• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.13.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Hi friends ❣
சென்ற பதிவின் தொடர்ச்சியாக, அடுத்த சிறு பதிவு. என்னைப் போன்ற‌ ஸ்லோவ் ரைட்டர்ஸ்க்கு நேரம் அதிகப்படுத்திக் கொடுத்த @smteam க்கு நன்றிகள் பல. இந்த பதிவிற்கும் தங்கள் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் உங்கள் அனாமிகா 46🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*13*

தோட்டத்தில் அமர்ந்து இருந்தவளிடம், மாத்திரைக் கவரைக் கொடுத்தவன், வீட்டிற்குள் வந்தான்.
சாப்பிட்டு கொண்டிருந்த சகுந்தலா மகனை ஆச்சர்யமாக பார்த்தார். இரவில் அவனை வீட்டில் சந்திப்பது இதுவே முதல் முறை.

"என்ன தேவி புதுசா இன்னைக்கி தான் பாக்குற மாதிரி பாக்குறே!"என கதிரேசன் கேட்க.

"எல்லாம் புதுசா தானே இருக்கு கதிர்!"என்று கூறிவிட்டு இருவரும் சிரித்துக் கொண்டனர்.

மாடியேறி தனது அறைக்கு வந்தவன், ஃப்ரெஞ்ச் விண்டோவ் வழியாக பால்கனி பக்கமாக வந்து பார்க்க, இன்னும் அவள் யோசனையாக தோட்டத்து பென்ஞ்சில் தனியாக அமர்ந்து இருப்பது தெரிந்தது.

அவளின் தனிமை அவனை வெகுவாக சுட்டது. தந்தையை மட்டுமே உறவாகக் கொண்டு வாழ்ந்தவளிடம் கண்டிராத தனிமை உணர்வு, இன்று அவளுக்கென கணவன், மாமியார், மாமனார் மற்றும் தனக்கென குழந்தை என உறவுகள் பல வந்த போதும், எதிலும் மனம் ஒட்டாமல் இருப்பதைப் பார்க்க, தன்னையே அவளிடம் கண்டான் அவளும் தன்னைப் போல் பாசத்திற்காகத் தான் ஏங்குகிறாள் என புரிகிறது. ஆனாலும் அவள் ஏங்கும் பாசம்‌ வேறு. அதற்கு பேர் காதல் என்று புரியவில்லை அவனுக்கு. பாசமும் அரவணைப்பும் யார் வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் காதல்? திருமணத்திற்கு பின் எத்தனை சொந்தங்கள் தன்னைச் சுற்றி இருந்தாலும் தன்னவனின் காதல் பார்வை தீக்காத ஏக்கத்தை எத்தகைய சொந்தமும் தீர்ப்பதில்லை பெண்ணவளுக்கு.

சோக சித்திரமாய் அமர்ந்திருப்பவளை வண்ணம் தீட்டப்பட்ட ஓவியமாய், முதன் முதலாக அவளை அவன் சந்தித்ததும் அங்கு தான்.

கடந்த பொங்கல் அன்று, காலையில் எழுந்தவன் சோம்பல் முறித்தவாறு பால்கனி பக்கமாக வந்தவனுக்கு, சூரிய தரிசனத்திற்குப் பதிலாக அவனுக்கு கிடைத்ததோ முகம் காட்டா சந்திர தரிசனம்.
பெரும்பாலும் தென்னகத்து பெண்களுக்கு சுருள்‌ முடிதான்‌.‌ அவளும் இடைவரை மேகப் பொதியென இருந்த கூந்தலை துண்டால் தட்டி வெயிலில் காயவைத்துக் கொண்டிருந்தாள்.

"வள்ளீ…! சீக்கிரம் வாம்மா! நேரமாச்சு!"என்ற தந்தையின் குரலுக்கு,"

"இதோ வந்துட்டேம்ப்பா!"என்று குரல் கொடுத்தவாறே துள்ளி ஓடியவளை பார்த்தவன்,

"அட! நம்ம அம்மையா அது!"என்று தான் நினைத்தான்.

