• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...11..(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
தாமதத்துக்கு மன்னியுங்கள், லேட்டா வந்ததுக்கு டிரிட்டா இந்த எபியில ஒரு கேரளா ட்ரிப் ...போலாமா?.. கொஞ்சம் பெரிய எபி.. இரண்டா பிரிச்சு போட்டு இருக்கேன்...

கஷ்டப்பட்டு ரொமான்ஸ் எழுதி இருக்கேன்! படிச்சு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்க....
ஹேப்பி ஹேப்பி ரீடிங்...:love::love:

eiQNZBU76529.jpg


அவனும் நானும் அனலும் பனியும்...11.1


அந்த ட்ராவல்ஸ் பேருந்தின் உள்ளே தமிழ் குத்துப்பாட்டு, நடனம் எனஅதகளப்பட, வெளியே காற்றெங்கும் மலையாளம் மணமணத்தது!, கடவுளின் தேசம் என கொண்டாடப்படும் மலை ஆளும் தேசமான கேரளாவுக்குள் பிரவேசித்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து..


மாறனின் அலுவலகத்திலிருந்து இன்பச்சுற்றுலா ஏற்பாடாகியிருந்தது, துணைவிகளோடு வந்திருந்தனர் சிலர், துணைவிகளின் தொல்லையில் இருந்து தப்பித்து வந்திருந்தனர் சிலர், இதில் மாறன் முதல் ரகம், புதிதாய் மணமானவன் என்பதால் தப்பிக்க முடியவில்லை அவனால்..

மகேந்திரனோ இரண்டாம் ரகம், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் வரவேண்டும் என நிர்வாகம் கண்டிப்புடன் கூறியதாக பக்கம், பக்கமாக வசனம் பேசி, நீ இல்லாமல் நான் போக மாட்டேன்! எனக்கு டூரும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! என நீலிக்கண்ணீர் வடித்து, நன்றாக நடித்து, தன் மனைவி வாயாலேயே ,"பரவாயில்லை நீங்க சந்தோசமா போய்ட்டு வாங்க" ! என்று சொல்லும்படி செய்து விட்டு வந்திருந்தான் அந்த மகாநடிகன்.. அதனால் அவன் அலப்பறைகள் எல்லையற்று இருந்தன..


அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியை அடைந்தனர் அவர்கள், மலையின் மடியில் இருந்து தவறி, நீர் துளிகளாய் சிதறி விழுந்த, அருவி என்னும் குழந்தை, வெள்ளமென தவழ்ந்து, நிலமென்னும் மாற்றாந் தாயை நோக்கி ஓவென பேரிரைச்சலோடு வேகமாய் ஓடியது... அருவியின் சாரலில் நனைந்தபடி அதை ரசித்துக்கொண்டிருந்தாள் பாரதி, சாரல் அதிகமாக இருந்ததால் கிட்டத்தட்ட நனைந்தே விட்டாள் அவள், அதை கவனித்த மாறன் தனது ஓவர் கோட்டைக் கழட்டி அவளிடம் கொடுக்க, புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள், ஆசையாய் அணிந்து கொண்டாள், அதில் அவன் வாசம் வீசியது, அந்தக் கோட்டில் பட்டுத் தெறிக்கும் துளிகள் கூட பூக்களாய் மாறியது போன்ற ஒரு மாயை தோன்றியது அவளுக்கு, பின் மாறன் அவளுக்கு அருகில் வந்து,சாரல் அவள் மேல் அதிகம் படாதவாறு மறைத்து நின்றான்..


அந்த இளம் ஜோடியை, ஒரு ஜோடி கண்கள் வன்மத்தோடு பார்த்தது, அந்தக் கோபப் பார்வைக்குரிய பாவை சுபாதான்! அவளால் மாறனின் திருமணத்தை, அவன் மாற்றங்களை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அமெரிக்காவில் அவர்கள் பணியாற்றிய போது நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தனர், அப்போது சுபா அவனை ஒட்டி நின்று தோள் மீது சாய முயன்றபோது, அவன் நாசுக்காக நகர்ந்து இருந்தான், அவள் நெருங்கி பேச முயலும் போதெல்லாம் அவன் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை! அவனின் அந்த தன்மைதான், சுபாவை அவன் பால் ஈர்த்தது, அவளிடமிருந்து காதல் இல்லை! அவன் கர்வத்தை அடக்கி, அவனை அடிபணியச் செய்து, அவளை ஆராதிக்க செய்ய வேண்டுமென்ற ஆதிக்கம்தான் அவளுக்கு, ஆனால் அது நிறைவேறாமல் போனது, அவளின் அழகுக்கு கொஞ்சமும் ஈடற்ற பாரதி மேல், அவன் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து ,அவளுக்கு கோபம் தான் வந்தது,


"இப்ப என்ன இந்த சாரல் பட்டு அவள் கரைந்து போய்விட போறாளா? எதுக்கு இப்படி அணை கட்டி நிற்கிறான்? என மனதோடு எழுந்த கேள்வியை கேட்க முடியாமல் உள்ளே மருகினாள் சுபா..


