• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்....10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
சென்ற பதிவிற்கு கருத்து தெரிவித்த தோழமைகளுக்கு நன்றி, இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்!!


eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்...10
........................................................................


சாதனாவின் தந்தையிடம் பேசி விட்டு வந்தவள், மாறனை கொஞ்சநேரம் காத்திருக்க சொல்லிவிட்டு ரவுண்டஸ் சென்றாள், மாறன் வராண்டாவில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராகவ் அவனை கட்டி அணைத்தான்,


"டேய் விடுடா! என்ன ஆச்சு?உங்க மாமா மாப்பிள்ளையை மன்னிச்சு
ஏத்துக்கிட்டாரோ?..


ஆமாண்டா! பாரதி லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதுல மனுசன் வாயடைச்சு போயிட்டாரு, கொஞ்ச நேரம் நடையா நடந்துகிட்டு இருந்தாரு , அப்புறம் குழந்தையை வாங்கி கொஞ்சிட்டு இருக்காரு, அத்தை கண் கலங்கிட்டாங்க! சாதனாவை சொல்லவே வேண்டாம் , அவளுக்கு அவ்வளவு சந்தோசம், எனக்கும் இப்பதாண்டா மனசுல இருக்குற பாரம் குறைந்து, நிறைவா இருக்கு! அதான் பாரதியைப் பார்த்து தேங்க்ஸ் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்! என சொன்னவன், பின் மிருதுவான குரலில் "சத்தியமா சொல்றேன்டா எல்லோரும் தேவதைகிட்ட வரம் தான் கேட்பாங்க! ஆனா உனக்கு தான் தேவதையே வரமா கிடைச்சு இருக்காங்க, என்ன பொண்ணுடா ... சான்சே இல்ல! ரெண்டு நாள் பழகின சாதனாவுக்காக இவ்வளவு மெனக்கெட்டு பண்றவங்க, உனக்காக என்ன வேணா செய்வாங்க, நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா இப்படி ஒரு நல்ல மனைவி உனக்கு கிடைச்சிருக்காங்க! என அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இவர்களை நோக்கி வந்தாள் பாரதி


நானோ உன்னை வேதாளம்ன்னு சொல்றேன், இவனோ தேவதைன்னு சொல்றான், நிஜமா நீ யார்? என்பது போல் ஆராய்ச்சி பார்வையோடு அவளைப் பார்த்தான் மாறன்.


ராகவோடு சென்று சாதனாவின் அறையில், எல்லோரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தனா், ராமலிங்கம் சாதனாவிற்கு நன்றி தெரிவித்தார் , அவர் மனைவியோ அவள் கைகளை
எடுத்து கண்ணோடு ஒற்றிக் கொண்டார், பின் சந்தோஷமான மனநிலையோடு வீட்டுக்கு கிளம்பினார்கள் இருவரும்.


இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளம் ஜோடியைப் பார்த்துப் பூரித்துப் போன வானமகள், மழைத்துளிகளாய் தன் ஆசீர்வாதத்தை அனுப்ப...

தன் மேல் விழுந்த துளிகளை பார்த்து, ரசித்தவள்," சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ! மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ! என பாடிக்கொண்டு வந்தாள்..


யாரோ சாட்டைல அடிக்கிற மாதிரி மழை என்மேல கொட்டுது! நீ அதைப் பாட்டு பாடி ரசிக்கிறயா? எனக்கேட்டான் மாறன்


நான் உங்க முதுகுக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு இருக்கேன், அதனால என்னை யாரும் சாட்டையில் அடிக்கல, உங்களால பைக் ஓட்ட முடியலைன்னா எங்கயாவது நிறுத்துங்க!


ஏய் அப்ப நீ என்னை குண்டுண்ணு சொல்றியா? நீ தான் குண்டு பூசணிக்கா! குள்ள கத்திரிக்கா! என் மொத்த முதுகும், உன் ஒத்த கையை மறைக்கவே பத்தாது! நீ என் முதுகுக்குப் பின்னால முழுசா ஒளிஞ்சிகிட்டேன்னு பொய் சொல்றே…! என நக்கல் அடித்தவன் மண்டையில் நறுக்கென்று குட்டினாள் பாரதி..


" ஸ்ஸ்! வலிக்குது! " என தலையை தடவிக் கொடுத்தவன்,ஒரு பேருந்து நிறுத்த நிழல் குடையின் கீழ் வண்டியை நிறுத்தினான்.

