• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்!1.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
ஆண்மையெனப்படுவது யாதெனில்.1.

கெட்டிமேளம்! கெட்டி மேளம்!"

கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க, நாதஸ்வரம் ஒலிக்க, மேளம் முழங்க வள்ளி கழுத்தில் தாலி கட்டினான் தேவசேனாபதி என்கிற தேவா.

இஞ்சிதின்ற குரங்கு மூஞ்சி எப்படி இருக்கும்னு தெரியாதவங்க, அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தா பார்த்திருக்கலாம். தேவா முகம் அப்படிதானிருந்தது. பெண்ணைப் பிடிக்கவில்லையா எனக் கேட்டால், அவனுக்கு இந்தக் கல்யாணமே பிடிக்கவில்லை.
ஹீரோவை குரங்காக வர்ணனை செய்தது, முதன்முதலாக நானாகத்தானிருப்பேன். அன்றைய சூழலில் அவன் முகம் அப்படிதானிருந்தது. மத்தபடி பார்த்தவுடன் பெண்கள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும் முகம். வசீகரன். திராவிடகம்பீரன். ஆளுமையானவன். மொத்தத்தில் ஜனவசியன். தோற்றத்தில் மட்டும்.

"அப்புறம் எப்படிங்க இந்தக் கல்யாணம்!"நீங்க கேக்கறது புரியுது.

எல்லோரும் பந்திக்கு போறாங்க! கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு வந்து சொல்லட்டுமா? நீங்களும் வாங்களேன்! சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்!

"சகுந்தலாதேவி தன் மகனுக்கு டிரைவர் பொண்ணையே கல்யாணம் பண்ணியிருக்காங்களே? என்னவாயிருக்கும்?"

"அவனைப் பத்தி தெரிஞ்சவங்க யாருயா பொண்ணு கொடுப்பாங்க? எப்ப பாத்தாலும் பார்ட்டி, தண்ணினு சுத்தறவன்."

"ஒரு பொண்ணுகூட சுத்துனதா வேற கேள்வி. அந்தப் பொண்ணுங்கூட இவனைப்பத்தி தெறிஞ்சுகிட்டு கழட்டி விட்டுறுச்சாம்."

"அவனோட அப்பா ஆஃபிஸ் இருக்கறது வடக்கா தெக்கானே தெரியாது. இந்த லட்சணத்துல அப்பப்ப கட்டப்பஞ்சாயத்து வேற."

"அதுதான் அந்தம்மா வீட்டோட இருந்த டிரைவர் பொண்ணையே கட்டி வச்சுட்டாங்க."

"அவனைப் பத்தி தெரிஞ்சும் டிரைவர் மட்டும் எப்படியா பொண்ணு கொடுத்தாரு?"

"எல்லாம் பணம்யா! பணம்! காசுக்காக இவன். காதலுக்காக இன்னொருத்தனா இருக்கும். இது என்ன சகுந்தலாதேவி குடும்பத்துக்கு புதுசா என்ன?"

பந்தியில் பரிமாறப்பட்ட விதவிதமான உணவு வகைகளோடு,
கல்யாணமும் விதவிதமாக விமர்சிக்கப்பட்டது அங்கு. இதற்கு பெயர்தான் நாலுபேர் நாலுவிதமாக பேசுவதோ?

பூ அலங்காரங்களோடு முதலிரவு அறைக்குரிய சர்வலட்சணங்களுடனிருந்த தனதரையைக் கண்டவனுக்கு, எல்லாவற்றையும் பிய்த்து எரியும் ஆத்திரம் வந்தது.

கையில் பால் டம்ளரோடு உள்ளே வந்தவளைப் பார்த்தவன்,"இதுக்கொன்னும் குறைச்சலில்லை. பால்தான் இப்ப ரொம்ப முக்கியம்," என்றான்.

"நானும் அதைத்தாங்க சொன்னேங்க. உங்க புள்ளைக்கு பாலெல்லாம் செட்டாகாது. டாஸ்மாக் சரக்குதான் செட்டாகும்னு சொன்னேங்க. உங்க அம்மாதான் கேக்கலைங்க," என்றாள் நக்கலாக.

"அவங்க என் அம்மா இல்லை! மிஸஸ் கதிரேசன்... புறிஞ்சுதா? அப்புறம் என்ன சொன்ன? டாஸ்மாக் சரக்கா? என்னைப் பாத்தா எப்படி தெரியுது? லோக்கல் சரக்கடிச்சுட்டு, ரோட்டுல கெடக்குறவன் மாதிரி தெரியுதா? நீ உன் லெவலுக்குதான யோசிப்ப!" என்றான் எகத்தாளமாய்.

"சரக்கு ஃபாரினோ? லோக்கலோ? ரியாக்ஷன் ஒன்னுதான? என்ன பப்க்கு போனா ஊத்திக் கொடுக்க ஆளிருக்கும். டாஸ்மாக்னா நாமலே வாங்கி ஊத்திக்கனும். அங்க போதை அதிகமாச்சுனா பவுன்சர்ஸ் தூக்கிட்டு போவாங்க. இங்க போதை அதிகமாச்சுனா ரோட்டுல கெடக்கனும்."

"முன்னனுபவம் இருக்கோ?" புருவம் சுருக்கி அவன் கேட்க,

"எதுல‌ கேக்கறிங்க?"என்றவளை
அவன் முறைத்துக் பார்க்க, உள்ளுக்குள் உதறலெடுத்தாலும்,

"இல்ல… இருக்கிற இடத்தைப் பொருத்து கேள்வியோட அர்த்தம் மாறுதுல்ல. எனக்கு முன்னனுபவம் இருக்கா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா...? என்று அவள் இழுக்க,

"என்ன திமிரா?"என்றான்‌ அவளை நோக்கி கோபமாக ஓரடி முன்னேறியவனாக,

"இருக்கலாம். நானும் இந்த வீட்டு சாப்பாட்டைத்தான சின்ன வயசில இருந்து சாப்பிட்டிருக்கேன். உங்களுக்கிருக்கற திமிரு எனக்கும் கொஞ்சமாவது இருக்கும்ல?"என்றாள் அவளும் ஓரடி பின்னோக்கி நகர்ந்து.

இவ்வளவு பேசினாலும் உள்ளுக்குள் அவள் பயந்தபயம் அவளுக்குதான் தெரியும். இருந்தாலும் சென்றவாரம் நடந்த சம்பவத்தால், தலைக்குமேலே வெள்ளம் போனபிறகு, சாண்போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற நிலைமைக்கு வந்துவிட்டாள். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை உயிரைத்தவிர.

"இருக்கு இருக்கும். எங்கப்பா சொத்துல்ல. அதை அனுபவிக்கிறவங்களுக்கெல்லாம் திமிர் சாஸ்திதான்."

