• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அஹர் : 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 44

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
17
Reaction score
18
அஹர் : 1
ஃபிரூஸ் ஷா துக்ளக்
டெல்லி சுல்தானில் சுமார் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். அடிமைத்தனம் என்பது அவரது ஆட்சியின் கீழ் மிகவும் பொதுவான விஷயமாக இருந்தது. அவர் இறந்தபோதும் கூட, அவருக்கு கீழ் இருந்த அனைத்து அடிமைகளும் அவரால் தூக்கிலிடப்பட்டனர்.


அஹர் : 1

மரங்கள் அடர்ந்த வனாந்திரத்தின் மைய பகுதியில் தன் படைகளை தனி ஒரு வீர மங்கையாக உருவாக்கிக் கொண்டிருந்தாள் எழில் நறுவீ. குறுநில நாடாக இருந்தாலும் செல்வ வளம் மிகுந்த எழியெல் நாட்டின் இளவரசி.

செல்வ செழிப்புடன் பளிங்கு மாளிகையில் இன்பமாக கழிக்க வேண்டிய நாளிகைகளை கரடு முரடான வனாந்திரத்தில் அரச சௌகரியங்கள் ஏதுமின்றி கழிக்கிறாள்.

சொந்த நாடு, உயிர் கொடுத்த தாய் தந்தை, உடன் பிறந்த சகோதரன், உற்றம் என அனைத்தையும் இழந்து நிற்பவள், அவளை இந்நிலைக்கு தள்ளியவன் மீது கொண்ட வன்மம் என்னும் வேள்வி தீயில் எண்ணெயாய் அவளையே ஊற்றி அந்த கொடுங்கோலன் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க தன்னை தானே செதுக்கிக் கொண்டிருக்கிறாள்.

அவன் தன் நாட்டை கைப்பற்றிய போது, அவள் அன்னையால் உயிர் பிழைத்து வந்தவள் இந்த ஐந்து வருடத்தில் தன் போல அவனால் வஞ்சிக்க பட்ட ராஜ்ஜிய வாரிசுகள், குடி மக்கள் என சுமார் ஆயிரம் பேர் கொண்ட சிறிய படை ஒன்றை உருவாக்கியிருந்தாள். அவன் படை பலத்திற்கு முன் இவையெல்லாம் மதம் கொண்ட யானை முன் நிற்கும் சிறிய ஈசல் போல் அல்லவா இருக்கும்.
கூட்டமாக இருந்தால் அக்கொடுங்கோல் பாவி கையில் சிக்கி கொள்வது உறுதி என நான்கு திசையிலும் பிரிந்து அவனை எதிர் கொள்ள படையை திரட்டுவதுடன் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறாள்.

முன்பெல்லாம் அன்பும் பரிவும் குடியிருந்த மை விழிகளில் இப்போதெல்லாம் அவன் சாம்ராஜியத்தை மொத்தமாக நெருப்பிட்டு பஸ்பமாக்கும் வெறிக் கொண்டு தீ சுவாலைகள் தான் மின்னிக் கொண்டிருக்கிறது.

தன் எதிரில் வாள் ஏந்தி நின்றவன் வாளை இடக் கரத்தில் சுழற்றிய வாளால் தடுத்தவள் அவன் மிழிகளை நோக்கிய படி அவனை பின்னோக்கி தள்ளி விட, அவளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவன் சில அடி தூரம் பின் சென்று நிலத்தில் விழுந்தான்.

மற்றொரு வீரனுடன் பயிற்சியில் இருந்த பெண் ஒருவள் இவள் வீர செயலை பார்த்துக் கொண்டு தன் பயிற்சியில் கோட்ட விட, அவளுடன் வாள் சுழ்றியவன் அவள் வாளை தட்டி பறித்தது மட்டுமல்லாது தன் பிடியிலும் அவளை கொண்டு வந்திருந்தான்.

