அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

#41
த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

புருவ முடிகளைத் திருத்துகின்றபோது (த்ரெட்டிங்) கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன. எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் பெற்றிடுங்கள்.
 
#42
முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்கும் இயற்கை வழிமுறை

சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை காண ஆரம்பிக்கும். இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம்.

இந்த பேக் முடியை நீக்குவது மட்டுமின்றி, சருமத்தை பிரகாசமாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள்:

தேன் - இரண்டு டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் பொடி - இரண்டு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின் அவ்விடத்தில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி முற்றிலும் நின்றிருப்பதை காணலாம்.

ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், இந்த முறையை பின்பற்றும் முன் தோல் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் மோசமாவதைத் தடுக்கலாம்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?

கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு நம்முடைய உடல் எடை கட்டுப்படுத்தப்படுகின்றது.

எவ்வாறு வெந்தயம் உங்களின் எடையைக் குறைக்க உதவுகின்றது என்பதைப் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

வெந்தயத்தில் உள்ள கேலக்டோமேனன் உங்களின் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகின்றது. அதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் எரிக்கப்பட்டு உங்களின் உடல் எடை குறைகின்றது.

வெந்தயத்தை உட்கொள்ளும் பொழுது நம்முடைய வயிறு எப்பொழுதும் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றது என்கிற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. அதன் காரணமாக நமக்கு பசி எடுப்பதில்லை.

வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் மலச்சிக்கல் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு எரிக்கப்படுகின்றது.

சூடான கடாயில் வெந்தயத்தை போட்டு வறுத்து ஆற வைத்து நன்றாக பொடி செய்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தி வர வேண்டும். உங்களால் முடியாது எனில், உங்களின் சாப்பாட்டில் இதை கலந்து சாப்பிடலாம்.

இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன. முளை கட்டிய வெந்தயத்தை தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் உண்டு வர உங்களின் எடை கனிசமாகக் குறையும். உங்களூக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே இந்த முறையை முயற்சி செய்து பார்த்து வித்தியாசத்தை உணருங்கள்.

ஒரு உள்ளங்கை நிறைய வெந்தயத்தை எடுத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விட்டு வெந்தயத்தை வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். மேழும் உங்களின் வயிறு நிறைந்தது போல் தோன்றும். அதனால் பசிக்காது. உடல் எடையும் குறையத் தொடங்கும்.

வெந்தயம் மற்றும் தேன் ஆகிய இரண்டும் ஒரு அற்புதமான மூலிகைக் கலவை ஆகும். இவை இரண்டும் உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. வெந்தயப் பொடியில் தேநீர் தயாரித்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வர உங்களின் எடை குறையும்.
 
#43
பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

தற்போது வீதிக்கு வீதி மழைக்கால காளான்களாய் அழகு நிலையங்கள் முளைத்திருக்கின்றன. பெண்களும் இங்கு சென்று ‘பிளீச்சிங்’ செய்துகொள்ள விரும்புகிறார்கள்.

பிளீச்சிங் செய்தால் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் ‘பளிச்’சென்று ஆகும் என்பது பெண்களின் எண்ணம்.

ஆனால் உண்மையில் பிளீச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். அவை பற்றி...

பிளீச்சிங் செய்தால் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு, பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள வேதியியல் பொருட்கள்தான் காரணம்.

எனவே அழகு நிலையங்களில் வேதிப்பொருட்களைக் கொண்டு பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் கொண்டு பிளீச்சிங் செய்து, பின் பால் அல்லது தயிர் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

அடிக்கடி பிளீச்சிங் செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படக்கூடும். இதற்கு, பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சிவிடுவதுதான் காரணம்.

பிளீச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும்போது ஒருவித எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடும். இது சாதாரணமாக இருந்தாலும், சருமத்துக்கு நல்லதல்ல.

எனவே, வேதிப்பொருட்கள் மூலம் பிளீச்சிங் செய்வதை எச்சரிக்கையோடு தவிர்த்துவிடுங்கள்.
 
