• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் மக்களே!
அடிச்சு,பிடிச்சு நான்காவது எபி யோட வந்துட்டேன்! படிச்சு கருத்துகளை சொல்லிட்டு போங்க மக்களே!!
ஹேப்பி ரீடிங்! என்ஜாய் ரீடிங்!

eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும்பனியும்...4
..............


ஆடை ஈரமாக இருந்ததால், கால்களை தடுக்க, இருந்தும் வேகவேகமாய் படிகளில் ஏறினான் மாறன், மேலே வந்து ஆட்கள் யாரேனும் தென்படுகிறார்களா? என சுற்றிலும் தேட ...அங்கே கிணற்றின் மீது கைகளைக் கட்டியபடி சாய்ந்து நின்றிருந்தது ஒரு உருவம், அது அசப்பில் பாரதியைப் போலவே தெரிய, வேகமாக கண்களை கசக்கி உற்றுப்பார்த்தான், அட அவள் பாரதியே தான்..

"அப்பாடா! அவள் உயிருடன் தான் இருக்கிறாள், அவளுக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதி ஒருபுறம், அவளுக்கு நீச்சல் தெரிந்திருக்கிறது, நான் இவளை கிணற்றுக்குள் தேடி தவித்து இருக்க, இவள் என்ன தெனாவெட்டாக மேலே வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்ற கோபம் மறுபுறம்..என இருவித உணர்வுகளோடு அவள் அருகே சென்றவனை பார்த்து, அவள் நக்கலாக சிரிக்க, அவன் கோபம் உச்ச நிலையை அடைந்தது..

நான் உன்னைக் காணோம்னு பதறி தேடிட்டு இருக்கேன், நீ எனக்கு தெரியாம மேலேறி வந்து இப்படி நிக்கிறியே, உனக்கு அறிவு இருக்கா?, அப்புறம் எதுக்கு நீச்சல் தெரியல, காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்துன? அப்பவே நீச்சல் அடிச்சுட்டு வந்திருக்க வேண்டியதுதானே? என கத்த..

என்னை எதுக்கு கிணத்துல தள்ளி விட்டீங்க? என அவன் கேள்விக்கு பதிலளிக்காமல், அவள் பதில் கேள்வி கேட்க..

"நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு"! வெகுண்டான் மாறன்..

சும்மா கத்தாதீங்க! என்னை தள்ளி விடும்போது எனக்கு நீச்சல் தெரியும்னு உங்களுக்கு தெரியுமா? நிச்சயமாக தெரியாது! அப்ப எந்த எண்ணத்தில் என்னை தள்ளிவிட்டீங்க? அப்படி என்ன கொலைவெறி என் மேல உங்களுக்கு? எனக்கு நீச்சல் தெரிந்ததால் தப்பிச்சேன்! இல்லன்னா நீங்க இப்படித்தான் தேடிட்டு இருந்திருக்கணும், எங்க முழுசா தேட கூட இல்ல... பத்து நிமிஷத்துல மேலே ஏறி வந்துட்டீங்க! ஏன் நான் செத்துட்டேன் என கன்ஃபார்ம் பண்ணிட்டு மேலேறி வந்தீங்களா?

"அடச்சீ; நான் நீ செத்து இருப்பேன்னு நினைக்கலை... மேல வந்து நிறைய ஆட்களை கூட்டிட்டு வந்து தேடலாம் என நினைத்தேன்..

ஆமாம்மா! இவர் சாவகாசமாக ஆளை கூட்டிட்டு வர்ற வரைக்கும் தண்ணிக்குள்ள இருக்கிறவங்க சாகாமல் இருப்பாங்களா?

இப்ப என்ன? அதான் உனக்கு ஒன்னும் ஆகலையே?.