பல வியூ பாய்ண்ட்களில் வண்டியை நிறுத்தி, அங்கே கொட்டிக் கிடந்த இயற்கையின் அழகை கண்களால் பருகி ரசித்தனர், அந்த சென்னைவாசிகள்.


மகேந்திரன் அண்ட் கோவின் சேட்டைகளை கண்டு, அங்கே வலம் வந்த குரங்குகள் கூட," இவனுக நமக்கே டப் கொடுப்பாங்க போல!" என எண்ணிக் கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி ஓடின...


மதியம் 12 மணிக்கு ஆலப்புழா படகுத் துறைக்கு வந்தது அந்தக் கேங்..


மாறனை தனியே அழைத்த மகேந்திரன், "உங்க இரண்டு பேருக்கும் நாங்க லக்சுரி பேக்கேஜ் போட் புக் பண்ணி இருக்கோம், இது ராகவின் அன்பு பரிசு! அவனால் வர முடியாதால் இந்த ஏற்பாட்டை பண்ணியிருக்கான், இப்ப போட் ஏறினா காலைல 9 மணிக்கு திரும்ப இங்க கொண்டு வந்து விடுவாங்க, சந்தோஷமா என்ஜாய் பண்ணு! என அவனைப் பார்த்து கண்ணடித்தான் மகேந்திரன்


"இல்லடா! அதெல்லாம் வேண்டாம், நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஒரே போட்ல போலாம்!" என மாறன் தயங்கியபடி சொல்ல...


அட மடையா! எங்க கூட நீ எப்ப வேணா ட்ரிப் வரலாம், ஆனா இந்த மாதிரி வாய்ப்பு உனக்கு மறுபடியும் அமையாதுடா, டீலக்ஸ் போட்.. ஏகப்பட்ட காசு... என்ஜாய் பண்ணு மச்சி, நாங்க இன்னும் இரண்டு போட் புக் பண்ணி இருக்கோம்! ஒண்ணு பொண்ணுகளுக்கு ,இன்னொன்னு பசங்களுக்கு, அதுவும் என்னை மாதிரி பேச்சுலர் பசங்களுக்கு தான், உன்னை மாதிரி பொண்டாட்டியை கூட கூட்டிட்டு வர்றவங்களுக்கு அதுல இடமில்லை! என காலரைத் தூக்கிவிட்டபடி சொன்னான் மகேந்திரன்..


யாரு நீ பேச்சுலரா... நாலாவது பட்டனுக்கு மேல சட்டை போட முடியாமல் தொந்தி இடிக்குது! முன்னால முடி எல்லாம் கொட்டி வழுக்கை ஆகுது! பெத்த பொண்ணு ஸ்கூல் போகுது!நீ பேச்சிலர்னு பிலிம் காட்டுறியா?..


ஆமாடா! இந்த இரண்டு நாள் நான் பேச்சிலர் தான் !இந்த ரெண்டே நாள்ல ஒரு கேரளத்து மோகினியை கரெக்ட் பண்ணிக் காட்டுறேன் பார்க்கறியா? பார்க்கறியா? என மகி சவால் விட..


நான் ஏண்டா பார்க்கிறேன், என் தங்கச்சி ராஜிக்கு ஒரு போன் போட்டா அவ வந்து பார்த்துப்பா! வேணும்னா ஒண்ணு செய்யறேன், இப்பவே சர்ப்ரைஸ் என்று சொல்லி காலையில அவங்களை இங்க வர வச்சு காட்டவா? என புருவம் உயர்த்தி அவன் கேட்க..


மீ பாவம் விட்டுடுடா... என சமாதானத்துக்கு வந்தவன், மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பசங்களுக்கான பிரத்தியேகமான படகை நோக்கிச் சென்றான்..


சுபா உள்ளிட்ட பெண்கள் எல்லோரும் இன்னொரு போட்டில் ஏறிக் கொண்டிருந்தனர், பாரதி எப்போது அதற்கு வருவாள் என சுபா பார்த்துக்கொண்டிருந்தாள்..அவளுக்கு மகியின் ஏற்பாடு தெரியாது.. தெரிந்து இருந்தால் அவன் மண்டையை உடைத்து இருப்பாள்.


