• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
சென்ற பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்! இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்..

eiQNZBU76529.jpg
அவனும் நானும் அனலும் பனியும்...12


நகரின் பிரம்மாண்டமான பைவ் ஸ்டார் ஓட்டல் முன்பு நின்றது, அந்த புத்தம்புது ரெனால்ட் டஸ்டர் காஸ்பியன் ப்ளூ கலர் கார், மாறன் தான் புதிதாக அதை வாங்கி இருந்தான், கூடவே பாரதிக்கும் ஒரு ஸ்கூட்டி எடுத்திருந்தார்கள், அதை கொண்டாடத்தான் இங்கு வந்திருந்தனர்..


கேரளா ட்ரிப் முடித்து வந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின், ஆசையாக இந்த இரு வாகனங்களை வாங்கி இருந்தனர்.


"நீ இப்படி ஷாக் கொடுப்பேன்னு நான் நினைக்கலப்பா, ஆனாலும் நீ செம கெத்து தான் வேதா!" புன்னகையோடு சொன்னான் மாறன்.


பின்ன,நீங்க கார் ஏறுன்னதுல இருந்து இப்படி ஓட்டணும், அப்படி ஓட்டணும், இதை இப்படித் திருப்பனும்,அதை அப்படி செய்யனும்னு ஓவரா பில்டப் கொடுத்தீங்க... என்னவோ நானெல்லாம் காரையே பார்க்காத மாதிரி!.. அதான் நீங்க வண்டியை நிறுத்திவிட்டு கடைக்குப் போனபோது அதை எடுத்து ஓட்டினேன்.. நான் ஒரு ரவுண்டு போய் திரும்பி வந்து உங்க முன்னாடி ப்ரேக் போட்டு நின்னப்ப உங்க முகத்தை பார்க்கணுமே..அப்படியே பேயறைஞ்ச மாதிரி போயிருச்சு... பார்க்கவே சிரிப்பா இருந்துச்சு!!


என் மேல காரை ஏத்துற மாதிரி வந்து நிறுத்தினா பயமா இருக்காதா? உனக்கு ட்ரைவிங் தெரியும்னு எனக்கு எப்படி தெரியும்?.. நீ சட்டுனு வண்டியை எடுத்துட்டு போறதை பார்த்ததும் எனக்கு கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு ஐயோ! என்ன ஆகப் போகுதோ? என பயந்துட்டேன்…


நான் நட்லயும், போல்ட்டிலும் செஞ்ச பாடி! எனக்கெல்லாம் ஒண்ணுமே ஆகாது தெரியுமா?... பெருமிதமாய் சொன்னாள் பாரதி


அது எனக்கும் தெரியுமே! நான் கவலைப்பட்டது என் புது காரை நினைச்சுதான், இஎம்ஐ கட்டுவதற்குள் அதை காய்லாங்கடைல சேர்த்திடுவீயோன்னு பயந்துட்டேன்..


அப்படியா என விழி விரிய அவனைப் பார்த்து கேட்டவள்,

"காயலாங்கடைக்கு ஒரு கார் பார்சல்" என எதிரே வந்த பேரரை பார்த்து சொல்ல, அவர் திரு திருவென விழித்தார்! மாறன் சிரித்துக்கொண்டு அவரை போகச் சொல்லி விட்டு,உணவருந்தும் அறைக்கு அவளை அழைத்துச்சென்றான் .


விதவிதமாய் ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டனர், பாரதியின் இயல்பான, எதார்த்தமான பேச்சு, மாறனை ரசிக்க வைத்தது, பதிலுக்கு பதில் பேச வைத்தது, செவிக்குணவாக அவள் சிரிப்பு நிறைந்த பேச்சும், வயிற்றுக்கு உணவாக மட்டன் பிரியாணியும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியானான் மாறன்..


சாப்பிட்டபின் பாரதி முன்னே செல்ல மாறன் பில் கட்ட நின்றிருந்தான்,அப்போது உள்ளே வந்தவனை பார்த்து நெற்றி சுருக்கியவன், பின் ஆனந்தமாய் "டேய் யுவராஜ்! நல்லா இருக்கியா? என அவனைப் பார்த்து கேட்டான்.


"நீங்க... நீங்க யாருன்னு தெரியலையே!" என புதியவன் சொல்ல..


"டேய்! நான் இளமாறன், உன்கூட ஸ்கூல்ல படிச்சவன், என தன்னை அறிமுகப்படுத்திய படி ஆசையோடு பேச..


கடனே என பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அந்த யுவராஜ்..


அவளருகில் இருந்த பெண்ணை கைகாட்டிய இளமாறன் "யார்?" என கேட்க..