எனக்கு ஒண்ணும் ஆகாதது உறுத்தலா இருக்கா உங்களுக்கு? எனக்கு நீச்சல் தெரியலைன்னா இந்நேரம் உங்களுக்கு கொலைகாரன்னு பட்டம் கிடைத்திருக்கும், நீங்க தண்ணிக்குள்ள குதிச்சு உள்ள போய்ட்டு மேற்பரப்புக்கு வர்றதுக்குள்ள நான் படிக்கட்டில் ஏறி மேல வந்திட்டேன்,நீங்க தண்ணில தேடிட்டு இருந்ததால, மேலே ஏறிய என்னை பார்க்கல, நீங்க என்னதான் பண்றீங்கன்னு பார்த்தேன், பரவால்ல... கொஞ்சம் பயந்துட்டீங்க போல... என கிண்டலாக சொன்னவள், பின் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்..

கொஞ்ச தூரம் நடந்தவள், பின் திரும்பி "நமக்கு கல்யாணமாகி இரண்டுநாள் தான் முடிஞ்சு இருக்கு, எனக்கு ஏதாவது நடந்துச்சுன்னா…. போலீஸ்
உங்கள சும்மா விடாது, ஆர்டிஓ விசாரணை வரும், உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க! சோ பி கேர்ஃபுல்! என்றாள் கையை நீட்டி மிரட்டலாக..

ஏய் என்னையே மிரட்டுகிறாயா? உன்னை கொல்லற ஐடியாவெல்லாம் எனக்கு இல்லை, ஏதோ கோபத்துல தான் தள்ளிவிட்டேன், அது தப்புன்னு உணர்ந்து தான்,பின்னாலேயே குதிச்சு தேடினேன், ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ என்று அவளை நோக்கி கையை நீட்டியவன், நான் உன்னை சும்மா விடமாட்டேன்! இனி பார்க்கத்தான போற.. நீ என் கால்ல விழுந்து என்னை விட்டுடுங்கன்னு கெஞ்ச போறியா, இல்லையான்னு பாரு... என மாறன் சவால்விட..


அதற்கு மெல்ல சிரித்த பாரதி, மாறனின் அருகில் வந்து, அவனை நிமிர்ந்து நேர்கொண்ட பார்வை பார்த்து, நான் உங்க கால்ல விழுவேனா? உங்க கனவுல கூட அது நடக்காது! என்ன நடக்கும் தெரியுமா? என ஒற்றை புருவம் உயர்த்தியவள், என்னை பழிவாங்கறேன்னு மொக்கை மொக்கையா ப்ளான் போட்டு, என்கிட்ட பல்பு, பல்பா வாங்கி, நீங்க பல்பு கடை வேணா வைப்பீங்க, அது தான் நடக்கும் என தீர்க்கமாக சொன்னவள் நடக்கத் தொடங்கினாள்

ஏய் அதையும் பாக்கலாம்! எல்லா நேரமும் நீ இப்படி என்னை ஏமாத்த முடியாது, நான் யாருன்னு உனக்கு புரிய வைக்கிறேன் என்றவன் ,வேகமா எட்டு வைத்து அவளுக்கு முன்னே போனான்..


ஈரமான ஆடையோடு உள்ளே வந்த மகளை பார்த்து," என்னடி கிணத்த பார்த்ததும் குதிச்சிட்டியா? நீ அடங்கவே மாட்டியா? நீ குதிச்சதும் இல்லாம மாப்பிள்ளையையும் கிணத்துல குளிக்க வச்சியா? தண்ணீ சேராம அவருக்கு சளி பிடிச்சா என்ன செய்வ? என மகளை அதட்டினாள் அன்னபூரணி..

லூசாம்மா நீ! நான் எங்க குதிச்சேன், உங்க மாப்பிள்ளை தான் தள்ளிவிட்டாரு,நீ அவரை கேளு! என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் பாரதி

மாறனுக்கு ஒரு நிமிடம் படபடவென இதயம் துடிக்க தொடங்கியது," ஐயோ! இந்தப் பிசாசு போற போக்குல போட்டு கொடுத்துடுச்சே!எப்படி சமாளிப்பது? என்று தடுமாறினான் மாறன்..ஆனால் அன்னபூரணியோ,"நீங்க தப்பா நினைக்காதீங்க மாப்பிள! அவ எப்பவும் இப்படிதான், சமயம் தெரியாமல் காமெடி பண்ணுவா! நீங்க உள்ள போங்க… என சொல்ல… தப்பிச்சோம்டா சாமி என நினைத்து உள்ளே ஓடினான் மாறன் ..