"உங்க அம்மா இல்லாமையா உங்களுக்கு அப்பா மட்டும் வந்துட்டாங்க?"

"ஏய்! தேவையில்லாம அந்த பொம்பளையப் பத்தி என்கிட்ட பேசாத! நான் மனுஷனா இருக்கமாட்டேன்," பல்லைக் கடித்துக் கொண்டு அவன் விரல் நீட்டி எச்சரிக்க,

"நீங்க எப்ப மனுஷனா இருந்திருக்கிங்க? நானென்ன லோக்கலானு கேக்க தெரிஞ்சது. ஆனா பேச்சும் செயலும் அதைவிட கீழ்தரமால இருக்கு."

"கீழ்தரமானவங்களப்பத்தி கீழ்தரமாகதான் பேசமுடியும்! ஆமா… நீ என்ன புதியபாதை சீதாவா? கெடுத்தவனையே கல்யாணம் பண்ணி, நீ என்னைத் திருத்தப் போறியா?"

"எனக்கு வேறவேலையில்லை பாருங்க. தறிகெட்டுத் திறியறதையெல்லாம் திருத்தறதுக்கு. அப்ப... நீங்களே ஒத்துக்கறிங்க! திருத்தறளவுக்கு நீங்க மோசமானவர்தான்னு."

"அப்புறம் எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட? தொட்டவனையே கட்டணும்ங்கற கலாச்சாரவாதியா நீ?"

"இன்னும் எந்த காலத்துல இருக்கிங்க நீங்க? உங்களால தான் சில விஷயங்கள ஏத்துக்க முடியாத பழமைவாதியா இருக்கிங்க. சமூகமே முற்போக்கா மாறிட்டுதானிருக்கு."

"அப்ப…முற்போக்குவாதியான எவனையாவது பாத்து கல்யாணம் பண்ணிட்டு போகவேண்டியதுதான?
எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்ச?
ஒருவேளை பெரிய இடம். வசமா வந்து சிக்கியிருக்கு, விடக்கூடாதுனு புடிச்சிகிட்டே?" என்று உதட்டில் கேலிப்புன்னகையும்,எள்ளல் பார்வையோடும் கேட்க,

"இந்த மாதிரி நீங்க கேக்கலைனாதான் ஆச்சரியப்படணும். ஊரே அப்படிதானே நினைக்குது? நடந்தது அவங்களுக்கு எங்க தெரியும்? இல்ல...தெறியப்படுத்தற மாதிரி சம்பவமா நடந்தது?
இதை சொல்லும் பொழுது அவளுக்கு தொண்டை அடைத்ததோ!

"நீங்க மட்டும் எதுக்கு சம்மதிச்சிங்க? உங்கப்பா சொத்துக்காக தானே? உங்களுக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? பணம்னா பொணம்கூட வாயத்திறக்குமாம்! நானெல்லாம் எம்மாத்திரம்? பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உங்களைக் கல்யாணம் பண்ணினதாகவே இருக்கட்டுமே!"

"ச்சே! அந்தநாள்‌ என் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம்!" என்றான் வெறுப்போடு.

"நானும் இதையே சொல்லலாம். எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கணும். வழி விடுங்க!" என்று கூறியவள், பாலை அருகிலிருந்த மேஜை மீது வைத்தவள் ஒரு தலையணையையும், போர்வையும் எடுத்துக் கொண்டு, கீழே விரித்துப் படுத்துவிட்டாள்.

கண்களை இறுக மூடியவளுக்கோ, தூக்கம் தொலைதூரமாகி ஒருவாரமாகிவிட்டது. அவனோடு வாய்க்குவாய் வாதாடினாலும், அந்தநாள் ஞாபகத்தில் கண்கள் தானாக கண்ணீரை அவளுக்கு துணைக்கு அனுப்ப, தலையணையும் கண்ணீரிடம் குசலம் விசாரித்தது நெடுநேரம்.

தனது ஆத்திரம் தணிக்க புகையை நாடியவன், எத்தனை வெண்சுருட்டு ஊதினானோ!?

'இவளோடு இந்த அறையில் படுப்பதா?' என்று‌ எண்ணினாலும்,' இது என்னுடைய அறை என்ற வீம்புவர கட்டிலின் மீதேறி படுத்துவிட்டான்.

அந்த ஒருநாள் மட்டும்; அந்த ஒருநிமிடம் மட்டும்; அந்த ஒரு சம்பவம் மட்டும்; இப்படி எத்தனையோ, 'ஒரு'க்கள் எல்லார் வாழ்விலும் நிகழ்வதுண்டு.

அதுமட்டும் நிகழாமலிருந்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்! அது நிகழ்ந்ததால் மட்டும்தான் என் வாழ்க்கையே நல்லாயிருக்கு! இப்படி எத்தனையோ ஒற்றைசம்பவங்கள் எல்லோரது வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டுவரும். என்ன? மாற்றம் சிலருக்கு நேர்மறையாய்! சிலருக்கு எதிர்மறையாய்!

இவர்கள் வாழ்விலும் அப்படியொரு நாள் வந்தது.

அன்று, கல்லூரியின் பங்குதாரர் ஒருவர் இறந்துவிட, தொடர்ந்து நான்கு நாட்கள் கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. நான்கு நாட்கள் விடுதியில் இருக்க முடியாது என்று எண்ணியவள், 'அப்பாகிட்ட கேட்டா வரவேண்டாம்னுதான் சொல்லுவாரு. உள்ளுரிலேயே இருந்து கொண்டு ஹாஸ்டல்ல தங்கிபடிக்கற ஆளு நானாகத்தானிருப்பேன்,' என்று அலுத்துக் கொண்டவள் தந்தையிடம் அறிவிக்காமலே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

மாலையில் கிளம்பியவள், மதுரை கடைதெருவெல்லாம் சுற்றிவிட்டு வீடுவந்து சேர இரவாகிவிட்டது.

சகுந்தலாதேவி பவனம்.

'ஷாஜகான் தான் பளிங்குகல்லாலே தன்மனைவிக்கு நினைவுச்சின்னம் கட்டினாரா என்ன? தன் மனைவி உயிரோடிருக்கும் பொழுதே ஆசைஆசையாக பளிங்கால் இழைத்து கட்டிய வீடு. கிரானைட் குவாரி முதலாளி இதுகூட செய்யலைனா எப்படி?' என்று எண்ணியவாறே ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

உள்ளூரிலே இருந்தாலும் முத்துக்கண்ணன் தான் மகளை விடுதியில் சென்று பார்த்துவிட்டு வருவாரே தவிர, அவளை அதிகம் வீட்டுக்கு வரவழைத்தது இல்லை. இது சகுந்தலாதேவி உத்தரவு.