சிறு பிள்ளையாக ரெட்டை ஜடை பின்னலோடு இதே தோட்டத்தில் கொய்யா மரத்தடியில் காய் பறிக்க எக்கிக் கொண்டு இருந்தவள் நினைவும் கூடவே வந்தது.

"யார் நீ!" முதுகிற்கு பின் கேட்ட குரலில் திரும்பியவள், அவனை பார்த்து விட்டு, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்,

"நீ என்ன சோறு சாப்பிடாம காம்ப்ளான் மட்டுமே குடிப்பியா?"என்று முட்டைக்கண்ணை விரித்துக் கொண்டு பதில் கேள்வி தான் கேட்டாள். விளம்பரம்‌ பார்த்து வந்த சந்தேகம் அது. மனதில் தோன்றியதை பட்டென கேட்டுப் பழக்கப்பட்ட கிராமத்து சிறு சிட்டு. தேவா பதினான்கு வயதில் நெடுநெடுவென வளர்ந்திருக்க, அவளோ அவன் இடுப்பிற்கு தான் இருந்தாள். அவள் இடுப்பில் கை வைத்து கேட்ட தோரணையில் அவன் சிரித்து விட்டான். அவனே எட்டி‌ இரண்டு கொய்யா காய்களை பறித்து தர,

"இப்ப சொல்லு! உன் பேரென்ன? யார்‌ நீ?"என்றான்.

"நானு... காரு ஓட்டுவாரு இல்ல... டிரைவரு… அவரு மக! எம்பேரு வள்ளியம்மை!" என்றாள் கிராமிய மணம் மாறாமல்.

"முத்து மாமா பொண்ணா?"என்றவன்,'சமீபத்தில் தானே அவளது அன்னையும் இறந்து விட்டார்,"என நினைத்துக் கொண்டான்.
தனக்கு அப்பா இல்லை. அவளுக்கும் அம்மா இல்லை, என்ற பரிதாபத்தில் தான் அவள் மீது பாசம் வந்தது.

அவளின் வெகுளிப் பேச்சு அவனுக்கு பிடித்துப் போயிற்று. இவனிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள். வெகுளித்தனமான அவளது கேள்விகள் தேவாவிற்கு சிரிப்பை வரவழைக்கும்.

அவ்வப்பொழுது தோட்டத்துப் பக்கம் வந்து விடுவான். தனிமையில் இருந்தவனுக்கு அவளது வளவள பேச்சு பிடித்துப் போக. சாக்லேட், பிஸ்கெட் என ஏதாவது ஒன்றை அவளுக்காக, சிறு பிள்ளை என எடுத்து வருவான்.

அன்றும் அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் வர, அவன் வந்தும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"என்ன வள்ளி அமைதியா இருக்கே?'

"இன்னைக்கு எனக்கு பொறந்த நாளு,"என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

"ஹேப்பி பெர்த்டே வள்ளி! அதுக்கு எதுக்கு கவலையா இருக்க? சந்தோஷமா இருக்க வேண்டியது தானே?"என்று அவள் அருகில் அமர்ந்தவன் சாக்லேட்டை நீட்ட, அவள் வாங்கவில்லை.

"எங்க அம்மா இருந்திருந்தா பாயாசம் வச்சுருப்பாங்க... அழகா தலை சீவி பூ வச்சு விட்டு இறுப்பாங்க... அம்மை அம்மைனு கொஞ்சி முத்தம் வச்சிருப்பாங்க..."என தாயின் இழப்பு மனதில் இன்னும் முழுமையாக பதியாத வெகுளிச் சிறுமியாக அவனிடம் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

முத்துக்கண்ணனும் மகளுக்கு குறை தெரியக் கூடாது என்று புதுத்துணி எடுத்து கொடுத்து, மகளை காலையில் கோயிலுக்கு அழைத்து சென்றார் தான். ஆனால் தாயின் ஏக்கம் அவளுக்கு சாப்பிடும் போது வெளிப்பட்டது.

அன்றிலிருந்து தேவாவும் அவளை, அவளின் அம்மாவின் நினைவாக அம்மை என்று தான் அழைத்தான். அவனுக்கும் அவளை அப்படி அழைப்பது பிடித்து இருந்தது.

