அவள் பௌர்ணமி என் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

selvipandiyan

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
208
Reaction score
630
Points
93
Location
chennai
யுவகார்த்திகாவின் அவள் பௌர்ணமி.
நல்ல திகில் கதை.
ஒரு திரைப்பட படப்பிடிப்புடன் கதை ஆரம்பிக்கிறது.மித்திராவதி படத்தின் இயக்குனர்.நிழல் காதலன் என்னும் உண்மை கதையை படமாக எடுக்கிறார்.அதில் வரும் சந்துரு பௌர்ணமியின் கதையை அவர்கள் வாழ்ந்த பங்களாவில் படமாக்க விரும்புகிறார்.அங்கு உலவும் பேய் கதைகளினால் பயந்து நடுங்கும் குழுவினருடன் படப்பிடிப்பு குழு செல்கிறது.
அந்த ஜோடியின் துர்மரணம் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்கள் மரணத்துக்கு நியாயம் செய்யவேண்டும் என விரும்புகிறார் மித்திராவதி.பௌர்ணமி தினத்தில் அங்கு நடக்கும் விபரீத நிகழ்வுகள் பற்றி அங்கு இருக்கும் வயதான தம்பதியினர் மறைக்கிறார்கள்!படப்பிடிப்பு எப்படி நடந்தது?உண்மையில் பௌர்ணமியின் ஆவி இருந்ததா?அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை சொல்லும் கதை.
கதையில் இன்று நடக்கும் நிகழ்வுகளுடன் பழைய கதையும் சேர்ந்து பயணிக்கிறது.சந்துருவின் ஊனம்,பௌர்ணமியின் பேச இயலாத குறை,அவர்களின் காதல்,பைரவ நாத்,சுரேந்திர நாத் அவர்களின் துரோகம்,சந்துருவின் கொலை,பௌர்ணமியின் கடைசி நிமிடங்களின் கொடூரம் என பழைய கதை மனதை கலங்க வைக்கிறது.நாற்பது வருடங்களின் துக்கமும் பழி வாங்கலும் நிஜத்தில் கண் முன் நடப்பதும் படிக்க விறு விறுப்பா இருக்கு.மர்ம கதை விரும்பிகள் படிக்கலாம்.நல்லா எழுதியிருக்காங்க.
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Joined
Apr 18, 2019
Messages
9,898
Reaction score
24,255
Points
113
Location
Vellore
அருமையான விமர்சனம் 👌🏻👌🏻👌🏻 மிகவும் நன்றிகள் சகி 😍😍😍😍❤❤❤❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top