வள்ளி பத்து வயதாக இருக்கும் பொழுது மஞ்சள்காமாலை நோயினால் அவளது அம்மாவை இழந்தவள். அன்றிலிருந்து சகந்தலாதேவி பவனமே அவளுக்கு அடைக்கலமானது. சொந்தகிராமத்தில்‌ தாயோடு இருந்தவள் தாயின் மறைவிற்குப்பிறகு தந்தையோடு, சகுந்தலாதேவி பவனத்தின் அவுட்கவுஸில் குடியேறினாள். சகுந்தலாதேவி மகன் தேவாவும் விடுதியில் தங்கிபடிக்க, சிறு பெண்ணாக துறுதுறுவென்றிருந்த வள்ளியை சகுந்தாலாதேவிக்குப் பிடித்துப் போயிற்று. அதனால் அவளுக்கு அங்கு கொஞ்சம் உரிமை அதிகம். எனினும் வளரவளர தந்தையின் அறிவுறுத்தலின்படி தகுதிக்கேற்றவாறு, எல்லையறிந்து பழகக் கற்றுக்கொண்டாள். ஆனாலும் சகுந்தலா என்றால் கொஞ்சம் செல்லம்தான்.

இவள் பள்ளிப்படிப்பை முடித்த நேரம், தேவாவும் தன் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்ப, தன்மகனின் குணமறிந்த சகுந்தலாதேவி, வள்ளியை விடுதியில் சேர்த்துவிட்டார்.
முத்துக்கண்ணன் தான் மகளைப்போய் ஒவ்வொரு வாரமும் பார்த்துவருவார். ஆரம்பத்தில் தந்தையைப் பிரியமுடியாமல், உள்ளூரில் இருந்துகொண்டு விடுதியா எனச்சினுங்கிய மகளை,
"நாளைக்கு உன்னைக் கட்டிக்கொடுத்துட்டு எப்படி பிரிஞ்சு இருக்கறதுன்னு இப்போயிருந்து பழகிக்கலாம்மா!" என்று ஆறுதல்கூற,

"வீட்டோட மாப்பிள்ளை பாக்கலாம்ப்பா!"

"முதல்ல அதுக்கு வீடு வேணும்மா!"

"உங்களையும் ஏத்துக்கற மாப்பிள்ளையாப் பாக்கலாம். இல்லைனா எனக்குக் கல்யாணமே வேணாம்ப்பா!" எனக் கூறியமகளின் பேச்சில், கண்கலங்கி நின்றவர்,

"ஏம்மா! நானே உன்கிட்டயிருந்து எப்படா தப்பிக்கலாம்னு இருக்கேன். நீ என்னடான்னா இலவச இணைப்பா என்னையும் கூட்டிப்போறேங்கிற. என்மருமகனுக்கு ஒருஇம்சை பத்தாதா?" என்று மகளை கேலிபேசுவார்.

"அப்பாஆ…!" என்று மகள் கத்த,

"சும்மாம்மா!" என்று மகள் தலை வருடியவர், "ஒரு மூனேவருஷம், அதுவும் வாராவாரம் வந்து பாக்க போறேன். அதுக்கே இந்தகூத்து பண்றே. தாயில்லாம என் கைக்குள்ளயே வளந்துட்ட, கொஞ்சம் வெளிஉலகமும் பழகிட்டு வாம்மா!" என்று பல காரணங்கள் கூறி அவளை விடுதியில் விட்டு வந்தார்.

இதோ மூன்றாம் வருடமும் வந்துவிட்டது. இந்தவருடத்தோடு கல்லூரி படிப்பைமுடிக்கும் மகளுக்கு தன் சொந்தங்களிடம் மாப்பிள்ளை பார்க்கசொல்லியிருக்கிறார்.

இவளைப் பார்த்த செக்யூரிட்டி,''என்னம்மா திடீர்னு வந்திருக்க. அப்பாகூட ஒன்னும் சொல்லலை?"என்று கேட்க,

"அப்பாகிட்ட சொல்லலை சித்தப்பா! அவருக்கே தெரியாது. திடீர்னு காலேஜ்ல லீவு சொல்லிட்டாங்க. அதுதான் கிளம்பி வந்துவிட்டேன்."

முத்துக்கண்ணனை, செக்யூரிட்டி அண்ணன் என்று அழைப்பதால், இவளையும் சிறுபிள்ளையிலிருந்து,
அவரை சித்தப்பா என அழைக்கப் பழக்கப்படுத்தியிருந்தார்.

அவரிடம் வீட்டு சாவி வாங்கியவள், பங்களாவின் வலப்புறமாக இருந்த அவுட்கவுஸ் நோக்கி சென்றாள். ஒருபடுக்கையறை, சமையலறை, ஹால் கொண்ட வீடு. படுக்கையறை சென்றவள், கொண்டுவந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, அப்படியே படுக்கையில் விழுந்தாள். அவளுடைய அறை, அவளுடைய கட்டில், என்ற எண்ணமே அவளை சுகமாக உணரவைத்தது.

நிம்மதியை உணரவைப்பது, ஆயிரங்களைக் கொட்டிவாங்கப்படும்
பஞ்சுமெத்தையோ, குளிரூட்டப்பெற்ற அறையோ இல்லை. எங்கெங்கோ சுற்றினாலும், எவ்வளவோ சௌகர்யங்களை வெளியில் அனுபவித்தாலும் வாடகை வீடோ, சொந்தவீடோ, நம்வீடு என்று திரும்பி, நம்படுக்கையில் விழுவதும் ஒரு அலாதி சுகம் தான்.
அதை அனுபவித்துக் கொண்டிருந்தவளின் வயிற்றில் மணியடித்து, என்னைக் கொஞ்சம் கவனி என்று சொல்ல, எழுந்து சிறுகுளியல் போட்டு, உடைமாற்றியவள், அடுக்களை சென்று பார்த்தாள். ஏதாவது சமையல் செய்யலாம் எனப் பார்க்க, அரிசி உப்புதவிர, வேறொன்றும் சமைப்பதற்கில்லை. இவள் உடனிருந்த வரையிலும், அப்பாவின் சமையல்தான். சிலசமயங்களில் இவளது கைங்கர்யம்‌ இருக்கும்.

"ஒரு ஆளுக்காக எதுக்கு சமைக்கறிங்க முத்து அண்ணா. இங்கேயே சாப்பிட்டுக்கோங்க!" என்று சகுந்தலாதேவி கூறிவிட அவரால் மறுக்க முடியவில்லை. தன்னைவிட சற்று வயது கூடியவர் என்பதால், அவர் டிரைவராக சேர்ந்த நாளிலிருந்தே அண்ணன் என்றே உறவு முறையில் அழைக்க ஆரம்பித்துவிட்டார்.

