அவனும் நானும் அனலும் பனியும்...5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

Author
Author
Joined
Aug 17, 2019
Messages
612
Reaction score
1,156
Points
93
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி !இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்...

eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்...5


காலை 8 மணியளவில் சென்னையை அடைந்தனர் தம்பதியினர், காலை உணவை முடித்து விட்டு செல்லலாம் என மாறன் அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்கு பாரதியை அழைத்து சென்றான்


எப்படியும் அவன், அவளுக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு ஆர்டர் தரமாட்டான் என நன்கு அறிந்த பாரதி, பேரர் அவர்கள் டேபிளுக்கு வந்ததும், முந்திக்கொண்டு தனக்கு வேண்டியதை சொன்னாள்.


அதைக் குறித்துக் கொண்ட பேரர், உங்களுக்கு என்ன வேண்டுமென மாறனை கேட்க..


ம்ம்! இந்த அம்மா சாப்பிட்ட பிறகு, ஹோட்டல்ல ஏதாவது மீதி இருந்தால் அதை கொண்டு வாங்க! என்றான்


அவனை முறைத்துப் பார்த்த பாரதி, "அவருக்கு இரண்டு இட்லி கொண்டு வாங்க! அது போதும்! என சொல்லி பேரரை அனுப்பி வைத்தாள்.


நீ மெனுல இருக்கிற எல்லாத்தையும் சாப்பிடுவ ,நான் இட்லி சாப்பிடனுமா,அதுவும் 2 இட்லி!

சென்னைக்கு வந்துட்டல்ல.. இங்க உனக்கு என்னென்ன சோதனை இருக்குனு போக போக தெரிஞ்சுக்குவ, மெயின் பிக்சர் அப்புறமா காட்டுறேன், இப்ப டிரைலர் காட்றேன் பாரு! என மனதுக்குள் முணுமுணுத்தபடியே இட்லியை சாப்பிட்டான் மாறன்..


அவன் கைகளை கழுவி விட்டு வர , பாரதியும் கைகழுவிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்..


அவள் திரும்பி வந்தபோது, டேபிளில் மாறன் இல்லை,அவள் கைப்பை, செல்போன் ,கொண்டு வந்த பேக் என எதுவுமே இல்லை..


சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவள் எங்கும் மாறனை காணாது திடுக்கிட்டாள், அவர்களுக்கு பரிமாறிய பேரரை கேட்ட போது, " மேடம் பில் கட்டுவாங்க! என்று சொல்லி விட்டு இப்போதுதான் அவர் வெளியே சென்றார் என

சொல்ல..


பாரதிக்கு கோபம் கோபமாக வந்தது, சென்னைக்கு வந்ததும் இப்படி செய்றாரே! என கைகளை பிசைந்து நின்றவள்,அவன் எப்படியும் வந்து விடுவான் என அங்கிருந்த டேபிளில் அமர்ந்தாள்,நிமிடங்கள் கரையக்கரைய பேரரும், கேசியரும் திரும்பத் திரும்ப அவளை பார்க்க மிகுந்த சங்கடமுற்றாள்..


மாறன் ,அந்த ஹோட்டலுக்கு நான்கு கடைகள் தள்ளி இருந்த மாலின் ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தான், கையில் இருந்த தேநீரை மெல்லமெல்ல பருகிக் கொண்டிருந்தான்..


திமிர் புடிச்சவ! நான் வருவேனா, மாட்டானான்னு பயந்துகிட்டே கிடக்கட்டும், மெதுவாக போலாம் என அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்,கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த பிறகு எழுந்தவன், பைகளை தூக்கிக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றான்,.

ஆனால் அங்கோ பாரதி இல்லை..


எங்க போச்சு இந்த பிசாசு! என நினைத்து சுற்றி சுற்றி தேடியவன், பேரரை கேட்க,

"அந்த மேடம் எப்பவோ போயிட்டாங்களே சார்!" என்றான்.


எங்க போய் இருக்கான்னு தெரியுமா? என கேட்க, தன் கேள்வியின் அபத்தம் அவனுக்கே புரிந்தாலும் வேறு வழி தெரியவில்லை.


அது தெரியாது சார்! அவங்க கேசியர்கிட்ட தான் பேசிட்டு இருந்தாங்க, அவரைக் கேளுங்க! என்றான்..