அதை பார்த்த நறுவீ அவர்கள் அருகில் சென்று, "சிறு கவன சிதறல் கூட, உன் உயிரோடு சேர்த்து உன் மானத்தையும் பறித்து விடும். உன் நொடி பொழுது இமை சிமிட்டல் போதும் அவனுக்கு, உன் ஆடைகளை களைந்து அவன் ஆட்டு மந்தைகளுக்கு உன்னை இரையாக்கிவிடுவான். ம்ம்... கரங்களில் வாளினை ஏந்து" என்று அவளே அப்பெண்ணிற்கு பயிற்சியளிக்க ஆரம்பித்திருந்தாள்.

கொடிய விலங்குகள் வட்டமடிக்கும் வனாந்திரத்திற்கு நேர் எதிராக, வாசம் மிகும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிய பிருந்தாவனமதில், சுவாசம் தீண்டினால் கூட வாடி போகும் அனிச்சம் மலர் கூட்டங்கள் நடுவே வென் பிஞ்சு கைகள் ஒன்று கயவன் போல் பதுங்கி அந்த பூவை தீண்டிட, பிஞ்சு கைகள் தீண்டலில் கூட நாணம் கொண்டதே! தன் இதழ்களை சுருக்கி தன் கற்பை இழந்து போல் எழில் வதனம் நீங்கி வாடி விட்டது அம்மலர்கள்.

உயிரிழந்த மலர்களை கண்டு மங்கையவள் பூ முகமும் வாடி போக, உடனிருந்த ஏனைய சிறுமிகள், "தோல்வியை ஏற்றுக்கொள் நுதலி. உன்னால் மட்டும் அல்ல எவராலும் இம்மலர்களை உயிர்ப்புடன் பறிக்க இயலாது" என்று கூறி சிரிக்க, அது எட்டு வயது நிரம்பிய நுதலியின் கோபத்தை உட்சத்திற்கே கொண்டு சென்றது.
மை விழி பொற்பாவையவளோ மிழிகள் இடுக்கி அவர்களை முறைத்து, "என்னால் முடியும் நான் பறித்துக் காட்டுகிறேன்" என்று மீண்டும் மெதுவாக அதன் இலைகளை அகற்ற, அதனுள் இருந்து கருநாகம் ஒன்று சீறிக் கொண்டு நின்றது.

அதை பார்த்த நுதலி செய்வதறியாது விழி விரித்து உறைந்து நிற்க, ஏனைய சிறுமிகள் "அய்யோ பாம்பு!" என்று அலறிய படி ஓட்டம் பிடித்தனர். சில எட்டுகள் ஓடி சென்றவர்கள் திரும்பி நுதலியை பார்க்க, அவளோ தன் கரு விழிக்கு அறை அடி இடைவெளியில் எதிரில் சீறிக் கொண்டிருந்த நாகத்தை தான் பயம் தேங்கி, உயிர் உறைந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நுதலி, அவ்விடம் விட்டு வந்து விடு" என்று மற்றைய சிறுமிகள் அழைக்க, அதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லையே! எதிரில் படமெடுத்து நின்றிருந்த நாகத்தின் விழி திரையில் கூட நான்கடி பொற்பாவையவளின் மதி முகம் முழுதும் நிறைந்திருக்க, தன் இரட்டை நாவை வெளிக் காட்டி "ஸ்ஸ்" என்று அவளை மிரட்ட, அவள் இதயத்தில் நீர்வற்றி போனது.

'இங்கிருந்து நகர்ந்து செல்' என்று மூளை ஓலமிட்டாலும், கால்களோ நகரும் திறனை இழந்து விட்டது போன்று தான் நிலத்தில் பதிந்து கொண்டது. கருநாகமோ மிரட்டல் விடுத்து அடுத்து செயலில் இறங்கிட வேண்டி தலையை முன் கொண்டு வந்து கொடிய விசம் தேக்கி வைத்த நாவினை சுழற்றிய நொடி "அம்மா" என்ற அலறிய படி நுதலி மயங்கி சரிய, அவள் கீழே விழாத படி ஒரு கரத்தால் அவள் சிற்றிடையை வளைத்து தன் மார்பில் தாங்கிக் கொண்ட மகேந்திரனின் மறு கரமோ கருநாகமதன் வாயுடன் சேர்த்து கழுத்தையும் இறுக்கி கொண்டிருந்தது.