மளிகை பொருட்கள் ஒன்றுமில்லாமலிருக்க, பசியில், கோபமாக தந்தைக்கு அலைபேசியில் அழைப்புவிடுத்தாள். பசி வந்தால் பறக்கும் பத்தில் அவளிடம் முதலில் பறப்பது நிதானம்.

கார் ஓட்டிக் கொண்டிருந்தவர் அழைப்பை ஏற்க தாமதமாக, " காரை ஸ்லோவ் பண்ணிட்டு யாருனு பாருங்க முத்து!" என்று கதிரேசன் கூறவும், காரை ஓரங்கட்டினார்.

அலைபேசியைப் பார்த்தவர்,"வள்ளிதாங்க கூப்பிட்டிருக்கு!" என்று கூற,

"என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கா? என்ன அவசரமோ? என்னன்னு கேளுங்க?" என்று சகுந்தலாதேவி அவசரப் படுத்த, மகளுக்கு அழைப்புவிடுத்தார்.

"அப்பா! என்னப்பா வீட்ல ஒருசாமானுமில்ல! என்னத்த சமைச்சு சாப்பிட்டிங்க?" என்று ஃபோனில் அழைப்பை ஏற்றவுடன் பொறிய ஆரம்பித்தாள்.

"ஏம்மா, நீ இப்ப எங்க இருக்க. நம்ம வீட்லயா?"

"ஆமாப்பா! காலேஜ் மேனேஜ்மென்டல ஒருஆளு மண்டய போட்டுட்டார்னு எல்லாரையும் நாலுநாளைக்கு வீட்டுக்கு அனுப்பிட்டாங்கப்பா."

"எனக்கு ஏன் சொல்லை?"

"ம்ம்… சொன்னா நீ ஹாஸ்டல்லயே இருன்னு சொல்லியிருப்பிங்க. எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்க. நான் ஒருத்தி மட்டும் முகட்டப்பாத்துகிட்டு எத்தனை நாளைக்கு இருக்கிறதாம்? மகளுக்கு ஃபோன் பண்ணுனா எப்படியிருக்க?
சாப்பிட்டியானு கேப்பாங்க. இங்க என்னடான்னா ஏன் சொல்லாம வந்தேனு கேக்குற அப்பாவை இப்பதான் பாக்குறேன்," என்று படபடக்க,

"வள்ளி! பசியில இருக்கியா?" மகளின் இயல்பறிந்த தந்தையாகக் கேட்க,

"இப்பவாவது கேட்டிங்களே! வீட்ல ஒன்னுமேயில்லை. நீங்க வர எவ்வளவு நேரமாகும்?"
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சகுந்தலாதேவி என்னவென்று கேட்க,"வள்ளி வீட்ல இருக்குங்கம்மா," என்று அவள் வீடுவந்த விபரம் கூற,

ஃபோனில் சகுந்தலாதேவியின் குரலைக் கேட்டவள்,"யாருப்பா ராஜமாதாவா?" எனக் கேட்டாள்.

"ஏய் கழுதை! உனக்கு வாய் அடங்காதா?" என்று மகளைக் கடிந்தார்.

சகுந்தலாதேவிக்கு, அவரின் கம்பீரமான தோற்றத்தைக் கண்டு அவள் வைத்திருக்கும் பட்டப்பெயர் அது. அவருக்கும் அது தெரியும்.

"இங்க கொடுங்க!" என்று ஃபோனை வாங்கிய சகுந்தலா,''ஏய் வாலு! நாங்க வரலேட்டாகும். செக்யுரிட்டிகிட்ட சாவிய வாங்கி‌வீட்டைத் திறந்து இருக்கிறதை சாப்பிடு. அன்னம்மா சமைச்சு வச்சிட்டு போயிருப்பா."

"பரவாயில்லை ஆன்ட்டி! அப்பா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுறேன்."

"உன்னைப்பத்தி எனக்கு தெரியாதா? பசிவந்தா உன்னால கன்ட்ரோல் பண்ண முடியாது. தலைவலி வந்துறும். போய் ஒழுங்கா சாப்பிடு! இது ராஜமாதா உத்தரவு!"என்று விளையாட்டும் கண்டிப்புமாய்க்கூற,

"அடியாத்தீ! ராஜமாதா உத்தரவுக்கு மறுபேச்சு ஏது? உங்கள் கட்டளையே சாசனம் ராஜமாதா! அப்படியே ஆகட்டும்!" என்று சிரிப்பொடு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

அவள் கூறிய தொனியில் சகுந்தலா தேவியும் சிரித்துவிட," நீங்க ரொம்ப இடம் கொடுக்கறிங்கம்மா! அதனாலதான் வள்ளிக்கு வாய் நீண்டு போச்சு, யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியமாட்டேங்குது," என்று முத்துக்கண்ணன் கூற,

"தாயில்லாபிள்ளைண்ணே! என் பையன்தான்‌ என்கிட்ட முகங்கொடுத்து பேசமாட்டான்," என்று தாயின் ஏக்கம் வெளிப்பட,

"தேவா எப்ப வருவான் தேவி," என்று கதிரேசன் பேச்சை மாற்றினார்.

"அவன் வரரெண்டு நாளாகும்னு நினைக்கிறேன். என்கிட்டயா சொல்லிட்டுப் போறான். நாளைக்குதான் கல்யாணம். இப்ப ரிஷப்ஷன்ல இருக்கானோ? பேச்சிலர் பார்ட்டில இருக்கானோ?"

முத்துக்கண்ணனுக்கும் குடும்பவிவகாரம் எல்லாம் தெரியும் என்பதால், ஒளிவுமறைவின்றி மகனைப் பற்றி சகுந்தலாதேவி பேசிக்கொண்டு வந்தார்.

கல்லூரி நண்பனின் திருமணம். வீட்டிற்கு வந்து அழைப்பு விடுத்ததினால், பத்திரிக்கையைக் கொண்டு, சகுந்தலாதேவி திருமணம் எங்கு, எப்பொழுது என்ற விபரங்களைத் தெரிந்து கொண்டார்.

மதுரை மீனாட்சிஅம்மன் திருமணமஹால். தோற்றமும் அலங்காரமுமே சொல்லியது, பெரிய‌இடத்து திருமணம் என்று.

திருமணம். நண்பர்கள் கூட்டம். கேளிக்கைகளுக்கு அளவில்லாமல் இருந்தது.

மேடையில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் புகைப்படக்காரரின் கட்டளைக்கேற்றவாறு, அங்கும் இங்கும் திரும்பி போஸ் கொடுத்துக் கொண்டிருக்க,
கீழே இருந்துகொண்டு நண்பர்கள் அவர்களை கேலிபேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

"டேய் தேவா! கீர்த்தனா வர்றாடா," என்று நண்பன் ஒருவன் கூற, அதுவரையிலிருந்த சந்தோஷம் சட்டென தடைபட்டு வெறுப்பு மண்டியது அவனுக்கு.