அத்தை கொடுத்த தேநீரை குடித்தபடி,ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்..

"எவன்டி உன்ன பெத்தான்! பெத்தான்! கைல கிடைச்சா செத்தான்! செத்தான்!" என சிம்பு டிவியில் பாடிக்கொண்டு இருக்க…

மாறனின் மனமும் அதே வரிகளை மனதுக்குள் பாடியபடி, அர்த்தம் பொதிந்த பார்வையை பாரதி மேல் வீச…

அவன் பார்வையை புரிந்து கொண்ட பாரதி, விசமத்துடன் வெளியே செடிக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த தன் தந்தை வெள்ளைச்சாமியை," அப்பா! உங்க மாப்பிள்ளை உங்கள கூப்பிடுறாரு, வந்து என்னன்னு கேளுங்க.. என சத்தமாக கூப்பிட.. மாறனுக்கு புரையேறியது!

மாப்பிள்ளை கூப்பிட்டார் என்றதும் ஏற்றிக் கட்டிய வேட்டியை, இறக்கிவிட்டபடியே , வேகமாக உள்ளே வந்தார் வெள்ளைச்சாமி

"என்ன மாப்பிள்ளை! எதுக்கு கூப்பிட்டீங்க! என பதவிசாக கேட்க..

அது வந்து மாமா! என தடுமாறிய மாறன், என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் விழிக்க..

அது ஒண்ணும் இல்லப்பா! என்னை மாதிரி நல்ல பொண்ணை பெத்த அப்பாவுக்கு கோவில் கட்டலாம் என உங்க மாப்பிள்ளை சொல்றாரு, அதுதான் உங்களை கூப்பிட்டேன் என்றாள் பாரதி சிரித்தபடி..

அடப்போங்க மாப்பிள்ளை! எனக்கு எதுக்கு கோயில் எல்லாம்? என வெட்கப்பட்டவாறு சென்றார் வெள்ளைச்சாமி..

பாரதி விழுந்து விழுந்து சிரிக்க, தன் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து கொண்டான் மாறன்..
…..
மறு வீட்டு விருந்து முடித்து,
மாறனின் வீட்டுக்கு வந்தனர் புதுமண தம்பதிகள்.

அங்கு பாக்கியமும் சுப்பிரமணியும்,பாரதியை தங்கள் மகளாகவே நடத்த ,அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போய் இருந்தாள் பாரதி..

இந்த அம்மாக்கு அறிவே இல்லையா? மருமகளை அதை, இதை சொல்லி சண்டை போடாமல்,எப்பப்பாரு கொஞ்சிட்டே இருக்கு.. மாமியார் போஸ்ட்க்கு கொஞ்சம் கூட வொர்த் இல்லை இந்த அம்மா, கொஞ்சம் விட்டா," எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!" என எல்லாரும் சேர்ந்து பாட்டு பாடுவாங்க போல... இந்த பாரதியை முதல்ல சென்னைக்கு கூட்டிட்டு போகணும் என நினைத்த மாறன், அதற்கான ஏற்பாடுகளை பார்க்க தொடங்கினான்..

பாரதியிடம் வந்தவன், " நீ வேலை பார்க்கிற ஹாஸ்பிடலுக்கு போய் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு.. நாம இந்த வாரக் கடைசியில் சென்னைக்கு போறோம்! என திடுமென சொல்ல.

அதிர்ச்சியோடு திரும்பிய பாரதி,இப்ப எதுக்கு சென்னைக்கு போகணும்? நாம இங்கேயே இருக்கலாம், எனக்கு என் வேலை ரொம்ப பிடிக்கும் ,நீங்க இங்கேயே ஏதாவது வேலை தேடிக்க கூடாதா? அதுவரை நான் குடும்பத்தை பார்த்துகிறேன் என அவள் கெஞ்சலாக கேட்க..

