும். நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும்.

கால்களில் இருக்கும் சருமம் மென்மையாக இருப்பதால் அதில் குளிர்காலத்தில் சதுர சதுரமாக வறண்டு போன கோடுகள் தெரியும். இதனை தவிர்க்க, ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சினால் நனைத்து கால் முழுக்க தடவுங்கள். இரவில் அவ்வாறு செய்து விட்டு படுக்கவும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.

கடைகளில் அவகாடோ எண்ணெய் விற்கும். அதனை வாங்கி கால்களில் தினமும் காலை மாலை என இரு வேளை தடவி வாருங்கள். மென்மையான பளபளவென கால்கள் கிடைக்கும்.

புதினா சாறை எடுத்து கால்களில் தடவினால் கால்களில் உண்டாகும் கருமை, சொரசொரப்பு நீங்கி, மென்மையான கால்களைப் பெறுவீர்கள். முட்டிகளும் தேய்த்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும்.

இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குச் செய்யலாம்.

பின்பு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும்.

அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் ஃபேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். இரண்டு அல்லது மூன்று முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.

நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும்.

தினமும் நகங்களுக்கு பாதாம் எண்ணெயை இரவில் தூங்கப்போகும் முன் தடவி வாருங்கள். நகங்கள் ஊட்டம் பெறும். உங்களுக்கு கடினமான நகங்கள் இருந்தால், ஆலிவ் எண்ணெயை நகங்களில் தடவி நீவி விட்டால் மென்மையாக மாறிவிடும். கால் விரல்களில் சிலருக்கு சொத்தை ஏற்படும். கைகளில் கூட உண்டாகும். இதற்கு சிறந்த தீர்வு ரோஸ் வாட்டரை நகங்களுக்கு தடவி வாருங்கள். சொத்தை நகம் கீழே விழுந்து, புதிய நகம் முளைக்கும். இது தவிர நகங்கல் உடையாமலிருக்க கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்
:

எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்

லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெய் - சில துளிகள்

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும். ஆகவே அடிக்கடி நெயில் பாலிஷ் போடாமல் நகத்தின் இடுக்களை சுவாசிக்க விடுங்கள். இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.
 
#20
கழுத்து கருமையை போக்கும் இயற்கை வழிகள்

முகத்திற்கு அழகுபடுத்தும்போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. சூரிய ஒளி அதிகம் கழுத்தில் படுவதால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும். கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும். இதனை போக்க வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். அது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுங்கள். அதனை கழுத்தில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். வெள்ளரிக்காய் கருமையை போக்கி, சருமத்திற்கு நிறமளிக்கும்.

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும். சருமத்திலுள்ள இறந்த செல்கள், நச்சுக்களை வெளியேற்றும். தினமும் காலை மாலையில் யோகார்டை தடவி காய்ந்ததும் கழுவினால் ஒரே வாரத்தில் கருமை மறைந்துவிடும்.

பாதாமை பொடி செய்து அல்லது ஊற வைத்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது பால் கலந்து கழுத்தில் தேய்க்கவும். பதினைந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்.

சமையல் சோடா சிறந்த அழுக்கு நீக்கி. கழுத்தில் வியர்வை மற்றும் கிருமிகளால் உண்டாகும் தழும்புகளை மறைத்து சருமத்திற்கு நிறமளிக்கும். சமையல் சோடாவை நீரில் ஃபேஸ்ட் போலச் செய்து கழுத்தில் தடவுங்கள். பத்து நிமிடம் கழித்து கழுவினால் கருமை நிறம் மறையும்.

பால் கால் கப் எடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு கலந்து கழுத்தில் தடவுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். தேவையென்றால் சிறிது மஞ்சள் பொடியும் கலந்தால் கழுத்து மின்னும்.

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.. பின் இருபது நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்

உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்


உதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கருத்துவிடும். பித்த உடம்பாக இருந்தாலும் உதடு கருக்கும். அல்லது அடிக்கடி நாவினால் உதட்டை ஈரப்படுத்தும்போதும் உதடு கருப்பாகும்.

மிகச் சிறந்த வழி அடிக்கடி நீங்கள் நீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் உதடு கருக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் உதடு கருப்பாகிவிட்டால் என்ன செய்யலாம். கருத்த உதட்டை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உதட்டில் தடவுங்கள். பத்து நிமிடம் கழித்து கழுவவும். தினமும் இப்படி செய்து வாருங்கள். கருமை மறைந்து உதடு பளிச்சிடும்.

யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் யோகர்ட்டை உதட்டில் தடவி வாருங்கள். யோகார்ட் இல்லையென்றால் தயிர் தடவலாம். வேகமாக கருமையை மறையச்செய்யும்.

ஈரப்பதம் குறையும் போதும் உதட்டைச் சுற்றிலும் கருமை ஏற்படும். இதனை தவிர்க்க தினமும் வெண்ணெயை உதட்டில் தடவுங்கள். அது போல், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயும் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும். இதனால் கருமை நாளடைவில் மறையும்.

ரோஸ் வாட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வாட்டரை சிறிது பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.
 

Sponsored Links

Top