• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
காலம் பத்தவில்லை
நேரம் போதவில்லை!

காதல் தீரவில்லை
வெட்கம் மறையவில்லை!

கண்ணீர் வற்றவில்லை
தீண்டல்கள் குறையவில்லை!

மகிழ்ச்சிக்கு எல்லையில்லை
இதழொற்றலுக்கு தடையில்லை!

விழி சேரும் செய்திக்கு தயக்கமில்லை
அவன் முகம் காணாமல் இன்பமில்லை!

அவனின் மீசை மீது நான் கொண்ட
காதலுக்கு விளக்கமில்லை!

கள்ளச் சிரிப்பின் அழகை
ரசித்திட மறுக்கவில்லை!

அவன் காதல் மொழியின் வார்த்தைகளை
மனப்பெட்டகத்தில் சேமித்திட மறக்கவில்லை!
மொத்தத்தில் அவனின்றி நானில்லை!

**

காத்திருக்கும் இதயமும்
பூத்திருக்கும் விழிகளும்
வோரோடிய கால்களும்
தன்னவனின் வருகையும்....

அத்தி பூத்ததோ
வெள்ளி பூத்ததோ
பிறை வளர்ந்ததோ
கதிரவன் உதித்ததோ
கண்ணனின் வருகையில்....

உதிர்ந்த கிளைகளும்
நீர் பாரா நிலங்களும்
காய்த்து குலுங்கா மரங்களும்
செலுத்து வசிகரிக்கிறதோ
என்னவனின் சிரிப்பில்...

எட்டா வானமும்
மினுக்காத நட்சத்திரமும்
கடந்துவிட்ட மேகமும்
எட்டி மினுங்கி தொட்டுச் செல்கிறதோ
கயவனின் விழியசைவில்...

மேலிமையாக நீண்டவன்
கீழ் இமையாகியவளை அணைத்து
கருவிழியே காதலாய் உருள
சங்கமித்ததோ மனம் வெள்ளைப் படுகையாய்....

கைக்கு எட்டயவனை
கைக்குட்டையாய் அடக்கிட
விழியெட்டியவனை சிறையிடுவேன்
மன அறையில் மணவறையே சான்றாய்...

கடந்துவிட்ட துளிகளிலும்
உன்னுள் கசிந்து உருகிடவே
பார்த்திருக்கும் தருணமும்
பேதையின் வெட்கம் தடையாய்...

கேட்கும் மொழியெல்லாம்
அவனின் வாக்கியம்
ரசிக்கும் வாக்கியமெல்லாம்
காதலின் மொழிகளே....

இன்பம் நிறைந்த காதல்
துன்பம் கடந்த நேசம்
சரிபாதியாய் அவன்.....

**

பிரிக்கப் படாத இமைகளுக்குள் தவறாமல் பூட்டிக் கொள்கிறாய்...

வடிக்கப் படாத கனவுகளுக்குள் முதலாய் எனைக் காணத் துடிக்கிறாய்...

கடத்தப் படாத நினைவுகளுக்குள் சிறையிட்டு காதலிக்கிறாய்...

இளகாத மனதுக்குள் துரும்பாய் நுழைந்து இரும்பையும் கரைக்கிறாய்...

செதுக்கப் படாத பாறைகளுக்குள் உளியாய் தீண்டி சிலையாய் வடிக்கிறாய்....

வானமிட்ட துளியாய் விழுகிறேன் கடலாய் ஆர்ப்பரித்து அரவணைக்கிறாய்...

சருகாய் நான் உதிர்ந்தாலும் கர்வமாய் காத்திருப்பேன் உனது காலடி படும் இடத்தில்..

மீட்டப்படாத இசையாய் நம் காதல்...

எழுதப்படாத கவிதையாய் நம் காதல்....

கோர்க்கப்படாத வார்த்தையாய் நம் காதல்....

விளக்கமில்லா இலக்கியமாய் நம் காதல்...

வையம் காணா காவியமாய் நம் காதல்...

பிரிதலைக் கண்ட புரிதலாய் நம் காதல்...

சேர்ந்து கலந்திட துடிக்கும் உணர்வுகளாய் நம் காதல்....

**

விழியாய் நான் இமையாய் உன் காதல்...
மலராய் நான் மணமாய் உன் காதல்...
சூரியராய் நான் குளிர் நிலவாய் உன் காதல்...
ஓவியமாய் நான் தூரிகையாய் உன் காதல்...
வனமாய் நான் தென்றலாய் உன் காதல்...
மயிலாய் நான் மழையாய் உன் காதல்...
புல்வெளியாய் நான் பனித்துளியாய் உன் காதல்...
நடையாய் நான் வழியாய் உன் காதல்...
வானவில்லாய் நான் ஏழு வர்ணங்களாய் உன் காதல்...
மனமெல்லாம் நீயே என் மதியெங்கிலும் உன் நினைவே....

**

உடுத்தும் உடுப்பிலிருந்து...
பேசும் மொழியிலிருந்து...
சுவைக்கும் உணவிலிருந்து...
எட்டு வைக்கும் வழியிலிருந்து...
இரசிக்கும் பார்வையிலிருந்து...
எழுதும் கவியிலிருந்து...
அதில் கோர்க்கும் வார்த்தையிலிருந்து...
சுவாசிக்கும் மூச்சு வரை..
அவன் மட்டுமே....

உயிராய் அவனின் சுவாசம் எனது மூச்சில்...
பேச்சாய் அவனின் வார்த்தை எனது வரிகளில்....
கவியாய் அவனின் நடை எனது தமிழில்...
காதலாய் அவனின் விழி எனது இலக்கணத்தில்....
புத்தம் புதிதாய்...
பிரித்த புத்தகமாய்...
எழுதிடும் அத்தியாயங்கள்...
அவனுள் நான் வரைய...
என்னுள் அவன் தீட்டிச் செல்கிறான்...
மெய்யுருக உயிர் சிலிர்க்க...
கண்களில் மயக்கம்...
மீண்டும் மீண்டும் மூழ்கத் துடித்த..
கரை சேர நினையா மயக்கம்...
இன்னும் இன்னும் கேட்டிடும்..
என் காதல் நெஞ்சம்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெகு அருமையான
கவிதை, ஆதிரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காதல் மொழியின் வார்த்தைகள்
அபாரம், ஆதிரா டியர்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமை அருமை அருமை அருமை வேறென்ன சொல்ல மிக அருமை ஆதிரா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top