சரி நான் கேட்டுக்கிறேன், பில் எவ்வளவு என சொல்லுங்க செட்டில் பண்ணி விடுறேன்! என்றான்


மேடம் பில் செட்டில் பண்ணிட்டு தான் போனாங்க! என சொல்லிச் சென்றான் அவன்.


பில் செட்டில் பண்ண பணம் எது அவளுக்கு? என குழம்பியவன் கேசியரிடம் சென்று விசாரிக்க...


அவங்க எங்க போனாங்க என்று எனக்கு தெரியாது சார்! என் போனை வாங்கி அவங்க பிரண்டுக்கு போன் பண்ணினாங்க! என் ஃபோன் நம்பருக்கு போன் பே மூலமா பணம் அனுப்ப சொன்னாங்க, அவங்களும் பில்லுக்கு மேல ஆயிரம் ரூபா சேர்த்து அனுப்பினாங்க,அதுல பில் பே பண்ணிட்டு, மீதி ஆயிரத்தை எங்கிட்ட இருந்து வாங்கிட்டு போயிட்டாங்க! என்றான்


இவள் இவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்கக் கூடாது! என நொந்து கொண்டான் மாறன்..


அவளை அங்குமிங்கும் தேடி அலைந்தவன், எதற்கும் வீட்டிற்கு போன் செய்து கேட்கலாம் என அவன் மாமனாருக்கு போன் செய்ய, அவரோ,"என்ன மாப்பிள்ளை சென்னைக்கு போயிட்டீங்களா ,உங்க போனுக்கு தான் காத்திருந்தேன், பாரதி கிட்ட போன் குடுங்க என்றதும்


இல்ல மாமா! அவ ரெஸ்ட் ரூம் போயிருக்கா! நாங்க வீட்டுக்கு போயிட்டு உங்களுக்கு போன் பண்றேன்! என போனை கட் செய்து விட்டு, அவன் தனது தாய்க்கும் போன் செய்ய அவளிடமும் பாரதி பேசியதாக தெரியவில்லை,மிகவும் குழம்பியவன் ஒருவேளை கோபத்தால் ரயிலேறி ஊருக்கே செல்லலாம் என நினைத்து விட்டாளோ! என ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்று பார்த்தான்,நல்லவேளையாக ஈரோட்டிற்கு ட்ரெயின் அப்பொழுது இல்லை, அது மதியத்துக்கு மேல் தான் எனக் கேட்டு ஆசுவாசம் அடைந்தவன் பிளாட்பாரம் எங்கும் அவளைத் தேடி ஓய்ந்தான்,


வேறு வழி இல்லை, வீட்டுக்கு போய்விடலாம், மாலைவரை அவளைப் பற்றி தகவல் வரவில்லை என்றால் போலீசுக்கு சென்று விடலாம்! என முடிவெடுத்தவன், ஒரு கால் டாக்ஸி புக் செய்து கிளம்பினான்..


வண்டியில் போகும்போது அவன் நண்பன் ராகவ் அழைத்தான், சென்னைக்கு செல்ல வேண்டும் என மாறன் முடிவெடுத்ததும், தன் கம்பெனியில் வேலை பார்த்த ராகவ் மூலமாகவே வீடு பார்க்கச் சொல்லியிருந்தான், அவனும் நண்பனுக்காக தேடி அலைந்து, ஒரு தனி வீட்டை பிடித்திருந்தான், மாறன் சில லட்சங்கள் பணமும் அனுப்பியிருக்க அதன் மூலம் வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்களையும் ,பொருட்களையும் வாங்கி போட்டு இருந்தான் ராகவ், அவன் மனைவியின் உதவியோடு…


ராகவின் அழைப்பு ஏற்றவன், "

" சொல்லு ராகவ்! சென்னை வந்துட்டேன் இப்ப வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன்! என்றான்


நல்லது டா! நாங்க நேத்தே ஆள் வெச்சு வீட்டை கிளீன் பண்ணி விட்டோம்,நான் சொன்ன மாதிரியே வீட்டு சாவியை காம்பவுண்ட் லைட்டுக்கு கீழ வெச்சு இருக்கேன் எடுத்துக்கோ! நீங்க ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுங்க! நாங்க மதியம் வருகிறோம் என சொல்லி போனை கட் செய்தான்..