சட்டென்று விரைத்தவன், "இவ என் மனைவி! சாரிடா எங்களுக்கு லேட் ஆச்சு! ஊருக்கு போகணும் இன்னொருநாள் பேசலாமே…!" என அவனை தவிர்த்து உள்ளே செல்ல எத்தனித்தான்


மாறனுக்கு என்னவோ போல் ஆனது, சரி என தலையாட்டி விடை பெற்றவன், பார்க்கிங் பகுதிக்கு போனான், கார் அருகில் சென்று, அவன் சட்டைப் பையை தடவ, அப்போதுதான் சாப்பிட்ட டேபிள் மீது வைத்த சாவியை எடுக்காமல் வந்தது நினைவில் வந்தது, பாரதியை காத்திருக்கச் சொல்லி விட்டு சாவியை எடுக்க உள்ளே போனான்..


டேபிளில் இருந்த சாவியை எடுத்தவனை, பக்கத்து கேபினில் இருந்து கேட்ட பேச்சுக்குரல்கள் அப்படியே நிற்க வைத்தது..


"யுவா டார்லிங்! நாம எங்க ஊருக்கு போக போறோம்? வீட்ல போரடித்து தானே இங்கே சாப்பிட வந்தோம்.. அப்புறம் ஏன் உங்க பிரண்டு கிட்ட பொய் சொன்னீங்க? எனக் கேட்டது ஒரு பெண் குரல்


டார்லிங்! உனக்கு அந்த மாறனைப் பத்தி தெரியாது, அவன் ஸ்கூல் படிக்கும்போதே ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்து மாட்டிக்கிட்டான், அந்த மாதிரி ஒழுக்கம் கெட்டவன் முன்னாடி என் பியூட்டி குயின்யை நிறுத்திவைத்து பேசச் சொல்றியா? நெவர்,அவனை மாதிரியான ஆளோட பார்வை உன் மேல படவே கூடாது, அதான் அவனை கட் பண்ணிட்டு வந்துட்டேன், அந்த ராஸ்கல் பேச்சு எதுக்கு இப்ப... நாம வேற பேசலாமே! என்றான் அந்த யுவராஜ்..


மாறன் சிலையாக சமைந்து நின்றான். ஒரு கூடை தீயை அள்ளி மேலே வீசியது போல் இருந்தது அவனுக்கு, நானா.. நானா ஒழுக்கம் கெட்டவன்? பெண்ணைப் பார்த்ததும் பின்னால் அலையும் பெண் பித்தனா நான்?,கட்டிய மனைவியிடம் கூட கண்ணியம் காக்கும் எனக்கு இப்படி ஒரு பெயரா?.. இந்தப் பழி என்னை விடவே விடாதா? ஜென்மம் முழுவதும் தொடருமா? நான் என்ன பாவம் செய்தேன்!.. என மனதிற்குள் புலம்பியவன், பின் நிமிர்ந்து, கோபமாய்.. அவள் ...அவள் தான் இத்தனைக்கும் காரணம், எப்படி மறந்தேன் அத்தனையும்? நான் ஒரு புத்தி கெட்டவன், நான் இப்படி அசிங்கப்பட காரணமாய் இருப்பவள் பின்னால் நாய் குட்டியாய் சுற்றுகிறேன், பழிவாங்கவென திருமணம் முடித்து விட்டு, இப்போது அவளிடமே மனதைப் பறி கொடுத்து விட்டு நிற்கிறேன், என்னைப் போல் ஒரு ஏமாளி யாரேனும் உண்டா? .. என மனதுக்குள் வெந்து நொந்து புலம்பியபடி புயலென வெளியே வந்தவன், காரை எடுத்துக் கொண்டு வேகமாய் சென்றான்..


காருக்கு பின்னால் நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாரதி, அவன் காரை கிளப்பிப் போனதும் திடுக்கிட்டாள்,காரின் பின்னே மாறனை அழைத்தபடி ஓடி வந்தாள், அவளை கார் கண்ணாடி வழியே பார்த்தவனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அந்தக் கோபத்தில் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த ஒரு புள்ளியாய் மறைந்தாள் பாரதி..


மழை தூறும் சாலையில் வழுக்கிக் கொண்டு முன்னே பாய்ந்தது அந்த வாகனம், உள்ளே இருந்தவனின் மனமோ பின்னோக்கி பழைய நினைவுகளில் பாய்ந்தது... ஏற்படுத்தப்பட்டவளாலேயே மறக்கடிக்கப்பட்டிருந்த, அந்த மனதின் காயத்தை, நண்பனின் வார்த்தைகள் கீறிப் பார்க்க ரத்தம் சொட்ட சொட்ட நியாபகம் வந்தது அந்த பழைய நினைவுகள்…


………...