#44
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு நிம்மதியாக இருப்பதில் தான் அழகு உள்ளது. பெண்கள் அழகான பெண்களை பார்க்கும் போது தான் அப்படி அழகாக இல்லை என்று தங்களை மட்டம் தட்டி கொள்வார்கள். இப்போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

உடலெங்கும் நிறமாற்றம் அடைந்த திட்டுத்திட்டாக புள்ளிகள் ஏறக்குறைய அனைத்து பெண்களுக்குமே வரக்கூடியது. இது கொழுப்பு செல்கள் சிதைவதால் திசுக்களில் உண்டாகும் பாதிப்பாகும். இதனை சரி செய்ய நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து உபயோகிக்கலாம். அல்லது தினமும் விட்டமின் ஈ எண்ணெயை உபயோகித்தால் நல்ல பலன் கிட்டும்.

பரு ஒரு பொதுவான பிரச்சனைதான். வளரும் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைதான் இது. இது தழும்புகளை குறிப்பாக அதிகம் தொடவோ தேய்க்கவோ அல்லது கிள்ளவோ செய்யும்போது ஏற்படுத்தும். அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் அவற்றின் கடுமை குறைந்து அதனை குணப்படுத்தும்.

கண்களில் ஓரத்தில் வரும் சுருக்கங்கள் முதுமை தொடங்கும் காரணமாக ஏற்படுவது. இது மிகவும் சென்சிட்டிவான பகுதி என்பதால் அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே ஒரு நல்ல கண் க்ரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வந்தால் இந்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும். வெள்ளரிச் சாறு போன்ற இயற்கை வைத்தியங்கள் இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் போக்கும் என்பதால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

கூந்தல் வெடிப்பு அதிக முடிகளில் ஏற்படும் போது வெளிப்படையாகத் தெரியக்கூடியது. எனினும் முட்டையின் வெள்ளைக் கருவை முடிகளில் பயன்படுத்தினால் இந்த பிரச்னையை கொஞ்சம் சமாளிக்கலாம்.
 
#45
சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணை

உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.

தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்.

தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.

ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

விளக்கெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.
 
#46
குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்

குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.

குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.

குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.

கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.

குளிர்காலம் உடலை குளிர்ச்சிப்படுத்தினாலும் சருமத்தை வறட்சிக்குள்ளாக்கி விடும். முகப்பொலிவுக்கும் பங்கம் ஏற்படுத்திவிடும். முகத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் பசை தன்மைதான் சருமத்திற்கு பாதுகாப்பு கவசம். குளிர்ச்சியான காற்று வீசும்போது எண்ணெய் பசை நீங்கி சருமத்தில் வெடிப்புகள் ஏற்படத்தொடங்கி விடும். அதனால் சருமம் உலர்வடைந்து, அசவுகரியங்களை சந்திக்க நேரிடும். பெரும்பாலானவர்களுக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகக்கூடும். ஈரப்பதத்தை தக்கவைத்தால்தான் சருமம் வறட்சிக்குள்ளாவதை தவிர்க்க முடியும்.

அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்:

குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்குவதில் எண்ணெயின் பங்களிப்பு முக்கியமானது. தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து வருவதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை சீராக வைக்கலாம்.

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய பேர் சூடான நீரில் குளிக்க விரும்புவார்கள். ஆனால் சூடான நீர் சரும வறட்சியை அதிகப்படுத்தவே செய்யும். சூடு நீங்கி மிதமான பின்னரே குளியலுக்கு பயன்படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் நிறைய பேர் குடிநீர் பருகும் அளவை குறைத்துவிடுவார்கள். அது தவறான பழக்கம். தாகம் இல்லாவிட்டாலும் வழக்கமாக பருகும் தண்ணீரை பருகி விட வேண்டும். இல்லாவிட்டால் சரும வறட்சிக்கு அது காரணமாகிவிடும்.

குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். அது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதேவேளையில் எண்ணெய் பசை மிகுந்த மாய்சுரைசரைப் பயன்படுத்தக்கூடாது. கிரீம் அல்லது ஜெல் வகை மாய்ஸ்சுரைசர் நல்லது.

குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சருமம் மென்மை தன்மையை இழந்து வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளும். ஆகவே அவ்வப்போது சருமத்தை ‘ஸ்கரப்’ செய்ய வேண்டும். அதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

குளிர்காலத்தில் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்ய மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். வாரம் ஒருமுறையாவது தினமும் இரவில் படுக்கும் முன்பாக, ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அது சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும். தேக ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். உடலில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்யும்.