யாரும் எனக்கு சம்பாதிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை! நான் சென்னைக்கு போறேன், என்கூட வர்றதா இருந்தா போய் வேலையை ரிசைன் பண்ணிட்டு வா! அப்படி இல்லைன்னா உன் இஷ்டம்... என்று தோளைக் குலுக்கியபடி சென்றான் மாறன்..

செய்வதறியாது திகைத்தாள் பாரதி,அவளுக்கு அவள் பணியாற்றும் மருத்துவமனையும், அந்த வேலையும் மிக பிடிக்கும், அதை எப்படி விடுவது என யோசித்தவள், கொஞ்ச நேரம் யோசித்து விட்டு,தன் தோழிகளோடு அதுபற்றி கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்..

அடுத்த நாளே மாறனிடம் வந்தவள்," நான் போன்ல ஹாஸ்பிடலுக்கு பேசிட்டேன்! நேர்ல வந்து ரிசைன் லெட்டர் கொடுத்துட்டு போக சொல்றாங்க! நான் இப்ப ஹாஸ்பிடலுக்கு தான் போறேன் என சொல்லி, தன் கைப்பையை எடுத்து கொண்டு கிளம்ப..

அங்கு வந்த பாக்கியம்,"அம்மாடி புதுசா கல்யாணம் ஆன பொண்ணு நீ, தனியா போலாமா?இவன கூட்டிட்டு போ என்றவள், மாறனிடம்,"நீ உன் கூட பைக்ல கூட்டிட்டு போயிட்டு வாடா! அவள தனியா அனுப்பாத, பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க? என சொல்ல...

சரி கூட்டிட்டு போறேன் என சிடுசிடுவென அம்மாவிடம் கூறியவன் வெளியே சென்று பைக்கை எடுத்தான்..

அழகான காட்டன் சுடிதாரில் வெளியே வந்த பாரதி, பைக்கை பார்த்து மிரண்டு நின்றாள்..

அது ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல் 150 சிசி பைக், பின்னால் உட்கார்ந்து போக மிகக் குறைவான இடமே இருந்தது, அதுவும் உயரமாக இருந்தது..

என்ன பார்த்துட்டு நிக்கிற? சீக்கிரம் ஏறு!என மாறன் அவளை அதட்ட..

அந்தப் பைக்கில் ஒரு பக்கமாய் அமர்ந்து செல்ல முடியாது என உணர்ந்தவள் வண்டியின்
இருபுறமும் கால்களை போட்டு அமர்ந்தாள்.

மாறன் வண்டியை வேகமாக ஓட்டினான், மெதுவாக போ என பாரதி எவ்வளவு சொல்லியும் அவன் வேகமாகவே சென்றான், பிடித்துக்கொள்ள அந்த வண்டியில் எந்த ஒரு பிடிமானம் இல்லாததால் அவள் தடுமாறியபடியே அமர்ந்திருந்தாள்.

ஒரு ஸ்பீட் பிரேக்கில் வண்டி வேகமாக ஏறி இறங்க ,தடுமாறிய பாரதி, மாறனின் மேலே முழுதாக சரிந்தாள், ஒரு நிமிடம் மாறனுக்கு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, இருந்தும் வண்டியை கோபத்தோடு நிறுத்தியவன் அவளைத் திரும்பிப் பார்க்க..

அதைவிட கோபமாய் பாரதி அவனிடம்," உனக்கு அறிவு இருக்கா? என கேட்டாள்

அவள் கேள்வியில் திகைத்தவன், நான் அன்னைக்கே சொன்னேன் இல்லை, வண்டில வந்தா இடிக்காமல் வரணும்னு, இப்ப நீ என் மேல வந்து விழுந்துட்டு, எனக்கு அறிவு இருக்கான்னு கேக்குற? என மாறன் கேட்க..