அப்பொழுது மாறன் பன்னிரெண்டாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தான், கிராமத்து இளைஞர்களின் அக்மார்க் நகல் அவன்.. அவர்களுக்கு சொந்தமாக தோட்டம் இருந்தது, நெல்லும், பருப்பு வகைகளும் பயிரிடுவார்கள், பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் தந்தைக்கு உதவியாய் விவசாயம் செய்பவனுக்கு, அந்த விவசாயத்தின் மீது தீராத காதல் எழுந்தது, அந்த விவசாயத்தை படிப்பாக படித்து அதில் பெரிய சாதனை செய்ய வேண்டும், சொந்த ஊரிலேயே ஒரு பிரபலமான விவசாயியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவனது லட்சியம், படிப்பில் அவன் நடு பெஞ்ச் நல்லவனாக இருந்தான், ஆனால் குறும்பிலோ நம்பர் ஒன் மாணவனாக திகழ்ந்தான், அவனும் குமார் உள்ளிட்ட அவனது நான்கு நண்பர்களும் சேட்டைகளுக்கு பேர் போனவர்கள் அந்த அரசு பள்ளியில்..


பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர் அந்த பள்ளியில், நான்குஆசிரியர்கள், அறுபது மாணவர்கள் என சந்தோஷமாக கிளம்பியது அந்த சுற்றுலா குழு,150 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்பதால் பாதி மாணவர்களால் வர முடியவில்லை..


மலைகளின் இளவரசியான ஊட்டியின் பைக்காரா பால்சினை, கும்பல் கும்பலாக ரசித்துக் கொண்டிருந்தனர் அந்த மாணவப் பட்டாம்பூச்சிகள், மாணவர்கள் அவர்களின் பள்ளி யூனிஃபார்மான காக்கிபேண்டும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருக்க, மாணவிகள் வெள்ளை ஜாக்கெட்டும், ப்ளூ கலர் தாவணி, பாவாடையும் அணிந்து இருந்தனர், ஊட்டியின் குளிருக்கு அந்த அருவி நீர் மிகமிக ஜில்லென இருந்தது.. மாறனும்,அவன் நண்பர்களும் அந்த தண்ணீரிலும் குதித்து நீச்சலடித்து கொண்டு இருந்தனர், குளிரில் உடல் வெடவெடத்து போனது, அந்த விடலைப் பையன்களுக்கு அதுகூட சுகமாகத்தான் இருந்தது..


நீச்சலடித்து களைத்த மாறன், இயற்கை உபாதைக்காக, அந்த அருவி கரையோரம் இருந்த, அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிக்குள் போனான், சிறு சரிவின் இந்தப் பக்கம் நின்று இருந்தவனுக்கு சரிவின் மறுபக்கம் இருந்து ஒரு பெண்ணின் தீனமான குரல் கேட்டது, வேகமாக மேலே ஓடிச் சென்று பார்த்தான்..


அங்கே அவன் வகுப்பு மாணவி காயத்திரியை யாரோ இரண்டுபேர் பலாத்காரம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்


"டேய் அவள விடுங்க டா !என வேகமாய் ஓடிய மாறன், அவர்களை அடிக்க, மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாறனை சமாளிக்க முடியவில்லை, எங்கே கத்தி மாட்டிவிட்டு விடுவானோ என பயந்தவர்கள் ஓடிப்போக, தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் அவர்களை திட்டி தீர்த்தவன், பின் திரும்பி காயத்ரியை பார்த்தான், அவளோ அதற்குள் மயங்கி இருந்தாள், மயங்கி கிடந்த காயத்ரியை தாங்கிப் பிடித்து, கன்னம் தட்டி எழுப்ப முயற்சித்தான்,ஆனால் அவளிடம் எந்த அசைவும் இல்லை, ஆசிரியர்களை கூட்டி வரலாம் என நினைத்த மாறன் அப்பொழுதுதான் கிழிந்து கிடந்த அவள் ஆடைகளை கவனித்தான், இந்த நிலையில் மற்றவர்கள் பார்த்தால் இவள் சங்கடப்படுவாள் என நினைத்தவன், அவள் ஆடைகளை சரி செய்தான், சரியாக அந்த நேரம் பார்த்து சரிவின் மேலே வந்தாள் பாரதி! அவள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி, தோழிகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தவள் வேகமாக ஓடிவந்து சரிவை அடைந்து இருந்தாள், ஆனால் அங்கே அவள் பார்த்த காட்சியில் அப்படியே உறைந்து நின்றாள்..