பயமறியான் அவனிடம் இருந்து தப்பிக்க எண்ணி நாகமோ தன் வாலை சுழற்றி விடு பட போராட, பத்து வயது பாலகனாக இருந்தாலும் அவன் பிடி உடுப்பின் பிடியாக தான் இருந்தது.

அருகில் இருந்த அல்லி மலர் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தவன் சிறுமிகளின் அலறல் குரல் கேட்டு தான் தன் நண்பர்களுடன் இங்கு விரைந்திருந்தான்.

அவன் அவ்விடம் வந்த போது கருநாகம் நுதலியை தீண்ட முயற்சிக்க, நொடியும் தாமதிக்காது அவள் உயிரை காப்பாற்ற தன் கரங்களில் அதனை பிடித்திருந்தான்.

மயங்கியிருந்த நுதலியை தன் தோளில் தூக்கி கொண்டவன் மடத்தை நோக்கி நடக்க, ஏனைய பாலகர்கள் அவன் கரத்தில் இருந்த பாம்பை பயத்துடன் பார்த்தப் படியே சில அடி தூரத்தில் அவனை பின் தொடர்ந்தனர்.

மடத்தை சென்றடையும் முன் கையில் இருந்த நாகத்தை, சிறுவர்கள் சோளம் தட்டை சுடுவதற்காக மூட்டிய நெருப்பில் தூக்கி வீச, சற்று நேரம் முன் சீறிக் கொண்டு நின்றிருந்த அந்த பாம்போ இப்போது உடல் கருகி தன் இன்னுயிரை மாய்த்திருந்தது.

பனை ஓலைகளால் வெய்யபட்டிருந்த குடில்களுக்குள் நுதலியை கொண்டு வந்தவன், படுக்கையில் அவளை படுக்க வைக்க, அவள் அன்னையோ "ஐயோ! என்னவாயிற்று என் மகளிற்கு?" என்று பதட்டத்துடன் சிறுமியின் கன்னங்களை வருடி அவளை அசைத்து பார்க்க, அவளோ இம்மியும் அசையாதிருந்தாள்.

மற்றைய சிறுவர்கள் மட குருவிடமும், மகேந்திரன் அன்னையிடமும் தகவல் சொல்லி அழைத்து வந்தனர். தண்ணீர் தெளித்து நுதலியை மயக்கத்தில் இருந்து எழுப்ப மேற்கொண்ட முயற்சி வெற்றியில் முடிய,சிறுமியும் மை விழிகளை உருட்டு எழுந்து கொண்டவள், இன்னமும் சர்பத்தின் தாக்கத்தில் அஞ்சி "அம்மா" என்று அலறியபடி தன் அன்னையை இறுக கட்டி கொண்டு அமர்ந்திருந்தாள்.

குரு, என்ன நேர்ந்தது? என்று விசாரிக்க, அங்கு நடந்ததை சிறுமிகள் விவரித்தனர். கூடவே மகேந்திரன் பயமின்றி சர்பத்தை கையில் பிடித்தான் என்றும், அதனை நெருப்பில் எரிந்து கொன்று விட்டான் என்றும் வியப்பாக சொல்லி, அவனை அவன் அன்னையிடம் மாட்டியும் விட்டார்கள்.

"என்ன? சர்பத்தை உயிருடன் எரித்தாயா? உயிர்களை வதைப்பது பாவம் என்று உனக்கு சொல்லி தந்திருக்கிறேன் அல்லவா!" என்று மகேந்திரன் செயலில் மனம் வருந்தி அவனை கண்டிக்க நினைத்தவள் குரலில் கடின தன்மை என்பது சிறிதும் வரவில்லை.

"நான் அதை கொல்லவில்லை என்றால் அது நம் நுதலியை தீண்டியிருக்குமே அம்மா" என்று அசராது பதில் அளித்தான் மகேந்திரன்.

"ஆனால் இப்போது..." என்று கலக்கமாக சொன்னவள் விழிகள் மகனுக்கு சர்ப தோஷம் நேர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் பனிய,

குருவோ "சர்பதோஷம் நேர்ந்து விடுமோ என்று அஞ்சுகிறாயா மகளே?" என்று மென்மையான குரலில் கேட்டார்.

