அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

#21
முதுகு கருமையை போக்கும் ஆலிவ் ஆயில் மசாஜ்

ஒரு சிலருக்கு முதுகு வறண்டு போய் விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஆயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் நான்கு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்திற்கு ஈரத்தன்மை கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும்புள்ளிகள், பரு தோன்றும்.

முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும். எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு பொலிவு தரும்.

இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த மற்றும் படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகு அழகை அதிகரிக்கச் செய்யலாம்.

வயதானாலும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்

அரிசி நீர் :


பெண்கள் அரிசியை இரண்டு கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் சருமம் இறுக்கமடையும். கன்னங்கள் பூசியது போல காணப்படும். இது சருமத்திற்கு பளபளப்பையும் தரும்.

பச்சைப் பயிறு :


பெண்கள் பச்சைப்பயிறு ஃபேஸ்ட் செய்து பூசுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். தினமும் பச்சைப் பயிறை பொடி செய்து அதனை மாஸ்க் போல முகத்தில் போட்டு வந்தால் சருமத்தை என்றும் இளமையோடு வைத்து கொள்ளலாம்.

கிரீன் டீ :


பெண்கள் தினமும் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். அது சருமத்தில் ஏற்படும் சின்ன சின்ன சுருக்கங்களையும் போக்குவதால் அதனை நாள்தோறும் குடிக்க வேண்டும். கிரீன் டீ குடித்து வந்தால் வயதானாலும் சருமம் இளமையாகவே இருக்கும்.

மசாஜ் :

பெண்கள் ஆயில் மசாஜ் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்வு தரும்.

புதினா இலை :

புதினா இலையை ஃபேஸ்ட் செய்து அதனை முகத்தில் மாஸ்க் போல் போட்டு கொள்ள வேண்டும். காரணம் அவை சருமத்தில் இறந்த செல்களை அகற்றி, இளமையாக வைக்கிறது.

மஞ்சள் :

மஞ்சளை அதிகமாய் உணவிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அழகிற்கும் பயன்படுத்த வேண்டும். கெமிக்கல் கலந்த கிரீம்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இயற்கையான அழகு தரும் பொருட்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
 
#22
சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

தினமும் கடலைமாவை பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

அதேபோல் குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், நான்கு ஸ்பூன் பால், இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும், இளமையோடு காட்சி தரும்.

ஒரு டீஸ்பூன் கடலை மாவை ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் ‘பேக் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை ஐம்பது கிராம், வேப்பங்கொழுந்து ஐந்து கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்

முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும்.

இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்து, வறட்சியானது சருமம் சுருங்குவதை தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் உறிஞ்சி, முதுமை தோற்றத்தைப் பெறுவது தள்ளிப் போடப்படும்.

விளக்கெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும். அதற்கு விளக்கெண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்யுங்கள்.

தினமும் இரவில் படுக்கும் போது ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முதுமை தள்ளிப் போடப்படும்.

பாதாம் எண்ணெயிலும் வைட்டமின் ஈ உள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலும், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
#23
சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்

பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து, சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும்.

புதினா ஒரு கப் எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவை இரண்டு ஸ்பூன் கலந்து முகத்தில் பேக் போட்டால் வெயிலினால் உண்டாகும் கருமை அலர்ஜி ஆகிய்வை மறைந்து நிறம் பெறும்.

வேர்கடலையை அரைத்து அதனுடன் சிறிது பால் கலந்து முகத்தில் ஃபேஸியல் மாஸ்க் போல் போடுங்கள். காய்ந்ததும் கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளி நீங்கி விடும்.

தேங்காய் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் சம அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.

சருமத்திற்கு பொலிவை தரும் கிரீன் டீ ஸ்க்ரப்

கிரீன் டீ உடல் எடை குறைக்க மட்டுமல்ல சருமத்திற்கும் பொலிவையும் தரக் கூடியது. உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய விரும்புபவர்கள் கிரீன் டீ ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இந்த கிரீன் டீ ஸ்க்ரப் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாழாகாது, சரும துவாரங்களில் அடைத்திருக்கும் அழுக்குகளை அகற்றவே இதனை உபயோகப்படுத்துகிறோம். அதன் பின்னர் மாய்ஸ்ரைஸர் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கெடுதலையும் தராது.

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ பேக் – இரண்டு

தேன் - ஒரு டீ ஸ்பூன்

கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் ஒரு நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும். முயன்று பார்த்து கருத்திடுங்கள்.