அருகே வந்த மாறனை பார்த்த பாரதி, நின்று கொண்டிருந்த படகுகளை பார்த்த படி,நாம எந்த படகில் போகப்போறோம்? எனக் கேட்க… அதற்கு முதலில் இருந்த ஒரு படகை கைகாட்டினான் மாறன்


"வாவ்! போட் ரொம்ப அழகா இருக்கு! நாம் எத்தனை பேர் இதுல போகப் போறோம்! பாரதி ஆர்வமாய் கேட்டாள்..


"இரண்டு பேர் மட்டும்!


இரண்டு பேர் மட்டும் தான் என்றால் நீங்களும் நானும் மட்டுமா ? கொஞ்சம் தயக்கத்தோடு கேட்டாள் பாரதி!


தலையை மட்டும் ஆட்டிய மாறன் படகை நோக்கி போக..இனம் விளங்கா உணர்வோடு அவனை பின் தொடர்ந்து போனாள் பாரதி.


"வெல்கம் டு அவர் போட்.." என அந்த படகின் கேப்டன் பூங்கொத்தை கொடுக்க, கூட இன்னொருவரும் இருந்தார், ஒருவர் படகினை ஒட்டுவதாகவும், இன்னொருவர் சமையல் மற்றும் இன்ன பிற வேலைகளை கவனித்துக் கொள்வதாகவும் சொன்னார்கள், அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த படகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர், லாபி, டைனிங், பெட்ரூம்,கிச்சன் என ஒரு மினி வீடாகவே இருந்தது அந்த போட்.. அறையும் அழகாக, நட்சத்திர ஓட்டலில் தகுதியோடு இருந்தது..


வெல்கம் ட்ரிங்க்காக பழச்சாறு கொடுக்கப்பட்டது, படகில் சிறிது தூரம் சென்று, மீன பள்ளி காயல் என அழைக்கப்படும் சினிமா சூட்டிங் ஸ்பாட்டை அடைந்தனர், கேரள புட்டு,கடலைக் கறி, மீன் வறுவல், என விதவிதமாக படகில் சமைத்ததை அங்கே வைத்து சாப்பிட்டனர்..


மஞ்சள் வெயில் மாலையிலே, நீலக்கடல் நடுவிலே, அசைந்தாடும் படகிலே சுற்றியுள்ள இயற்கையை ரசிப்பது தான் எத்தனை அற்புதமானது.. பாரதியும் மாறனும் ஆலப்புழாவில் அழகினை ரசித்து கொண்டிருந்தனர், அங்கே இருக்கும் மக்களுக்கு மிதிவண்டி, டூ-வீலர் ,ஃபோர் வீலர் போன்ற எல்லா வாகனமும் படகு தான், அவரவர் வசதிக்கேற்ப சின்னதும் பெரிதுமாய் படகுகளை வைத்திருந்தனர், பள்ளி, வங்கி என பொது இடங்கள் கூட படகில் செல்வதாகவே இருந்தது, எல்லா இடங்களிலும் பார்க்கிங் ஏரியா போல படகுகளை நிறுத்த இடம் இருந்தது, காய்கறி தொடங்கி கட்டுமானம் வரை படகு வழியே தான் எல்லா வியாபாரமும் நடந்தது..


"ட்ராஃபிக் இல்லை, தூசு, மாசு இல்லை, இயற்கையோடு இணைந்து இப்படி சந்தோஷமாக வாழ கொடுத்து வச்சிருக்கணும்!" என ரசித்து சொன்னான் மாறன்.


"ஆமா! நிச்சயமா கொடுத்து வச்சவங்க தான் இப்படி வாழ முடியும்! அங்க பாருங்க பள்ளிக்கூடத்து பசங்க கூட படகுல தான் வராங்க.. என படகில் இருந்த குழந்தைகளை நோக்கி பாரதி டாட்டா காட்ட, அவர்களும் இவர்களுக்கு டாட்டா காட்டினர்..


மெல்ல மெல்ல மாலை மங்கி, இருள் கவிழத் தொடங்கியது, மேக ஜன்னலை திறந்து கொண்டு வெண்ணிலவும் இவர்கள் படகை எட்டிப்பார்த்தது, இரவு உணவை உண்டு விட்டு, படகின் விளிம்பில் வந்து நின்றனர் இருவரும்..


நிலவை ரசித்துக்கொண்டு இருந்தாள் அந்த நிலாப்பெண்! அவளை ரசித்துக் கொண்டிருந்தான் மாறன், ஏனோ இன்று அவன் கண்களுக்கு ,அவன் வேதா தேவதையாய் தெரிந்தாள், டைட்டானிக் படத்தின் காட்சி ஒன்று மனதோடு தோன்ற,மாறனின் உதடுகள் மர்மப்புன்னகையில் விரிந்தது...