அவள் பார்வைக்கு மாறன் தான் அந்த பெண்ணிடம் தப்பாக நடந்து கொண்டிருப்பது போல் தெரிந்தது!

" டேய் என்னடா பண்ற அந்த புள்ளைய? என கத்தியவள் , பிளீஸ் அவளை விடுடா! என கோபமாக கத்த அப்போது தான் மாறனுக்கு அவள் பேச்சின் அர்த்தம் புரிந்தது!


" பாப்பா நீ தப்பா புரிஞ்சிகிட்ட.. இந்த பொண்ணை... என அங்கு நடந்ததை சொல்ல வந்தவன் சொல்லமுடியாமல் திக்கித் திணற... அதற்குள் பாரதியோ காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என கத்தி கூச்சலிட்டாள், அவள் கூச்சலில் தூரத்தில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அவள் இருந்த இடம் நோக்கி ஓடிவந்தனர்..


ஓடி வந்தவர்கள் அவளிடம் என்ன எனக் கேட்க.. அவள் மாறனை நோக்கி கை காட்டினாள்


என்னாச்சு பாரதி? காயத்ரி ஏன் இப்படி கிடக்கா... என்ன நடந்துச்சு சொல்லு? என ஆசிரியர் சரவணன் கேட்டார்.


பாரதி எதுவும் பேசாமல் தயங்கிக் கொண்டே நிற்க..


இப்ப என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறியா இல்லையா? என மிரட்டினான் சரவணன்


அது வந்து சார், நாங்க விளையாடிட்டு இருந்தோம், நான் வேகமாக ஓடி வந்து இங்க நின்னு பார்த்தபோது என பாதியில் நிறுத்தி அவள் மாறனின் முகத்தை பார்க்க..


ஏன் தயங்குற முழுசா சொல்லு! என அதட்டினான் சரவணன்.


அது வந்து... வந்து... அந்த அக்கா தாவணியை இதோ இந்தப் பையன் கிழிச்சிட்டு இருந்தான்.. கன்னத்துல தட்டிட்டு இருந்தான் , பதினைந்து வயது பெண்ணான அவள், பார்த்ததை அப்படியே சொல்ல... ஆனால் அந்த காட்சியோ அங்கே மிகுந்த தப்பர்த்தமாக எடுத்துக்கொள்ளப்பட்டது..


ஏற்கனவே ஆசிரியர் சரவணனுக்கு மாறனின் மேல் தீராத கோபம் இருந்தது, சரவணன் , ஒரு மாணவியிடம் தகாத முறையில் பேசியிருக்க, அந்த மாணவி,தன் பக்கத்து வீட்டுப் பையனான மாறனிடம் அதை சொல்லியிருந்தாள், வகுப்பு முடிந்து வரும் வேளையில் சரவணனை வழிமறித்த மாறன், அவனைத் திட்டி எச்சரித்து இருந்தான், தன்னிடம் படிக்கும் மாணவன் தன்னை திட்டியதால் அவன் மீது ஏக கோபத்தில் இருந்த சரவணன், அவனைப் பழிவாங்க இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டான்..


வேகமாய் மாறனிடம் வந்தவன், அவன் சட்டையை பிடித்து இழுத்து கன்னம், கன்னமாக மாறி மாறி அடித்தான்..


"முளைச்சு மூணு இலை விடல... ராஸ்கல் ..கூட படிக்கிற பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கற? உனக்கு என்ன தைரியம்? என கேட்டுக்கொண்டே அடித்தான்..


மிகவும் திடுக்கிட்ட மாறன், "சார் நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க, இரண்டு பேர் காயத்திரி கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்தாங்க, நான்தான் அவங்களை அடிச்சு அவளை காப்பாற்றினேன், அந்த பொண்ணு டிரஸ் கிழிஞ்சு இருந்தது, அதை சரி பண்ணி உங்களை கூட்டிட்டு வர நினைத்தேன்! அப்பத்தான் இந்த பொண்ணு வந்துச்சு.. அவ பார்த்ததை தப்பா புரிஞ்சுகிட்டா... அது புரியாம நீங்களும் தப்பா நினைக்கறீங்க!...என அவன் விளக்கம் சொல்ல..