ஆமா! பின்ன கேட்காமல் என்ன செய்வாங்களாம், அத்தை சொன்னாங்க, நம்ம கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் இந்த வண்டிய எடுத்தீங்கன்னு, எப்படியும் நான் பின்னால உட்கார்ந்துட்டு வருவேன்னு தெரியுமில்ல... பின்னால உட்கார்ந்துட்டு வர்றவங்க, உங்கள ஒட்டாமல் உரசாமல் வர மாதிரி பெரிய சீட் இருக்கிற வண்டியை வாங்க வேண்டியதுதானே,இந்த மாதிரி காதலிக்கிறவங்க ஒட்டிக்கொண்டும் கட்டிக்கொண்டும் போறதுக்கு வசதியா இருக்கிற பைக்கை ஏன் வாங்கினீங்க? இதுல என்னை உட்கார வச்சுட்டு வேகமா ஸ்பீட் பிரேக்ல ஏறினா நான் என்ன பண்ணட்டும்? என்னமோ உங்களை இடிப்பதற்காகவே பைக்ல வந்த மாதிரி திட்டறீங்க? என அவள் கத்த..

அவள் பேச்சில் மாறனுக்கு , அவனையும் மீறி,மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது! "சரி சரி! இனி மெதுவா ஓட்டுறேன், இடிக்காம வா! என அவன் சமாதானம் பேச..

அப்பாடா! இவன் திட்டறத்துக்கு முன்னாடி நாம கத்தியதால ஆளை விட்டுட்டான், இல்ல காதுல ரத்தமே வந்திருக்கும் , இவனால எப்படி எல்லாம் நாம சீன் போட வேண்டியிருக்கு என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் பாரதி.


அது தமிழகமெங்கும் பல கிளைகளைக் கொண்ட பெரிய மருத்துவமனை, பாரதியோடு உள்ளே நுழைந்தவன்," நீ போய் எல்லா ஃபார்மாலிட்டீஸ்சும் முடிச்சிட்டு வா! நான் இங்க வெயிட் பண்றேன்! என வரவேற்பில் அமர்ந்தான்



தலைமை மருத்துவரை சந்தித்து, தனது சூழ்நிலையை விளக்கி சொல்லி, ரிசைன் லெட்டர் கொடுத்துவிட்டு, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரிடமும் விடை பெற்று வந்தாள் பாரதி, சிந்துவிடம் பேசும்போது இருவரது கண்களும் கலங்கி விட்டது..

மாறனிடம் வந்த சிந்து," அண்ணா! பாரதி ரொம்ப நல்ல பொண்ணு, அவ பழகின ஊர், சனங்க, வேலை எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை நம்பி வர்றா,நல்லா பார்த்துக்குங்க! என கரகரத்த குரலில் சொல்ல..

நெஞ்சில் வஞ்சம் இருந்தாலும், அவள் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் தலையாட்டிவிட்டு பாரதியை கூட்டிச்சென்றான் மாறன்.

அவர்கள் சென்னை கிளம்பும் நாளும் வந்தது.

"லீவு கிடைக்கும்போதெல்லாம் பாரதியை கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை! அவளைப் பார்க்காமல் ரொம்ப நாள் எங்களால இருக்க முடியாது! என நா தழுதழுக்க மாறனின் கைகளைப் பிடித்தபடி வெள்ளைச்சாமி வேண்டுகோள் விடுக்க,அன்னபூரணியோ, ஒரு தாயாக மகளிடம் ஆயிரம் அறிவுரைகளை அள்ளி தந்து கொண்டிருந்தார்.

தங்களது பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று கைகளை ஆட்டியபடி ரயிலில் ஏறினர் அந்த தம்பதியினர்..

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மெதுமெதுவாக சென்னை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது அந்த ரயில் வண்டி , தான் பார்த்த எத்தனையோ நினைவுகளை புகையாய் கக்கியபடி!!

அனல் வீசும்!!
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Aaha nan nenaicha mathiriye swimming therinchurukku ivaluku.. and barathi solra mathiri ivan than 💡 vanguvano? Athuvum oru shop eh vaikkira alavuku?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top