முற்றும் அறிந்தவர்கள் எதற்கும் அலட்டிக் கொள்வது இல்லை என்பது அவர் குரலிலே தெரிந்தது.
அவர் கேள்விக்கு "ஆம்" என்று மெல்லிய தலையசைப்பை மட்டும் அவள் கொடுக்க,

"நடப்பவற்றை எவராலும் தடுக்க இயலாது. நாளை காசியில் நடைபெறவுள்ள உற்சவத்திற்கு நம் மடத்தை சார்ந்த பக்தர்களும் செல்ல இருக்கிறோம். நீயும் அதில் இணைந்து, உன் மகனுடன் சேர்ந்து கங்கை நதியில் நீராடி ராகு கேதுவை வணங்கி உங்கள் தோஷத்தை போக்கிக் கொள்ளுங்கள்" என்று அவர் தோஷத்திற்கு நிவாரணம் காணும் மார்க்கம் ஒன்றை சொல்லி செல்ல, அவளும் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் இரு கை கூப்பி அவரை வணங்கி ஒத்துக் கொண்டாள்.

"நாம் நகரத்திற்கு செல்கிறோமா? ஐ!" என்று நுதலி ஆனந்த கூச்சலிட, அங்கு நின்றிருந்தவர்கள் அனைவரும் சில வினாடி முன் அஞ்சி நடுங்கிய மங்கை இவள் தானா? என்று தான் அவள் களிப்பை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மகேந்திரன் "ஐயோ பாம்பு! பாம்பு!" என்று கூச்சலிட்டு அவளை பயம் கொள்ள செய்ய, உற்சாக கூச்சலிட்டு கொண்டிருந்தவளோ நொடியில் அரண்டு அருகில் நின்றிருந்த மகேந்திரன் அன்னையை கட்டிக் கொண்டாள். அவள் பயந்த முகத்தை பார்த்து அனைவரும் சிரிக்க, "அம்மா" என்று செல்ல சினுங்களுடன் மகேந்திரனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அவனோ அழகாக சிரித்த படி நின்றிருந்தான்.

அவர்களின் சிரிப்பு சத்தம் தன் குடிலை நோக்கி சென்று கொண்டிருந்த குருவின் செவிகளிலும் ஒலிக்க, "நடப்பவற்றை எவராலும் மாற்ற இயலாது. நீ சென்றால் தான் சில அவலங்களை நீக்க முடியும். உன்னால் பற்றிக் கொண்ட நெருப்பு உன்னால் மட்டுமே அணைக்க முடியும்" என்று இனி நடக்க விருக்கும் சம்பவங்களை உணர்ந்து அவர் உதடுகள் உச்சரித்து கொண்டது.
 




Last edited:

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்டிங் வரை ஒரே பேராகிராஃபா இருக்குது.

இடைல ஸ்பேஷ் விடுங்க. இப்டி இருந்தா படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்.

மீதியை படிச்சிட்டு வந்து சொல்றேன்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
பேரா ஸ்பேஸ் விட்டு போஸ்ட் பண்ணுங்க 😵😵😵 ஒன்னுக்கொன்னு மேல மேல ஏறி படுத்தமாதிரி வார்த்தை கண்ணுக்குள்ள விளையாடுது 😨 மாத்தி போடுங்கப்பா ☹
 




Laksha.harsu

மண்டலாதிபதி
Joined
Jun 6, 2019
Messages
218
Reaction score
614
Location
Ramanathapuram
என்ன ending ல குரு கொளப்பிட்டு போறாரு அப்படி என்னத்த பத்த வச்சான் அணைக்குறதுக்கு🤔🤔🤔🤔.....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் சூப்பர் ஸ்டார்ட்🤩🤩🤩🤩

நுதலி, சண்ட போடறது எல்லாம் இப்ப நடக்கரது..

மகேந்திரன் வர சீன் எல்லாம் அவ சின்ன வயசு, கரெக்ட் ஆ ரைட்டர் ஜீ

என்ன குரு ஜீ ஏதோ சொல்லிட்டு போரார், யார் பற்ற வெச்சா பெருப்பு🤔🤔🤔🤔

10 வயசு பையனுக்கு பால் பல் ஆ, லாஜிக் இடிக்குது ரைட்டர் ஜீ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top