• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் மக்களே,

நிறைவை நோக்கி கதை செல்கிறது, சென்ற பதிவுககு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்...
ஜாலி ரீடிங் ... மகிழ்வித்து மகிழ்!


eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்.19




அதுவரை அனலாய் சுட்டெரித்த அந்தப்பெண், அன்றோ மாறனின் கைகளில் மெழுகாய் உருகிக் கரைந்தாள், இரு இதழ்கள் உதிர்க்கும் கடின வார்த்தைகளால் அவளை எப்போதும் காயப்படுத்திக் கொண்டிருந்தவன், அதே இரு இதழ்கள் எனும் மயிலிறகு கொண்டு அந்தக் காயங்களுக்கு மருந்திட்டு கொண்டிருந்தான், அன்றைய விடியல் ஏனோ அத்தனை அழகாய் இருந்தது அவர்களுக்கு!..


அவள் நெற்றியில் முத்தமென்ற முற்றுப்புள்ளியிட்டு, தான் இனிதே தொடங்கிய இல்லறக் கவிதையை இனிப்பாய் முடித்து வைத்தான் மாறன் அப்போதைக்கு,.. அவளோ
கலைந்திருந்தாள் ,மிகக் களைத்திருந்தாள், அவளை அள்ளி தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டான் மாறன்

அவன் நெஞ்சத்தின் முடிகளை திருகிக்கொண்டே கிசுகிசுப்பாய், "எனக்கு ஒரு சந்தேகம்!" என்றாள் பாரதி.

ம்ம்..என்ன சந்தேகம்? என் நெஞ்சத்தில் இருக்கிற முடிக்கு வாசம் இருக்கா? இல்லையா? என்றா! என குறும்பாய் கேட்டான் அவன்.

"ஓ!அமேசான் காடுகள் கிடைக்கிற அரிய வகை மூலிகைகளால தயாரிச்ச ஆயில் யூஸ் பண்ணுறீங்களா.. வாசம் வீச.."


"என் பொண்டாட்டிக்கு புடிச்சிருக்குன்னா அதையும் செஞ்சு பார்த்துட வேண்டியது தான்!" என்றான் மாறன் சிரித்துக்கொண்டே.., பின்," ஆமா! உனக்கு என்ன சந்தேகம்?.. என கிசுகிசுப்பாய் கேட்க..


தன் கைகளின் மேல், தாடையை வைத்த படி, மெதுவாக முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தவள்,

" பேரின்பம் மெய்யிலா?..
நீ தீண்டும் கையிலா?..
என ராகமாக பாடி தன் சந்தேகத்தை கேட்க..


ஒரு மந்தகாசப் புன்னகையை சிந்தியவன், அவள் மூக்கோடு அவன் மூக்கை உரசி,

"சங்கீதம் பாட்டிலா?
நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா?
உன் பார்வை தன்னிலா?"..
என காதலாகி கசிந்துருகிப் பாடி, கைகளை விரித்துக் காட்ட..


"தேனூறும் வேர் பலா!
உன் சொல்லிலா?"
என வெட்கப் புன்னகை சிந்தியவள், அவனின் விரிந்த கைகளுக்குள் விரும்பி அடைபட்டுக் கொண்டாள்..



ஒரு போர்வைக்குள் துயில் கொண்ட, அந்த இரு இதயங்களை எட்டிப்பார்க்க, கிழக்கில் உதித்த சூரியன், தன் மேகப்போர்வையை முழுதாய் விலக்கி வெளிவரத் தொடங்கினான்..
..

"எம்புள்ள பாரதி! மணி ஒன்பதுக்கு மேல ஆகுது! இன்னுமா தூங்குற நீனு?..என்னதான் ஞாயிற்றுக்கிழமை என்றாலும் இப்படியா பொட்டபுள்ள தூங்கறது? எந்திரி கண்ணு!" என அன்னபூரணி, பாரதியின் அறைக்கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்..