அதன் பிறகு ஒருநாள் அவளின்,"தேவா உனக்கு ரெண்டு அப்பாவா?"என்ற கேள்வியில் தான், வெளியில் எல்லோரும் கேட்பதையே இவளும் கேட்கிறாளே என்ற கோபம் அவனுக்கு. அப்பொழுதும் அவளிடம் கோபத்தைக் காட்ட விரும்பாமல்‌ தான், வீட்டிற்குள் வந்து, தட்டைத் தூக்கி எறிய அவளுக்கு காயம் ஏற்பட்டது.

அதன் பிறகு‌ விடுதி சென்று விட்டான்.

அன்றொரு நாள் தேர்வு‌ முடிவை அவள், அவனது அன்னையிடம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது கூட சரியாகக் கவனிக்கவில்லை.
அவளும் கல்லூரி சென்றுவிட, இன்றுதான் அவளைப் பார்க்கிறான். அதுவும்‌ பின்புறமாக.

குளித்து முடித்து கீழே இறங்கி வந்தான். வீட்டின் முன் போர்டிகோவில்‌ சகுந்தலாவும் அன்னம்மாவும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.

கார்‌ சாவியை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்த சகுந்தலா,
"தேவா! இன்னைக்கு வீட்டுசாமி‌ கும்பிடணும். ஞாபகம் இருக்குல்ல?"என்று கேட்டார்.

"ம்ம்ம்…."என்ற முனகலோடு சென்று விட்டான். பொங்கலன்று இறந்தவர்களுக்கு துணி வைத்து கும்பிடுவது வழக்கம். வருடா வருடம் தாத்தாவுக்கும், தந்தைக்கும் செய்யும் வருடாந்திர திதி, மற்றும் பொங்கல் அன்று வீட்டுசாமி கும்பிடுவது போன்ற எதிலும் சொல்லாமலே தவறாமல் கலந்து கொள்வான். தவறி விட மாட்டான்.

கார் ஷெட்டில் இருந்து காரை எடுத்து, ரிவர்ஸ் கியர்‌ போட்டு திருப்ப முயன்றவன், அப்படியே நின்று விட்டான்.

சற்றுமுன் பார்த்த சந்திர பிம்பத்தின் முன்பக்க தரிசனம். இளஞ்சிவப்பு பட்டு பாவாடை சட்டையும், நீலக்கலர் தாவணியும் என இருபக்கமும் கையால் சற்று பாவாடையை தூக்கிக் கொண்டு, மேகமென மிதந்து வந்து கொண்டிருந்தாள். கூந்தலை தளற பின்னி மல்லியை சரமாக தொங்கவிட்டு, இடப்பக்கமாக ஜடையை விட்டிருந்தவளைப் பார்த்தவன்,

பழம் பறிக்க எக்கிய அம்மைக்கும், பருவ சிட்டாக இருக்கும் இவளுக்கும் எவ்வளவு வேறுபாடு என நினைத்துக் கொண்டான். இளமையின் வாளிப்பை இயற்கை கஞ்சத்தனம் காட்டாமல் வாரி வழங்கி இருக்க, அவள் முகத்தை கூர்ந்து பார்க்க வெகுளித்தனம் மறைந்து சற்று குறும்புத்தனம் கூடி இருக்கிறதோ என நினைத்துக் கொண்டான். குண்டு கன்னம் சற்று வடிந்து, முட்டைக் கண்கள் சற்று நீண்டு மீன்விழிக் கோலம் கொண்டு அவனை வசீகரிக்க, காரை நகர்த்தும் யோசனை கூட இல்லாமல் அவளையே பார்த்துக்
கொண்டிருந்தான்.

"வா வள்ளி! கிளம்பிட்டிங்களா?"என சகுந்தலா கேட்க,

"ஆமா ஆன்ட்டி! வேஷம் கட்டி வந்திருக்கேனே தெரியல?"என்றாள்.

பொங்கல் அன்று குலதெய்வ கோயிலுக்கு முத்துக்கண்ணன் மகளோடு போவது வழக்கம்.