மின்னல் கீற்றுகள், உடைத்து விட்டதால் அறுந்து விழுந்த மேகப்பெண்ணின் ஒட்டியானத்தில் இருந்து சிதறிய முத்துமணிகளாய், சிந்திக் கொண்டிருந்த மழைத்துளிகளை ரசித்துக்கொண்டிருந்தாள் பாரதி


ஏதோ சொல்ல அவளிடம் திரும்பியவன், அவளின் ரசனையான முகம் பார்த்து அமைதியாக நின்றான்! அப்போது அவள் நெற்றியின் மேல் ஒற்றை துளி ஒன்று விழுந்தது, அது அவள் மூக்கு, உதடுகளை கடந்து, சங்குக் கழுத்தில் சற்று இளைப்பாறிவிட்டு, கீழே இறங்கத் தொடங்க.. அதுவரை அந்த துளியை பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்! அந்த கணம் அவன் மனதோடும் ஏதோ மழைத்தூறல்! மழைக்கு ஒதுங்க பலர் அங்கு வர,பாரதியின் மிக அருகே ஒட்டி,நெருக்கமாக நின்றான் மாறன்! மழையின் குளுமையை தாண்டி மனதோடு ஏனோ வெப்பம், அந்த வெட்பத்தின் நுட்பத்தை, அனுபவித்துக் கொண்டிருந்தவனை கலைத்தது பாரதியின் குரல்


"போலாமா?" என அவள் கேட்க..


எங்கே? என அவள் கேள்வி விளங்காமல் கேட்டான் மாறன்.


மழை விட்டுடுச்சு! வீட்டுக்கு போலாமான்னு கேட்டேன்


"ஓ! என சுதாரித்தவன், தன் வண்டியை எடுத்தான்.


வீட்டின் தோட்டத்தில் இருந்த சிறு புல்வெளியில், உன்னோடு கலக்கமாட்டேன் என மண்ணோடு கோபம் கொண்ட மழைத்துளிகள் சில முகாமிட்டிருந்தன, வண்டியை விட்டு இறங்கியவள், வழக்கம்போல் தன் வேக நடை நடக்க, ஈரத்தில் வழுக்கி விட்டது.. கீழே விழப் போனவளை வலுவான இரு கரங்கள் தாங்கிக் கொண்டன..


தன்னை கையில் ஏந்தியவனை பார்த்தவளுக்கு ஏனோ விலக தோன்றவில்லை! அவளை கைகளில் தாங்கியவனுக்கோ விடுவிக்கும் எண்ணமில்லை..


சிமிட்ட மறந்த மாறனின் கண்கள், காரிகையின் முகத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, உதடு என்னும் தூரிகை கொண்டு, அந்தப் பூ முகத்தில் முத்த ஓவியம் தீட்ட,உள்ளே ஒரு எண்ணம் தோன்ற, சட்டென அவள் இதழ் நோக்கி குனிந்தான் அந்த ஓவியன், இமை மூடிக் கொண்டாள் காரிகை..


"என்னடா நடக்குது இங்கே"! என கேட்பதுபோல் இடிச் சத்தம் முழங்கி, அவர்களின் மோகனத்தை கலைத்தது, சட்டென அவளை விடுவித்தவன், தன் தலையை அழுந்தப் கோதியபடி விறுவிறுவென வீட்டிற்குள் சென்றான்..


தனக்குள் புன்னகைத்துக் கொண்ட பாரதியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.



அன்று சமையல் அவள் முறை என்பதால், குளித்து உடை மாற்றியவள் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள், அப்போது அங்கே வந்த மாறன்," நான் வேணா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?" என மிக மிருதுவாக கேட்டான்.


அவனை ஆச்சரிய பார்வை பார்த்தவள், "என்ன புதுசா? எனக் கேட்டாள்.


அது ஒண்ணும் இல்லை ,ரெண்டு நாளா நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறாய் என நான் பார்த்தேனே! அதான் கேட்டேன் என்றான்


நான் கஷ்டப்பட்டு செய்யலை, ரொம்ப ரொம்ப இஷ்டப்பட்டு செய்றேன், எனக்கு என் டாக்டர் வேலை ரொம்ப பிடிக்கும், அதுவும் முதல் முறையா அம்மாவோட கருவறை விட்டு வெளி உலகத்துக்கு வர குழந்தையை கையில் ஏந்தும் போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கே, அதுக்கு ஈடே இல்லை! இந்த ஒன்றரை வருஷத்துல எத்தனையோ பிரசவங்களை பார்த்துட்டேன், ஒவ்வொரு முறையும் அந்த குழந்தைகளோட நானும் புதுசா பிறக்குற மாதிரி தான் ஃபீல் பண்றேன்! என ரசித்து சொல்ல.. அவளை ஆசையோடு பார்த்தான் அவனும்..