படகின் கிரில் மேலே அவள் கைகளை வைத்து இருக்க, அதனருகே தன் கைகளை வைத்து மெதுவாய் அவள் கைகளை நோக்கி அதை நகரத்திக் கொண்டிருந்தான், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கண்ணாடித் திரை கொஞ்சம் கொஞ்சமாய் விரிசல் விட்டிருந்தது, அது எப்போது முழுதாய் உடைந்து விழுமோ, அப்போது அந்த இரு இதயங்களும் இணைந்துவிடும்..


அசைந்தாடும் காற்றில் அவள் காதணிகள் அழகாய் நடனமாட, அவள் தோளை விட்டு பறந்து கொண்டிருந்தது துப்பட்டா.. அதை இழுத்துப் பிடித்து போர்த்திக் கொண்டிருந்தவளை பார்த்த மாறன்," நல்லா இருக்கு!" என்றான்..


"என்ன நல்லா இருக்கு?" பாரதி அவனைத் திரும்பிப் பார்த்து கேட்க..


அவளருகே நெருங்கி வந்தான் மாறன், பாரதி நெஞ்சம் படபடக்க தொடங்கியது, அவள் காதோரம் மெல்ல கிசுகிசுப்பாய், "நிலா ரொம்ப அழகா இருக்கு இல்ல! என்றான் மாறன் ஒரு மந்தகாச புன்னகையோடு...


*அடப்பாவி! இதை ஏண்டா பக்கத்துல வந்து இந்த மாதிரி சொல்ற... பக்குனு இருக்கு இல்ல"!... என பார்வையால் கேட்டாள் பாரதி..


அந்த நேரம் பார்த்து காற்று பலமாக வீச.... காற்றுக்கு ஏற்ப போட்டை கேப்டன் திருப்ப முயற்சிக்க.. சமநிலை தவறி ஆடத் தொடங்கியது படகு! அதனால் நிலைதடுமாறிய பாரதி, மாறன் மீது சாய,அவளைத் தாங்கி பிடிக்க முயற்சித்த மாறன் கீழே விழுந்தான், அவன் மேலே அவள் விழுந்தாள்! , அந்த கணம் இருவர் மனங்களிலும் ஏதேதோ உணர்வுகள் மணம் வீசத் தொடங்கின... ஒரு மலர் குவியல் தன்மேல் கிடப்பதாக உணர்ந்தான் மாறன், அவனை அறியாமல் அவன் கரங்கள் அவளை வளைத்து இருந்தன, பாரதியோ அடைகாக்கும் பறவையின், சிறகுக்கு அடியில் இருக்கும் முட்டையினை போல் உணர்ந்தாள் மாறனின் கதகதப்பும், அணைப்பும் அவளுக்கு அத்தகைய பாதுகாப்பு உணர்வினை, சொந்தத்தினை அளித்தது, சத்தம் கேட்டதால் உள்ளே வேலையாய் இருந்த அப்புக்குட்டி ஓடி வந்து பார்க்க, இவர்கள் இருந்த நிலை கண்டு சிரித்தான், அவன் சிரிப்பு சத்தத்தால் சுற்றம் உணர்ந்தவர்கள் பதறி எழுந்தனர்..


அவனிடம் ஒரு அசட்டு புன்னகையை பதிலாய் தந்த படி அறைக்கு வந்தவர்கள், இரவு உடையை மாற்றிக்கொண்டு படுத்துக்கொண்டனர், எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பாரதிக்குமே,அன்று வாயை திறந்தால் வெறும் காற்றுதான் வந்தது! ஒருவிதமான மோனாநிலையிலேயே இருந்தனர் இருவரும்..


மாறன் ஒருக்களித்து அவளை பார்த்தவாறு படுத்துக் கொண்டான்! பாரதியும் அவனைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் , மாறன் இமைகளை மூட முயற்சிக்க, இமைகளுக்கு இடையே அவள் உருவம் வந்து நின்று இம்சித்தது, அவளை முத்தமிடச் சொல்லி மனது சத்தமிட, அந்த மனதின் சப்தத்தை காது கொடுத்து கேட்காமல், அலைபாயும் மனதை கடிவாளமிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான் மாறன்! அவன் முதுகை வெறித்த பார்வை பார்த்த பாரதியும், ஒரு பெரு மூச்சோடு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..


(இவ்வளவு ரொமான்டிக்கான இடமும் சீனும் செட் பண்ணிக் கொடுத்தும், இப்படி சொதப்புறியே விக்கிரமா... வேதா நீ ரொம்ப பாவம்மா! என சொல்லி.. தலையில் கை வைத்த படி அந்த அறையின் மூலையில் அமர்ந்து கொண்டார் இந்த கதையின் ஆசிரியையும்)..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top