"இப்ப தான் ரொம்ப அழகா இருக்கே
வள்ளி! உனக்கு ஒன்னு தெரியுமா? நீ எந்த வயசுல வேணும்னாலும் மாடர்ன் ட்ரெஸ்ஸோ சேலையோ கட்டலாம். தாவணி மட்டும் இந்த வயசுல போட்டாதான் நல்லா இருக்கும்!"என்று சகுந்தலா கூற,

"ஈஸியா சொல்லிட்டிங்க ஆன்ட்டி! இதைக் கட்டிட்டு நான் படுறபாடு எனக்கு தானே தெரியும். எங்கே அவுந்திருமோனு எத்தனை பின்னு போட்டு குத்தி இருக்கேன் தெரியுமா?"என்று சலித்துக் கொண்டாள்.

மகள் சுடிதார், லாங்க் ஸ்கார்ட் என எதைப் போட்டாலும் ஊருக்கு போகும் போது மட்டும் பாவாடை தாவணி தான் கட்ட வேண்டும் என்பது தந்தையின் கண்டிப்பான உத்தரவு.

"உங்க அப்பா ஆசைக்காக ஒருநாள் கட்டக் கூடாதா வள்ளி?"என சகுந்தலா கேட்க,

"எங்க அப்பா ஆசை இல்ல ஆன்ட்டி. அங்கே தன்டட்டி போட்ட கிழவி ஒன்னு இருக்கு. இவரோட சின்னம்மா. போனவுடனே கேக்கும். என்னா முத்து! நீயும் உம்‌பொண்ண குழாய மாட்டித்தான் சுத்த விடுறியா? பொட்டப்புள்ள மாதிரி தாவணி போடக்கூடாதானு? அந்தக் கிழவி வாய்க்கு பயந்துகிட்டு தான் தாவணி போட சொல்றாரு ஆன்ட்டி,"என அந்த வயதானவர் மாதிரியே பேசிக் காமிக்க சகுந்தலாவும், அன்னம்மாவும் சிரித்து விட்டனர்.

பார்த்துக் கொண்டிருந்தவனும், 'ஆளு தான் வளந்திருக்கா. வாய் குறையல,'என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.

முத்துக்கண்ணனும் வர,‌"சாயங்காலம் வந்துடுங்க அண்ணே!"என்று சொன்னார்.

"தெரியும் மா! சாமி கும்பிட வந்துறுவோம்,"என்று சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

மாலை அன்னம்மா கிளம்பி விட, வள்ளிதான் பூஜைக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஊருக்கு சென்று வந்தவள், முதல் வேலையாக சுடிதார் மாற்றிவிட்டு தான் இங்கு வந்தாள். ஹாலில் இருந்தவன் கண் பார்வை அவள்‌ செல்லும் இடம் எல்லாம் சென்று திரும்ப மனமோ கிட்டிப்புல்லாய் எகிறியது அவளின் இளமைத் தளும்பலில். இதுவரை அவனது கண்கள் யாரையும் இப்படி உரிமையோடு பார்த்ததில்லை. துறுதுறுவென இங்கும் அங்கும் ஓடி சகுந்தலா கேட்பதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

துரைபாண்டி மற்றும் சேனாபதி புகைப்படத்தின் முன் புதுத்துணி வைத்து, பிடித்ததெல்லாம சமைத்து படையல் போட்டு சாமி கும்பிட்டனர்.

தந்தைக்கு படைத்ததை எடுத்து மகனிடம்‌ கொடுத்தார் சகுந்தலாதேவி. துரைபாண்டிக்கு படைத்ததை கதிரேசன் எடுத்துக் கொண்டார்.

சகுந்தலா அனைவருக்கும் இலை போட்டு உணவு பரிமாறினார். இன்று மட்டும் அம்மாவின் கையால் பரிமாற சாப்பிடுவான். தேவையில்லாமல் எதுவும் பேச மாட்டான்.

முத்துக்கண்ணனிடம் கதிரேசன் ஊர் விவகாரங்களை விசாரித்துக் கொண்டே சாப்பிட்டார். வள்ளி சாப்பிட்டு முடித்தவள்,

"ரெண்டு பேரும் ஊர்க்கதை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இப்போதைக்கி முடிக்க மாட்டாங்க. நான் வர்றேன்‌ ஆன்ட்டி!"என்று சகுந்தலா விடம் சொல்லிக் கொண்டு ‌கிளம்பிவிட்டாள்.