சருமத்தை பொலிவடைய செய்யும் சர்க்கரை ஸ்கரப்


பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

அதுமட்டுமின்றி, சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

அவசரமாக வெளியில் கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஐந்து நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

எலுமிச்சை சாற்றில் சிறிது நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

க்ரீன் டீயில் ஆன்டி ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
 
#24
சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்

உடலிலுள்ள சருமம் முப்பது வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.

வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும். இறந்த செல்களை அகற்றும். வியர்வை, தூசினால் உண்டாகும் அழுக்குகளை களையும். அதனை வைத்து செய்யப்படும் இந்த குளியல் ஸ்க்ரப் தொய்வான சருமத்தை இருக்கி, இளமையாக காண்பிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெரி - மூன்று

தேன் - ஒரு ஸ்பூன்

காபி பவுடர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

ஸ்ட்ராபெரி ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. சருமத்தை மெருகூட்டும். தேன் சுருக்கங்களை அகற்றும் மென்மையான சருமத்தை தரும். ஸ்ட்ராபெரியின் விதையை நீக்கி மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேன் மற்றும் காபிப் பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் இந்த கலவையை தேய்த்து, குறிப்பாக கடினமான பகுதிகளில் அழுத்தி தேய்த்து, குளிக்கவும்.

இது இளமையான சருமத்தை தரும் அற்புதமான ஸ்க்ரப் ஆகும். நேரம் இருப்பவர்கள் தினமும் இதனை தேய்த்து குளிக்கலாம். இல்லையென்றாலும் வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்தால் நல்ல பலன் தரும்.

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

அந்த காலத்தில் பெண்கள் மஞ்சள் போடாமல் வெளியே வரமாட்டார்கள். அது கலாச்சாரம் என்று சொன்னாலும் உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு.

கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். வெடிப்புகள் வராமல் பாதுகாக்கும். பாலில் மஞ்சளை குடிந்து தினமும் குடித்தால், நோய்கள் அண்டாது. மேலும் இதனால் சரும அழகும் அதிகரிக்கும் என்பது தெரியுமா?

இத்தகைய மஞ்சளை இந்த கால பெண்கள் போடுவதையே மறந்துவிட்டார்கள். அன்றைய நாட்கள் போலில்லாமல் இப்போது பெண்கள் வெளியே வெயிலில் அலைய வேண்டியதாகிறது.

வெயிலில் செல்வதால் கருமை உண்டாகும் என்ற காரணங்கள் ஏற்புடையதாக இருந்தாலும், அதனை உபயோகப்படுத்தாமலே இருப்பதும் தவறு. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும்.

அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை மஞ்சள் பேக் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம் :

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்

கஸ்தூரிமஞ்சள் - அரை ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பால் - மூன்று டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் ஃபேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி இருபது நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது.

வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை தோல் - இருபது கிராம்

கஸ்தூரி மஞ்சள் - ஐம்பது கிராம்

கசகசா - இருபத்திஐந்து கிராம்

பயத்தம் பருப்பு - இருநூறு கிராம்

கடலை மாவு - ஐந்து டீஸ்பூன்

முல்தானி மட்டி - அரை டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - மூன்று டீஸ்பூன்

செய்முறை :

முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மற்றும் கசகசாவை நன்றாக வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த மாவில் கடலை மாவு, முல்தானி மட்டி கலந்து வைத்து கொள்ளவும்.

தேவைப்படும் போது இந்த பவுடரில் சிறிதளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.
 
#25
பால் பவுடர் ஃபேஸ் பேக்

பால் பவுடரை கொண்டு நாம் பல வகை ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். பால் பவுடர் உடன் நம் சமையலறையில் உள்ள மற்ற பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். இவ்வாறு பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள், அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குகின்றது.

இவ்வகை தொல்லையற்ற ஃபேஸ் பேக்குகளை ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பது மிகவும் சிறப்பானதாகும். நாம் நமது சருமத்திற்கு ஏற்ற வகையான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இப்பொழுது பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஒரு கிண்ணத்தில் இரண்டு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் இரண்டு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும்.

பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது இருபது நிமிடங்கள் வரை காய வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவவும். இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.

ஒரு மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.

ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் காய விடவும். பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இது, சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.

ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக்கை தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.

சருமத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் தேன் ஃபேஸ் பேக்


ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சந்தனம், சின்ன ஸ்பூன் கடலைமாவு, பால் ஆடை ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பன்னீர், இவை அனைத்தையும் கலந்து சருமத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் சருமம் மிருதுவாக மாறும்.