பிசைந்த மாவை பாத்திரத்தில் அவள் எடுத்து வைக்க, அதைப்பார்த்து,' என்ன மாவு மேல கண்ணு, மூக்கு மீசையெல்லாம் இருக்கு, ஏதோ முகம் மாதிரி பிசைத்து வச்சிருக்க?


அதுவா அன்னைக்கு நீங்க சொன்னீங்களே, சப்பாத்தி சாப்டா இல்ல.. என்னை மாதிரி மாவு பிசஞ்சு சுடு, அப்ப தான் நல்லா வரும்னு! அதான் உங்கள மாதிரி செஞ்சு வச்சு இருக்கேன்" என்றாள்..


"அடிப்பாவி! நான் பிசையற மாதிரி சாப்டா, நல்லா பிசைய சொன்னா, கண்ணு ,மூக்கு, மீசையெல்லாம் வெச்சு என் முகம் மாதிரி செஞ்சி வச்சிருக்கே! அதாவது அழகா இருக்கா? அதுவும் இல்லை! என்றான்..


உங்கள மாதிரி இருந்தா, எப்படி அழகா இருக்கும்? என புருவம் உயர்த்தி அவள் கேட்டாள்..


"ஏய்! நான் அழகா இல்லையா? கைகளைக் கட்டியபடி சுவரில் சாய்ந்து, அவன் குழைந்த குரலில் கேட்க..


அவன் எதிரில் வந்து நின்றவள் , அவனை நிமிர்ந்து , நிதானித்து, ரசித்துப் பார்த்து, "சுருள் சுருளான கேசம்! அடர்ந்த புருவம்! தீட்சண்யமான கண்! முறுக்கு மீசை! மாநிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம் "என பார்க்க... என சொல்லிவிட்டு பாதியில் நிறுத்த..


ஏய்! வேதா.. சொல்ல வந்ததை முழுசா சொல்லு!.. சொல்லு.. பார்க்க எப்படி இருக்கேன்?



ரமணிச்சந்திரன் மேடம் கதைகள்ல வர ஆண்டி ஹீரோ மாதிரியே இருக்க விக்ரமா... என்றாள் ரசனையுடன்..


அவளை முறைத்துப் பார்த்தவன், எல்லாத்தையும் ரசித்து சொல்லிட்டு, கடைசியில ஆன்ட்டி ஹீரோன்னு சொல்றியே?


ஆன்ட்டி ஹீரோன்னு தானே சொன்னேன், ஆண்டியோட ஹீரோன்னா சொன்னேன்! என சிரித்தபடி சொன்னவளை, அவன் பிடிக்க முயல அவன் கைகளில் சிக்காமல் தப்பி ஓடினான் அவள்..


நீ விட்டா அப்படியும் சொல்லுவ.. ரவுடி! என புன்முறுவலோடு தனக்குள் சொன்னான் மாறன்..



"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! நீருக்குள் மூழ்கிடும் தாமரை!

சட்டென்று மாறுது வானிலை! பெண்ணே உன் மேல் பிழை"!


என இரவின் நிசப்தத்தில், எங்கோ தூரத்தில் ஒலித்த பாட்டுச்சத்தம் அவன் செவிகளுக்குள் தேன் ஊற்ற, அருகில் நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளை ரசித்துக் கொண்டிருந்தான் , இருவரின் பெற்றோர்களும் ஊருக்கு சென்ற பின், அவளும் அவள் அறைக்கு மாறவில்லை! அவனும் அவளை மாறச் சொல்லவில்லை! அது ஏன் என்று இருவருக்குமே தெரியவில்லை!

மாறனுக்கு இப்போதெல்லாம் அவன் அறையில் வீசும் அவள் வாசம் மிகப் பிடித்திருந்தது! இன்று அவன் மனதிற்குள் எழுந்த நுண்ணிய உணர்வுகளின் பெயர் அவனுக்கு தெரியவில்லை, ஆனால் அந்த உணர்வுகள் மிக பிடித்திருந்தது..

பனி பொழியும்........
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
@Tamilchelvi ஓ, கோடைக்காலம் முடிந்து வாடைக்காற்று வீசப் போகிறதா? சூப்பர்👏👏👏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top