அவளும் அவனை ஏளனப்பார்வை பார்த்துக்கொண்டுதான் வந்தாள், இன்னொருவன் கையைப் பற்றியபடி.

"நம்ம காலேஜ் க்ரூப்லயே வொர்ஸ்ட் கேரக்டர் இவதாண்டா! நீ எப்படிடா இவகிட்டபோய் மாட்டின?" என்று வினய் கேட்க,

"நானெங்கடா மாட்டினேன். அவதானடா எம்பின்னாடியே சுத்தினா!"

"அதுவும் சரிதான்! அவ பிளானே வேற. நீ சிக்கலைங்கவும் அடுத்த ஆளுக்கு தாவிட்டா. இப்ப கூட பாறேன்... இங்க அவகூட வந்திருக்கிறதுங்கூட ரெண்டாவது ஆளுமில்லை," என்றுகூற,

"டேய்! இது மூனாவதுதான்னு எப்படி தெரியும். இல்ல நான்தான் ஃபர்ஸ்ட்டுனும் எப்படி தெரியும்? என்னமோ நீ கூடவே இருந்து பாத்தவன் மாதிரி சொல்ற?" என்று நண்பர்கள் பேசிக்கொண்டது, சற்று தள்ளி அமர்ந்திருந்தவளுக்கு நன்றாகவே கேட்டது.

இது அவளது இல்லாத தன்மானத்தைத் தூண்டிவிட, தேவாவை அவமானப்படுத்த சமயம் பார்த்து காத்திருந்தாள்.

உறவினர்களும், தொழில்வட்டார நட்புகளும் பரிசுகளோடு வந்து மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க, நண்பர்கள் தங்களது அதிமுக்கியமான வேலையைக் கவனிக்க கிளம்பினர்.

நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வைக்காதவனும், திருமணத்திற்கு வந்துவிட்டு பேச்சிலர் பார்ட்டியில் கலந்து கொள்ளாத நண்பனும், உருப்பட்டதாக பூகோளமில்லை.

திருமணமண்டபத்திற்கு அருகிலிருந்த ஹோட்டலிலேயே நண்பர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் மாப்பிள்ளை திவாகர். அவர்களுக்காக உணவும் அங்கேயே ஏற்பாடு செய்திருந்ததால் பெண்தோழிகளும்‌ அவர்களோடு கிளம்பினர்.

பெண்கள் உணவுவகைகளை ஆர்டர் செய்ய, ஆண்கள் அவரவருக்கு பிடித்த மதுவகைகளை ஆர்டர் செய்தனர். கீர்த்தனாவோடு வந்தவனும் இவர்களோடு ஐக்கியமாகிவிட்டான்.

"கீர்த்தனா! தேவா வந்திருக்கான் பாத்தியா? செம்மயா இருக்கான்ல?" என வர்ஷா கேட்க,

"ம்க்கும்… வர்ஷு! ஆள் அழகா இருக்கானு மயங்கிறாத! நமத்துப்போன பட்டாசு அது. சும்மா வெத்துவேட்டு." தன்னை ஆள்கணக்குகூறி அவமானப்படுத்தியவனை இந்த நண்பர்கள் முன் எப்படியாவது அசிங்கப்படுத்தியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டாள்.

"அப்படினா?" அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் கேட்க,

"எவ்வளவுநாள் அவன்கூட பழகியிருக்கேன். ஒரு கிஸ் கூட கிடையாது. நான்கூட டீசன்ட்டானவன்னு நினைச்சேன்."

இது அருகிலிருந்த நண்பர்கள் அனைவருக்கும் கேட்டது. தேவா அவளது பேச்சை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்து அவள் சொன்ன வார்த்தையில், உள்ளே சென்ற ஆல்கஹால் அமிலமாக எரிய ஆரம்பித்தது.

"அவன் அம்மாவுக்கு எத்தனையாவது ஆள்னு கணக்குப்போட வேண்டியவனெல்லாம், எனக்கு கணக்குபோட வந்துட்டான்."

அவள் வார்த்தைகளில் நண்பர்களே அதிர்ச்சியாக, இருக்கையை பின்னுக்குதள்ளி வேகமாக எழுந்தவன், எழுந்த வேகத்தில் அவள் கழுத்தைப் பிடித்திருந்தான்.
எனினும் அவள் அசராமல் விஷம் கக்கும் பாம்பாக பார்த்திருந்தாள்.
அவள் நெருங்கி செல்லச்செல்ல, அவளை கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்தியதன் வெறி அவள் கண்களில்.

"கோபப்பட்டா மட்டும் பத்தாது. அதுக்கு ஆம்பிளையா இருக்கணும்.
உங்க குடும்பத்தோட வீக்பாய்ன்ட் தெரியாம நான்தான் உன்பின்னாடி சுத்திட்டிருந்திருக்கேன்."

"என்குடும்பத்த பத்தி உனக்கு என்னடி தெரியும். கேடுகெட்டவளெல்லாம் என்குடும்பத்தைபத்தி பேசக்கூடாது."

வார்த்தைகள் ஒருவருக்கொருவர் தடிக்க ஆரம்பிக்க நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

"கீர்த்தனா நீ அதிகமா பேசுற!" என்று வினய் கூற,

"ஏன் அவன் என்னப் பத்தி பேசும்போது கேட்டுட்டு தானே இருந்த? அது அதிகமா தெரியலையா?"

"உண்மையைதான அவ சொன்னான்," என்று வாய்க்குள் முனங்கியவன்,

"அதுக்காக அவங்க அம்மாவப் பத்தி பேசுவியா? அவங்க எவ்வளவு பெரிய ஆளுனுதெரியாம வார்த்தையவிடாதே!" என்று கூற

"ஏன் தெரியாது? புருஷன் இறந்தவுடனே ரெண்டாவதுஆள் தேடிபோனவங்க தானே அவனோட அம்மா! நான்கூட அவனோட அப்பா ஹார்ட்அட்டாக்கால இறந்தார்னுதான் கேள்விப்பட்டேன். இப்பதான் தெரியுது. ஹார்ட்வீக்னெஸ்ல செத்தாரோ! இல்ல...பாக்ககூடாததை பாத்ததால செத்தாரோ! யாருக்கு தெரியும்? ஒருவேளை இவனோட அப்பாவும் இவனமாதிரியே அந்த விஷயத்துல வீக்கோ?"