கதவு தட்டும் சத்தத்தில் மெதுவாய் முழிப்பு வந்தது மாறனுக்கு , கண்களைத்திறந்தவனுக்கு முதலில் ஏதும் புரியாமல் போக, தன் நெஞ்சின் மீது கிடந்த நேசக்குவியலைப் பார்த்த பின்பே, சுற்றம் உணர்ந்தான் முற்றுமாக, நெஞ்சத்தின் மேல் ஏதேனும் இருந்தாள் பாரமாகத் தானே தெரியும், ஆனால் இந்தப்பெண் சாய்ந்து இருந்தாள் மட்டும், மனம் லேசாக, நெஞ்சத்தின் பாரமெல்லாம் நீங்குவதாக தெரிகிறதே!, இது ஏனோ? இது காதலில் மட்டும் தானோ? என்று அவன் சிந்தனை எங்கோ ஓடிக் கொண்டிருக்கும் போது கதவு மீண்டும் தட்டப்பட்டது..

தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் தலையை மெதுவாக, அலுங்காமல் எடுத்து தலையணை மீது வைத்தவன்,அவள் கழுத்து வரை இழுத்து போர்த்தி விட்டு, பின் கதவைத் திறந்தான் மெதுவாக..


கதவு திறந்ததும், பாரதியைத் திட்ட வாய்திறந்த அன்னபூரணி, தன் மாப்பிள்ளை கதவு திறப்பது கண்டு வெகுவாக திடுக்கிட்டார்,பின் சுதாரித்து,

"வாங்க மாப்பிள்ளை! நீங்க எப்ப வந்தீங்க? , எங்களுக்கு தெரியவே இல்லையே! என சந்தோசத்தோடு கேட்க

"அது.. அது வந்து அத்தை, சனிக்கிழமை ஆபீஸ் முடியவே லேட் நைட் ஆயிடுச்சு, அப்படியே கார் எடுத்துட்டு வந்துட்டேன், விடியக்காலைல தான் வந்தேன், நீங்க அசந்து தூங்கிட்டு இருந்ததால எழுப்பாமல் விட்டுட்டேன்.. என அசடு வழிந்தபடி பதில்கூற..

"பரவால்ல மாப்பிள்ளை.. நீங்க வந்ததே ரொம்ப சந்தோசம் , நீங்க வந்தது தெரியாம, உள்ள இருப்பது தெரியாமல் கதவை தட்டி எழுப்பி விட்டேன்! மன்னிச்சுக்குங்க! நீங்க நல்லா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு வாங்க மாப்பிள்ளை!" என்று சொல்லியபடி மாப்பிள்ளை வந்த விவரத்தைச் சொல்ல தன் கணவரிடம் போனார் அன்னபூரணி,வீட்டு மாப்பிள்ளை வந்திருக்கார் என்றதும், வெளியே கொக்கரித்துக் கொண்டிருந்த சேவலுக்கு அதுவே கடைசி கூவலானது, இனி குழம்பில் மிதக்கும் போது கூவ வழிதான் எது?..

திரும்ப அறைக்குள் வந்த மாறன் பாரதியை மெதுவாய் தட்டி எழுப்ப, "விக்ரமா! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, ஒரு பெட் காப்பி கொடேன்!" என்று சொல்லியபடி மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்கப் பார்த்தாள் பாரதி..

அவள் தலையைக் கோதிவிட்டவன், "மணி ஒன்பதுக்கு மேல செல்லம்.. இப்பதான் உங்க அம்மா வந்தாங்க.. இதுக்கு மேல தூங்கிட்டு இருந்தா நல்லா இருக்காது! ப்ளீஸ் எந்திரிடா கண்ணம்மா!" என்று கொஞ்ச!

பதறியபடி வாரிச்சுருட்டி எழுந்தவள், "அம்மா வந்து எழுப்பினாங்களா?.. ஐயோ.. நான் வெளியே போனா திட்டுவாங்க!" என்று தலையில் கை வைத்தபடி சொல்ல..

"அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க, நான் வந்தது தெரியும், நீ எந்திரி பாப்பு"! என அவளை எழுப்பி,
இருவரும் காலைக் கடன்களை முடித்து, வெளியே வரும்போது,மல்லிப்பூ இட்லியும், கறிக்குழம்பும் தலைவாழை இலை மேல் காத்திருந்தது, வெள்ளைசாமியும், அன்னபூரணியும், வழக்கம்போல் விழுந்து விழுந்து மாப்பிள்ளையை கவனித்தார்கள், மாறனும்,பாரதியும் தங்களுக்குள் பிரத்தியேக பார்வையை பரிமாறிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் சீண்டலுமாய் உணவை முடித்து விட்டு, தோட்டத்திற்கு கிளம்பினர்.