குளிர்காலத்தில் சாப்பிடும் உணவு விஷயத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும். மீன் உள்ளிட்ட ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
 
#47
மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம்

கோடைகாலத்தில் அதிகபடியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல் மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும்.

அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசை இருந்தால், கூந்தலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரித்து வரவேண்டும்.

இப்போது எளிய முறையில் கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை பார்க்கலாம்…

ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாவிட்டால் மழை காலத்தில் அதிகபடியாக ஈரப்பசையினால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே வாரத்திற்கு மூன்று முறை ஷாம்பு போட்டு அலசினால், கூந்தலில் தூசுபடிவதை தவிர்க்கலாம்.

அப்படி பயன்படுத்தும் ஷாம்பு, மழை காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இவை இன்னும் கூந்தலில் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.

அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், சீகைக்காயை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது.

மேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

அல்லது இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனிங், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.
 
#48
வாகனத்தில் செல்பவர்களுக்கு சரும பராமரிப்பு

தற்போது பெண்கள் கூட அலுவலகத்திற்கு பைக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி பைக்கில் செல்பவர்கள், தவறாமல் சருமம் மற்றும் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.

ஏனெனில் பைக்கில் செல்பவர்கள் காற்று, சூரிய வெப்பம், மழை என்று எந்த காலநிலையிலும் ஓட்டுவதால், அவர்கள் ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பைக்கில் பயணிப்பவர்கள் முகப்பரு, பிம்பிள், பழுப்பு நிற சருமம் என்று பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

அதுமட்டுமின்றி அவர்களது கூந்தல், மென்மையிழந்து வறட்சியாக இருக்கும். பைக்கில் பயணம் செய்பவர்கள் கீழ்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் சருமத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

கிளின்சிங்கை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் அது சருமத்துளைகளைத் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு ரோஸ் வாட்டர் அல்லது பாலை, பஞ்சுருண்டையில் நனைத்து, முகம் மற்றும் கைகளை துடைக்க வேண்டும். இதனால் சருமம் மாசுபடுவதை தவிர்க்கலாம்.

கிளின்சிங்கை தொடர்ந்து டோனிங் செய்ய வேண்டும். டோனிங் செய்வதால் முகப்பரு நீங்குவதோடு, திறந்த சருமத்துளைகள் மூடும். அதற்கு பழங்கள் அல்லது காய்கறிகளின் சாற்றினை, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பெண்கள் பைக் ஓட்டும் போது சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது. குறிப்பாக கண்கள், முகம், கழுத்து, முழங்கை, காது மற்றும் பாதங்களுக்கு மறக்காமல் தடவ வேண்டும். இதனால் சூரியனின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். சன் ஸ்க்ரீன் தடவிய பின்னர், ஃபௌண்டேஷனை ஒரு கோட்டிங் கொடுக்க வேண்டும்.

பைக் ஓட்டும் போது, காற்று மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, கை மற்றும் முகத்திற்கு ஸ்கார்ப் கட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பைக் ஓட்டும் போது, தூசிகள் அதிகம் சருமத்தில் பட்டால், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே முகத்திற்கு துணியையும், கைகளுக்கு மறக்காமல் கிளவுஸையும் அணிந்து கொள்ள வேண்டும்.

பைக் ஓட்டும் போது ஹெல்மெட் போடும் முன், தலையில் துணியை கட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் பைக் ஓட்டும் போது முடியை விரித்துக் கொண்டு இல்லாமல், கூந்தலை கட்டிக் கொண்டு, துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம்.

பைக் ஓட்டியப் பின், தவறாமல் தலையை சீவ வேண்டும் மற்றும் முகத்தை மூன்று-நான்கு முறை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
#49
இயற்கை முறையில் சரும பராமரிப்பு

1.வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும் என்று பாட்டிகள் சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

2.முகத்தை கழுவுதல் :

முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

3.ஆவிப் பிடித்தல் :

ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்துதான், அழகைப் பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

4.பழங்கள் :

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ரா பெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

5.சூப்பர் மாய்ஸ்சுரைசர் :

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

6.கடுகு எண்ணெய் :


கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும். இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.
 