ஒரு பெருமூச்சோடு வீட்டை அடைந்தவன், சாவியை தேட,அது கிடைக்கவில்லை,பிறகு தான் கவனித்தான், கேட் திறந்து இருந்ததை, ஒருவேளை இப்பவே ராகவ் வந்து

விட்டானோ? என எண்ணியவாறு உள்ளே சென்றான், வீட்டின் கதவும் திறந்து கிடக்க ,உள்ளே போனவன் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான், அங்கே கவர் பிரிக்காத சோபாவின் மேல் படுத்திருந்தாள் பாரதி


மாறன் சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை, கோபத்தில் ஹோட்டலை விட்டு சென்றவள், எங்கேனும் அடிபட்டு செத்து கித்து , பேயாக மாறி பழிவாங்க வந்திருக்கிறாளோ? என நினைத்து பயந்தவன், அவள் அருகே சென்று பார்க்க, அவள் கால்களை ஆட்டியபடி படுத்திருந்தாள், நல்லவேளை கால் இருக்கு என அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


"இவ்வளவு நேரமா வீட்டுக்கு வரதுக்கு? என சாதாரணமாய் கேட்டாள் பாரதி


அடிங்க...நான் உன்னை தேடிட்டு இருந்தேன், ஆனா நீ இங்க வந்து கால் மேல கால் போட்டு படுத்து இருக்க, முதல்ல இந்த வீட்டு அட்ரஸ் உனக்கு எப்படி தெரியும்? எப்படி வந்த? அதுவும் சாவியை கரெக்டா எப்படி கண்டுபிடித்து எடுத்தே என கேட்க..


ஏன் நீங்க ஹோட்டல் அம்போன்னு விட்டுட்டு போனதும் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிடுவேன்னு நினைச்சிங்களா? இல்ல அழுதுட்டு நாள் ஃபுல்லா அங்கேயே இருப்பேன்னு நினைச்சிங்களா? கோழையோ, முட்டாளோ தான் அப்படி செய்வாங்க, நான் அந்த ரெண்டுமே கிடையாது அதான் இங்க வந்தேன் என்றாள் நிதானமாக..


அதெல்லாம் சரி! இந்த வீட்டு அட்ரஸ் உனக்கு எப்படி தெரிஞ்சது? நான் யார்கிட்டயும் சொல்லலையே என கேட்க..


வாய்விட்டு சிரித்தவள், நீங்க சொல்லலைன்னா கண்டுபிடிக்கமுடியாதா?, எனக்கு ஏழாம் அறிவும் இருக்கு, அதை வைத்துதான் கண்டுபிடிச்சேன்..பொய் சொல்லாதே! எப்படி தெரியும்னு சொல்லு,இல்லனா அதை யோசிச்சு யோசிச்சு என் மண்டை வெடிச்சிடும்!


ஐ! உங்க மண்டை வெடிக்குமா? அப்ப கண்டிப்பா சொல்ல மாட்டேன்! அதுவுமில்லாம இதெல்லாம் கம்பெனி ரகசியம் வெளியே செல்லக்கூடாது! என சிரித்துக் கொண்டே அறைக்குள் சென்றாள்..


மாறனும் அவள் எப்படி இங்கே வந்தாள் என யோசித்து யோசித்து குழப்பத்தோடு சோபாவிலேயே அமர்ந்து இருந்தான்…


பாரதிக்கு அந்த வீடு மிகவும் பிடித்து இருந்தது! கொஞ்சம் பெரிய ஹால், ஒரு சமையலறை ,இரண்டு பெட்ரூம் ,வெளியே கொஞ்சம் புல்வெளி, மலர் செடிகளோடு கூடிய சிறிய தோட்டம்! ஹைக்கூ கவிதை போல் கச்சிதமாய், அழகாயிருந்தது அந்த வீடு!


வீடு அழகா இருக்கு! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என மாறனிடம் அவள் சொல்ல..


ராகவ் போன்ல காட்டும் போதே எனக்கும் பிடித்திருந்தது ,அதான் வாடகை அதிகம் ஆனாலும் பரவால்ல என ஓகே பண்ணிட்டேன் ,ஓரளவு எல்லா பொருட்களையும் வாங்கி போட்டாச்சு! சமையலுக்கு என்னென்ன வேணும் என லிஸ்ட் ரெடி பண்ணு! பிறகு போய் வாங்கிட்டு வந்துடலாம் என்றவன், ஆமா உனக்கு சமைக்க தெரியுமா? என சந்தேகமாய் கேட்க..


சமைக்க எல்லாம் தெரியாது! நல்லா சாப்பிட தெரியும் என்றாள் பாரதி!


அடிப்பாவி ஒரு பொண்ணா இருந்துட்டு சமைக்கத் தெரியாதா உனக்கு?