அதற்கு முன் அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றடிக்கு வந்தபோது நடந்த சம்பவங்கள் இருவருக்கும் நியாபகம் வர.. ஒருவர் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிரித்துக் கொண்டனர்.

"என்ன விக்ரமா! மறுபடியும் இங்கே கூட்டிட்டு வந்திருக்கே.. இப்பவும் தள்ளிவிடப் போறியா? புருவம் உயர்த்தி கேட்டாள் அவள்.

தள்ளி விட்டுட்டாலும்... உன்னையெல்லாம், பறக்கும் பிளைட்டில் இருந்து தள்ளிவிட்டாலும், தூசு தட்டி விட்டுட்டு எழுந்து நிற்ப!.
ராட்சசி.. அன்னைக்கு நான் உன்னை எப்படி தேடினேன் தெரியுமா? நீ மேல வந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்க.. எனச்சொல்லி இலேசாக அவள் தோளை இடித்தவன், ஒரு திட்டில் அமர்ந்தான், எதிரில் ஒரு பெரிய மரம் வேர் பரப்பி இருக்க, அதில் அமர்ந்தாள் பாரதி.


எதிரில் இருந்த அவன் முகத்தை பார்த்து, ,"சொல்லு விக்ரமா! என்கிட்ட நிறைய பேசவேண்டும் எனக் கூப்பிட்டு வந்தே.. இப்ப பார்த்துட்டு அமைதியா இருக்க..எனக் கேட்டாள்.

பார்க்க பார்க்க , பார்த்துட்டே இருக்கத்தோன்ற பேரழகா இருக்கியே! அதான் பார்த்துட்டு இருக்கேன்! என அவன் சொல்ல, கையில் கிடைத்த குச்சியை எடுத்து அவன் மேல் எறிந்தாள் பாரதி.

அதை சரியாக கேட்ச் பிடித்தவன், பின் அவளை தீர்க்கமாய் பார்த்து,
" சொல்லு! நீ எப்ப இருந்து என்னை லவ் பண்ற... என்னால இன்னும் நம்ப முடியல.. ஏதோ எல்லாமே ஒரு பெரிய கனவு மாதிரி இருக்கு! என்று சொன்னவனை வலிக்க கிள்ளினாள் பாரதி.

"ஸ்ஸ்! வலிக்குது! என அவன் சொல்ல,

"இப்ப புரியுதா விக்ரமா! இது கனவு இல்லை! நிஜம்னு".. என சொல்லி சிரித்தவள், பின் கொஞ்சம் சீரியஸான முக பாவனையோடு அவனோடு பேச தொடங்கினாள்.


"இன்னைக்கு வரைக்கும் நான் எனக்குள்ள கேட்டுட்டு இருக்கிற விஷயம், எனக்கு ஏன் உன்னை பிடிச்சது, நான் ஏன் உன்னைக் காதலிச்சேன் என்பதுதான், ஆனா எனக்கு இதுவரைக்கும் அதற்கான பதில் தெரியல.. காதலுக்கு காரணம் இருக்காது, அப்படி காரணம் இருந்தால் அது காதலாக இருக்காது, இது ஷேக்ஸ்பியர் சொன்னது தான்! எனக்கும் அது சரியாக பொருந்தும்..


நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப, நம்மகூட ஸ்கூல்ல படிச்ச காயத்ரியை பார்த்தேன்.. என்றவள் சொல்ல, அவனோ எந்த காயத்ரி எனக் கேள்வி கேட்கவில்லை, அவனால் அந்த பெயரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது , அந்தப் பெண்ணை காப்பாற்ற போய்த்தான் மாறனுக்கு அந்த சிறுவயதிலேயே பெரிய தலைகுனிவு நிகழ்ந்தது, அதை எண்ணி பெருமூச்செரிந்தவன், அவளை மேலே பேசுமாறு சைகை செய்தான்.