நஞ்சாய் வார்த்தைகளைகக்க, அவன் அடித்த அடியில் சுருண்டு விழுந்திருந்தாள். அவளைப் பொருத்தவரையில் அவளுக்கு அது பெரிய விஷயமில்லை. தன்னை உதாசினப்படுத்தியவனையும், அசிங்கபடுத்தியவனையும், நண்பர்கள் முன்னிலையில் அவமானப்படுத்த வேண்டும். அதற்கு அவளெடுத்த ஆயுதம் அவனது அம்மாவின் வாழ்க்கை. அவளுக்கு தெரியும். அதுதான் அவனை நிதானம் இழக்கசெய்யும் வார்த்தையும் கூட.

அவளது வார்த்தைகளை கேட்டவனின் சினம் போதையோடு சேர்த்து தலைக்கேற, தன் நிதானம் இழந்தவன் மீண்டும் அவளை அடிக்கப்போக, நண்பர்கள் ஒருவழியாக‌ அவனை வெளியே கூட்டிவர, கோபமும், அவமானமும்,‌போதையும்‌ ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு அவனை மிருகமாக மாற்றியிருந்தது. தன் தந்தையைப்பற்றி அவள்‌கூறிய வார்த்தைகள்,‌ கூர்வாளாய்‌ அவன் நெஞ்சைப் பிளந்தது. அவருக்கு இத்தகைய அவமானத்தை தேடித்தந்த தாயின் மீது ஆத்திரம் மேலும் அதிகமாகியது.

சாக்கடையில் கல்லெறிந்தால், அது நம்மையும் சேர்த்து அசிங்கப்படுத்திவிடும் என்பதற்கேற்ப, அவளுடைய அழுக்கை அவன்மீதும் தெளித்து விட்டிருந்தாள்.

மண்டபத்திற்கு செல்லலாம் என நண்பர்கள் கூற… தேவா மறுத்துவிட்டான். அவனுக்கு நண்பர்கள் முன் நிற்பதே அவமானமாக இருக்க, தனது காரை நோக்கி சென்றான். நண்பர்கள் தாமும் கூடவருவதாகக்கூற, மறுத்துவிட்டு, அந்த நிலையிலும் காரைசெலுத்திக் கொண்டு வீடுவந்து சேர்ந்தான்.

செக்யூரிட்டி கேட்டைத் திறக்க, காரை வெளியே நிறுத்தியவன், காவலாளியை அழைத்து, அவனிடம் பணத்தைக் கொடுத்து, தனக்கு பிடித்த ரம் வகையைக்கூறி வாங்கிவர சொன்னான். அவனிக்கிருந்த மன எரிச்சலை மேலும் மதுகொண்டு அணைக்க‌ எண்ணியவனாக.

இப்பொழுது அவன் சொல்வதை மறுக்கவும் முடியாது. ஆனால் வாங்கி வரவும் முடியாது. ஏற்கனவே அவன் நிதானமிழந்திருப்பது கண்கூடாகக் தெறிய,

"தம்பி ஏற்கனவே அதிகமாயிருக்கு. அம்மா வர்ற நேரமாச்சு. கேட்ல ஆளில்லைனா திட்டுவாங்க," எனக்கூறி முடிப்பதற்குள், செக்யூரிட்டியின் கண்ணத்தை அவனது கை பதம்பார்த்திருந்தது.

"இங்க நீ முதலாளியா? நான் முதலாளியா? எல்லாம் அந்தம்மா கொடுக்கிற இடம். நான் சொன்னதை மட்டும் செய்," என்று கூற, அவரும் பணத்தை வாங்கி கொண்டு, அவருடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அவன் கூறிய மதுவகை கிடைக்கும் எலைட் டாஸ்மாக் அருகிலில்லை.

ஏற்கனவே‌ செக்யூரிட்டியிடம் சாவியை வாங்கி வீட்டைத்திறந்த வள்ளி, கிட்சனுக்குசென்று, சாப்பிட என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள். அன்னம்மா சட்னி அரைத்து வைத்து சென்றிருக்க, தோசை ஊற்றிக்கொள்ளலாம் என மாவை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

காயம்பட்ட புலியாக அவன் வீட்டிற்குள் நுழைய, கதவு திறந்தே கிடக்க, கிட்சனில் சத்தம் கேட்டு ஹாலைக்கடந்து சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தவன்,
"அன்னம்மா... ரெண்டு ஆம்லெட் போட்டு வா!"என்று கத்தினான், அன்னம்மா இந்நேரம் அங்கிருப்பாரா என்றுகூட தெரியாமல்.

திடீரென கேட்டசத்தத்தில் கையிலிருந்த மாவு கிண்ணத்தை கீழேவிடப் போனவள், சட்டென்று சுதாரித்து பிடித்துக் கொண்டாள். இந்நேரம் அவனை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை.

'அதுசரி அவன் வீட்ல அவனை எதிர்பாக்காம,' என்று நினைத்துக் கொண்டவள், ஃபிரிட்ஜை மூடிவிட்டு, சமையல் மேடையில் மாவுக்கிண்ணத்தை வைத்தவள், வெளியே எட்டிப்பார்க்க, விரல்களைக் கோர்த்துக் கொண்டு, முழங்காலில் கைகளை ஊன்றியவாறு தலை கவிழ்ந்து, நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்திருந்தான். அதனால் அவனது கோபமுகம் அவளுக்கு தெரியவில்லை.

அவன் நிமிர்ந்து பார்க்க, அவள் வேகமாக தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்.
மீண்டும் அவன்,"அன்னம்மா!,"என்று குரல் கொடுக்க சத்தமில்லாமல் இருக்கவும், தள்ளாடி‌எழுந்தவன் கிட்சன் நோக்கி சென்றான்.

சுவரோரமாக ஒட்டி நின்றவளைக்கண்டவன், "நீ டிரைவர் பொண்ணுதான...இங்க என்னபண்ணுற. இந்த வீட்ல யாரும் இருக்க வேண்டிய இடத்துல இருக்கறதில்ல?,"என்று அவன் கூறியதைக் கேட்டவள்,

"ச்சே...! ஒருநேரம் பசிபொறுக்க மாட்டாம, இந்த அவமானம் தேவையா?' என நினைத்தவள், வெளியேற முற்பட,

"இன்னும் உங்க மகாராணியம்மா வீடுவந்து சேரலையா? இவ்வளவு நேரமாகியும் ஜோடி போட்டுட்டு ஊர் சுத்தறாங்களோ?"என்று அவனது அவமானத்தை வார்த்தைகளாக வெளியேற்றினான்.