ஏன் சமையல் பொண்ணுங்களுக்கு மட்டுமான வேலையா? ஆம்பளைங்க சமைக்க கூடாதா! பெரிய பெரிய ஹோட்டல்ல போய் பாருங்க எல்லாம் ஆண்கள் தான் செப்பா இருப்பாங்க, ஒன்னு தெரிஞ்சிக்குங்க என்று அவன் பக்கத்தில் வந்தவள்,


"யார் பத்த வச்சாலும் அடுப்பு எரியும், யார் உலையில் அரிசி போட்டாலும் அரிசி வேகும்! யார் கட் பண்ணாலும் காய்கறி கட் ஆகும்.. சோ பொண்ணும் சமைக்கலாம், ஆணும் சமைக்கலாம்!

அதனாலே எனக்கு சமைக்க தெரியலனா என்ன, நீங்க சமையல் செய்ங்க! என்றாள் தோளை குலுக்கியபடி படு கூலாக!!எனக்கும் சமைக்க தெரியாது என நான் சொன்னா என்ன பண்ணுவே? ஒற்றை புருவம் உயர்த்தி மாறன் கேட்க..


சமைக்கத் தெரியாமல் அமெரிக்காவுல சாப்பாட்டுக்கு என்ன செஞ்சீங்க! அங்கே இந்தியன் ஃபுட் கிடைக்கிறது கஷ்டம்! சமைச்சா தான் சோறு, அப்படினா சமைச்சு தானே ஆகணும் பாஸ்! என்று சொல்ல..


எங்க டீம்ல ரெண்டு பசங்க, மூணு பொண்ணுங்க இருந்தாங்க! அதனாலே ஒவ்வொருத்தரும் ஒருநாள் சமைப்போம். என்று அவனை அறியாமல் வாய் விட்டான் மாறன்..


அப்படினா இங்கேயும் அதையே ஃபாலோ பண்ணலாம், நீங்க ஒரு நாள் நான் ஒரு நாள் சமைக்கலாம், சரியா என தலையாட்ட..


சரி நீ சொன்ன மாதிரியே செஞ்சாலும் மீதி வேலையை எல்லாம் என்ன செய்ய? அவளை மடக்க மாறன் கேட்க..


அதுவும் அதே மாதிரி தான், நீங்க ஒரு நாள் ,நான் ஒரு நாள் செய்யலாம் என்றாள் பாரதி


ஓ! வேலைக்கு போற நானும், வீட்ல வேலை செய்யாமல் சும்மா இருக்க போற நீயும், வீட்டு வேலைய ஈகுவலா ஷேர் பண்ணனுமா?


நான் ஏன் சும்மா இருக்கேன், நானும் வேலைக்குப் போவேன், இன்னும் நாலு நாள்ல வேலையில சேர்ந்திடுவேன்!


ஆமாம்மா! சென்னையில் இருக்கிறவங்க உனக்கு வேலையை கையில் தூக்கி வச்சு காத்துக்கிட்டு இருக்காங்க... நாலு நாள்ல நீ சேருவதற்கு என்றான் மாறன் நக்கலாக..


ஏன் இங்க யாருக்கும் நோயே வராதா? நோயாளிகள் இருந்தால் குணப்படுத்த ஹாஸ்பிடல் இருக்கும் தானே! என் திறமைக்கு எந்த ஹாஸ்பிடல்லையும் வேலை கிடைக்கும், நான் ஈரோட்டில் வேலை பார்த்த மருத்துவமனையோட கிளை இந்த ஏரியாவிலேயே இருக்கு, நான் வேலைய ரிசைன் பண்ணும்போதே, சென்னையில எங்க ஹாஸ்பிடலோட ஏதாவது ஒரு கிளையில் சேர்ந்துக்கறேன் என்று சொல்லித்தான் ரிசைன் பண்ணினேன்.. என்றாள் பாரதி பொறுமையாக..


எங்கிட்ட நீ இதைப் பத்தி எதுவும் சொல்லலையே?


உங்க கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துக்கர அளவு நம்ம உறவு இருக்கா?


அதுக்கு காரணம் நீதான்! நான் இல்லை, நீ வீட்டிலிருந்து படி வீட்டை பார்த்துப்பேன்னு நான் நினைச்சேன், இப்ப நீ வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன? அவளை வீட்டில் இருக்க வைத்து பலவிதமாக டார்ச்சர் செய்ய வேண்டும் என நினைத்திருந்தவன் கடுப்போடு கேட்க...