#50
உங்கள் சருமத்தை பாதுகாக்கும் ஐந்து பொருட்கள்

1. சருமப் பாதுகாப்பிற்கு மிக அடிப்படையான விஷயம் தான் க்ளென்சிங். இது சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி எண்ணெய்ப்பசையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தும் விட்டமின்கள் மற்றும் சன்ஸ்கிரீன் போன்றவை சருமத்துள் ஊடுருவிச் சென்று ஊட்டமளிக்கத் துணைபுரிகின்றது.

எல்லா க்ளென்சரும் ஒரே மாதிரியானவை என்று சொல்லிவிட முடியாது. பேசியல் க்ளென்சர் சோப் இல்லாததாக இருக்க வேண்டும். உங்களுடையது மிக உலர்ந்த சருமமாயின் கண்டிப்பாக நீங்கள் க்ரீமி க்ளென்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.

உலர்ந்த மற்றும் எளிதில் பாதிப்படையக்கூடிய சருமமாக இருந்தால், க்ரீமி க்ளென்சராக இருந்தாலோ இல்லாவிட்டாலோ கண்டிப்பாக ஆல்கஹால் கலந்ததாக இருக்கக் கூடாது. எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் ஆல்பா ஹைட்ராக்சி கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

2.
மனித உடல் நீரினால் நிரப்பப்பட்டது. நமது உடற்செல்கள் ஊட்டப்பொருட்களை உறிஞ்சிக் கொள்வதற்கும் ஜீரண நடவடிக்கைகளை சீராக்குவதற்கும் நீர் மிக முக்கியமானது. சுவாசிக்கும்போதும் வியர்வை வெளியேறும்போதும் செல்களில் உள்ள நீரின் அளவில் இழப்பு ஏற்படுகிறது.

இந்த இழப்பை ஈடுசெய்ய நாம் தொடர்ச்சியாக நீர் அருந்த வேண்டிய தேவை உள்ளது. நீர் சருமத்திலுள்ள அழுக்குகள் மாசுக்களை அகற்றி பருக்கள் ஏற்படுவதைத் தடுத்து சருமத்தை மென்மையாக்குகிறது. சருமத்தை ஊட்டமுள்ளதாக வைத்திருக்க நாளொன்றிற்கு கட்டாயமாக இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும்.

3. கொழுப்பு அமிலங்கள் இல்லாவிட்டால் சருமக் கலன்கள் உலர்ந்து கறைகள் படிந்ததாய்க் காணப்படும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் சருமத்தைப் பொலிவுறச் செய்கின்றன. ஒமேகா-6 கொழுப்பு அமிலம் கோழி இறைச்சி, தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றில் அதிகம் உள்ளன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலமானது சிலவகை மீன்கள், சூரியகாந்தி எண்ணெய், கிட்னி பீன்ஸ், வால்நட்ஸ் மற்றும் ஸ்பைனாக் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. சில சரும நிபுணர்கள் காமா லினோலினிக் ஆசிட்(ஜிஎல்ஏ) இணையும் தற்போது பரிந்துரை செய்து வருகின்றனர். இந்த கொழும்பு அமிலமானது தாவர எண்ணெய்யில் அதிகம் காணப்படுகிறது.

4. சன்ஸ்கீரின்களை நீங்கள் உபயோகிக்கும் பொழுது சருமப் புற்றுநோய்களிலிருந்தும் ஏனைய சரும நோய்களிலிருந்தும் உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாப்பதோடு சூரிய ஒளியினால் உங்கள் சருமம் வயதான தோற்றத்தை விரைவில் பெறுவதிலிருந்தும் பாதுகாப்புச் செய்கின்றீர்கள்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது நிறமாற்றம், சுருக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகையில் சன்ஸ்கீரின் யூவி கதிர்களை ஊடுருவ விடாமல் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

5. அன்டி ஆக்சிடன்ட்ஸ் :

கார்டியோவஸ்குலார் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பிற்கு அன்டியக்சிடன்ட்ஸ் பயன்படக்கூடிய ஒன்றாக நம்பப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், கடல் உணவு மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படுகிறது.
 

Sponsored Links

Top