அரை ஸ்பூன் பால் பொடி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இதனால் வெயிலால் ஏற்பட்ட கருப்பு நிறம் படிப்படியாக மாறும்.

ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் பவுடர், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், இதை மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து கொண்டால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு ஒரு பெரிய ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவும் ஒரு சின்ன ஸ்பூன் தேனும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி சிறிய மசாஜ் கொடுத்து மூன்று நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிளாக் ஹோட்ஸ் படிப்படியாக நீங்கும்.

ஆப்பிள் ஃபேஸ் பேக்


சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, அரை ஸ்பூன் பால் பவுடர், அரை ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து இருபது நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

ஆப்பிள் விழுது ஒரு ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும்.

ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.
 
#26
என்றென்றும் இளமைக்கு பாதாம் ஃபேஷியல்

மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!

தேவையான பொருட்கள்
:

பாதாம் – ஐந்து

பால் - ஒரு ஸ்பூன்

எலுமிச்சை சாறு - இரண்டு ஸ்பூன்

கடலை மாவு - இரண்டு ஸ்பூன்

செய்முறை :


முதலில் பாதாமை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

பாதாம் ஃபேஷியலை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் உங்கள் முகத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் இறந்த செல்களை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

இந்த ஃபேஷியலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கும்.
 
#27
பிரகாசமான முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்

ஆல்கஹாலை ஃபேசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் சருமத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். சொல்லப் போனால் அதை அழகுச் சாதனப் பொருட்கள் என்றும் கூறலாம். உண்மையில் ஆல்கஹால் சருமத்திற்கு ஒரு நல்ல பொலிவைத் தருகிறது.

வையின் ஃபேசியல்:

ஆல்கஹாலை வைத்து ஃபேசியல் செய்வதில் ஒயின் ஃபேசியல் மிகவும் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். மேலும் இதை தலைவலியானது அதிகம் இருக்கும் போது அளவாக அருந்தினால், தலைவலியானது உடனடியாக சரியாகிவிடும்.

ஒயினானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, இது சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும்.

பியர் ஃபேசியல்:

பீர் ஆனது கூந்தலுக்கு மட்டும் பளபளப்பைத் தருவதில்லை, முகத்திற்கும் பளபளப்பைத் தருகிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் பீரை தேன் மற்றும் வினிகருடன் கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகமானது பளபளப்புடன் மின்னும். மேலும் பீரில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின் பி இருக்கிறது. இது முகத்தில் குளிர் இல்லது மழை காலத்தில் வறட்சியால் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, முகத்திற்கு அழகைத் தருகிறது.

வோக்கா ஃபேசியல்:

வோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கும் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்து தான் ஃபேசியல் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேசியல் செய்வது மிகவும் குறைவு. இதற்கு முதலில் புதினா டீ மற்றும் ரோஸ் டீயை தனியாக செய்து கொள்ளவும்.

பின் அதோடு இரண்டு டேபிள் ஸ்பூன் வோக்கா மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து கட்டிகளாக்கி, முகத்தில் தேய்த்துக் கொள்ளவும். இது முகத்திற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.

விஸ்கி ஃபேஸ் பேக்:

விஸ்கி ஒரு ஆன்டிசெப்டிக் பொருள். இது முகத்தில் இருக்கும் சுவடுகளை எளிதில் நீக்கும் திறன் கொண்டது. மேலும் முகத்தில் பரு, கட்டி, கொப்புளம் இருப்பவர்கள், இந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

இதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் விஸ்கியை ஊற்றி முகத்திற்கு தடவ வேண்டும். மேற்கூறிய ஃபேசியல்களை செய்து பாருங்கள், முகமானது பளபளப்புடன் இருப்பதோடு, முகமும் அழகாக இருக்கும்.
 
#28
இளவயதில் வரும் நரைமுடியை போக்க இயற்கை வழிகள்

வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது.

இது பரம்பரை வாரியாக வரும், ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது.

தவிர தலைமுடிக்கு சரியான பராமரிப்பு கொடுக்காததும் முக்கியமான ஒன்று. சிலர் வெள்ளை முடியை மறைக்க ஹேர் டையை பயன்படுத்துவார்கள், ஆனால் இது நிரந்தர தீர்வை கொடுக்காது.

மேலும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். ஆனால் இதற்கு இயற்கையான முறையிலே தீர்வு காணலாம்.