சகுந்தலாதேவி மீது மரியாதையும், பிரியமும் வைத்திருப்பவளுக்கு அவ்வார்த்தைகள் எரிச்சல்மூட்ட,

"நீங்க ஆம்பளையா லட்சணமா நடந்துகிட்டா அவங்க ஏன் இந்த நேரத்துல வெளியேபோயி கஷ்டபடபோறாங்க?"
அவன் தனது அம்மாவிற்கு துணையாக பிஸினஸில் உதவாமலிருப்பதை கருத்தில் கொண்டு அவள் கூற,
அவனுக்கோ அது கீர்த்தனாவின் வார்த்தைகளாக மீண்டும் காதில் ஒலித்தது.

வெடிக்ககாத்திருக்கும் எரிமலைக் குழம்பு, சிறு பூகம்பத்தை எதிர்பார்த்திருக்க, அவளது வார்த்தைகளோ அவ்வேலையை செவ்வனே செய்தது.

"என்னங்கடி? இன்னைக்கு எல்லோரும் நான் ஆம்பளையானு தெரிஞ்சுகறதுல ரொம்ப ஆர்வமாக இருக்கமாதிரியிருக்கு. காட்டிட்டா போச்சு!" என்று கிட்ட நெருங்க,

அவன் கூறிய வார்த்தைகளை கேட்டவளோ, பசி மற்றும் தலைவலி எரிச்சலில் இருந்தவள் நாவில் சனி வந்துஅமர,

"ஆம்பளமாதிரி பேசுங்க! பொறுக்கி மாதிரி பேசாதிங்க!"என்றாள்.

"ஆம்பளைமாதிரி பேசவா? இல்ல... பொறுக்கி மாதிரி பேசவா?" எனக் கேட்டுக் கொண்டே அவளருகில் நெருங்கியவன், அவள் தோள்மீது கைவைக்க, அவளது கரம் அவன்கண்ணத்தில் தன்னிச்சையாக தடம் பதித்தது.

அருகில் வந்தவன் மீதிருந்து வந்த மதுவின் நாற்றமும், கோபத்தில் சிவப்பேறியிருந்த அவன்விழிகளும் அவனது நிதானமற்ற நிலையை உணர்த்த, அவளுக்கு அடிவயிற்றில் கப்பென்று தீபற்றிய உணர்வு.

"நான்... அப்..படி சொல்லல…" என்று அவளுக்கு வார்த்தைகள் தந்தியடிக்க, தொண்டைக்குழிவிட்டு அடுத்த வார்த்தைகள் வெளிவரவில்லை. அவன் கரம் கழுத்தை பற்றியிருந்தது.

கீர்த்தனாவின் வார்த்தைகள், நண்பர்கள் முன் அவனுக்கேற்பட்ட அவமானம், அன்னைமீது அவன் கொண்டிருக்கும் வெறுப்பு, இத்தனையுடன் சேர்த்து இறுதியாக வள்ளியின் வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்து போதையின் உதவியோடு அவனை மதிமங்கிய மிருகமாக மாற்றியிருக்க,
பாவம் ஓரிடம்; பழிஓரிடம்; என ஆகியது அன்றைய நாள் இருவருக்கும்.

தனது கோபத்தையும், ஆத்திரத்தையும் அவளுக்குள் கடத்த,
கோபம் வடிந்த நிலையில் அவனும், அதிர்ச்சி தந்த மயக்கத்தில் அவளும்
ஆளுக்கொரு பக்கமாக சுருண்டனர்.

"தேவா வந்துட்டான் போலிருக்கே! காரைவெளியவே நிப்பாட்டியிருக்கான்."

"ஏதாவது எடுத்துட்டுப் போக வந்திருப்பானா இருக்கும். அதனாலதான் காரை வெளியவே நிப்பாட்டியிருப்பான்." சகுந்தலாவும், கதிரேசனும் தங்களுக்குள் பேசியவாறே காருக்குள் அமர்ந்திருக்க,

"எங்கே செக்யூரிட்டியக்காணோம்." என்றவாறு முத்துக்கண்ணன் காரை விட்டு இறங்கி, கேட்டைத்திறந்துவிட்டு காரை உள்செலுத்தினார்.
இறங்கி வீட்டிற்குள் வந்த கதிரேசன் மாடியை நோக்கி செல்ல,
சகுந்தலாதேவி கிட்சன்பக்கமாகத் திரும்பினார்.

"ஃப்ரெஷ்அப் ஆகிட்டு போகலாம் தேவி!" என்று மாடியேறியவாறே கூற,

"நீங்க போங்க! இதோ வர்றேன்," என்றவாறு அங்கே சென்றார். அவருக்கு ஏதோ வித்தியாசமாகப்பட்டது.

அடுக்களையின் அலங்கோலம் கூறியது, அங்கு அரங்கேறிய அந்தரங்கத்தை. சிதறிய மாவுக்கிண்ணமும், உருண்டுகிடந்த பாத்திரங்களும் நடந்தவைக்கு, நாங்களே சாட்சி என்று கூற,
மகனைப்பார்த்தவர், அவன் முகத்திலிருந்து நகக்கீரல்களும், அருகில் சுருண்டுகிடந்த வள்ளியின் மீதிருந்த தடங்களும், ஆமாமென்று அவற்றிற்கு வழிமொழிந்தன. அவன் கோலம் கண்டு, ஆத்திரத்தில் முகம்சுழித்தவராக, பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அவன்மீது ஊற்ற, மெதுவாக கண்விழித்தவன், ஆடையை சரிசெய்து கொண்டு எழ முயற்சிக்க, அவனது காதுகளில்,

"அவன் ஆம்பளையே இல்ல… உன் அம்மாவுக்கு போய் கணக்குபோடு… ஒருவேளை அவனோட அப்பாவும்…பொறுக்கி மாதிரி பேசாதிங்க...ப்ளீஸ் என்னைவிட்டுறுங்க...நான் எதுவுமே சொல்லல...ச்ச்சீ அப்படிபண்ணாத…
டேய்...நீ மனுஷனே இல்ல…ஐயோ! யாராவது வாங்களேன்...அப்பாஆ! என்ற கலவையான‌குரல்கள் மாறிமாறி ஒலிக்க, அவன் பார்வையோ எதிரில்‌ முழங்காலை கட்டிக்கொண்டு சுருண்டு கிடந்தவளின் மீது படிந்தது.

"அம்மா!" என்று அழைத்தவாறே முத்துக்கண்ணன் காரைஷெட்டில் நிறுத்திவிட்டு சாவியை கொடுக்க வந்தவர், பேயறைந்தநிலையில் சகுந்தலா தேவி நிற்பதைக் பார்த்தவர், என்னவென்று பார்க்க அடுக்களை வந்தார்.
வந்தவருக்கு மகளின் கோலமும், நடந்தவையும் புரிய சிலகணங்கள் பிடிக்க,"ஐயோ! வள்ளி என்னம்மா இது," என்று மகளருகில் சென்றவரை முந்திக்கொண்டு சகுந்தலாதேவி அவளை மடியேந்தினார்.