இந்த மாதிரி நேரங்களில் தொழிலாளி முதலாளி என்று இல்லாமல் சக ஊர்க்காரர்கள் என்ற முறையில் பேசிக்கொள்வார்கள்.

"வள்ளியை பொண்ணு கேக்குறாங்கம்மா!"என்றார் முத்துக்கண்ணன் சாப்பிட்டுக் கொண்டே.

அவள் செல்லவும் தனது அறைக்கு கிளம்ப எத்தனித்தவன் வள்ளியின் பேர் எடுக்கவும் அப்படியே அமர்ந்துவிட்டான். அவனுக்கு ஏனோ அப்பேச்சு பிடிக்கவில்லை. ஏனென்றும் புரியவில்லை.

"என்ன முத்து? வள்ளி சின்னபுள்ள! இப்பவேவா பொண்ணு கேக்குறாங்க?"என கதிரேசன் கேட்க.

"நம்ம பிள்ள வளத்தி நமக்கு தெரியாதுங்க. யாராவது இந்த மாதிரி கேட்டாதான் நமக்கே கல்யாண வயசு புள்ளைக்கி வந்துருச்சுனு தெரியும். மூனா வருஷம் படிப்பு முடிய போகுதுல்ல,"என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

"யார் அண்ணே கேக்குறது?"என்று சகுந்தலா கேட்க,

"வள்ளியோட அம்மா வழி சொந்தம் தாம்மா! இன்னைக்கி தான் வள்ளியப் பாத்துட்டு கேட்டான். இந்த வருஷம் படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்,"என்றார்.

"வள்ளிய பாத்ததும் புடுச்சு போச்சு போல! அதான்‌ வேற எவனும் கொத்திட்டு போறதுக்குள்ள நாம முந்திக்கணும்னு கேட்டுறுப்பாங்க,"என கதிரேசன் சொல்லி விட்டு சிரித்தார்.

"யாருக்கு தான் புடிக்காது? ஆனா நல்லா விசாரிச்சுட்டு தான்ணே கொடுக்கணும்,"என்று சகுந்தலா, தன் வீட்டில் வளர்ந்த பெண் மீது கொண்ட பாசத்தால் அக்கரையாக கூற, இவர்கள் பேச்சு அவனுக்கு எரிச்சலாக இருக்க வேகமாக எழுந்து தனது அறைக்கு சென்று விட்டான்.

'எவனாவது பொண்ணு கேட்டு வரட்டும்? அப்ப இருக்கு அவனுகளுக்கு! மதுரைவீரன் பொம்மிய தூக்குன மாதிரி வீடு புகுந்து தூக்குறேன்,'என்று எண்ணியவனுக்கோ கோபம் தலைக்கேறியது. என்னமோ இவன் பொண்ணு கேட்ட மாதிரியும், அவர் பொண்ணு தர மறுப்பு தெரிவித்த மாதிரியும், காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கடத்தி சென்றதாக நினைப்பு அவனுக்கு.

அவளை பெண் கேட்டால் தனக்கு ஏன் கோபம் வர வேண்டும் என்று ஒரு கணம் சிந்தித்து இருந்தால் அவன் மனம் புரிந்திருக்கும். காலையில் தான் அவனும் அவளைப் பார்த்தான். நம்ம அம்மை என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு, அதற்குள் அவள் மீது இன்னொருத்தன் பார்வை படுவதும் பிடிக்கவில்லை. கைப்பொருளை யாரோ தட்டிப் பறித்து உணர்வு.

அதன் பிறகு அவளும் விடுதி சென்றுவிட, மறுபடியும் அவளை சந்தித்தது நண்பனின் திருமணத்திற்கு சென்று விட்டு, நண்பர்கள் முன்னிலையில் கீர்த்தனாவால் அவமானப்பட்டு வீட்டிற்கு வந்த அந்த நாளின் தனிமையில் தான்.

அன்று அவளை தனிமையில் சந்திக்கவும், 'நம்ம அம்மை,'என நினைத்தவன்,'என் அம்மை,'என்று தான் நினைத்தான்.