"ராஸ்கல்!பண்றதையும் பண்ணிட்டு பொய் சொல்றியா? உன்னை என்ன பண்ணப் போறேன் பாரு! என மீண்டும் அவனை அடித்தான் சரவணன், அத்தனை மாணவர்கள் முன்னிலையில் மிகுந்த அவமானமாக உணர்ந்தான் மாறன், கண்களில் கண்ணீர் வழிய கோபமாய் பாரதியை முறைத்துப் பார்த்தான், "பாவி நீ தப்பா புரிஞ்சுகிட்டு என்னை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டு விட்டாயே!" என்பதாக இருந்தது அந்தப் பார்வை! ஆனால் பாரதியோ நான் நடந்ததை தானே சொன்னேன், இவன் எதுக்கு இப்படி முறைத்துப் பார்க்கிறான் என நினைத்தவள், அவன் பார்வையில் பயந்து தோழியின் முதுகுக்குப் பின்னே ஒளிந்தாள்..


பாருங்கடா எல்லோரும், இந்த வயசுல இவன் என்ன வேலை பண்ணி வச்சிருக்கானு, இவனையெல்லாம் நடுத் தெருவில ஓடவிட்டு அடிக்கணும் என சுற்றியிருந்த மாணவர்களைப் பார்த்து சரவணன் ஆவேசமாய் பேச..


"சார் நான் எந்த தப்பும் பண்ணல.. தயவு செஞ்சு என்னை நம்புங்க! டீச்சர் நீங்களும் தப்பா நினைக்காதீங்க! நான் போய் இந்த மாதிரி பண்ணுவேனா...நீங்களாவது

சொல்லுங்களேன்டா நான் தப்பானவனா? என தன் நண்பர்களை பார்த்து கேட்டான் மாறன், எல்லோரும் திருதிருவென நின்றிருக்க குமார் மட்டும் " சார் மாறன் ரொம்ப நல்ல பையன், இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ண மாட்டான்! தயவுசெஞ்சு என்ன நடந்ததுன்னு விசாரிச்சுப் பாருங்க! என மன்றாடினான்.


துரைக்கு நீ சப்போட்டா? எல்லாரும் கூட்டு களவாணிக தானே! என அதற்கும் திட்டினான் சரவணன்.


சார் அவனை விடுங்க!அப்புறம் பார்த்துக்கலாம், இப்ப இந்த பொண்ணு மயங்கிக் கிடக்கு, முதல்ல நம்ம வண்டியில கூட்டிட்டு போய் ஹாஸ்பிடலில் சேர்க்கலாம்,மீதியை அப்புறம் பார்க்கலாம்! என காயத்ரியை பார்த்த ஆசிரியை சொல்ல எல்லோரும் அதை ஆமோதித்தனர்..


சந்தோசமாய் சுற்றுலா வந்திருந்த அந்த வண்டி இப்போது மருத்துவமனைக்கு முன்னால் நின்றது, காயத்ரியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் பலாத்கார முயற்சி நடந்திருக்கிறது இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் ஆகவில்லை! அதிர்ச்சியில் மயக்கம் மட்டும் அடைந்திருக்கிறாள், மயக்கம் தெளிய இரண்டு நாட்கள் ஆகும் என சொன்னார்.. ஊரிலிருந்த காயத்ரியின் பெற்றோர்களுக்கு மருத்துவமனை தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தவர்கள், அவர்கள் வரும் வரை காத்திருந்து, அவர்கள் வசம் காயத்திரியை ஒப்படைத்துவிட்டு, பிற மாணவர்களோடு ஊருக்கு கிளம்பினார்கள், எல்லோரையும் வீட்டில் சேர்க்கும் பொறுப்பு அவர்களுடைய தல்லவா..


சரவணன் மட்டும் மாறனை போலீசில் ஒப்படைக்க வேண்டுமென சொல்ல, பிற ஆசிரியைகள் காயத்ரியின் பேர் கெட்டுவிடும்! அவள் மயக்கம் தெளிந்து வரட்டும் என்ன நடந்தது என்பதைக் கேட்டு, பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என பேசி சமாதானப்படுத்தினர்.


ஊருக்கு திருப்பி வந்துகொண்டிருந்த அனைவர் மனதிலும் மாறனை பற்றிய சந்தேகத்தை பலமாய் விதைத்திருந்தான் சரவணன், திரும்பத் திரும்ப அதையே பேசி பேசி அவனை ஒரு வில்லனாகவே உருவகப்படுத்தி விட்டான், மாறனால் எதுவும் செய்ய முடியவில்லை! தான் இனி என்ன பேசினாலும் பலனில்லை,காயத்ரி கண்விழித்து சொன்னால்தான் தன் மேல் தவறில்லை என்பது இவர்களுக்கு புரியும் என நிதர்சனம் உணர்ந்தவன், தன் மேல் விழுந்த பழியை வலியோடு தாங்கிக் கொண்டு நின்றிருந்தான்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top