அவள்...

JeyaBharathi

Well-known member
#1
அவள்...

ஊட்டிவளர்த்த
கட்டுப்பாடு கவளங்கள்
செரிக்க ,
அனிச்சையாய் விழுங்கப்படும்
சகிப்பு மருந்து..
அதனிடை அகோரப்பசியில்
அவளின் சில ஆழ்மன ஆசைகள்...

தியாகமெனும் ஈரத்துணியில் இறுக்கிக்கட்டி
நாளைக்கான
சமையல் ஆயத்ததில்
ஆசைப்பசி மந்தித்த அவள்...
செரிமானக் கோளாறில்

நடந்தேறும் வாழ்வு...
 

Sponsored

Advertisements

Top