இதுல அவசியம், அவசியம் இல்லைனு எதுவுமே இல்லை,நான் கஷ்டப்பட்டு படித்தது வேலைக்கு போகத்தான்! என் வேலை, என் அடையாளம்! அதை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது என்றாள் பாரதி உறுதியாக..


சரி அதுக்கு மேல உன் இஷ்டம்! ஆனா வேலைக்கு போற பொண்ணுங்க, வீட்டு வேலையையும் சேர்த்து செய்வதில்லையா? நீயும் வீட்டு வேலைய செஞ்சிட்டு வேலைக்குப் போ! அப்படி போறதா இருந்தா எனக்கு எந்த அப்ஜெக்ஷன் இல்லை! என்றான்


உங்ககிட்ட நான் எந்த அபிப்ராயமும் கேட்கலை,இரண்டு பேர் வாழற இடத்தில, அந்த இரண்டு பேருமே வேலைக்கு போற சூழலில், பெண் அப்படிங்கற காரணத்துக்காக அவ வீட்டு வேலையையும் சேர்த்து செய்யணுமா? வேலை பொது! வருமானம் பொது! அப்படிங்கிற போது, ஓய்வு மட்டும் பொது இல்லையா?,என்னால முடியாது, இரண்டு பேரும் ஷேர் பண்ணி தான் செய்யணும்! அப்படி இல்லேன்னா வேலைக்காரி வெச்சுக்கோங்க.. என்றாள்


இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என நினைத்தவன், சரி சரி அதுக்கு ஏன் மைக்கை பிடித்த அரசியல் மாதிரி கத்தி கத்தி பேசுற? ஏற்கனவே உன்னை தேடி அலைந்து நான் களைத்து போயிட்டேன், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்! மதியம் யார் சமைக்கன்னு சண்டை போடாதே! ஹோட்டலில் ஆர்டர் பண்ணிக்கலாம், என் ஃப்ரண்ட் ராகவும், அவன் மனைவியும் வருவாங்க! என்று சொன்னவன், அவள் அடுத்து ஏதேனும் கேட்கும் முன்னே சோபாவில் சரிந்தான்..


மதியத்துக்கு மேல் ராகவும் அவன் மனைவி சாதனாவும் வந்தனர்..


"என்னடா புது மாப்பிள்ளை! எப்படி இருக்க? என நண்பனை ஆரத் தழுவினான் ராகவ்..


நான் நல்லா இருக்கேன் டா !நீங்க எப்படி இருக்கீங்க? என கேட்டவன் அருகில் நின்ற பாரதியை காட்டி..


இவங்க பாரதி! என்னோட மனைவி.. என அறிமுகப்படுத்த..


பாரதிகிட்ட நான் ஏற்கனவே அறிமுகமாயிட்டேன், நேத்து வீட்டை கிளீன் பண்ணிட்டு உனக்கு இன்ஃபார்ம் பண்ண போன் பண்ணினேன், அப்ப இவங்க தான் எடுத்தாங்க! வீட்டை பத்தி எல்லா தகவலும் சொல்லி, சாவியை லைட்டுக்கு கீழே வெச்சுட்டு போறேன்னு சொல்லிட்டு தான் கிளம்பி போனேன், உன்கிட்ட அவங்க சொல்லலையா? என கேட்க


சொன்னாங்க! சொன்னாங்க! என்றவன் பாரதியை முறைத்துப் பார்த்தான்,என் போனை அட்டெண்ட் பண்ணிட்டு, என் பிரண்டு மூலமாகவே எல்லா தகவலையும் தெரிஞ்சிட்டு தான் இவ வீட்டுக்கு சரியா வந்திருக்கா! பிராடு! ஏதோ சாட்டிலைட் வெச்சு கண்டு பிடித்து வந்த மாதிரி என்ன பில்டப்பு கொடுத்தா!, என்ற ரீதியில் அவன் நினைத்துக் கொண்டு அவளை முறைக்க..


அவளோ ,"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! என்ற ரீதியில் ஒரு சமாளிப்பு புன்னகையை உதிர்த்தபடி நின்றாள்..அனல் வீசும்!
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,271
Points
113
Location
India
Raghavan moolama therinchukitu than ammani ivlo buildup ah? Vivarama than ya irukka iva.. aaha barathi nu peruku thaguntha mathiriye pesrale? Ivana nenaicha pavama iruku🤭🤭
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top