"நான் காயத்ரி கிட்ட பேசிட்டு இருந்தபோதுதான், உன்மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சது , நான் விஷயத்தை தப்பா புரிஞ்சுகிட்டு, உனக்கு அநியாயம் செஞ்சதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, உன்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டால் தான் நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு, அந்த வருஷம் தீபாவளி லீவுக்கு நான் ஊருக்கு வந்தபோது, சென்னையில் காலேஜ் படிச்சிட்டு இருந்த நீயும் லீவுக்கு ஊருக்கு வந்தது தெரிந்ததும், உடனே உன்னைத் தேடி வந்தேன் , அப்ப நீ உங்க தோப்பு வரப்பு மேல உட்கார்ந்து, விளைந்திருந்த நெல்லைப் பார்த்துட்டு இருந்த.., உன் முகத்தில் அவ்வளவு சோகம் இருந்துச்சு! அது ஏன் என எனக்கு அப்போ தெரியல!.. என்றவள் நிறுத்த..

அதற்கு மாறன், வருத்தம் தோய்ந்த குரலில்," எனக்கு எங்க தோப்பு ரொம்ப பிடிக்கும்! விவசாயம் செய்யத் தான் ரொம்ப ஆசைப்பட்டேன்! அதை விற்றது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு! எப்ப லீவுல வந்தாலும் அந்த தோட்டத்தை போய் பார்ப்பேன்!" என்றான்..

லேசாக முறுவலித்தவள், "நீ ரொம்ப சோகமா தெரிஞ்சதால,அங்க பக்கத்துல வேலை செஞ்சிட்டு இருந்தவர்கிட்ட உன்னைப் பத்தி கேட்டேன், நீ இப்ப சொன்னதை தான் அவங்களும் சொன்னாங்க, அந்த சூழ்நிலையில் என்னால உன் கிட்ட மன்னிப்பு கேட்க முடியல, திரும்பி வந்துட்டேன்! மறுபடியும் பலமுறை நீ ஊருக்கு வரும் போதெல்லாம் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என தேடி வந்தேன், ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் என்னால் அதை கேட்கவே முடியாம போயிருச்சு…

நான் எம்பிபிஎஸ் படிச்சு முடிச்சதும், எங்க வீட்டில எனக்கு கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாங்க, என்கிட்ட வந்து மாப்பிள்ளை பார்க்கவா எனக் கேட்டாங்க, எனக்கு ஏன்னு தெரியல, கல்யாணம் அப்படின்னு நினைச்சுப் பார்த்தாலே, உன் முகம் தான் முன்னால வந்தது, கல்யாண வரவேற்பில் அழகா டிரஸ் பண்ணிட்டு, ஆடுற மாதிரி நினைச்சாலும், பக்கத்துல கோட் போட்டுட்டு நீ ஆடுற!தழைய தழைய பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வச்சி, மணமேடையில் மணப்பெண்ணா நின்னா, தாலி கட்டி,மெட்டி போட்டு விடற பட்டு வேட்டி சட்டை போட்ட மாப்பிள்ளையாவும் நீ தான் இருக்க.. ஏன் அதுக்கு மேலே..என ஏதோ சொல்ல வந்தவள் நாக்கை கடித்து நிறுத்தினாள்..

" அதுக்கு மேல என்ன?.. என்ன?.. ப்ளீஸ் சொல்லு வேதா! என அவள் அருகே வந்து நெருங்கி நின்று அவன் ஆவலாய் கேட்டான்..

அதற்கு எழுந்து நின்றவள், அவனை நெருங்கி, அவன் சட்டையின் பட்டனை திருகிக்கொண்டே, கொஞ்சம் வெட்கத்தோடு," கல்யாணம் முடிச்சு ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள போனாலும், என கையை பிடிச்சு கூட்டிட்டு போய் கட்டில்ல உக்கார வைக்கிற, நெற்றியில் முத்தம் கொடுக்கிற உருவம் கூட, உங்க உருவமாகத் தான் இருந்துச்சு!" என்று சொன்னவளை நெஞ்சோடு தழுவிக்கொண்ட மாறன், அவன் தலையின் மேல் தன் தாடையை வைத்து கண்களை மூடிக் கொண்டான்.. ஒரு தேசத்தை ஆளும் கிரீடத்தை அவன் தலையில் வைத்திருந்தால் கூட அவன் இத்தனை சந்தோஷப்பட்டு இருக்க மாட்டான், அவன் காதலியின் இதயத்தில் சிம்மாசனமிட்டு தான் அமர்ந்து இருப்பதை அறிந்தவனுக்கு அத்தனை கர்வமாய் இருந்தது..


அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளோ, "எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சு! நான் உங்களை என்னையறியாமலேயே காதலிக்கத் தொடங்கிவிட்டேன் என்று, மேற்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியல! வீட்ல கெஞ்சி கூத்தாடி, இப்ப கல்யாணம் வேண்டாம், கைனகாலஜிஸ்ட் ஆவதற்கான இரண்டு வருஷ படிப்பு படிக்கிறேன்னு பர்மிஷன் வாங்கிப் படிச்சேன்! அதை முடிச்சுட்டு, இங்கேயே ஹாஸ்பிடல்ல பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன், அப்புறம் நான் காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிட்டேன்!" என்று சொன்னவள், அவனை நிமிர்ந்து பார்த்து," அதுக்கு நான் என்ன பண்ணினேன் தெரியுமா? என மெல்ல தலையை ஆட்டிக்கொண்டே கேட்க..


"ப்ளீஸ் வேதா! சஸ்பென்ஸ் வைக்காதே! நடந்ததை முழுசா சொல்லு! தரகர் மூலமாக தான் உன்னோட சம்பந்தம் வந்துச்சு, ஒன்பது பொருத்தம் இருக்கு, நல்ல குடும்பம் என்று எங்க அம்மா என்னை கம்பெல் பண்ணி பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்தாங்க!" என அவன் சொல்ல…


"ஒன்பது பொருத்தமா, நம்ம ரெண்டு பேருக்கும் உண்மையா ஒரே ஒரு பொருத்தம் தான் இருந்துச்சு!" என்று சொல்லி சிரித்தவள், என்னோட உண்மையான ஜாதகத்தை பார்த்து இருந்தா, நான் இருந்த திசைப் பக்கம் கூட ,உங்க அம்மா உன்னை விட்டு இருக்க மாட்டாங்க! என்றாள் அவள் புன்னகையோடு..


வாய் மேல் கை வைத்தபடி அதிர்ச்சியாய் அவளைப் பார்த்து நின்றான் மாறன்.
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
வேதா ம்மம்மம் நீ கலக்கு!!! ***** தனம் பண்ணி தான் மாறன புடிசியா???? செம்ம லவ் தான் போ!!!!!
அப்பாடா இப்பாவாச்சும் புரிஞ்சு thelinji வந்தியே மாறா!!!!
ஒரு வழியா வாழ்க்கையிள் இணைந்து விட்டார்கள்!!!
முடிய போகுது போல??? ரொம்ப நாள் காத்திருந்து காத்திருந்து காத்திருந்து படித்த கதை!!!!
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வேதா ம்மம்மம் நீ கலக்கு!!! ***** தனம் பண்ணி தான் மாறன புடிசியா???? செம்ம லவ் தான் போ!!!!!
அப்பாடா இப்பாவாச்சும் புரிஞ்சு thelinji வந்தியே மாறா!!!!
ஒரு வழியா வாழ்க்கையிள் இணைந்து விட்டார்கள்!!!
முடிய போகுது போல??? ரொம்ப நாள் காத்திருந்து காத்திருந்து காத்திருந்து படித்த கதை!!!!
Thanks sister
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வேதா ம்மம்மம் நீ கலக்கு!!! ***** தனம் பண்ணி தான் மாறன புடிசியா???? செம்ம லவ் தான் போ!!!!!
அப்பாடா இப்பாவாச்சும் புரிஞ்சு thelinji வந்தியே மாறா!!!!
ஒரு வழியா வாழ்க்கையிள் இணைந்து விட்டார்கள்!!!
முடிய போகுது போல??? ரொம்ப நாள் காத்திருந்து காத்திருந்து காத்திருந்து படித்த கதை!!!!
Thanks for yr பொறுமை and valuable comments
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top