சிறுவயதில் வெறுமையாக இருக்கும் பொழுதெல்லாம் தோட்டத்துப் பக்கம் செல்பவன், வள்ளியின் வெகுளிப் பேச்சில் தனிமையை மறந்தவன் தான்.

அன்றும்‌ மனம் புழுங்கிய நிலையில் அவளிடம் பேச்சு வளர்க்கவே, இவனைப் பார்த்து ஒழிந்து கொண்டவளிடம்,"டிரைவர் மக தானே?"எனக் கேட்டு, அவனும் அன்று பேச்சு கொடுத்தான்.

வெகுளியாக பேச அன்று அவள் பத்து வயது சிறுமியாகவும் இல்லாமல், இவனும் பதின்வயது தேவாவாகவும் இல்லாமல் போனதில், அழகாய் போட்டிருக்க வேண்டிய வண்ணக்கோலம், ஆத்திரத்தில் அள்ளித் தெளித்து நீர்க்கோலமாய் போனது. பேச்சு வேறு விதமாக வளர்ந்து, அது எதிலேயோ போய் முடிந்து விட்டது.

அந்த நாள் நினைவுகளோடு அவன் தோட்டத்தில் தனிமையில் அமர்ந்து இருந்தவளை பார்க்க நெஞ்சம் குமைந்தது. ஏதோ மனதின் மூலையில் ஒளிந்து கொண்டிருந்த அவள் மீதான‌ உரிமை தான் அன்று அவளிடம் ஆறுதல் தேட சொன்னதோ என மனம் யோசிக்க நின்று கொண்டிருந்தான்.

முத்துக்கண்ணன் வந்து மகளை அழைக்கவும், தந்தையோடு சென்றவள், அன்றிரவு அங்கேயே தங்கிக் கொண்டாள்.

அவள் தரையில் படுத்திருந்தாலும்,‌ அவ்வப்பொழுது சினுங்கும் கொலுசொலி கேட்காமல், அறை முழுதும் ஏதோ ஒரு வெறுமை படர்ந்த உணர்வு அன்றிரவு அவனுக்குள்ளும்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஏன்? எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீங்களா?🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
வள்ளி மேல அப்போ பாசம் இருந்திருக்கு. தேவாக்கு இப்பிடியொரு முகமா?!
நன்றாக இருக்கிறது.🍁
 




Last edited:

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
ஏன்? எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீங்களா?🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
வள்ளி மேல அப்போ பாசம் இருந்திருக்கு. தேவாக்கு இப்பிடியொரு முகமா?!
நன்றாக இருக்கிறது.🍁
வாங்க! வாங்க! ஸ்பெஷலா கூப்பிட்டா போச்சு.

ரொம்ப நன்றிம்மா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰
 




Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Super..evalo azhaga Avan manathin enna vottathai soli irukeenga...very nice...kalukul iram irundhurku already.ana parunga namaku than theriyama pochi😄
எப்பவுமே முரட்டு பிள்ளைகள் தான் ரொம்ப மென்மையான வங்களா இருப்பாங்கமா.

Thank you so much sister. Thodarnthu varum atharavirku nanri ma.🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
பாருங்களேன்.... அப்பவே சைட் அடிச்சிட்டு இருந்துருக்காரு.... 😍

பட் அவங்க மனசுக்குள்ள இருக்கறத புரிஞ்சிட்டு இனிமே நடந்துப்பாரா....🤔

நைஸ் எபி டியர்....❤

Actually இந்த ஸ்டோரி யோட first எபி படிச்சிட்டு எல்லாத்தையும் இதுலயே சொல்லிட்டீங்க இனிமேல் எப்படி கதை போகும் னு யோசிச்சேன் டியர்....🤔

ஏன்னா மேரேஜ், என்ன prblm nu எல்லாம் அதுலயே தெரிஞ்சிடுச்சு....

பட் 13 th எபி வர படிச்ச எல்லா எபி யுமே நைஸ்.... 😊

ஸ்டோரி அஹ் நல்லா கொண்டு போறீங்க டியர்.... 🥰
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top