வெந்தயத்தை அரைத்து ஃபேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

ஒரு கப் ப்ளாக் டீயில் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் இரண்டு-மூன்று முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து ஃபேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
 
#29
முடி உதிராமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்துவது எப்படி?

தற்போது யாருக்கு தான் தலைமுடியை இயற்கையாக காய வைப்பதற்கு நேரம் இருக்கிறது. அனைவரது வீட்டிலும் ஹேர் ட்ரையர் உள்ளது. அதே சமயம் பலரும் ஹேர் ட்ரையர் தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும் என்று சொல்வதால், அதைப் பயன்படுத்த அஞ்சுகிறார்கள்.

ஆனால் தலைமுடி உதிர்வதற்கு நாம் அதைத் தவறாக பயன்படுத்துவது தான் முக்கிய காரணம். நமது எந்த தவறான செயல்கள் ஹேர் ட்ரையரால் தலைமுடியை உதிரச் செய்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேர் ட்ரையரின் நுனிப்பகுதி மிகவும் முக்கியமானது என்று தெரியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் அதை நீக்கிவிடுகின்றனர். ஏனெனில் அதிலிருந்து வெளிவரும் சூடான காற்றினை அளவை மிதமாக வெளிவிடுவதால் தான். ஆனால் அது தான் தலைமுடிக்கு நல்லது. இல்லாவிட்டால், மிகுந்த சூடான காற்று தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதித்து, தலைமுடியை வறட்சியடையச் செய்வதோடு, தலைமுடியை உதிரச் செய்யும்.

அதிக சூட்டில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது. எப்போதும் ஹேர் ட்ரையரை குறைவான வெப்பத்தில் தான் பயன்படுத்த வேண்டும். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

தலைமுடியில் இருந்து தண்ணீர் சொட்டசொட்ட ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு நீங்கள் செய்யும் கேடுகளில் ஒன்று. எப்போதும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தும் முன், துணியால் தலைமுடியைத் துடைத்துவிட்டு, பின்பு தான் பயன்படுத்த வேண்டும்.

நேரமாகிவிட்டது என்று அரைகுறையாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தாமல், முழு ஈரமும் போகும் வரை ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டும்.

ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் போது, பிளாஸ்டிக் அல்லது மெட்டல் சீப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தலைமுடி அதிக வெப்பத்தால் கருகும் வாய்ப்புள்ளது. எனவே மென்மையான முட்களைக் கொண்ட சீப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்.
 
#30
கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், சுற்றுசுழலாலும் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூந்தல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை குளியல் எண்ணெய், மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

மூலிகை குளியல் எண்ணெய் :


ஓமம் - இருபத்திஐந்து கிராம்

வெட்டிவேர் – பத்து ஸ்பூன் (நறுக்கியது)

நல்லெண்ணெ- 100 மிலி

முன் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்க்கவும்.

மூலிகை குளியல் பொடி :


சீயக்காய் -நூறு கிராம்

புங்கங்காய் - ஐம்பது கிராம்

வெந்தயம் - நூற்றைம்பது கிராம்

பயத்தம் பருப்பு - நூறு கிராம்

பூலாங்கிழங்கு - நூறு கிராம்

இவைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

இந்த இரண்டையும் வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்


சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். இங்கு முடி வெடிப்பைத் தடுக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் முனையில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஒரு முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

பப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி நாற்பத்தி ஐந்து நிமிடம் ஊற வைத்து அலச, முடி வெடிப்புக்கள் மட்டுமல்லாமல், முடியின் மென்மை மற்றும் வலிமை அதிகரிக்கும்.

பீர் உடலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக முடியின் வெடிப்புக்களைத் தடுக்க பீர் மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அவற்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைமுடியை நீரில் அலசி, பின் ஈரமான தலையில் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து ஒரு மணிநேரம் ஊற வைத்த பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வெடிப்புக்களின்றியும் இருக்கும்.

நாற்பது வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க

நாற்பது வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் என எல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.

இளமையாக இருந்த போது இருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான். எவையென பார்க்கலாம்.

பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள். நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும். ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்தது போலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடைய வாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிக நேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள். கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.

இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை. நாற்பதுகளில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள்.

புரதம்- மீன், நட்ஸ், பீன்ஸ்

ஜிங்க் - இறைச்சி, பீன்ஸ்

இரும்பு - கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள், மீன்

பயோடின்- முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி

செலினியம் - முட்டை மஞ்சள் கரு, பிரேசில் நட்ஸ்
 

Sponsored Links

Top