முகத்தில் தட்டி மயக்கம் தெளிவிக்க முயற்சிக்க, முடியாமல் போக."அண்ணே அந்த தண்ணிய எடுங்க!" என்று வாங்கியவர், நீரைத்தெளித்து எழுப்ப, கண்விழித்தவள் எதிரில் நின்ற தந்தையைப்பார்த்து,
"அப்பாஆஆ…!" எனக் கதறியவளாக‌ முகத்தை மூடிக்கொண்டாள்.

சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த கதிரேசன், சூழ்நிலை புரிய
தேவாவை இழுத்து தூக்கியவர், முதன்முறையாக தந்தை எனும் உரிமை எடுத்து ஓங்கி அறைந்திருந்தார்.
"என் சேனாவோட பையனா உன்கிட்ட இதைநான் எதிர்பாக்கல தேவா!"

"இப்ப உங்களுக்கு சந்தோஷமா? இதுக்கு நீங்கதான் காரணம். உங்களுக்கு உங்க சொத்து, உங்க சந்தோஷம்தானே முக்கியமா இருந்துச்சு," என்று நடந்தவைகளுக்கு அவன் தனது தாயையே பழிகூறினான். அவரைப்பற்றிய கீர்த்தனாவின் பேச்சுதானே அவனை மிருகமாக்கியது என்ற எண்ணத்தில்.

"உங்க அம்மா பையன் விரோதத்துக்கு என் மகதான் பலிகடாவா?" என்று அவனது சட்டையைப் பிடித்திருந்தார் முத்துக்கண்ணன். முதலில் மகள். பிறகுதான் முதலாளி என்பதெல்லாம்.

"அண்ணே! அவன் சட்டையை விடுங்க! அடுத்து வர்ற முகூர்த்தத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம்."

"அதெல்லாம் என்னால முடியாது,"சீற்றமாய்க் கூறினான் தேவா.

"நீ செஞ்சுவச்சுருக்க காரியத்துக்கு வேற என்ன பண்ணனும்ங்கற!"

"ஏன் ஒருத்தனோடுதான் வாழணும்னு இருக்கா என்ன?" என்றான் அன்னையைப் பார்த்து ஏளனமாக.

"இந்த மாதிரி தேளாகொட்ற புருஷன் என் மகளுக்கு வேண்டாம்மா! என்பிள்ளை தாங்காது,"அவன் வார்த்தைகளைக் கேட்ட முத்துக்கண்ணன் கூற,

"அண்ணே! இது என்னோட முடிவு. எந்த மாற்றமுமில்லை."

"குதிரையை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கலாம். உங்களால தண்ணி குடிக்க வைக்கமுடியாது." என்று அவன்கூற,

"கல்யாணத்துக்கு சம்மதிச்சா நீ இங்க இருக்கலாம். இல்லைனா உனக்கு இங்கே எந்த உரிமையுமில்ல!"என்று சகுந்தலா தேவி கூற,

"அதை நீங்க எப்படி சொல்லமுடியும். இது எங்க அப்பா சொத்து. எனக்கு உரிமையிருக்கு. யாராலும் அதை தடுக்கமுடியாது,"என்றான்.

"அதை நீ நம்ம வக்கீலைப்போய் பாத்துட்டு வந்து சொல்லு! அந்த உரிமை எவ்வளவு நாளைக்கினு தெரியும். ஆனால் கல்யாணம் நிச்சயமா நடக்கும்," என்று கூறியவர் வள்ளியை தோள்பற்றி தூக்கி, வெளியே அழைத்து சென்றார்.

'இந்தம்மா என்ன புதுசா வக்கீலைப்பாக்க சொல்றாங்க. எனக்கில்லாத உரிமை வேறயாருக்கு இருக்கு?' என்று எண்ணியவன், மறுநாள் வக்கீலை சென்று சந்தித்தவன், கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.


ஆண்மை யெனப்படுவது யாதெனில்
அங்கம்தொடுவதல்ல அகம்தொடுதல்
என யார்சொல்வது அவனுக்கு.












































"






















.
 




Last edited:

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
@ப்ரியசகி @தீபஷ்வினி @Anamika 1 @KalaiVishwa @Anamika47 @AkilaMathan @Raman @Shakthi R @Rajiprabha @Mrs beenaloganathan வாங்கம்மா எல்லோரும். பொங்க வைக்கிறவங்க பாத்து பதமா வைங்க. முதல் பொங்கல சக்கரை தூக்கலாபோட்டு வைங்க. எடுத்தவுடனே கிடா வெட்டிறாதிங்க.😊😊😊😊😊
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,590
Reaction score
2,083
Location
Chengalpattu
Keerthana pesuna avala pesu, ethuku da valliya ippadi panuna😡🤬 ammava kevalama pesura palm 🌴🌴🌴seed🌰🌰 mandai ya😡😡(பனங்கொட்ட தலையா)
Mr. Kathir neenga ippa avanuku vitta araiyai,avan Kuzhalanthai irukkum pothae adichchu avan Muthugu thola urichirukkanum,அல்லது அவன தாலாட்டி 👶,சீராட்டி,👩‍👦கஷ்டப்பட்டு, இஷ்டபட்டு, 🤩அருமை பெருமையாய்,😎ஆசையாய் 😍ஆன்டி ஹீரோவாக😻 வளர்த்த அனாமிகா 46 முதுகு தோல உரிச்சிருக்கனும். 😀😃😄😁😆😅😂🤣😺😸😹
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
@தீபஷ்வினி @ப்ரியசகி சீக்கிரமா வாங்க கார பொங்கல் கிண்ட பத்து பொருத்தம் பக்காவா பொருந்திய மாங்கா மடையன் ஒருத்தன் சிக்கி இருக்கான். உங்க சிறப்பு கவனிப்பை எல்லாம் ரொம்ப சிறப்பா இவனுக்கு காமிக்க வாங்க friends :p 🤭 :LOL:

கதைக்கு தலைப்பா? தலைப்புக்கு கதையா ஆத்தரே:D:D

ஹீரோயின் பொண்ணே உனக்கு தைரியம் பத்தல:sneaky::sneaky: அவனை ஆட விட்டுட்டுடியே... கிச்சன்ல எத்தனை சாமான் இருக்கு டக்குன்னு சுதாரிச்சு மண்டை உடைக்காம...😖😖😖 இப்பபாரு ஆத்தர் அவனை நல்லவனா மாத்திக் காட்ட களம் இறங்கிட்டாங்க....😑😑😑
இவன் இனிமே எவ்வளவு நல்லவன் ஆனாலும் சரி இவனை மனுஷன் லிஸ்ட்ல நான் சேர்க்க மாட்டேன். எனக்கு பிடிக்கல:cautious::cautious:
 




Last edited by a moderator:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top